Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்காவில் சிக்கிய 217 இலங்கை திரும்பினார்

அமெரிக்காவில் சிக்கிய 217 இலங்கை திரும்பினார்

ஐ க்கிய அமெரிக்க இராச்சியத்தில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் இன்று

காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமாக விஷேட விமானம் ஒன்றின் மூலம் இன்று அதிகாலை 4.47 மணியளவில் அவர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் இருந்து நேரடி விமான சேவை இல்லாத காரணத்தினால் அவர்கள் டுபாய் வந்து அங்கிருந்து விஷேட விமானம் ஒன்றின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      லண்டனில் இருந்து டெல்லி, மும்பைக்கு செப்டம்பர் 2-ல் இருந்து விமான போக்குவரத்து

      லண்டனில் இருந்து டெல்லி, மும்பைக்கு செப்டம்பர் 2-ல் இருந்து விமான போக்குவரத்து

      லண்டனில் இருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு மீண்டும் செப்டம்பர் 2-ந்தேதியில் இருந்து விமான போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக விர்ஜின் அட்லாண்டிக் தெரிவித்துள்ளது.

      லண்டனில் இருந்து டெல்லி, மும்பைக்கு செப்டம்பர் 2-ல் இருந்து விமான போக்குவரத்து: விர்ஜின் அட்லான்டிக்
      விர்ஜின் அட்லான்டிக் விமானம்


      கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதத்தில் இருந்து ஏறக்குறைய உலகளவில் விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது. மற்ற நாட்டைச் சேர்ந்த நபர்கள் மீட்பதற்காகவும், மருத்துவ

      பொருட்களை கொண்டு செல்வதற்காகவும் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

      இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி தடைவிதிக்கப்பட்டது. கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. சர்வதேச விமான போக்குவரத்தை

      தொடங்குவதற்கான பேச்சுவார்த்தையை அடுத்த மாதம் தொடங்குவோம் என்று இந்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்திருந்தார்.

      இந்நிலையில் மும்பை மற்றும் டெல்லியில் இருந்து லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு செப்டம்பர் 2-ந்தேதியில் இருந்து விமான

      போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக விர்ஜின் அட்லான்டிக் விமான நிறுவனம் தெரிவித்துள்ளார்.

      விர்ஜின் அட்லான்டிக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘பயணிகள் விமான சேவையை மேலும் 17 இடங்களுக்கு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்க திட்டமிட்டுள்ளோம். டெல்லி,

      மும்பையில் இருந்து செப்டம்பர் 2-ந்தேதி லண்டர் ஹீத்ரூ விமான நிலையத்திற்கு சேவை தொடங்கும். மேலும், அமெரிக்காவில் உள்ள

      பல இடங்களுக்கும் இணைப்பை வழங்க திட்டமிட்டுள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளா

          Posted in இலங்கை செய்திகள்

          ஒன்பதாவது பாராளுமன்றத்தின் குழு அமர்வுகளை ஒன்லைன் முறையில் மேற்கொள்ளத் திட்டம்

          ஒன்பதாவது பாராளுமன்றத்தின் குழு அமர்வுகளை ஒன்லைன் முறையில் மேற்கொள்ளத் திட்டம்

          கொவிட் 19 தொற்றுநோய் சூழ்நிலையில் சமூக இடைவெளி பற்றிய வழிகாட்டல்கள் தொடர்ந்தால் ஒன்பதாவது பாராளுமன்றத்தின்

          குழு அமர்வுகளை டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

          இதற்கான இயலுமை மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளைக் கண்டறிந்துகொள்வதற்கான ஒத்திகை அமர்வொன்று பாராளுமன் குழு அறையில் இடம்பெற்றது.

          பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க, பிரதி செயலாளர் நாயகமும், பணியாட்தொகுதி பிரதானியுமான நீல்

          இத்தவெல மற்றும் பாராளுமன்ற சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.

          இதன்மூலம் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் பாராளுமன்றத்துக்கு வருகைதராமல் டிஜிட்டல் தொழில்நுட்பம்

          ஊடாக ஒன்லைன் மூலம் குழு அமர்வுகளில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் ஏற்படும். பாராளுமன்ற அமர்வுகள் அற்ற தினத்தில் இடம்பெறும் குழு அமர்வுகளில் கூட உறுப்பினர்கள்

          பாராளுமன்றத்துக்கு நேரடியாக சமுகமளிக்காது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக குழு அமர்வுகளில் பங்கேற்கும்

          வகையில் இதனைப் பயன்படுத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

          குழு அறைகள் சிலவற்றில் இடம்பெறும் அமர்வுகளை ஒளிப்பதிவு செய்வதற்கான கமரா கட்டமைப்புக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டிருப்பதால்இ ஒன்லைன் முறைமையில் குழு

          அமர்வுகளை நடத்துவது வெற்றிகரமாகப் பரிசீலித்துப் பார்க்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார். காணப்படும் சிறிய

          குறைபாடுகளை நிவர்த்தி செய்து தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

          பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் தற்பொழுது 8 குழு அறைகள் மாத்திரமே காணப்படுவதால் பாராளுமன்ற அமர்வு தினத்தில் ஏற்படும் நெரிசல்களைக் குறைப்பதற்கும்இ செலவிடும் காலம்

          மற்றும் ஏற்படும் செலவீனங்களைக் குறைப்பதைக் கவனத்தில் கொண்டும் கொவிட் தொற்றுநோய் சூழல் முடிவடைந்த பின்னரும்

          இந்த முறையினை நடைமுறைப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்றும் செயலாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

          இதற்கமைய ஒன்பதாவது பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இது தொடர்பான யோசனையொன்றை

          முன்மொழியவிருப்பதாகவும் செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க சுட்டிக்காட்டினார்

              Posted in இலங்கை செய்திகள்

              தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

              தேசிய அடையாள அட்டை விநியோக ஒருநாள் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

              தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை இன்று முதல் நாளாந்தம், மட்டுப்படுத்தப்பட்ட வகையில மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

              இதற்கிணங்க பத்தரமுல்லயில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நாளாந்தம் 250 பேருக்கு தேசிய அடையாள அட்டை

              விநியோகிக்கப்படவுள்ளது. காலியில் அமைந்துள்ள தென் மாகாண அலுவலகத்தில் நாளாந்தம் 50 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.

              இதற்கிணங்க தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பவர்கள், கிராம உத்தியோகத்தரால்

              அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பிரதேச செயலகத்தில் அமைந்துள்ள அடையாள அட்டை கிளை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

              10 அலுவலக நாட்களுக்குள், வருகை தர உகந்த நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கி இலக்கமொன்றையும் பெற்றுக்கொள்ள

              வேண்டும். இதன்பின்னர் அந்த தினத்தில் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்து தேசிய அடையாள அட்டையை

              பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

                  முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
                  Posted in இலங்கை செய்திகள்

                  கருணாவை கைது செய்ய நடவடிக்கை

                  கருணாவை கைது செய்ய நடவடிக்கை

                  கருணா அம்மனின் ஊடகங்களில் தெரிவித்த கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு

                  திணைக்களத்திற்கு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      பளையில் வெடிகுண்டு மீட்பாம் – கதை விடும் இராணுவம்

                      பளையில் வெடிகுண்டு மீட்பாம் – கதை விடும் இராணுவம்

                      பளை பகுதியில் இரண்டரை கிலோ எடையுள்ள சி-4 வெடிமருந்து

                      இராணுவத்தினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

                      பளை பகுதியில் உள்ள மிதிவெடி அகற்றும் நிறுவனத்திற்குள் புகுந்த இரண்டு சந்தேகநபர்கள் அங்கு இருந்த வெடி மருந்துகளை

                      திருடிக் கொண்டு வெளியில் வந்தபோது நிறுவனத்தின் காவலாளி கண்டதால்

                      குறித்த வெடிமருந்து மூட்டையைப் போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

                      இந்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கும் இராணுவத்துக்கும் தகவல் வழங்கப்பட்டது.

                      சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினர் சோதனையிட்டனர். அப்போது குறித்த மூட்டைக்குள் இரண்டரை கிலோ சி-4 வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளது.

                      மேலும் குறித்த இரு சந்தேக நபர்களையும் தேடும் நடவடிக்கையில் இராணுவம் மற்றும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை இரத்து செய்ய பலம்மிக்க பாராளுமன்றத்தின் அதிகாரம் தேவை- மகிந்த

                          19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை இரத்து செய்ய பலம்மிக்க பாராளுமன்றத்தின் அதிகாரம் தேவை- மகிந்த

                          19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை இரத்து செய்வதாக இருந்தால் பலம்மிக்க பாராளுமன்றத்தின் அதிகாரம் தேவை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

                          வாரியபொல பகுதியில் இன்று (21) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே பிரதமர் இதனை கூறினார்.

                          அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், ஜனாதிபதி பிரதிநித்துவப்படுத்தும் கட்சியினால் அரசாங்கம் ஒன்று அமைய

                          வேண்டும். அரசியல் அமைப்பு மாற்றப்பட வேண்டியது அவசியம். புழிவாங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவே அரசியல் அமைப்பு

                          கொண்டுவரப்பட்டது. அதனை தயாரித்தவர்கள் இன்று அதை மாற்றுமாறு கூறுகின்றனர். ஆகவே பலமிக்கதொரு அரசாங்கம் அமைய உங்களுக்குள்ள பொறுப்பை நிறைவேற்றுங்கள்.

                          அதேபோல் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் குருணாகல் பிரச்சார அலுவலகத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

                          மேலும் குருணாகல் பகுதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் மாநாடும் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது

                              Posted in இலங்கை செய்திகள்

                              வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவு

                              வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவு

                              18 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

                              அதேபோல் இதுவரை 11 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

                              எதிர்வரும் 25 ஆம் வீடுகளில் காட்சிப்படுத்தப்படும் பத்திரங்களை அச்சிட்டு முடிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

                              இதேவேளை மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் வாக்களிக்க பிரத்தியோக

                              வாக்களிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

                              வடக்கில் தேர்தல் பணிகளில் ஈடுப்படவுள்ள ஊழியர்களை தெளிவுப்படுத்தும் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

                              வானொலிகள், தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் பணம் கொடுத்து செய்யப்படும் விளம்பரங்களை தனக்கு தடுக்க அதிகாரம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

                              எனவே வானொலிகள், தொலைக்காட்சிகள் போன்றவற்றில் ஒளி, ஒலிபரப்பாகும் செய்திகளில் வேட்பாளர்களுக்கு சம அந்தஸ்த்து வழங்குமாறும் கேட்டுள்ளார்.

                              இதேவேளை, தேர்தலை நடத்துவதற்கான சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை இன்று (22) நள்ளிரவு

                              வெளியிடவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தை வாய்ப்புகள் பற்றி உறுதியான நம்பிக்கை – வர்த்தக சம்மேளனம்

                                  இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தை வாய்ப்புகள் பற்றி உறுதியான நம்பிக்கை – வர்த்தக சம்மேளனம்

                                  இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தை வாய்ப்புகள் பற்றி உறுதியான

                                  நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்று இலங்கை வர்த்தக சம்மேளனம் அறிவித்துள்ளது.

                                  சம்மேளனம் யுஎஸ் எயிட் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட கருத்து கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

                                  சிறிய மற்றும் நடுத்தர ஏற்றுமதிகளை விட பாரியளவிலான ஏற்றுமதிகளுக்கு எதிர்காலத்தில் கூடுதலான வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

                                      Posted in உலக செய்திகள்

                                      துப்பாக்கி சூடு 9 பேர் பலி -50 பேர் காயம்

                                      துப்பாக்கி சூடு 9 பேர் பலி -50 பேர் காயம்

                                      அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் ஒன்பது பேர் மரணம் ,இறந்தவர்கள் நால்வர் சிறுவர்கள் எனவும் மேலும் ஐம்பதுக்கு

                                      மேற்பட்டவர்கள் படு காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்,அதிகரித்து வரும் சூட்டு சம்பவங்களும் வர இருக்கும் தேர்தலுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வலுக்கிறது

                                      டிரம்பின் நாடுகள் மீதான ஆக்கிரமிப்பும் ,அதனால் நடத்த பட்ட அரசியல் ,இராணுவ படு கொலைகளுக்கும் இவ்வேளை பாதிக்க

                                      பட்ட நாடுகளின் உளவுத்துறைகள் பெரும் சதியில் ஈடுபடலாம் என தெரிவிக்க பட்டுள்ளது

                                          Posted in உலக செய்திகள்

                                          ரசியா விமானிகள் அகோர வான்வழி தாக்குதல்

                                          ரசியா விமானிகள் அகோர வான்வழி தாக்குதல்

                                          சிரியாவின் Idlib and Sahl Al-Ghab பகுதியில் இடம்பெற்று வரும் கடும் போராட்டம் ஈடுபட்டு வருகிறது

                                          சிரியாவை அரச படைகளிற்கு ஆதரவாக ரசிய விமானங்கள் கிளர்ச்சி படைகள் நிலைகள் மீது அகோர தாக்குதலை நடத்தினர்

                                          இந்த தாக்குதலை அடுத்து பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக சிரியா ,

                                          ரஷியா இராணுவமே அறிவித்துள்ளது ,தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம், உள்ளது

                                          ரசியா விமானிகள்
                                          ரசியா விமானிகள்
                                              Posted in உலக செய்திகள்

                                              சென்னையில் மட்டும் 601 பேர் பலி – தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்

                                              சென்னையில் மட்டும் 601 பேர் பலி – தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்

                                              தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் பலியானோர் மொத்த எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது.

                                              சென்னையில் மட்டும் 601 பேர் பலி – தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்
                                              கோப்பு படம்

                                              தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 532 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில்

                                              கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது.

                                              இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 25 ஆயிரத்து 863 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

                                              வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் நேற்று ஒரே நாளில் 1,438 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர்.

                                              இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 32 ஆயிரத்து 754 ஆக அதிகரித்துள்ளது.

                                              ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து

                                              வருகிறது. உடலில் ஏற்கனவே எந்த நோய்களும் இல்லாமல் பூரண நலத்துடன் இருந்தவர்கள் பலரும் கொரோனா வைரசுக்கு பலியாகி வருகின்றனர்.

                                              இந்நிலையில், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில்

                                              கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது.

                                              இந்த மொத்த எண்ணிக்கையில் 601 உயிரிழப்புகள் சென்னையில் ஏற்பட்டுள்ளது.

                                              மாவட்டவாரியாக கொரோனா உயிரிழப்பு விவரம்:

                                              செங்கல்பட்டு – 49
                                              சென்னை – 601
                                              கோவை – 1
                                              கடலூர் – 3
                                              திண்டுக்கல் – 4
                                              ஈரோடு – 1
                                              காஞ்சிபுரம் – 10
                                              கன்னியாகுமரி – 1
                                              கிருஷ்ணகிரி – 2
                                              மதுரை – 8
                                              நாமக்கல் – 1
                                              புதுக்கோட்டை – 1
                                              ராமநாதபுரம் – 2
                                              ராணிப்பேட்டை – 2
                                              சிவகங்கை – 1
                                              தஞ்சாவூர் – 1
                                              தேனி – 2
                                              திருவள்ளூர் – 37
                                              திருவண்ணாமலை – 7
                                              தூத்துக்குடி – 3
                                              திருநெல்வேலி – 4
                                              திருச்சி – 1
                                              வேலூர் – 3
                                              விழுப்புரம் – 10
                                              விருதுநகர் – 1
                                              விமானநிலைய கண்காணிப்பு
                                              வெளி நாடு – 1

                                                  Posted in உலக செய்திகள்

                                                  அமெரிக்காவில் -மக்கள் மீது துப்பாக்கி சூடு 9 பேர் காயம்

                                                  அமெரிக்காவில் -மக்கள் மீது துப்பாக்கி சூடு 9 பேர் காயம்

                                                  அமெரிக்கா அத்தலைநகர் நியூ யார்க் பகுதியில் பட்டி ஒன்று இடம்பெற்றுள்ளது

                                                  அங்கு ஆயுதங்களுடன் நுழைந்த ஆயுததாரி நடத்திய சரமாரி துப்பாக்கிக்கு சூட்டில் ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்

                                                  காயமடைந்தவரில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                                                  இந்த் படுகொலை முயற்சிக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

                                                      Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                                                      காதலியை குத்தி கொன்ற பிக்கு

                                                      தன் முன்னாள் காதலி வேறொருவருடன் இருப்பதைக் கண்ட துறவி ஒருவர், ஆத்திரத்தில் தன்னிலை மறந்து அந்த பெண்ணை கொலை செய்துள்ளார்.

                                                      புதிய காதலனுடன் முன்னாள் காதலி- கோபத்தில் கொடூர செயலை செய்த துறவி
                                                      முன்னாள் காதலி – துறவி

                                                      தாய்லாந்தை சேர்ந்த புத்த மதத்துறவி உம் தீரென்ராம் (57) துறவியாவதற்கு முன் லம்பாய் புவலோய என்ற பெண்ணை

                                                      காதலித்து வந்துள்ளார். புத்த துறவியானதும் காதலியை பிரிந்து விட்டார்.

                                                      இந்த நிலையில் தீரென்ராம் தனது முன்னாள் காதலியான லம்பாய் புவலோயை (33) புதுக்காதலனுடன் அவரது வீட்டுக்கு முன் காரில்

                                                      அமர்ந்திருப்பதைக் கண்டுள்ளார். ஆத்திரத்தில் தனது வேனை அவர்கள் கார் மீது தீரென்ராம் மோத, லம்பாய் புதிய காதலன் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

                                                      உடனே தீரென்ராம் தன் காரிலிருந்த பட்டாக்கத்தியை எடுத்து லம்பாயை தாறுமாறாக வெட்டியுள்ளார். பின்னர் வீட்டுக்குச் சென்ற

                                                      தீரென்ராம், தனது முன்னாள் காதலியை வேறொருவருடன் பார்க்க நேர்ந்ததால் கோபத்தை அடக்க இயலாமல் அவளைக் கொன்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.

                                                      போலீசார் சம்பவ இடத்திலேயே தீரென்ராமை கைது செய்தனர். தீரென்ராமின் சகோதரர், தனது சகோதரர் புத்த துறவியாகும் முன்

                                                      லம்பாயை காதலித்ததாகவும், புத்த துறவியானதும் அவரைப் பிரிந்துவிட்டதாகவும், லம்பாய் அடிக்கடி அவரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

                                                      லம்பாயின் வயிற்றில் தீரென்ராமின் குழந்தை வளர்வதால், அதைக் குறித்து வெளியே சொல்லப்போவதாகவும், அதை வெளியில்

                                                      சொன்னால் புத்த துறவி வாழ்க்கையே நாசமாகிவிடும் என்று மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

                                                      ஆகவே, தீரென்ராம் ஏற்கனவே கோபத்திலிருந்த நிலையில், லம்பாயை புதிய காதலனுடன் பார்த்தவுடன் ஆத்திரத்தில் அவளைக் கொலை செய்துள்ளார்.

                                                      லம்பாய் எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

                                                      காதலியை குத்தி கொன்ற பிக்கு
                                                      காதலியை குத்தி கொன்ற பிக்கு
                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      ஹெலிகொப்டரில் பயணம் செய்த எட்டு அடி புத்தர்

                                                      ஹெலிகொப்டரில் பயணம் செய்த எட்டு அடி புத்தர்

                                                      இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்ஐ – 17 ஹெலிகொப்டர் மூலம் 3.5 டொன் எடைகொண்ட எட்டு அடிகள்

                                                      உயரமான புத்தர் சிலையானதுஇ வீரகெட்டிய மந்தாதுவ விளையாட்டு

                                                      மைதானத்திலிருந்து முல்கிரிகல ரஜமகா விகாரைக்கு நேற்றுமுன்தினம் தினம் எடுத்துச்செல்லப்பட்டது.

                                                      சிலையை எடுத்துச் செல்வதற்காகவென விசேடமாக வடிவமைக்கப்பட்ட உபகரண தொகுதி மூலம் குறித்த சிலை

                                                      எடுத்துச்செல்லப்பட்டது. 270 அடி உயரத்திற்கு விமானம் மூலம் தூக்கப்பட்ட

                                                      சிலையானது சுமார் சுமார் மூன்று கடல் மைல் தூரம் வரை கொண்டு செல்லப்பட்டது.

                                                      இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையின் விமானப் படைத் தளபதி

                                                      எயார் மார்ஷல் சுமங்கல டயஸின் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

                                                          ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி
                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          கடலில் மூழ்கி மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் பலி

                                                          கடலில் மூழ்கி மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் பலி

                                                          கடலில் நீராடச் சென்ற 3 பெண்கள் உட்பட சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி

                                                          உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

                                                          16, 20 மற்றும் 30 வயதுடைய மூன்று பெண்களும் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                                          வத்தள திக்ஓவிட்ட கடலில் நேற்று (20) மாலை நீராடச் சென்றனர் நால்வரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              காவல்துறை சுற்றிவளைப்பில் 25,912 பேர் கைது

                                                              காவல்துறை சுற்றிவளைப்பில் 25,912 பேர் கைது

                                                              கடந்த 2 வார காலப்பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு

                                                              மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் 25,912 கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

                                                                  Posted in உலக செய்திகள்

                                                                  50 ஆயிரம் பேர் பலி – நிலைகுலைந்த பிரேசில்

                                                                  50 ஆயிரம் பேர் பலி – நிலைகுலைந்த பிரேசில்

                                                                  பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது.

                                                                  50 ஆயிரம் பேர் பலி – நிலைகுலைந்த பிரேசில்
                                                                  கொரோனாவால் உறவினரை இழந்த நபர்
                                                                  ரியோ டி ஜெனிரோ:

                                                                  சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

                                                                  இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

                                                                  இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

                                                                  இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 89 லட்சத்து 13 ஆயிரத்து 524 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                                                  வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 37 லட்சத்து 8 ஆயிரத்து 889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்து 503 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

                                                                  கொரோனாவில் இருந்து 47 லட்சம் 37 ஆயிரத்து 951 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு உலகம்

                                                                  முழுவதும் இதுவரை 4 லட்சத்து 66 ஆயிரத்து 684 பேர் உயிரிழந்துள்ளனர்.

                                                                  இதற்கிடையில், அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில்

                                                                  இரண்டாவது இடத்தில் பிரேசிலில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.

                                                                  பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ

                                                                  தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 10 லட்சத்து 70 ஆயிரத்து 139 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில்

                                                                  31 ஆயிரத்து 571 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

                                                                  மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று மட்டும் அங்கு 968 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பிரேசிலில் கொரோனாவுக்கு

                                                                  பலியானோர் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 58 ஆக அதிகரித்துள்ளது.

                                                                  கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

                                                                  அமெரிக்கா – 1,21,980
                                                                  பிரேசில் – 50,058
                                                                  இங்கிலாந்து – 42,589
                                                                  ஸ்பெயின் – 28,322
                                                                  இத்தாலி – 34,610
                                                                  மெக்சிகோ – 20,781
                                                                  பிரான்ஸ் – 29,633
                                                                  இந்தியா – 12,948.

                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      கொரோனா வைரஸ் – வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு

                                                                      கொரோனா வைரஸ் – வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு

                                                                      கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு

                                                                      இழப்பீடு வழங்கப்படும் என்று இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

                                                                      பணியகத்தின் காப்புறுதி நிதியத்தின் மூலம் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

                                                                      கொரோனா நோயினால் வெளிநாடுகளில் பணியாற்றிய 23 தொழிலாளர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                          பிரிட்டனில் மக்களை குற்றிய நபர் – பயங்கரவாத தாக்குதல்

                                                                          பிரிட்டனில் மக்களை குற்றிய நபர் – பயங்கரவாத தாக்குதல்

                                                                          பிரிட்டன் busy Reading park. பகுதியில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்குள் கத்தியுடன் புகுந்த நபர் திடீரென கத்தி குத்து தாக்குதலை நடத்தினார்

                                                                          இதில் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் அவசர காவு உலங்குவானூர்தி

                                                                          அம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்ல பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                                                          கறுப்பின மக்களின் போராட்டத்தின் பொழுதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
                                                                          பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என நம்ப படுகிறது

                                                                          பிரிட்டனில் மக்களை
                                                                          பிரிட்டனில் மக்களை