Posted in இலங்கை செய்திகள்

புலிகளை அழித்தவர்களால் மட்டுமே நாட்டின் பொருளாதரத்தை கட்டி எழுப்ப முடியும் மகிந்த திமிர் பேச்சு

புலிகளை அழித்தவர்களால் மட்டுமே நாட்டின் பொருளாதரத்தை கட்டி எழுப்ப முடியும் மகிந்த திமிர் பேச்சு

முக்கியமான இந்த காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் பிள்ளைகளின் சிறந்த எதிர்காலம் தொடர்பில் மக்கள் சிந்தித்து

செயல்படுவது அவசியமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை வெற்றிகொண்ட தரப்பினராலேயே நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியுமென்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி,

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் கொரோனா வைரஸிற்குப் பின்னரான இலங்கை என்ற தொனிப்பொருளில் பிரதமர் நேற்று

வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அது தொடர்பில் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைக்கு இணங்க 2014ஆம் ஆண்டில் இலங்கையே ஆசியாவில் அபிவிருத்தியில் முன்னணி மிக்க நாடாக

திகழ்ந்தது. 2006−2009 யுத்த காலப்பகுதியில் வருடாந்தம் 6 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி வேகம் யுத்தத்திற்குப்

பின்னர் 2010−2014 ஆண்டு காலகட்டத்தில் 7.4 சதவீதமாக அதிகரித்தது.

2005 ஆம் ஆண்டு தேசிய உற்பத்திக்கு சமமாக 90 சதவீதமாக இருந்த முழு கடன் 2014 இறுதியில் 75 சதவீதமாக குறைவடைந்தது. பங்குச்சந்தையின் விலைச்சுட்டு 2005 இல் 1,922 ஆக இருந்ததுடன்

அது 2014 இறுதியில் 7,299 ஆக அதிகரித்திருந்தது. 2005 இல் 1,242 அமெரிக்க டொலராக இருந்த தனிநபர் வருமானம் 2014 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் 3819 அமெரிக்கடொலர் என

மும்மடங்காக அதிகரித்தது. நாடு சுதந்திரமடைந்த பின்னர் பாரிய உட்கட்டமைப்பு நிர்மாண வேலைத்திட்டங்கள் 2006−2014 கால கட்டத்திலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த அனைத்து பொருளாதார வெற்றிகளையும் நாம் 2007 உலக உணவு நெருக்கடி நிலமையிலேயே அடைந்துள்ளோம். 2008−2009 உலக நிதி நெருக்கடியும் உலக வரலாற்றிலேயே பாரிய எரிபொருள்

விலை அதிகரிப்பும் ஏற்பட்டன. 2006−2009 காலப்பகுதிகளில் உலகச் சந்தையில் எரிபொருள் பெரல் ஒன்றின் விலை 74 அமெரிக்க

டொலராக இருந்த நிலையில் 2010−2014 காலகட்டங்களில் அது 103 டொலராக அதிகரித்தது.

2015 ஜனவரியில் அவை அனைத்தும் தலைகீழாக மாறியது. அந்த ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் ஐந்து சதவீதமாக குறைவடைந்ததுடன் அதற்கு அடுத்த வருடங்களில் அப்படியே

குறைந்து கடந்த வருடத்தில் அது 2.3 வீதமாக குறைவடைந்தது. ரூபாவின் பெறுமதிக்கு இணங்க அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 2014ஆம் ஆண்டு 130 ரூபாவாக இருந்த நிலையில் 2019 அக்டோபர்

மாதம் அது 181 ஆக அதிகரித்தது. நாட்டின் மொத்த கடன் சுமை 2014 இறுதியில் 7.39 ட்ரில்லியன் ரூபாவாக இருந்த நிலையில் 2019

அக்டோபர் மாதத்தில் அது 12.89 ட்ரில்லியனாக 74.4 விதமாக அதிகரித்துள்ளது.

2015 ஜனவரியிலிருந்து 2019 அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் நல்லாட்சி அரசாங்கம் ‘ சவரின் பொன்ட்’ அபிவிருத்தி பிணைமுறி, சிண்டிகேடட் லோன், கரன்சி ஸ்வோப் என

நிதி நிறுவனங்களில் 26 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு கடனாக பெற்றிருந்தது. நல்லாட்சி அரசாங்கம்

இந்தளவு கடன்களை பெற்றிருந்த நிலையில் எந்தவொரு வருமான மார்க்கத்தையும் உருவாக்கவில்லை. 2014ஆம் ஆண்டு

இறுதிப்பகுதியில் 7,299 ஆக இருந்த பங்குச் சந்தையின் பொது விலைச்சுட்டு 2019 அக்டோபர் மாதமளவில் 5,990 வரை குறைவடைந்தது.

இந்தளவு பொருளாதார வீழ்ச்சி 2015−2019 காலகட்டங்களில் இடம்பெற்றதுடன் அக்காலத்தில் மசகு எண்ணை பெரல் ஒன்றின் விலை 60 அமெரிக்க டொலராக வரலாற்றிலேயே மிகக் குறைந்த விலையில் காணப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் இந்தளவு பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதற்கு எந்தவித வெளிக் காரணங்களும் கிடையாது. இந்த 2015−2019 காலகட்டங்களில் இந்தியா, பங்காளதேஷ் போன்ற நாடுகள் வேகமான வளர்ச்சியை கண்டன.

அதேவேளை 2019 ஏப்ரல் குண்டுவெடிப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீளவில்லை. அந்த வகையில் 2019 நவம்பர் 16ஆம் திகதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு

பொருளாதாரம் முழுமையாக சீர்குலைக்கப்பட்டு இருந்த நாட்டையே பொறுப்பேற்க வேண்டியிருந்தது. இத்தகைய சூழ்நிலையிலேயே கொரோனா வைரஸ் தாக்கம் முழு உலகினதும்

பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்துள்ளது. இந்த சூழ்நிலையானது 1930 காலகட்டங்களில் நிலவிய மிக மோசமான

பொருளாதார நிலமைக்கு ஒப்பானதாக அமையலாமென எதிர்வு கூறப்படுகிறது.
இந்தநிலையில் முழு உலகமும் பொருளாதார வீழ்ச்சி மற்றும்

வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ள நிலையில் இலங்கையர்கள் சௌபாக்கியம் தேடி வெளிநாட்டுக்குச் செல்வதும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில்

நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே எமது மாற்று வழியாகும். இதில் கொண்டுள்ள இந்த அச்சுறுத்தலிலிருந்து நாட்டை கட்டியெழுப்ப

நாம் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் நாட்டின் எதிர்காலம் இருள் மிக்கதாகிவிடும்.

அண்மையில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தர தமது சம்பளத்தில் கணிசமான அளவை அன்பளிப்பு செய்துள்ளதுடன் அரசாங்க ஊழியர்களிடம் அது தொடர்பில் அவர் வேண்டுகோள்

விடுத்தபோது எதிர்க்கட்சி அதனை விமர்சனமாக முன்னெடுத்தது. சுயமாக தமது சம்பளத்திலிருந்து ஒரு பகுதியை வழங்க முடியுமா என அவர் வேண்டுகோள் விடுத்த போதும் அதனை சரியாக புரிந்து

கொண்டிருந்த நிலையிலும் எதிர்க்கட்சியினர் கட்டாயமாக சம்பளத்தில் ஒரு தொகை வெட்டப்படுமென பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

பீ.பி ஜயசுந்தர 2006−2014 காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்த அரச அதிகாரியாவார். அத்தகைய திறமையான அதிகாரி மீது சேறு பூசி நாட்டின்

பொருளாதார எழுச்சி வேலைத்திட்டத்தை முழுமையாக சிதைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் என்பது இதிலிருந்து தெளிவாகிறது. எனவே சேறு பூசுதல் மற்றும் பொய் பிரசாரங்களை

மேற்கொள்ளும் நல்லாட்சி அரசியல் கலாசாரத்திற்கு உலகின் தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் நிலையில் இந்த இடமும் கிடைக்கப்போவதில்லையென்பது எனக்கு தெரியும்.

எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரும் உலக நிலைமைகளின் கீழ் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் எமது பிள்ளைகளின் எதிர்காலம் ஆகியவை நாட்டை ஆட்சி செய்யும் திறமை

படைத்தவர்களின் செயற்பாடுகளிலேயே தங்கியுள்ளது. ஜேர்மன் சிறந்த பலமிக்க பொருளாதாரத்தை கொண்டிருந்த வேளையிலேயே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொள்ள

நேர்ந்ததால் அதனை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்ததென ஜேர்மன் உயர்ஸ்தானிகர் எஞ்சலா மேர்க்கெல் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கை அதற்கு மாறான ஒரு நிலையிலேயே இந்த வைரஸ் தாக்கத்தை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

இந்த முக்கியமான தருணத்தில் இலங்கையில் அனைத்து பிரஜைகளும் நிலைமை தொடர்பு சரியாக சிந்தித்து மிகவும் பொருத்தமானவர்களை தெரிவு செய்வது அவசியமாகும்.

கொரோனா வைரஸ் நாட்டை பாதித்துள்ள நிலையில் நாட்டை நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் செய்திருந்தால் எதிர்கொள்ள நேரும் விளைவை நான் கூற வேண்டியதில்லை. தற்போது நாட்டை

ஆட்சி செய்யும் ஜனாதிபதியும் ஏனையவர்களும் யுத்தத்தை வெற்றி கொண்டவர்கள். பாரிய சவால்களுக்கு மத்தியில் சுதந்திரத்தின்

பின் நாட்டை பாரிய பொருளாதாரத்தில் கட்டியெழுப்பிய குழுவினராகும்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் இலங்கையை உலகின் முன்னணி நாடாக முன்னேற்றுவது அத்தகைய தலைவர்கள்தான் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பெற்ற பெண்

      ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பெற்ற பெண்

      இலங்கை அனுராதபுரத்தில் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தயை இளம் பெண் ஒருவர் பெற்றுள்ளார்

      சிங்கள கடற்படை இராணுவ சிப்பாயாக உள்ளவரின் மனைவியே இவ்வாறு குழந்தையை பிரசவித்துள்ளார்

      எனினும் பிறந்த சிசுக்களை கணவன் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது

      ,தற்போது இவர் தனிமை படுத்தல் முகாமில் சிறை வைக்க பட்டுள்ள நிலையில் காணொளி வாயிலாக தனது சிசுக்களை பார்வையிட்டு நெகிழ்ந்துள்ளார்

          Posted in இலங்கை செய்திகள்

          திருமண வைபவங்கள் 100 பேருக்கு மேல் கலந்து கொள்ள தடை

          திருமண வைபவங்கள் 100 பேருக்கு மேல் கலந்து கொள்ள தடை

          திருமண வைபவங்களை ஏற்பாடு செய்யும் பொழுது அதற்கென திருமணம்

          நடைபெறும் பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியை பெறவேண்டும்.

          திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை Invitees 100 பேருக்கு வரையறுக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

          திருமண வைபவம் மற்றும் அனைத்து வைபவங்களும் சுகாதார அமைச்சின் மூலம் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கு

          அமைவாகவே நடைபெற வேண்டும் என்று சுகாதார அமைசசின் சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு

          பாதுகாப்பு பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.

          வைபவங்களின் போது முககவசம் அணிவதும் அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

          திருமண வைபவங்கள்
          திருமண வைபவங்கள்
              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையில் 64,387 பேர் காவல்துறையால் அதிரடி கைது

              இலங்கையில் 64,387 பேர் காவல்துறையால் அதிரடி கைது

              இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீழ்த்தியில் உலாவிய சுமார் 64,387


              பேரை தாம் கைதுசெய்துள்ளதாக இலங்கை காவத்துறையினர் தெரிவித்துள்ளனர

              அத்துமீறி உலாவிய நபர்களுக்கு தண்டப்பணம் அறவிட பட்டுள்ளதுடன் ,

              அவர்கள் பயணித்த வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன

              மேலும் பிறிதொரு சுற்றிவளைப்பில் 345 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

                  Posted in உலக செய்திகள்

                  மெக்சிகோவில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

                  மெக்சிகோவில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

                  மெக்சிகோவில் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத யானைகள் (மம்முத்) உள்ளிட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களின் எலும்புகூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

                  மெக்சிகோவில் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
                  எலும்புகூடு

                  மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள இடத்தில் அந்த நாட்டில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு

                  சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராட்சத யானைகள் (மம்முத்) உள்ளிட்ட விலங்குகள் மற்றும் மனிதர்களின் எலும்புகூடுகள் கண்டெடுக்கப்பட்டன.

                  இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ‘‘கொலம்பியாவின் மிகப்பெரிய விலங்கினங்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராட்சத யானை, காட்டெருமை,

                  ஒட்டகங்கள், குதிரைகள் ஆகியவற்றின் எலும்புக்கூடுகளுடன் மனித எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன’’ என கூறினர்.பனியுக காலத்தின் விலங்குகளின் எலும்புக்கூடுகளை

                  கண்டுபிடிப்பதில் இந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த டிசம்பரில் இதே தொல்லியல் குழுவினர் சிறு சிறு விலங்குகளின் எலும்புகளைக் கண்டெடுத்தது

                  நினைவுகூரத்தக்கது.ஸ்பானிய
                  காலனியாதிக்கத்துக்கு முந்தைய நாகரிகத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இந்த ஆய்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் விமானநிலைய கட்டுமானத்தை தடுத்து

                  நிறுத்துவதற்காகத்தான் இந்த ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற கருத்தும் பொதுமக்களிடையே நிலவுகிறது. ஆனால் தொல்லியல் குழு இதனை மறுத்துள்ளது.

                  மெக்சிகோவில் 3500 ஆண்டுகளுக்கு
                  மெக்சிகோவில் 3500 ஆண்டுகளுக்கு
                      Posted in இலங்கை செய்திகள்

                      கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1117 ஆக உயர்வு

                      கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1117 ஆக உயர்வு

                      இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 1117.

                      இந்த நோயாளர்களில் 674 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

                      இன்றைய தினத்தில் இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட பதிய நோயாளர்களின் எண்ணிக்கை 28 ஆகும்.

                      இந்த நோயாளர்களில் ஜவர் குவைட் நாட்டில் இருந்து வற்து திருக்கோணமலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்களாவர்.

                      ஏனைய 23 பேரும் குவைட்டில் இருந்து வந்த பிளனர் மின்னேரிய தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள்.

                      இதேபோன்று இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளர்களில் 434 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

                      நேற்றைய தினத்தில் (2020.05.23) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 1998 ஆவதுடன் இத்தினத்தில்

                      அடையாளங்காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 21 ஆகும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

                          Posted in உலக செய்திகள்

                          அவுஸ்ரேலியாவில் காரில் மோதி ஒரு சிறுவர்கள் பரிதப பலி

                          அவுஸ்ரேலியாவில் காரில் மோதி ஒரு சிறுவர்கள் பரிதப பலி

                          அவுஸ்ரேலியா southwest Queensland பகுதியில் காரில் மோதி இரு சிறுவர்கள் பரிதாபகமாக பலியாகியுள்ளனர்

                          பத்து வயது மற்றும் பதினாறு வயது இளம் சிறுவர்களே இந்த கோரவிப்பதில் சிக்கி தமது உயிரை இழந்துள்ளனர்

                          ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்

                              Posted in உலக செய்திகள்

                              அமெரிக்காவில் சாராய கடைக்குள் புகுந்த கார்

                              அமெரிக்காவில் சாராய கடைக்குள் புகுந்த கார்

                              அமெரிக்கா புளோரிடா பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று

                              சாரதியின் கட்டு பாட்டை இழந்து மதுபான கடைக்குள் புகுந்துள்ளது

                              அப்பபோழுது அங்கு மதுபான கொள்வனவில் ஈடுபட்டு கொண்டிருந்த

                              பெண் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளார்

                              கடையின் கண்ணாடிகள் மற்றும் ,சாராய போத்தல்கள் என்பன உடைந்து சிதறிய வண்ணம் காணப்படுகின்றன

                              மினி வானுக்குள் சிக்கியவர்கள் காப்பாற்ற பட்டுள்ளனர் ,மேற்படி சம்பவம்

                              தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

                              அமெரிக்காவில் சாராய
                              அமெரிக்காவில் சாராய
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கற்குவாரியில் வீழ்ந்து 8 வயதுடைய சிறுவன் பலி.

                                  கற்குவாரியில் வீழ்ந்து 8 வயதுடைய சிறுவன் பலி.

                                  வவுனியா சிதம்பரபுரம் பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்குளம் யுனிட் -2 பகுதியில் கற்குவாரியில் வீழ்ந்து 8 வயதுடைய சிறுவன் மரணமடைந்துள்ளார்.

                                  இன்று (24) மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த கற்குவாரியில் கல்

                                  அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் குறித்த கற்குவாரிக்கு சென்ற அச் சிறுவன் கற்குவாரியிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் போத்தல் ஒன்றினை கோரியுள்ளார்.

                                  அதன் பின்னர் அச் சிறுவன் கல் அகழ்வு இடம்பெறும் இடத்திற்கு சென்று தவறுதலாக கல் அகழ்வுக்காக வெட்டப்பட்ட குழியினுள் (நீர் நிரம்பிய நிலையில்) வீழ்ந்து நீரில் முழ்கியுள்ளான்.

                                  சென்ற சிறுவனை காணவில்லை என கல் அகழ்வு இடம்பெறும் இடத்திற்கு சென்ற கற்குவாரியிலுள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்

                                  சிறுவன் குழியினுள் உயிருக்கு போராடுவதனை அவதானித்து உடனடியாக அயலவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.

                                  அயலவர்களின் உதவியுடன் சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் சமயத்தில் சிறுவன்

                                  உயிரிழந்துள்ளார். சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

                                      Posted in உலக செய்திகள்

                                      எங்கள் மீது அமெரிக்கா குற்றம் சுமத்துகிறது – வெடித்த பறக்கும் சீனா ,அமெரிக்கா மோதல்

                                      எங்கள் மீது அமெரிக்கா குற்றம் சுமத்துகிறது – வெடித்த பறக்கும் சீனா ,அமெரிக்கா மோதல்

                                      சீனா அமெரிக்காவின் தொடர் பொய்யான பரப்புரைகளை

                                      கண்டித்துள்ளது ,கொரனோ நோயானது பரவிய நிலையில் தாமே

                                      உற்பத்தி செய்து பரப்பியதான பொய்யான தகவல்களை பரப்பி எமது

                                      நாட்டின் நற்பெயருக்கு அமெரிக்கா களங்கம் ஏற்படுத்தி வருகிறது என அமெரிக்கா இடித்துரைத்துள்ளது

                                      இது சீனா ,அமெரிக்காவுக்கு இடையிலான நேரடி பனிப்போரை உருவாக்காகியுள்ளது


                                      இவ்விதம் அமெரிக்கா தொடர்ந்து செல்லும் என்றால் அது பெரும் விளைவுகளை

                                      சந்திக்க நேரிடும் என்ற வகையில் சீனாவின் அடர்த்தியான பதில் வெளிவந்துள்ளது

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          35 பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் பதவி உயர்வு

                                          35 பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் பதவி உயர்வு

                                          தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமையவும் தேர்தல்கள்

                                          ஆணைக்குழுவின் அனுமதிவுடனும் இவர்களுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

                                          மே மாதம் 9 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

                                          இவ்வாறு பதவி உயர்வு பெற்றவர்கள் பொலிஸ் திணைக்களத்தில் பல்வேறு பிரிவுகளில் கடமையாற்றவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்தள்ளது.

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              5000 ரூபா கொடுப்பனவுக்காக பாலியல் இலஞ்சம் கேட்கும் அரச அதிகாரிகள்

                                              5000 ரூபா கொடுப்பனவுக்காக பாலியல் இலஞ்சம் கேட்கும் அரச அதிகாரிகள்

                                              மலையகத்தில் 5000 ரூபா நிவாரணம் வழங்களில் இழுத்தடிப்புகளும்,

                                              கழுத்தறுப்புகளும் தொடர்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்தள்ளார்.

                                              பதுளையில் வைத்து நேற்று (23) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

                                              மேலும், இந்த நிவாரண பணம் தம்மாலேயே வழங்கப்படுவதாக ஒரு சில

                                              மலையக அரசியல்வாதிகள் தம்பட்டம் அடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                                              நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்பபடிவங்கள் 25 ரூபா முதல் 100 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

                                              அத்துடன் ஒரு சில இடங்களில் 5000 ரூபா கொடுப்பனவுக்காக பாலியல்

                                              ரீதியான இலஞ்சம் கோரப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  கொரனோ தொற்றினால் 283 கடல்படையினர் குமடைந்தனர்

                                                  கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 33 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட

                                                  பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் 2020 மே 22 ஆம் திகதி அவர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

                                                  இவ்வாறு வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் 22 நபர்கள் கொழும்பு கடற்படை பொது

                                                  வைத்தியசாலையிலும், 04 நபர்கள் ஐ.டி.எச் வைத்தியசாலையிலும், 06 நபர்கள் முல்லேரியாவ வைத்தியசாலையிலும், 01 நபர் வெலிகந்த வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றனர்.

                                                  குறித்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுகொண்டிருந்த போது, அவர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின்

                                                  அவர்களின் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பது தெரியவந்தது, அதன் படி அவர்கள் 2020 மே 22 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

                                                  அதன்படி, இந்த 33 நபர்களும் உட்பட 283 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து

                                                  வெளியேறினர். வெளியேறிய கடற்படை வீர்ர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      வன்னி மக்கள் காப்பகம் – டென்மார்க் அமைப்பின் மிக பெரும் பேரிடர் உதவி video

                                                      வன்னி மக்கள் காப்பகம் – டென்மார்க் அமைப்பின் மிக பெரும் பேரிடர் உதவி photo

                                                      இலங்கை தீவின் வன்னி பகுதியில் கொரனோவால் முடக்க பட்ட நிலையில் தமது வாழ்வா தாரத்தில் பின்தங்கிய வறுமையில்

                                                      வசித்து வந்த மக்களுக்கு, வன்னி காப்பகம் டென்மார்க் அமைப்பின் ஊடாக 80குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்க பட்டன .

                                                      பிரதேச வாரியாக தெரிவு செய்ய பட்ட

                                                      01- முட்கொம்பன் பகுதியில் – 22 குடும்பங்கள்
                                                      02- பரந்தன் பகுதியில் – 06 குடும்பங்கள்


                                                      03- மலையாளபுரம் பகுதியில் – 12 குடும்பங்கள்
                                                      04- கோரக்கன்கட்டு பகுதியில் – 20 குடும்பங்கள்


                                                      05- ஆனந்தநகர் பகுதியில் – 19 குடும்பங்கள்
                                                      06- உதயநகர் பகுதியில் – 01 குடும்பம்.

                                                      ஆகிய 80 குடும்பங்களிற்கான இவ் நிவாரணப் பொதிகளை வன்னி மக்கள் காப்பகம் புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில்

                                                      டென்மார்க் ஊடாக சுதன்(Middelfart தொலைபேசி- 004560479043), தேசிகன் ( Haderslev தொலைபேசி – 004527574583 ) ஆகியோரின்

                                                      ஒழுங்கமைவு ஏற்பாட்டினூடாக பரந்தன் இளைஞர் வட்ட கழக உறுப்பினர்களினால் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு

                                                      பொதிகள் தயார்செய்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது

                                                      சுமார் இராண்டாயிரம் ரூபா பெறுமதியான உணவு பொருட்கள் ஒவ்வொரு

                                                      வருக்கும் வழங்க பட்டுள்ளது,
                                                      இரண்டாம் கட்டமாக நடைமுறை படுத்த பட்டு வினியோகிக்க பட்ட காட்சி படங்கள் இவை

                                                      வன்னி மக்கள் டென்மார்க் அமைப்பின் ஊடாக மக்கள் வழங்கிய நிதி

                                                      பங்களிப்பில்
                                                      இரண்டாம் கட்டமாக எண்பது குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன

                                                      ,இவ் உதவிகளை வழங்கிய டென்மார்க் மக்கள் மற்றும் இந்த உதவி

                                                      திட்டத்தை வழி நடத்திய பரந்தன் இளைஞர் வட்ட கழக அமைப்பினருக்கும்

                                                      ,
                                                      அனைத்து மக்கள் சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும்
                                                      வன்னி

                                                      மக்கள் காப்பகம் டென்மார்க் அமைப்பினர் தெரிவித்து கொள்கிறது

                                                      நன்றி.

                                                      வன்னி மக்கள் காப்பகம்.
                                                      டென்மார்க்.

                                                      தேசிகன்

                                                      video பார்க்க இதிலோ அழுத்துங்க .அல்லது படத்தில் அழுத்தாவும்

                                                      https://www.facebook.com/vanni.makkalkappakam/videos/115575946827491/
                                                      https://www.facebook.com/vanni.makkalkappakam/videos/115575946827491/
                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          பாகிஸ்தான் பயணிகள் விமானத்தை வீழ்த்திய பறவை – வெளியான அதிர்ச்சி தகவல் – வீடியோ

                                                          பாகிஸ்தான் பயணிகள் விமானத்தை வீழ்த்திய பறவை – வெளியான அதிர்ச்சி தகவல் – வீடியோ

                                                          பாகிஸ்தான் பயணிகள் விமான இயந்திரத்திற்குள் பறவை ஒன்று

                                                          மோதி சிக்கி கொண்டதில் அந்த விமானம் இயந்திரத்தில் தீ பிடித்து வீழ்ந்து நொறுங்கியது

                                                          விமானத்தின் விமானி காட்டு பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு

                                                          விமான இயந்திரத்தைம் இழந்து விட்டோம் என்கிறார் ,அவர் உறுதி ப் படுத்துமாறு

                                                          கோரிய பொழுது அபாய குறியீட்டு இலக்கத்தை பயன் படுத்துகிறார் ,அவ்வாறான அந்த உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது

                                                          விமானி விமானத்தை சாதூரியமாக இறக்க முற்பட்ட பொழுதும் அது தோல்வியில் முடிந்து வீழ்ந்து நொறுங்கியது

                                                          கட்டிடங்களில் மோதிடா விட்டால் பயணிகள் தப்பித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என நம்ப படுகிறது

                                                          பாகிஸ்தான் பயணிகள்
                                                          பாகிஸ்தான் பயணிகள்
                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          கடற்றொழில் படகுகளை தரைக்கு கொண்டுவருவதில் கடற்படை கப்பல்.

                                                          கடற்றொழில் படகுகளை தரைக்கு கொண்டுவருவதில் கடற்படை கப்பல்.

                                                          அம்பன் சூறாவளியினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினால் இந்தோனேஷியா கடற்பரப்பிற்கு அருகாமையில்

                                                          இழுத்துச்செல்லப்பட்டு கடலில் தத்தழித்துக்கொண்டிருந்த இலங்கை மீன்பிடிப் படகுகளை தரைக்கு கொண்டுவருவதில்

                                                          இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘சமுதுர’ கப்பல், ஈடுபட்டிருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.

                                                          இலங்கை மீன்பிடிப் படகுகளை மீட்பதற்காக அங்கு சென்ற கடற்படை

                                                          கப்பல் படகுகளுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டது

                                                          அம்பாந்தோட்டை மற்றும் காலி மாவட்டங்களிலிருந்து சென்ற குறித்த மீன்

                                                          பிடிப் படகுகளுடன் 180 மீனவர்களை மீட்பதில் கடற்படை கப்பல் ஈடுபட்டுள்ளது.

                                                              Posted in உலக செய்திகள்

                                                              பட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்

                                                              பட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்

                                                              கொரோனா ஊரடங்கு நேரத்தில் பட வாய்ப்பு இல்லாததால் பிரபல நடிகர் தெருவில் பழம் விற்று சம்பாதித்து வருகிறார்.

                                                              பட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்
                                                              பழ வியாபாரம் செய்யும் சோலங்கி திவாகர்


                                                              இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த

                                                              மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பலரும் வேலையில்லாமல் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

                                                              இந்நிலையில் இந்தியில் ஆயுஷ்மான் குரானா உடன் ட்ரீம் கேர்ள்ஸ் படத்தில் நடித்த நடிகர் சோலங்கி திவாகர் கொரோனா ஊரடங்கால்

                                                              பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தனது அன்றாட தேவைகளுக்காக தெருவில் பழம் விற்று சம்பாதித்து வருகிறார்.

                                                              சோலங்கி திவாகர்

                                                              மேலும், படவாய்ப்பு இல்லாத காரணத்தால் குடும்பச் செலவு, வாடகை பட வாய்ப்பு இல்லாததால் தெருவில் பழம் விற்கும் நடிகர்

                                                              பட வாய்ப்பு இல்லாததால்
                                                              பட வாய்ப்பு இல்லாததால்
                                                              Posted in உலக செய்திகள்

                                                              கொரனோவால் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி

                                                              கொரனோவால் 3 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி

                                                              உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்தது.

                                                              3 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலி – கொரோனா அப்டேட்ஸ்
                                                              கோப்பு படம்
                                                              ஜெனீவா:

                                                              உலகம் முழுவதும் 213 நாடுகள்/பிரதேசங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

                                                              ஆனாலும், கொரோனாவால் ஏற்படும் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

                                                              இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 40 ஆயிரத்தை கடந்தது.

                                                              தற்போதைய நிலவரப்படி, 53 லட்சத்து 23 ஆயிரத்து 639 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ்

                                                              பரவியவர்களில் 28 லட்சத்து 11 ஆயிரத்து 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                                              . சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 589 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

                                                              கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 21 லட்சத்தை கடந்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு உலகம்

                                                              முழுவதும் இதுவரை 3 லட்சத்து 40 ஆயிரத்து 323 ஆக அதிகரித்துள்ளது.

                                                              கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

                                                              அமெரிக்கா – 97,655
                                                              பிரேசில் – 21,116
                                                              ஸ்பெயின் – 28,628
                                                              இங்கிலாந்து – 36,393
                                                              இத்தாலி – 32,616
                                                              பிரான்ஸ் – 28,289
                                                              ஜெர்மனி – 8,352
                                                              ஈரான் – 7,300
                                                              கனடா – 6,250
                                                              மெக்சிகோ – 6,989
                                                              பெல்ஜியம் – 9,237
                                                              நெதர்லாந்து – 5,788

                                                              Posted in உலக செய்திகள்

                                                              வரும் மாதம் இந்தியாவுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் – ஐ.நா. எச்சரிக்கை

                                                              வரும் மாதம் இந்தியாவுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் – ஐ.நா. எச்சரிக்கை

                                                              அடுத்த மாதம் இந்தியாவுக்கு பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

                                                              அடுத்த மாதம் இந்தியாவுக்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்கும் – ஐ.நா. அமைப்பு எச்சரிக்கை
                                                              வெட்டுக்கிளி

                                                              உலகிலேயே பேரழிவை ஏற்படுத்தும் இடம்பெயர் பூச்சியாக ‘பாலைவன வெட்டுக்கிளி’ என்ற வகையான வெட்டுக்கிளி

                                                              கருதப்படுகிறது. இவை பயிர்களை அழித்து உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடியவை. அதன்மூலம் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு உண்டாகும்.

                                                              பாலைவன வெட்டுக்கிளி – கோப்புப்படம்

                                                              தற்போது, இந்த வெட்டுக்கிளிகள் கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, உகாண்டா,

                                                              சூடான், தான்சானியா, ஏமன் உள்ளிட்ட 10 நாடுகளில் மையம் கொண்டுள்ளன. அங்கு பெரும் நாசத்தை உண்டாக்கி வருகின்றன.

                                                              அதே சமயத்தில், அடுத்த மாதம் இந்தியாவுக்கு படையெடுக்கும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் வெட்டுக்கிளி

                                                              கணிப்பு மைய மூத்த அதிகாரி கெய்த் கிரஸ்மன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

                                                              அவர் ஆன்லைன் மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

                                                              கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 10 நாடுகளில் வெட்டுக்கிளி ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட

                                                              நாடுகளுடன் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், அதற்கான நிபுணர்களையும், மருந்துகளையும்

                                                              விமானம் மூலம் அனுப்பி, வானில் இருந்து மருந்து தெளித்தல் ஆகியவை எங்கள் பணிகள் ஆகும். இதற்காக உலக நாடுகள் 15

                                                              கோடியே 30 லட்சம் டாலர் நிதி ஒதுக்க வேண்டும்.அடுத்த மாதம் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இந்த வெட்டுக்கிளிகள் இந்திய

                                                              பெருங்கடலை கடந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் படையெடுக்கும். அத்துடன், வடக்கு சோமாலியாவில் இருந்து வேறு சில பூச்சி இனங்களும் வரக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              தொலைகே காட்சியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த போறாங்களாம் – இலங்கை அரசு

                                                              தொலைகே காட்சியில் மாணவர்களுக்கு பாடம் நடத்த போறாங்களாம் – இலங்கை அரசு

                                                              மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ள மாணவர்களின் நலன் கருதி அரச

                                                              தொலைக்காட்சி கல்விச் சேவைகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் கல்வி ஒளிபரப்பு பணிகளை மேலும் துரிதப்படுத்த சர்வதேச

                                                              மற்றும் உள்நாட்டு அரச சார்பற்ற அரச தொண்டாற்று நிறுவனங்களின் உதவியைப் பெற்றுக் கொடுக்க மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

                                                              இதன்படி மாவட்ட அரசாங்க அதிபரின் முயற்சியில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஒருங்கிணைப்புடன் அரச தொலைக்காட்சிகளில்

                                                              முன்னெடுக்கப்பட்டுவரும் இலவசக் கல்விப் போதனைகளை தடங்கலின்றி தொடர்ச்சியாக நடாத்துவதற்கு வசதியாக குறித்த

                                                              தொண்டார்வு நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு நேற்று (22) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது.

                                                              அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இவ் விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.

                                                              சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புன்னியமூர்த்தி மற்றும் இம்மாவட்டத்தில் செயற்படும்

                                                              பல்வேறு அரச, அரச சார்பற்ற தொண்டார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

                                                              இக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர் கொரோனா பரவும் சூழ்நிலையால் இம் மாவட்டத்தில் தடைப்பட்டுள்ள கல்வி நடவடிக்கைகள் மாற்று வழிகள் மூலம் முன்னெடுக்கப்பட

                                                              வேண்டுமென்று மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரக்குமார் தலைமையிலான கல்வி அதிகாரிகள் குழுவென்று முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில்

                                                              இக்குழுவினரும் தாமும் எடுத்துக் கொண்ட நடவடிக்கையின் பயனாக இந்த அரச தொலைக்காட்சி பாட போதனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவித்தார்.

                                                              பயனுள்ள இப்பணியினை மேலும் முன்னெடுத்துச் செல்ல மேலதிக நிதியுதவி மற்றும் ஒத்துழைப்புக்கள் தேவைப்படுவதனால்

                                                              இம்மாவட்டத்தில் செயல்படும் தொண்டார்வ நிறுவனங்கள் இந்த மகத்தான கல்விப் பணிக்கு ஒத்துழைப்பு நல்க முன்வரவேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இந்த

                                                              வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட தொண்டார்வ நிறுவனங்களின் சில பிரதிநிதிகள் இதற்கான பங்களிப்பை செய்வதற்கு தாம்

                                                              முன்வருவதாகவும், ஏனையோர் தமது நிதி அன்பளிப்பாளர்களின் உதவிகளைப் பெற்று உரிய திட்டத்திற்கு பங்களிப்பு நல்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தனர்.

                                                              கொவிட் 19 கொரோனாபாதிப்பினால் கல்வி பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலன்கருதி அரச ஊடகங்களான இலங்கை

                                                              ரூபவாகினி கூட்டுத்தாபனமும், வசந்தம் தொலைக்காட்சியும் இலவச கல்விப் போதனைகளை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.