Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
ஐந்தாயிரம் வருடம் பழமை வாய்ந்த பிரமிட் கண்டு பிடிப்பு
ஐந்தாயிரம் வருடம் பழமை வாய்ந்த பிரமிட் கண்டு பிடிப்பு
எகிப்தில் சுமார் ஐந்தாயிரம் பழமை வாய்ந்த பிரமிட் கண்டு பிடிக்க பட்டுள்ளது
,இதற்குள் இருந்த சடலம் மற்றும் ,பலகையிலான சைவ பெட்டிகள் என்பனவும் மீட்க பட்டுள்ளது
இவ்வாறு மீட்க பட்ட பல்கலைக்கழக ஆராய்ச்சியில் வைக்க பட்டு ஆய்வுகள்
இடம்பெற்று வருகிறது
இதே போன்று அண்மையில் நூற்றுக்கு மேற்பட்ட மம்மிகள் கண்டு பிடிக்க பட்டமை இங்கே குறிப்பிட தக்கது

ஈரான் தீவிரவாதத்திற்கு உதவுகிறது – கொதிக்கும் பிரிட்டன் எம்பி
ஈரான் தீவிரவாதத்திற்கு உதவுகிறது – கொதிக்கும் பிரிட்டன் எம்பி
ஈரானின் முக்கிய புரட்சி காவல் படையினர் உலகின் மிக முக்கிய தீவிரவாத
இயக்கங்களை ஒருங்கிணைந்து அதன் ஊடாக தனது எதிரிகளுடன் சமரிட்டு
வருகிறது எனவும் அதற்குரிய ஆயுதங்கள் மற்றும் பண உதவி என்பனவற்றை
ஈரான் செய்து வருவதாக பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் சிலர் கொதித்து பொங்கியுள்ளனர்
ஈரானுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் பனிப்போர் உச்சம் பெற்று வரும் நிலையில் இந்த முடிவுகள் அறிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
தேர்தலில் போட்டியிடும் சத்யராஜ் மகள்
தேர்தலில் போட்டியிடும் சத்யராஜ் மகள்
வருகிற சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய மகளுக்கு ஆதரவாக நடிகர் சத்யராஜ் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
தேர்தலில் மகளுக்கு ஆதரவாக களமிறங்கும் சத்யராஜ்
மகளுடன் சத்யராஜ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் சத்யராஜ். நடிகராக மட்டுமில்லாமல் சமூக செயற்பாட்டாளராகவும் குறிப்பாக திராவிட இயக்க சிந்தனைகளை பிரசாரம் செய்யும் பெரியாரின்
தொண்டராகவும் இருக்கக் கூடியவர். இவர் அரசியலில் இறங்க இருப்பதாகவும் வரும் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் சமூக வலைத்தளங்களில்
வெளியாகின. இதுகுறித்து நாம் அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு அவரும் அவர் மகள் திவ்யா சத்யராஜும் அளித்துள்ள விளக்கம் பின்வருமாறு,
என் குழந்தைகள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள தகப்பன் நான். என் மகளை தைரியமான பெண்ணாக வளர்த்து இருக்கிறேன். ஒரு ஊட்டச்சத்து நிபுணராக திவ்யாவின் வெற்றியை
நினைத்து பெருமைப்படுகிறேன். திவ்யாவின் அரசியல் பாதையிலும் ஒரு தகப்பனாகவும் நண்பனாகவும் என் மகளுக்கு
பக்கபலமாக இருப்பேன். நிச்சயமாக என் மகளுக்காக பிரச்சாரம் செய்வேன்.” இவ்வாறு சத்யராஜ் கூறினார்.
திவ்யா சத்யராஜ்
திவ்யா சத்யராஜ் கூறும்போது, அப்பா என் உயிர் தோழன் என் அரசியல் பாதையில் என்னுடன் கைகோர்த்து நிற்பார். ஆனால் ஒரு
முக்கியமான விஷயம், I am a selfmade independent person, சொந்த வளர்ச்சிக்காக ஒரு போதும் அப்பாவின் புகழை உபயோகிக்க மாட்டேன்’ என்று திவ்யா சத்யராஜ் கூறினார்.
சத்யராஜ் மகள் திவ்யா ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். இவர் கொரோனா நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க மகிழ்மதி” என்ற இயக்கத்தை
ஆரம்பித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன் மருத்துவ துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும் நீட் தேர்வை எதிர்த்தும் திவ்யா சத்யராஜ் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக
வலைதளங்களில் வைரல் ஆனது. கொரோனா நேரத்தில் பெரும் இழப்புகளை சந்தித்த விவசாயிகளுக்கு நேரடி நஷ்ட ஈடு வழங்க
வேண்டும் என்று திவ்யா விவசாயத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் திவ்யா சத்யராஜ் எந்த கட்சி சார்பாக போட்டியிட போகிறார் என்ற விவரத்தை வெளியிட இருக்கிறார்.

பிரிட்டனில் வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – உசார்
பிரிட்டனில் வாகன சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை – உசார்
பிரிட்டனில் வாகன சாரதிகள் மற்றும் உரிமம் பெற்றுக் கொள்ளும் நிறுவனமான
Driver and Vehicle Licensing Agency (DVLA) அவசர எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது
தமது நிறுவனத்தின் பெயரை பயன் படுத்தி இணைய மோசடி நபர்கள்
தாம் கோருவது போன்ற விண்ணப்பத்தை அனுப்பி மக்களின்
விபரங்களை சேகரித்து அதன் மூலம் மோசடியில் ஈடுபடுவதான குற்ற சட்டு முன் வைக்க பட்டுள்ளது
இவ்வாறான விண்ணப்பங்கள் கிடைக்க பெற்றால் தம்முடன் தொடர்பு கொண்டு உறுதி படுத்து மாறு வேண்ட படுகிண்றீர்கள்
உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உடனே விரைந்து அவர்களுக்கு தெரிய படுத்தும் படி வேண்ட படுகிறது ,தமிழர்களே எச்சரிக்கை
நடிகை சித்ரா தற்கொலை – கணவர் கைது
நடிகை சித்ரா தற்கொலை – கணவர் கைது
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – கணவர் ஹேம்நாத் கைது
பிரபல டி.வி. நடிகை சித்ரா கடந்த 9-ம் தேதி பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டி வந்தனர்.
சித்ராவை அவரது கணவரான ஹேம்நாத் அடித்து கொலை செய்ததாக தொடர்ந்து கூறி வந்தனர்.
இதற்கிடையே பிரேத பரிசோதனையில் நடிகை சித்ரா தற்கொலை செய்து தான் இறந்துள்ளார் என்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து சித்ராவின் கணவர் ஹேம்நாத்திடம் நசரத்பேட்டை போலீசார் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி
வந்தனர். இதில் அவர் தொடர்ந்து மாறுபட்ட தகவல்களை கூறி வருவதாக தெரிகிறது.
சித்ரா பயன்படுத்திய செல்போனை ஆய்வுக்கு அனுப்பி உள்ளனர். அதில் ஏதாவது முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார்
எதிர்பார்த்துள்ளனர்.
இதனால் இந்த விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
சித்ரா தற்கொலை விவகாரம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணையும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்
பிரிட்டனில் கொரனோ நோயினால் 232 பேர் மரணம்
பிரிட்டனில் கொரனோ நோயினால் 232 பேர் மரணம்
பிருத்தானில் இரண்டாம் அலியாக பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில்
சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 232 பேர்
பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது ,அதே போல அமெரிக்காவில் 1,130 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
எதிர் வரும் ஆறு மாதங்களில் இந்த நோயானது மிக அதிகமாக பரவும்
என்ற செய்தி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது
சீனா அடித்தால் திருப்பி அடிப்போம் – இந்தியா முழக்கம்
சீனா அடித்தால் திருப்பி அடிப்போம் – இந்தியா முழக்கம்
தலைநகர் டெல்லியில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒவ்வொரு நாடும் தங்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தொடர்ந்து தயாராகி வரும் நிலையில் நாம் எதிர்கொள்ளக் கூடிய
எந்தவொரு நிகழ்விற்கும் நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம் என்பதை நான் உங்களுக்கு உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
லடாக் எல்லையில் இந்திய ராணுவம் முழு அளவில் தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் எல்லைகளை காக்க முழு
உரிமை உள்ளது. முப்படைகளும் எந்த சூழலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளது என்றார்.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எந்த அச்சுறுத்தலையும்
எதிர்கொள்ள ராணுவம் தயார். வடக்கு எல்லையில் எந்த சவாலையும் ராணுவம் எதிர் கொள்ளும் என தெரிவித்தார்.
6 மாதங்களுக்கு கொரோனா தாக்கம் மிக மோசமாக இருக்கும் – உலக பணக்காரன் பில்கேட்ஸ் எச்சரிக்கை
6 மாதங்களுக்கு கொரோனா தாக்கம் மிக மோசமாக இருக்கும் – உலக பணக்காரன் பில்கேட்ஸ் எச்சரிக்கை
அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு கொரோனா தாக்கம் மிக மோசமாக இருக்கும் என்று பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த 6 மாதங்களுக்கு கொரோனா தாக்கம் மிக மோசமாக இருக்கும் – பில்கேட்ஸ் எச்சரிக்கை
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், உலகின் பெரும் பணக் காரர்களில் ஒருவர் ஆவார். பில் அண்ட் மெலிண்டா
கேட்ஸ் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையின் இணைத்தலைவராகவும் இருக்கிறார்.
கொரோனா தடுப்பூசிகள் உருவாக்கும் பணிக்கு இந்த அறக்கட்டளை நிதிஉதவி அளித்து வருகிறது.
இதுபோன்ற பெருந்தொற்று உலக அளவில் பரவும் என்று கடந்த 2015-ம் ஆண்டிலேயே பில்கேட்ஸ் கணித்திருந்தார். இந்தநிலையில்,
பில்கேட்ஸ் ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு கொரோனா தாக்கம், மிக மோசமாக இருக்கும். ஐ.எச்.எம்.இ. என்ற சுகாதார நிறுவனம், மேலும் 2 லட்சம்பேர் கொரோனாவுக்கு பலியாவார்கள் என்று கணித்துள்ளது.
ஆகவே, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிச் செய்தால், பெருமளவு உயிரிழப்புகளை தவிர்க்கலாம்.
கடந்த 2015-ம் ஆண்டு நான் கணித்தபோது, உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தேன். எனவே, இன்னும் அதிக
உயிரிழப்புகளை கொரோனா ஏற்படுத்தக்கூடும். கொரோனா இன்னும் மோசமான காலகட்டத்தை எட்டவில்லை. அடுத்த 4 முதல் 6 மாதங்களுக்கு உஷாராக இருப்பது நல்லது.
ஆனால், அமெரிக்காவிலும், பிற உலக நாடுகளிலும் நான் கணித்ததை விட கடுமையான பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கு எனது
அறக்கட்டளை ஏராளமான நிதிஉதவி அளித்து வருகிறது. அமெரிக்க அரசுக்கு அடுத்தபடியாக நாங்கள்தான் அதிக நிதிஉதவி அளித்து வருகிறோம்.
கொரோனா தடுப்பூசியை போடுவதில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இருந்தாலும், மனித குலம் முழுமைக்கும் அமெரிக்கா உதவ வேண்டும்.
உலக பொருளாதாரம் மீண்டுவர வேண்டும். கொரோனா பலி எண்ணிக்கையை குறைக்க வேண்டும். சர்வதேச ஒத்துழைப்பை தடுப்பது தவறு. அதனால், எல்லா கொரோனா தடுப்பூசிகளின் செயல்திறனையும் அதிகரிப்பது அவசியம்.
இனிவரும் மாதங்களில் மேலும் சில தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கிடைத்து விடும்.
முன்னாள் ஜனாதிபதிகள் கிளிண்டன், புஷ், ஒபாமா ஆகியோர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளனர். அதுபோல், என்னுடைய முறை வரும்போது, நான் வெளிப்படையாகவே தடுப்பூசி போட்டுக்கொள்வேன். மருத்துவ தேவை அடிப்படையில்தான் ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும். பணபலம் அடிப்படையில் கிடைக்கக்கூடாது.
கொரோனா பாதிப்பு, ஏற்றத்தாழ்வை அதிகரித்துள்ளது. கருப்பினத்தினரும், குறைந்த வருவாய் பிரிவினரும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அனைவருக்கும் சமமாக தடுப்பூசி கிடைக்க வேண்டும். தடுப்பூசி கிடைத்தாலும், இன்னும் 6 மாதங்களுக்கு எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும்.
ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பதால், அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் சிக்கலை சந்தித்துள்ளது.
இருப்பினும், புதிய அரசு, உண்மையான நிபுணர்களை சார்ந்து செயல்பட விருப்பம் தெரிவித்துள்ளது. அது எனக்கு திருப்தி அளிக்கிறது. ஆகவே, புதிய நிர்வாகத்தின்கீழ், அமெரிக்காவின் கொரோனா தடுப்பு செயல்பாடுகள் மோசமாக இருக்காது என்று கருதுகிறேன்.
இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார்
பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 144 பலி
பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 144 பலி
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 144 பேர்
கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
வழமையை விட இன்று அதிக உயிர்பலிகள் குறைவடைந்து காணப்படுகிறது
இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .இதேபோல அமெரிக்காவில் 892 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
பெண்ணை கடத்தி கற்பழித்த நபர் 22 வருடங்களின் பின் சிறை பிடிப்பு
பெண்ணை கடத்தி கற்பழித்த நபர் 22 வருடங்களின் பின் சிறை பிடிப்பு
அமெரிக்காவில் இருபத்தி இரண்டு வயது பெண்மணி ஒருவரை பாலியல்
உறவு புரிந்தார் என்ற குற்ற சாட்டில் நபர் ஒருவர் சுமார் 22 வருடங்கள் கழித்து மடக்கி பிடிக்க பட்டுள்ளார்
இவரது மரபணு சோதனையை வைத்தே இந்த குற்றவியல் நிரூபிக்க பட்டுள்ள நிலையில் தற்போது நீதி விசாரணைங்கள் முன்னெடுக்க பட்டு வருகிறது
400 மாணவர்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள்
400 மாணவர்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள்
நைஜீரியா நாட்டில் உள்ள ஆண்கள் பாடசாலை ஒன்றுக்குள் ஆயுதமுனையில்
புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த பள்ளிக்கூடத்தின் முக்கிய ஆவணங்களை
திருடினர் ,இவர்களை கண்ணுற்ற மாணவர்கள் பீதியடைந்து அருகில் உள்ள கட்டுக்குள் ஓடி மறைந்து கொண்டனர்
மாலை வேளையில் காடுகளுக்குள் பதுங்கிய சுமார் 408 மானவ்ரகள் வீடு திரும்பினார்
எனினும் மேலதிக 400 மாணவர்கள் வீடு திரும்பவில்லை ,இவர்கள் கடத்தி
செல்ல பட்டோ அல்லது கொன்று குவிக்க பட்டோ இருக்கலாம் என அஞ்ச படுகிறது
காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் இராணுவம் காடுகளுக்குள் தேடுதலில் ஈடுபட்டுள்ளது
கைபேசி மூலம் கொரோனா பரிசோதனை
கைபேசி மூலம் கொரோனா பரிசோதனை
கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை கண்டறிகிற உமிழ் நீர் அடிப்படையிலான ஸ்மார்ட் போன் பரிசோதனையை மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
உமிழ்நீர் அடிப்படையில் ஸ்மார்ட்போன் மூலம் கொரோனா பரிசோதனை
கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை 15 நிமிடங்களில் கண்டறிகிற உமிழ் நீர் அடிப்படையிலான ஸ்மார்ட் போன்
பரிசோதனையை அமெரிக்காவில் உள்ள துலேன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் சயின்ஸ் அட்வான்சஸ் பத்திரிகையில் கூறி இருப்பதாவது:-
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை போன்றே இந்த பரிசோதனை திறம்பட செயல்படுகிறது.இந்த ஸ்மார்ட் போன் இயங்குதளம்
எதிர்கால பயன்பாடாக அமையும் என்று நம்புகிறோம். கொரோனா பரிசோதனையை விரைவாக விரிவுபடுத்துவதற்கான திறனை
வழங்குகிறது. வழக்கமாக கொரோனா பரிசோதனைக்கு தொண்டை அல்லது மூக்கு சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. இதில்
உமிழ்நீர்தான் சேகரிக்கப்படுகிறது. ஆரம்ப நோய்த்தொற்றின்போது, உமிழ்நீரில் கொரோனா வைரஸ் இருக்கும்.
இந்த பரிசோதனைக்காக ஒரு சிப்பை உருவாக்கி உள்ளோம். இது சிஆர்ஐஎஸ்பிஆர்/கேஸ் 12 ஏ மூலக்கூறுகளை பயன்படுத்துகிறது.
இந்த சிப், ஸ்மார்ட் போன் அடிப்படையிலான புளோரசன்ஸ் மைக்ரோஸ்கோப்பில் இணைக்கப்படுகிறது. அதன்மூலம் உமிழ்நீர்
மாதிரியில் உள்ள வைரஸ் மரபணு பொருளை சிறப்பாக கண்டறியலாம், 15 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறிந்து விடலாம்.
அமெரிக்காவில் கொரனோ தணடவம் -2,286 பேர் பலி -215,956 பாதிப்பு
அமெரிக்காவில் கொரனோ தணடவம் -2,286 பேர் பலி -215,956 பாதிப்பு
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில்
சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார்
2,286 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 215,956 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் 27,523 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க
பட்டுள்ளது ,வரும் நாட்களில் இறப்பு விகிதம் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது
பிரிட்டனில் கொரனோ பரவலில் -500 பேர் பலி -21,502 பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ பரவலில் -500 பேர் பலி -21,502 பாதிப்பு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில் சிக்கி கடந்த
இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 500 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 21,502 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவர்களுடன் 2,884 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக சுகாதார
அமையு அறிவித்துள்ளது ,லண்டன் பகுதி சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்ட
பகுதியாக அறிவிக்க பட்டுள்ளது ,நோயின் தாக்குத்தல் அதிகரித்துள்ள
நிலையில் ,பாடசாலைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
அமெரிக்கா விமானங்களை துரத்தி கண்காணிக்கும் ஈரான் – சுட்டு வீழ்த்த படுமா ..?
அமெரிக்கா விமானங்களை துரத்தி கண்காணிக்கும் ஈரான் – சுட்டு வீழ்த்த படுமா ..?
அமெரிக்கா இராணுவத்தின்பி 52 ரக போர் விமானங்கள் ,பாரசீக வளைகுடா
பகுதியில் பறப்பில் ஈடுபட்டுள்ளன ,அவை அங்கிருந்து ஈரானுக்குள் பறந்து
அணுஉலைகள் மீது தாக்குதல் நடடத கூடும் என்பதல் அதனை தொடராக
தாம் கண்காணித்து வருவதாகவும் ,அத்துமீறி நுழைந்தால் உடனடியாக
சுட்டு வீழ்த்த படும் என ஈரான் முக்கிய வான் காப்பு படைப்பிரிவின் தளபதி தெரிவித்துள்ளார்
இந்த அறிவிப்பை அடுத்து அமெரிக்கா விமானங்கள் சுட்டு வீழ்த்த படும் நிலை ஏற்பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது
தென் கொரியாவில் குவிக்க படும் 40,000 அமெரிக்கா இராணுவம்
தென் கொரியாவில் குவிக்க படும் 40,000 அமெரிக்கா இராணுவம்
வடகொரியா தனது ஏவுகணை சோதனையைம தொடராக நடத்தி வரும் நிலையில் மேலதிகமாக அமெரிக்கா படைகளை தென்
கொரியாவில் தரித்து வைக்க தென்கொரியா ஒப்புதல் அளித்துள்ளது ,இதனை அடுத்து மிக முக்கிய பன்னிரண்டு
படைப்பிரிவுகளை சேர்ந்த நாற்பது ஆயிரம் அமெரிக்கா இராணுவத்தினர் அவசரமாக குவிக்க படுகின்றனர்
இந்த இராணுவ குவிப்பின் பின்னர் வடகொரியா தனது ஏவுகணை
சோதனையை நிறுத்தி விடுமா என்றால் அது இல்லை என்றே பதில் கிடைக்கும்
அமெரிக்காவும் மிரட்டி பார்க்கிறது .ஆனால் வளைந்து கொடுக்க மறுத்து தமது
உயர் மட்டங்களில் முக்கிய மாற்றங்களை புரிந்துநாட்டின் பாதுகாப்பை இறுக்கி செல்கிறது வடகொரியா தலைமை
90 தாலிபான்கள் சுட்டு படுகொலை – தொடரும் இராணுவ வேட்டை
90 தாலிபான்கள் சுட்டு படுகொலை – தொடரும் இராணுவ வேட்டை
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரச இராணுவத்திற்கும் தலிபான் போராளிகளுக்கும்
இடையில் கடும் சண்டை இடம்பெற்றுள்ளது ,இந்த தாக்குதலிகள் சிக்கி 90
தாலிபான்கள் படுகொலை செய்ய பட்டும் ஒன்பதுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக்கி அரச இராணுவம் தெரிவித்துள்ளது
இராணுவத்தினரின் முகம் மீது நடத்த பட்ட தற்கொலை
தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
தை மாதம் முதல் பிரிட்டனில் புதிய மாற்றங்கள்
தை மாதம் முதல் பிரிட்டனில் புதிய மாற்றங்கள்
ஐரோப்பிய ஒன்றியத்துடன் எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரிட்டன் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் முடிவு எப்படி இருந்தாலும் பெரிய மாற்றங்கள் நடக்கும்.
பிரெக்சிட் காலக்கெடு முடிகிறது… புத்தாண்டு முதல் பிரிட்டன் மக்களுக்கு காத்திருக்கும் பெரிய மாற்றங்கள்
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து எதிர்கால வர்த்தக ஒப்பந்தம் செய்தோ, ஒப்பந்தம் இல்லாமலோ பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்த காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எந்தவித ஒப்பந்தமும் இன்றி பிரிட்டன் வெளியேறும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா மற்றும் கனடாவை போன்று வர்த்தக ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் விரைவில் தீர்வு காண இருப்பதாகவும் கூறினார்.
இதன்படி வரும் ஜனவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் முற்றிலுமாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இனி ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் சரி, பேச்சுவார்த்தை நடக்காவிட்டாலும் சரி, ஜனவரி 1ம் தேதி முதல் சில மாற்றங்கள் நடக்கும்.
ஐரோப்பிய ஒன்றியம், சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளுக்கான பயண விதிகளில் ஜனவரி 1 முதல் மாற்றம் இருக்கும் என்று அரசு எச்சரித்துள்ளது.
குறிப்பாக, 2021ஆம் ஆண்டில் திட்டமிட்ட பயணங்களுக்கு, பாஸ்போர்ட்களை சரிபார்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அவர்களின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்காமல், பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணிக்க முடியாமல் போகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்லும் பிரிட்டிஷ் பயணிகள் தங்களின் பாஸ்போர்ட்டுகள் தங்குவதற்கான உத்தேச காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும்.
புத்தாண்டு தினத்திலிருந்து, ஐரோப்பிய ஒன்றிய பகுதிக்கு வரும் பிரிட்டன் மக்களும் நாடு திரும்புவதற்கான டிக்கெட் அல்லது
அடுத்த பயணத்திற்கான டிக்கெட்டைக் காட்ட வேண்டும். அவர்கள் தங்குவதற்கு போதுமான பணம் இருப்பதையும் உறுதி செய்ய
வேண்டும். வரிசையில் நிற்கும்போது ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களிடமிருந்து தனி பாதைகளைப் பயன்படுத்த வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் 90 நாட்களுக்கு மேல் தங்குவதற்கு திட்டமிட்டுள்ளவர்கள், தங்களின் விசா அல்லது அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.
தற்போது, கொரோனா கால கட்டுப்பாடுகள் இருப்பதால், பிரிட்டன் பயணிகள் ஜனவரி 1 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு
வருவதற்கு தடை விதிக்கப்படுமா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
குறைவான கொரோனா பாதிப்பு உள்ள ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளிலிருந்து மட்டுமே, அத்தியாவசியமற்ற பயணம், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.
பிரெக்சிட் காலக்கெடு முடிந்ததும், ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சுதந்திரமாக பயணம் செய்வதற்கு அனுமதிக்கும் விதிகள் பிரிட்டன் மக்களுக்கு பொருந்தாது.
ஜனவரி 1 முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பிரிட்டன் குடிமக்கள் இறைச்சி, பால் அல்லது அவற்றைக் கொண்ட
தயாரிப்புகளை எடுத்துச் செல்ல முடியாது. குழந்தைகளுக்கான பால் பவுடர், பால் போன்ற சில பொருட்களுக்கு மட்டும்
விதிவிலக்குகள் அளிக்கப்படும். இன்னும் பல்வேறு விதிமுறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஐரோப்பிய யூனியனை விட்டு வெளியேறியதால் பிரிட்டன் சாதகப் பலன்களை அடைய முடியாது என்று ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் ஏற்கெனவே எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.
பைடன் வெற்றியை எதிர்த்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி- டிரம்புக்கு பின்னடைவு
பைடன் வெற்றியை எதிர்த்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி- டிரம்புக்கு பின்னடைவு
டெக்சாஸ் உள்பட 17 மாநிலங்களில் ஜோபைடன் வெற்றியை எதிர்த்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதால் டிரம்புக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பைடன் வெற்றியை எதிர்த்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி- டிரம்புக்கு மேலும் பின்னடைவு
அமெரிக்க அதிபர் தேர்த லில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோபைடன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
குடியரசு கட்சி வேட்பாளரான தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார்.
ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி டிரம்ப் தனது தோல் வியை ஏற்க மறுத்து வருகிறார். மேலும் பல்வேறு
மாநிலங்களில் ஜோபைடன் வெற்றியை எதிர்த்து கோர்ட்டுகளில் டிரம்ப் தரப்பினர் வழக்குகளை தொடர்ந்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு பென்சில்வேனியா மாநில தேர்தல் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி
செய்தது. இந்த நிலையில் டெக்சாஸ் உள்பட 17 மாநிலங்களில் தேர்தல் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்திருக்கிறது.
தேர்தலில் முறைகேடு நடந்ததற்கான போதுமான ஆதரங்கள் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
சுப்ரீம் கோர்ட்டில் டிரம்ப் தரப்பினர் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது டிரம்புக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்- மத்திய அரசு
விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்- மத்திய அரசு
மாவோயிஸ்டுகளில் ஒரு பிரிவினர் விவசாயிகளின் போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்த திட்டமிட்டு
இருப்பதாகவும், எனவே விவசாயிகள் போராட்டத்தில் எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்- மத்திய அரசு எச்சரிக்கை
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இன்று (சனிக்கிழமை) 17-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இதுவரை நடைபெற்ற 5 பேச்சுவார்த்தைகளில் சுமூக முடிவு எட்டப்படவில்லை.
இதற்கிடையே 3 சட்டங்களிலும் தேவையான திருத்தங்கள் செய்ய தயார் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் விவசாயிகள் தரப்பில் சட்டங்களை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.
தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்த பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில்
இருந்து மேலும் விவசாயிகளை திரட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி நேற்று சுமார் 50 ஆயிரம் விவசாயிகள் டெல்லி எல்லைக்கு புறப்பட்டு சென்றனர்.
டெல்லியை நோக்கி நூற்றுக்கணக்கான டிராக்டர்களில் விவசாயிகள் மீண்டும் திரண்டு வந்ததால் நேற்று இரவு முதல்
பதட்டமான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து டெல்லி எல்லை பகுதிகளை போலீசார் சீல் வைத்துள்ளனர். பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் டெல்லிக்குள் ஊடுருவாமல் இருப்பதற்காக எல்லையில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வருகிறார்கள். குர்கான் எல்லை பகுதியில் 2,500 போலீசார் கூடுதலாக
நிறுத்தப்பட்டுள்ளனர். அதுபோல பரீதாபாத் எல்லை பகுதியில் சுமார் 4 ஆயிரம் போலீசார் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
அரியானா மாநிலம் வழியாக வரும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக போலீசார் இந்த ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.
இந்தநிலையில் இன்று விவசாயிகள் டெல்லிக்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் விவசாயிகளால்
முற்றுகையிடப்பட்டன. குறிப்பாக டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அதுபோல சுங்க சாவடிகளையும் விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் இன்று மேலும்
தீவிரம் அடைந்துள்ளது. விவசாயிகள் தொடர்ந்து போராடுவோம் என்று மத்திய அரசை எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையே 3 விவசாய சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பலர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று பாரதீய கிஷான் யூனியன் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தொடரப்பட்டது. விவசாய சட்டங்கள் தொடர்பாக விசாரணை நடைபெறும் போது தங்களது தரப்பு கருத்துக்களை கேட்க வேண்டும் என்று விவசாய அமைப்பு தெரிவித்து உள்ளது.
வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
எனவே அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் போது பாரதீய கிஷான் அமைப்பு சார்பில் புதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெறாவிட்டால் அடுத்தக்கட்டமாக ரெயில் மறியல் போராட்டத்தை நடத்துவோம் என்று விவசாயிகள் அறிவித்துள்ளனர். இதனால்
விவசாயிகள் போராட்டம் திசை திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்குள் சமூக விரோத சக்திகள் புகுந்து இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. மாவோயிஸ்டுகளில் ஒரு பிரிவினர் விவசாயிகளின்
போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே விவசாயிகள் போராட்டத்தில் எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்தை சமூக விரோத சக்திகள் திசை திருப்பி கொண்டு செல்லும் அபாயம் இருப்பதாக மத்திய உள்துறைக்கு உளவு அமைப்புகளும் தகவல் கொடுத்து எச்சரித்து உள்ளன.
இதையடுத்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று காலை பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை
நடத்தினார். விவசாயிகள் போராட்டம் நடைபெறும் டெல்லி எல்லை பகுதிகளில் எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஆய்வு செய்தார்.
விவசாயிகள் மத்தியில் அரசியல்வாதிகள், மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் நுழைந்திருக்கிறார்களா என்பது பற்றியும் அவர் கேட்டறிந்தார். இதையடுத்து டெல்லியை இணைக்கும் பஞ்சாப்,
அரியானா, உத்தரபிரதேசம் எல்லை பகுதிகளில் கண்காணிப்பையும், பாதுகாப்பையும் மேலும் தீவிரப்படுத்த அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
அமித் ஷா போன்றே மத்திய உணவு, ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயலும் விவசாயிகள் போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் ஊடுருவி இருப்பதாக எச்சரித்துள்ளார். அவர் கூறுகையில்,
“விவசாயிகள் தரப்பில் பேசிய சிலர் வேளாண் சட்டம் மட்டுமின்றி வேறு சில விவகாரங்களையும் பேசுகிறார்கள். சர்ஜில் இமாம் என்பவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
விவசாயிகள் எதற்காக இமாமை விடுதலை செய்ய கோரிக்கை விடுக்கிறார்கள். இதை ஏற்க இயலாது. இத்தகைய கோரிக்கை
வைத்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. எனவே விவசாயிகள் கவனமாக இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தி உள்ளார்.
மத்திய அரசு தெரிவித்துள்ள இந்த எச்சரிக்கையை ஏற்க விவசாயிகள் மறுத்து உள்ளனர். போராட்டம் நடைபெறும்
இடங்களில் மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் உள்பட எந்த சமூக விரோத அமைப்பும் ஊடுருவவில்லை என்று விவசாய சங்க தலைவர்கள் கூறி உள்ளனர்.
டெல்லி புறநகர் பகுதிகளில் தங்கி இருக்கும் விவசாயிகள் அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேச வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.







