Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
தென்கொரியா நபரை சுட்டு கொன்று எரித்த வடகொரியா – பயங்கரம்
தென்கொரியா நபரை சுட்டு கொன்று எரித்த வடகொரியா – பயங்கரம்
வடகொரியா எல்லையில் மக்கள் நடமாடினால் அவர்களை சுட்டு கொல்லுமாறு வடகொரியா அதிபர் உத்தரவிட்டு இருந்தார் .
அவ்விதமான துப்பாக்கி சூடு தடை உள்ள பொழுதும் வடகொரியா கடல்
எல்லை பகுதியில் நடமாடிய தென்கொரிய அரச ஊழியர் ஒருவரை
சுட்டு கொன்ற வடகொரியா இராணுவம் அவ்விடத்தில் வைத்தே தீ வைத்து எரித்துள்ளது .
இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளதை தென் கொரியா தெரிவித்துள்ளது ,
இதனை அடுத்து இரு நாடுகளும் இடையில் மீள பதட்டம் அதிகரித்துள்ளது
பிரிட்டனில் இன்று முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – மீறினால் 10 ஆயிரம் தண்டம்
பிரிட்டனில் இன்று முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – மீறினால் 10 ஆயிரம் தண்டம்
பிரிட்டனில் பரவி வரும் வைரஸ் நோயின் தாக்குதல் அதிரித்துள்ள
நிலையில்
மக்களை அதில் இருந்து காப்பாற்றும் அவசர பேரிடர் நிலை பிரகடனமாக
இன்று வியாழன் முதல் பத்து மணியுடன் உணவகங்கள் ,பார்கள்
அடித்து பூட்ட அரசு உத்தரவிட்டுள்ளது
இந்த உத்தரவு கண்டிப்பான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது ,இந்த சட்டவிதிகளை
மீறி திறக்க படும் உணவகங்கள் பார்கள் லைசன்ஸ் இரத்து செய்ய
படுவதுடன் ,அவர்களுக்கு தண்டம் அறவிட படும் என்பதாக உள்ளது ,குறிப்பிட தக்கது
8 ஆயிரம் உடல்களை தகனம் செய்த பெண்
8 ஆயிரம் உடல்களை தகனம் செய்த பெண்
ராமநாதபுரத்தில் மயான வேலையில் ஈடுபட்டு இதுவரை 8 ஆயிரம் உடல்களை பெண் ஒருவர் தகனம் செய்துள்ளார்.
மயான வேலையில் ஈடுபட்டு 8 ஆயிரம் உடல்களை தகனம் செய்த பெண்
இறந்தவர் உடலை தகனம் செய்ய விறகுகளை தயார் செய்யும் ஜோதி.
ராமநாதபுரம் கே.கே.நகரை சேர்ந்த ஜெகநாதன் என்பவருடைய மனைவி ஜோதி(வயது 39). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும்
உள்ளனர். கணவர் ஜெகநாதன் ராமநாதபுரம் அல்லிக்கண்மாய் சுடுகாட்டில் மின்மயானத்தில் ஒப்பந்த அடிப்படையில் பிணங்களை
எரிக்கும் பணி செய்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு திடீரென்று தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் குடும்பத்தை காப்பாற்ற வழிதெரியாமல் திகைத்து கொண்டிருந்த ஜோதி தனது குழந்தைகளை படிக்க வைக்க
வேண்டும் என்பதற்காக மயான தொழிலை செய்ய துணிந்தார். இவ்வாறு கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக மயானத்தில்
பிணங்களை தகனம் செய்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் தனது பிள்ளைகளை படிக்க வைத்து வருகிறார்.
இதுகுறித்து ஜோதி கூறியதாவது:-
எனது கணவர் இங்கு வேலை பார்த்தபோது அவருக்கு சாப்பாடு கொடுக்க வருவேன்.
அப்போது அவர் மயான வேலையை கற்றுக்கொடுத்தார். நான் இந்த தொழிலை செய்ய தொடங்கியதும் ஆரம்பத்தில் எங்கள்
குடும்பத்தினர், உறவினர்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் யாரிடமும் கை ஏந்தாமல் சொந்த காலில் நிற்பதை கண்டு ஏற்றுக்கொண்டனர்.
இரவு, பகல் பாராமல் இதுவரை சுமார் 8 ஆயிரம் உடல்கள் வரை எரித்துள்ளேன்.
இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை விபத்து, தற்கொலை, அனாதை பிணம் போன்றவைதான். எனது இந்த வாழ்வில் மறக்க முடியாத சில சம்பவங்கள் நடந்துள்ளன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட 19 வயது இளம்பெண் ஒருவர் உடலை எரிக்க ஆரம்பித்து விடிய விடிய
எரியவில்லை. என்ன காரணம் என்றே இதுவரை தெரியவில்லை. அதேபோல, மதுரையை சேர்ந்த வயதான ஒரு தம்பதி
ராமநாதபுரத்தில் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் பிள்ளைகள் இறுதிச்சடங்கிலும் எங்களின் பெற்றோர்
இணைபிரியாமல் செல்ல வேண்டும் என்று கூறினர். அதனால் இருவரின் உடலையும் ஒரே சமயத்தில் ஒன்றின்மேல் ஒன்றாக
வைத்து தகனம் செய்தேன். இதுபோன்ற ஆத்ம திருப்திதான் இந்த தொழிலில் எனக்கு கிடைக்கும்.
பிரேத பரிசோதனை செய்த உடல்களை இரவு நேரங்களில் கொண்டுவந்து கொடுப்பார்கள்.
விடிய விடிய தனி ஆளாக சில நேரங்களில் மின்சாரம் இல்லாமல் செல்போன் வெளிச்சத்தில் எரியூட்ட வேண்டி இருக்கும்.
இந்த சுடுகாட்டினை நான் கோவிலாகத்தான் பார்க்கிறேன். ஆரம்பத்தில் வறுமையில் இருந்தபோது இந்த தொழில் செய்வதால்
விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு என்னை யாரும் அழைப்பது இல்லை. இப்போது என்னை ஏற்றுக்கொண்டு அழைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
மயான வேலையை ஆண்களே சவாலாக நினைக்கும் இந்த காலத்தில், குடும்பத்தை காப்பாற்ற ஜோதி இந்த வேலையை
ஏற்றுக்கொண்டிருப்பது அவரை பாரதி கண்ட புதுமை பெண்ணாக தெரிய வைத்திருக்கிறது.

4000 ஆண்டு பழமை வாய்ந்த மில் கண்டு பிடிப்பு
4000 ஆண்டு பழமை வாய்ந்த மில் கண்டு பிடிப்பு
துருக்கியின் மேற்கு பகுதியில் நான்காயிரம் ஆண்டு பழமை வாய்ந்த
மில் ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது ,
தொல்
பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்ற்கொண்ட அகழ்வாராய்ச்சியில் இவை கண்டு பிடிக்க பட்டுள்ளது
ஒரு ஏக்கர் நிலப் பரப்பளவில் இந்த மில் உள்ளதும் ,அங்கு அவ்வேளை
பயன் படுத்த பட்ட பொருட்கள் உள்ளிட்டவை அழியாது உள்ளமை பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து ஆராய்ச்சிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

மலசலகூடத்திற்குள் இருந்து பணம் மற்றும் $700,000 பெறுமதியான போதைவஸ்து மீட்பு
மலசலகூடத்திற்குள் இருந்து பணம் மற்றும் $700,000 பெறுமதியான போதைவஸ்து மீட்பு
சிங்கப்பூரில் போதைவஸ்து கடத்தல் கும்பல் ஒன்று விசித்திரமான
முறையில் நடத்தி வந்த விற்பனை கண்டு பிடிக்க்க பட்டுள்ளது
குறித்த குழுவினரை பின்தொடர்ந்த உளவுத்துறையினர் நடத்திய திடீர்
சுற்றிவளைப்பில் குறித்த வீட்டின்
மலசலக் குழியில் மறைத்து வைக்க பட்டிருந்த நிலையில் இருந்து
ஏழுலட்சம் அமரிக்கா
டொலர் பெறுமதியான போதைவஸ்து மற்றும் ,ஒரு லட்சத்து எழுபதாயிரம் டொலர் பணம் என்பன மீட்க பட்டுள்ளன
இந்த குற்றத்தை புரிந்து வந்த இரு பெண்கள் மூன்று ஆண்கள் கைது செய்ய
பட்டுள்ளனர்
தொடர்ந்து தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

மலசலகூடத்திற்குள் இருந்து 
இந்தோனேசிய வெள்ளத்தில் 2 பேர் பலி -20 பேர் காயம்
இந்தோனேசிய வெள்ளத்தில் 2 பேர் பலி -20 பேர் காயம்
இந்தோனேசியா வெள்ளம் மற்றும் நில சரிவில் சிக்கி இருவர்
பலியாகியுள்ளனர் ,மேலும் இருபது பேர் படுகாயமடைந்துள்ளனர்
ஒருவர் காணமல் போயுள்ளார் ,
இந்த
அனர்த்தத்தில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள்
சேதமடைந்துள்ளன
,உடமைகள் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளது ,மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

லண்டனில் கொரனோ எதிரொலி – பொருட்களை அள்ளி செல்லும் மக்கள்
லண்டனில் கொரனோ எதிரொலி – பொருட்களை அள்ளி செல்லும் மக்கள்
பிரிட்டன் நாடு தழுவிய ரீதியில் புதிய லாக் டவுன் ,அடித்து பூட்டும் விடயம் இரண்டாவது முறையாக அறிவிக்க பட்ட நிலையில்
தற்போது பீதியடைந்த மக்கள் மறுபடி பொருட்களை அள்ளி செல்கின்றனர்
எதிர் வரும் மே மாதம் வரை இந்த பேரிடர் அனர்த்தம் நீடிக்கலாம் எனப்தாக உள்ளது ,எதிர்வரும் நான்கு வாரங்களின் பின்னர்
தற்பொழுது அறிவிக்க பட்ட விதிகளில் மேலும் இறுக்கமான நடவடிக்கை ,அதாவது முழுமையான அடித்து பூட்டும் நிகழ்வை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது
ஒன்று ,இரண்டு ,மூன்று, என்ற நிலையில் திட்டம் உள்ளது ,அதில் ஒன்று
தற்போது அறிவிக்க பட்டுள்ளது ,அதனை அடுத்து எதிர்வரும் இரண்டு மூன்று பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்
மக்கள் வேலையின்றி பெரும் நெருக்கடியை சந்திப்பர் ,தொழில் துறைநிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பொழுதும்
,அதனை மீறி மக்களை காப்பாற்ற இவ்விதமான அதிரடி முடிவினை பிரதமர் ஜோன்சன் அறிவித்துள்ளார்
முக கவசம் அணியாது வெளியில் சென்றால் இருநூறு தண்டம் , பதின் ஐந்து பேருக்கு மேல் கூடினால் பத்தாயிரம் தண்டம்
அது தவிர கிரிமினல் குற்றம் என்ற வகையில் உள்ளது ,நகருக்கு மூன்று
கடைகள் விகிதம் திறக்கும் வாய்ப்பு உள்ளது ,இத்தாலியை போன்று பிரிட்டன் செல்ல கூடிய அபாயம் உள்ளது ,
அமெரிக்காவில் எதிர்வரும் மூன்று மாதத்தில் நான்கு லட்சம் பேர் பலியாவார்கள் என்ற திடுக்கிடும் தகவல் வெளியிட பட்டுள்ளது
மக்களே அபாயத்தை உணர்ந்து வெளியில் நடமாடுதலை தவிர்த்து உங்களை நீங்கள் குடும்பத்துடன் தனிமை படுத்தி கொள்ளுங்கள்
இந்த செய்தியினை நண்பர்களுக்கும் தெரிய படுத்தி அவர்களை காப்பற்றி கொள்ளுங்கள்
வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

சிறுவனை கடத்திய நபர் – மடக்கி பிடித்த மக்கள்
சிறுவனை கடத்திய நபர் – மடக்கி பிடித்த மக்கள்
அவுஸ்ரேலியா தலைநகர் மெல் போர்ன் பகுதியில் உள்ள Preston
Libraryமுன்பாக இரண்டு வயது சிறுவர் ஒருவரை நபர் ஒருவர் கடத்தி செல்ல முற்பட்டார் .
எனினும் பெற்றவர்கள் போட்ட கூக்குரல் சத்தத்தை அடுத்து குறித்த
நபர் மடக்கி பிடிக்க பட்டு தாக்க பட்டு சிசு காப்பற்ற பட்டது
நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் தற்போது குறித்த
நபருக்கு நான்கரை வருட கடூழிய சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

இளம் பெண் மீது அல்டி முன் துப்பாக்கி சூடு
இளம் பெண் மீது அல்டி முன் துப்பாக்கி சூடு
அவுஸ்ரேலியா Booval, south of Brisbane பகுதியில் உள்ள அல்டி பல்
பொருள் வனிக வளாகத்தில் வைத்து இளம் பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த இளம் பெண்
தற்போது ஆபத்தான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
முகமூடி அணிந்த நபர் ஒருவரே இந்த கொலை வெறி தாக்குதலை நடாத்தியுள்ளார்
,போலீசார் மேற்கொண்ட துரித சுற்றிவளைப்பில் குற்ற செயலை புரிந்தவர் கைது செய்ய பட்டுள்ளார்
கைதானாவர் உரிய முறை விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
,இந்தக் கொலை செயலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை
அமெரிக்காவில் 3 மாதத்தில் 4 லட்சம் பேர் பலியாவர்கள் – அபாய எச்சரிக்கை
அமெரிக்காவில் 3 மாதத்தில் 4 லட்சம் பேர் பலியாவர்கள் – அபாய எச்சரிக்கை
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயாளர்களின்
எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து செல்கிறது
இவ்விதம் இதுவரை இடம் பெற்ற மரணம் இரண்டு லட்சத்தை கடந்துள்ளது
நாள் ஒன்றுக்கு 700 பேர் சரா சரியாக இறந்துள்ளனர் எனவும் எதிர்வரும்
மூன்று மாதங்களில்
நான்கு லட்சம் பேர் பலியாவர்கள் என எச்சரிக்க பட்டுள்ளது
இதை விட மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது
அவுஸ்ரேலியா கடலில் கரைய ஒதுங்கிய 250 திமிங்கலம் – video
அவுஸ்ரேலியா கடலில் கரைய ஒதுங்கிய 250 திமிங்கலம் – video
அவுஸ்ரேலியா கடற்பரப்பில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள்
திடீரென கரை ஒதுங்கியுள்ளன
இந்த திமிங்கலங்கள்
இவ்வாறு ஏன் திடீரென வருகை தந்தன என்பது தொடர்பில் கடல் சார்
ஆய்வியல் நிபுணர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இவ்விதம் ஒதுங்குவதால் பெரும் கடல் பேரிடர் இடம் பெற கூடும் என அஞ்ச படுகிறது
அவ்விதம் எனின் சுனாமி வருவதற்குரிய வாய்ப்பு உள்ளதா …?
இடிந்து வீழ்ந்த கட்டிடத்தில் இருந்து உயிரோடு மீட்க பட்ட 4 வயது சிறுவன்
இடிந்து வீழ்ந்த கட்டிடத்தில் இருந்து உயிரோடு மீட்க பட்ட 4 வயது சிறுவன்
இந்தியாவில் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து வீழ்ந்தது ,இதில் சிக்கி பலர்
படுகாயமடைந்தும் ,இறந்தனர் ,ஆனால் நான்கு வயது சிறுவன் ஒருவன்
தெய்வாதீனமாக உயிருடன் மீட்க பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
அவ்வாறான காட்சி ஒன்று கீழே
நீரில் கொடிய கிருமி – இறந்த 330 யானைகள்
நீரில் கொடிய கிருமி – இறந்த 330 யானைகள்
சிம்பாவே நாட்டில் உள்ள அருவியில் நீரை அருந்திய காட்டு
யானைகள் 330 பேர் திடீரென இறந்துள்ளது
குறித்த யானைகள் ஏன் இவ்விதம் இறந்தன என பரிசோதனை செய்த
பொழுது அந்த நீரில் கொடிய பக்டீரியா கிருமிகள் பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டன
இதனை அடுத்தே குறித்த யானைகள் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது
தொடர்ந்து இது தொடர்பான பகுப்பாய்வு மற்றும் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
தாஜ்மஹால் மீள திறப்பு – குவியும் மக்கள்
தாஜ்மஹால் மீள திறப்பு – குவியும் மக்கள்
இந்தியாவின் புகழ் பூத்த காதல் சின்னமாக விளங்கும் தாஜ்மகால்
தற்போது மீள மக்கள் பாவனைக்கு திறக்க பட்டுள்ளது ,
இதனை அடுத்து மீள உல்லாச பயணிகள் படை எடுத்து வருகின்றனர்
3.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
3.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.12 கோடியைத் தாண்டியுள்ளது.
உலக அளவில் 3.12 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு
கிருமிநாசினி தெளிக்கும் ஊழியர்கள்
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு
மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.12 கோடியைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 9.64 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 400-க்கும் அதிகமானோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 2.28 கோடியைக் கடந்துள்ளது.
வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம்-தப்பிய டிரம்ப்
வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம்
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி உளவுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.
வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய விஷம் தடவிய கடிதம் -உளவுத்துறை தீவிர விசாரணை
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ரைசின் என்ற விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளை மாளிகைக்கு அந்த கடிதம் சென்றடைவதற்கு
முன்பாகவே, வழக்கமான சோதனையின்போது அந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உளவுத்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளது.
கனடாவில் இருந்து இந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவில் விரைவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், டிரம்பை குறிவைத்து கடிதம்
அனுப்பப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து டிரம்ப் நிர்வாகம் இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகள் மீண்டும் அமல் – அமெரிக்கா அறிவிப்பு
ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகள் மீண்டும் அமல் – அமெரிக்கா அறிவிப்பு
ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஈரான் மீது ஐ.நா. பொருளாதார தடைகள் மீண்டும் அமல் – அமெரிக்கா அறிவிப்பு
ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும், இடையே கடந்த 2015-ம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதில் தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை இல்லை என ஈரான் உறுதியளிக்க, அதற்கு
பிரதிபலனாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டது.
எனினும் இந்த ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ள நிபந்தனைகளை ஈரான் மீறினால், அந்த நாட்டின் மீது ஐ.நா. தடையை மீண்டும்
அமல்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற எந்த நாட்டுக்கும் உரிமை உண்டு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அம்சம் ‘மீள் தடை’ என்றழைக்கப்படுகிறது.
இதனிடையே அமெரிக்காவில் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு குறைகள் இருப்பதாக கூறி வந்த டிரம்ப் கடந்த 2018-ம் ஆண்டு இந்த
அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்தார். அப்போது தொடங்கி இப்போது வரை ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தின் மீள் தடை அம்சத்தை பயன்படுத்தி ஈரான் மீது மீண்டும் ஐ.நா. பொருளாதாரத் தடைகளை அமல்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
எனினும் அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டதால், தற்போது அதில் இடம் பெற்றுள்ள மீள் தடை அம்சத்தை பயன்படுத்தி அமெரிக்காவால் ஈரான் மீது தடை விதிக்க
முடியாது என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், அமெரிக்கா தனது முடிவில் தீர்க்கமாக இருந்தது.
அதன்படி ஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா நேற்று அறிவித்தது. அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ இதனை அறிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
ஈரான் மீது முன்னர் நிறுத்தப்பட்ட அனைத்து ஐ.நா. பொருளாதாரத் தடைகளையும் மீண்டும் அமல்படுத்துவதை அமெரிக்கா வரவேற்கிறது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் 2231-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் மறு செயலாக்கம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான தடை; கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிப்பது மற்றும் சோதிப்பதற்கான தடை; அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொடர்பான தொழில் நுட்பங்களை மாற்றுவதற்கான தடை போன்ற கட்டுப்பாடுகளும் இதில் அடங்கும்.
அதேபோல் மற்ற நாடுகள் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தொடர்பான தொழில்நுட்பங்களை ஈரானுடன் பகிர்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடைகளை அமல்படுத்துவதற்கான கடமைகளை ஐ.நா. உறுப்பு நாடுகள் நிறைவேற்றத் தவறினால் அவற்றுக்கான விளைவுகளை அந்த நாடுகள் சந்திக்கும். ஒரு விரிவான ஒப்பந்தம் எட்டப்படும் வரை அமெரிக்கா ஈரானுக்கு எதிரான அதிகபட்ச அழுத்தத்தை தொடரும்.
எதிர்வரும் நாட்களில் ஐ.நா. பொருளாதார தடைகளை அமல்படுத்துவதை வலுப்படுத்தவும், அதை மீறுபவர்களை பொறுப்புக்கூற வைக்கும் பல கூடுதல் நடவடிக்கைகளை அமெரிக்கா அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சொலைமானியை கொன்ற நாடுகளை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு – கடுப்பான அமெரிக்கா
சொலைமானியை கொன்ற நாடுகளை தாக்குவோம் ஈரான் அறிவிப்பு – கடுப்பான அமெரிக்கா
ஈரான் இராணுவ தளபதியும் ,இரண்டாம் நிலை தலைவருமாக விளங்கிய
சொலைமானியை கொன்றவர்களை நாம் பழிவாங்குவோம் என ஈரான் அறிவித்திருந்தது ,
அதன் பிரகாரம் அது தனது தாக்குதல்களை அமெரிக்காவை நோக்கி
நகர்த்தி வருகிறது ,தொடராக இலக்கு வைக்க பட்டு அமெரிக்கா படைகள் தாக்க பட்டு வருகின்றன
அமெரிக்கா ஆளும் அதிபர் டிரம்பின் கடுமையான நடவடிக்கை காரணமாக
இந்த நகர்வு முன்னெடுக்க பட்டது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்
அவ்விதமான சூழலில் எமது இராணுவ ,மற்றும் கேந்திர நிலைகள் மீது
ஈரான் தாக்கினால் அதற்கு ஆயிரம் தடவை மேல் சென்று நாம் பெரும் தாக்குதலை நடத்துவோம் என அமெரிக்கா அறிவித்துள்ளது
அதற்க்கு பதில் வழங்கிய ஈரானின் புரட்சி படைகள் தளபதி நாம் பழிவாங்கியே
தீருவோம் எனவும் ,அவரை கொன்ற நாடுகளை தாக்குவோம் எனவும் சூளுரைத்துள்ளார்
இதனால் அமெரிக்கா தேர்தலை எதிர்கொண்டுள்ள டிரம்ப் ,ஈரான் வழங்க
போகும் இந்த தாக்குதல் ஊடாக பெரும் இழப்பை சந்தித்து தோல்வியை தழுவி செல்வார் என எதிர் பார்க்க படுகிறது
ஈரான் தாக்க போவது இராணுவ நிலைகளையா அல்லது ..? மக்களையா என்ற வினா எழுப்ப [படுகிறது
இதில் இராணுவ நிலைகளை தாக்கினால் மட்டுமே டிரம்புக்கு தோல்வியை
ஏற்படுத்த முடிவதுடன் மக்கள் எதிர்ப்பை டிரம்புக்கு எதிராக
திருப்பி விட முடியும் எனவே ஈரான் அதனையே செய்யும் என எதிர் பார்க்கலாம்
சீனா இந்தியா எல்லையில் பதட்டம் – குவிக்க படும் இராணுவம்
சீனா இந்தியா எல்லையில் பதட்டம் – குவிக்க படும் இராணுவம்
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது
,இதன் காரணாமாக இரு நாடுகளும் தமது இராணுவத்தை அந்த பகுதியில் குவித்து வருகின்றனர்
மேலும் உணவு பொருட்கள் என்பன பல மாதங்களுக்கு தேவையானவை
சேமிக்க ப்படும் வருகின்றன ,இவ்விதம் போர் ஒன்று மூண்டால்
அதில் இந்திய படைகள் படு தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்படும் என்றே அடித்து கூற படுகிறது
அமெரிக்காவுடனேயே முட்டி மோதும் சீனாவை இந்திய அடக்கிவியிட முடியாது என்பதும் ,அதன் ஆயுத பலத்திற்கு
இந்தியாவால் ஈடு கொடுக்க முடியாது போகும் என்பதும் கணிப்பாகிறது
இருவரும் போருக்கு சளைத்தவர்கள் அல்லர் என்ற நிலையினை உருவாக்குவதற்கே இந்த பதட்டம் ஏற்படுத்த படுவதாகவும் இதனை அவதானிக்க முடிகிறது
விமான குண்டு தாக்குதலில் 30 பேர் பலி – 50 க்கு மேற்பட்டோர் காயம்
விமான குண்டு தாக்குதலில் 30 பேர் பலி – 50 க்கு மேற்பட்டோர் காயம்
வடக்கு ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள தாலிபான் கிளர்ச்சி
படைகள் மீது அரச இராணுவ போர் விமானங்கள் திடீர் குண்டு தாக்குதலை நடத்தின
இதில் முப்பது மக்கள் படுகொலை செய்ய பட்டும் ஐம்பதுக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி தாக்குதலில் ஏழு போராளிகள் பலியாகியும் 11 பேர்
படுகாய மடைந்துள்ளதாக அரச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன
இலங்கை சிங்கள இராணுவத்தின் பொய் பரப்புரைகளில் ஒன்றாக இவை பார்க்க முடிகிறது







