Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மின் கட்டணம் முற்றிலும் குறைக்கப்படும்
மின் கட்டணம் முற்றிலும் குறைக்கப்படும்
கடந்த ஆண்டு ஒக்டோபரில் அதிகரிக்கப்பட்ட 18 சதவீத மின் கட்டணத்தை உள்நாட்டு பிரிவினருக்கு குறைக்கும் வகையில், மின் கட்டண திருத்தம் குறித்த புதிய முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர நேற்று (21) தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் மாதம் உள்நாட்டு நுகர்வோர் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களின் மின்சாரக் கட்டணம் 18 சதவீதத்தாலும், தொழில் மற்றும்
ஹோட்டல் துறைக்கான கட்டணங்கள் 12 சதவீதத்தாலும், பொதுக் கட்டிடங்கள் உள்ளிட்ட பொது நோக்கங்களுக்கான கட்டணங்கள் 24 சதவீதத்தாலும்
அதிகரிக்கப்பட்டதாகவும் அவை யாவும் புதிய திருத்தத்தில் முற்றாக குறைக்கப்படும் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான புதிய முன்மொழிவுகள் நாளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) கையளிக்கப்படும் என்றார்.
முன்னதாக இலங்கை மின்சார சபையானது கட்டணத்தை 3 வீதத்தால் குறைக்க முன்மொழிந்திருந்ததாக அவர் கூறினார்.
சென்னையிலிருந்து யாழுக்கு வந்தவர் கைது
சென்னையிலிருந்து யாழுக்கு வந்தவர் கைது
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் தமிழகத்தில் தலைமறைவாகி இருந்து, மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பிய நிலையல் புதன்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ் திரும்புவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , விமான நிலைய வளாகத்தில் காத்திருந்த பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனவும் , நீண்ட காலமாக தேடப்பட்ட சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சந்தேக நபரை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொக்குதொடுவாய் மனித புதைகுழி வழக்கு விசாரணை இன்று
கொக்குதொடுவாய் மனித புதைகுழி வழக்கு விசாரணை இன்று
முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் 29.06.2023 கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பான வழக்கானது இன்றையதினம் (22) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய, முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியின் முதல் கட்ட அகழ்வானது 06.09.2023 அன்று ஆரம்பமாகி பதினொரு நாட்கள் நடைபெற்று 17 உடற்பாகங்கள் மீட்கப்பட்ட நிலையில் இடைநிறுத்தப்பட்டிருந்தது
கொக்குதொடுவாய் மனித புதைகுழி வழக்கு விசாரணை இன்று
மேலும், மீண்டும் அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் நடைபெற்று 40 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுபணி இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து மூன்றாம் கட்ட அகழ்வுபணிகள் வரும் மார்ச் மாதம்ஆரம்பிப்பது என தெரிவிக்கப்பட்டிருந்தது
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவ தனது அறிக்கையை நீதிமன்றுக்கு அனுப்பியுள்ளார் இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை இன்றையதினம்(22) வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பெரியப்பாவால் துஷ்பிரயோகம் சிறுமி சொல்ல மறுத்தது ஏன்
பெரியப்பாவால் துஷ்பிரயோகம் சிறுமி சொல்ல மறுத்தது ஏன்
11 வயதும் 10 மாதங்களுமான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அவருடைய பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், மொனராகலை, மெதகம பொலிஸ் பிரிவில் ரத்தனதெனிய ஹொகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
11 வயதும் 10 மாதங்களுமேயான இச்சிறுமி, 2019 ஆம் ஆண்டில் இருந்து பெரியப்பாவினால், அச்சிறுமியின் வீட்டில் வைத்தே, இரண்டு வருடங்களாக அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
அச்சிறுமியின் வீட்டில் ஒருவர் திருடுவதற்கு மறைந்துள்ளார் என்பது தொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வந்த அயலவர்கள், அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 15 வயதான சிறுமியுடன் காதல் உறவை கொண்டிருப்பதால் அந்த வீட்டுக்குச் சென்றதாகவும், அச்சிறுமியை எவ்விதமான தொந்தரவுக்கும் உட்படுத்த வில்லையென பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பெரியப்பாவால் துஷ்பிரயோகம் சிறுமி சொல்ல மறுத்தது ஏன்
எனினும், சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அச்சிறுமி, அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின், தன்னுடைய பெரியப்பா, அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார். எனினும், வெளியில் சொன்னால், இரு வீட்டாருக்கும் இடையில், பிரச்சினை ஏற்படும் என்ற பயத்தால், வெளியில் சொல்லவில்லை என்றார்.
இந்த சம்பவம் தொடர்பில் ஹொகொல்ல ரத்தனதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ‘சமந்த” என்றழைக்கப்படும் பெரியப்பாவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரை பிபில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த மெதகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
பஞ்சு மிட்டாய் விற்றால் அபராதம்
பஞ்சு மிட்டாய் விற்றால் அபராதம்
கடற்கரைகள், பொழுது போக்கு பூங்காக்கள் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் விற்பனையாகும் பிங்க் கலர் பஞ்சு மிட்டாயில் நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அந்த பஞ்சு மிட்டாய்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது அதில் உடலுக்கு கேடு விளைவிக்கும் புற்று நோயை உருவாக்கும் நச்சுப் பொருள் கலப்பது உறுதியானது.
இதை தொடர்ந்து ‘பிங்க்’ கலர் பஞ்சு மிட்டாய்க்கு தமிழக அரசு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து சென்னை
பஞ்சு மிட்டாய் விற்றால் அபராதம்
மாவட்ட உணவு பொருள் நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையிலான உணவு பொருள் அலுவலர்கள் சென்னையில் கலர் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது பற்றி தீவிரமாக ஆய்வு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக உணவு பொருள் அதிகாரி சதீஷ் குமார் :-
“உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய ‘பிங்க்’ நிறத்தில் தயாரிக்கப்படும் பஞ்சு மிட்டாய் சென்னையில் தற்போது எந்த பகுதியிலும் விற்பனை செய்யப்படவில்லை.
கலர் சேர்க்காத வெள்ளை நிற பஞ்சு மிட்டாய் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உடல் நலனுக்கு கேடு விளைவிக்கக்கூடிய கலர் பஞ்சு மிட்டாயை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
கலர் பஞ்சு மிட்டாயை தெருக்களில் விற்பனை செய்யும் நபர்கள் அதனை எங்கிருந்து வாங்கி வருகிறார்கள் என்பதை கண்டறியவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிலர் வீடுகளில் வைத்தே சிறிய மிஷின் மூலமாக பஞ்சு மிட்டாய்களை தயாரித்து வருகிறார்கள். அதில் கலர் சேர்த்தால் அது குற்றமாக கருதப்படும். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெவித்துள்ளார்.
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வேண்டாம் என கோரிக்கை
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வேண்டாம் என கோரிக்கை
கச்சத்தீவு திருவிழாவில் இம்முறை இந்தியாவில் இருந்து பக்தர்கள் எவரும் பங்கேற்க வேண்டாம் என கச்சத்தீவு திருப்பயண ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை இந்திய பக்தர்களின் உறவு பாலமாக உள்ள கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24 திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில், சிறையில் உள்ள நான்கு இந்திய மீனவர்களை
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வேண்டாம் என கோரிக்கை
விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிப்பதாக தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர்.
அதனடிப்படையில் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக படகுகள் இயக்கப்படாததால் இந்த ஆண்டு திருப்பயணத்தை ரத்து செய்வதாக கச்சத்தீவு திருப்பயன ஒருங்கிணைப்பாளர் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அந்த செய்தியில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய திருப்பயணிகள் தயவு செய்து கச்சதீவுக்கு பயணிக்க வேண்டாம் எனவும், அவர்கள் கொடுத்த பணத்தை விரைவில் திருப்பிக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உணவு பொருட்களின் விசேட பண்ட வரி அதிகரிப்பு
உணவு பொருட்களின் விசேட பண்ட வரி அதிகரிப்பு
உளுந்து, பாசிப்பயறு , கௌபி , சோளம், குரக்கன் மற்றும் தினை ஆகியவற்றின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் விசேட பண்ட வரியை உயர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானியின்படி, உளுந்து (மற்றவை) இதுவரை ஒரு கிலோ கிராமிற்கு 200 ரூபாவாக காணப்பட்ட விசேட பண்ட வரி 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உணவு பொருட்களின் விசேட பண்ட வரி அதிகரிப்பு
கௌபி (மற்றவை), விதை குரக்கன், விதைகள் – (தினை) உள்ளிற்றவைக்கான இறக்குமதி விசேட பண்ட வரி ஒரு கிலோ கிராமிற்கு 70 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இது தவிர சோளத்துக்கும் 25 ரூபாய் விசேட பண்ட வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, சோளம், உளுந்து, பச்சைப்பயறு, கௌபி மற்றும் குரக்கன் ஆகியவற்றின் இறக்குமதியை விவசாய அமைச்சின் பரிந்துரையின் பேரில் மேற்கொள்ள வேண்டுமென வர்த்தமானி அறிவித்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமருடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
பிரதமருடன் ஈரான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு
பிரதமர் தினேஷ் குணவர்தன, ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹூசைன் அமீர்-அப்துல்லாஹியான ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது.
மசகு எண்ணெய்க்காக இலங்கை ஈரானுக்கு செலுத்த வேண்டிய 250 மில்லியன் டொலருக்கு பதிலாக இலங்கையிலிருந்து தேயிலையை ஏற்றுமதி செய்ய இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது
பாம்பு கடித்து கர்ப்பிணிப்பெண் மரணம்
பாம்பு கடித்து கர்ப்பிணிப்பெண் மரணம்
திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாம்பு கடிக்கு இலக்காகி 3 மாத கர்ப்பிணித் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவமானது நேற்று(20) மாலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாம்பு கடித்து கர்ப்பிணிப்பெண் மரணம்
இதில், திருகோணமலை மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இமேஷா குமாரி (வயது 23) என்ற மூன்று மாத கர்ப்பிணித் தாயொருவர் மாடு கட்டுவதற்காக சென்றபோது பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இலங்கையில் புயல் மக்களுக்கு எச்சரிக்கை
களுத்துறை, காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடமத்திய, வடமேல், ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
இன்று (21) காலை 7.15 மணி அளவில் மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெட்டியாராச்சிகே டொன் சுஜித் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் வெல்லே சாரங்க என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உறவினர் என தெரியவந்துள்ளது
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன

15 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன்
15 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன்
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று, தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அப்பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஒருவனின் வீட்டில் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், வீட்டிற்கு விரைந்த பொலிஸார், சிறுமியை மீட்டதுடன் சிறுவனை கைது செய்தனர்.
மீட்கப்பட்ட சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார் கைது செய்யப்பட்ட சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது மாணவனின் மர்ம மரணம் தொடர்பிலான சிசிடிவி காட்சி வெளியாகியது .
அந்த காட்சிகள் உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உட்பட 4 சந்தேக நபர்களை கல்முனை நீதிமன்ற கட்டளைக்கமைய சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த வழக்கு கடந்த வியாழக்கிழமை (15) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட
குற்ற கொலை தடயம் அழிப்பு
நிலையில் மௌலவியின் வேண்டுகோளிற்கமைய சிசிடிவி காணொளிகளை அழித்தவர்களை இனங்கண்டு கைது செய்து மன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய நேற்று (20) சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு சிசிடிவி தொழிநுட்பவியலாளர் உள்ளிட்ட 4 பேர் வரவழைக்கப்பட்டு வாக்குமூலம்
பெறப்பட்ட நிலையில் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் ரவூப் தலைமையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாணவனின் மர்ம மரணம் 4 சந்தேக நபர்கள் கைது
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன் 30, 26, 22, 23 வயது மதிக்கத்தக்கவர்கள் ஆவர்.
அத்துடன் கைதான 4 சந்தேக நபர்களையும் கல்முனை நீதிவான் நீதிமன்றில் இன்று (21) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த நீதிமன்ற தவணையின் போது விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட குறித்த வழக்கில் பாதிக்கபட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி உட்பட ஏனைய தரப்பினரின் விடயங்களை ஆராய்ந்த நீதிவான்
கொலை குற்ற தடயங்கள் மீட்க நடவடிக்கை
அழிக்கப்பட்ட காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள மொரட்டுவை கணனி பிரிவிற்கு வன்பொருளை அனுப்பி வைக்குமாறு கட்டளை
பிறப்பித்திருந்ததுடன் நீண்ட சமரப்பணத்தின் பின்னர் மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் கைதான மௌலவியை எதிர்வரும்
பெப்ரவரி மாதம் 29 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்வாறான கொலைகள் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு இன்று வருகை
ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு இன்று வருகை
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் இன்று (19) இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பை ஏற்று அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ளார்.
அவருடன் அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தின் எரிசக்தி மற்றும் வெளிவிவகார அமைச்சுகளின் உயர்மட்ட அதிகாரிகளும் வருகைதரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த குழுவினர் எதிர்வரும் 21ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளனர்
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் போதைப்பொருள் கொடுத்து நண்பனின் உயிரை பறித்த நண்பன்
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் போதைப்பொருள் கொடுத்து நண்பனின் உயிரை பறித்த நண்பன்
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) இளைஞன் ஒருவரால் தனது நண்பருக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டதால் குறித்த நண்பர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நிலையில் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர், அவற்றில் இருந்து மீண்டு, வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நண்பனின் அழைப்பின் பேரில் வீட்டுக்கு அருகில் உள்ள இடத்திற்கு சென்ற வேளை போதை பொருளை இளைஞனுக்கு கொடுத்துள்ளனர்.
நீண்ட காலமாக போதைப்பொருள் பாவனையில் இருந்து மீண்ட நிலையில் , மீண்டும் போதைப்பொருளை பாவித்தமையால் , அதீத போதை காரணமாக இளைஞனின் உடல் நிலை மோசமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் போதைப்பொருள் கொடுத்து நண்பனின் உயிரை பறித்த நண்பன்
அதனை அடுத்து, இளைஞனுடன் போதைப்பொருளை நுகர்ந்த மற்றைய இளைஞன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இளைஞன் தாயாருக்கு தொலைபேசி அழைப்பு எடுத்து , தனது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் , நெஞ்சு வலிப்பதாகவும் கூறியுள்ளார்.
தயார் இளைஞன் கூறிய இடத்திற்கு சென்ற வேளை , மயங்கிய நிலையில் காணப்பட்ட தனது மகனை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை , இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காங்கேசன்துறை பொலிஸார் , இளைஞனை அழைத்து போதைப்பொருளை கொடுத்த , மற்றைய இளைஞனை கைது செய்து , மருத்துவ பரிசோதனைக்காக சட்ட வைத்திய அதிகாரி முன் முன்னிலைப்படுத்தியதை அடுத்து , வைத்திய அறிக்கையில் இளைஞன் போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தம்
கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தம்
கொடுப்பனவு பிரச்சினையை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (19) சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
இது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அண்மையில், வைத்தியர்களுக்கு மாத்திரம் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், சுகாதார அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்துவதாக எழுத்துமூலமான உறுதிமொழியின் பேரில் அவர்கள் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தனர்.
சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவுடனான கலந்துரையாடலில் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய விபத்தில் வெளிநாட்டு தம்பதி உட்பட 3 பேர் காயம்
கட்டுநாயக்க விமான நிலைய விபத்தில் வெளிநாட்டு தம்பதி உட்பட 3 பேர் காயம்
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வெளிநாட்டு தம்பதியரை ஏற்றிச் சென்ற கார், கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோத விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
அதில், வெளிநாட்டு தம்பதி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக நெடுஞ்சாலை சுற்றுலா பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.
இத்தாலிய தம்பதி (76-78) மற்றும் அநுராதபுரம் பந்துலகமைச் சேர்ந்த 42 வயதான சாரதி ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
வெளிநாட்டுக் கணவனும் மனைவியும் நேற்று இரவு 09 மணியளவில் தமது பயணத்தை முடித்துக் கொண்டு இத்தாலி செல்வதற்காக காரில் ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்றுள்ளனர்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தந்திரமானவர் அல்ல அநுரகுமார திஸாநாயக்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தந்திரமானவர் அல்ல அநுரகுமார திஸாநாயக்க
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுவது போல் தந்திரமானவர் அல்ல என்று கூறிய NPP தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, எந்த வகையிலும் ஜனாதிபதி தேர்தலை பிற்போட நினைத்தால் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்னரே, அவர் வீட்டிற்குச் செல்ல நேரிடும் என இன்று தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற புதிய விவாதம் எழுந்துள்ளதாகவும், அது காலங்காலமான கோஷம் எனவும் தெரிவித்தார்.
ரணில் தந்திரமானவர் என்று சிலர் சொல்கிறார்கள்.அவர் பாராளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்தில் ஜனாதிபதியானார். ஜனாதிபதி தேர்தலிலும் தப்பிக்க ஏதாவது செய்வார். ரணில் கூறுவது போல் தந்திரமானவர் அல்ல. அதற்கு முன்னரே அவர் வீட்டிற்கு செல்ல வேண்டியிருக்கும்.
ஜனாதிபதி தேர்தலில் இருந்து தப்பிக்க முயன்றால், ஜனாதிபதியாக பதவியேற்கும் கோட்டாபய ராஜபக்சவின் கோரிக்கையை சஜித் பிரேமதாச நிராகரித்ததால் தான் ரணில் ஜனாதிபதியாக முடியும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தந்திரமானவர் அல்ல அநுரகுமார திஸாநாயக்க
இல்லையெனில் ரணில் இப்போது வெறும் எம்.பி.யாக இருப்பார். பின்னர் சரத் பொன்சேகா ஜனாதிபதியாக பதவியேற்றார்.பொன்சேகா முடிவெடுப்பதற்கு மூன்று நாட்கள் தேவை, மூன்று நாட்கள் தாமதிக்க கோட்டாபய இல்லை.மூன்றாவது தெரிவாக ரணிலிடம் கோரிக்கை விடுத்தார்.தனக்கு நஷ்டம் ஏதும் இல்லை என்பதால் அதனை ஏற்றுக்கொண்டார் என திசாநாயக்க கூறினார்.
ரணில் ஜனாதிபதியாக பதவியேற்கும் மாவீரர் அல்ல எனவும், மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட ரணிலை சிறைபிடிப்பதாக வாக்குறுதியளித்து தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் ஜனாதிபதியானதற்கு வெட்கப்பட வேண்டும் எனவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தல்களில் பெண்கள் தீர்க்கமான காரணியாக இருப்பார்கள் எனத் தெரிவித்த அவர், இலங்கையில் 56 சதவீத வாக்குகளை அவர்கள் பெற்றுள்ளனர் என்றார்.
பாரத் லங்கா வீட்டுத்திட்டம் இன்று ஆரம்பம்
பாரத் லங்கா வீட்டுத்திட்டம் இன்று ஆரம்பம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் இந்திய அரசின் நிதி உதவியுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் – லங்கா எனும் வீட்டுத் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.
முதற்கட்டமாக ஆயிரத்து 300 வீடுகளுக்கு ஒரே தடவையில் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பணம் இடம்பெறவுள்ளது.
இதன் பணிகளை எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
நுவரெலியா, கண்டி, பதுளை, மாத்தளை, கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, காலி, களுத்துறை மற்றும் மொனராகலை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 45 தோட்டங்களில் இன்று நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பண விழா நடைபெறுகின்றது.
இதன்பிரதான நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது
தமிழரசு கட்சிக்குள் குழப்பம் குத்து வெட்டு ஆரம்பம் பறிபோகும் சிறிதரன் தலைவர் பதவி
தமிழரசு கட்சிக்குள் குழப்பம் குத்து வெட்டு ஆரம்பம் பறிபோகும் சிறிதரன் தலைவர் பதவி
தமிழரசு கட்சிக்குள் குழப்பம் குத்து வெட்டு ஆரம்பம் பறிபோகும் சிறிதரன் தலைவர் பதவி ,தமிழரசு கட்சியின் தலைவராக சுமந்திரன் துடிப்பதால் சிறிதரன் பதவியை தட்டி பறிக்க சுமந்திரன் நடவடிக்கை .
சட்டத்தரணி சுமந்திரன் சூத்து மாத்து
இலங்கை ஆளும் ஜனாதிபதியின் சட்டத்தரனியாக விளங்கி வரும் சுமந்திரன் ,இன்றைய புதிய தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்ய பட்ட ஸ்ரீதரனுக்கு எதிராக சூழ்ச்சிகளை செய்து வருகிறார் .
தானே தமிழ் மக்கள் தாதாவாக நினைத்து தமிழ் மக்கள் அரசியல் அபிலாஷைகளை குழிதோண்டி புதைத்து வரும் சுமந்திரன் ,தான் சட்டத்தரணி என்ற வகையில் தமிழரசு கட்சிக்கு எதிராக பாரிய சதி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார் .
தமிழரசு கட்சி மீள் தலைவர் தெரிவு
தமிழரசு கட்சிக்குள் மீள் தலைவர் தெரிவு இடம்பெற வேண்டும் என அந்த கட்சிக்குள் குழப்பங்கள் நிலவி வருவதால் ,மீள ஒரு தேர்தலை நடத்தி அதன் ஊடக தலைவரை தெரிவு செய்திட தயாராக உள்ளதாக ,இன்றைய தமிழரசு கட்சியின் புதிய தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார் .
நீதிமன்றத்தினால் வழங்க படும் அறிவுறுத்தல் மற்றும் அவர்களது மேற்பார்வையின் கீழ் ,மீள ஒரு தேர்தலை நடத்தி அதன் ஊடக கட்சியின் தலைவர் பதவியை தெரிவு செய்திட, தான் தயாராக உள்ளதாக சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்து பர .பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
.இன்றைய இலங்கை செய்திகள் தலைப்பு செய்தி
இந்த விடயம் இன்றைய இலங்கை செய்திகளில் முதன்மை தலைப்பு செய்திகளாக இடம்பிடித்து தமிழரசு கட்சியின் உள்வீட்டு குழப்பத்தை , வெட்டு குத்தை அம்பல படுத்தியுள்ளது ..
- லண்டனில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் விமானம் வீடியோ

- சிறைகளில் நிலவும் அமைதியின்மை குறித்து நீதி அமைச்சர் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் சஜித்

- பல மாகாணங்களில் மணிக்கு 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசும் என முன்னறிவிப்பு

- கனமழையால் மத்திய மலைப்பகுதி நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையை நெருங்குகின்றன

- டிஜிட்டல் உருமாற்றத் திட்டத்தின் கீழ் 10000 பள்ளிகள் இணையத்துடன் இணைக்கப்படவுள்ளன





























