Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வெள்ளத்தில் சிக்கி 17 பேர் மரணம் – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
வெள்ளத்தில் சிக்கி 17 பேர் மரணம் – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்
.சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெறுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு மத்திய நிலையங்களில் 1,671 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். மாத்தளை, நுவரெலியா, பதுளை, களுத்துறை மாவட்டங்களில் பாதுகாப்பு மத்திய நிலையங்கள்
ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலையால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதனால் 17 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதுவரை ஒருவர் காணாமல் போயுள்ளார்.
சீரற்ற காலநிலையால் 5 பேர் காயமடைந்துள்ளார்கள். 18 சொத்துக்களுக்கு முற்றாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு 960 சொத்துக்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சீரற்ற காலநிலையால் 23 ஆயிரத்து 618 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
புத்தளம், முந்தல், மதுரங்குளி பிரதேசங்களில் உள்ள 25 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. வனாத்தவில்லு பிரதேசத்தில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் துரிதமாக நீர் நிரம்பி வருவதாக எமது செய்தியாளர்கள் அறிவித்துள்ளார்கள்.
கொழும்பு, கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொத்தட்டுவ புதிய நகரில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடொன்றின் அறை முற்றாகச் சேதமடைந்துள்ளது. புத்கமுவ கிராம
உத்தியோகத்தர் பிரிவில் உள்ள 42 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. கேகாலை, அறநாயக்க, அப்பெல்வத்த கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கு உட்பட்ட பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடொன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
இறம்புக்கணை மாவனல்லை வீதியில் மரமொன்று முறிந்து விழுந்தமையால் போக்குவரத்து நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளன. புத்தளம், கொழும்பு வீதியின் பாலாவி பிரதேசத்திலும், குருநாகல் புத்தளம் வீதியின் அரலியஉயன இரண்டாம் கட்டைக்குஅருகில் போக்குவரத்து
தடைப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அனுராதபுரத்தை நோக்கி வெளிநாட்டவர்களைச் சேர்ந்த பஸ் வண்டியொன்று பாலாவி பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறது.
நுவரெலியா, ஹட்டன் பிரதான வீதியின் பிளக்புல் பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் தடைப்பட்ட போக்குவரத்து தற்சமயம் வழமைக்குத் திரும்பியுள்ளது. மஹஓயா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதனால் பொல்கஹவெல பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட
தாழ்நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. வரகாபொல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் படகோட்டச் சென்றமையால் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். கேகாலை, இறம்புக்கணை,
புவக்மோட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டமையால் வீடு முற்றாகச் சேதமடைந்துள்ளது.
கம்பஹா, பியகம, யட்டவத்த கிராம செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் 25 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன. கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல, கம்பஹா, ஜாஎல பிரதேசங்களின் தாழ் நிலங்களில் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. களுத்துறை மாவட்டத்தின்
குடாகங்கை, புளத்சிங்கல, தொடங்கொட உட்பட களுத்துறை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட தாழ் நிலப்பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. கேகாலை,
கம்பஹா, கொழும்பு மாவட்டங்களின் களனிகங்கையை அண்டிய தெஹியோவிட்ட சீதாவக்க, தோம்பெ, பியகம, கொலன்னாவை, கொழும்பு, வத்தளை பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள தாழ்நிலங்களிலும் வெள்ளம் ஏற்படலாம்.
கம்பஹா, குருநாகல் மாவட்டங்களின் மஹஓயாவை அண்டிய கிரியுல்ல, அளவ்வ, மீரிகம, பன்னல, வென்னப்புவ, நீர்கொழும்பு, கட்டான ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள தாழ் நிலங்களில் வெள்ள அபாயம் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களமும், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் வழங்கும் எச்சரிக்கை அறிவித்தல்கள் பற்றி என்றும் கரிசனையாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பெண்ணை உலக்கையால் அடித்து கொன்று திருடிய தம்பதிகள் கைது
பெண்ணை உலக்கையால் அடித்து கொன்று திருடிய தம்பதிகள் கைது
இலங்கையில் குப்பை மேட்டு பகுதியில் இருந்து மீட்க பட்ட பெண்ணின் சடலம் தொடர்பாக குற்ற
புலனாய்வு துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்
மேற்படி பெண் அணிதிருந்த தங்க நகைகளை திருடிய கும்பல் அவரை அடித்து கொன்று குப்பை
மேட்டு பகுதியில் வீசியது தெரிய வந்துள்ளது
உலக்கையால் அடித்து கொலை செய்து ,ஆட்டோ ஒன்றில் பெண்ணின் சடலம் எடுத்து வரப்பட்டு
குப்பை மேட்டு பகுதியில் வீச பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
தம்பதிகளிடம் சந்தேகம் உற்ற காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் மேற்படி
விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது
ஆலயத்தில் சாமி சிலை திருட்டு – அதிர்ச்சியில் மக்கள்
ஆலயத்தில் சாமி சிலை திருட்டு – அதிர்ச்சியில் மக்கள்
இலங்கை கோணக்கலை- காவத்தை தோட்டத்தில் உள்ள, 50 வருடங்கள் பழமைவாய்ந்த
முருகன் சிலை ஒன்று திருட்டு போயுள்ளது
ஆலயத்திற்கு வழமை போன்று வழிபாட்டுக்கு சென்றவர்கள் மேற்படி சிலையை காணாது
திகைத்து போயினர்
இந்த சிலையை மீட்கும் பணியில் போலீசாரை ஈடுபட்டுள்ளனர்
பளை நோக்கி சென்ற் வாகனம் விபத்து -10 பேர் காயம்
பளை நோக்கி சென்ற் வாகனம் விபத்து -10 பேர் காயம்
யாழில் இருந்து பளைநோக்கி பாயணித்து கொண்டிருந்த வண்டி ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்
காலநிலை சீர்கேட்டினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க பட்டுள்ளனர்
கிளிநொச்சி பாடசாலைகளுக்கு விடுமுறை
இலங்கை
கிளிநொச்சி பாடசாலைகளுக்கு விடுமுறை
கிளிநொச்சி பகுதியில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாகவெள்ள பெருக்கு
ஏற்பட்டுள்ளதால் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அணைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
அளிக்க பட்டுள்ளது
இருளில் மூழ்கிய பல பகுதிகள் – மக்கள் அவதி
இலங்கை
இருளில் மூழ்கிய பல பகுதிகள் – மக்கள் அவதி
இலங்கை அடைமழை அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக நாடு தழுவிய ரீதியில் பல
பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன
மின்சார தடை ஏற்பட்டுள்ளதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது
வழமை போல மின்சாரத்தினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது
இலங்கையில் கோர விபத்து இருவர் மரணம்
இலங்கையில் கோர விபத்து இருவர் மரணம்
இன்று முதல் Meerigama-Pasyala வீதியில் இரு வாகனங்கள் நேரெதிர் மோதி சிதறியதில் சம்பவ
இடத்தில இருவர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது
இலங்கையில் டியூசன் வகுப்பு நடத்த அனுமதி
இலங்கையில் டியூசன் வகுப்பு நடத்த அனுமதி
இலங்கையில் பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பல இடைக்கால தடைகள் விதிக்க பட்டன
அதனை அடுத்து ,டியூசன் கற்கை நெறியும் நிறுத்த பட்டது , இப்பொழுது அவற்றை நடத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது
இலங்கையில் மீள பரவும் கொரனோ
இலங்கையில் மீள பரவும் கொரனோ
இலங்கையில் வேகமாக பரவி வந்த கொரனோ தளர்த்த பட்டு வந்த நிலையில் அதுவே மீளவும் உயிர் பெற்று அதிகரித்து செல்கிறது
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 1300 க்கு மேற்பட்டவர்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை
மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை
மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொண்டு வருகை
தந்துள்ளார்
இங்கு வருகை தந்த இவரால் இருநாடுகளும் இடையிலான வர்த்தகம் ,உறவு ,பாதுகாப்பு
தொடர்பில் பேசுவார் எனவும் புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திட படலாம் என எதிர் பார்க்க
படுகிறது
கைதிகளை வாரத்தில் 2 நாள் பார்க்க அனுமதி
இலங்கை
கைதிகளை வாரத்தில் 2 நாள் பார்க்க அனுமதி
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள கைதிகளை வாரத்தில் இரண்டு நாட்கள்
பார்வையிட விருந்தினர்களுக்கு அனுமதி வழங்க பட்டுள்ளது
இது கைதிகளுக்கு புது மகிழ்வை அளித்துள்ளது
இலங்கையில் கொரானாவுக்கு 15 பேர் மரணம்
இலங்கையில் கொரானாவுக்கு 15 பேர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த தினம் 15 பேர் பலியாகியுள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது .
மகளை கர்ப்பமாக்கிய தந்தை – சிசுவை கொன்று வீசிய கொடூரம்
மகளை கர்ப்பமாக்கிய தந்தை – சிசுவை கொன்று வீசிய கொடூரம்
பிறந்து மூன்று நாள்களேயான சிசுவின் சடலம், கிட்டங்கி ஆற்றங்கரைக்குள் வீசப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை (05) பொலிஸாரால் மீட்கப்பட்டது.
சம்மாந்துறைப் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, அம்பாறை மாவட்டத்தின் சொறிக் கல்முனை – சம்மாந்துறை பிரதான வீதியின் கிட்டங்கி ஆற்றில் இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென்னல் கிராமம் – 01 கிராம சேவையாளர் பிரிவில் வசித்துவரும் பக்கீர் தம்பி அஸ்பர் (வயது-41) என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
தனது 19 வயதுடைய மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டு பிறந்த சிசுவையே இவ்வாறு ஆற்றுக்குள் வீசியதாக கைதாகிய சந்தேகநபர், பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபருடன் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் மற்றும் அம்பாறை மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர், இராணுவத்தினர் ஒன்றிணைந்து வீசப்பட்ட சிசுவின் சடலத்தை மீட்டெடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான், உயிரிழந்து சிசுவை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
இதனையடுத்து, அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு சிசுவின் சடலம் எடுத்துச்செல்லப்பட்டது.
நாளாந்த கூலி தொழிலாளியான சந்தேக நபர், இரண்டு திருமணம் செய்தவர் என்பதுடன், தற்போது மனைவிமார்களுடன் இல்லாத நிலையில், முதல் திருமணத்தில் பிறந்த 19 வயதுடைய தனது மகள் மற்றும் இரண்டாவது திருமணத்தில் பிறந்த 2 பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்த நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை, சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூடப்பட்டுள்ள சகல பாடசாலைகளிலும் , இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை நாளை
மூடப்பட்டுள்ள சகல பாடசாலைகளிலும் , இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை நாளை
கொரோனா வைரசு தொற்றின் காரணமாக மூடப்பட்டுள்ள நாடு பூரகவும் உள்ள சகல பாடசாலைகளிலும் ,இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது.
இதற்கு அமைவாக தரம் 10,11,12 மற்றும் 13 தர வகுப்புக்களின் கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பமாவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பேரேரா தெரிவித்துள்ளார்.
சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளுக்கு அமைவாக மாணவர்களை, பாடசாலைகளுக்கு அனுபுவது பெற்றோரின் பொறுப்பாகும் என்றும்அவர் கூறினார்.
மாணவர்களும் ,இதுதொடர்பில் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும் பேராசிரியர் கபில பேரேரா தெரிவித்துள்ளார்.
தரம் 9 க்கு உட்பட்ட அனைத்து வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்
இதேவேளை, ஆரம்ப பிரிவுகளைக் கொண்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. சுகாதார சிபார்சு கிடைத்தவுடன் தரம் ஒன்றில் இருந்து
9 வரையான வகுப்புக்ககளை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார்.
பஸ் வான் மோதல் – சிலர் காயம்
பஸ் வான் மோதல் – சிலர் காயம்
இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காநிலையில் சிக்கி அரச பேரூந்து ஒன்றும் ,வான் ஒன்றும்
நேரெதிர் மோதின .
இதில் இரு வண்டிகளின் சாரதிகளும் படுகாயமடைந்துள்ளனர்
காலநிலை சீர் கேட்டினால இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
காலநிலை சீர் கேட்டில் சிக்கி ஐவர் மரணம்
காலநிலை சீர் கேட்டில் சிக்கி ஐவர் மரணம்
இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலை சீர்கேட்டில் சிக்கி இதுவரை ஐவர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்
வெள்ள பெருக்கில் சிக்கிய மக்கள் தற்காலிக தங்கும் இடங்களில் தங்க வைக்க பட்டுள்ளனர்
இலங்கையில் இருந்து பிரான்ஸுக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்
இலங்கையில் இருந்து பிரான்ஸுக்கு நேரடி விமான சேவைகள் ஆரம்பம்
இலங்கை கொழுப்பு விமான நிலையத்தில் இருந்து பிரான்ஸ் பரிசுக்கு நேரடி விமான சேவை ஒன்றை
Air France விமான சேவை ஆரம்பித்துள்ளது
இந்த சேவைகள் ஆரம்பிக்க படுவதால் பயணிகள் குஷியில் உறைந்துள்ளனர் ,
நேரடி விமான சேவைகள் பலது தடுக்க பட்ட நிலையில் மீள சேவை ஆரம்பிக்க பட்டுள்ளதால்
இலங்கையின் உல்லாச துறையில் பாரிய தாக்கத்தை இது ஏற்படுத்து என கூற படுகிறது
சாக்கில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
சாக்கில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு
இலங்கையில் முஸ்லீம் குடும்ப பெண் ஒருவர் கோரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் குப்பைகள் கொட்டும் பகுதியில் சாக்கு மூடையில் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் Fathima Mumtaz என்கின்ற ம் 44 வயதுடைய பெண்ணாகும் .
சாக்கில் இருந்து மீட்க பட்ட பெண்ணின் கணவர் இவர் தனது மனைவி என பெண்ணின் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.
கடலில் மிதந்த பெண்ணின் சடலம் வாலிபன் மாயம்
குறித்த பெண்ணின் கோர கொலை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
சூட்கேசில் பெண்ணின் சடலம் கொழும்பில் நடந்தேறிய பயங்கரம்
சாக்கு மூட்டையில் பெண் சடலமாக குப்பை மேட்டில் இருந்து மீட்க பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இந்த பெண் ஏன் இவ்வாறு கோரமாக கொலை செய்யப்பட்டார் என்கின்ற விடயம் உடனடியாக தெரியவரவிலை .
இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் – அமெரிக்கா கொதிப்பு
இலங்கையில் சீனாவின் இராணுவத்தளம் – அமெரிக்கா கொதிப்பு
இலங்கையில் சீனா இராணுவத்தின் பெரும் இராணுவ தளம் ஒன்றை அமைத்து வருவதாக
அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது
அதற்க்கான அணைத்து நகர்வுகளையு சீனா முடுக்கி விட்டுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது
இத்தகையை சீனாவின் நிலைப்பாடு இலங்கைக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்கும் என எதிர் பார்க்க படுகிறது
அம்பாந்தோட்டை துறைமுகஹை தமது கையக படுத்தியசீனா அது தனது நாடு போன்று உருவாக்காகி வருகிறது
குறிப்பிட தக்கது
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது ஊசி
60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது ஊசி
இலங்கையில் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்
மூன்றாவது தடுப்பூசி செலுத்த படவுள்ளது என அறிவிக்க பட்டுள்ளது
பரவி வரும் நோயின் பரவலை தடுக்கவும் ,உயிர்களை காப்பாற்றவும் இந்த நடவடிக்கை
முன்னெடுக்க பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது











