பொரளையில் துப்பாக்கி சூடு ஓருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

பொரளையில் துப்பாக்கி சூடு ஓருவர் மரணம்

பொரளையில் துப்பாக்கி சூடு ஓருவர் மரணம்

பொரளை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில்
ஆண் ஒருவர் பலியாகியுள்ளார் .

ஊந்துருளியில் பின் தொடர்ந்த மர்ம நபர்கள் திடீரென ,இவர் மீது திறந்த வெளிதுப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு, தப்பி சென்றுள்ளனர் .

பலத்த துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு உள்ளான அவர் ,
மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும்
சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .

இந்த படுகொலைகளுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

இலங்கையில் இவ்விதமான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,
அதிகரித்து செல்கின்ற பொழுதும் ,அதனை கட்டு படுத்த,
அரசு அதிக கவனம் செலுத்தவில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர் .

No posts found.
காணமல் போகும் மக்கள் போலீஸ் பாதுகாப்பு கோரும் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

காணமல் போகும் மக்கள் போலீஸ் பாதுகாப்பு கோரும் மக்கள்

காணமல் போகும் மக்கள் போலீஸ் பாதுகாப்பு கோரும் மக்கள்

மக்கள் காணாமல் போகும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் ,
பலாங்கொட பகுதியில் போலீஸ் சோதனை சாவடிகளை , அமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

சிறுவன் ஒருவன் காணாமல் போனதன் பின்னர் ,
சமீபத்தில் மேலும் ஒரு நபர் காணாமல் போயுள்ளார் .

மேலும் இலங்கை வடக்கு கிழக்கு பகுதிகளிலும் ,
பலர் காணாமல் போன வண்ணம் உள்ளதுடன் ,
வெள்ளை வான் ,மர்ம வாகனங்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .

நாடளாவிய நிலையில் இடம் பெறும் இந்த காணாமல் போன சம்பவத்தின் பின்னல் ,உள்ளது யார் ,அவரை ஏன் இலங்கை காவல்துறை கைது செய்யவில்லை என ,மக்கள் போலீசாரிடம் கேள்விகளை எழுப்பியுள்ளனர் .

மின்னல் தாக்கி ஒருவர் மரணம் கைபேசி சேதம்
Posted in இலங்கை செய்திகள்

மின்னல் தாக்கி ஒருவர் மரணம் கைபேசி சேதம்

மின்னல் தாக்கி ஒருவர் மரணம் கைபேசி சேதம்

மின்னல் தாக்கி ஒருவர் மரணம் ஒருவர் அவரது கைபேசி பலத்த ,
சேதமடைந்த நிலையில் காணப்படும் காட்சிகள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

இலங்கை பதுளை மொரான பகுதியில் நீர் அருவி அருகில் நின்று கொண்டிருந்த,நபரையே மின்னல் திடீரென தாக்கியது ,இந்த மின்னல் தாக்குதலில் அவர் சம்பவ இடத்தில பலியானார் .

அவர் பயன் படுத்திய கையடக்க தொலைபேசியை மின்னலை தாக்கி ,
அதன் ஊடக இவர் இறந்திருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

இலங்கையில் ஆண்டு தோறும் மின்னல் தாக்குதலில் சிக்கி, நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மரணமாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.
இளம் பெண் மாயம் தேடும் பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

இளம் பெண் மாயம் தேடும் பொலிஸ்

இளம் பெண் மாயம் தேடும் பொலிஸ்

இளம் பெண் ஒருவர் மயமாகியுளளார் ,இவ்வாறு காணாமல் போன பண்டாரவெளி, மணற்குளம்
பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

தரம் பத்தில் கல்வி கற்கும்மாணவியை கடந்த ,
இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளளார் .

மாயமான மாணவியின் பெற்றவர்கள் காவல்துறையில்,
வழங்கிய முறைப்பாட்டை அடுத்து
போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

இலங்கையில் இவ்வாறான காணாமல் போகும் சம்பவங்கள் ,
அதிகரித்த வண்ணம் உள்ளது மக்கள்
மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
ரசியாவுக்கு ஆயுத விற்பனை வடகொரியாவுக்கு கனடா மிரட்டல்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை புரிந்தது இனப்படு கொலை கனடா அறிவிப்பு

இலங்கை புரிந்தது இனப்படு கொலை கனடா அறிவிப்பு

இலங்கையில் நடந்தது இனப்படு கொலை என கனடா ,அறிவித்துள்ளதால்
இலங்கை கனடாவுக்கு இடையில் இராய தந்திர முறுகல் ஏற்பட்டுள்ளது

முள்ளி வாய்க்கால் தினநினைவு நாளில் கனடா நாட்டின் அதிபர் உரையாற்றும் பொழுதே
இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் .

இதனால் இலங்கை அரசு பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது ,
மகிந்த உள்ளிட்ட இராணுவ தளபதிகளுக்கு பயண தடை விதித்து,
அறிவித்த சில மாதங்களை அடுத்து,இந்த குண்டை இலங்கை நோக்கி எறிந்துள்ளது.

இதன் வெளிப்பாடு விரைவில் இலங்கை புரிந்தது இனப்படுகொலை,
என்பதாக சர்வதேச நீதி மன்றில்
நிரூபிக்கும் காலம் மலர போவதை இவை எடுத்து காட்டுகிறது .

மருந்துகளின் விலையை குறைக்க தீர்மானம்
Posted in இலங்கை செய்திகள்

மருந்துகளின் விலையை குறைக்க தீர்மானம்

மருந்துகளின் விலையை குறைக்க தீர்மானம்

அடுத்த வாரம் நாட்டில் மருந்து வகைகளின் விலைகளை 10 தொடக்கம் 15 வீதத்தால் குறைக்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர், பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

டொலரின் பெறுமதி குறைவடைவதற்கு ஏற்ப இவ்வாறு மருந்து வகைகளின் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மருந்து வகைகளின் விலைகளை குறைக்கக் கூடிய பெறுமானம் தொடர்பாக நிதி மற்றும் சுகாதார அமைச்சுக்களின் கணக்காளர் பிரிவுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மருந்துகளின் விலையை குறைக்க தீர்மானம்

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (17) பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற தேசிய நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

டொலரின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து மருந்து வகைககளின் விலைகள் கணிசமான அளவு அதிகரித்தன. எனவே, டொலர் பெறுமதி வீழ்ச்சியடைவதன் பயனை மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மருந்துகளின் விலையை குறைக்க தீர்மானம்

மருந்து விற்பனைக்காக களஞ்சியப்படுத்தப்பட்டுக் காணப்படும் விற்பனை நிலையங்கள் கட்டாயமாக குளிரூட்டி வைத்திருக்க வேண்டும். இதனால் மிக அதிகமான மின் கட்டணம் ஒன்றை செலுத்த வேண்டிய நிலையில் உள்ளதாக, மருந்து விற்பனையாளர்கள் கவலையடைவதாகக் கூறிய அமைச்சர் மருந்து விலையைக் குறைக்கும் போது இவ்விடயம் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்

தயார் நிலையில் இராணுவத்தினர்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவகடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு

இராணுவ கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு

தேசிய இராணுவ வீரர்கள் தின கொண்டாட்டத்துடன் இணைந்து இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, இலங்கை இராணுவத்தின் 402 அதிகாரிகளும், 3,348 இதர நிலைகளும் அவர்களின் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதேவேளை, இலங்கை கடற்படையின் 1,731 அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மாணவி மண்டை உடைத்த டீச்சர் - சிறையில் அடைத்த பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

மாணவிகளை கடத்த முயற்சித்த சந்தேகநபர்கள் அடையாளம்

மாணவிகளை கடத்த முயற்சித்த சந்தேகநபர்கள் அடையாளம்

தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, தலைமன்னார் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்பில், மூன்று சிறுமிகளும் சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளனர்.

முன்னதாக இந்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு, மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கான வழக்கு விசாரணை, மீண்டும் மன்னார் நீதவான் நீதிமன்றில் நீதிபதி கே.எல்.எம். சாஜூத் முன்னிலையில் நேற்று (18) அழைக்கப்பட்டு, சந்தேக நபர்களை அடையாளம் காட்டுவதற்காக நீதிமன்றம் மூடப்பட்ட நிலையில் அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது.

மாணவிகளை கடத்த முயற்சித்த சந்தேகநபர்கள் அடையாளம்

இதன்போது பாதிப்புகளுக்கு உள்ளான மூன்று சிறுமிகளும் இரு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர்.

நடைபெற்ற இவ் அடையாள அணிவகுப்பு ஒரே நேரத்தில் இரு சந்தேக நபர்களுடன் மேலும் 14 பேர் இந்த அணிவகுப்பில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நீதவான், முதலியார், ஆராய்ச்சி மற்றும் இவ் வழக்குக்கு முன்னிலையாகும் சட்டத்தரணிகள் மட்டுமே மன்றுக்குள் இருந்த நிலையில், இச் சிறுமிகள் சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளனர்.

கடந்த 11.05.2023 அன்று வியாழக்கிழமை மாலை, தலைமன்னார் கிராம பகுதியில் சிலுவை நகர் பகுதியில் வெள்ளை வேனில் சொக்கிலேற் மற்றும் பிஸ்கட் விற்பனைக்காக சென்றதாகக் கூறப்படும் இருவர், மூன்று சிறுமிகளுக்கு சொக்கிலேற் தருவதாக அழைத்து அவர்களை கடத்த முற்பட்டதையடுத்து, இவர்களை அக்கிராம மக்கள் பிடித்து, தலைமன்னார் பொலிஸில் ஒப்படைத்திருந்திருந்தனர்.

சந்தேகநபர்கள் சார்பாக சட்டத்தரணிகள் சர்மினி பிரதீபன், அர்ஜுன் அரியரட்ணம், ரூபன்ராஜ் டபேரா மற்றும் டெனிஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகினர்.

இந்த இரு சந்தேகநபர்களை எதிர்வரும் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

கிழக்கு ஆளுநர் செந்தில் கடமையை பொறுப்பேற்றார்
Posted in இலங்கை செய்திகள்

கிழக்கு ஆளுநர் செந்தில் கடமையை பொறுப்பேற்றார்

கிழக்கு ஆளுநர் செந்தில் கடமையை பொறுப்பேற்றார்

கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான், திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (19) உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர் வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர் வெட்டு

இன்று (19) இரவு முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (20) காலை 08.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.

கோட்டே மற்றும் கடுவெல நகரசபை பகுதிகளுக்கும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகரசபை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படும்.

அத்துடன் கொழும்பு 04, 05, 07 மற்றும் 08 ஆகிய இடங்களுக்கு இதே காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும்.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

சிறுவனின் கையில் கற்பூரம் கொளுத்திய பிக்கு
Posted in இலங்கை செய்திகள்

சிறுவனின் கையில் கற்பூரம் கொளுத்திய பிக்கு

சிறுவனின் கையில் கற்பூரம் கொளுத்திய பிக்கு

தீய சக்திகளை விரட்டுவதற்காக சிறுவனின் உள்ளங்கையில் கற்பூரத்தை எரித்து சிறுவனைப் பலத்த காயத்திற்கு ஆளாக்கிய பௌத்த பிக்கு ஒருவர் வீரவில பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரவில குட கம்மன பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனே இவ்வாறு தீக்காயத்திற்கு ஆளாகியுள்ளார்.

பெற்றோரால் கைவிடப்பட்ட குறித்த சிறுவன் தனது பாட்டியுடன் வாழ்ந்து வந்துள்ளார். பாட்டி சிறுவனுக்கு ஜாதகம் பார்க்க, அருகில் உள்ள வீரவில கங்காதிலேகா ராம விகாரையிலுள்ள ஜோதிடரும் பேயோட்டுபவருமான பிக்கு ஒருவரிடம் சிறுவனை அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுவனின் கையில் கற்பூரம் கொளுத்திய பிக்கு

சிறுவனின் ஜாதகத்தை வாசித்த பிக்கு சில மத சடங்குகளை செய்ததுடன் தீய கிரக தோஷங்களைப் போக்க வேண்டுமெனக் கூறி சிறுவனின் கையில் கற்பூரத்தை பற்ற வைத்துள்ளார்.

காயமடைந்த சிறுவன் தெபரவேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான பிக்கு திஸ்ஸமஹராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; கொழும்பில் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; கொழும்பில் பதற்றம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; கொழும்பில் பதற்றம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க சிலர் முயற்சித்ததால் கொழும்பில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு, பொரளையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது ‘புலிகளின் நினைவேந்தல் வேண்டாம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது. போராட்டம் காரணமாக பொரளை சுற்றுவட்டாரத்திற்கு அருகில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பூட்டிய பாடசாலைக்குள் கஞ்சா புகைத்தவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

2 பிள்ளைகளின் தந்தை பலி ;சித்தப்பா கைது

2 பிள்ளைகளின் தந்தை பலி ;சித்தப்பா கைது

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில்
13ம் இலக்க லயன் குடியிருப்புக்கு அருகாமையில் முச்சக்கர வண்டியில் இருந்து
விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தசம்பவம் 17.05.2023. புதன்கிழமை இரவு ஏழு மணியளவில் இடம்பெற்றதோடு
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் சித்தப்பா பொகவந்தலாவ
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .

2 பிள்ளைகளின் தந்தை பலி ;சித்தப்பா கைது

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரத்தினபுரி கல்லேல பம்பரலாங்கந்த
தோட்டத்தில் இருந்து பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில் உள்ள அவரது
சித்தப்பாவின் வீட்டுக்கு குறித்த நபர் நேற்றைய தினம் வந்திருந்த போது, குறித்த வீட்டில் இருந்து அவர்களுடைய உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் செல்லும் வழியில் முச்சக்கர வண்டியில் இருந்து தவறி விழுந்துள்ளதாகவும், விழுந்து உயிரிழந்தவர் மற்றும் முச்சக்கர வண்டியை செலுத்திய சாரதி ஆகியோர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் உயிரிழந்த நபர் இரத்தினபுரி கல்லேல பம்பரலாங்கந்த தோட்டத்தை சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மும்மூர்த்தி ரஞ்சன் என பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில்
தெரிய வந்துள்ளது.

முச்சக்கர வண்டியில் இருந்து விழுந்த நபரை பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு
கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

2 பிள்ளைகளின் தந்தை பலி ;சித்தப்பா கைது

சம்பவம் தொடர்பில் ஹட்டனில் இருந்து தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரனைகளை அரம்பித்துள்ளதோடு ஹட்டன் நிதீமன்ற பதில் நீதவான் நாராயணன் பாத்தீபன் தலைமையில் மரண விசாரணைகள் இடம் பெற்று சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைப்பு
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் இன்று (18) இடம்பெறும் 14 ஆவது ஆண்டு நினைவேந்தலில் அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில் தமது வீடுகளில் சுடர் ஏற்றி அஞ்சலிக்குமாறும் ஒருவேளை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வீடுகளில் பரிமாறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றவுள்ளதோடு ஏனைய உறவுகளுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு

6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு

கொஸ்லந்த பொலிஸ் பிரிவிலுள்ள பலஹருவ பிரதேசத்தில் நேற்று கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட காணி ஒன்றினை ஹப்புத்தளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு 6 அடி கொண்ட 225 கஞ்சா செடிகளை மீட்டு அழித்துள்ளனர்.

6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று மாலை குறித்த பிரதேசத்தில் கஞ்சா பயிரிடப்பட்ட காணியை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு, 15 பேச் நிலப்பரப்பில் 6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகளை பிடிங்கி அழித்ததுடன் அதில் ஒரு பகுதியை சட்டநடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

கொழும்பில் காணாமல் போன யாழ். இளைஞன்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் காணாமல் போன யாழ். இளைஞன்

கொழும்பில் காணாமல் போன யாழ். இளைஞன்


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல் போயுள்ளார்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.

இளைஞன் காணாமல் போனமை தொடர்பாக 2022.10.13 அன்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்தும், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என இளைஞனின் தாயார் சிவகுமார் காந்திமதி தெரிவிக்கின்றார்.

கொழும்பில் காணாமல் போன யாழ். இளைஞன்

மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த இளைஞன் அதற்குரிய சிகிச்சைகளையும் பெற்றுக்கொண்டிருந்தாக கூறும் தாயார், எழு மாதங்களாக தேடியும் குறித்த இளைஞனை கண்டுபிடிக்க இயலாத நிலையில் ஊடகங்களை நாடுவதாக தெரிவித்தார்.

குறித்த இளைஞன் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 077-5988204, 077-5547218 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது

மது கொடுத்து கொல்லச் சொன்னார் நான் கொன்றேன்
Posted in இலங்கை செய்திகள்

மது கொடுத்து கொல்லச் சொன்னார் நான் கொன்றேன்

மது கொடுத்து கொல்லச் சொன்னார் நான் கொன்றேன்

அவர் எனக்கு மதுபானப் போத்தல் ஒன்றைத் தந்து எனது கணவனைக் கொல்ல சொன்னார். அதனால் நான் அவரைக் கொன்றேன்” என முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் தனது தகாத உறவு மனைவியுடன் இணைந்து அவரின் கணவனைப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்று (17) மொரவக்க நீதவான் துமிந்த பஸ்நாயக்க முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள் என நீதவான் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊறுபொக்க தொலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதான ஜினதாஸ என்பவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். 33 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் அவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைக்கு சந்தேக நபருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதே குறித்த சந்தேக நபரால் இந்த உண்மைகள் முன்வைக்கப்பட்டன.

மது கொடுத்து கொல்லச் சொன்னார் நான் கொன்றேன்

இந்த சம்பவம் தொடர்பில் மொறவக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 69 வயதான இரு பிள்ளைகளின் தந்தையும் 83 வயதான பெண்ணும் நேற்று (18) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இது தொடர்பில் நீதவான் சந்தேக நபரிடம் வினவிய போது “ அவரால் தான் இந்தக் கொலையை செய்தேன். அவர் எனக்குக் குடிக்க கொடுத்து அவரைக் கொல்லச் சொன்னார். பின்பு புதைக்க வேண்டிய இடத்தையும் அவரே காட்டினார்” என தெரிவித்தார்.

இது தொடர்பில் மொறவக்க பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்ட ஜினதாசவின் மூத்த மகனும் மே மாதம் 11 ஆம் திகதி குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவித்திருந்தனர்.

உயிரிழந்த நபரான ஜினதாச புதைக்கப்பட்ட இடத்திற்கு கடந்த 15 ஆம் திகதி ஆய்விற்காக சென்ற போது, அவ்விடத்தில் கழிவறை கட்டப்பட்டிருந்ததுடன் அதை உடைத்து தோண்டிய போது சுமார் 9 அடி ஆழத்திலிருந்து உடல் உறுப்புகள் கிடைத்ததாக பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மது கொடுத்து கொல்லச் சொன்னார் நான் கொன்றேன்

புதைக்கப்பட்ட இடத்திலிருந்த உடல் உறுப்புகள் மற்றும் பொருட்கள், ​​ தனது கணவருடையது என சந்தேகநபர் அடையாளப்படுத்தியதாகவும், தனது கணவரை கொன்று புதைத்ததாக கூறி அவர் கதறி அழுததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம் சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் வழக்கை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தது.

69 வயதான எஸ். சோமதாச என்ற இரு பிள்ளைகளின் தந்தை மற்றும் அவருடன் தகாத உறவில் இருந்த பெண்ணான 83 வயதான றோசலின் என்ற இருவருமே இவ்வாறு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கோட்டா மீது குண்டுத்தாக்குதல்: LTTE பொறியியலாளர் விடுவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கோட்டா மீது குண்டுத்தாக்குதல்: LTTE பொறியியலாளர் விடுவிப்பு

கோட்டா மீது குண்டுத்தாக்குதல்: LTTE பொறியியலாளர் விடுவிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில், கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் வைத்து தற்கொலைத்தாக்குதல் நடத்தி, அவரை படுகொலைச் செய்வதற்கு சூழ்சிகளை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 17 வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பைச் சேர்ந்தவர் எனக் கூறப்படும் பொறியியலாளரான சிவலிங்கம் ஆரூரன் என்பவரே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, என்பவரால், நேற்று (16) விடுவிக்கப்பட்டார்.

கோட்டா மீது குண்டுத்தாக்குதல்: LTTE பொறியியலாளர் விடுவிப்பு

இந்த பொறியியலாளர் உதவி பொலிஸ் அதிகாரி சிசில் டி சில்வாவிடம் வாக்குமூலம் அளித்ததை தவிர எந்தவொரு சாட்சியமும் அவருக்கு எதிராக முன்வைக்கப்படவில்லை.

இதுதொடர்பில் முறைபாட்டாளர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிஸிட்ட ஜெனரல் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததை கவனத்தில் கொண்டு, சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் பொறியியலாளரான சிவலிங்கம் ஆரூரன் விடுவிக்கப்பட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷ, பயணித்த வாகன தொடரணியின் மீது கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் வைத்து, 2006 டிசெம்பர் 1ஆம் திகதி காலை 1.30 மணியளவில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தாக்குதலில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டு 14 பேர் படுகாயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்களில் சாதாரண பொதுமக்கள் ஏழு பேரும் அடங்கியிருந்தனர்.

இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .
Posted in இலங்கை செய்திகள்

பயணத்தடை நீக்கம்

பயணத்தடை நீக்கம்

கடந்த வருடம் மே 09 சம்பவத்தையடுத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் காஞ்சன ஜெயரத்ன ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டுள்ளது.

மூன்று புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்
Posted in இலங்கை செய்திகள்

மூன்று புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்

மூன்று புதிய ஆளுநர்கள் பதவிப்பிரமாணம்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் ஆகிய மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, வடமாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.