கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1117 ஆக உயர்வு

Spread the love

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1117 ஆக உயர்வு

இலங்கையில் பதிவான கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 1117.

இந்த நோயாளர்களில் 674 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இன்றைய தினத்தில் இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட பதிய நோயாளர்களின் எண்ணிக்கை 28 ஆகும்.

இந்த நோயாளர்களில் ஜவர் குவைட் நாட்டில் இருந்து வற்து திருக்கோணமலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்களாவர்.

ஏனைய 23 பேரும் குவைட்டில் இருந்து வந்த பிளனர் மின்னேரிய தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள்.

இதேபோன்று இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளர்களில் 434 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நேற்றைய தினத்தில் (2020.05.23) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 1998 ஆவதுடன் இத்தினத்தில்

அடையாளங்காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 21 ஆகும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *