Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மாலியில் வெடித்த குண்டு இலங்கை இராணுவதினர் நால்வர் காயம்
மாலியில் வெடித்த குண்டு இலங்கை இராணுவதினர் நால்வர் காயம்
மாலியில் இலங்கையைச் சேர்ந்த நான்கு ஐநா அமைதி காக்கும் படையினர்,
காயமடைந்துள்ளனர் .
இவர்கள் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதில்
நல்லவர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மாலியில் வெடித்த குண்டு இலங்கை இராணுவதினர் நால்வர் காயம்
ஞாயிற்றுக்கிழமை, கிடால் பகுதியில், பாதுகாப்பை வழங்கி சென்று கொண்டிருந்த வாகனம் மீது
நடத்த பட்ட கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியே ,
இலங்கை படைகள் காயமடைந்தனர் .
சம்பவம் நடந்து 40 நிமிடங்களுக்குப் பிறகு,
சுற்றியுள்ள பகுதியில் தேடுதல் நடத்தியதில்,
இரண்டாவது வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
துப்பாக்கிச் சூடு முச்சக்கரவண்டி சாரதி பலி
துப்பாக்கிச் சூடு முச்சக்கரவண்டி சாரதி பலி
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று (22) பிற்பகல் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
முச்சக்கரவண்டியைச் செலுத்திச் சென்ற குறித்த நபர் மீது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த அடையாளந்தெரியாத நபர்கள் இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்..
இதன்போது முச்சக்கரவண்டி சாரதியான 27 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை
கல்கிஸை பகுதியில் உள்ள உணவகமொன்றின் உரிமையாளர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கும், உணவக உரிமையாளருக்குமிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தப்பிச்சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
ஜனாதிபதி சிங்கப்பூருக்கு பயணம்
ஜனாதிபதி சிங்கப்பூருக்கு பயணம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (23) அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டார்.
சிங்கப்பூருக்கான தனது ஒரு நாள் விஜயத்தின் போது ஜனாதிபதி, சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் மற்றும் அந்நாட்டின் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடல் நடத்தவுள்ளார்.
மே மாதம் 24 முதல் 27 வரை ஜனாதிபதியின் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் (Fumio Kishida) கலந்துரையாடல் நடைபெறவுள்ளதுடன், ஜப்பானுக்கும் இலங்கைக்கும்
இடையிலான இருதரப்பு உறவுகளை புதிய அணுகுமுறையின் ஊடாக வலுப்படுத்துவது குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாகவும் இதன்போது கருத்துப் பரிமாற்றம் இடம்பெறவுள்ளது.
இத்தாலி வாகன விபத்து: இலங்கையர் பலி
இத்தாலி வாகன விபத்து: இலங்கையர் பலி
இத்தாலியின் பெர்கமோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது இலங்கையை சேர்ந்த வர்ணகுலசூரிய சஞ்சீவ பிரதீப் பெர்னாண்டோ என்ற 45 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் துவிச்சக்கரவண்டியில் பயணித்த போது அதே திசையில் சென்ற லொறியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பேர்கம போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்
தனது குழந்தையை தூக்கி தலைகீழாக அடித்த தந்தை
தனது குழந்தையை தூக்கி தலைகீழாக அடித்த தந்தை
தன்னுடைய மூன்று வயதான குழந்தையை தூக்கி, நிலத்தில் தலைகீழாக அடித்த தந்தையை கைது செய்துள்ளதாக அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர். அவிசாவளை இஹல தல்துவ பிரதேசத்தில் வசிக்கும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையை தூக்கி தலைகீழாக அடித்த மேற்படி நபர், மனைவியின் முன்பாக சென்று நஞ்சருந்தியுள்ளார். அதன்பின்னர் சந்தேகநபரையும் குழந்தையையும் பொதுமக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தனது குழந்தையை தூக்கி தலைகீழாக அடித்த தந்தை
அடிப்படை சிகிச்சையை பெற்றுக்கொண்டதன் பின்னர் வைத்தியசாலையில் இருந்து சந்தேகநபர் தப்பியோடியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காயமடைந்த குழந்தையின் தலை பிளந்து காதுகளில் இருந்து இரத்தம் வெளியேறியதால், கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது என்றும் அவிசாவளை பொலிஸார் தெரிவித்தனர்.
மே9 விவகாரம் மனுவை வாபஸ் பெற தீர்மானம்
மே9 விவகாரம் மனுவை வாபஸ் பெற தீர்மானம்
மே 9 சம்பவங்கள் தொடர்பாக ஜெனரல் சவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் மற்றும் பலருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற தீரமானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் உட்பட 39 அரசியல்வாதிகள் அடங்கிய குழுவே இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுமீது விசாரணை நடத்தப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் நீதிமன்றத்துக்கு அறிவித்ததையடுத்து மனுவை வாபஸ் பெற தீர்மானித்துள்ளனர்.
கொண்டாடிக்கழித்த நுங்குத்திருவிழா நிகழ்வு
கொண்டாடிக்கழித்த நுங்குத்திருவிழா நிகழ்வு
பனைமரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட நுங்குத்திருவிழா நிகழ்வு வவுனியா மரக்காரம்பளையில் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது.
சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இளைஞர்கள், பெண்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வில் பனம்பொருள் உற்பத்திப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், பண்டாரவன்னியன் புத்தகசாலையின் புத்தக கண்காட்சியும் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு சுயாதீன தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாக நான்காவது வருடமாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இளம் பெண் கடத்தல் ஐவர் கைது
இளம் பெண் கடத்தல் ஐவர் கைது
கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக் கிழமை சிலாபம் பிரதேசத்தில் வைத்து 18 வயதான யுவதியை கடத்திய குற்றச்சாட்டில் மாத்தளை விசேட படையினரால் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21, 22, மற்றும் 40 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், இவர்கள் அனைவரும் தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
நடமாடும் விபசார நிலையம் முற்றுகை
நடமாடும் விபசார நிலையம் முற்றுகை
இளம் பெண்களை ஆகக் கூடுதலான விலைக்கு விற்பனைச் செய்யும் நடமாடும் விபசார நிலையத்தை நடத்திச் சென்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அரகலய ஏற்பாட்டாளர் உள்ளிட்ட ஏழுவர் அங்குருவாத்தொட ரெமுன பிரதேசத்தில் வைத்து, பாணந்துறை வலான மோசடி தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஏனைய சந்தேக நபர்களில், விபசாரத்தில் ஈடுபடும் பெண்கள் நால்வர், அவர்களை வாடகை வாகனத்தில் அமர்த்திச் சென்ற சந்தேகநபர்கள் இருவரும் அடங்குகின்றனர்.
பிரதான சந்தேகநபர் அரகலயவின் முக்கிய அமைப்பாளராக செயற்பட்ட மொரட்டுவையை வசிப்பிடமாகக் கொண்ட 33 வயதானவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நடமாடும் விபசார நிலையம் முற்றுகை
சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களை முன்னெடுக்கும் மேற்படி நபர், நடமாடும் விபசார நிலையத்தை நடத்திச் சென்றுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஒரு மூலோபாயத்தை கையாண்டு 50 ஆயிரம் ரூபாய்க்கு பெண்ணொருவரை பொலிஸார் விலைபேசியுள்ளனர்.
அதனடிப்படையில் சந்தேகநபர், சனிக்கிழமை (20) இரவு நான்கு பெண்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்தபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேகநபர், பல வருடங்களாக விபசார வியாபாரத்தை நடத்திச் சென்றுள்ளார். அதனூடாக பெருந்தொகையான பணத்தை அவர் சம்பாதித்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
கிழக்கு ஆளுநருடன் சுமந்திரன் பேச்சு
கிழக்கு ஆளுநருடன் சுமந்திரன் பேச்சு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடினார்.
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு திங்கட்கிழமை (22) இடம்பெற்றது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
காலி மாவட்டத்தின் யக்கலமுல்ல, எல்பிட்டிய மற்றும் பத்தேகம பிரதேச செய்லாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நகர்வுகள் ஆரம்பம்
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த நகர்வுகள் ஆரம்பம்
இலங்கையில் நடந்த இறுதிப்போர் தமிழ் இனப்படுகொலை தொடர்பான விடயத்தை சர்வதேச நீதிமன்றில் பாரப் படுத்தும் நகர்வுகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .
கனடாவின் ஆதரவுடன் இதனை நடைமுறை படுத்த, தமிழர் தரப்புக்கள்
முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன .
ஐரோப்பிய உலக தமிழர் அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து ,இந்த
வெற்றிகர நகர்வுகளை ஆரம்பிக்க உள்ளதாக உள்ளக கசிவுகள் வெளியாகியுள்ளன .
14 வருடங்கள் கழிந்துதீர்வு கிட்டப்படவில்லை ,குற்றவாளிகள் சுதந்திரமாக ,
உலவிய வண்ணம் உள்ளனர் .
அதனால் உடனடி தீர்வை ,
காணும் நோக்கில் ,புலம் பெயர் தமிழர் அமைப்புக்கள் ஒன்று
பட்டு செயலாற்ற முன் வந்துள்ள செயல் ,மகிழ்வை தருவதாக
தமிழர்கள் மகிழ்ச்சி கொள்கின்றனர் .
தாய் முன்னிலையில் மகளை நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு
தாய் முன்னிலையில் மகளை நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு
தாயின் முன்னிலையில் 26 வயதான மாற்றுத்திரனாளியான மகளை நிர்வாணமாக்கி, அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது மட்டுமன்றி கடுமையாகத் தாக்கினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் கான்ஸ்டபிளை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்வதற்கு தேடப்பட்டுக்கொண்டிருக்கும் பொலிஸ் கான்ஸ்டபிள், வாழைத்தோட்ட பொலிஸில் இணைக்கப்பட்டு, கொழும்பு பிரதிப் பொலிஸ்மா அதிபரின் காரியாலயத்தில் கடமையாற்றுகின்றார்.
இந்த கான்ஸ்டபிளின் நோய்வாய்ப்பட்ட தாயை கவனித்துக்கொள்வதற்காக, இந்த யுவதியுடன் அவருடைய தாய், இரண்டு வருடங்களாக அந்த கான்ஸ்டபிளின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு சொந்தமான 10 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில், தாயையும் மகளையும் அறையொன்றுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.
தாய் முன்னிலையில் மகளை நிர்வாணமாக்கி பாலியல் தொந்தரவு
அங்குவைத்து தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு அந்த யுவதியிடம் பொலிஸ் கான்ஸ்டபிள் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அக்கோரிக்கையை அந்த யுவதி நிராகரித்துள்ளார் என யுவதியின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், அந்த யுவதியை கடுமையாக தாக்கிய கான்ஸ்டபிள், தாயின் முன்னிலையில் யுவதியை நிர்வாணமாக்கி, வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றுள்ளார். இதுதொடர்பில், கொஸ்கம பொலிஸ் நிலையத்தில், வௌ்ளிக்கிழமை (19) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த யுவதி முறைப்பாடு செய்வதற்கு முன்னர், கொஸ்கம பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள், தன்னுடைய 10 ஆயிரம் ரூபாய் காணாமல் போனது தொடர்பில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மாற்றுத்திரனாளியான 26 வயதான யுவதியை, வைத்திய பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கொஸ்கம பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
தர்மபுரம் பகுதியில் 500 கிலோ விமானக் குண்டு மீட்டு
தர்மபுரம் பகுதியில் 500 கிலோ விமானக் குண்டு மீட்டு
தாக்குதல் விமானத்தின் ஊடாக பூமிக்கு கொட்டப்பட்ட சுமார் 500 கிலோகிராம் நிறையுடைய அதிசக்திவாய்ந்த விமானக் குண்டொன்று, கிளிநொச்சி தர்மபுரம், மயில்வானகம் காட்டுப்பகுதியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
யுத்தக்காலத்தில் பயங்கரவாதிகளை இலக்குவைத்து கிபீர் விமானத்தால் கீழே கொட்டப்பட்ட வெடிக்காத குண்டே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
தர்மபுரம் பகுதியில் 500 கிலோ விமானக் குண்டு மீட்டு
பிரதேசவாசியினால் தர்மபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த சக்திவாய்ந்த குண்டு கண்டறியப்பட்டள்ளது.
3 அடி நீளமும், 3 அடி சுற்றுவட்டமும் கொண்ட இந்த குண்டு, இன்றைக்கு 15 வருடங்களுக்கு முன்னர் பூமியை நோக்கி கொட்டப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் அக்குண்டு பதிந்தமையால், இரும்புக்கரல் பிடித்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதிக்கு அஸ்கிரிய பீடம் விசேட குறிப்பாணை
ஜனாதிபதிக்கு அஸ்கிரிய பீடம் விசேட குறிப்பாணை
நாட்டில் இனவாத மற்றும் மதவாத நெருக்கடி நிலை உருவாகி வருவதை தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து எழும் சம்பவங்கள் மூலம் தெரியவருவதால், இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த தேவையான
நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு விசேட மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
ஷ்யாமோபாலி மகா நிகாயாவின் அஸ்கிரி பார்ஷவ மகா நாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரரினால் இந்த விசேட மகஜர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டி மல்வத்து அஸ்கிரி மஹாநாயக்க தேரர்களை சனிக்கிழமை (20) சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார். இதன்போதே அஸ்கிரி மஹாநாயக்க தேரர் இந்த விசேட செய்தியை கையளித்தார்.
ஜனாதிபதிக்கு அஸ்கிரிய பீடம் விசேட குறிப்பாணை
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைந்துள்ள விகாரைகள் மற்றும் நாடெங்கிலும் உள்ள தனித்துவமான வரலாற்று சிறப்புமிக்க பௌத்த விகாரைகளை புனரமைப்பதில் உள்ள தடைகள் நீக்கப்பட்டு அந்த பணிகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் மூன்று விடயங்கள் அடங்கிய குறிப்பாணையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போது தீவின் பல்வேறு பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தொல்பொருள் இடங்கள் தொடர்பான திட்டங்கள் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படுவதுடன், வெளி தரப்பினர் வழங்கும் உதவிகளை அதற்காகப் பயன்படுத்த வேண்டும்.
மேற்படி விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தி அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அந்த குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதைகுழிக்கு பொலிஸ் பாதுகாப்பு
புதைகுழிக்கு பொலிஸ் பாதுகாப்பு
நீதிமன்ற உத்தரவையடுத்து, தினேஷ் ஷாஃப்டரின் உடல் மே 25ஆம் திகதி தோண்டி எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில், அவரது பூதவுடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் டிசெம்பர் 15 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் காரில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், பின்னர் தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
இதன்படி தினேஷ் ஷாப்டர் படுகொலை விவகாரத்தில், சுமார் 100 இற்கும் மேற்பட்ட வாக்கு மூலங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன
சிங்கப்பூரில் மாடியில் இருந்து வீழ்ந்து இலங்கை பெண் மரணம்
சிங்கப்பூரில் மாடியில் இருந்து வீழ்ந்து இலங்கை பெண் மரணம்
சிங்கப்பூரில் வீட்டு வேலைக்கு சென்று வேலை பார்த்து வந்த
இலங்கையை சேர்ந்த சிங்கள பெண் ஒருவர்,
மடியில் இருந்து வீழ்ந்து இறந்துள்ள செய்திகள் ,
மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
இவர் மடியில் இருந்து தள்ளிவிழுத்தி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என ,
சநதேகிக்க படுவதால் ,இந்த பெண்ணின் மரணம் தொடர்பிலான,
விசாரணைகளை துரிதமாக ஆரம்பிக்கும் பட ,இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பாகம் கோரிக்கை விடுத்துள்ளது
இவ்வாறன நாடுகளுக்கு சென்று பணி புரியும் பல ,
பெண்கள் வதைகளிற்கு உள்ளாகி வருவதாக, பாதிக்க பட்ட பெண்கள்
கண்ணீர் மல்க தெரிவித்து இருந்தமை குறிப்பிட தக்கது .
தங்க கடத்தல் முறியடிப்பு சிக்கிய இரண்டு கிலோ தங்கம்
தங்க கடத்தல் முறியடிப்பு சிக்கிய இரண்டு கிலோ தங்கம்
தங்க கடத்தல் ஒன்று இலங்கை கட்டு நாயக்க விமான நிலையத்தில் முறியடிக்க பட்டுள்ளது .
எமரேஸ்ட் விமானத்தின் மூலம் இலங்கை, கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த ,32 வயது நபர் ஒருவர்,தனது பொதியின் அடியில் மறைத்து வைத்த படி இரண்டு கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளார் .
விமான நிலையத்தில் சோதனைகளின் பொழுது ,இந்த பெரும் தங்கம் சிக்கியது ,32 வயது நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார் .
இந்த ஆண்டில் சிக்கிய, மிக பெரும் தங்க கடத்தலாக இது பார்க்க படுகிறது .
ரயிலுக்குள் பாய்ந்து வாலிபன் தற்கொலை
ரயிலுக்குள் பாய்ந்து வாலிபன் தற்கொலை
ரயிலுக்குள் பாய்ந்து வாலிபன் ஒருவர் தற்கொலை புரிந்த செயல்
பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை நானு ஓயா பகுதியில் வாலிபன் ஒருவர் ,
தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துள்ள சம்பவம் ,அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இவரது தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளன






























