Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
இஸ்ரேல் விமானங்கள் சிரியாவில் கடும் தாக்குதல்
இஸ்ரேல் விமானங்கள் சிரியாவில் கடும் தாக்குதல்
சிரியா Golan எல்லை பகுதியில் இஸ்ரேல் அரச இராணுவ
விமானங்கள் நடித்திய திடீர் தாக்குதலில் சுமார் ஐவர் பலியாகியுள்ளனர்
லெபனான் நாட்டு போராளிகளை , இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது
இதில் இறந்தவர்களில் முக்கிய தளபதிகள் அடங்கும் என இஸ்ரேல் பரப்புரை புரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது
காணமல் போன 18 வயது பெண் – காட்டுக்குள் இருந்து 8 நாளில் பின் மீட்பு
காணமல் போன 18 வயது பெண் – காட்டுக்குள் இருந்து 8 நாளில் பின் மீட்பு
அமெரிக்காவில் காணமல் போன பதினெட்டு வயது இளம் பெண் ஒருவர் காட்டுக்குள் இருந்து ஏழு நாட்கள் பின்னர் மீட்க பட்டுள்ளார்
.
மிகவும் உடல் நிலை பாதிக்க பட்ட நிலையில் இவர் உயிருடன் மீட்பு குழுவினரால் மீட்க பட்டுளளார்
இவர் எவ்விதம் காணாமல் போனார் என்பது தொடர்பில் காவல்துறையினர் தகவலை தெரிவிக்கவில்லை
தொடந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்
இவர் சுயநினைவுக்கு வந்ததன் பின்னர் மேலதிக தகவல்கள் தெரியவரும் என நம்ப படுகிறது
தீவிரவாதிகள் வெறியாட்டம் – அகதிகள் முகாம் மீது தாக்குதல் – 15 பேர் பலி
தீவிரவாதிகள் வெறியாட்டம் – அகதிகள் முகாம் மீது தாக்குதல் – 15 பேர் பலி
வடக்கு northern Cameroon பகுதியில் உள்ள இடைத்தங்கல் அகதி முகாம் மீது பொக்கோ காராம் கிளர்ச்சி படைகள் திடீர் தாக்குதலை நடத்தினர்
இதில் பதின் ஐந்து பேர் பலியாகினர் ,.மேலும் ஆறுபேர் படு காயமடைந்துள்ளனர்
திடீரென நுழைந்த தீவிரவாதிகள் கைக்குண்டு தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்
மேற்படி கிளர்ச்சி படைகள் கரங்களில் அதி நவீன ஆயுதங்கள் உள்ளன ,அமெரிக்காவே பின்புலத்தில் இவ்விதமான ஆயுதங்களை வழங்கி மேற்படி அமைப்பை பல படுத்தி வருவதான குற்ற சாட்டுக்கள் எழுந்துள்ளமை இங்கே கவனிக்க தக்கது
காணமல் போன அமெரிக்கா இராணுவம் 8 பேர் பலி – விசாரணைகள் தீவிரம்
காணமல் போன அமெரிக்கா இராணுவம் 8 பேர் பலி – விசாரணைகள் தீவிரம்
அமெரிக்கா கலிபோனியா கடல் பகுதியில் இராணுவத்தினர் நடத்திய போர் பயிற்சியின் பொழுது கடற் படையினர் டாங்கி ரக
கவச வண்டிகள் விபத்தில் சிக்கியது இதன் பொழுது எட்டு இராணுவத்தினர் காணமல் போயினர்
நாற்பது மணித்தியால தேடுதலின் பின்னர் அவர்கள் இறந்து விட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது, மேலும் இருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
மொத்தமாக ஒன்பது இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,மேற்படி விபத்து தொடர்பில் இராணுவ விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

பூங்காவுக்குள் நுழைந்த மலை பாம்பு – பதறி ஓடிய மக்கள்
பூங்காவுக்குள் நுழைந்த மலை பாம்பு – பதறி ஓடிய மக்கள்
இந்தியாவின் poultry farm close to Sahara Sun City பூங்காவுக்குள் ஏழு அடி நீளமான மலை பாம்பு ஒன்று திடீரென நுழைந்துள்ளது
மேற்படி கொடிய மனிதர்களை விழுங்கும் பாம்ப்பினை கண்டு மக்கள் பதறி ஓடினர்
பாம்பு பிடி நபர்கள் அழைக்க பட்டு குறித்த பாம்பு மடக்கி பிடிக்க பட்டு
ளது ,மேற்படி சம்பவம் அந்த மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுளளது

அமெரிக்காவில் மட்டும் 47 லட்சம் பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் மட்டும் 47 லட்சம் பேருக்கு கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 57 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மட்டும் 47 லட்சம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த
வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 98 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 79 லட்சத்து 98 ஆயிரத்து 419 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 59 லட்சத்து 93 ஆயிரத்து 566 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை
பெறுபவர்களில் 65 ஆயிரத்து 689 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து 1 கோடியே 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால்
இதுவரை 6 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – 47,63,609
பிரேசில் – 27,08,876
இந்தியா – 16,95,988
ரஷியா – 8,45,443
தென் ஆப்பிரிக்கா – 5,03,290
மெக்சிகோ – 4,24,637
பெரு – 4,14,735
சிலி – 3,57,658
ஸ்பெயின் – 3,35,602
ஈரான் – 3,06,752
கொலம்பியா – 3,06,181
இங்கிலாந்து – 3,03,952
லண்டனில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்
லண்டனில் துப்பாக்கி சூடு – ஐவர் காயம்
நேற்று முன்தினம் மாலை ஆறுமணியாளவில் டம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் மீட்க பட்டு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இந்த சம்பவங்கள் Brixton, Hackney and Croydon பகுதியில் வார விடுமுறை நாளில் இடம்பெற்றுள்ளது ,
குறித்த குற்ற செயல்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
லட்சுமி ராமகிருஷ்ணன் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுகிறார் – வனிதா பரபரப்பு புகார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுகிறார் – வனிதா பரபரப்பு புகார்.
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தன்னிடம் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுவதாக நடிகை வனிதா பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.
லட்சுமி ராமகிருஷ்ணன் ரூ.1.25 கோடி கேட்டு மிரட்டுகிறார் – வனிதா பரபரப்பு புகார்
வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணன்
நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரைத் திருமணம் செய்துகொண்ட விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் வனிதா பற்றி லட்சுமி
ராமகிருஷ்ணன் விமர்சனம் செய்தார். இதனால் இருவரும் யூடியூப் சேனல் ஒன்றில் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் லட்சுமி
ராமகிருஷ்ணன் பற்றி வனிதா தரக்குறைவாக பேசினார். இதனால் லட்சுமி ராமகிருஷ்ணன், வனிதாவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அந்த நோட்டீசை தனது டுவிட்டரில் வெளியிட்டு வனிதா கூறியிருப்பதாவது: நல்ல மனசுள்ள சமூக ஆர்வலர் (லட்சுமி
ராமகிருஷ்ணன்) தன் வழக்கறிஞர் மூலம் ரூ. 1.25 கோடி கேட்டு என்னை மிரட்டுவதை பாருங்கள். ஒரு குடும்பத்திற்கு உதவி
செய்வது போன்று, தேவையில்லாமல் என் தனிப்பட்ட வாழ்க்கையில்
தலையிட்டு, போலி நீதிபதியாக இருக்கவும் முயற்சி செய்கிறார். அப்பாவிகளின் ரத்தத்தை குடிக்கிறார்.
இது தொடர்பாக என் தரப்பு வழக்கறிஞர் அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளார்.
இது ஒன்றும் நீதிமன்ற ஆவணமில்லை. அவரது வழக்கறிஞர் பணம் கேட்டு
அனுப்பியது தான். எல்லாவற்றையும் சட்டப்படி எதிர்கொள்வேன் என வனிதா கூறியுள்ளார்.
குஜராத் போலீசின் முதல் ‘லெஸ்பியன்’ காதல் ஜோடி_ (பெண்ணும் பெண்ணும் திருமணம் )
குஜராத் போலீசின் முதல் ‘லெஸ்பியன்’ காதல் ஜோடி_ (பெண்ணும் பெண்ணும் திருமணம் )
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், குஜராத் போலீசில் ஒரு ‘லெஸ்பியன்’ காதல் ஜோடி பரபரக்க வைத்து விட்டது.
பிரீத்தி, ஆவ்னி என்பது அவர்களது பெயர்கள். (பெயர்கள் மாற்றி தரப்பட்டுள்ளன). “உனக்கும் 24 எனக்கும் 24” என்று சொல்லும் வகையில் சம வயதினர். ஒரே பாலினத்தவர் என்றாலும்
அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. நீயின்றி நானில்லை, நானின்றி நீயில்லை என்பதே நிலை என உணர்ந்தனர். அதனால் இருவரும்
ஒன்றாக வாழ்ந்தனர். நீண்ட காலமாகவே இது நடந்து வந்திருக்கிறது.
இது அவர்களுடைய நட்பு வட்டாரத்துக்கும், சக போலீஸ் வட்டாரத்துக்கும் தெரியுமாம்.
ஆனால் அவர்களது காதலுக்கு சிக்கல் வந்தது, பிரீத்தியின் பெற்றோர் வடிவத்தில். அவர்கள் பிரீத்தியின் காதலுக்கு
போர்க்கொடி தூக்கினர். வீடு தேடிச்சென்று மகளை சந்தித்தனர். “ம்கூம்… இதெல்லாம் சரியில்லைம்மா.. வேலையை விட்டுடு…
எங்களோடு வந்துடு” என்று சொல்லிப் பார்த்தனர். பிரீத்தி சம்மதிக்க வில்லை. ஆவ்னியுடனான காதலில் உறுதியாக இருந்தார்.
இதுபற்றி பிரீத்தி சொல்லும்போது, “ எங்கள் காதல் உறவை அப்பா, அம்மாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. வாழ்க்கையில் நான் விரும்புவது என்ன, என் வாழ்க்கையை நான் எப்படி வாழ
விரும்புகிறேன் என்பதில் அவர்களுக்கு கவலையும் இல்லை” என்கிறார். பெற்றோரின் தொல்லை தொடரவே பிரீத்தி, ஆவ்னி
ஜோடி மஹிசாகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கேட்டு கடிதம் எழுதினர். அதற்கு சரியான பதில் இல்லை. உடனே அவர்கள் ஐகோர்ட்டை நாடினர்.
இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு உஷா ராடா கருத்து தெரிவிக்கையில், “ அவர்கள் இருவரும் ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். அவர்கள் தனிப்பட்ட
வாழ்க்கையைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. எங்கள் கவலை, அவர்கள் எப்படி தங்கள் போலீஸ் வேலையை செய்யப்போகிறார்கள் என்பதுதான்” என்றார்.
ஆனால் இந்த ‘லெஸ்பியன்’ காதல் ஜோடியின் வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஜே.தேசாய், இந்த விவகாரத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலையிட்டு அவர்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ்
பாதுகாப்பு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இது காதல் ஜோடியை நிம்மதிப்பெருமூச்சு விட வைத்துள்ளது.
இதுபற்றி அந்த காதல் ஜோடியின் வக்கீல் ஜாகீர் ரத்தோடு கூறும்போது, “இவர்கள் கோர்ட்டுக்கு போவார்கள் என்று அவர்கள் (பிரீத்தி பெற்றோர்) எதிர்பார்க்கவில்லை. இந்த பெண்கள்
துணிச்சலானவர்கள், படித்தவர்கள். அரசு பணியில் இருக்கிறார்கள். தாங்கள் விரும்பும் விதத்தில் வாழ்வதற்கு தங்களுக்கு உள்ள உரிமைக்காக போராடுவதில் இருந்து அவர்கள்
விலகிச்செல்லவில்லை” என குறிப்பிட்டார். அவர் கூறிய கூடுதல் தகவல், இந்த காதல் ஜோடிதான் குஜராத் போலீசில் பகிரங்கமாக அறிவித்துள்ள முதல் லெஸ்பியன் ஜோடி என்பதாகும்
போதைவஸ்து விமானம் அவுஸ்ரேலியாவில் மடக்கி பிடிப்பு
போதைவஸ்து விமானம் அவுஸ்ரேலியாவில் மடக்கி பிடிப்பு
Papua New Guinea வில் இருந்து பறந்து வந்த இலகுரக விமானம் ஒன்று அவுஸ்ரேலியாவில் தரை இறங்கிய பொழுது மடக்கி பிடிக்க பட்டுள்ளது
இந்த சிறிய ரக விமானத்தில் எண்பது மில்லியன் பெறுமதியான போதைவஸ்துக்கள் இருந்தமை கண்டு பிடிக்க பட்டுள்ளது
விமானி மற்றும் கூட வந்தவர்கள் கைது செய்ய பிட்டு தீவிர விசாரணைகளுக்கு உட் படுத்த பட்டுள்ளனர்
விமானத்தில் அதிக அளவான எடையுடன் தரை இறங்க முற்பட்ட பொழுது இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

இந்தியாவில் ஒரே நாளில் 57,118 பேர் கொரனோவால் பாதிப்பு
இந்தியாவில் ஒரே நாளில் 57,118 பேர் கொரனோவால் பாதிப்பு
இந்தியாவில் கொரனோ நோயானது மிக வேகமாக பரவி வருகிறது ,இந்த நோயினால் பாதிக்க பட்டு கடந்த இருபத்தி நான்கு
மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 57,118 பேர் பாதிக்க பட்டுள்ளனர் என
சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
எனினும் இதைவிட பாதிப்பு அதிகம் என தெரிவிக்க படுகிறது
எதிர்வரும் இருவரங்களில் பிரிட்டனில் இந்த நோயானது கடுமையாக மக்களை தாக்கும் என தெரிவிக்க பட்டிருந்தாமை குறிப்பிட தக்கது
பிரபலங்கள் டுவிட்டர் கணக்கை கைக் செய்த 17 வயது வாலிபன் கைது
பிரபலங்கள் டுவிட்டர் கணக்கை கைக் செய்த 17 வயது வாலிபன் கைது
அமெரிக்காவில் இருந்து மிக பெரும் பணக்காரர்கள் ,பிரபலங்கள் ,அரசியல்வாதிகள் ,வியாபாரிகள் விபரங்களை திருடி அதன்
ஊடாக பிட் கொயின் விடயங்களை திருடிய 17 வயது சிறுவனை அமெரிக்கா போலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்
இவரே இவர்களின் இந்த விபரங்களை திருடி அதன் ஊடாக பணத்தை கொள்ளையடிக்க முயன்றார் என குற்றம் சுமத்த பட்டுள்ளது
இவ்வாறு கைதான சிறுவன் தொடர்ந்து விசாரணைகளுக்கு உள்ளாக்க பட்டு வருகிறார்
மீண்டும் வேகமாக பரவும் கொரனோ -ஸ்பெயினில் 3,092 ஒரேநாளில் பாதிப்பு
மீண்டும் வேகமாக பரவும் கொரனோ -ஸ்பெயினில் 3,092 ஒரேநாளில் பாதிப்பு
உலக நாடுகளை மிரள வைத்து வந்த கொரனோ நோயானது தணிந்து
வந்த நிலையிகள் மீள அதன் தாக்குத்தல் அதிகரித்து காண படுகிறது ,தற்போது இன்று வெள்ளிக்கிழமை ஸ்பெயின் ஒரேநாளில் 3,092 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயின் திடீர் அதிகரிப்பு மீள பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
,இந்த நோயால் மேலும் இரண்டு மில்லியன் மக்கள் வரை உலக அளவில் பலியாகி கூடும் என அஞ்ச படுகிறது

சீனாவின் டிக்டாக் அசுர வளர்ச்சி – தடை செய்துள்ள அமெரிக்கா
சீனாவின் டிக்டாக்அசுர வளர்ச்சி – தடை செய்துள்ள அமெரிக்கா
உலக மக்களை பேஸ்புக் நிறுவனத்தின் பின்னர் கட்டி போட்டுள்ளது டீடாக்
ஆகும் ,நமது தமிழர்கள் முதல் உலக மக்களை இந்த சமூக வலைத்தளம் பிரபலமாகும்
பேஸ்புக்கிற்கு பின்னர் உருவான இந்த நிறுவனத்தை சுமார் ஒரு பில்லியன்
மக்கள் பாவித்தது வருகின்றனர்
இதுவே அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது
இந்த நிறுவனம் பெரும் தோகை வருமானத்தை சம்பாதித்து வருகிறது
டீடாக் இல்லை என்றால் அமெரிக்கா நிறுவனங்கள் விளம்பரம் இன்றி
பேஸ்புக்கை மட்டுமே நாடி செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது
இந்திய ,அமெரிக்கா என்பன இந்த செயலியை தடை செய்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் பாரிய நில நடுக்கம் =- ஆடிய வீடுகள்
அமெரிக்காவில் பாரிய நில நடுக்கம் =- ஆடிய வீடுகள்
அமெரிக்கா கலிபோனியா , Los Angeles பகுதியில் திடீரென நில
நடுக்கம் ஏற்பட்டது ,இதன் பாதிப்பு 4.2 ஆக பதிய பெற்றுள்ளது
இந்த நில நடுக்கம் ஏற்பட்ட பொழுது அங்கு வீடுகள் ,கட்டிடங்கள் குலுங்கியுள்ளன
எனினும் இதனால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது
கார் குண்டு தாக்குதல் – ஐவர் பலி -12 பேர் காயம்
கார் குண்டு தாக்குதல் – ஐவர் பலி -12 பேர் காயம்
வடக்கு சிரியாவின் துருக்கி ஆதரவு படைகள் அருகில் இடம் பெற்ற கார் குண்டு
தாக்குதலில் சிக்கி ஐவர் உடல் சிதறி பலியாகினர் மேலும் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்
இட்லிப் பகுதியை ஆக்கிரமிக்கும் நோக்குடன் துருக்கிய படைகள் 15 ஆயிரம் இராணுவத்தை குவித்துள்ளனர்
இவ்வாறு கடந்த ஒன்பது ஆண்டுகளாக முடிவில்லாது தொடரும் சிரியாவின் போர்க் களத்தில் பல்லாயிரம் மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. காதலி கைதாவாரா?
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. காதலி கைதாவாரா?
தற்கொலை வழக்கில் திடீர் திருப்பமாக நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரவர்த்தி கைதாவாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. காதலி கைதாவாரா?
சுஷாந்த் சிங், ரியா சக்ரவர்த்தி
கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையில் நடித்து பிரபலமான இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை செய்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. வாரிசு நடிகர்கள்
ஆதிக்கத்தாலும், தனக்கு வந்த படவாய்ப்புகளை அவர்கள் தடுத்ததாலும் மன அழுத்தத்தில் சுஷாந்த் தற்கொலை செய்து
கொண்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 35-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக சுஷாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்தி காரணம் என்று சுஷாந்த் சிங்கின் தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்துள்ளார்.
சுஷாந்த் சிங் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரியா சக்கரவர்த்தி பணம் எடுத்துள்ளார் என்றும், சுஷாந்த் சிங் கணக்கில் இருந்து ரூ.15
கோடியை வேறு ஒரு கணக்குக்கு மாற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
சுஷாந்த் சிங், ரியா சக்ரவர்த்தி
ரியாவும் இன்னும் சிலரும் சேர்ந்து மன ரீதியாக சுஷாந்துக்கு தொல்லை கொடுத்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதையடுத்து ரியா சக்ரவர்த்தி மீது பாட்னா போலீசார்
வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்த தனிப்படை மும்பை விரைந்துள்ளது. இதனால் ரியா சக்கரவர்த்தி
கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் முன்ஜாமீன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது

சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்
சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்
சீனாவில் மூன்று மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் 2-ம் கட்ட பரவலை எட்டிய கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
பிஜீங்:
சீனாவில் கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் சுமார் 8 மாதங்களாகியும் எந்தவித மந்தமும் இல்லாமல் வேகமாக
உலக நாடுகளை ஆக்கிரமித்து வருகிறது. இதில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியும், ஆயிரக்கணக்கானோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியும் வருகின்றனர்.
எனவே இந்த ஆட்கொல்லி வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசியை உருவாக்கும் பணிகளில் அனைத்து நாடுகளும் இறங்கி உள்ளன.
இதில் பல நாடுகள் தொடக்ககட்ட வெற்றியை ஈட்டியுள்ளன. இதனால் இந்த தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளன.
இதில் சீனா மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போன்றவை தயாரித்த தடுப்பூசிகள் இறுதிக்கட்ட
சோதனையை எட்டி உள்ளன. பிரேசில் போன்ற அதிக பாதிப்பு உள்ள நாடுகளில் இந்த தடுப்பூசிகள் இறுதிக்கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன.
உலகில் கொரோனாவால் ஒரு கோடியே 69 லட்சத்து , 22 ஆயிரத்து, 232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . 6 லட்சத்து 64 ஆயிரத்து 172 பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடியே 4 லட்சத்து 85 ஆயிரத்து 634 பேர் மீண்டுள்ளனர்.
இதனிடையே சீனாவில் உருவான கொரோனா வைரஸ் கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் முழுவதுமாகக் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில், சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின்
என்ற பகுதியில் ஜூன் மாதம் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள ஓர் இறைச்சி
சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன் காரணமாக பெய்ஜிங்கில் கொரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சின்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டப் பரவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு கொரோனா பரவல் மெல்லத் தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து சீனாவின் சுகாதார அமைப்பு கூறியதாவது:-
சீனாவில் கடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று
உறுதிச்செய்யப்பட்டுள்ளது. இதில் 89 பேருக்கு உள்ளூரிலேயே தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சின்ஜியாங் மாகாணத்தைச் சேந்தவர்கள். உரும்கி நகரில் தொற்று
உறுதிப்படுத்தப்பட்ட 15 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா பரவல் 2-வது கட்டத்தை அடைந்துள்ளது அங்குள்ள மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
தலியன், உரும்கி நகரங்களில் ஜூலை மாதத்திலிருந்து கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதாக சீன மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
14 வாது மாடியில் இருந்து கீழே வீழ்ந்த சிசு கனடாவில் நடந்த பயங்கரம்
14 வாது மாடியில் இருந்து கீழே வீழ்ந்த சிசு கனடாவில் நடந்த பயங்கரம்
நேற்று கனடா டொராண்டோ Driftwood Avenue and Yorkwoods Gate
பகுதியில் சிசு ஒன்று பதின் நான்காவது மாடியில் இருந்து வீழ்ந்து இறந்துள்ளது
இரண்டு வயது சிறுவனே இவ்வாறு யன்னல் வழியாக வீழ்ந்துள்ளான் ,
பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட
பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளான்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
குறித்த விபத்து மரணம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர் ,மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


லண்டனில் நபர் அடித்து கொலை – துடி துடித்து இறந்த பரிதாபம்
லண்டனில் நபர் அடித்து கொலை – துடி துடித்து இறந்த பரிதாபம்
நேற்றுஇரவு பத்து மணியளவில் லண்டன் Camden பிரதான வீதியில் நாற்பது வயது நபர்
ஒருவர் மர்ம நபர் ஒருவரால் கோரமாக அடித்து படுகொலை செய்ய பட்டுள்ளார்
விரைந்து வந்த அம்புலன்ஸ் சேவை பிரிவினர் சிகிச்சை வழங்க
முற்பட்ட பொழுதும் நபர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்து போனார்,
இவர் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி துடித்து கொண்டிருந்த பொழுது மக்கள் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்துள்ளனர்
எனினும் போலீசாருக்கு தெரிவிக்க பட்டுள்ளது
இரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
மேற்படி கொலையை புரிந்த இருபது வயது நபர் கைது செய்ய பட்டு தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருகின்றார்,
இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை
தற்போது லண்டனில் இது போன்ற குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது







