Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
சிங்கள அரசு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை கண்டு அஞ்சுகிறது – உருத்திரா முழக்கம்
சிங்கள அரசு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை கண்டு அஞ்சுகிறது – உருத்திரா முழக்கம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் தொடர்பு இருக்கின்றதா என சிங்கள தரப்பு கேள்வி கேட்பது என்பது இந்த பத்து ஆண்டுகள்
கழித்தும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீதான அச்சத்தையே வெளிக்காட்டுவதாக அமைகின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனிடம் மேற்கொள்ளப்பட்ட சிங்கள ஊடக செவ்வியொன்றில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடனாக அவரது தொடர்பு குறித்து சமீபத்தில் துலவித்துலவி கேட்கப்பட்டிருந்தது.
அது தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால்
நினைவேந்தல் வார சிறப்பு அமர்வின் போதே, தனதுரையில் இந்த கருத்தினை வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
சிங்களத்தின் இந்த அச்சம் என்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டை அது அவதானித்து வருவதனையே வெளிப்படுத்தவதாக அமைகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழர் பொதுவெளியில் சர்சையினை ஏற்படுத்தியுள்ள அந்த செவ்வியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பில் உரையாட்ப்பட்ட விடயம் பின்வருமாறு அமைகின்றது :
கேள்வி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சுமந்திரனுக்கு தானே புலம் பெயர் புலிகளுடன் அதிகமான தொடர்புகள் உள்ளன?.
பதில் – புலம்பெயர் புலிகளுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.
கேள்வி – ருத்ரகுமாரனுடன் உங்களுக்கு இருக்கும் தொடர்பு எப்படியானது.
பதி்ல் – அவருடன் தொடர்புகள் இல்லை.
கேள்வி – தொலைபேசி தொடர்புகள்
பதில் – ஓரிரு தடைகள் தொலைபேசியில் பேசி இருக்கின்றோம் தொடர்புகள் இல்லை.
ஆனால் புலம் பெயர் அமைப்புகள் சிலவற்றுடன் எனக்கு தொடர்புகள் இருக்கின்றன. புவுகு,டீவுகு,ஊவுஊ, யுவுஊ
ஆகியவற்றுடன் தொடர்புகள் உள்ளன. அந்த அமைப்புகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பணியாற்றும் அமைப்புகள்.
கேள்வி – ருத்ரகுமாரனுடன் எப்போது பேசினீர்கள் நினைவில் உள்ளதா?.
பதில் – நினைவில் இல்லை. 2016 அல்லது 2017 ஆம் ஆண்டு என்னுடன் ருத்ரகுமாரன் தொலைபேசி தொடர்புக்கொண்டு
கலிப்போர்னியாவில் உள்ள அவர்களின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுமாறு கூறினார். நான் அதனை மறுத்து விட்டேன்.
கேள்வி – ருத்ரகுமாரன் என்பவர் இலங்கைக்கு வெளியில் தனிநாடு தொடர்பான அமைப்புடன் தொடர்புடையவர் அவர் போன்ற நபருடன் ஏன் தொடர்புகளை வைத்துக்கொள்கிறீர்கள்?.
பதில் – தொடர்புகள் இல்லை. அவர் தமது நாடாளுமன்றத்தில் கலந்துக்கொள்ளுமாறு கோருகிறார். முடியாது என்ற பதில் அனுப்பினேன் அது மாத்திரம்தான்.
இவ்வாறு அந்தச் செவ்வியின் ஒரு பகுதி அமைந்திருந்தது.
கொழும்பில் சிக்கியுள்ள வட மாகாணத்தை சேர்ந்த மக்களை ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை –
கொழும்பில் சிக்கியுள்ள வட மாகாணத்தை சேர்ந்த மக்களை ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை –
வடமாகாணத்தில் ,ருந்து தென்பகுதிக்கு வந்து, கொரோனா-வைரஸ் பரவியதை
அடுத்து கொழும்பில் தங்க நேர்ந்துள்ளவர்களை சொந்த ஊர்களுக்கு
அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தெஹிவளை, ரத்மலான, கல்கிஸ்ஸ ஆகிய ,டங்களில் தங்கியிருந்த
மக்களை ஊருக்கு அனுப்பி வைக்கும் வேலைத்திட்டம் ,றுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
அவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனான கலந்துரையாடலின் போதே
இந்த கருத்து வெளியிட்டார். இது தொடர்பான கலந்துரையாடல் பிரதமரின் விஜேராம இல்லத்தில் இடம்பெற்றது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டர்களின் எண்ணிக்கை 889 ஆக உயர்வு
இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய தொற்று நோயியல் பிரிவு நேற்றிரவு 11.30 இற்கு விடுத்த அறிக்கையின்
பிரகாரம் கொரோனா தொற்றுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவோரின்
எண்ணிக்கை 514 ஆகும். மொத்தமாக 366 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். ஒன்பது பேர் நோய்க்குப் பலியாகியுள்ளனர்.
அதேவேளை கொரோனா-தொற்றின் பின்னர் குணமடைந்து நேற்று 23 பேர்
வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிச் சென்றார்கள். இவர்கள் ஐடிஎச்,
வெலிகந்த, முல்லேரியா, இரணவில ஹோமாகம அரசினர் பொது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவார்.
கொரோனா-தொற்றின் பின்னர் குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை 52 ஆகும்.
வெள்ளை வேன் சம்பவம்-ராஜித சேனாரத்னவின் பிணை இரத்து
வெள்ளை வேன் சம்பவம்-ராஜித சேனாரத்னவின் பிணை இரத்து
வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர்
ராஜித சேனாரத்னவிற்கு நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த டிசம்பர்
மாதம் 30 ஆம் திகதி வழங்கப்பட்ட பிணை உத்தரவை கொழும்பு உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
தோட்டத் தொழிலாளர்களின் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு
தோட்டத் தொழிலாளர்களின் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 5000 ரூபா கொடுப்பனவில் ஏதேனும்
பிரச்சினை இருந்திருந்தால் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை
எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி உறுதி அளித்துள்ளார்.
இன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தின் கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்ற
விசேட கூட்டத்தில் அவர் உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில், கொவிட்-19
நோயைக் கட்டுப்படுத்துவதற்கும், மக்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கும் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் பற்றி ஆராயப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமைச்சர்
ஆறுமுகன் தொண்டமான், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்னாயக்க உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
நந்திக்கடல் புனரமைப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
நந்திக்கடல் புனரமைப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை
நந்திக்கடல் நாயாறு மற்றும் தொண்டமனாறு ஆகிய களப்புக்களை புனரமைக்கும் பணிகளை விரைவுபடுத்துவதற்கான
ஆலோசனைகள் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த களப்புக்களை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் கொவிட் 19 காரணமாக
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழல் புனரமைப்பு நடவடிக்கைகளில் தொய்வினை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நேற்று(12.05.2020) இடம்பெற்ற அதிகாரிகளுடனான
சந்திப்பின்போது, உடனடியாக புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை அமைச்சர் வழங்கியுள்ளார்.
குறிப்பாக, நாரா எனப்படும் நீர்வாழ் உயிரின ஆராய்ச்சி நிறுவனத்தின் அனுமதி, அகழப்படுகின்ற சேற்று மணலை
கொட்டுகின்ற இடத்தினை தெரிவு செய்து அங்கு கொட்டுவதற்கான சுற்றுச் சூழல் திணைக்களத்தின் அனுமதி மற்றும் வனவிலங்கு
பாதுகாப்பு திணைக்களம், கரையோர பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான
நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் தலைமைகளின் அக்கறையீனம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் எதுவும்
மேற்கொள்ளப்படாமல் உள்ள நாயாறு மற்றும் நந்திக்கடல் நீர் நிலைகளில் சுனாமி அனர்த்தத்தினால் கரையொதுக்கப்பட்ட
பெருமளவு ஆழ்கடல் பொருட்களும் மணல் படுக்கைகளும் தேங்கி கிடக்கின்றன.
இதன்காரணமாக குறித்த களப்பு பிரதேசத்தில் நீர்வாழ் உயினங்களின் உற்பத்தி குறைவடைந்து வருவதாக குறித்த
நீர்நிலைகளை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்ற பிரதேச மக்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு
வருப்பட்ட நிலையில் குறித்த களப்பு நீர் நிலைகளை புனரமைப்பு செய்வதில் அமைச்சர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார்.
குறித்த நீர்நிலைகள் இரண்டும் பூரணமாக புனரமைக்கப்படுகின்ற நிலையில் சுமார் 3000 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை
தொண்டமானாறு களப்பினுள் பழைய பாலம் ஒன்று விழுந்து காண்படுவதனால் அதனை அகற்றுவதற்கு தேவையான 20
மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால்
சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தகவல்களை மூடிமறைப்பதாக கடற்படை மீது குற்றச்சாட்டு
கொரோனா வைரஸ் தகவல்களை மூடிமறைப்பதாக கடற்படை மீது குற்றச்சாட்டு
கொரோனா வைரஸினால் பாதிக்கப்படும் கடற்படை வீரர்கள் தொடர்பான தகவல்களை சுகாதார அதிகாரிகளுக்கு வழங்குவதை இலங்கை கடற்படையினர் தவிர்த்து வருவதாக சில
ஊடகங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பு அமைச்சு முற்றாக மறுத்துள்ளது..
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்பில் இலங்கை கடற்படையின் முதலாவது கடற்படை வீரர் கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அடையாளங் காணப்பட்டதிலிருந்து வெலிசர
கடற்படை தளத்தில் கடையாற்றிய அனைத்து கடற்படை வீரர்களையும் பிசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தும் வகையில் கடற்படை தனது நடவடிக்கைகளை விஸ்தரித்தது.
இலங்கை கடற்படைக்குள் கொரோனா வைரஸ் பரவுவது தொடர்பான உண்மை நிலைமையை கடற்படை மூடிமறைப்பதாக சில இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களினால்
தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றாக மறுப்பதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன
தெரிவித்தார். இலங்கை கடற்படை உள்ளிட்ட முப்படை வீரர்கள் மத்தியில் ஏற்படும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கள் மற்றும் அது
தொடர்பில் முன்னெடுக்கப்படும் பரிசோதனை தொடர்பான தகவல்களை வழங்குவதில் வெளிப்படைத் தன்மையை கடைப்பிடிப்பதாக அவர் தெரிவித்தார்.
கடற்படைவீரர்களுடன் தொடர்பைப் பேணியோர்களை கண்டறியும் செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
இவர்களில் பிசிஆர் பரிசோதனைகள் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர் என அடையாளம் காணப்படுபவர்கள்
சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
எவ்வாறாயினும்இ வெலிசர கடற்படை தள வளாகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாம் நபர் அடையாளம் காணப்பட்டதிலிருந்துஇ பொது சுகாதார சேவைகள்
பிரதி பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் டாக்டர் பபா பலிஹவதனஇ சுகாதார அமைச்சின் தொற்று
நோய்களுக்கான வைத்திய நிபுணர் டாக்டர் திலங்க பதிரன மற்றும் கம்பஹா பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின்
அதிகாரி ஆகியோரின் பரிந்துரைகளைக்கு அமைய வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் இலங்கை கடற்படை மேற்கொண்டது.
இலங்கை கடற்படைஇ கம்பஹா பிராந்திய சுகாதாரபணிப்பாளர் பணிமனையின் மருத்துவ ஆலோசனைகளை கோரியுள்ள
அதேவேளைஇ அரசாங்கத்தால் பயிற்சியளிக்கப்பட்ட பொது சுகாதார பரிசோதகர்கள் கடற்படை தளத்தில் தங்கியிருந்து பணிகளை முன்னெடுத்தும் வருகின்றனர்.
நாடளாவிய ரீதியில் கடற்படை வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளில் வைரஸ் தொற்றுக்குள்ளான மற்றும்
தொற்றுக்குள்ளாகாத கடற்படை வீரர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் கொரோனா வைரஸ் தொடர்பிலான ஜனாதிபதி செயலணிஇ சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்இ
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகள் மற்றும் இலங்கை பொலிஸ்
ஆகியவற்றுக்கு இலங்கை கடற்படையினரால் சமர்ப்பிக்கப்படுகின்றன.
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட கடற்படைவீரர்கள் மற்றும் முன்னெடுக்கப்பட்டு வரும் பரிசோதனை செயல்முறை தொடர்பாக சுகாதார மற்றும் பொறுப்பான ஏனைய
அதிகாரிகளுடன் தொடர்புகளை பேணி தேவையான நடவடிக்கைகளை இலங்கை கடற்படை முன்னெடுத்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையானது ஒரு பொறுப்புவாய்ந்த அரச நிறுவனம் என்ற வகையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் அரசாங்க பொறிமுறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அந்த
அடிப்படையில் கொரானா வைரஸினால் பாதிக்கப்படும் மற்றும் பரிசோதிக்கப்படும் கடற்படை வீரர்கள் தொடர்பிலான சகல தகவல்களையும் கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பிலான
ஜனாதிபதி செயலணிஇ பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயக அலுவலகம்இ மாவட்ட பொது சுகாதார சேவைகள்
அலுவலகம் மற்றும் ஏனைய பொறுப்பான அரசஅலுவலகங்கள் ஆகியவற்றுக்கு சமர்பிக்க கடமைப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
நாட்டில் வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கை கடற்படையினார் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி
வருவதாக தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்னஇ எனவேஇ இலங்கை கடற்படை கொரோனா
வைரஸ் தொற்று தொடர்பான எந்த தகவலையும் மறைக்காது என சுட்டிக்காட்டினார்.
செக்ஸ் படம் தயாரித்து வெளியிட்ட 4 தமிழ் வாலிபர்கள் கைது
செக்ஸ் படம் தயாரித்து வெளியிட்ட 4 தமிழ் வாலிபர்கள் கைது
இந்தியா தமிழகம் சென்னை பகுதியில் நான்கு இளம் வயது வாலிபர்கள்
வீடு ஒன்றில் செக்ஸ் படம் தயாரித்து வெளியிட்ட நிலையில் குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
19,18,மற்றும் 17 வயது உடைய நான்கு வாலிபர்களே இவ்விதம் கைது செய்யப் பட்டுள்ளனர் .
தமது கமராக்கள் மூலம் தமது அந்தரங்க விடயங்களை படம் பிடித்து அப்டியே இணையத்தில் வெளியீடு செய்துள்ளனர் ,அவளையே இவர்கள் சிக்கினர்
செக்ஸ் இணையதளங்கள் அனைத்தும் தீவிர கண்காணிப்பு உள்ளாக்க
பட்டுள்ளது ,இதில் யார் இவ்விதமான விடயங்கள் பதிவு செய்தாலும் அவர்கள் கைது செய்ய படுகின்றனர்
இதனை வெளிப்படையாக போலீசார் அறிவித்திருந்த நிலையில் இந்த கைது
இடம்பெற்றுள்ளது ,குக்கி என்பது உங்களை கண்காணிக்கும் செயல் பாடாகும் ,
நீங்கள் உங்கள் கணனியில் இருந்தோ ,அல்லது கைபேசியில் இருந்தோ
எதனை எல்லாம் பார்வை இடுகிண்றீர்கள் ,என்ன செய்கின்றீர்கள் என்பதை
குற்ற தடுப்பு பிரிவினர் கண்காணிக்கின்றனர் ,உங்கள் கடவு செல்லு முதல் அனைத்தும் அவர்கள் தெரிந்து வைத்து கொள்வார்கள்
இதன் ஊடாகவே உங்களுக்கு தெரியாது நீங்கள் கண்காணிக்க படுகிண்றீர்கள் என்பதாகும்
வாள்களுடன் சென்று வீட்டை அடித்து உடைத்த ரவுடிகள் கைது – படம் உள்ளே
வாள்களுடன் சென்று வீட்டை அடித்து உடைத்த ரவுடிகள் கைது – படம் உள்ளே
இலங்கை மாப்பிட்டிய பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டையர்கள்
வாள் ,மற்றும் மரக்கட்டை சகிதம் சென்று வீடு ஒன்றை அடித்து நொறுக்கினர் .
இதில் வீடு பலத்த சேதமடைந்துள்ளது
வீட்டை அடித்து உடைத்து விட்டு பதுங்கிய இருந்த குற்றவாளிகளை
போலீசார் கண்ணீர்புகை குண்டு வீசி இழுத்து சென்றனர்
மேற்படி சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

வாள்களுடன் சென்று 
பிரிட்டனில் ஒரே நாளில் 627 பேர் பலி -மீண்டும் அதிகரித்த மரணங்கள்
பிரிட்டனில் ஒரே நாளில் 627 பேர் பலி -மீண்டும் அதிகரித்த மரணங்கள்
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி கடந்த
இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 627 பேர் பலியாகியுள்ளனர் .
இதுவரை 32,692,பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 190 ஆயிரம் பேர் இந்த
நோயினால் பாதிக்க பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
கடந்த சில நாட்களின் வீழ்ச்சியடைந்த இந்த மாரணங்கள் திடீரென அதிகரித்துள்ளது
மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது
புலிகள் ஆயுத போராட்டத்தை மறுப்பவன் ஈழத்தமிழன் அல்ல- சிவமோகன்நெத்தியடி
புலிகள் ஆயுத போராட்டத்தை மறுப்பவன் ஈழத்தமிழன் அல்ல- சிவமோகன்நெத்தியடி
வவுனியா அலுவலகம்
12-5-2020
M.A. சுமந்திரன் அவர்களுக்கு பதில்.
கடந்தகால யுத்தம் தமிழர்களிடம் பலாத்காரமாக திணிக்கப்பட்டது. தேசியத் தலைவரின் தலைமையில் வீறு கொண்டு
எழுந்தது.அன்றைய காலத்தில் எத்தனை இனப்படுகொலையை எங்கள் இனம் சந்தித்திருக்கின்றது. 1956,1958,1977,1981, 1983ஜூலை என பல கலவரங்களை நாங்கள் சந்தித்துள்ளோம். துடிக்கத் துடிக்க
தாரிலே போட்டு கொலை செய்த வரலாறுகள் உண்டு. நிர்வாணமாக்கி நடுச் சந்தியில் விடப்பட்ட தமிழர்கள் தம்முடய மானம் காக்க ஒரு பஸ் நிலையத்தில் இருந்தபோது கூட மீண்டும்
அவர்கள் எரிக்கப்பட்ட வரலாறுகள் ஆதாரமாகக் இருக்கின்றது. கூட்டு குடும்பமாக காணாமல் ஆக்கப்பட்ட வரலாறுகள்
இருக்கின்றது.கொலை கொள்ளை சித்திரவதை என தமிழர்கள் பட்ட வேதனைகள் தான் சொல்லில் அடங்குமா?
அன்று அகிம்சையே அடக்கம் செய்யப்பட்ட இந்த நாட்டில் யுத்தம் பலாத்காரமாக தான் தமிழரிடையே புகுத்தப்பட்டது.
அப்படி இருக்க ஈழ விடுதலைப் போராட்டத்தையும் தேசியத்தலைவர் அவர்களின் அரசியல் ஆயுதப் போராட்டத்தையும்
எவராலும் மறுக்கமுடியாது. அதனை மறுப்பவன் ஒரு ஈழ தமிழன் என்று சொல்வதற்கு அருகதையற்றவன்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் கருத்து அவரின் தனிப்பட்ட கருத்தாகவே இருந்துவிட்டுப் போகட்டும். வன்னி மண்ணிலே வானில் இருந்து குண்டு வீசப்பட்டு
பங்கரிலேயே ஒரு நாள் கூட படுத்திருக்காதவர்களுக்கு விமர்சனம் செய்ய எந்த அருகதையும் இல்லை. யுத்தத்தில் சிதைந்துபோன கால்களை சத்திர சிகிச்சை மூலமாக அகற்றிய பின்னர்
மயக்கத்தில் இருந்து மீண்டெழுந்த அவர்கள் எங்கே என் கால் என்று கேட்கும் போது அதனை அகற்றிய டாக்டரின் மனம் படும் வேதனைகள் இவர்களுக்குப் புரியாது.
முள்ளிவாய்க்காலில் முழுமையாக தமிழினத்தை பறிகொடுத்த வேதனையை அனுபவிக்கும் வாரத்தில் இப்படி ஒரு வசனம் தனிப்பட்ட கருத்தாக கூட சுமந்திரன் அவர்களின் வாயில் இருந்து
வந்திருக்கக்கூடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தனி நபர்களின் சொத்து அல்ல தேசியத் தலைவரினால்
வடிவமைக்கப்பட்டது. தமிழரின் ஒற்றுமைக்காக அதைப் பாதுகாத்துக் கொண்டு செல்ல வேண்டியபொறுப்பு ஒவ்வொரு தமிழனின் வரலாற்று கடமை. தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள்
“வருபவன் வருவான் போறவன் போவான் போற்றுபவன் போற்றுவான் தூற்றுபவன் தூற்றுவான்”அதற்காக நாம் அனைவரும்
வரலாறு கடந்து எமது தமிழினத்தின் ஒற்றுமையை காக்க வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.என்று வைத்தி கலாநிதி சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்.

இலங்கை விமான சேவைகள் ஆரம்பம் – அதிரடி அறிவிப்பு
இலங்கை விமான சேவைகள் ஆரம்பம் – அதிரடி அறிவிப்பு
நாளை முதல் இலங்கை ,லண்டன் ,டோக்கியோ ,அவுஸ்ரேலியா ஆகிய
நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகள் ஆரம்பிக்க படவுள்ளன என இலங்கை அறிவித்துள்ளது
வைரஸ் நோயின் தாக்குதல் காரணமாக இடை நிறுத்த பட்ட விமான சேவைகள் இவ்விதம் ஆரம்பிக்க படவுள்ளன
விசேட விமானம் மூலம் -சென்னையில் இருந்து 320 இலங்கையர் நாடு திரும்பினர்
விசேட விமானம் மூலம் -சென்னையில் இருந்து 320 இலங்கையர் நாடு திரும்பினர்
சென்னையில் இலங்கைக்கு வருவதற்காக காத்திருந்த 320 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.
இன்று பிற்பகல் 12.35மணியளவில் வந்த இவர்களில் கர்ப்பிணி பெண்கள் சிலரும் அடங்கியிருந்தனர்.;
இவர்கள் அனைவரும் கிருமித்தொற்று நீக்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..
கொரனோ தாக்குதலில் சிக்கி 287,293 பேர் பலி
கொரனோ தாக்குதலில் சிக்கி 287,293 பேர் பலி
உலக நாடுகள் பூராக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை
2 லட்சத்து 87ஆயிரத்து ,293 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 4,2 லட்சத்து 54ஆயிரத்து ,800 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவிலே அதிகம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இங்கு கிட்ட தட்ட 15
லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் எழுபதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து நாள் தோறும் உயிர்பலிகள் அதிகரித்த வண்ணமே உள்ளது
4வது தொகுதி மருந்துப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு நன்கொடையளித்தது
4வது தொகுதி மருந்துப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு நன்கொடையளித்தது
அத்தியாவசியமான மருந்துப் பொருட்களின் 4வது தொகுதியை இந்தியா இலங்கைக்கு நன்கொடையளித்தது
இதுதொடரபாக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பினவருமாறு:
ஊடக வெளியீடு
அத்தியாவசியமான மருந்துப் பொருட்களின் 4வது தொகுதியை இந்தியா இலங்கைக்கு நன்கொடையளித்தது
கொழும்பிலுள்ள இந்தியப் பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் ஜேக்கப் அத்தியாவசியமான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களின்
நான்காவது தொகுதியை வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள்
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோரிடம் வெளிநாட்டு உறவுகள் அமைச்சில் வைத்து இன்று கையளித்தார்.
2020 மே 08 ஆந் திகதி சிறப்பு இந்திய விமானம் மூலம் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட சுமார் 12.5 டொன் எடையுள்ள
மருந்துகள் மற்றும் உபகரணங்கள் உள்ளடங்கிய இந்தப் பொருட்களின் தொகுதியானது, கோவிட்-19 தொற்றுநோய்க்கு
எதிராகப் போராடும் அண்டை மற்றும் பங்காண்மை நாடுகளுக்கு உதவுவதற்கான பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியைக் குறித்து நிற்கின்றது.
இந்தப் பொருட்களைக் கையளிக்கும் நிகழ்வைத் தொடர்ந்து, அரசியல், வர்த்தகம், சுற்றுலா, சுகாதாரம் மற்றும் பிராந்திய
விவகாரங்கள் போன்றவற்றிலான இருதரப்பு ஒத்துழைப்பினை மீளாய்வு செய்வதற்கானதொரு சுருக்கமான சந்திப்பிற்கு பிரதி உயர் ஸ்தானிகர் வெளிநாட்டு உறவுகள் அமைச்சரை அழைத்தார்.
பொதுவான சவால்களுக்கு முகங்கொடுக்கும் தற்போதைய காலகட்டத்தில், மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட முக்கியமான
வளங்களை நன்கொடைகளாகப் பகிர்ந்து கொள்வதிலான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை வெளிநாட்டு உறவுகள்
அமைச்சர் பாராட்டினார். தேசிய ரீதியாக நாடு முடக்கப்பட்டிருந்த நிலையிலும், இலங்கைப் பிரஜைகளை இந்தியாவிலிருந்து திருப்பி
அனுப்புவது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விரைவான நடவடிக்கைகளுக்காக அமைச்சர் குணவர்தன இந்திய அரசாங்கத்திற்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

கோட்டாவை வெல்ல வைக்க கூட்டமைப்பின் பலத்தை சிதைக்கும் – நாரதர் சுமந்திரன்
கோட்டாவை வெல்ல வைக்க கூட்டமைப்பின் பலத்தை சிதைக்கும் – நாரதர் சுமந்திரன்
இலங்கையில் எதிர்வரும் யூன் மாதம் பாரளுமன்ற தேர்தலை நடத்திட வேண்டும் என அடம் பிடிக்கிறார் கோட்டபாய .
அதற்கு இவர் வகுத்துள்ள நீண்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தமிழர் தரப்பாக விளங்கும் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்தை சிதைக்க வேண்டும்
அதற்கு என்ன செய்திட வேண்டும் என்ற திட்டமிடல் அடிப் படையில் சுமந்திரனை வைத்து இந்த நகர்வுகள் முன்னெடுக்க படுகின்றன
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிங்க மக்கள் வாக்கு வங்கியை அதிகரிக்க சுமந்திரனை வைத்தே கோத்தபாய விளையாடல்களை ஆரம்பித்தார் ,
இவர் கக்கிய சிங்கள பவுத்த இனவாத தூண்டுதலே ஒன்றுபட்டு சிங்கள மக்கள் வாக்குக்களை அள்ளி வீச காரணமாயிற்று
அவ்வாறே இம்முறையும் அதே பாணியில் கோட்டா வென்றிட இந்த நாரதர் சுமந்திரனை இவ்வாறு தமது நிருபர் ஒருவர் ஊடாக எழுதி கொடுக்க பட்ட கேள்விகளுக்கு இவ்விதம் பதில் வழங்கி ,
சிங்கள மக்களை உசுப்பேற்றுவது ,மறுபுறத்தே தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக தமிழர்களை திசை திருப்பி விடுவது ,ஒரு
எதிர்ப்பு அலையை உருவாக்கி விடும் நோக்கிலேயே சுமந்திரன் இந்த செயலை ஆற்றியுள்ளார்
இருந்து பாருங்கள் வரும் நாட்களில் அவர் இன்னுமொரு மறுப்பு பேட்டி வழங்குவார் அதில் பவுத்த சிங்கள பெரும்பான்மையை தூண்டி விடும் ,புலி எதிர்ப்பு வாதத்தை கக்குவார்
,அவை நடக்கும் ,அதை தான் யானை கட்சியின் வெற்றியை உடைத்து ,அதனை கவிழ்க்க கோட்டபாயவுடன் இரகசியாமாக
,எழுது முனை ஒன்றின் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்திய இவர் பல கோடிகளை வாங்கி கொண்டு இந்த ஏப்பம் இடலை புரிந்தார்
அதுபலவே இம்முறை நடக்கிறது, இதில் தமிழர்கள் உசாராக வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்குகளை அளிக்க வேண்டும் ,
ஆனால் ,சம்பந்தன் ,சுமந்திரனை அந்த கட்சியின் பதவிகளில் இருந்து அகற்றும் வேலைகளை புலம் பெயர் மக்கள் ,மற்றும்
,இலங்கை வாழ் தமிழ் மக்கள் முனைப்பு காட்ட வேண்டும் ,அழுத்தம் கொடுக்க வேண்டும் .
சுமந்திரனின் இந்த நயவஞ்ச செயலை இனம் கண்டு இவரை விரட்ட வேண்டும் ,தேர்தலில் தோற்றாலும் தான் தேசிய பட்டியல் மூலம்
ஆட்சியில் அமர்வேன் என்ற திமிர் தான் ,சுமந்திரன் இவ்விதம் புரிந்திட காரணம் .
தமிழ் தேசியம் ,அதன் உணர்வு அற்ற இந்த சிங்கள கலவை, இழி செயலானை மக்கள் ஓட ஓட விரட்ட வேண்டும் ,மிக நிதானமாக நடைபயில வேண்டும் .
நாம் மேலே சொன்ன இந்த விடயங்களை கொஞ்சம் முன்னோக்கி நகர்ந்து சென்று மீள் பார்வை செய்யுங்கள் ,அப்டியே இவரது அப்பட்ட சித்து விளையாடல்கள் புரியும் மக்களே .
நாம் தமிழராய் நிமிர் வோம் ,நமது எதிர்ப்பை ஒன்றித்து காட்டி வெல்வோம் .கயவர்களை வீட்டுக்குள் இருந்து வெளியேற்றுவோம் .
- வன்னி மைந்தன் –
இராணுவ மயமாகும் இலங்கை – தமிழர்களை துரத்தும் சிங்கள உளவுத்துறை
இராணுவ மயமாகும் இலங்கை – தமிழர்களை துரத்தும் சிங்கள உளவுத்துறை
இலங்கையில் தமிழின படுகொலையாளிகள் ஆட்சியில் ஏறினர் ,ஒன்று பட்ட நாட்டுக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி
,புலிகளினால் அடக்கி ஒடுக்க பட்ட தமிழர்களுக்கு அபிவிருத்திகளை
புரிந்து அவர்தம் வாழ்வில் ஒளியேற்றுவோம் என முழங்கினார்
அதற்காக இன ,மத பேதம் இன்றி மக்கள் ஆட்சி தொடரும் என சிவப்பு சால்வைகள் முழக்கமிட்டன ,
இவர்கள் பேச்சுக்களை மக்களும் நம்பிடத்தான் செய்தனர்
ஆனால் நடந்தது என்ன …? மக்கள் வீடுகள் முன்பாக சிங்கள உளவுத்துறையின்
நாடமாட்டம் ,வீடு சென்றே மிரட்டல் ,வெளியில் சொன்னால் கொலை
என தொடரும் சிங்கள இராணுவ வன்கொடுமை , அடக்குமுறைக்குள் மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர் .
செல்வந்தர்கள் ,அரசியல்வாதிகள் ,அவர்தம் ஆதரவாளர்கள் ,முன்னாள்
புலிப் போராளிகள் ,அவர்தம் தொடர்பாளர்கள் எனநீண்டு செல்கிறது பட்டியல்
அதுமட்டுமா ,,ஆளும் மக்கள் ஜனநாயக கட்டமைப்புக்குள் சிங்கள இராணுவ
அதிகாரிகள் நியமனம் ,இவை எதனை குறிக்கிறது ..?
மக்கள்
ஆட்சி தத்துவத்தை ஏற்றுள்ள இலங்கைக்குள் இன்று நடந்து கொண்டிருப்பது என்ன …?
கேள்வி கேட்பவன் கடத்த படுகிறார் ,அடக்க படுகிறான் ,அவன் கடத்தி முடக்க
படுகிறான் ,தொடரும் இந்த பவுத்த பேரினவாத சிந்தனைக்குள் சிக்கியுள்ள
கோத்தபாயவின் கொலை வெறி விரோதம் ,வஞ்சத்துடனேயே தமிழர்களை துரத்திய வண்ணம் உள்ளது
இதற்கு முடிவு கட்டுவது யார் ..?வாக்கு வங்கிகளை தமது பக்கம் வைத்துள்ள
மக்கள் தான் ,முடிவெடுங்கள் வரும் பாராளுமன்ற தேர்தலில் இவர்களை தோற்டியுங்கள் என்பதே நமது வாதமாகும் ,

தொலை பேசி பணபரிமாறலை பயன்படுத்தி பண மோசடி – மக்களுக்கு எச்சரிக்கை
தொலை பேசி பணபரிமாறலை பயன்படுத்தி பண மோசடி – மக்களுக்கு எச்சரிக்கை
கையடக்க தொலை பேசியை அடிப்படையாகக்கொண்ட பணபரிமாறலை
பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம்
பெறுவது தொடர்பில் பொது மக்கள் விழிப்புடனிருக்குமாறு பாதுகாப்;பு அமைச்சு பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏழு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்
ஏழு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்
ஏழு அமைச்சரவை அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய செயலாளர்களின் பெயர்களும் அமைச்சுக்களும் வருமாறு
- திருமதி எஸ்.எம். மொஹம்மட்
நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு - திரு. ஜே.ஜே ரத்னசிறி
பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு- திரு. எஸ். ஹெட்டியாரச்சி
சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சு - திரு. எச்.கே.டீ.டபிள்யு.எம்.என்.பீ. ஹபுஹின்ன
மகளிர், சிறுவர் விவகார மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சு - திருமதி ஜே.எம்.பீ. ஜயவர்த்தன
உள்ளக வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலன்பேணல் அமைச்சு - மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஏ.கே.எஸ். பெரேரா
மகாவலி, விவசாய, நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சு - மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க
சுகாதார மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு

கொரோனா நோயாளர்களில் 343 பேர் குணமடைந்துள்ளனர்- அரசு அறிவிப்பு
கொரோனா நோயாளர்களில் 343 பேர் குணமடைந்துள்ளனர்- அரசு அறிவிப்பு
கொரோனா நோயாளர்களில் 343 பேர் குணமடைந்து வைத்திய சாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இன்றைய தினத்தில் இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட
புதிய நோயாளர் எவரும் பதிவாகவில்லை என்று அரசாங்க தகல் திணைக்களம்
வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான 511 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இன்றைய தினத்தில் இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 863ஆகும்.
நேற்றைய தினத்தில் (2020.05.10) மேற்கொள்ளப்பட்ட Pஊசு பரிசோதனைகளின்
எண்ணிக்கை 1282 ஆவதுடன் இத்தினத்தில் அடையாளங்காணப்பட்ட
நோயாளர்களின் எண்ணிக்கை 16 ஆகும்.என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






