Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
கொலையில் ஒன்று சேரும் விஜய் ஆண்டனி
கொலையில் ஒன்று சேரும் விஜய் ஆண்டனி
தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் ஆண்டனியுடன், ரித்திகா சிங் இணைந்து ஒரு படத்தில் நடித்துள்ளார்.
கொலையில் ஒன்று சேரும் விஜய் ஆண்டனி – ரித்திகா சிங்
விஜய் ஆண்டனி – ரித்திகா சிங்
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படத்தின் மூலம் அறிமுகமானவர் ரித்திகா சிங். இப்படத்தை அடுத்து, ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே ஆகிய
படங்களில் நடித்தார். மேலும் அருண் விஜய்யுடன் பாக்சர், அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி போன்ற படங்களில் ரித்திகா சிங் நடித்துள்ளார்.
கொலை
இதைத்தவிர, பாலாஜி குமார் இயக்கும் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரித்திகாசிங் நடித்துள்ளார். தற்போது இப்படத்திற்கு ‘கொலை’ என்று தலைப்பு வைத்து போஸ்டரையும்
படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இப்படத்தை இன்பினிட்டி பிலிம்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
எங்களுக்குள் தவறான தொடர்பு இல்லை – சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பேட்டி
எங்களுக்குள் தவறான தொடர்பு இல்லை – சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பேட்டி
நாகசைதன்யா ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் பிரீதம் ஜுகல்கர் தெரிவித்துள்ளார்.
எங்களுக்குள் தவறான தொடர்பு இல்லை – சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பேட்டி
சமந்தா, பிரீதம் ஜுகல்கர்
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகினரிடையே பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் என்று டோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியானது.
இதையடுத்து பிரீதம் ஜுகல்கருடன் நடிகை சமந்தா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து பிரீதம் ஜுகல்கரை அவதூறாக திட்டியும், மிரட்டல் விடுத்தும் நாகசைதன்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து பிரீதம் ஜுகல்கர் அளித்துள்ள பேட்டியில். ‘‘எனக்கும், சமந்தாவுக்கும் தவறான தொடர்பு உள்ளது என்றும், இதனாலேயே சமந்தாவுக்கும், நாகசைதன்யாவுக்கும் பிரிவு ஏற்பட்டு
உள்ளது என்றும் தகறான தகவல் பரப்பி உள்ளனர். இதன் மூலம் சமந்தாவை அவதூறு செய்துள்ளனர். சமந்தாவை நான் சகோதரியாகவே பார்க்கிறேன்.
அவரை சகோதரி என்றே அழைக்கிறேன். எங்களுக்குள் தவறான தொடர்பு இல்லை என்பது நாகசைதன்யாவுக்கு தெரியும். ஆனாலும் அவர் அமைதியாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.
எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. நாகசைதன்யா ரசிகர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன்” என்றார்
மாஸ் காட்டும் அண்ணாத்த டீசர்- ஹிட்டாகும் இந்த வசனம்
மாஸ் காட்டும் அண்ணாத்த டீசர்- ஹிட்டாகும் இந்த வசனம்
ஆயுத பூஜையை முன்னிட்டு ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் 2 பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு அண்ணாத்த டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அண்ணாத்த
இதில் கிராமத்தான குணமாதானே பார்த்துருக்க… கோபப்பட்டு பார்த்ததில்லயே… என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும் இந்த டீசர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ஜோதிகாவின் 50வது படம் – மணல் சிற்ப வடிவில் வாழ்த்து
ஜோதிகாவின் 50வது படம் – மணல் சிற்ப வடிவில் வாழ்த்து
சசிகுமார், சமுத்திரகனியுடன் ஜோதிகா நடித்துள்ள உடன்பிறப்பே திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஜோதிகாவின் 50வது படம் – மணல் சிற்ப வடிவில் வாழ்த்து
ஜோதிகா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. அஜித்தின் ‘வாலி’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தோன்றிய அவர், சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின்
மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தன்னுடன் பல படங்களில் நடித்த முன்னணி நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த
ஜோதிகா, ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார். கடந்த சில ஆண்டுகளாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜோதிகாவின் 50வது படமான ‘உடன்பிறப்பே’ திரைப்படம் இன்று அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதையொட்டி மெரீனா கடற்கரையில் ஜோதிகாவின் மணல் சிற்பம்
ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் ஜோதிகாவின் புகைப்படத்துடன் ‘உடன்பிறப்பே’ படத்தின் வெளியிட்டு தகவல் இடம்பெற்றுள்ளது. அதோடு வாழ்த்துக்கள் ‘ஜோதிகா 50’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நயன்தாரா, திரிஷா பாணியில் லட்சுமி மேனன்
நயன்தாரா, திரிஷா பாணியில் லட்சுமி மேனன்
தமிழில் விஷால், ஜெயம் ரவி, அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான லட்சுமி மேனன், தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன், பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, வேதாளம், மிருதன்
உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 2016-ல் விஜய் சேதுபதியுடன் றெக்க படத்தில் நடித்து விட்டு கல்லூரி படிப்பை தொடர்ந்தார். அதன்பிறகு சில வருடங்கள் படங்களில் நடிக்கவில்லை.
பின்னர் புலிக்குத்தி பாண்டி படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த அவர், தற்போது ‘ஏஜிபி‘ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இது திகில் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது.
இதுவரை கமர்ஷியல் படங்களில் நடித்த லட்சுமி மேனன், தற்போது முதல் தடவையாக இந்த படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் சவாலான மனநோயாளி கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்த படத்தை ரமேஷ் சுப்பிரமணியன் இயக்க உள்ளார்.
நயன்தாரா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து முன்னணி நடிகைகளாக உயர்ந்துள்ளதால், தற்போது லட்சுமி மேனனும் அந்த ரூட்டுக்கு மாறி உள்ளார்.
பீஸ்ட் நடிகைக்கு பிரபாஸ் படக்குழுவினர் கொடுத்த சிறப்பு பரிசு
பீஸ்ட் நடிகைக்கு பிரபாஸ் படக்குழுவினர் கொடுத்த சிறப்பு பரிசு
பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டேவிற்கு பிரபாஸ் படக்குழுவினர் சிறப்பு பரிசு ஒன்றை கொடுத்து இருக்கிறார்கள்.
பீஸ்ட் நடிகைக்கு பிரபாஸ் படக்குழுவினர் கொடுத்த சிறப்பு பரிசு
பூஜா ஹெக்டே
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு
விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பூஜே ஹெக்டே தெலுங்கில் பிரபாசுடன் இணைந்து ‘ராதே ஷ்யாம்’ என்னும் படத்தில் நடித்துள்ளார்.
பூஜா ஹெக்டே
350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. ராதா கிருஷ்ணகுமார்
இயக்கி இருக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இன்று இப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
இவருக்கு ‘ராதே ஷ்யாம்’ படக்குழுவினர் சிறப்பு பரிசு கொடுக்கும் விதமாக புதிய போஸ்டர் ஒன்றை உருவாக்கி வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நாகேஷ், வாலிக்கு சோறு போட்டவர் ஸ்ரீகாந்த்
நாகேஷ், வாலிக்கு சோறு போட்டவர் ஸ்ரீகாந்த்
ழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்தின் மறைவுக்கு பிரபல நடிகர் ஒருவர் அறிக்கை வெளியிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து இருக்கிறார்.
நாகேஷ், வாலிக்கு சோறு போட்டவர் ஸ்ரீகாந்த்… பிரபல நடிகர் உருக்கம்
ஸ்ரீகாந்த்
வெண்ணிற ஆடை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். 50-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். வில்லனாகவும் சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்தும் நடித்துள்ளார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்தனர். தற்போது நடிகர் சிவகுமார், ஸ்ரீகாந்த்தின் நினைவுக்குறிப்புகளை பகிர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், எனது அருமை நண்பர் ஶ்ரீகாந்த் 1965 ஏப்ரலில் ஜெயலலிதாவின் முதல் ஜோடியாக ஶ்ரீதரின் வெண்ணிற ஆடை படத்தின் கதாநாயகனாக அறிமுகமானார். ஈரோட்டில் பிறந்து, அமெரிக்க தூதரகத்தில் பணி புரிந்து, கே.பாலசந்தரால் மேடை நடிகராக பிரபலமடைந்த வெங்கி என்கின்ற ஶ்ரீதர், மேஜர் சந்திரகாந்த் என்ற கதையின் நாடகத்தில் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் தான் ஶ்ரீகாந்த். திரைப்படத்தில் அறிமுகமாகும் போது அதே பெயரையே ஒப்புக் கொண்டு நடித்தார்.
சிவகுமார்
ஸ்ரீகாந்துடன் சிவகுமார்
நாகேஷ் நகைச்சுவையில் விஸ்வரூபம் எடுத்தார், வாலி கவிதையால் கரை கண்டார், வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் துவக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட போது, தன் கையால் சமைத்து போட்டு, மாம்பலம் கிளப் ஹவுசில் இருவரையும் காப்பாற்றியவர் ஶ்ரீகாந்த். கதாநாயகனாக நிற்க முடியவில்லை என்றாலும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள், ராஜநாகம்’ போன்ற முக்கிய படங்களில் முத்திரை பதித்தார்.
என்னோடு இணைந்து, ‘மதன மாளிகை, சிட்டுக் குருவி, இப்படியும் ஒரு பெண், அன்னக்கிளி, யாருக்கும் வெக்கமில்லை, நவக்கிரகம்’ என பல படங்களில் நடித்தவர். சமீபத்தில் 80 வயது பூர்த்தி அடைந்த விழா கொண்டாடினார். இன்று அவரது ஒரே மகள் மீரா வீட்டில் ஶ்ரீகாந்த், லீலாவதி, மீரா கணவர் ஷக் அலெக்சாண்டர், பேத்தி காவேரி ஆகியோரையும் சந்தித்து ஓவியம், சினிமா என்று இரண்டு காபி டேபிள் புக்ஸை கொடுத்து வாழ்த்தி வந்தேன். இன்று அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்’ இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை
விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை
நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவர் ஜோடியாக நடிக்கும் நடிகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
3வது முறையாக விஜய்யுடன் இணையும் பிரபல நடிகை
விஜய்
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் விஜய், நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.
இப்படத்தின் நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆகுது – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரேயா
குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆகுது – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரேயா
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஸ்ரேயா, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
குழந்தை பிறந்து ஒரு வருஷம் ஆகுது – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரேயா
கணவருடன் ஸ்ரேயா
தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகையாக இருந்த ஸ்ரேயா ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன்பிறகு மழை, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நடித்தார்.
ரஜினிகாந்த்துடன் சிவாஜி படத்தில் ஜோடியாக நடித்து பிரபலமானார். தொடர்ந்து அழகிய தமிழ் மகன், கந்தசாமி, குட்டி, சிக்குபுக்கு, ரவுத்திரம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு படங்களிலும் சில இந்தி, ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா. திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். இருப்பினும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வந்தார்.
வழக்கமாக கணவருடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களை பதிவிட்டு வந்த ஸ்ரேயா தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏனெனில் தனக்கு குழந்தை பிறந்து ஓராண்டு ஆனதாக அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு சமயத்தில் தனக்கு குழந்தை பிறந்ததாக ஸ்ரேயா கூறியுள்ளார். அவர் கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படமும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து ஸ்ரேயாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை சமந்தாவுக்கு வனிதா ஆதரவு
நடிகை சமந்தாவுக்கு வனிதா ஆதரவு
நடிகை சமந்தா, கணவரை பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்கு நடிகை வனிதா விஜயகுமார் ஆதரவு தெரிவித்து உள்ளார்.
விவாகரத்து விவகாரம் – நடிகை சமந்தாவுக்கு வனிதா ஆதரவு
வனிதா, சமந்தா, நாக சைதன்யா
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக கடந்த வாரம் அறிவித்து இருந்தனர். அவர்களது பிரிவுக்கு பல்வேறு காரணங்கள்
கூறப்பட்டு வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார் சமந்தா. இதையடுத்து பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சமந்தாவுக்கு ஆதரவு தெரிவித்து நடிகை வனிதா தெரிவித்துள்ளதாவது: “இங்கே சமூகம் என்று எதுவும் இல்லை. உன் வாழ்க்கை வாழ அறிவுரை மட்டும் தான் கூறுவார்கள். மக்கள்
நாம் பதிவு செய்யும் புகைப்படங்களை மட்டும் தான் பார்ப்பார்கள். நம்மை பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. இனி உன் வாழ்க்கையை நோக்கி நீ முன்னேறி கொண்டே இரு. உனக்கான வலிமை கூடட்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
காதலனை அறிமுகம் செய்து வைத்த ரகுல் பிரீத் சிங்
காதலனை அறிமுகம் செய்து வைத்த ரகுல் பிரீத் சிங்
பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
பிறந்தநாளன்று காதலனை அறிமுகம் செய்து வைத்த ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்
தமிழில் அருண்விஜய் நடித்த ‘தடையற தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். அதன்பின், கார்த்தி ஜோடியாக ‘தேவ்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’,
சூர்யாவின் ‘என்ஜிகே’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்த அவர், தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘அயலான்’ படத்தில் நடித்துள்ளார்.
இதுதவிர பாலிவுட் மற்றும் டோலிவுட் திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக
நடித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ரகுல் பிரீத் சிங், சமூக வலைதளம் வாயிலாக தனது காதலனை அறிமுகம் செய்து வைத்துள்ளார். நடிகரும், தயாரிப்பாளருமான ஜக்கி பக்னானி என்பவரை காதலிப்பதாக அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
பதிவிட்டுள்ளதாவது: “இந்த வருடம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு நீ. என் வாழ்வை வண்ண மையமாக்கியதற்கும், என்னை இடைவிடாமல் சிரிக்க வைப்பதற்கும் நன்றி” என குறிப்பிட்டு காதலனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
டாக்டர்’ படத்தின் வசூல் நிலவரம்
டாக்டர்’ படத்தின் வசூல் நிலவரம்
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
‘டாக்டர்’ படத்தின் வசூல் நிலவரம் – முதல் நாளிலேயே இத்தனை கோடியா?
சிவகார்த்திகேயன், நெல்சன்
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக இயக்கி உள்ள படம் ‘டாக்டர்’. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக இளம் நடிகை
பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் வினய் வில்லனாகவும், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, தீபா ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், டாக்டர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் ரூ.7 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 50
சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், டாக்டர் படம் இந்த அளவு வசூலித்துள்ளது திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன், நெல்சன்
இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த படங்களின் பட்டியலில் டாக்டர் படம் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் விஜய்யின் மாஸ்டர் (ரூ.25 கோடி) படமும், இரண்டாவது இடத்தில் தனுஷின் கர்ணன் (ரூ.11 கோடி) படமும் உள்ளது குறிப்பிடத்தக்கது..
மகனால் ஷாருக்கானுக்கு வந்த சோதனை
மகனால் ஷாருக்கானுக்கு வந்த சோதனை
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான், தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்திய வழக்கில் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
மகனால் ஷாருக்கானுக்கு வந்த சோதனை
ஷாருக்கான் – ஆரியன் கான்
ஷாருக்கான் மகன் ஆரியன் கான் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யபட்டுள்ளார்.
இதன்காரணமாக மிகப்பெரிய கல்வி நிறுவனமான பைஜூஸ் தனது விளம்பங்களில் ஷாருக்கான் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு முதல் நடிகர் ஷாருக்கான் பைஜூஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக இருந்துவருகிறார்.
இதனால் ஆண்டுதோறும் ஷாருக்கானுக்கு பைஜூஸ் 3 முதல் 4 கோடி ரூபாய் பணம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனமான பைஜூஸ் சில ஆண்டுகளுக்குள்ளாகவே அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது.
ஷாருக்கான்
ஷாருக்கானின் மகன் ஏற்படுத்திய சர்ச்சையால், அவருடன் தொடர்பு கொள்ள அந்நிறுவனம் விரும்பவில்லை என்பதால், அவருடனான விளம்பரங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், விளம்பர தூதுவராக அவர் தொடர்கிறாரா? அல்லது அந்நிறுவனம் அவரை முழுமையாக கைவிட்டுவிட்டதா என்பது குறித்து தெரியவில்லை.
வருங்கால கணவர் குறித்து மனம் திறந்த ராஷி கன்னா
வருங்கால கணவர் குறித்து மனம் திறந்த ராஷி கன்னா
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராஷி கன்னா, வருங்கால கணவர் குறித்து பேசியிருக்கிறார்.
வருங்கால கணவர் குறித்து மனம் திறந்த ராஷி கன்னா
ராஷி கன்னா
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
தமிழில் நயன்தாராவுடன் இமைக்கா நொடிகள் படத்தில் நடித்து அறிமுகமானவர் ராஷிகன்னா, அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன்,
துக்ளக் தர்பார் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அரண்மனை 3, சர்தார், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
ராஷிகன்னா இணையதளத்தில் ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து கூறும்போது, ‘‘எனக்கு ஆண் நண்பர் இல்லை. இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. எனது வாழ்க்கை துணைவரை
கண்டுபிடிக்கும்போது எல்லோருக்கும் சொல்வேன். எனக்கு வரப்போகிற கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன்.
ராஷி கன்னா
எனக்கு எல்லா கதாநாயகர்களையும் பிடிக்கும். தமிழில் விஜய் எனக்கு பிடித்த நடிகர், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு ஆகியோரை பிடிக்கும். அல்லு அர்ஜுனுடன்
சேர்ந்து நடனம் ஆட விருப்பம் உள்ளது. கதாநாயகிகளில் நயன்தாரா, சமந்தா, அனுஷ்கா ஆகியோர் மிகவும் பிடித்தவர்கள். இப்போது தெலுங்கை விட அதிக தமிழ் படங்கள் கைவசம் வைத்து நடிக்கிறேன்” என்றார்.
நயன்தாராவுடன் டூயட் பாடும் ரஜினி -அண்ணாத்த
நயன்தாராவுடன் டூயட் பாடும் ரஜினி -அண்ணாத்த
அண்ணாத்த படத்தின் ‘சாரக்காற்றே’ பாடல் காட்சியில் ரஜினி காந்த் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
நயன்தாராவுடன் டூயட் பாடும் ரஜினி -அண்ணாத்த படத்தின் 2வது பாடல் வெளியானது
ரஜினி-நயன்தாரா பாடல் காட்சி
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று
ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன.
சில தினங்களுக்கு முன்பு அண்ணாத்த படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்ட நிலையில், இன்று
2வது பாடல் வெளியிடப்பட்டது. ‘சாரக்காற்றே’ எனும் இந்த பாடல் காட்சியில் ரஜினி காந்த் இளமையான தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
ரஜினி-நயன்தாரா பாடல் காட்சி
ரஜினி – நயன்தாரா இடையேயான ரொமாண்டிக் பாடலாக இடம்பெற்றுள்ளதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இப்பாடலை ஸ்ரேயா கோஷலும், சித் ஸ்ரீராமும் இணைந்து பாடி உள்ளனர்.
கவிஞர் பிறைசூடன் மாரடைப்பால் காலமானார்
கவிஞர் பிறைசூடன் மாரடைப்பால் காலமானார்
2000க்கும் அதிகமான பாடல்களை எழுதி ரசிகர்களை மகிழ்வித்த பிறைசூடன், 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது பெற்றவர்.
கவிஞர் பிறைசூடன் மாரடைப்பால் காலமானார் -திரையுலகினர் இரங்கல்
கவிஞர் பிறைசூடன்
பிரபல திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான பிறைசூடன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 65.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 1956 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி பிறந்தவர் பிறைசூடன். 1985-ல் வெளியான ‘சிறை’ படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த ‘ராசாத்தி ரோசாப்பூ’ என்னும் பாடலை எழுதியதன் மூலமாக தமிழ்த்திரையுலகில் பாடலாசிரியராக தனது பயணத்தை தொடங்கினார்.
பணக்காரன் திரைப்படத்தில் இவர் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணுந்தான்’, செம்பருத்தி திரைப்படத்தில் ‘நடந்தால் இரண்டடி’ உள்ளிட்ட பாடல்கள் மிகவும் பிரபலமானவை.
திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது தனிப்பாடல்கள், கவிதைகள் உள்ளிட்டவற்றையும் எழுதியுள்ளார்.
பிறைசூடன் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் குடும்பத்தினர்
2000க்கும் அதிகமான பாடல்களை எழுதி ரசிகர்களை மகிழ்வித்தவர் பிறைசூடன். 5000-க்கும் அதிகமான பக்தி பாடல்களையும் எழுதி உள்ளார். திரைப்பட எழுத்தாளர் சங்க செயலாளராக
பதவி வகித்துள்ளார். 1991, 1996 ஆகிய ஆண்டுகளில் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது, தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் கலைச்செல்வம் விருது, 2015ல் தமிழக அரசின் கபிலர் விருது பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் இன்று மாலை நெசப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் பிறைசூடன் காலமானார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு செய்தி
வெளியானதையடுத்து திரையுலகத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பாலிவுட்டுக்கு செல்லும் அனிருத்
பாலிவுட்டுக்கு செல்லும் அனிருத்
கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், விரைவில் பாலிவுட் படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரீமேக் படம் மூலம் பாலிவுட்டுக்கு செல்லும் அனிருத்?
அனிருத்
தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது.
பின்னர் அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி
இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான், பீஸ்ட் போன்ற படங்கள் உள்ளன.
அனிருத்
இப்படி கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், விரைவில் பாலிவுட் படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தெலுங்கில் கடந்த
2019-ம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’ படத்தின் இந்தி ரீமேக்கிற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜெர்ஸி படத்துக்கும் அனிருத் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்காதல்… கருக்கலைப்பு என தொடர்ந்து பரவும் வதந்தி – நடிகை சமந்தா காட்டம்
கள்ளக்காதல்… கருக்கலைப்பு என தொடர்ந்து பரவும் வதந்தி – நடிகை சமந்தா காட்டம்
நடிகை சமந்தா தன்னை பற்றி பரவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கள்ளக்காதல்… கருக்கலைப்பு என தொடர்ந்து பரவும் வதந்தி – நடிகை சமந்தா காட்டம்
சமந்தா
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து உள்ளனர். இவர்கள் விவாகரத்துக்கு பல காரணங்கள் இருப்பதாக டோலிவுட் வட்டாரத்தில் இருந்து தகவல்கள் பரவி வந்தன.
இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “என் சொந்த
பிரச்சினையில் நீங்கள் காட்டிய உணர்வுகள் என்னை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. என் மீது வைக்கப்பட்ட பொய்யான வதந்தி மற்றும் கதைகளுக்கு எதிராக நீங்கள் காட்டிய அனுதாபத்திற்கு நன்றி.
முதலில் வேறு ஒருவருடன் தொடர்பு இருக்கிறது என்றார்கள், பின்னர் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை, நான் ஒரு சந்தர்ப்பவாதி என்றார்கள். தற்போது நான் கருக்கலைப்பு செய்ததாக கூறுகின்றனர்.
விவாகரத்து என்பது பெரிய வலி நிறைந்த ஒன்று. இந்த கடினமான நேரத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறேன். என் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து
வருகிறது. சத்தியமா சொல்றேன், இவையெல்லாம் எந்த வகையிலும் என்னை உடைக்காது” என பதிவிட்டுள்ளார்.
வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு
வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு
சுராஜ் இயக்கத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
வடிவேலு ரீ-என்ட்ரி கொடுக்கும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு
வடிவேலு
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.
நகைச்சுவை நடிகர் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததால் புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. இதனால் கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கவில்லை.
தற்போது தடை நீக்கப்பட்டு உள்ளதால், மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார். அதன்படி அவர் நடிக்க உள்ள புதிய படத்தை சுராஜ் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்ற அறிவிப்பு கடந்த மாதமே வெளியானது.
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
இந்நிலையில், அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அப்படத்திற்கு ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ என தலைப்பு வைத்துள்ளனர். வடிவேலு கோர்ட் சூட் அணிந்தபடி கெத்தான தோற்றத்துடன் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
காஜல் இடத்தை பிடித்த ஹன்சிகா.
காஜல் இடத்தை பிடித்த ஹன்சிகா.
நடிகை காஜல் அகர்வால் தெலுங்கில் கோஸ்ட் படத்தில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு தமிழ் பட வாய்ப்பை இழந்துள்ளார்.
காஜல் அகர்வால் இடத்தை பிடித்த ஹன்சிகா
காஜல் அகர்வால், ஹன்சிகா
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வால் கடந்த வருடம் தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில்
பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால், தற்போது கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் தற்போது வேறு நடிகைகளை தேடி வருகின்றனர்.
ஏற்கனவே தெலுங்கில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்க இருந்த கோஸ்ட் படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு தமிழ் பட வாய்ப்பை அவர் இழந்துள்ளார்.
தமிழில் ராஜா சரவணன் இயக்கத்தில் உருவாகும் ‘ரவுடி பேபி’ படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் காஜல் அகர்வாலை தான் ஒப்பந்தம் செய்திருந்தனர். தற்போது அந்த வாய்ப்பு ஹன்சிகா
வசம் சென்றுள்ளது. இப்படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தின் வில்லன் ஜான் கோகைனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.






