Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பார்க்கிங் டிக்கெட் மோசடிகும்பல் சிக்கியது
பார்க்கிங் டிக்கெட் மோசடிகும்பல் சிக்கியது
பார்க்கிங் டிக்கெட் மோசடிகும்பல் சிக்கியது ஹபராதுவ பீல்லகொட கடற்கரை பூங்காவிற்கு வருகை தரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின்
பணம் வசூலித்த மூன்று நபர்
வாகனங்களை நிறுத்துவதற்கு பணம் வசூலித்த மூன்று நபர்களை உனவடுன சுற்றுலாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள், ஹபராதுவ பிரதேச சபையின் அதிகாரிகள் என்று கூறி வாகனங்களிலிருந்து பணம் வசூலித்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உனவடுன சுற்றுலாப் பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேருந்தை நிறுத்துவதற்கு 1,500 ரூபா
பேருந்தை நிறுத்துவதற்கு 1,500 ரூபாவும் கார்கள் மற்றும் வேன்கள் உள்ளிட்ட பிற வாகனங்களை நிறுத்துவதற்கு 1,000 ரூபாவும் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 34, 35 மற்றும் 41 வயதானவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் ஹபராதுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று (11) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
யாழில் கத்திகுத்து ஒருவர் பலி
யாழில் கத்திகுத்து ஒருவர் பலி
யாழில் கத்திகுத்து ஒருவர் பலி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
புங்குடுதீவு முதலாம் வட்டாம்
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 46 வயதான நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதலை நடத்திய நபரை பிடிக்க முயன்ற இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர்
காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
அம்பருடன் ஒருவர் கைது
அம்பருடன் ஒருவர் கைது
அம்பருடன் ஒருவர் கைது அம்பர் தொகையை (திமிங்கல வாந்தி) வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் திவுலபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திவுலபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவல்
திவுலபிட்டிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், திவுலபிட்டிய – நீர்கொழும்பு வீதியில் உள்ள போமுகம்மன பகுதியில் நேற்று
(10) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரின் வசம் இருந்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 200 கிராம் அம்பர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதன் பெறுமதி 50 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் வத்துருகம, கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 44 வயதானவர் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக திவுலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பெடுத்த நபர்கைது
பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பெடுத்த நபர்கைது
பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பெடுத்த நபர்கைது ,பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் செயலாளர் போல் நடித்து
பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு
மஹரகம பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹெரோயின் வைத்திருந்ததற்காக மஹரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை விடுவிப்பதற்காக சந்தேக நபர் இவ்வாறு அழைப்பு மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக விசேட விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸார் எடுக்கும் எந்தவொரு கைதுகள் அல்லது நடவடிக்கைகளிலும் அமைச்சரோ அல்லது அமைச்சரின்
பணிக்குழாமோ தேவையற்ற அழுத்தங்களையோ அல்லது தேவையற்ற தலையீட்டையோ மேற்கொள்ளாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுவை எதிர்த்துப் போராடுவதற்கும், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கும் பொது
மக்கள் பாதுகாப்பு அமைச்சு தற்போது விசேட தலையீடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சரின் பெயரில்
அதன்படி, பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சரின் பெயரில் அல்லது அமைச்சின் பணிக்குழாம் என்ற பெயரில் எவரேனும் ஆள்மாறாட்டம் செய்தால் அல்லது பொலிஸ் நிலையங்கள்
உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தேவையற்ற அழுத்தம் கொடுக்கப்பட்டாலோ அமைச்சுக்கு அறிவிக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சு, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது
வீதி விபத்துகளில் மூவர் பலி
வீதி விபத்துகளில் மூவர் பலி
வீதி விபத்துகளில் மூவர் பலி ,நாட்டின் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விபத்துகள் நேற்று (09) நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதவாச்சி பொலிஸ் பிரிவில்
அதன்படி, நேற்று அதிகாலை, மதவாச்சி பொலிஸ் பிரிவில் கெபிதிகொல்லேவ – மதவாச்சி வீதியில் இரண்டாவது கிலோ மீட்டர் மைல்கல் அருகில் மதவாச்சி
திசை நோக்கிச் சென்ற வாகனம், வீதியோரத்தில் நடந்து சென்ற ஒருவர் மீது மோதியது.
விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்தவர் மதவாச்சியைச் சேர்ந்த 39 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், படபொல பொலிஸ் பிரிவில் உடுவில, எத்கந்துர வீதியில் தொரல சந்திக்கு அருகில், எத்கந்துர திசையிலிருந்து தொரல திசை நோக்கிச் சென்ற
துவிச்சக்கர வண்டியொன்று வீதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த வாகனத்துடன் மோதியுள்ளது.
துவிச்சக்கர வண்டி செலுத்துனர்
விபத்தில் துவிச்சக்கர வண்டி செலுத்துனர் பலத்த காயமடைந்து உடுவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இறந்தவர் படபொல பகுதியைச் சேர்ந்த 61 வயதானவர் என தெரியவந்துள்ளது.
அத்துடன் வரகாபொல பொலிஸ் பிரிவில் கொழும்பு – கண்டி வீதியில் மாஹேனபாத சந்திக்கு அருகில் கொழும்பு திசை நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம், வீதியை கடந்த பாதசாரி மீது மோதியது.
விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி, வரகாபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இறந்தவர் தொலங்கமுவ பகுதியைச் சேர்ந்த 83 வயதானவர் என தெரியவந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் இன்று விசேடஉரை
ஜனாதிபதி ரணில் இன்று விசேடஉரை
ஜனாதிபதி ரணில் இன்று விசேடஉரை முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று (10) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
இளைஞர் சமூகங்கள் தொடர்பான
இளைஞர் சமூகங்கள் தொடர்பான தற்போதைய நெருக்கடி நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி இதன்போது கருத்து வௌியிடவுள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தை நிறுவுவதில் முன்னோடியாக இருந்த ரணில் விக்ரமசிங்க, அதன் ஆரம்பகால நோக்கங்கள் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள்
இளைஞர் சங்கங்களின் செயல்பாடுகள்
மன்றம் மற்றும் இளைஞர் சங்கங்களின் செயல்பாடுகள் தனது பதவிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து கருத்து தெரிவிக்க உள்ளார்
காலி துறைமுகத்தில் எரிந்த படகுகள்
காலி துறைமுகத்தில் எரிந்த படகுகள்
காலி துறைமுகத்தில் எரிந்த படகுகள் ,காலி மீன்பிடி துறைமுகத்தில் பயன்படுத்தப்படாத பல மீன்பிடி படகுகளில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காலி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு, கடற்படை, காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ
அதிகாரிகள் மற்றும் மீனவ சமூகத்தினரும் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீப்பரவலில் இதுவரை 4 மீன்பிடி படகுகள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரக்பிஅணி இறுதிப் போட்டிக்கு தகுதி
ரக்பிஅணி இறுதிப் போட்டிக்கு தகுதி
ரக்பிஅணி இறுதிப் போட்டிக்கு தகுதி இந்தியாவில் நடைபெற்று வரும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய ரக்பி எழுவர் அடங்கிய செம்பியன்ஷிப் தொடரின்
இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதிப் பெற்றுள்ளது.
இன்று காலை நடைபெற்ற அரையிறுதி போட்டி
இன்று காலை நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சீனாவை 26-17 என்ற கணக்கில் வீழ்த்திய நிலையில், இலங்கை அணி இவ்வாறு இறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது
நாடு திரும்பினார் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம்
நாடு திரும்பினார் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம்
நாடு திரும்பினார் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் ,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) உள்ளிட்ட
குழுவினர் இன்று (10) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.
திருமதி சமந்தா ஜோய் மோஸ்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, திருமதி சமந்தா ஜோய் மோஸ்டின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி
அமரசூராய ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார்.
அவுஸ்திரேலியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளின் பரஸ்பர
அனுகூலங்களை வழங்கும் தற்போதுள்ள ஒத்துழைப்புத் துறைகளை விரிவுபடுத்துவது குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டது
மேலும், சமந்தா ஜோய் மோஸ்டின், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டதோடு பண்டாரகம, மிரிஸ்ஸ மற்றும் வெலிகமவில்
அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்களை
அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்களைப் பார்வையிட்டார்.
அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் உள்ளிட்ட குழுவினரை வழியனுப்பும் நிகழ்வில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன
மற்றும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் குழுவும் இணைந்து கொண்டனர்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களுக்கு அழுத்தம்
புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களுக்கு அழுத்தம்
புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களுக்கு அழுத்தம் ,நடந்து முடிந்த 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் வினாத்தாளுக்கு பதிலளித்த விதம் குறித்து பெற்றோர்கள் மாணவர்களிடம் கேள்வி கேட்பதைத் தவிர்க்க வேண்டும்
என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி கோரியுள்ளார்.
மாணவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்தைக் கழிக்க வாய்ப்பளிக்குமாறும், புலமைப்பரிசில் பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு, குழந்தையின்
குழந்தைப் பருவத்தை அழிக்க வேண்டாம் என்றும் பெற்றோர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், புலமைப்பரிசில் பரீட்சை என்பது ஒரு பரீட்சை மட்டுமே, இதன் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதைத்
தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கருத்து வௌியிட்ட அவர்,
“குறிப்பாக இந்த சிறு பிள்ளைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியாகக் கழிக்க ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்.
புலமைப்பரிசில் பரீட்சையை அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் தடுப்பது நம் அனைவரின் பொறுப்பாகும்.
பிள்ளைகள் தங்கள் திறனுக்கு ஏற்ப பரீட்சை எழுதுகிறார்கள்.
பிள்ளைகளின் திறன்கள் வேறுபட்டவை, எனவே பிள்ளைகளை ஒப்பிட்டுப் பார்த்து, இன்று பரீட்சையில் மாணவர்கள் என்ன எழுதினார்கள் என்று கேட்டு?
அவர்கள் தவறான பதில் எழுதினால், அவர்களை திட்டவோ தண்டிக்கவோ வேண்டாம்.
அவர்கள் சரியான பதில் எழுதினாலும் சரி, தவறான பதில் எழுதினாலும் சரி, அந்த நேரத்தில் பிள்ளைகள் வினாத்தாளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதே முக்கியம்.
பிள்ளைகள் எப்படி பதிலளித்தாலும் சரி
எனவே நம் பிள்ளைகள் எப்படி பதிலளித்தாலும் சரி, பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தை நாம் திரும்பப் பெற முடியாது.
எனவே இந்த குழந்தைப் பருவத்தை பதில்களை எழுதுவதை அடிப்படையாகக் கொள்ளாதீர்கள்.
புலமைப் பரிசில் பரீட்சை என்பது பிள்ளைக்கு ஒரு பரீட்சை மட்டுமே. இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த பரீட்சைகளை எதிர்கொள்ளும் திறனைக் கொண்டுள்ளனர்.
அதனால் புலமைப் பரிசில் பரீட்சையை அடிப்படையாக கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அழுத்தத்திற்கு உள்ளாக்கும் வகையில் செயல்பட வேண்டாம் என்று நான் தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
மகாநாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி
மகாநாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி
மகாநாயக்க தேரர்களை சந்தித்த ஜனாதிபதி கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் வருடாந்த எசல பெரஹெராவின் நிறைவு நிகழ்வில்
கண்டிக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார
கலந்துகொள்ள கண்டிக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (09) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி தரப்பு மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.
முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்து மாநாயக்க தேரர் வண,
திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றதுடன், சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
அஸ்கிரி மகா விஹாரை
பின்னர் அஸ்கிரி மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அஸ்கிரி தரப்பின் மகாநாயக்க வண, வரகாகொட ஸ்ரீ
ஞானரதன தேரரை சந்தித்து நலம் விசாரித்ததுடன், சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்,
தலதா மாளிகையின் எசல பெரஹெரா
தலதா மாளிகையின் பெரஹெரா
தலதா மாளிகையின் எசல பெரஹெரா ,வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெரா இன்று (08) இரவு 6:51 மணிக்கு கம்பீரமாக வீதி வலம் வர உள்ளது.
ஜூலை 30 ஆம் திகதி முதல் கும்பல் பெரஹெராவுடன் தொடங்கிய இந்தத் திருவிழா, கடந்த 9 நாட்களாக வீதி வலம் வந்து, இன்று 10வது நாளாக இறுதி
ரந்தோலி பெரஹெரா
ரந்தோலி பெரஹெராவுடன் உச்சக்கட்டத்தை எட்டுகிறது என்று தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெல தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பங்கேற்கும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இலங்கை ரயில்வே திணைக்களம் விசேட ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
கொழும்பு-கோட்டை, கண்டி மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளிலிருந்து இன்று பல விசேட ரயில்கள் இயக்கப்படுவதாக ரயில்வே பொது மேலாளர் தம்மிக்க ஜயசுந்தர கூறினார்.
இதற்கிடையில், இலங்கை பொலிஸ் இறுதி ரந்தோலி பெரஹெராவிற்காக விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
வீதித் தடைகள், வாகனங்கள்
இதில் வீதித் தடைகள், வாகனங்கள் மற்றும் பொதுமக்களை சோதனை செய்தல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகன நிறுத்த வசதிகள் உள்ளிட்டவை அடங்கும்.
மேலும், பெரஹெரா பாதைகளில் ட்ரோன் இயக்கங்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இறுதி ரந்தோலி பெரஹெராவில் அலங்கரிக்கப்பட்ட யானைகள், பாரம்பரிய கண்டிய நடனக் கலைஞர்கள், தீச்சாலை நிகழ்ச்சிகள் மற்றும் இசைக் குழுவினர் பங்கேற்கின்றனர்.
ஓகஸ்ட் 9 அன்று நீர் வெட்டும் விழா மற்றும் பகல் பெரஹெராவுடன் 2025 கண்டி எசல பெரஹெரா முடிவடைகிறது.
யாழில் துண்டான பெண்ணின் கால்
யாழில் துண்டான பெண்ணின் கால்
யாழில் துண்டான பெண்ணின் கால் ,யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் இன்று (07) யுவதி ஒருவர் ரயிலில் சிக்கி ஒரு காலை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த யுவதி தாமதமாக வந்ததால், புறப்படத் தொடங்கிய ரயிலில் ஏற முயன்றபோது கால் தடுமாறி விழுந்தார்.
இதனால், அவரது ஒரு கால் ரயிலில் சிக்கி துண்டானதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயமடைந்த யுவதி உடனடியாக
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
1பில்லியன் மதிப்புள்ள குஷ் பறிமுதல்
1பில்லியன் மதிப்புள்ள குஷ் பறிமுதல்
1பில்லியன் மதிப்புள்ள குஷ் பறிமுதல் ,கோதட்டுவ மற்றும் கடுவெலவில் ரூ.1 பில்லியன் மதிப்புள்ள குஷ் பறிமுதல்; 2 பேர் கைது
கோதட்டுவ மற்றும் கடுவெல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது சுமார் ரூ.1 பில்லியன் மதிப்புள்ள 10 கிலோகிராம்
குஷ் கஞ்சாவை காவல்துறை சிறப்பு அதிரடிப்படை (STF) பறிமுதல் செய்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்
பாரிய போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாலை, கோதட்டுவ காவல் பிரிவுக்குள் உள்ள மணிகமுல்லா பகுதியிலும், கடுவெல தெற்கு அதிவேக நெடுஞ்சாலை
நுழைவாயிலுக்கு அருகிலும், STF சிறப்பு நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகள் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினர்.
இந்த நடவடிக்கையின் போது, போதைப்பொருள் கடத்தலில் இருந்து கிடைத்ததாக சந்தேகிக்கப்படும் 5.154 கிலோகிராம் குஷ், ஒரு மொபைல்
போன் மற்றும் ரூ.100,000 ரொக்கம் ஆகியவற்றை வைத்திருந்த ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
ஒரு தனி கைது நடவடிக்கையில், மற்றொரு சந்தேக நபரிடம் 5.106 கிலோகிராம் குஷ், ஒரு கார் மற்றும் ரூ.150,000 ரொக்கம் ஆகியவை
கண்டுபிடிக்கப்பட்டன, இது போதைப்பொருள் கடத்தல் வருமானம் என சந்தேகிக்கப்படுகிறது. அவர் கோதட்டுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேக நபர்கள்
35 மற்றும் 64 வயதுடைய சந்தேக நபர்கள் கோதட்டுவ மற்றும் கொழும்பு 14 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளில் இருந்து அவர்களில் ஒருவர் 2021 ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டு, கோட்டை நீதவான்
நீதிமன்றத்தின் உத்தரவின்படி ஒரு வருடம் மற்றும் எட்டு மாதங்கள் தடுப்புக்காவல் உத்தரவின் பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக நபர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய ஒரு நபரின் நில மேலாளராகப் பணியாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தடவைகள் மழை பெய்யும்
பல தடவைகள் மழை பெய்யும்
பல தடவைகள் மழை பெய்யும் இன்று (08) நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
வடக்கு மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, புத்தளம்
மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடக்கு மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) பல தடவைகள்.
மழை பெய்யும் என வானிலை
மழை பெய்யும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய
மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மழை பெய்யும் என வானிலை
இதே நேரத்தில், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக்
குறைப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பொரளை துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி
பொரளை துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி
பொரளை துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் பலி ,பொரளையில் நேற்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி
பொரளையில் உள்ள சஹஸ்புர சிறிசர வீட்டு வளாகத்திற்கு அருகில் நேற்று (07) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு 8:40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் இளைஞர் குழுவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
சந்தேக நபர்கள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் களனியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், கொழும்பு 09 ஐச் சேர்ந்த 21, 22 மற்றும் 23 வயதுடைய மேலும் நான்கு பேர் தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
யாழில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம்
யாழில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம்
யாழில் கரையொதுங்கிய இளைஞனின் சடலம் ,யாழ்ப்பாணம் அக்கரை கடற்பரப்பில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (07) மாலை கரையொதுங்கியுள்ளது.
உயிரிழந்தவர் காரணவாய் பகுதியை சேர்ந்த இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உடற்கூற்று
சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது
பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பழிவாங்கும் அரசு மகிந்தா கவலை
பழிவாங்கும் அரசு மகிந்தா கவலை
பழிவாங்கும் அரசு மகிந்தா கவலை ,அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் செயல்படுகிறது.
தற்போதைய அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை நீக்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி
கொழும்பில் நேற்று (05) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தை வெளியிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
மக்கள் எங்களுக்கு வழங்கிய சலுகை
“மக்கள் எங்களுக்கு வழங்கிய சலுகைகளை விட பெரியது எதுவும் இல்லை. அது எங்களிடம் இருக்கும் வரை, எந்தவொரு சலுகையையும் நீக்குவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை.” என்றார்
கேள்வி – இது நடந்தால், நீங்கள் விஜேராமவை விட்டு வெளியேறி மெதமுலனவுக்குச் செல்ல வேண்டுமா?
பதில் – “மெதமுலன விஜேராமவை விட மிகச் சிறந்தது.”
கேள்வி – உங்கள் கருத்துப்படி, அரசாங்கம் எந்த நோக்கத்திற்காக இதுபோன்ற செயலைச் செய்கிறது?
“பழிவாங்க…” என்றார்.
4 இந்திய மீனவர்கள் கைது
4 இந்திய மீனவர்கள் கைது
4 இந்திய மீனவர்கள் கைது நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் நேற்று (05) இரவு கைது செய்யப்பட்டனர்.
மீன்பிடி படகு
அவர்களுடன் ஒரு மீன்பிடி படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து சென்ற கடற்படையினர், அவர்களை மேலதிக சட்ட
நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்
வெட்டிக் கொலை வட்டிக்காசு பெறசென்றவர்
வெட்டிக் கொலை வட்டிக்காசு பெறசென்றவர்
வெட்டிக் கொலை வட்டிக்காசு பெறசென்றவர் வட்டிக்காசு பெறசென்றவர் வெட்டிக் கொலை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
நாவுல பொலிஸ் பிரிவின் நிகுல பகுதியில் நேற்று (05) இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.
கடனாக வழங்கப்பட்ட எழுபத்தைந்தாயிரம் ரூபாயை வசூலிக்கச் சென்றபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.
இறந்தவர் தம்புள்ளை, களுந்தேவ பகுதியைச் சேர்ந்த 23 வயதானவர் என தெரியவந்துள்ளது.
நிதி தகராறு காரணமாக கொலை
நிதி தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக நிகுல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









































