Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
நான்கு மொழிகளில் பிசியாக இருக்கும் காஜல் அகர்வால்
நான்கு மொழிகளில் பிசியாக இருக்கும் காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், நான்கு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.
நான்கு மொழிகளில் பிசியாக இருக்கும் காஜல் அகர்வால்
காஜல் அகர்வால்
தமிழில் பாரிஸ் பாரிஸ், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடிக்கும் காஜல் அகர்வால் ஆங்கில படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தற்போது
புதுப்படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன். வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸ் மூலம் சினிமாவில் இருந்து இன்னொரு கட்டத்தை நோக்கி செல்கிறேன்.
இந்தியில் ஜான் ஆப்ரகாம் ஜோடியாக மும்பை சகா படத்தில் நடிக்கிறேன். தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் உருவாகும்
பிராட்ஸ்டர்ஸ் என்ற படத்தில் விஷ்ணு மஞ்சுவுடன் சேர்ந்து நடிக்கிறேன். கதையும், என் கேரக்டரும் பிடித்திருந்தால் மட்டுமே சினிமாவில் நடிப்பேன்.
காஜல் அகர்வால்
திரையுலகில் இத்தனை வருடங்களுக்கு பிறகும் வெற்றிகரமான ஹீரோயினாக நீடிப்பது குறித்து மிகவும்
சந்தோஷப்படுகிறேன். இது எனக்கு கிடைத்த பரிசு’. இவ்வாறு அவர் கூறினார்.

மூன்று வேடத்தில் சிவகார்த்திகேயன்
மூன்று வேடத்தில் சிவகார்த்திகேயன்
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்த படத்தில் 3 வேடங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மூன்று வேடத்தில் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2018-ம் ஆண்டு ’இன்று
நேற்று நாளை’ படத்தின் இயக்குனர் ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இப்படம், பைனான்ஸ்
பிரச்சனை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
அறிவியல் சார்ந்த படமாக உருவாகும் இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங்
நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.
ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ‘அயலான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

தமிழ் சினிமாவை அரசு காப்பாற்ற வேண்டும்- சீமான் கோரிக்கை
தமிழ் சினிமாவை அரசு காப்பாற்ற வேண்டும்- சீமான் கோரிக்கை
தமிழ் சினிமாவை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவை அரசு காப்பாற்ற வேண்டும்- சீமான் கோரிக்கை
எழுத்தாளர் அஜயன் பாலாவின் ‘பாலுமகேந்திரா நூலகம்’ சென்னை சாலிகிராமம் ஏரியாவில் இயங்கி வந்தது. நூலகத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை
அதிகமானத்தைத் தொடர்ந்து புதிய கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். இதன் தொடக்க விழா நடைபெற்றது.
இயக்குனர்கள் பாரதி ராஜா, சீமான்,அமீர் உட்பட திரையுலக பிரபலங்கள், எழுத்தாளர்கள், உதவி இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
விழா முடிந்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய சீமான் சினிமா தற்போது உள்ள நிலை குறித்து தனது
வருத்தத்தைப்பதிவு செய்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஏறத்தாழ ஆயிரம் திரையரங்குகள் கொண்ட தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் முந்நூறுக்கும் மேற்பட்டத்
திரைப்படங்கள் வெளியானாலும் முன்னணி நடிகர்கள் நடித்தப் படங்களை மட்டுமே கருத்தில் கொண்டே திரையரங்குகள் செயல்படுகின்றன.
மேலும், பண்டிகைக் காலங்களில் சிறு திரைப்படங்களைத் திரையிட முடியாத சூழல்தான் நிலவுகிறது.
அப்படங்களுக்குக் கூட்டம் அதிகம் வராத ஒரே ஒரு பகல் காட்சி மட்டுமே திரையிட வாய்ப்பு கிடைப்பதால் அந்த திரைப்படம் நன்றாக இருப்பதை அறிந்து மக்கள்
திரையரங்கை நோக்கி வரும்போது அத்திரைப்படங்கள் திரையரங்குகளைவிட்டே நீக்கப்பட்டு விடுகின்றன.
இதனாலேயே, சிறு, குறு தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்கள் ஆண்டுக்கு நூறு படங்கள் என்ற வீதத்தில்
வெளிவராது முடங்கிக்கிடக்கின்றன. இவ்வாறு முடங்கித் திரையரங்குக்கு வராமலிருக்கும் படங்களின் எண்ணிக்கை
மட்டும் 1500-ஐ தாண்டும். இதனால், திரைத்துறைக்கு ஏற்பட்ட இழப்பு 2,500 கோடிக்கு மேலிருக்கும் என்று சொல்லப்படுகிறது.
முன்னணி நடிகர் நடிக்கும் படங்களுக்கு 400 திரையரங்குகளை ஒதுக்கலாம்; மற்ற நடிகர்களின்
படங்களுக்கு மீதமுள்ள திரையரங்குகளை ஒதுக்கலாம் என்று தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியும்
அவை செயலாக்கம் பெறவில்லை என்பது அத்துறையில் நிலவும் நிர்வாகச்சீர்கேட்டின் அவலத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது.
200 முதல் 250 பேர் வரை அமரும் சிறிய திரையரங்குகள் மாநகராட்சிகளில் அமைக்கப்படும் என்று ஒரு அறிவிப்பை
ஏற்கனவே தமிழக அரசு வெளியிட்டும் அது இன்னும் அமலுக்கு வந்தபாடில்லை. அது செயலாக்கம் பெற்றால்
திரையரங்க ஒதுக்கீட்டுச் சிக்கல் ஓரளவு தீர வாய்ப்புண்டு.
ஆகவே, திரைத்துறையை மீட்டெடுத்து நல்வழிப்படுத்த முறைகேடாக திரைப் படங்களில் இணைய தளங்களிலும், இன்ன பிற தளங்களிலும் வெளியாவது தடுக்கப்பட
வேண்டும் எனவும், திரையரங்க வாகன நிறுத்தம், திண்பண்டங்களின் விலையைக் கட்டுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க திரைப்பட ஒழுங்குமுறை
ஆணையமும், திரைப்படங்களுக்கு முறையாகத் திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்படுவதைக்
கண்காணிக்க சிறப்புக் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருக்கிறார்.

மீண்டும் இணையும் விஷால் – ஆர்யா
மீண்டும் இணையும் விஷால் – ஆர்யா
பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் நடித்திருந்த விஷால் – ஆர்யா, தற்போது மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்க உள்ளனர்.
மீண்டும் இணையும் விஷால் – ஆர்யா
ஆர்யா, விஷால்
ஆக்ஷன்’ படத்தைத் தொடர்ந்து ‘சக்ரா’ மற்றும் ‘துப்பறிவாளன் 2’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இதில் ‘சக்ரா’ படத்தின் இறுதிக்கட்டப்
படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ‘துப்பறிவாளன் 2’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு மட்டும்
முடிவடைந்துள்ளது. இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு, ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார் விஷால்.
இதனைத் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் மூலமாக தயாரிக்கவும் உள்ளார். தற்போது இந்தப் படத்தில் விஷாலுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று
வருகிறது. இதில் நாயகியாக ரீத்து வர்மாவும், வில்லனாக ஆர்யாவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்யா, விஷால்
விஷால் – ஆர்யா இருவரும் இணைந்து பாலா இயக்கத்தில் வெளியான ‘அவன் இவன்’ படத்தில் நடித்துள்ளனர். அந்தப்
படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்து நடிக்கும் படமாக ஆனந்த் ஷங்கர் படம் அமைந்துள்ளது. இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளார்.
கமல், சிவாஜியை மிஞ்சிய விக்ரம்
கமல், சிவாஜியை மிஞ்சிய விக்ரம்
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் இதுவரை இல்லாத வகையில் அதிக வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
கமல், சிவாஜியை மிஞ்சிய விக்ரம்
விக்ரம்
நவராத்திரி படத்தில் சிவாஜி கணேசன் 9 வேடங்களில் நடித்தார். தசாவதாரம் படத்தில் கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்தார். அவரைத் தொடர்ந்து இப்போது
விக்ரம், ‘கோப்ரா’ படத்தில் 12 வேடங்களில் நடிக்கிறார். டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை
இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்குகிறார். கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும்
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் பிப்ரவரி 14-ந் தேதியான காதலர்
தினத்தன்று வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
விக்ரம்
ஆக்ஷன், திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம்
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த நடிகையை காப்பியடித்த சமந்தா
அந்த நடிகையை காப்பியடித்த சமந்தா
தமிழ் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, பாலிவுட் நடிகை கரீனா கபூரை காப்பியடித்ததாக நெட்டிசன்கள் சாடி வருகின்றனர்.

கரீனா கபூர், சமந்தாவிஜய் சேதுபதி, நடிகை திரிஷா நடித்து வெளியான 96 படத்தின், தெலுங்கு ரீமேக்கில் ஷர்வானந்த்
மற்றும் சமந்தா நடித்துள்ளனர். பிரேம் குமார் இயக்கி உள்ளார். படம் பிப்ரவரி 7ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்
கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்கான புரமோஷன் பணிகளில் சமந்தா தீவிரமாக செயல்பட்டார்.

அதன் ஒரு பகுதியாக ஜானு என பிரிண்ட் செய்யப்பட்ட புடவையை அணிந்து நடிகை சமந்தா காட்சி அளிக்கும்
புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. இது ரசிகர்கள கவர்ந்துள்ளது. இருந்தபோதும், அது ஏற்கனவே
நடிகை கரீனா கபூரால் செய்யப்பட்ட ஒரு விஷயம் என, சிலர் இதை கிண்டலும் செய்கின்றனர்.
பட வாய்ப்பு குறைந்ததால் விரக்தி – நடிகை தூக்கிட்டு தற்கொலை
பட வாய்ப்பு குறைந்ததால் விரக்தி – நடிகை தூக்கிட்டு தற்கொலை
பட வாய்ப்புகுறைந்ததால் விரக்தி அடைந்த நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட வாய்ப்பு குறைந்ததால் விரக்தி – நடிகை தூக்கிட்டு தற்கொலை
சுபர்னா ஜாஷ்
மேற்கு வங்க மாநிலத்தில் பர்த்வான் பகுதியை சேர்ந்தவர் நடிகை சுபர்னா ஜாஷ். இவர் பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து
வந்துள்ளார். சமீபத்தில் வெளியான வங்க மொழிப்படமான ‘மயூர்பங்கி’ திரைப்படத்திலும் சுபர்னா ஜாஷ் நடித்துள்ளார்.
அந்த படத்திற்கு பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
சுபர்னா ஜாஷ்
இந்நிலையில், சுபர்னா ஜாஷ் அவரது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுபர்ணாவின் உடலை அவரது பெற்றோர், உடனடியாக
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இளம் நடிகையான சுபர்ணா
ஜாஸின் மரணம் பெங்காலி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வருமான வரித்துறை அலுவலகத்தில் அர்ச்சனா கல்பாத்தி ஆஜர்
வருமான வரித்துறை அலுவலகத்தில் அர்ச்சனா கல்பாத்தி ஆஜர்
பிகில்’ படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார்.
வருமான வரித்துறை அலுவலகத்தில் அர்ச்சனா கல்பாத்தி ஆஜர்
அர்ச்சனா கல்பாத்தி
விஜய் நடித்த ‘பிகில்’ படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம்
தயாரித்தது. இந்த படம் ரூ.300 கோடி வருமானம் ஈட்டியதாக செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து வருமானவரித் துறையினர், ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான
திரையரங்குகள், அலுவலகங்கள், வீடுகள், நடிகர் விஜய்யின் பண்ணை வீடு, நீலாங்கரை மற்றும் சாலிகிராமம் வீடுகள்,
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை வீடுகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்.
நெய்வேலி நிலக்கரி சுரங்கப்பகுதியில் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்து வருமான
வரித்துறையினர் விசாரணை நடத்தினர். அன்புச்செழியன் வீட்டில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பறிமுதல்
செய்யப்பட்டது. மேலும் ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
அர்ச்சனா கல்பாத்தி
சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணப்பரிவர்த்தனை ஆதாரங்கள், சொத்து மதிப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, நேரில் ஆஜராகும்படி
நடிகர் விஜய் உட்பட 3 பேருக்கும் வருமானவரித்துறை சம்மன் அனுப்பியது. நடிகர் விஜய் நேற்று விசாரணைக்கு
ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு பதில் அவரது ஆடிட்டர் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் ‘பிகில்’
படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
விஜய் சேதுபதிக்கு குவியும் வில்லன் வாய்ப்புகள்
விஜய் சேதுபதிக்கு குவியும் வில்லன் வாய்ப்புகள்
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதிக்கு, வில்லன் வாய்ப்புகள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதிக்கு குவியும் வில்லன் வாய்ப்புகள்
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான
கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு
பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படங்களில் வில்லன் வேடம் ஏற்றார்.
இந்த படங்களுக்கு பிறகு அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். அடுத்து பிச்சிபாபு சனா
இயக்கத்தில் உருவாகும் உப்பெனா என்ற தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்து இருக்கிறார். இதில்
கதாநாயகனாக வைஷ்ணவ் தேஜ் நடித்துள்ளார். நாயகியாக கீர்த்தி ஷெட்டி வருகிறார்.
விஜய் சேதுபதி
கதாநாயகிக்கு தந்தையாகவும், வில்லனாகவும் விஜய் சேதுபதி வருகிறார். ஏற்கனவே சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதி நடித்து
இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உப்பெனா படத்தின் விஜய் சேதுபதி தோற்றத்தை படக்குழுவினர்
வெளியிட்டுள்ளனர். இந்த தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. படம் ஏப்ரல் 2-ந்தேதி திரைக்கு வருகிறது.
விஜய் சேதுபதி நடித்துள்ளதால் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது. அடுத்து தெலுங்கில்
பிரபல ஹீரோ அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வரும் நடிகை சாய்பல்லவி, போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
போர்ப்ஸ் பட்டியலில் சாய்பல்லவி
சாய் பல்லவி
பிரேமம் என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய
மொழிகளில் பிரபலமானவர் விஜய் இயக்கிய தியா என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார். அடுத்து தனுசுடன் ‘மாரி 2’
படத்தில் நடித்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. யுடியூப்பில் அதிகமானோர் பார்த்த பாடலாகவும் ரவுடி பேபி சாதனை படைத்தது.
இந்நிலையில் போர்ப்ஸ் இந்தியா இதழ் வெளியிட்டுள்ள, 30 அண்டர் 30 என்ற தொகுப்பில் நடிகை சாய் பல்லவியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இது வேறு யாருக்கும்
கிடைக்காத பெருமை. வேறு எந்த தென்னிந்திய நடிகையின் பெயரும் இந்த வருட பட்டியலில் இடம்
பெறவில்லை. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 பெண்களில் இவரும் ஒருவர்.
சாய் பல்லவி
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் நடிகை சாய் பல்லவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், தன்னைப் பெருமைப்படுத்திய போர்ப்ஸ்
இதழுக்கு நன்றி தெரிவித்துள்ளார், நடிகை சாய் பல்லவி. இதுபற்றி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அவர்,
இதன்மூலம் தான் பெருமைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரூ.2 கோடி மதிப்புள்ள முக அழகு கிரீம் விளம்பர ஒப்பந்தத்தையும் ரூ.1 கோடி மதிப்புள்ள மற்றொரு ஒப்பந்தத்தையும் நடிகை சாய் பல்லவி நிராகரித்தவர்
என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இப்போது, நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி, நடிகர் ராணாவுடன் விரத பர்வம் ஆகிய தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

அவருக்கு மட்டும் தங்கையாக நடிக்கமாட்டேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்
அவருக்கு மட்டும் தங்கையாக நடிக்கமாட்டேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழில் பல வெற்றி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அவருக்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
அவருக்கு மட்டும் தங்கையாக நடிக்கமாட்டேன் – ஐஸ்வர்யா ராஜேஷ்
ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், தன்னுடைய திறமையால் ரசிகர்களை
கவர்ந்து வருகிறார். கதாநாயகியாகவும், குழந்தைகளுக்கு அம்மாவாகவும், தங்கையாகவும் நடித்துள்ளார்.
சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்திலும், தற்போது விக்ரம் பிரபுக்கு தங்கையாக ‘வானம் கொட்டட்டும்’ படத்திலும் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் மற்ற ஹீரோக்களுக்கு தங்கையாக நடிப்பேன், ஆனால் விஜய்க்கு மட்டும் தங்கையாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
விஜய் – ஐஸ்வர்யா ராஜேஷ்
மேலும் எனக்கு விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று தான் ஆசை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் திரிஷாவை மறந்துவிடுவார்கள் – சமந்தா
ரசிகர்கள் திரிஷாவை மறந்துவிடுவார்கள் – சமந்தா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, ரசிகர்கள் திரிஷாவை மறந்துவிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் திரிஷாவை மறந்துவிடுவார்கள் – சமந்தா
சமந்தா, திரிஷா
விஜய் சேதுபதி – திரிஷா நடித்த ’96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ஜானு’வில் சர்வானந்தும், சமந்தாவும்
நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே திரிஷா நடிப்புடன் சமந்தாவை ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில்
சமந்தா கூறியதாவது: இதுவரை நான் நடித்த அனைத்து படங்களையும் விட சிறப்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறேன்.
முக்கியமாக திரிஷாவின் நடிப்பை நகலெடுக்க விரும்பாமல் எனது சாயலில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன்.
அதனால் அவரது நடிப்பில் இருந்து ஜானுவில் மாறுபட்ட சமந்தாவை பார்க்கலாம். 96 படத்தைப் பொறுத்தவரை
திரிஷா சிறப்பாக நடித்திருந்தார். அதில் எந்த மாற்றமும் இல்லை.
சமந்தா, திரிஷா
ஆனபோதும் ஜானு படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள், திரிஷாவை மறந்து விடுவார்கள். ஜானுவான
சமந்தாவைத்தான் மனதில் கொள்வார்கள். அந்த அளவுக்கு சர்வானந்துடன் எனது கெமிஸ்ட்ரி பல அதிசயங்களை வெளிப்படுத்தியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

செல்பி எடுத்த நடிகைக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம்
செல்பி எடுத்த நடிகைக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம்
செல்பி எடுத்த காரணத்தால் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணிக்கு போலீசார் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
செல்பி எடுத்த நடிகைக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு
சஞ்சனா கல்ராணி
நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி தமிழ், கன்னட படங்களிலும் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். பெங்களூரு இந்திரா நகரில் சமீபத்தில் சொகுசு
காரில் நண்பருடன் சென்று கொண்டிருந்த சஞ்சனா கல்ராணி, வாகனம் ஓட்டியபடியே மொபைல் போனில்,
‘செல்பி’ எடுத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் கண்டனம் தெரிவித்தனர். நடிகை மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.
சஞ்சனா கல்ராணி
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய அவருக்கு, போலீசார், ‘நோட்டீஸ்’ அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தனர். சஞ்சனா படப்பிடிப்புக்காக, துபாய்
சென்றிருந்ததால் கால அவகாசம் கோரியிருந்தார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய அவர், போக்குவரத்து போலீஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்று, இணை
போலீஸ் கமிஷனர் ரவிகாந்தே கவுடாவை சந்தித்தார். ‘பொறுப்புள்ள இடத்தில் இருந்து கொண்டு, நான்
செய்திருக்கக்கூடாது’ எனக் கூறி மன்னிப்பு கோரினார். செய்த தவறுக்கு 2,000 ரூபாய் அபராதம் செலுத்தினார்.

ஐடி ரெய்டு – சினிமா பைனான்சியரிடம் இருந்து ரூ.77 கோடி பறிமுதல்
ஐடி ரெய்டு – சினிமா பைனான்சியரிடம் இருந்து ரூ.77 கோடி பறிமுதல்
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய
சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஐடி ரெய்டு – சினிமா பைனான்சியரிடம் இருந்து ரூ.77 கோடி பறிமுதல்
அன்புச்செழியன்
விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் பிகில்.
விஜய்-அட்லி 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலை வாரிக்குவித்ததாக திரையுலக வட்டாரத்தில்
தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தரப்பில் வசூல் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
நேற்று திடீரென ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்
சோதனையில் ஈடுபட்டனர். அதேபோல் இந்நிறுவனத்துக்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று வருமான வரித்துறை அதிகாரிகள், ‘பிகில்’ பட சம்பள விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய்யிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் மேற்கொண்டு விசாரணைக்காக விஜய்யை அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
பின்னர், சென்னை சாலிகிராமம் மற்றும் பனையூரில் உள்ள விஜய்யின் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் விடியவிடிய சோதனையில் ஈடுபட்டனர்.
விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர்
இன்று 2வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களிலும் மற்றும் ஏ.ஜி.எஸ் குழுமத்துக்கு
சொந்தமான இடங்களிலும் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வீடு, அலுவலகங்களில்
இருந்து ரூ.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திரைப்பட தயாரிப்பாளர் அன்புச்செழியனின் நண்பர் சரவணன் வீட்டிலிருந்து ரூ.17.60 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய், பிகில் படத்திற்காக 30 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்து உள்ளது. நடிகர் விஜயின் வருமானம் குறித்து
வருமானவரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து 20 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் வாக்குமூலம் வாங்கி
வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் இருந்து ரூ. 77 கோடியை வருமான
வரித்துறையினர் பறிமுதல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சின்மயி மனு நிராகரிப்பு…. டப்பிங் யூனியன் தலைவராக ராதாரவி தேர்வு
சின்மயி மனு நிராகரிப்பு…. டப்பிங் யூனியன் தலைவராக ராதாரவி தேர்வு
சின்மயி மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து டப்பிங் யூனியன் தேர்தலில் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சின்மயி மனு நிராகரிப்பு…. டப்பிங் யூனியன் தலைவராக ராதாரவி தேர்வு
ராதாரவி
டப்பிங் யூனியன் தேர்தல் வரும் 15ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நடிகர் ராதாரவி தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து ராமராஜ்யம் அணியின்
சார்பில் சின்மயி போட்டியிட்டார். இதையடுத்து கடந்த மாதம் 30ந்தேதி மனு தாக்கல் செய்வதற்காக சென்னை
வடபழனியில் உள்ள டப்பிங் யூனியன் அலுவலகத்திற்கு சின்மயி வந்தார்.
’மீ டூ’ விவகாரத்தின் போது டப்பிங் யூனியனில் சந்தா தொகை செலுத்தாத காரணத்தால் சின்மயி நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனவே டப்பிங் யூனியனில் இருந்து
நீக்கப்பட்ட சின்மயி உள்ளே வரக்கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து காவல்துறையினர் தலையிட்டு சமாதானப்படுத்தி அவரை உள்ளே அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து சின்மயி மனு தாக்கல் செய்தார்.
ராதாரவி
ஆனால், உறுப்பினராக இல்லாத பட்சத்தில் அவரது மனு ஏற்று கொள்ளப்படுமா? என்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து நிருபர்களிடம் கூறிய சின்மயி, எந்த
காரணமும் இல்லாமல் விளக்கமும் கொடுக்காமல் சங்கத்தில் இருந்து தன்னை நீக்கியது ஏன்? வாழ்நாள்
உறுப்பினர் அட்டை வைத்திருப்பதால் தேர்தலில் போட்டியிட போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பாடகி சின்மயி வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதனால் டப்பிங் யூனியன்
தேர்தலில் தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
காதல் இளவரசி -நயன்தாரா காதல் முறிந்ததுvideo
காதல் இளவரசி -நயன்தாரா காதல் முறிந்தது
வாலிபர்களின் காதல் கன்னியாகவும் ,காதல்
இளவரசியாகவும் விளங்கி வரும் நயன்தாரா ,விக்கினேஸ்
சிவனின் புதிய காதல்
முறிந்துள்ளதாக இந்த காணொளி தெரிவிக்கிறது ,காணொளியை பாருங்கள் ,காதல் தோல்வியை பகிருங்கள்
திருமணமான 2 வாரங்களில் 5-வது கணவரை பிரிந்த நடிகை பமீலா ஆண்டர்சன்
திருமணமான 2 வாரங்களில் 5-வது கணவரை பிரிந்த நடிகை பமீலா ஆண்டர்சன்
பிரபல ஆலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன், காதலித்து திருமணம் செய்த 5வது கணவரை விவகாரத்து செய்திருக்கிறார்.
திருமணமான 2 வாரங்களில் 5-வது கணவரை பிரிந்த நடிகை பமீலா ஆண்டர்சன்
பமீலா ஆண்டர்சன்
பிரபல ஆலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன். இவருக்கு வயது 52. பாடகர்கள் டாம்மி லீ, கிட் ராக், ‘போக்கர்’
விளையாட்டு வீரர் ரிக் சாலமன் ஆகியோரை திருமணம் செய்து, விவாகரத்து செய்தவர்.
12 நாட்களுக்கு முன்னர் பிரபல ஆலிவுட் தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸை திருமணம் செய்து கொண்டார். இருவருக்குமே
இது ஐந்தாவது திருமணம். ஏற்கனவே நான்கு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர்கள்.
30 வருடங்களுக்கும் மேலாக காதலித்துவந்த இருவரும் கடந்த ஜனவரி 20-ந்தேதி அன்று, மலிபுவில் திருமணம்
செய்து கொண்டார்கள். மலிபு நகரில், தனிப்பட்ட முறையில் நடந்த திருமண நிகழ்ச்சியில், நெருக்கமான நண்பர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
ஜான் பீட்டர் – பமீலா ஆண்டர்சன்
திருமணம் ஆகி, இரண்டு வாரங்களே ஆன நிலையில், இருவரும் பிரிவதாக முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பமீலா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருமண உறவில் நமக்கு என்ன வேண்டும். ஒருவரிடம் இருந்து மற்றொருவர் எதை எதிர்பார்க்கிறோம் என்பதை
பரிசீலிக்க சில காலமாகும். ஆகையால், நாங்கள் இருவரும் ஒருமனதாக பிரிய முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
மீண்டும் ரஜினியுடன் இணைந்த நயன்தாரா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
மீண்டும் ரஜினியுடன் இணைந்த நயன்தாரா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தர்பார் படத்தை அடுத்து ரஜினி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக
படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
மீண்டும் ரஜினியுடன் இணைந்த நயன்தாரா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரஜினி – நயன்தாரா
ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘தர்பார்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய
இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். தற்போது மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
தர்பார் படத்தை அடுத்து சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வருகிறார். தலைவர் 168 என்று அழைக்கப்பட்டு வரும் இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி,
பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்,
தற்போது இப்படத்தில் நயன்தாரா இணைந்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மிஸ்ராவை திருமணம் செய்தார் மகத்
மிஸ்ராவை திருமணம் செய்தார் மகத்
நடிகரும், பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவருமான மகத், அவரது காதலி பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்துக் கொண்டார்.
பிராச்சி மிஸ்ராவை திருமணம் செய்தார் மகத்
மகத் – பிராச்சி மிஸ்ரா
மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத். இவரும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். பின்னர் நடிகர் மகத்
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடிகை யாஷிகா மீது காதல் வயப்பட்டார்.
இதனால், மகத்துக்கும், பிராச்சிக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலை வளர்த்துக் கொண்டார்.
மகத் திருமணத்தில் சிம்பு
படங்களில் பிசியாக நடித்து வரும் மகத், தன்னுடைய காதலியான பிராச்சியை கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். தற்போது இவர்கள்
திருமணம் இன்று காலை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் திருமண விழாவில் கலந்துக் கொண்டார்கள்.
நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் திருமணத்திற்கு நேரில் சென்று மகத் மற்றும் பிராச்சி மிஸ்ராவை வாழ்த்தினார்கள்.
நிர்வாணமாக நடித்த நடிகைக்கு சேரன் பாராட்டு
நிர்வாணமாக நடித்த நடிகைக்கு சேரன் பாராட்டு
ராஜாவுக்கு செக் படத்தில் காட்சியின் முக்கியத்துவம் கருதி நிர்வாணமாக நடித்த நடிகையை, இயக்குனர் சேரன் பாராட்டி உள்ளார்.
1நிர்வாணமாக நடித்த நடிகைக்கு சேரன் பாராட்டு
சேரன்
சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், சிருஷ்டி டாங்கே நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ராஜாவுக்கு செக். எஸ்டிசி நிறுவனம் வெளியிட்ட இந்த படத்தில் சிருஷ்டி
டாங்கே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து இருந்தார்.
ஒரு காட்சியில் நிர்வாணமாகவும் நடித்து இருந்தார். அவரது இந்த அர்ப்பணிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது.
சிருஷ்டி டாங்கே
அந்த வகையில், நடிகரும் இயக்குனருமான சேரன், சிருஷ்டி டாங்கேவை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ”ராஜாவுக்கு செக் படத்தில்
ஒரு காட்சியில் ஸ்ருஷ்டி டாங்கே காட்சியின் முக்கியத்துவம் கருதி துணியின்றி நடித்திருப்பார்.
ஒரு டவல் மட்டுமே மேலே கிடக்கும். அந்த காட்சியில் நடிக்க ஒரு தைரியம் வேணும். இப்படத்தில் அவர் கொடுத்த
ஒத்துழைப்பு மறக்கமுடியாதது. மிக்க நன்றி” என கூறியுள்ளார்.video







