Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
துப்பாக்கி சூடு ஒருவர் மரணம்
12 இளைஞர்கள் கைது
12 இளைஞர்கள் கைது
அவிசாவளை – குருகல்ல பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் 12 இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடுதியின் உரிமையாளர் பேஸ்புக் ஊடாக இந்த ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடம் இருந்து கஞ்சா போதைப் பொருள், விடுதி உரிமையாளரிடம் இருந்து ஹஷிஸ் போதைப்பொருள் மற்றும் 22 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் ’குடும்ப விபசாரம்
மீண்டும் ’குடும்ப விபசாரம்
ரூ.5 ஆயிரம் கொடுத்தால் ஒரு நாள் முழுக்க வீட்டில் தங்கி காலை டிபன், மதியம் பிரியாணி விருந்துடன் வாடிக்கையாளர்களை உல்லாசப்படுத்தி இன்ப வெள்ளத்தில் மிதக்க வைப்பதுதான் ‘குடும்ப விபசாரம்’ ஆகும்.
மீண்டும் ‘குடும்ப விபசாரம்’ சென்னையில் தலை தூக்கியது. ரூ.5 ஆயிரம் கொடுத்தால் விருந்து, உல்லாசத்துடன் நாள் முழுவதும் உபசரிப்பார்கள். இந்த விபசார கும்பலை சேர்ந்த 3 பெண்கள் மீட்கப்பட்டனர்.
குடும்ப பெண்களாக இருக்கும் சிலர் இதுபோன்ற விபசாரத்தில் ஈடுபடுவது வழக்கம். இவர்கள் குடும்பம் வெளிமாநிலங்களில் இருக்கும்.
இவர்கள் சென்னைக்கு வேலை தேடி வருவது போன்று வந்து விபசார தொழிலை ஓசையில்லாமல் செய்வார்கள். கை நிறைய பணத்தை சம்பாதித்துக் கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு செல்வார்கள்.
மீண்டும் ’குடும்ப விபசாரம்
பொலிஸில் பிடிப்பட்டாலும் சம்பாதித்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்துவிட்டு அரசு காப்பகத்தில் தங்கி இருப்பார்கள்.
பின்னர் நீதிமன்றம் மூலம் விடுதலை பெற்று சொந்த ஊர்களுக்கு போவார்கள். ஒரு மாதம் கழித்து மீண்டும் வேலைக்கு வருவது போல் வந்து சென்னையில் மறுபடியும் தொழிலை தொடங்குவார்கள்.
சென்னை வளசரவாக்கம் மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளில் இதுபோன்ற குடும்ப விபசார தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் வளசரவாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினார்கள். அங்கு விபசாரத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.
அவர்களை இந்த தொழிலில் தள்ளிய தரகர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று மடிப்பாக்கம் ராமலிங்க நகர் பகுதியில் உள்ள வீட்டில் சோதனை நடத்தி பெண் ஒருவரை மீட்டனர்.
மீண்டும் ’குடும்ப விபசாரம்
மற்றுமொரு தரகர் கைது செய்யப்பட்டார். மீட்கப்பட்ட பெண்களில் ஒருவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்.
கடந்த மே மாதத்தில் இருந்து இவர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து ‘குடும்ப விபசார’த்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
மீட்கப்பட்ட 3 பெண்களும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். தரகர்கள் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தேர்தல் ஆணைக்குழுவில் மாற்றம்
தேர்தல் ஆணைக்குழுவில் மாற்றம்
தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட 05 புதிய உறுப்பினர்கள் தொடர்பான அறிக்கை எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்தில் கூடிய அரசியலமைப்பு சபை, தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவில் மாற்றம்
அதன்படி, அதன் தலைவராக முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இது தவிர, முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் எம்.ஏ.பி.சி பெரேரா, முன்னாள் சட்ட ஆலோசகர் ஜனாதிபதியின் சட்டத்தரணி தீபானி குமாரஜீவ, சட்டத்தரணி அமீர் பைஸ் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் தொடர்பான கலாநிதி ரமேஷ் ராமசாமி ஆகியோரின் பெயர்களும் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக முன்மொழியப்பட்டுள்ளன.
இவர்களது பதவிக்காலம் உரிய முன்மொழிவுகள் தொடர்பில் ஜனாதிபதியின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர் 05 வருட காலத்திற்கு அமுலில் இருக்கும்.
போதைப் பொருள் விருந்து சுற்றிவளைப்பு
போதைப் பொருள் விருந்து சுற்றிவளைப்பு
பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைப் பொருள் விருந்து நடைபெற்ற இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் 12 பேரை கைது செய்துள்ளனர்.
அவிசாவளை களனி ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த போதை பொருள் விருந்து நேற்றிரவு நடைபெற்றதுள்ளது.
முகநூல் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட போதைப் பொருள் விருந்து ஹோட்டல் ஒன்றில் நடைபெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஹோட்டலில் சுற்றிவளைப்பை மேற்கொள்ள காட்டு வழியாக பொலிஸார் சென்ற போது வீதியில் ஆங்காங்கே மரக்கட்டைகள் போடப்பட்டு தடைகள்
ஏற்படுத்தப்பட்டிருந்தாகவும் பொலிஸாரின் வருகையை கண்காணிக்க சில நபர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் விருந்து சுற்றிவளைப்பு
ஹோட்டலுக்குள் நடப்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாதபடி வாழை இலைகளை பயன்படுத்தி மறைக்கப்பட்டிருந்தன.
ஒருவரிடம் தலா 3,500 ரூபாவை அறவிட்டு இந்த போதைப் பொருள் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாக கைது செய்யப்பட்டவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 7 பேர் கஹதுடுவ பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஏனையவர்கள் பலாங்கொடை, பன்னிப்பிட்டிய மற்றும் அவிசாவளை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களுடன் 11 கஞ்சா சுருட்டுக்கள், 20 கிராம் ஐஸ் போதைப் பொருள், 24 டின் பியர்கள், 13 பியர் போத்தல்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட 20 மதுபான போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் கொடும்பாவி எரிப்பு
வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் கொடும்பாவி எரிப்பு
வவுனியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சிங்கள தமிழ் மற்றும் முஸ்ஸிம் தேசிய ஒற்றுமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று (24.06) மாலை முன்னெடுக்கப்பட்டது.
வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் கொடும்பாவி எரிப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ‘பயங்கரவாதம் எங்களுக்கு வேண்டாம் ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள், உங்களுடைய சுதந்திரத்தினை எங்களுக்கு தா, படுகொலை எங்கே நடந்தது?, ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உனக்கு தேவை பயங்கரவாதம், எங்களுடைய நாட்டில் கை போடாதே ஜஸ்டின் ட்ரூடோ’ போன்ற கோசத்தினை எழுப்பியவாறும், ‘இலங்கையின் இறையாண்மைக்கு கைகொடுங்கள், கனடா இனவாதத்தை பற்ற வைக்காதீர்கள் அது குற்றம்’ போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் வீதியில் போடப்பட்டு எரிக்கப்பட்டன.
இவ் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் உட்பட தமிழ், முஸ்ஸிம், சிங்கள இனத்தினை சேர்ந்த 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கை இராணுவம் போர்க்குற்றம் இழைத்ததாக கனடா பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
லண்டனில் கடைக்குள் நுளைந்த திருடர்களை துரத்திய தமிழன்
லண்டனில் கடைக்குள் நுளைந்த திருடர்களை துரத்திய தமிழன்
லண்டன் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி கடை ஒன்றுக்குள்
கத்தி முனையில் திருட நுழைந்த திருடனை ,அங்கு பணியில் இருந்த தமிழர் ,
கொட்டனை கொண்டு அவர்களை துரத்திய சம்பவம், வைரலாக பரவிய வண்ணம் உள்ளது .
திருட்டு ,துரத்தல் காட்சிகள் கீழ் உள்ள காணொளியில் பார்க்க
லண்டன் பகுதியில் கத்தி ,துப்பாக்கி முனைகளில் இவ்வாறு இடம்பெறும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது .
லண்டனில் கடைக்குள் நுளைந்த திருடர்களை துரத்திய தமிழன்
தனிமையில் கடைகளில் பணிபுரியும் நேரத்தை கண்காணிக்கும் திருடர்கள் ,
அந்த நேரத்தை கணக்கிட்டு ,உள்நுழைந்து பணம் ,பொருள் என்பனவற்றை திருடி சென்று தப்பி விடுகின்றனர் .
ஆனால் இ ங்கே முதன் முதலாக இவ்வாறு தமிழர் ஒருவர் புரிந்த செயல் தற்போது வியப்பையும் பர பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது .
ஆபத்தான கத்திமுனை திருடர்களை ,புலி தமிழம் மிரட்டியா செயல் பாராட்ட பெறுகிறது .
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் விசேட நிவாரணம்
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் விசேட நிவாரணம்: மீண்டும் விண்ணப்பிக்க கோரிக்கை
குறைந்த வருமானம் கொண்ட குடும்ப பயனாளர்களுக்கான நிவாரண தொகை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படும் என பதில் நிதி அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சமூக கட்டமைப்பில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்திட்டத்தை வெளிப்படை தன்மையின் முன்னெடுக்கவும், தகுதியானவர்களுக்கு மாத்திரம் நிவாரணம் வழங்கவும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.
சமுர்த்தி பயனாளர்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் நிவாரண தொகையை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவர்கள் என தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பரசீலனைகள் ஊடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் புறக்கணிக்கப்பட்டு, தகுதியற்றவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
அரச நிவாரண வழங்கல் திட்டத்தை மறுசீரமைக்கும் வகையில் அஸ்வெசும நிவாரண திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு விசேட ஒழுங்குவிதிகள் உருவாக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நிவாரண திட்டத்தில் குடும்ப அடிப்படையிலான பயனாளர்களின் பெயர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் விசேட நிவாரணம்: மீண்டும் விண்ணப்பிக்க கோரிக்கை
தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தால் அவர்கள் பிரதேச சபை ஊடாக எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மேன்முறையீடு செய்யலாம். அத்துடன் தகுதியற்ற ஒருவரின் பெயர் நிவாரண திட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தால் பொது மக்கள் எவரும் உரிய பிரதேச சபையில் முறைப்பாடு செய்வோம்.
குடும்ப பயனாளர்களுக்கான நிவாரண தொகை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படும். அத்துடன் நீரழிவு நோயாளர்கள், சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் விசேட தேவையுடையவர்கள் என்ற அடிப்படையில் தனிநபர் பயனாளர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் இருவார காலப்பகுதிகளுக்குள் வெளியிடப்படும்.
அஸ்வெசும நிவாரண செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் கோரப்படும். இந்த ஆண்டு விண்ணப்பம் செய்யாதவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விண்ணப்பிக்க முடியும்.
ஆகவே அஸ்வெசும நிவாரண செயற்திட்டம் சிறந்த முறையில் முன்னெடுக்கபடுகிறது. ஒருதரப்பினரது கோரிக்கைக்கு அமைய செயற்திட்டத்தை இடைநிறுத்த முடியாது. குறைப்பாடுகள் காணப்படுமாயின் அதனை ஆராய்ந்து தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
துப்பாக்கி சூடு ஒருவர் மரணம்
துப்பாக்கி சூடு ஒருவர் மரணம்
இலங்கை கம்பகா பகுதியில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார் .
பலியானவர் 28 வயதுடைய நபர் என தெரிவிக்க பட்டுள்ளது .இந்த படுகொலைக்கான கரணம் தெரியவரவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
வாலிபனை கடத்தி கப்பம் கோரிய கும்பல் சிறைபிடிப்பு
கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு
கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு
கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று (24) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றுக்கு சமூகமளிக்காத பிரதிவாதிகளுக்கு எச்சரிக்கை
நீதிமன்றுக்கு சமூகமளிக்காத பிரதிவாதிகளுக்கு எச்சரிக்கை
இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிராக கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி போராட்டம் நடத்தியமைக்கு எதிராக பொலிஸாரால் தொடுக்கப்பட்ட
வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த யாழ்ப்பாண நீதிமன்றம், சமூகமளிக்காத பிரதிவாதிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
குறித்த வழக்கு கட்டளைக்காக நேற்று (23) எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மட்டுமே மன்றில் சமூகமளித்திருந்தார்.
ஏனைய பிரதிவாதிகள் மன்றுக்கு சமூகமளிக்காத காரணத்தினால் கட்டளையை வழங்க முடியாதுள்ளதாக நீதவான் ஏ.ஆனந்தராஜா
நீதிமன்றுக்கு சமூகமளிக்காத பிரதிவாதிகளுக்கு எச்சரிக்கை
தெரிவித்ததோடு, எதிர்வரும் தவணைக்கு வருகை தராத பிரதிவாதிகளுக்கு பிடியாணை பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
பிரதிவாதிகள் சார்பாக சட்டத்தரணி கே.ரி.தவராசா ஆஜராகியிருந்தார்.
குறித்த வழக்கில் பிரதிவாதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சாள்ஸ் நிர்மலாதன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணன்பவன்,
எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ்ப்பாண மாநகர முன்னாள் மேயர் வி.மணிவண்ணன், மற்றும் வேலன் சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தொண்டமானில் முதுகில் குத்தியவா்கள் பலா்
தொண்டமானில் முதுகில் குத்தியவா்கள் பலா்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று பலமாக இருப்பதற்கு அமரர் முத்து சிவலிங்கமும் பிரதான தூணாக இருந்தார் என இலங்கை தொழிலாளர்
காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23) நடைபெற்ற முன்னாள் அமைச்சர் அமரர். முத்து சிவலிங்கத்துக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மேலும் கருத்து தொிவித்த அமைச்சா், அமரர் முத்து சிவலிங்கம் பதவிகளுக்காக ஆசைப்பட்ட நபர் கிடையாது
. அவர் இன்று எம்முடன் இல்லாவிட்டாலும் மலையகம் எப்படி இருக்க வேண்டும் என்ற அவரின் சிந்தனைகளுக்கு நிச்சயம் நாம் உயிர்கொடுப்போம்.
முத்துசிவலிங்கம் ஐயா அமைதியான மனிதர். சேவை மனப்பான்மை கொண்டவர். தான் மட்டும் வளராமல் கட்சியில் உள்ள அனைவரையும் வளர்த்துவிட்ட மா மனிதர் ஆவார்.
தொண்டமானில் முதுகில் குத்தியவா்கள் பலா்
நான் சபரிமலைக்கு முதன் முறையாக மாலை அணிந்திருந்தவேளையிலேயே அவர் உயிரிழந்திருந்தார். மாலையை கழற்றி வைத்து விட்டாவது அஞ்சலி செலுத்த செல்வோமா என நினைத்தேன்.
ஆனால் முதன்முறை என்பதால் அதனை என்னால் செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனால் அந்த வலி இன்னும் என்னுள் இருந்துகொண்டு இருக்கின்றது.
50 வருடகாலத்துக்கு மேலாக மக்களுக்கும், கட்சிக்கும், தொழிற்சங்கத்துக்கும் சேவையாற்றிய அவருக்கு தகுந்த மரியாதை அளிக்கப்பட்டதா என்ற வினாவுக்கான விடை கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
அதுவும் எனக்கு வேதனையை தந்தது. ஒருவர் நம்முடன் இருக்கும்போது அவரின் முக்கியம் தெரியாது.
இல்லாமல்போனால்தான் அதன் வலி புரியும். முத்துசிவலிங்கம் போன்ற அரசியல் தலைவரை பார்க்க முடியாது. அவர்போல் ஒரு தலைவரை உருவாக்கவும் முடியாது.
தொண்டமானில் முதுகில் குத்தியவா்கள் பலா்
குரலை உயர்த்தி பேசுவது தலைமைத்துவம் கிடையாது. நாம் பேசும்போது மற்றயவர்களின் குரல்களை அடங்க வைப்பதுதான் தலைமைத்துவம். அப்படிபட்ட ஒரு தலைவர்தான் முத்துசிவலிங்கம்.
கட்சிக்காக விசுவாசமாக இருந்தார். மலையகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கினால். மக்கள் அன்பால் அவருக்கு மின்சார கண்ணா என்றுகூட பெயர் வந்தது.
ஆறுமுகன் தொண்டமானுக்கு தூணாக இருந்தார். முதுகில் குத்துவிட்டு பலர் வெளியேறினாலும் பக்க பலமாக இருந்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸை கட்டியெழுப்புவதற்கு பக்க பலமாக இருந்தார். கட்சியில் சமரச தூதுவராக செயற்பட்டார் என்றார்.
லண்டனில் தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ அறிமுக நிகழ்வு | பிரமாண்ட ஏற்பாடு
லண்டனில் தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி‘ அறிமுக நிகழ்வு | பிரமாண்ட ஏற்பாடு

ஈழத்து கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் எழுதிய பயங்கரவாதி நாவலின் அறிமுக நிகழ்வு (ஜூன் 24) இன்று இடம்பெறவுள்ளது.தாயகத்தில் இருந்து தீபச்செல்வன் கலந்து கொள்ளும் நாவல் அறிமுகம்
குறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
வணக்கம் இலண்டன் இணையத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்படும் விசேட நிகழ்வுகளில் ஒன்றான பயங்கரவாதி அறிமுக நிகழ்வு பிரித்தானிவின் பிரமாண்ட அரங்கான Alperton community schoolஇல் இடம்பெறவுள்ளது.
லண்டனில் தீபச்செல்வனின் ‘பயங்கரவாதி’ அறிமுக நிகழ்வு | பிரமாண்ட ஏற்பாடு
திரள் அமைப்புடன் வணக்கம் இலண்டன் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு கிளி பீப்பிள் அமைப்பு ஆதரவு வழங்க அபியகம். முல்லை எக்ஸ்பிரஸ். ராம் றீரையில்ஸ். பிராங்கோ குரூப். அம்மா ஹோம் கெயார் சேவை. மிற்சி சாறீஸ் முதலிய அமைப்புக்கள் அனுசரனை வழங்குகின்றன.
நடுகல் நாவல் வாயிலாக உலக அளவில் கவனத்தை பெற்றுள்ள தீபச்செல்வனின் புதிய நாவல் பயங்கரவாதியும் பலதரப்பட்டவர்களாலும் விரும்பி வாசிக்கப்படும் நிலையில் லண்டனில் இந் நிகழ்வு ஏற்பாடாகியுள்ளது.
படைப்பாளி சந்திப்பு, இரவுணவு முதலிய நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்தி – ஈழம் ரஞ்சன்
கணவனால் சீரழிக்கபட்ட 16 மாணவிகள் காட்டி கொடுத்த மனைவி
கணவனால் சீரழிக்கபட்ட 16 மாணவிகள் காட்டி கொடுத்த மனைவி
இலங்கை களுத்துறை பகுதியில் தனியார் வகுப்பு நடத்தி
கொண்டிருந்த வாத்தியார் ஒருவர் தனனிடம் கலவி கற்ற 16 மாணவிகளை
பாலியல் உறவுக்கு உட்படுத்தி இன்பம் அனுபவித்துள்ளார் .
அவர்களுடன் நடத்த பட்ட பாலியல் காட்சிகளை தனது ,
கணணியில் பதிவாக்கி மறைத்து வைத்திருந்துள்ளார் .
அதனை கண்காணித்த மனைவி பாதிக்க பட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரிய படுத்தியதை அடுத்து போலீசார்
கணவனை இளுத்து சென்று சிறையில் அடைத்துள்ளனர் .
மேற்படி சமபாவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
நாங்கள் இனவாதிகள் இல்லை ஸ்ரீதரன்
நாங்கள் இனவாதிகள் இல்லை ஸ்ரீதரன்
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன் போது இன்றைய தினம் (23) இடம்பெற்ற நீதிமன்ற வழக்கு தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்கள் சார்பாக போராட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டமை சார்பாக தவறாக குற்றம் சாட்டப்பட்டு இன்று நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு பிற்போடப்பட்டுள்ளது.
மேலும் குருந்தூர் மலைக்கு உதய கம்பன்பில வருகை மற்றும் இனவாதம் பேசும் இனவாதிகள் யார் என்பது குறித்தும், தலைவர் பிரபாகரனின் மரபு அறிக்கை மற்றும் மருந்து தட்டுபாடு உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒத்துழைப்பு
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒத்துழைப்பு
இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் கடன் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முழு ஒத்துழைப்பு வழங்கும் என ஜக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டரெஸ் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவிடம் உறுதியளித்துள்ளார்.
பிரான்ஸின் பெரிஸ் நகரில் நடைபெறுகின்ற “புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தம்” தொடர்பிலான உச்சி மாநாட்டிற்கு இணையாக இடம்பெற்ற
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அண்டோனியா குட்டாரெஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் போதே மேற்கண்டவாறு உறுதிளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஒத்துழைப்பு
இலங்கையின் புதிய பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளின் முன்னேற்றம், பொருளாதார மீட்சிக்கான
செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகத்திடம் தெளிவுபடுத்தினார்.
நிலையான பொருளாதார கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போதும் நீண்ட கால பொருளாதார வேலைத்திட்டங்களை முன்னெடுகின்ற போதும்
வலுவான நிதிக் கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புடனான முயற்சிகள் பற்றியும் ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
நிலையான அபிவிருத்து இலக்குகளை மேம்படுத்தும் அதேநேரம் காலநிலையினால் ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புக்களை மட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படவுள்ள நீடிக்கப்பட்ட உபாய மார்க்க திட்டங்களை
எடுத்துக்காட்டி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கமைய முன்னெடுக்கப்படும் “காலநிலை சுபீட்சத்துக்கான திட்டமிடல்” தொடர்பிலும் செயலாளர் நாயகத்திற்கு விளக்கமளித்தார்.
பொலிஸாா் துப்பாக்கிச் சூடு
பொலிஸாா் துப்பாக்கிச் சூடு
ஊரகஸ்மங்ஹந்தி பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் ஒருவா் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்றுமொருவரை தாக்கிய சம்பவம் தொடா்பில் சந்தேக நபரை கைது செய்ய சென்ற போது, அவர் கூரிய ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரிகளை தாக்கியுள்ளார்.
அதனைத் தடுக்கும் நோக்கில் பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரின் காலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளாா்.
சந்தேக நபர் 26 வயதுடையவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதிரணில்
முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார் என, முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி செயலகம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், நடமாடும் சேவை ஒன்று, ஜூலை மாத முற்பகுதியில் நடைபெறவுள்ளது.
இந்த நடமாடும் சேவைக்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளார் என முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்
பஸ் விபத்தில் ஒருவர் பலி – பலர் படுகாயம்
பஸ் விபத்தில் ஒருவர் பலி – பலர் படுகாயம்
ஹோமாகம, பிடிபன பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துடன், மேலும் 13 பேர் படுகாயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹோமாகம பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


























