Posted in உலக செய்திகள்

லக்சம்பர்க் நாட்டில் இலவச பஸ், ரெயில் சேவை

லக்சம்பர்க் நாட்டில் இலவச பஸ், ரெயில் சேவை

லக்சம்பர்க் நாட்டில் சாலைகளில் கார்களால் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டு வர இலவச பொது போக்குவரத்து முறை, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

லக்சம்பர்க் நாட்டில் இலவச பஸ், ரெயில் சேவை அமல்
இலவச பஸ், ரெயில் சேவை
லக்சம்பர்க்:

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று லக்சம்பர்க். இந்த நாட்டில் சாலைகளை கார்கள் பெருமளவு ஆக்கிரமிக்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இங்கு கார்கள் வணிக ரீதியிலான பயணத்துக்கு 47 சதவீதமும், ஓய்வு நேர போக்குவரத்துக்கு 71 சதவீதமும் பயன்படுத்தப்படுகிறது

. 32 சதவீத பயணங்களுக்கு மட்டுமே பஸ் பயன்படுத்தப்படுகிறது. 19 சதவீத பயணங்களுக்கு மட்டுமே ரெயிலை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், சாலைகளில் கார்களால் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டு வருகிற வகையில், இந்த நாட்டில் இலவச பொது போக்குவரத்து முறை, நாடு முழுவதும் நேற்று முதல்

அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்படி இலவச பொதுபோக்குவரத்தை வழங்குகிற முதல் நாடு என்ற பெயரை இந்த நாடு தட்டிச்செல்கிறது.

இந்த இலவச போக்குவரத்து 40 சதவீத குடும்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொருவரும்

ஆண்டுக்கு 110 டாலர்களை (சுமார் ரூ.8 ஆயிரம்) சேமிக்க முடியும். லக்சம்பர்க் நாட்டில் வாழ்கிறவர்கள் ரெயில்களில் முதல் வகுப்பில்

பயணிக்கவும், பஸ்களில் இரவு நேர பயணத்துக்கு மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

லக்சம்பர்க் நாட்டில் இலவச
Posted in உலக செய்திகள்

இத்தாலி: 29 பேர் பலி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ்

இத்தாலி: 29 பேர் பலி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ்

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. மேலும், 29 பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இத்தாலி: 29 பேர் பலி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் – அதிரவைக்கும் கொரோனா


வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தடுப்பு மருந்தை தெளிக்கும் நபர் (கோப்பு படம்)
ரோம்:

சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாடு

முழுவதிலும் பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 ஆயித்து 835 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 79 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, ஈரான், மலேசியா, இத்தாலி, ஈராக் உள்ளிட்ட 50-க்கும் அதிமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக

அதிகரித்துள்ளது. மேலும், ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி: 29 பேர் ப
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் வயோதிபரை கொன்றவருக்கு 31 வருடம் சிறை

பிரிட்டனில் வயோதிபரை கொன்றவருக்கு 31 வருடம் சிறை

பிரிட்டனில் ஓய்வூதியம் பெற்று வசித்து வந்த வயதான முதியவரை நெரித்து கொன்ற நபர் ஒருவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது .

குறித்த கொலையை மேற் கொண்ட குற்றவாளிக்கு சுமார் 31 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது

பிரிட்டனில் கத்தி குத்து சம்பவங்கள் போல , இவ்வாறான கொலைகளும் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் வயதிபரை
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் 20 பேர் கொரனோ வைரஸால் பாதிப்பு

பிரிட்டனில் 20 பேர் கொரனோ வைரஸால் பாதிப்பு

பிரிட்டனில் இதுவரை இருபது பேர் கொரனோ வைரசால் பாத்திக்க பட்டுள்ளதாக
பிரிட்டன் அறிவித்துள்ளது .

இவர்களில் அதிகமானவர்கள் சீனாவில் இருந்தும் பிற நாடுகளில் இருந்து வந்தவர்கள் என நம்ப படுகிறது .

இவ்வாறு பாதிப்புக்கு உள்ளானவர்கள் தனி தனி அறைகளில் தங்க வைத்து சிகிச்சை வழங்க பட்டு வருகிறது .

எனினும் எவரும் இதுவரை இங்கு உயிரிழக்கவில்லை என்பதும் சிலர் உடல் தேறி வீடு சென்றமையும் குறிப்பிட தக்கது

பிரிட்டனில் 20 பேர் கொரனோ
Posted in உலக செய்திகள்

ஈரானில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 210 பேர் பலி

ஈரானில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 210 பேர் பலி

சீனாவை தாயகமாக கொண்டு பரவி வந்த கொன்றானோ வைரஸ் தாக்குதலில் சிக்கி சுமார் 200 பேர்


இதுவரை பலியாகியுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது

ஈரானின் இரண்டாம் நிலை அதிபருக்கு இந்த நோய் பரவி உள்ளதும் ,அதே போல சுகாதர பிரதி மந்திரியும் இவ்வாறு பாதிக்க பட்டுள்ளதும் தெரிந்ததே .

எனினும் ஈரான் இந்த மக்கள் பலி கணக்கை முழுமையாக தெரிவிக்க வில்லை .

வெப்ப வலய நாடுகளில் இந்த நோயின் தாக்கம் குறைவு எனவும் ,வெப்பத்தின் வாயிலாக அந்த கிருமிகள் காற்றுடன் கலக்கும் பொழுது இறந்து விடுவதாக தெரிவிக்க படுகிறது .


பெரும் பாலும்
குளிர்வலய பகுதிகளில் இந்த நோய் தாக்கம் அதிகரித்து செல்வதாக மருத்துவர்கள் குறிப்பிட்டு வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது

ஈரானில் கொரனோ வைரஸ்
Posted in உலக செய்திகள்

ஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ்

ஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ்

ஈரான் துணை அதிபரான மசூமே எப்டகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடக ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

ஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
ஈரான் துணை அதிபர் மசூமே எப்டகர்
தெஹ்ரான்:

சீனாவின் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கடந்த டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் வுகானில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.

கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி, உலகம் முழுவதும் கடும் மிரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால்

பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சீனாவில்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 2,744 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், அந்நாட்டு துணை சுகாதார மந்திரி இராஜுக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், ஈரான் துணை அதிபரான மசூமே எப்டகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் துணை அதிபருக்கு
Posted in உலக செய்திகள்

பிரான்சில் மூட்டைப் பூச்சிகளை கொல்ல அரசு அவசர எண் அறிவிப்பு.

பிரான்சில் மூட்டைப் பூச்சிகளை கொல்ல அரசு அவசர எண் அறிவிப்பு.

வீடு மற்றும் ஓட்டல்களில் இருக்கும் மெத்தைகளில் மூட்டைப் பூச்சிகளைக் கண்டால் உடனே அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவியை பெறலாம் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பிரான்சில் மூட்டைப் பூச்சிகளை கொல்ல அரசு அவசர எண் அறிவிப்பு

பிரான்ஸ் நாடு தற்போது ஒரு வினோதமான பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. அந்த நாட்டில் மூட்டைப் பூச்சிகளின் தொல்லை அளவுக்கு அதிகமாக உள்ளது. படுக்கும் மெத்தைகளை

குறிவைக்கும் இந்த மூட்டைப் பூச்சிகள் உடல் ஆரோக்கியத்திற்கு பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் வீடு மற்றும் ஓட்டல்களில் இருக்கும் மெத்தைகளில் அதிக மூட்டைப்

பூச்சிகளைக் கண்டால் உடனே அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவியை பெறலாம் என்று அந்த நாட்டு அரசு

அறிவித்துள்ளது. மேலும் மூட்டைப் பூச்சிகளை ஒழிக்கும் வரை மெத்தை மற்றும் சோபாக்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த மூட்டைப் பூச்சிகள் கொசுக்களை போல் மனிதர்களை கடிக்கும் தன்மை கொண்டது. ஒரு இரவில் 90 முறை கடிக்குமாம்.

இவை எந்த நோய் தொற்றையும் உண்டாக்காது என்றாலும், அவை கடிக்கும் இடங்களில் தோல் சிவத்தல், அரிப்பு, வீக்கம் போன்றவை

ஏற்படும். 100 நாட்களுக்குள் அனைத்து மூட்டைப் பூச்சிகளையும் ஒழிக்க வேண்டும் என பிரான்ஸ் அரசு சபதம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் மூட்டைப் பூச்சிகளை
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் -பெண்ணின் உதட்டை கடித்து குதறிய நபர்

பிரிட்டனில் -பெண்ணின் உதட்டை கடித்து குதறிய நபர்

பிரிட்டனில் நபர் ஒருவர் இளம் பெண் ஒருவரது உதட்டை கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணின் உதட்டை நபர் கடித்து குதறிய சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்ய பட்டு நீதி விசாரணைகள் இடம்பெற்று வந்தன

அந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் பொழுதே குறித்த நபர் புரிந்த கோர சம்பவம் வெளியாகியுள்ளது ,குற்றத்தை புரிந்தவருக்கு தகுந்த தண்டனை வழங்க பட்டுள்ளது

இப்படியும் மனிதர்கள்

பிரிட்டனில் -பெண்ணின் உதட்டை
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் வீடின்றி அலையும் மக்கள் – கைவிட்ட அரசு – மக்கள் வழங்கிய பெரும் தொகை பணம்

பிரிட்டனில் வீடின்றி அலையும் மக்கள் – கைவிட்ட அரசு – மக்கள் வழங்கிய பெரும் தொகை பணம்

பிரிட்டனில் வீடற்று வசிக்கும் மக்கள் தொகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது .


இவர்கள் வீதியில் உறங்கும் நிலை பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கிறது .

ஆளை கொல்லும் குளிருக்குள் வீதியில் உறங்கும் இந்த மக்களின் வாழ்வாதாரமும் ,அவர்களின்


கண்ணீர் சிந்திய வாழ்வை ஊடகம் ஒன்று படம் பிடித்து வெளியிட்ட நிலையில் இவர்களுக்கு
பல ஆயிரக்கணக்கில் மக்கள் பணத்தை வாரி வழங்கியுள்ளனர் .

ஆயினும் இதுவரை இவர்களுக்கு வீடு கிடைக்க பெறவில்லை .

எனினும் இந்த மக்களுக்கு தாம் விரைந்து உதவி செய்ய உள்ளதாக கவுன்சில் தெரிவித்த்துள்ளது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் வீடின்றி அலையும்
https://www.youtube.com/watch?v=V2x2bofkbpY
Posted in உலக செய்திகள்

ஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் சூடு – ஒருவர் பலி 24 பேர் காயம்

ஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் சூடு – ஒருவர் பலி 24 பேர் காயம்

ஈராக் தலைநகர் பாக்தாத் பகுதியில் அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இவ்வாறு கலகத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியானார் .

மேலும் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்

தொடர்ந்தும் அந்த பகுதியில்பதட்டம் நிலவுகிறது

ஈராக்கில் போராட்டக்காரர்கள்
Posted in உலக செய்திகள்

5 நாளில் 147 கொலைகள்- மிரள வைத்த நாடு

5 நாளில் 147 கொலைகள்- மிரள வைத்த நாடு

பிரேசிலில் போலீசாரின் வேலை நிறுத்த போராட்டத்தால் குற்றங்கள் அதிகரித்ததோடு, கடந்த 5 நாட்களில் மட்டும் 147 கொலைகள் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரேசிலில் 5 நாளில் 147 கொலைகள் – போலீசார் வேலை நிறுத்தத்தால் குற்றங்கள் அதிகரிப்பு


பிரேசிலில் போலீசார் பாதுகாப்பு பணியில்
பிரேசிலியா:

பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள சீரா மாகாணத்தை சேர்ந்த போலீசார் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை

வலியுறுத்தி கடந்த 19-ந்தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த நாட்டு சட்டத்தின்படி போலீசார் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். மேலும் அண்மையில் இது

தொடர்பான வழக்கை விசாரித்த மாகாண கோர்ட்டு, வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் போலீசார் சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என தீர்ப்பளித்தது.

அதோடு போராட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஆனாலும்

போலீசார் போராட்டத்தை கைவிட மறுத்து, வேலை நிறுத்தத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே போலீசாரின் வேலை

நிறுத்த போராட்டத்தால் சீரா மாகாணத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக அதிக அளவில் கொலைகள்

நடக்கின்றன. கடந்த 5 நாட்களில் மட்டும் 147 கொலைகள் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

5 நாளில் 147 கொலைகள்
https://www.youtube.com/watch?v=Y6Uc68tIwx4
Posted in உலக செய்திகள்

ஆஸ்திரியாவிலும் கொரோனா..கொட்டலுக்கு சீல் வைப்பு

ஆஸ்திரியாவிலும் கொரோனா..கொட்டலுக்கு சீல் வைப்பு

ஆஸ்திரியாவில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்துவரும் வரவேற்பாளர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் அந்த ஓட்டலுக்கே அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்
சீல் வைக்கப்பட்ட ஓட்டல் (கோப்பு படம்)
வியன்னா:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான்

நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான

உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா, ஈரான், இத்தாலி, மலேசியா போன்ற 25 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் பலியானோரின் எண்ணிக்கை 2,663 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 77 ஆயிரத்துக்கும்

அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரசுக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்திருக்கிறார். மேலும், 283

பேருக்கு வைரஸ் பரவி இருப்பதை இத்தாலி சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதற்கிடையில், இத்தாலியின் வெனிசில் இருந்து அண்டைநாடான ஆஸ்திரியாவின் முனிச் நகருக்கு நேற்று முன்தினம் ரெயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் இரண்டு பயணிகளுக்கு

கொரோனா இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் ஆஸ்திரிய அதிகாரிகள் தங்கள் நாட்டு எல்லைக்குள் ரெயிலை அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

இதனால் ஆஸ்திரியாவின் எல்லையில் உள்ள இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பிரின்னீர் பாஸ் நிலையத்திலேயே ரெயில் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஆஸ்திரியாவின் இன்ஸ்பர்க் மாகாணத்தில் அல்பின் நகரில் உள்ள ‘கிராண்ட் ஓட்டல் யூரேபா’ என்ற ஓட்டலில்

வரவேற்பாளர்களாக பணியாற்றிவந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியை சேர்ந்த அந்த இளைஞரும், இளம்பெண்ணும் காதலர்கள் எனவும் அவர்கள் சமீபத்தில் தான் கொரோனாவால்

அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் சொந்த ஊரான இத்தாலியின் லோம்பர்டி மாகாணத்திற்கு சென்று திரும்பியதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, வைரஸ் பாதிக்கப்பட்ட இருவரும் பணியாற்றிவந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், 108 அறைகளை

கொண்ட அந்த ஓட்டலில் இருந்து யாரும் வெளியே செல்லக்கூடாது என்றும் ஓட்டலுக்கு உள்ளே யாரும் வரக்கூடாது எனவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆஸ்திரியாவிலும் கொரோனா
https://www.youtube.com/watch?v=Y6Uc68tIwx4
Posted in உலக செய்திகள்

தாஜ்மகாலை பார்த்து பிரமித்த டிரம்ப் –

தாஜ்மகாலை பார்த்து பிரமித்த டிரம்ப் –

தாஜ்மகாலை பார்த்து பிரமித்த டிரம்ப், இந்தியாவின் மாறுபட்ட கலாசாரத்தின் வாழும் உதாரணம் அது என புகழாரம் சூட்டினார்.

தாஜ்மகாலை பார்த்து பிரமித்த டிரம்ப் – ‘இந்திய கலாசாரத்தின் வாழும் உதாரணம்’


ஜனாதிபதி டிரம்ப், மனைவி மெலனியாவுடன் தாஜ்மகாலை ரசித்த காட்சி
ஆக்ரா:

2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஆமதாபாத்தில் தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மனைவி மெலனியா, மகள் இவாங்கா உள்ளிட்டோருடன்

விமானத்தில் தாஜ்மகாலுக்கு புறப்பட்டார். மாலை 5 மணிக்கு ஆக்ராவில் உள்ள விமானப்படை தளத்தில் வந்திறங்கிய அவர்களை

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அப்போது அங்கே குழுமியிருந்த 250-க்கும் மேற்பட்ட கலைஞர்கள், மாநிலத்தின் கலாசாரத்தை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகளை

நடத்தி டிரம்ப் தம்பதியை வரவேற்றனர். இந்த கலை நிகழ்ச்சிகளை வெகுவாக ரசித்த டிரம்ப், பின்னர் அங்கிருந்து கார் மூலம் தாஜ்மகாலுக்கு சென்றார்.

பார்வையாளர் புத்தகத்தில் தாஜ்மகாலை புகழ்ந்து டிரம்ப் எழுதிய வாசகங்களை படத்தில் காணலாம்.

தாஜ்மகாலை அடைந்ததும் அவர்களை அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர். காதலின் சின்னமாகவும், உலக

அதிசயங்களில் ஒன்றாகவும் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் அந்த ஒப்பற்ற பளிங்கு மாளிகையை அவர்கள் அங்குலம், அங்குலமாக

ரசித்தனர். தாஜ்மகாலின் மேன்மையையும், முகலாய கட்டிடக்கலையையும் சுற்றுலா வழிகாட்டிகள் அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

புகழ்பெற்ற தாஜ்மகாலை ஒவ்வொரு கோணத்திலும் ரசித்த டிரம்ப் தம்பதியினர், பல இடங்களில் நின்றுகொண்டு புகைப்படங்கள்

எடுத்துக்கொண்டனர். மறுபுறம் டிரம்பின் மகள் இவாங்கா, மருமகன் குஷ்னர் தம்பதியும் தாஜ்மகாலின் அழகை ரசித்தவாறே புகைப்படமும், செல்பி படங்களும் எடுத்துக்கொண்டனர்.

தாஜ்மகாலை பார்த்து வியந்த டிரம்ப் அங்கே வைக் கப்பட்டிருந்த பார்வையாளர் கள் புத்தகத்தில், தாஜ்மகாலை புகழ்ந்து எழுதினார்.

அதன்படி, ‘தாஜ்மகால் எங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் வளமான மற்றும் மாறுபட்ட கலாசாரத்தின் ஒரு வாழும் உதாரணம் இதுவாகும்’ எனறு குறிப்பிட்டார்.

சுமார் ஒரு மணி நேரம் தாஜ்மகாலில் செலவிட்ட டிரம்ப் மற்றும் குடும்பத்தினருக்கு, தாஜ்மகாலின் மிகப்பெரிய ஓவியம் ஒன்றை

யோகி ஆதித்யநாத் பரிசளித்தார். பின்னர் அவர்கள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ரா நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆக்ரா விமானப்படை தளத்தில் இருந்து தாஜ்மகால் வரையிலும் சாலையோரம் ஏராளமான மக்கள் குழுமி டிரம்ப்

குடும்பத்தினரை வரவேற்றனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் 21 இடங்களில் நின்றவாறு நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்தியா-அமெரிக்கா தேசிய கொடிகளை ஏந்தியபடியே சாலையின்

இருபுறமும் நின்று கொண்டு அமெரிக்க ஜனாதிபதியை வரவேற்றனர். மேலும் டிரம்ப் சென்ற பாதை நெடுகிலும் பிரமாண்ட

வரவேற்பு பேனர்களும் வைத்து விருந்தினர்களை வரவேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.

தாஜ்மகாலை பார்த்து பிரமித்த
Posted in உலக செய்திகள்

தெற்கு இஸ்ரேல் மீது வீழ்ந்து வெடித்த ரொக்கட் – போர் வெடிக்கும் அபாயம்

தெற்கு இஸ்ரேல் மீது வீழ்ந்து வெடித்த ரொக்கட் – போர் வெடிக்கும் அபாயம்

இஸ்ரேலின் தெற்கு பகுதி நோக்கி பாலஸ்தீனத்தில் உள்ள காமாஸ் ஜிகாத் படைகள் ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .

இந்த தகத்தலுக்கு ஜேர்மன் ,மற்றும் ஐநா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன .

அமெரிக்காவின் ஆதரவுடன் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த தாக்குதல்கள்

இடம்பெற்றுள்ளன .
மேற்படி சம்பவங்களினால் பெரும் மோதல்கள் வெடிக்கலாம் என அஞ்ச படுகிறது

தெற்கு இஸ்ரேல் மீது
Posted in உலக செய்திகள்

ஜேர்மனியில் மக்களுக்குள் புகுந்த கார் 30 பேர் காயம் video

ஜேர்மனியில் மக்களுக்குள் புகுந்த கார் 30 பேர் காயம்

ஜெர்மன் நகரம் Volkmarsen பகுதிக்குள் இடம்பெற்ற carnival நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்களுக்குள்


வேகமாக வந்த கார் ஒன்று புகுந்ததால் சிறுவர்கள் உள்ளிட்ட சுமார் முப்பது பேர் படுகாயமடைந்துள்ளனர் .

சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் .

இது திட்டமிட்ட பட்ட தீவிரவாத செயலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in உலக செய்திகள்

ஈரானில் கொரனோ வைரஸ் தாக்குதல் 50 பேர் பலி

ஈரானில் கொரனோ வைரஸ் தாக்குதல் 50 பேர் பலி

சீனாவை தாயகமே கொண்டு பரவி வந்த கொரனோ வைரஸ் தாக்குதல் தற்போது முப்பதுக்கு மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது ,இதன் தாக்கம் தற்பொழுது ஈரானை ஆக்கிரமித்துள்ளது .

இதுவரை சுமார் ஐம்பது பேர் இந்த நோயால் பலியாகியுள்ளனர் .

அதிகளவான மக்கள் Qom பகுதியில் பலியாகியுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார் .


மேலும் ஆயிர கணக்கில் இந்த நோய் தாக்கத்தால் பாதிக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது

ஈரானில் கொரனோ வைரஸ்
Posted in உலக செய்திகள்

கொரோனா வைரஸ் மேலும் 150 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 2592 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் மேலும் 150 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 2592 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ்- சீனாவில் பலி எண்ணிக்கை 2592 ஆக உயர்ந்தது
கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகள்
பீஜிங்:

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவது தற்போது குறைய தொடங்கியுள்ளது. எனினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் சீனாவில் நேற்று மேலும் 150 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2592 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.

கொரோனா பரிசோதனை

ஒட்டு மொத்தமாக 77 ஆயிரத்து 150 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். நேற்று புதிதாக 409 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

இதற்கிடையே ஈரானிலும் கொரோனா வைரஸ் பரவி உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதால், அந்த நாட்டுடனான எல்லையை துருக்கி, பாகிஸ்தான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகள் மூடியுள்ளன. ஆப்கானிஸ்தானும் பல்வேறு பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இத்தாலியில் 152 கொரோனா வைரஸ் நோயாளிகள் கண்டறியப்பட்டதால், ஐரோப்பாவில் சுகாதார அவசர நடவடிக்கைகளை தொடங்கி உள்ளனர்.

கொரோனா வைரஸ்
Posted in உலக செய்திகள்

46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செத்த பனியுக பறவையின் உடல் கண்டுபிடிப்பு

46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செத்த பனியுக பறவையின் உடல் கண்டுபிடிப்பு

ரேடியோகார்பன் டேட்டிங்’ கதிரியக்க கரிம காலகணிப்பு முறையில் சுமார் 46 ஆயிரம் ஆண்களுக்கு முன்பாக செத்த பனியுக பறவையின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

46 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் செத்த பனியுக பறவையின் உடல் கண்டுபிடிப்பு
பனியுக பறவையின் உடல்

ர‌ஷியாவின் அங்கமாக திகழ்கிற சைபீரியாவின் வடகிழக்கு பகுதியில் பெலாயா கோரா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில், உள்ளூர் வேட்டைக்காரர்கள், செத்துப்போன

ஒரு பறவையின் உடலை கண்டுபிடித்தனர். அந்தப் பறவை பல்லாண்டு காலத்துக்கு முன்பே செத்துப்போய் அதன் உடல் பனியில் அப்படியே புதைந்து இருக்கிறது என கருதிய

அவர்கள், அந்த உடலை சுவீடன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நிக்கோலஸ்

டஸ்ஸக்ஸ் மற்றும் லவ் டாலன் உள்ளிட்டவர்களிடம் ஒப்படைத்தனர்.

‘ரேடியோகார்பன் டேட்டிங்’ என்று அழைக்கப்படக்கூடிய கதிரியக்க கரிம காலகணிப்பு முறையில் ஆராய்ந்த போது அந்தப் பறவை சுமார் 46 ஆயிரம் ஆண்களுக்கு முன்பாக

பனியுகம் என்று அழைக்கப்பட்டு வந்த காலகட்டத்தில் வாழ்ந்து செத்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். இதையொட்டி ஆராய்ச்சியாளர் லவ் டாலன்

சி.என்.என். நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘‘இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வானம்பாடி பறவையின் 2 கிளை இனங்களின் மூதாதையராக இருக்கலாம்’’ என கூறினார்.

ஆராய்ச்சியாளர் நிக்கோலஸ் டஸ்ஸக்ஸ் கூறும்போது, ‘‘இந்த கண்டுபிடிப்பு விலைமதிப்பற்றது. ஏனெனில் இது பனியுக விலங்கு இனங்களின் பரிணாம வளர்ச்சியை

படிப்பதற்கும், கடந்த பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பருவநிலை மாற்றங்களை புரிந்து கொள்வதற்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும். இப்போது

கண்டெடுக்கப்பட்டுள்ள பறவை, 18 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த நாய்க்குட்டியின் உடல்

கண்டெடுக்கப்பட்ட அதே இடத்தில் கிடைத்துள்ளது’’ என கூறினார்.

Posted in உலக செய்திகள்

120 பயங்கரவாதிகள் கொன்றுகுவிப்பு

120 பயங்கரவாதிகள் கொன்றுகுவிப்பு

நைஜர் நாட்டில் பயங்கரவாதிகளை குறிவைத்து நைஜீரியா மற்றும் பிரான்ஸ் படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 120 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

நைஜர் நாட்டில் 120 பயங்கரவாதிகள் கொன்றுகுவிப்பு
நைஜர் தாக்குதல்
நியாமி:

ஆப்பிரிக்க நாடான நைஜரில், 2015-ம் ஆண்டு முதல் மத அடிப்படையிலான பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி

வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தி, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில், மாலி-புர்கினோ பாசோ நாடுகளின் எல்லைக்கு அருகே

பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை குறிவைத்து நைஜீரியா மற்றும் பிரான்ஸ் படைகள் அதிரடி தாக்குதல்கள் நடத்தின.

இந்த தாக்குதல்களில் 120 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். இதை நைஜர் நாட்டின் ராணுவம் உறுதி

செய்துள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் வாகனங்கள், வெடிகுண்டு தயாரிப்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்பில் உதவிய நைஜீரியா மற்றும் பிரான்ஸ் படைகளுக்கு நைஜர் ராணுவ மந்திரி இசவ்பவ் கடம்பே நன்றி தெரிவித்துக்கொண்டார்

Posted in உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 2,442 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 2,442 ஆக உயர்வு

சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 2442 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதல் – பலி எண்ணிக்கை 2,442 ஆக உயர்வு


கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் முகமூடி அணிந்துள்ள மக்கள்
பீஜிங்:

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி

வருகிறது. 27 நாடுகளுக்கும் மேல் இந்த வைரஸ் பரவி உள்ளதால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.

கொரோனா வைரஸ் சீனாவில் மிகவும் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசின் பிறப்பிடமாக கருதப்படும் வுகானில் இந்த வைரஸ்

பாதிப்பால் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. இந்த வைரஸ்

தாக்குதலால் இதுவரை 2,345க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானோர்

எண்ணிக்கை 2442 ஆக உயர்ந்துள்ளது என அம்மாகாண சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.

சீனா முழுவதும் 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு

சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே, சீனா

சென்றுள்ள உலக சுகாதார அமைப்பு குழுவினர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டனர்..