Posted in உலக செய்திகள்

அவுஸ்ரேலியா பாடசாலையில் கொரனோ – அடித்து பூட்ட பட்ட இரண்டாவது பாடசாலை

அவுஸ்ரேலியா பாடசாலையில் கொரனோ – அடித்து பூட்ட பட்ட இரண்டாவது பாடசாலை

அவுஸ்ரேலியா primary school at Moriah College in Queens Park went பாடசாலை அடித்து பூட்ட பட்டுள்ளது

இங்கு கல்வி பயின்ற மாணவர் ஒருவர் கொரனோ நோயின் தாக்குதலுக்கு

உள்ளான நிலையில் அடையாள படுத்த பட்டதால் இந்த பாடசாலை மறு அறிவித்தல் வரை திறக்க படாது என அறிவிக்க பட்டுள்ளது

இரண்டாவது பாடசாலையிலும் இது போன்ற செயல் இடம்பெற்றுள்ளதால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் நிலவுகிறது

அவுஸ்ரேலியா பாடசாலையில்
அவுஸ்ரேலியா பாடசாலையில்
      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டனில் முதலாவது முட்டாக்கு போட்ட முசுலீம் நீதிபதியாக – வீர பெண் நியமனம்

      பிரிட்டனில் முதலாவது முட்டாக்கு போட்ட முசுலீம் நீதிபதியாக – வீர பெண் நியமனம்

      பிரிட்டனின் முஸ்லீம் அணியும் அவர்கள் மத மற்றும் கலாச்சார அடையாளமான ,

      முக்காடு அணிந்த படி பணியாற்றும் முகமாக பரிஸ்டராக விளங்கிய

      நாப்பது வயதுடைய இளம் பெண்மணி நீதிபதியாக தெரிவு செய்ய பட்டுளளார்

      Raffia Arshad, 40, என்பவரே இவ்விதம் தெரிவு செய்ய பட்டுளளார் ,இவர் Yorkshire, north England,Midlands circuit.
      நீதி மன்றில் பணியாற்றுகின்றார்

      மக்கள் ஜனநாயக நாடு என்பது இதை தான் ,வாழ்த்துக்கள் அம்மணி

      பிரிட்டனில் முதலாவது
      பிரிட்டனில் முதலாவது
      Posted in உலக செய்திகள்

      பிரிட்டனில் mp வீட்டில் பிறந்த நாள் – உள்ளே புகுந்த பொலிஸ்

      பிரிட்டனில் mp வீட்டில் பிறந்த நாள் – உள்ளே புகுந்த பொலிஸ்

      பிரிட்டன் பாரளுமன்ற உறுப்பினர் Tory MP, வீட்டில் இடம்பெற்ற நாப்பதாவது

      பிறந்த நாளினை அடுத்து அங்கு உள்நுழைந்த போலீசார் அங்கிருந்தவர்களை விரட்டியடித்தனர் .

      கொரனோ நோயின் காலத்தில் அவரது வீட்டில் இடம்பெற்ற இந்த பிறந்த நாள் வைபவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

      மேலும் அவரது வீட்டின் வெளியே பதாகை கட்டி தொங்க விட பட்டிருந்தது


      மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் மேலதிக நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளவிலை

          Posted in இலங்கை செய்திகள்

          வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர

          வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை அழைத்துவர

          கொவிட் 19 நோய்த்தொற்று பரவலுக்கு மத்தியில் நிர்க்கதியாகவுள்ள அல்லது பல்வேறு கஷ்டங்களுக்கு

          முகம்கொடுத்துள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக புதிய முறைமையொன்று தயாரிக்கப்படவுள்ளது.

          நாளை நடைபெறவுள்ள கலந்துரையாடலின் போது புதிய நிகழ்ச்சித்திட்டம் குறித்து தீர்மானிக்கப்படும். வெளிநாடுகளில்

          உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் ஜுன் மாத விமானப் பயணம் அதற்கு ஏற்ப திட்டமிடப்படும்.

          நோய்த்தொற்று உலகளாவிய ரீதியில் உள்ள காரணத்தினால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை

          நாட்டுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது.


          சீனாவின் வூஹான் நகரில் இருந்த மாணவர்கள் உள்ளிட்ட 33 இலங்கையர்கள் பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர். நோய்த்தடுப்பு நடவடிக்கையின் பின்னர்

          அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். யாத்திரை சென்று இந்தியாவின் சில நகரங்களில் நிர்க்கதியாகவிருந்த 839 இலங்கையர்கள் மார்ச் 19 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தனர்.

          கடந்த மே 25ஆம் திகதியாகும் போது 20நாடுகளில் இருந்து 5485 பேர் இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களில் 4826 பேர் வெளிவிவகார அமைச்சினாலும் வெளிநாடுகளில் உள்ள

          இலங்கை தூதரகங்களினாலும் இனம்காணப்பட்டவர்களாகும். பீசீஆர் பரிசோதனையின் பின்னர் அவர்களில் 05 வீதமானவர்கள்

          அல்லது 0.01 வீதமானோர் கொரோனா நோய்த்தொற்றுடையவர்களாக உறுதிசெய்யப்பட்டிருந்தனர்.

          எனினும் அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயிலிருந்து வருகை தந்த 197 பேரில் 22 பேர் நோய்த்தொற்றுடையவர்கள் என உறுதிசெய்யப்பட்டது.

          குவைட்டிலிருந்து வருகை தந்த 462 பேரில் 150 பேர் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களில் 96 பேர்

          கொரோனா நோயாளிகள் என இனம்காணப்பட்டுள்ளனர். மேலும் 300 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

          குவைட்டிலிருந்து நாட்டுக்கு வருகைதந்த அனைவரும் பல்வேறு காரணங்களினால் அந்நாட்டில் தடுப்புநிலையங்கள் அல்லது நாடுகடத்தப்படுவதற்கான முகாம்களில் இருந்தவர்களாகும்.

          நோய்த்தொற்றுடையவர்களாக இனம்காணப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதும் முக்கியமானதாகும். இந்த பின்புலத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு

          அழைத்துவரும் முறைமையை திருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அழைத்துவரப்படாத போது அவர்களுக்கு ஏற்படக்கூடிய நிலைமைகளை மனிதாபிமான ரீதியாக நோக்கி

          அவர்களை அழைத்து வரும் நடவடிக்கையை தொடர்ந்தும் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

          புதிய முறைமையை தயாரிப்பதற்காக நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, ஜனாதிபதி அலுவலகத்தின்

          வெளிவிவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் ஜயனாத் கொலம்பகே, விசேட வைத்திய நிபுணர் பபா பலிஹவதன,

          மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

              Posted in இலங்கை செய்திகள்

              ஆறுமுகம் தொண்டமான் திடீர் மரணம்

              ஆறுமுகம் தொண்டமான் திடீர் மரணம்

              மலையக மக்கள் விடுதலைக்கு போராடி வந்த ஆறுமுகம் தொண்டமான்

              அவர்கள் திடீரென உடல் நலம் குன்றியதால் மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்


              இவரது மரணம் மலையக மக்களுக்கு பெரும் இழப்பு என அந்த மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர்

                  Posted in இலங்கை செய்திகள்

                  இந்தியா இலங்கை திடீர் பேச்சு – உள்ளே நடந்தது என்ன …?

                  இந்தியா இலங்கை திடீர் பேச்சு – உள்ளே நடந்தது என்ன …?

                  புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய உயர் ஸ்தானிகர் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.

                  இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் போக்லே இன்று குடியரசுக் கட்டிடத்தில் வெளிநாட்டு

                  உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

                  2020 மே 14ஆந் திகதி தகைமைச் சான்றுகளை சமர்ப்பித்த பின்னர் உயர் ஸ்தானிகராக தனது பணிகளை ஆரம்பித்த முதலாவது தினத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, பரவலான

                  இருதரப்புப் பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை வெளிநாட்டு உறவுகள் அமைச்சருடன் உயர் ஸ்தானிகர் போக்லே பரிமாறிக் கொண்டார்.

                  புதிய உயர் ஸ்தானிகரை வரவேற்ற அமைச்சர் குணவர்தன, இந்தியாவுடனான வலுவான மற்றும் ஆழ்ந்த ஒத்துழைப்புக்கான இலங்கையின் முழுமையான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்திய

                  அதே நேரத்தில், கோவிட்-19 தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் இடம்பெற்ற தெளிவான நல்லெண்ணப் பரிமாற்றங்கள் தொடர்பில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். அண்டை நாடுகளுடனான

                  தனது முதல் கொள்கையினூடாக, இலங்கையுடனான நெருக்கமான ஒத்துழைப்புக்கான பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழிகளை உயர் ஸ்தானிகர் போக்லே தெரிவித்தார்.

                  கோவிட்-19 நோய் நிலைமைக்குப் பின்னரான புதியதொரு சர்வதேச சூழலில், கடல்சார் ஒத்துழைப்பு, பாதுகாப்புப் பரிமாற்றங்கள், உணவு மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்தல், திறன்

                  விருத்திக்கான மேம்பட்ட உதவி மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றின் மூலம் பரஸ்பரம் நன்மை பயக்கும் வர்த்தகம், முதலீடு, வளர்ச்சி மற்றும் அரசியல் உறவுகளை நோக்கி

                  பணியாற்றுவதற்கு இரண்டு பிரமுகர்களும் ஒப்புக்கொண்டனர். இரு நாடுகளுக்குமிடையிலான இந்து – பௌத்த கலாச்சார

                  உறவுகளின் பண்டைய அடித்தளத்தின் அடிப்படையில், சுற்றுலாப் பரிமாற்றங்களை ஆரம்பிப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.

                  நிலுவையிலுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஏனைய இருதரப்பு ஆவணங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு இரு

                  தரப்பினரும் மேலும் உடன்பட்டனஇந்த சந்திப்பின் போது, வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க மற்றும்

                  வெளிநாட்டு உறவுகள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      2 ,வாரங்களுக்குப் பின்னரே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பம்

                      2 ,வாரங்களுக்குப் பின்னரே பாடசாலைகளை மீண்டும் ஆரம்பம்

                      கொவிட் 19 தொற்று பரவலுக்கு பின்னர் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் திகதியை இன்னும் ஒரு வாரம் அல்லது இரண்டு

                      வாரங்களில் அறிவிக்கக் கூடியதாக இருக்குமென்று கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரு தெரிவித்தார்.

                      கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

                      66 நாட்களுக்குப்பின்னர் இன்று முழுநாட்டிலும் மீண்டும் வழமையான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதில் எதிர்வரும் ஒரு வாரக் காலப்பகுதியில் சமூகததின் செயற்பாடு

                      போக்குவரத்துத் துறையிலான விடயங்கள் முதலான விடயங்கள் ஆராயப்படும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார். இதன்

                      அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

                      பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் பேச்சுவார்;த்தை நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

                      பாடசாலை மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது பல கட்டங்களின் கீழ் இடம்பெறும் . முதல் கட்டத்தின் கீழ் உயர்தரத்தில்

                      கல்வி பயிலும் மாணவர்களுக்காக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

                      நாட்டில்; 43 இலட்சம் பாடசாலை மாணவர்கள் கல்வி பயிலுகின்றனர். இவர்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர்.இதனால் இவர்களது போக்குவரத்து

                      வசதிகளுக்காக போக்குவரத்து அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.


                      தென்கொரியாவில் 4 மாதங்களுக்கு பின்னரே பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டன. பிரிட்டனில் கொவிட் தொற்றுக்கு மத்தியில் ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

                      எல்ரீரீயுடனான போரை முடிவுக்கு கொண்டு வந்தது போன்று இதனை நாம் செய்ய முடியாது. கொரோனா வைரசு தொற்று சர்வதேச ரீதியில் பெரும் பிரச்சினையாக இன்று அமைந்துள்ளது.

                      இலங்கையிலும் அது உண்டு. இந்த விடயங்களை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்த கல்வி அமைச்சர்

                      பாடசாலை மாணவர்களை பாதுகாத்து அதாவது பாடசாலைகளை மூடி கொவிட் 19 தொற்றிற்கு எதிரான போராட்டத்தை

                      ஆரம்பித்தோம். இதே போன்றே இதனை முடிவிற்கு கொண்டு வந்து நாம் மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்போம் என்பதே எமது

                      நிலைப்பாடு. மாணவர்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்ட பின்னரே பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கபடும் என்று கல்வி அமைச்சர் டலஸ் அளகப்பெரு மேலும் தெரிவித்தார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1278 ஆக அதிகரிப்பு

                          கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1278 ஆக அதிகரிப்பு

                          இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 1278 ஆக அதிகரித்துள்ளது..

                          இன்றைய தினத்தில் இதுவரையில் பதிவான கொரோனா தொற்று புதிய நோயாளர்களின்; எண்ணிக்கை 96ஆகும்.

                          இந்த நோயாளர்களில் 88 பேர் குவைட் நாட்டிலிருந்து வந்த பின்னர் மின்னேரியா மற்றும் திருகோணமலை தனிமைப்படுத்தல் மத்திய

                          நிலையங்களில் தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்கள். ஏனைய

                          8 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டடுள்ள கடற்படை அங்கத்தவர்களாவர்.

                          இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொரோனா தொற்றுக்குள்ளான

                          மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 1278 ஆகும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தள்ளது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              குவைத்திலிருந்து இலங்கை தந்த 90 பேருக்கு கொரோனா.

                              குவைத்திலிருந்து இலங்கை தந்த 90 பேருக்கு கொரோனா.

                              குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த 90 பேர் இதுவரையில் கொரோனா

                              வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கான பஸ் சேவைகள் ஆரம்பம்

                                  யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கான பஸ் சேவைகள் ஆரம்பம்

                                  யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கான பஸ் சேவைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டது

                                  கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து சேவை இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து

                                  நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையினர் பஸ் சேவைகள் அக்கரைப்பற்று, கண்டி, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கான பஸ் சேவையை ஆரம்பித்துள்ளனர்.

                                  இன்று அதிகாலையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில்

                                  ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்புக்கான சேவை நீர்கொழும்பு வரைக்கும் இடம்பெறுவதாக யாழ் மத்திய பேருந்து நிலைய பொறுப்பதிகாரி தனராஜ் தெரிவித்தார்.

                                  இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த சேவையானது ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பஸ் சேவை இடம்பெறவுள்ளதாகவும் எனினும் இது காலப்போக்கில்

                                  அதிகரிப்பதற்குரிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் எனினும் பஸ் சேவையினை பெற்றுக் கொள்ளும் பொதுமக்கள் சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார

                                  நடைமுறைகளை பின்பற்றி தங்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

                                  நாட்டில் கொரானா தொற்றுநோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் முகமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்குச் சட்டம்

                                  அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து தடைபட்டு வந்த நிலையில் இன்றைய தினம் நாடு

                                  பூராகவும் ஊரடங்கு சட்டம் தளர்த்ப்பட்டுள்ள நிலையில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

                                  உள்ளூர் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து பஸ் சேவைகளையும் அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொதுமக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் முகமாக உள்ளூர் சேவைகள் அதிகரிக்கப்பட வுள்ளன..

                                  இன்றைய தினம் தனியார் போக்குவரத்து சேவைகளும் வழமைபோல் இடம்பெற்று வருகின்றது எனினும் வெளி மாவட்டங்களுக்கான தனியார் பஸ்சேவைகள்

                                  ஆரம்பிக்கப்படவில்லை அதாவது வடக்கு மாகாணத்துக்குட்பட்ட மாவட்டங்களுக்கு மட்டுமே தனியார் போக்குவரத்து சேவை இன்று இடம்பெற்று வருகின்றது.

                                      Posted in உலக செய்திகள்

                                      ஜப்பானில் கொரனோ தடை நீக்கம் – இயல்பு வாழ்வில் மக்கள்

                                      ஜப்பானில் கொரனோ தடை நீக்கம் – இயல்பு வாழ்வில் மக்கள்

                                      கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமலில் இருந்த தேசிய அவசரநிலை தற்போது முழுவதும் தளர்த்தப்பட்டுள்ளது.

                                      ஜப்பானில் அமலில் இருந்த அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்வு

                                      கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பான் நாட்டில் ஏப்ரல் 7 முதல் அவரச நிலை பிரகடனம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் 7

                                      மாகாணங்களில் அமலில் இருந்த ஊரடங்கு பின்னர் ஏப்ரல் 16 ஆம் தேதி நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது.

                                      ஊரடங்கு காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. உணவு விடுதிகள், வணிக நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன.

                                      இதற்கிடையில், கடந்த சில வாரங்களாக ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவு வேகம் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

                                      தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் மொத்தம் 16 ஆயிரத்து 581 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 830 பேர் உயிரிழந்துள்ளனர்.

                                      குறிப்பாக நேற்று மட்டும் நாடு முழுவதுமே மொத்தம் 31 பேருக்கு தான் புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

                                      ஷின்ஜோ அபே

                                      இந்நிலையில், தலைநகர் டோக்கியோவில் செய்தியாளர்களை சந்தித்த ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, நாடு முழுவதும் அமலில் உள்ள அவசர நிலை பிரகடனத்தை முழுவதும் முடிவுக்கு

                                      கொண்டுவருவதாக தெரித்தார். மேலும், ஊரடங்கில் அமலில் இருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தினார்.

                                      இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘நாடு முழுவதும் அமலில் உள்ள அவசரநிலை பிரகடனம் முடிவுக்கு வருகிறது. ஊரடங்கு

                                      அமல்படுத்தி ஒன்றரை மாதத்திற்கு மேலாகியுள்ளது. தற்போது நாம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டோம்.

                                      அவசரநிலையை தளர்த்துவதால் வைரஸ் முற்றிலும் அழிந்து விட்டது என அர்த்தம் அல்ல. கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டம் தொடரும்’’ என்றார்.

                                          Posted in உலக செய்திகள்

                                          5 வயது சிறுவனின் அசாத்திய விமானப்பயணம்

                                          5 வயது சிறுவனின் அசாத்திய விமானப்பயணம்

                                          பெற்றோர், உறவினர்கள் உடன் இல்லாமல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்த 5 வயது சிறுவனின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்டியுள்ளது.

                                          5 வயது சிறுவனின் அசாத்திய விமானப்பயணம்
                                          சிறுவன் விஹன் சர்மா
                                          பெங்களூரு:

                                          ஊரடங்கு காரணமாக தடைபட்டிருந்த உள்நாடு விமான போக்குவரத்து தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் பல

                                          பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விமான போக்குவரத்தையும் பயன்படுத்தியவண்ணம் உள்ளனர்.

                                          இதற்கிடையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது விஹன் சர்மா என்ற 5 வயது சிறுவன் பெங்களூரில் உள்ள தனது தாயை சந்திக்க

                                          முடியாமல் டெல்லியில் சிக்கிக்கொண்டான். தனது மகனை சுமார் 3 மூன்று மாதங்கள் பார்க்க முடியாமல் சர்மாவின் தாயார் மிகுந்த வருத்தத்தில் இருந்தார்.

                                          இந்நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு விமான போக்குவரத்து மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. இதையடுத்து,

                                          டெல்லியில் இருந்து சர்மாவை பெங்களூரு அழைத்து வர அவனது தாயார் உரிய ஏற்பாடுகளை செய்தார். இதற்காக டெல்லியில்

                                          இருந்து பெங்களுரூ வரும் விமானத்தில் சிறப்பு வகுப்பில் டிக்கெட் பதிவு செய்தார்.

                                          தாயுடன் விஹன் சர்மா

                                          இதையடுத்து, உறவினர்கள் உதவியுடன் சர்மா டெல்லி விமான நிலையம் வந்தடைந்தான். அங்கிருந்து விமான பயணத்தை

                                          தொடங்கிய சர்மா தனி ஆளாக பெற்றோர், உறவினர்கள் என யாரின் துணையும் இல்லாமல் பெங்களூரு வந்தடைந்தான்.

                                          விமானத்தில் சிறுவன் சர்மா சிறப்பு வகுப்பு பயணி பிரிவில் பயணம் மேற்கொண்டான்.

                                          டெல்லியில் இருந்து தனி ஆளாக பெங்களூரு வந்திறங்கிய தனது மகன் சர்மாவை கண்டதும் விமான நிலையத்தில் காத்திருந்த

                                          சிறுவனின் தாய் அவனை ஆரத்தழுவி தனது பாசத்தை வெளிப்படுத்தினார்.

                                          டெல்லியில் இருந்து பெங்களூரு வரை விமானம் மூலம் பெற்றோர், உறவினர்கள் உதவி இல்லாமல் தனி ஆளாக பயணித்து வந்த 5

                                          வயது சிறுவன் சர்மாவின் தைரியம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

                                          5 வயது சிறுவனின்
                                          5 வயது சிறுவனின்
                                              Posted in இலங்கை செய்திகள்

                                              தீயில் எரிந்த மூன்று கடைகள் – கண்ணீரில் முதலாளிகள்

                                              தீயில் எரிந்த மூன்று கடைகள் – கண்ணீரில் முதலாளிகள்

                                              இலங்கை அம்பாலங்கோடை பகுதியில் உள்ள மூன்று கடைகள் திடீரென

                                              தீயில் எரிந்து நாசமாகின ,இந்த தீவிபத்தால் கடைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன

                                              இந்த தீ விபத்து எவ்வாறு பரவியது என்பது தொடர்பில் தெரியவரவில்லை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  19 சிங்கள கடற்படையினர் கொரனோவில் இருந்து விடுதலை

                                                  19 சிங்கள கடற்படையினர் கொரனோவில் இருந்து விடுதலை

                                                  19 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி உள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

                                                  அதன்படி இதுவரையில் 332 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து

                                                  வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

                                                      தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

                                                      ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல்

                                                      ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு

                                                      உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான ஆறாவது நாள் விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது

                                                          Posted in உலக செய்திகள்

                                                          கராச்சி விமான விபத்துக்கு பைலட்டின் அலட்சியம்தான் காரணம்- எச்சரிக்கையை மீறியதாக தகவல்

                                                          கராச்சி விமான விபத்துக்கு பைலட்டின் அலட்சியம்தான் காரணம்- எச்சரிக்கையை மீறியதாக தகவல்

                                                          கராச்சி விமான விபத்துக்கு பைலட்டின் அலட்சியம் தான் காரணம் என்றும், கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கையை

                                                          கண்டுகொள்ளாமல் தரையிறக்க முயன்றதால் விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

                                                          கராச்சி விமான விபத்துக்கு பைலட்டின் அலட்சியம்தான் காரணம்- எச்சரிக்கையை மீறியதாக தகவல்
                                                          விபத்து பகுதியில் நடைபெற்ற மீட்பு பணி
                                                          கராச்சி:

                                                          பாகிஸ்தானின் லாகூரில் இருந்து நேற்று முன்தினம் கராச்சி நோக்கி சென்ற பயணிகள் விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்க முற்பட்டபோது அருகில் உள்ள குடியிருப்பில் விழுந்து

                                                          நொறுங்கியது. இந்த விபத்தில், விமானத்தில் இருந்த 97 பேர் மரணம் அடைந்தனர். 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

                                                          இந்நிலையில், விமானம் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டு நிலைய எச்சரிக்கையை பைலட் மீறியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

                                                          விமானம் விழுந்து நொறுங்கிய பகுதி

                                                          மதியம் 1.05 மணிக்கு லாகூரில் புறப்பட்ட அந்த விமானம் 2.30 மணிக்கு கராச்சியில் தரையிறங்கவேண்டும். 2.30 மணிக்கு கராச்சியில் இருந்து 15 நாட்டிக்கல் மைல் தொலைவில் விமானம்

                                                          பறந்தபோது, தரையில் இருந்து 7000 அடி உயரத்தில் பறப்பதற்கு பதிலாக 10000 அடி உயரத்தில் பறந்துள்ளது. இதனைக் கவனித்த

                                                          விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம், உயரத்தை குறைக்கும்படி பைலட்டுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

                                                          ஆனால், விமானம் பறக்கும் உயரத்தை குறைப்பதற்கு பதிலாக, சரியாக இருப்பதாக கூறி உள்ளார். கராச்சி விமான நிலையத்தை அடைய 10 நாட்டிக்கல் மைல் இருந்தபோது, விமானம் பறக்கும்

                                                          உயரம் 3,000 அடிக்கு பதிலாக 7,000 அடியாக இருந்துள்ளது. எனவே, இரண்டாவது முறை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் எச்சரிக்கை

                                                          விடுத்ததாக கூறப்படுகிறது. அப்போதும் தனக்கு திருப்தி அளிப்பதாக கூறிய பைலட், விமானத்தை தரையிறக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              கொரோனா – உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரிப்பு

                                                              கொரோனா – உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரிப்பு

                                                              இலங்கையில் கொரோனா வைரசு தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.

                                                              குவைத்தில் இருந்து வந்த பின்னர் திருகோணமலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்த பெண் இன்று

                                                              உயிரிழந்ததையடுத்தே கொரோனா வைரசு தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பத்தாக அதிகரித்துள்ளது.

                                                              குவைத்தில் இருந்து வந்த பின்னர் திருகோணமலை தனிமைப்

                                                              படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்த 51 வயது பெண் திடீரென உயிரிழந்துள்ளார்.

                                                              இந்தப்பெண் கொரோனா வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர் என்ற ரீதியில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள்

                                                              பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிடார்.

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  சமூக இடைவெளி விதிமுறைகளை மீறுவோர் நாளை முதல் கைது – பொலிஸ் எச்சரிக்கை

                                                                  சமூக இடைவெளி விதிமுறைகளை மீறுவோர் நாளை முதல் கைது – பொலிஸ் எச்சரிக்கை

                                                                  நாளைய தினம் நாடுமுழுவதிலும் ஊரடங்கு சட்டம் பகல் வேளையில் தளர்த்தப்படுகிறது.

                                                                  இக்காலப்பகுதிக்குள் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத போதிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கத் தவறுவோருக்கு எதிராக சட்ட

                                                                  நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இன்று நாட்டு மக்களுக்கு அறிவித்தார் .

                                                                  ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படட போதிலும் அத்தியாவசிய தேவைகளுக்கும் நிறுவனங்களில் கடமையாற்றுவோர் தவிர்ந்த

                                                                  ஏனையோர் வீடுகளிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

                                                                  2 மாதங்களுக்கு மேலதிகமாக ஊரடங்கு சட்டத்திற்குட்பட்டிருந்த மக்கள் அதற்கு முன்னர் எவ்வாறு செயற்பட்டிருந்தார்களோ

                                                                  தற்பொழுது கொரோனா வைரசு தொற்ற தடுப்பிற்கு மத்தியில் அவ்வாறு செயற்பட கூடாதென்றும் அவர் அறிவுறுத்தினார்.

                                                                  ஊரடங்கு சட்டத்தைப் போன்று கொரோனா தொற்று தடுப்பு சட்ட விதிகளுக்கு அமைவாக சுகாதார அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டவகையில் சமூவிதிகளை மீறுவோருக்கு

                                                                  எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரமுண்டு. குற்றவியல் சட்டத்திற்கு சமமான வகையில் இந்த சட்ட விதிகளும் அமைந்திருப்பதாக தெரிவித்த அவர் சுகாதார

                                                                  சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்கவினால் பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கும் வகையிலான விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

                                                                  நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி அடையாளங் காணப்பட்டார். அதன் பின்னர் 18ஆம் திகதியும் இவ்வாறானோர் அடையாளங்

                                                                  காணப்பட்டனர். புத்தளம், கொச்சிகடை உள்ளிட்ட பொலிஸ் பிரதேசங்களுக்கு ஆரம்பத்தில் தொற்று நோய் தடுப்புக்கான பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு பின்னர்

                                                                  படிப்படியாக நாடு முழுவதிலும் கொரோனா வைரசை தடுப்பதற்காக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

                                                                  கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் சமூக இடைவெளியை பேணாதவர்களுக்கு எதிராக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. சிவில் உடையில் பொலிஸாரை

                                                                  கடமையில் நாம் இதற்காக ஈடுபடுத்தவுள்ளோம். சமூக இடைவெளியை கடைபிடிக்காதவரை கைது செய்வதற்காக இந்த நடவடிக்கை சிவில் உடையிலுள்ள பொலிஸார் இவர்களை

                                                                  அடையாளங் காணும் பொழுது அந்த இடத்திற்கு பொலிஸார் விரைவார்கள். காணொளி போன்ற நவீன தொழில் நுட்பத்தை

                                                                  பயன்படுத்தி இவ்வாறானோரை அடையாளங் காண்பதற்கும் நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்

                                                                  கொழும்பு , கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த ஊரடங்கு சட்டம் நீண்டகாலம் அமுலில் இருந்தது, இருப்பினும் கடந்த 2 வாரக் காலப்பகுதிகளில் நடைமுறையில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு

                                                                  பொதமக்களின் செயற்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


                                                                  அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே இந்த மாவட்டங்களில் பொதுமக்களுக்கு அனுமதியளிகக்கப்படுகின்றது.
                                                                  ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 65, 000 பேர் கைது

                                                                  செய்யப்பட்டனர். 18 000 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.. சுமார் 30, 000 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டதுடன் அதனை மீறி

                                                                  செயல்பட்ட 7000 பேருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

                                                                  கொரோனா வைரசு தொற்றை தடுப்பதற்காக ஜனாதிபதி , பிரதமர், இராணுவ தளபதி, சுகாதார பிரிவினர், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் மேற்கொண்ட திட்டமிட்ட நடவடிக்கையின் காரணமாக

                                                                  குறிப்பிடத்தக்க முன்னோட்டத்தை கண்டுள்ளோம். உலக நாடுகளில் இந்த தொற்று தீவிரம் அடைந்துள்ளது. இருப்பினும் நாம் எமது நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமான பெறுபேறுகளை

                                                                  கண்டுள்ளோம். இதற்கு மக்களின் அர்ப்பணிப்பு முக்கியமாக அமைந்தது. இந்த வெற்றியை நாம் தொடர்ந்து தக்க வைத்துக்

                                                                  கொள்ள வேண்டும். இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

                                                                  உடல் பயிற்சி நிலையங்கள், ஸ்பா மற்றும் திரையரங்குகளை மீளத்திறக்க அனுமதிவழங்கப்படவில்லை சிகையலங்கார

                                                                  நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களில் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியம் என்றும் கூறினார்.

                                                                  கொழும்பு மாவட்டத்திலேயே பொருளாதாரத்திற்கான வர்த்தக நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்ட பலவகையுண்டு..

                                                                  இங்கு ஊரடங்கு தற்பொழுது இல்லை எனவே பொதுமக்கள் பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துவது முக்கியமானதாகும்.

                                                                  1.சுயதொழிலில் ஈடுபடுவோர் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அத்தியாவசிய தேவைகளை கொண்டுள்ளோர் தவிர்ந்த ஏனையோர் வீடுகளில் இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

                                                                  1. சமூக இடைவெளி இதற்க மிகவும் முக்கியமானதாகும். இதனை கருத்தில் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும்.

                                                                  சுமார் 2 மாதங்கள் மற்றும் 2 வாரங்களிற்கு பின்னர் தமது நிறவனங்களுக்கு பணிக்காக வருவோர் கைலாகு கொடுத்து மகிழ்வது வழமை இது தவிர்க்க்பபட வேண்டும். எமது

                                                                  பாரம்பரியத்திற்கு அமைவாக வணக்கம் தெரிவித்து வரவேற்பது பொருத்தமாகும், கைலாகு கொடுப்பது கட்டி அரவணைப்பதன்

                                                                  மூலம் கொரோனா தொற்று பரவுவதற்கு ஏதுவாக அமையும். இந்த பழக்க வழக்கங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

                                                                  இருமல் தும்மலைக் கொண்டிருப்பவர்கள் அடையாளங் காணப்பட்டால் அவர்கள் தொடர்பில் நிறுவனம் அல்லது ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

                                                                  . இது குறித்து சுகாதார பிரிவிற்கு அறிவித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிவது முக்கியமானதாகும். நுகர்வோர் நிறுவனங்களில் கடந்த

                                                                  காலங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. நாம் கவனத்தில் கொண்டோம். தொடர்ந்தும் நிறுவனங்கள் இவ்வாறு

                                                                  செயற்படுமாயின் நிறுவனத்தின் உரிமையாளர் அல்லது முகாமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கெர்ளப்படும்.

                                                                  ஹோட்டல்களை திறப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. சமைத்த உணவை

                                                                  பரிமாறுவோருக்கும்,,பெட்டிகடைகளைத் திறப்பதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இத்தொழிற்துறையினருக்கு எதிராக நாம் செயல்படவில்லை. இதில் சுகாதார நடைமுறைகள்

                                                                  முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. அதற்காக இவர்கள் காத்திருக்க வேண்டும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறினார்.

                                                                  .இரவு நேர ஊரடங்கு சட்டத்தின் போது கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு விதிமுறைகளின் கீழ் பொலிஸார்

                                                                  செயற்படுவர். ஏனைய மாவட்டங்களிலும் பொலிஸார் செயற்படுவர் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.

                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      கடைகளை உடைத்து பணத்தை திருடி சென்ற கொள்ளை கும்பல்

                                                                      கடைகளை உடைத்து பணத்தை திருடி சென்ற கொள்ளை கும்பல்


                                                                      இலங்கை கட்டன் நுவரெலியா பகுதியிகள் அதிகாலை வேளை கடைகள் இரண்டுக்கும் நுழைந்த திருடர்கள்


                                                                      அங்கிருந்த பணம் ,மற்றும் சிகரட் ,விலை உயர்ந்த பொருட்களை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளனர்

                                                                      அங்கு பொறுத்த பட்டிருந்த கமராவில் பதிய பெற்ற காடசிகளை வைத்து

                                                                      அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

                                                                      கடைகளை உடைத்து
                                                                      கடைகளை உடைத்து
                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                          யாழில் புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு நஷ்ட்ட ஈடு – அரசு அறிவிப்பு

                                                                          யாழில் புயலில் வீடுகளை இழந்தவர்களுக்கு நஷ்ட்ட ஈடு – அரசு அறிவிப்பு

                                                                          யாழ்ப்பாணத்தில் கடந்த நாட்களில் வீசிய கடுமையான காற்றின் காரணமாக வீடுகள் சேதமடைந்தோருக்கு நஷ்டஈடு

                                                                          வழங்கப்படவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

                                                                          மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக மேலும் கூறுகையில், 21ஆம்

                                                                          திகதியில் இருந்து சற்று காற்று அதிகரித்து காணப்பட்டது. புயல் அபாயத்தை தொடர்ந்து காற்று மணிக்கு 60 கிலோ மீற்றர்

                                                                          வேகத்தில் வீசியதன் காரணமாக நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

                                                                          குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 79 வீடுகள் சேதமடைந்துள்ளன. அதில் ஒரு வீடு முழுமையாகவும் மிகுதி 78 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருக்கிறது. அதேபோல் 204

                                                                          குடும்பங்களைச் சேர்ந்த 658 பேர் 3 நாள் வீசிய காற்றின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கைதடி கலைவாணி வித்தியாலய பாடசாலை கட்டடம் ஒன்றும்

                                                                          சேதத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பளை பகுதியில் மரம் ஒன்று முறிந்து விழுந்து ஒரு

                                                                          பெண்மணி காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார். சிறு முயற்சியாளர்களுடைய தொழில்கள் பாதிப்படைந்துள்ளன.

                                                                          ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காற்றின் காரணமாக மரம் ஒன்று முறிந்து விழுந்து அவரது படகு சேதமடைந்துள்ளது. கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட

                                                                          பகுதியில் அதிகளவில் வாழை செய்கை மற்றும் பப்பாசி செய்கைகள் பாதிப்படைந்துள்ளன. எனினும் வீடுகள்

                                                                          பாதிப்படைந்த அனைவருக்கும் நஷ்ட ஈடு வழங்குவதற்கான முயற்சிகள் மாவட்ட செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு

                                                                          வருகின்றது. தொழில் முயற்சி பாதிக்கப்பட்ட சிறு முயற்சியாளர்களுக்கும் நஷ்டஈடு வழங்குவதற்குரிய முயற்சிகள் மாவட்ட செயலகத்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

                                                                          காற்றின் பாதிப்பு தொடர்பான அறிக்கையினை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம். அத்தோடு தொழில்

                                                                          முயற்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் ஏதாவது உதவிகள் வழங்க முடியுமா எனவும் நாம் ஆராய்ந்து வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.