Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
கத்தி வெட்டுக்கு இலக்கான நிலையில் மூவர் மீட்பு – சிட்னியில் நடந்த பயங்கரம்
கத்தி வெட்டுக்கு இலக்கான நிலையில் மூவர் மீட்பு – சிட்னியில் நடந்த பயங்கரம்
அவுஸ்ரேலிய தலைநகர் சிட்னியில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில்
நபர்களுக்கு இடையில் இடம்பெற்ற வாய் சண்டை கத்தி வெட்டு தாக்குதலில் முடிந்துள்ளது
இதில் மூவர் பலமான கத்தி வெட்டு தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலராக உயர்வு
பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலராக உயர்வு
பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலராக உயர்வு
மார்க் ஜுக்கர்பெர்க்
உலகளவில் பேஸ்புக் முன்னணி சமூக இணையத்தளமாக திகழ்ந்து வருகிறது. அண்மையில் பேஸ்புக்கின் பங்கு மதிப்பு 6.5 சதவீதம்
உயர்ந்துள்ள நிலையில், உரிமையாளர்களில் ஒருவரும், 13 சதவீத பங்குகள் வைத்துள்ள மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும்
கணிசமாக அதிகரித்துள்ளதாக ப்ளும்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டில் பேஸ்புக் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பில்
இந்திய மதிப்பில் ரூ 1 லட்சத்து 65 ஆயிரம் கோடி கூடுதலாக சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உலகின் அதி பணக்காரர்களுக்கான கிளப்பில் அமேசானின் ஜெஃப் பெசோஸ் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர்
பில் கேட்ஸ்க்கு அடுத்தபடியாக மார்க் ஜுக்கர்பெர்க்கும் இணைந்துள்ளார். இதன்படி அமெரிக்க டாலர் மதிப்பில்
ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை- தமிழகம், பெரும் சாதனை
ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை- தமிழகம், பெரும் சாதனை
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை
கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. மக்களுடைய
வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. 6-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த
காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய சேவைகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் நிலையங்கள்,
ஆம்புலன்சுகள், அமரர் ஊர்திகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டுமே இயங்குவதற்கு இன்றைய தினம் அனுமதி
அளிக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர்த்து மற்ற சேவைகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று மது விற்பனை அதிகரித்து உள்ளது. அந்த வகையில்
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இதில்
அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.55 கோடிக்கும், திருச்சியில் – ரூ.41.67 கோடி, சேலத்தில் – ரூ.41.20 கோடி, கோவையில்
– ரூ.39.45 கோடி, சென்னையில் – ரூ.22.56 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டது.
கடந்தவார சனிக்கிழமையை விட இந்தவாரம் கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக்
நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் ரூ.188.86 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் ரூ.189.38 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
முகநூலில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை
முகநூலில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை
திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாக உள்ள நடிகை முகநூலில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துள்ளார்.
முகநூலில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை
அனுபமா பதக்
கொரோனா ஊரடங்கில் நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் திரையுலகை உலுக்கி வருகிறது. இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தூக்கில் தொங்கி
இறந்தார். தொடர்ந்து இந்தி டி.வி. நடிகர் மன்மீத் கிரேவல், டி.வி. நடிகை பிரேக்ஷா மேத்தா, மராத்தி நடிகர் அசுதோஷ் பாக்ரே
ஆகியோரும் தற்கொலை செய்து கொண்டனர். இரு தினங்களுக்கு முன்பு இந்தி டி.வி. நடிகர் சமீர் ஷர்மாவும் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.
இந்த நிலையில் தற்போது போஜ்புரி திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாக உள்ள நடிகை அனுபமா பதக்கும் தற்கொலை செய்துள்ளார்.
அனுபமா பதக்
பீகார் மாநிலம் புர்னியாவை சேர்ந்த இவர் மும்பையில் உள்ள தஹிசர் பகுதியில் தங்கி படங்களில் நடித்து வந்தார். சில
தினங்களுக்கு முன்பு அனுபமா பதக் தனது முகநூல் பக்கத்தில், “சிலர் தன்னை ஏமாற்றி விட்டனர் என்றும், முதலீடு செய்த
பணத்தை ஒரு நிறுவனம் திருப்பி தரவில்லை என்றும், தனது இரு சக்கர வாகனத்தை ஒருவர் எடுத்து சென்று விட்டார் என்றும், இங்கு யாரையும் நம்ப முடியவில்லை” என்றும் வீடியோவில் பேசி
வெளியிட்டு இருந்தார். இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது
சிரியாவில் உக்கிர மோதல் – மக்கள் இடப்பெயர்வு
சிரியாவில் உக்கிர மோதல் – மக்கள் இடப்பெயர்வு
சிரியாவின் வடக்கு இட்லி Jabal al-Zawiya பகுதியில் இராணுவ
மோதலால் அதிகரித்துள்ள நிலையில்
மக்கள் தமது உயிர் பாதுகாப்பது தேடி அந்த பகுதியில் இருந்து அகதிகளாக இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்
சிரியாவில் ஒன்பது அன்டுகளாக முடிவின்றி தொடரும் போரினால்
இதுவரை நான்கு லட்சத்திற்கு ,மேட்பட்ட மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

கடலில் குளித்த பெண்ணை தாக்கிய திமிங்கலம்
கடலில் குளித்த பெண்ணை தாக்கிய திமிங்கலம்
அவுஸ்ரேலியா கடல் பகுதியில் குளித்து கொண்டிருந்த இளம் பெண்
ஒருவரை நீரடியால் மறைந்து வந்த திமிங்கலம் தாக்கியுள்ளது
எனினும் இதன் கோர தாக்குதலில் சிக்கிய பொழுதும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்
இந்த வராம இடம்பெற்ற மூனறாவது சுறா ,திமிங்கல தாக்குதல் இதுவாக பதிய பெற்றுள்ளது
சிதறிய இந்திய விமானம் – பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
சிதறிய இந்திய விமானம் – பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
இந்திய மாசிலமான கேரளாவில் நடந்த விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு
நேற்று வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானத்தில் 184 பயணிகள்
மற்றும் 6 விமான பணிக்குழுவினர் என மொத்தம் 190 பேர் பயணம் செய்துள்ளனர்
கோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைந்த இந்த விமானம் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்க முற்பட்டது. ஆனால் அப்போது
ஓடுதளத்தில் வழுக்கிக்கொண்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானம் இரண்டு
பாகங்களாக உடைந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த அருகில் வசித்து வந்த கிராமத்தினர் உடனடியாக சம்பவம்
நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கிராமத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் இங்கு மீட்பு படையினர் விரைந்து சென்று விமான
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விமானத்தில் சிக்கியிருந்த அனைவரையும் மீட்ட படையினர் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்த மருத்துவர்கள் 15 பேர் உயிரிழந்துவிட்டதாக முதல்கட்டமாக அறிவித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 பேர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால்
கேரள விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இதில் விமானி, துணை விமானியும் உள்ளடக்கம் ஆகும்.
இதற்கிடையில், இந்த விபத்தில் விமானத்தில் உயிரிழந்த 17 பேர் தவிர எஞ்சிய 173 பேரும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 15
பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோனா
பிரான்சில் வேகமாக மீள பரவும் கொரோனா
பிரான்சில் 2 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளது.
பிரான்சில் 2 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்புகள் உயர்வு
கோப்புபடம்
பாரீஸ்:
பிரான்ஸ் நாட்டின் தேசிய சுகாதார நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, பிரான்ஸில் 24 மணி
நேரத்தில் 1,695 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளது, இது மே 30-ம் தேதிக்குப் பிறகு நாட்டில் பதிவான மிக அதிகமான கொரோனா பாதிப்புகள் ஆகும்.
மே 30 ஆம் தேதி அன்று பிரான்சில் சுமார் 1,828 கொரோனா பாதிப்புகள் பதிவானது. எனினும், மருத்துவமனைகள் மற்றும் தீவிர
சிகிச்சை பிரிவுகளில் உள்ள கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் குறைந்துள்ளதாக சுகாதார அமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் மொத்த இறப்பு எண்ணிக்கை 30,305 ஆக உள்ளது. ஐரோப்பாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கையில் இங்கிலாந்து
மற்றும் இத்தாலிக்கு அடுத்தபடியாக 3 வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது.
லெபனான் குண்டு வைப்பு 135 பேர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்
லெபனான் குண்டு வைப்பு 135 பேர் பலி – துறைமுக அதிகாரிகள் வீட்டுக்காவலில்
லெபனான் நாட்டு துறைமுகத்தில் நடந்த அதிபயங்கர வெடிவிபத்தில் 135 பேர் பலியான நிலையில், துறைமுக அதிகாரிகள் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.
அதிபயங்கர வெடிவிபத்தில் 135 பேர் பலி – லெபனான் துறைமுக அதிகாரிகளுக்கு வீட்டுக்காவல்
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுக சரக்கு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட்டால் கடந்த 4-ந் தேதி மாலை அதிபயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
மனித வரலாற்றில் அணுசக்தி இன்றி நடந்த மிகப்பெரிய வெடிவிபத்தாக பதிவு செய்யத்தக்க அளவில் இது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வெடி விபத்தில் அந்த துறைமுகம் உருக்குலைந்து சின்னாபின்னமானது. 135 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 4 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து
நடுரோட்டுக்கு வந்து விட்டனர். மக்கள் தங்கள் அன்றாட தேவைகளான, அத்தியாவசிய தேவைகளான உணவு, உடைகள், உறைவிடம் இல்லாத பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இந்த கோர விபத்துக்கு காரணம், துறைமுகத்தில் பாதுகாப்பற்ற சேமிப்புகிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம்
நைட்ரேட்தான் என்று அந்த நாட்டின் அதிபர் மைக்கேல் அவுன் உறுதி செய்துள்ளார்.
லெபனான் விபத்து
அதே நேரத்தில், இந்த விபத்துக்கு காரணம், அதிகார வர்க்கத்தின் அலட்சியப்போக்கு, ஊழல், தவறான நிர்வாகம் ஆகியவைதான்
என்று பெய்ரூட் மக்கள் ஆவேசத்துடனும், கோபத்துடனும் குற்றம் சுமத்துகின்றனர்.
அந்த நகரில் 2 வார கால அவசர நிலை அறிவித்து, அமல்படுத்தப்பட்டுள்ளது.
பெய்ரூட் நிலை குறித்து அந்த நாட்டின் சினிமா பட இயக்குனர் ஜூட் செஹாப், பி.பி.சி. டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில், “
பெய்ரூட் அழுது கொண்டிருக்கிறது. அலறிக்கொண்டிருக்கிறது. மக்கள் வெறித்தனமாக இருக்கிறார்கள்.
அவர்கள் சோர்வாகவும் இருக்கிறார்கள். இந்த விபத்துக்கு காரணமானவர்களை சட்டத்தின் பிடியில் நிறுத்தி நீதி வழங்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு” என குறிப்பிட்டார்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்து பெய்ரூட் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிற சாடியா எல்மேச்சி நவுன் என்ற உள்ளூர்வாசி கூறும்போது, “நாங்கள் திறமையற்ற அரசால்
வழிநடத்தப்படுகிறோம் என்பதை நான் எல்லா நேரத்திலும் அறிவேன். இது தகுதியற்ற அரசு. ஆனால் அவர்கள் இப்போது செய்திருப்பது முற்றிலும் கிரிமினல் குற்றம்” என்று குறிப்பிட்டார்.
இதற்கிடையே விபத்துக்கு காரணம் என கருதப்படுகிற பெய்ரூட் துறைமுக அதிகாரிகளை அந்த நாட்டு அரசு வீட்டுக்காவலில் வைத்தது.
நாட்டின் சுப்ரீம் பாதுகாப்பு கவுன்சில், இந்த வெடிவிபத்துக்கு காரணமானவர்கள் அதிகபட்ச தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளது.
சம்பவம் நடந்த பகுதியை பாதுகாப்பு படையினர் முற்றுகையிட்டு ‘சீல்’ வைத்துள்ளனர்.
மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களின் உடல்களையும், உயிர் பிழைத்தவர்களையும் தொடர்ந்து தேடி வருகின்றனர். டஜன் கணக்கிலானவர்களை காணவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு மத்தியில் பல நாடுகள், லெபனானில் பரிதாப நிலையில் உள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகின்றன. பிரான்ஸ் நாட்டில்
இருந்து லெபனானுக்கு மீட்பு படையினர், மருத்துவ சாதனங்கள், 500 பேருக்கு சிகிச்சை அளிக்க ஏற்ற விதத்தில் நடமாடும் கிளினிக் ஆகியவற்றுடன் 3 விமானங்கள் விரைவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
ஐரோப்பிய நாடுகள், ரஷியா, துனிசியா, துருக்கி, ஈரான், கத்தார் ஆகிய நாடுகள் நிவாரண பொருட்களை அனுப்புகின்றன. மருத்துவ நிபுணர்களையும், மனிதாபிமான உதவிகளையும் அனுப்பி வைக்க தயார் என இங்கிலாந்து அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் கடும் புயல் வெள்ளம் =- 9பேர் பலி – 3 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி அவதி
அமெரிக்காவில் கடும் புயல் வெள்ளம் =- 9பேர் பலி – 3 மில்லியன் மக்கள் மின்சாரம் இன்றி அவதி
அமெரிக்கா US Atlantic Coast. பகுதியில் ஏற்பட்ட கடும் புயல் ,வெள்ளம் காரணமாக இதுவரை ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்
மேலும் முப்பது லட்சம் வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன
இதனால் மக்கள் பலத்த சொல்லென்னா துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர்
மீட்பு பணிகள் துரித வேகத்தில் இடம்பெற்ற வண்னம் உள்ளன ,இந்த வெள்ளம் புயல்காரணமாக பல மில்லியன் சொத்துக்கள் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

அமெரிக்கா = அதிபர் டிரம்ப் பதிவை அகற்றிய பேஸ்புக்
அமெரிக்கா = அதிபர் டிரம்ப் பதிவை அகற்றிய பேஸ்புக்
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பேஸ்புக் நிறுவனத்தில் பதிவேற்றம்
செய்த கொரனோ வைரஸ் தொடர்பான தகவல் பதிவை அதிரடியாக நீக்கியுள்ளது
அதற்கு அந்த நிறுவனம் தெரிவித்துள்ள கருத்து ,தவறான தகவலை டிரம்ப் வெளியிட்டு குழப்பத்தை விளைவித்த காரணத்தினால் அது அகற்ற பட்டுள்ளது என்கிறது
அமெரிக்கா அதிபருக்கே இந்த சோதனையா..? என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து செல்கின்றனர்
சிரியாவுக்குள் 5,500 இராணுவ வாகனங்களுடன் புதிதக நுழைந்து துருக்கிய இராணுவம்
சிரியாவுக்குள் 5,500 இராணுவ வாகனங்களுடன் புதிதக நுழைந்து துருக்கிய இராணுவம்
சிரியாவின் இட்லி பகுதிக்குள் 5,500இராணுவ வாகனங்களுடன் துருக்கிய இராணுவம் நுழைந்துள்ளது
மேலதிகமாக குவிக்க படும் இந்த படை நகர்வுகள் அங்கும் பெரும் மோதல் ஒன்றை உருவாக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது
சமரச நிலைகள் இடம்பெற்ற வண்ணம் இருக்கையில் துருக்கி இந்த திடீர்
படை குவிப்பை மேற்கொண்டு வருவது நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

கடல்வழியாக பிரிட்டனுக்குல் நுழைந்த 1000 அகதிகள் – பொலிஸ் திணறல்
கடல்வழியாக பிரிட்டனுக்குல் நுழைந்த 1000 அகதிகள் – பொலிஸ் திணறல்
பிரிட்டன் கென்ட் டோவர் பகுதி கடல் வழியை பயன்படுத்தி பல் நாட்டு சட்டவிரோத குடியேற்ற வாசிகள் உள் நுளைந்துள்ளனர்
நேற்று முன்தினம் சுமார் 120அகதிகள் இவ்வாறு நுழைந்துள்ளனர்
மேலும் இதே மாதத்தில் மட்டும் ஆயிரம் பேர் உள் நுளைந்துள்ளதாக குடிவரவு குயகல்வு அமைச்சு அறிவித்துள்ளது
தொடர்ந்து பெருக்கெடுத்து உள்நுழையும் அகதிகளை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அமூல் படுத்தும் நிலைக்கு அரசு செல்லும் நிலை காண படுகிறது


கொரனோ பரவல் அபாயம் -வடக்கு லண்டன் அடித்து பூட்டு – நடமாடினால் 3200 தண்டம்
கொரனோ பரவல் அபாயம் -வடக்கு லண்டன் அடித்து பூட்டு – நடமாடினால் 3200 தண்டம்
பிரிட்டன் வடக்கு லண்டன் முக்கிய சில நகரங்கள் அடித்து பூட்ட பட்டுள்ளன ,கடந்த 31 ஆம் திகதி முதல் இந்த நடைமுறை மேற்கொள்ள பட்டுள்ளது
பிரிட்டனில் இரண்டாவது அலையாக இடம்பெற்று வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் முகமாக இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது
அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறுகிறது
மேலும் 14 நகாரங்கள் அடித்து பூட்ட படும் நிலைக்கு செல்ல செல்ல உள்ளது ,ஊரடங்கு அமூல் படுத்த படும் நிலை காண படுகிறது
குறித்த பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள்; இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்தி காப்பாற்றி கொள்ளுங்கள்
3200பவுண்டுகள் தண்டம் அறைவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
Manchester, West Yorkshire , east Lancashire
31 July.The legislation was published on Tuesday afternoon and begun affecting residents from midnight onwards, despite ministers previously saying it would come into effect from 31 July.
Fines of up to £100 will be enforceable for anyone who breaks the rules of the
Health Protection (Coronavirus, Restrictions on Gatherings) (North of England) Regulations 2020, with a maximum £3,200 fine for repeat offences.
பிரிட்டனில் வீழ்ந்து நொறுங்கிய விமானம் – பலியான விமானி
பிரிட்டனில் வீழ்ந்து நொறுங்கிய விமானம் – பலியான விமானி
இன்று பிரிட்டன் East Sussex பகுதியில் காலை 11 மணியளவில் இலகுரக
விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது
இதில் அந்த விமானத்தை செலுத்திய விமானி உடல் சிதறி பலியாகியுள்ளார்
விமானம் முற்றாக சேதமடைந்துள்ளது
குறித்த விபத்து தொடர்பானவிசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
அனைத்து கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் செயல்படும் – ஆய்வில் அம்பலம்
அனைத்து கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் செயல்படும் – ஆய்வில் அம்பலம்
கொரோனா வைரசுக்கு எதிராக உருவாக்குகிற தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் அனைத்து கொரோனா வைரஸ் திரிபுகளுக்கும் எதிராக பயன் உள்ளதாக இருக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கொரோனா வைரஸ்களுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் செயல்படும் – ஆய்வில் அம்பலம்
கொரோனா வைரஸ் பரிசோதனை
கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் உருவாகி 8 மாதங்கள் கடந்து விட்டன; ஆனால் மனித குலத்தின் சோகம்தான் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை.
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று நேற்று மாலை, அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மைய புள்ளி விவரப்படி,
உலகமெங்கும் 1.85 கோடிப்பேரின் உடல்களுக்குள் புகுந்திருக்கிறது. அது மட்டுமல்ல, 6.98 லட்சம் பேரின் உயிர்களை பறித்திருக்கிறது.
ஆனாலும் அதன் யானைப்பசி தீரவில்லை. இதனால்தான் அதை தடுத்து நிறுத்துவதற்காக உலகமெங்கும் 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
இதுவரை எந்தவொரு தொற்று நோய்க்கும் இத்தனை தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்ட சரித்திரம் இல்லை.
கோவிஷீல்டு, கொரோனாவேக், சைனோபார்மின் 2 தடுப்பூசிகள், மார்டர்னா -1273, பிஎன்டி162 பி2 ஆகிய தடுப்பூசிகள் மூன்றாவது கட்ட சோதனையில் இருப்பது நம்பிக்கையூட்டும் தகவலாக
அமைந்திருக்கிறது. இந்த தடுப்பூசிகள் வெற்றிகரமாக 2 கட்டம் மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு அவற்றில் நோய் எதிர்ப்புச்சக்தியும், டி செல்களும் உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம்
பேருக்கு செலுத்தி சோதிக்கிற மூன்றாம் கட்ட சோதனையும் வெற்றி கண்டு விட்டால் போதும் கொரோனா வைரஸ் தொற்றை நாம் விரட்டியடிக்கும் நிலைக்கு நெருங்கி விட்டோம் என்று பொருள்.
இந்த தடுப்பூசி முயற்சியில் ஒரு மகிழ்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது.
‘பிரண்டியர்ஸ் இன் மைக்ரோபயாலஜி’ பத்திரிகையில் வெளியாகியுள்ள தகவலைத்தான் குறிப்பிடுகிறோம்.
உலகமெங்கும் இருந்து பல்வேறு பரிசோதனைக்கூடங்களில் பிரித்தெடுக்கப்பட்ட 48 ஆயிரத்து 635 கொரோனா வைரஸ் மரபணு வரிசைகள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வெளி வந்திருக்கின்றன.
உலகின் அனைத்து கண்டங்களுக்கும் பயணித்து, பரவியுள்ள கொரோனா வைரஸ் மாற்றங்களை இத்தாலி நாட்டில் உள்ள
போலோக்னா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வரைபடமாக்கி உள்ளனர்.
இதுபற்றி அந்த விஞ்ஞானிகள் கூறும்போது, “எங்கள் பகுப்பாய்வில் இந்த கொரோனா வைரஸ்கள் சிறிய மாற்றம் அடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஒரு மாதிரியில் 7 மாற்றங்கள்
கண்டறியப்பட்டுள்ளன. பொதுவான காய்ச்சல் இரு மடங்குக்கும் அதிகமாகிற மாறுபடுகிற விகிதத்தை கொண்டுள்ளன” என்கிறார்கள்.
போலோக்னா பல்கலைக்கழக பேராசிரியர் பெடரிகோ ஜியோர்கி இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், “கொரோனா வைரஸ் ஏற்கனவே மனிதர்களை பாதிக்கும் வகையில் உகந்ததாக உள்ளது. மேலும் இது அதன் குறைந்த பரிணாம மாற்றத்தை
கொண்டிருக்கிறது. இதன் அர்த்தம், கொரோனா வைரசுக்கு எதிராக உருவாக்குகிற தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சைகள் அனைத்து கொரோனா வைரஸ் திரிபுகளுக்கும் எதிராக பயன் உள்ளதாக இருக்கும்” என்கிறார்.
தற்போது கொரோனா வைரசின் 6 திரிபுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
இதில் அசல் 1, எல் என்னும் திரிபு ஆகும். இதுதான் 2019 டிசம்பரில் சீனாவின் உகானில் தோன்றியதாகும். இதன் முதல் மாற்றம், எஸ் திரிபு 2020 தொடக்கத்தில் தோன்றியது. வி மற்றும் ஜி திரிபுகள்,
ஜனவரி மத்தியில் பரவலாக காணப்பட்டன. இன்றுவரை ஜி திரிபு பரவலாக உள்ளது. இது பிப்ரவரி மாத இறுதியில் ஜிஆர் மற்றும் ஜிஎச் திரிபுகளாக மாற்றப்பட்டுள்ளன.
“ஜி திரிபு மற்றும் அதனுடன் தொடர்புடைய ஜிஆர் மற்றும் ஜிஎச் திரிபுகள் மிகவும் பரவலாக உள்ளன. இது நாங்கள் பகுப்பாய்வு செய்த அனைத்து மரபணு வரிசைகளிலும் 74 சதவீதம் உள்ளன” என்கிறார் பேராசிரியர் பெடரிகோ ஜியோர்கி.
அவை 4 மாற்றங்களை முன்வைக்கின்றன. அவற்றில் 2 ஆர்.என்.ஏ. பாலிமரேஸ் மற்றும் ஸ்பைக் புரதங்களின் வரிசையை மாற்ற முடிகிறது. இந்த பண்பானது, வைரசின் பரவலை எளிதாக்குகிறது என்றும் பெடரிகோ ஜியோர்கி கூறுகிறார்.
6 முக்கிய திரிபுகளை தவிர ஆராய்ச்சியாளர்கள் சில அரிதான மாற்றங்களையும் அடையாளம் கண்டுள்ளனர். இதற்காக தற்போது கவலைப்பட ஏதுமில்லை என்றாலும் கண்காணிக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.
முடிவாக விஞ்ஞானிகள் சொல்வது, கொரோனா வைரஸ் குறைந்த பரிணாம மாற்றத்தை கொண்டிருப்பதால், அது கொரோனா வைரசுக்கு எதிராக உருவாக்கி வரும் தடுப்பூசிகளும்
சிகிச்சைகளும் அனைத்து வைரஸ்களுக்கு எதிராகவும் பலன் அளிக்கும் என்பதுதான். இதனால் கொரோனா வைரசை விரட்டியடிக்கும் காலம் தொலைவில் இல்லை.

வெடித்து சிதறிய துறைமுகம் – லெபனானில் பயங்கரம் -பலர் பலி- video
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக பகுதியில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த பயங்கர விபத்து பெய்ரூட் நகரம் முழுவதும் உணரப்பட்டது. இந்த வெடிவிபத்தில் துறைமுகமே உருகுலைந்தது. வீடுகள்,
கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் தீ பற்றி எரிந்தது. பல
கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள வீடுகளின் கண்ணாடிகள் நெறுங்கின. பெய்ரூட் நகரமே அதிர்ந்து புகைமூட்டமாக காணப்படுகிறது.
இந்நிலையில், துறைமுகத்தில் பழைய வெடிபொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த அறையில் முதல்கட்டமாக தீ விபத்து
ஏற்பட்டதாகவும், அதையடுத்து சில வினாடிகளில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து நடந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெடிவிபத்து 2 முறை நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. விபத்து ஏற்பட்ட துறைமுகத்தில் தற்போது தீ பற்றி எரிந்துகொண்டிருக்கிறது.
இந்த விபத்தில் தற்போதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர் என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,
நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கான அவசர அழைப்புகள்
தொடர்ந்து வந்துகொண்டிருப்பதாகவும் பலி எண்ணிக்கை பலமடங்கு அதிகரிக்கும் என மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவமனைகளுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்துகொண்டிருக்கிறது.
இதில் அழுத்தி அகோர காணொளி பார்க்க
இந்த விபத்து காரணமாக லெபனானில் நாளை தேசிய துக்கதினமாக அனுசரிக்கப்படுகிறது. மேலும், இந்த விபத்து குறித்து
அந்நாட்டு அதிபர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை உடனடியாக கூட்டியுள்ளார்.
மேலும், இந்த விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும் என அந்நாட்டு பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

சிறைச்சாலை மீது ஆயுத தாரிகள் தாக்குதல் 29 பேர் பலி -50 பேர் காயம்
சிறைச்சாலை மீது ஆயுத தாரிகள் தாக்குதல் 29 பேர் பலி -50 பேர் காயம்
ஆப்கானிஸ்தான் Nangarhar மாகாணத்தில் உள்ள சிறை சாலைக்குள் புகுந்த ஆயுத தாரி நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி இருபத்தி ஒன்பது பேர் பலியாகினர் .,மேலும் ஐம்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
ஆயுத தாரிக்கும் ,இராணுவத்தினருக்கும் இடையில் கடும் துப்பாக்கி சண்டைகள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
தாலிபான்கள் ஐநூறு பேர் விடுதலை செய்ய பட்டதன் பின்னர் நடந்த பெரும் தாக்குதல் சம்பவமாக இது பார்க்க படுகிறது

27 வயது யானை பலி – அதிர்ச்சியில் ரசிகர்கள்
27 வயது யானை பலி – அதிர்ச்சியில் ரசிகர்கள்
அமெரிக்கா St. Louis மிருக காட்சி சாலையில் வசித்து வந்த
இருபத்தி ஏழு வயதுடைய யானை ஒன்று
இறந்துள்ளது ,
மேற்படி யானையின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
உரிய முறைப்படி யானை அடக்கம் செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

பெற்ற மகனை கொன்ற தந்தை – பொலிஸாரால் கைது
பெற்ற மகனை கொன்ற தந்தை – பொலிஸாரால் கைது
அவுஸ்ரேலியா North Queensland. பகுதியில் ஆறு வயது பெற்ற மகனை
கொன்ற தந்தை ஒருவர் கொலை குற்ற சாட்டில் காவல் துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்
கைதானவர் தொடர் நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,இவரது குற்றம் நிரூபிக்க பட்டால் இவருக்கு மரண தண்டனை கிடைக்க பெறும் என எதிர்பார்க்க படுகிறது
மேற்படி சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது








