ஆற்றில் இருந்து சடலமொன்று மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் இருந்து சடலமொன்று மீட்பு

ஆற்றில் இருந்து சடலமொன்று மீட்பு

மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரட்டுவ பீரிஸ் மாவத்தை பகுதியில் அமைந்துள்ள பொல்கொட ஆற்றில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (27) காலை சடலம் கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஆற்றில் இருந்து சடலமொன்று மீட்பு

உயிரிழந்த நபர் சுமார் 5 அடி உயரம், மெல்லிய உடல், முழங்கைக்கு அருகில் வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர் கருப்பு நிற காற்சட்டை மற்றும் பழுப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.