Author: நலன் விரும்பி
துபாயில் இந்திய தம்பதிகொலை – நகைகள் கொள்ளை
துபாயில் இந்திய தம்பதிகொலை – நகைகள் கொள்ளை
துபாயில் இந்திய தம்பதியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
துபாயில் இந்திய தம்பதியை கொலை செய்து நகைகள் கொள்ளை – பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது
கைது
துபாய் நகரின் அரேபியன் ரேஞ்சஸ் பகுதியில் வசித்து வந்தவர்கள் ஹிரேன் ஆதித்யா-விதி ஆதித்யா தம்பதி. இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த இவர்கள் சார்ஜாவில் வர்த்தகம் செய்து
வருகின்றனர். இந்த தம்பதியருக்கு 13 வயது ஒரு மகளும், 18 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை இந்த தம்பதி மர்மமான முறையில் அவர்களது அறையில் இறந்து
கிடந்தனர். மூத்தமகள் படுகாயம் அடைந்திருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று,
படுகாயம் அடைந்த தம்பதியின் மகளை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அந்த தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த தம்பதி மகள்களுடன் இரவில்
தூங்கிக்கொண்டிருந்த போது, அந்த நபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அந்த தம்பதியை கத்தியால் குத்தி கொலை
செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றதும், இதில் அவருைடய மூத்தமகள் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது.
மேலும், கைது செய்யப்பட்ட நபர் பராமரிப்பு பணிக்காக அந்த தம்பதியின் வீட்டிற்கு இதற்கு முன்னர் சென்று வந்த போது, வீட்டை
நோட்டமிட்டு நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அந்த நபரிடம் இருந்து போலீசார் மீ்ட்டனர்.
இந்திய தம்பதி இறந்த தகவலை இந்திய துணை தூதர் விபுல் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, இது மிகவும்
துயரமான சம்பவம் ஆகும். இந்திய துணை தூதரகம் அந்த குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது என்றார்.
கொரனோவால் மூழ்கிய அமெரிக்கா – அதிரும் உயிர் பலிகள்
கொரனோவால் மூழ்கிய அமெரிக்கா – அதிரும் உயிர் பலிகள்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.5 லட்சத்தைக் கடந்துள்ளது.
அதிரும் அமெரிக்கா – 24.5 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு
சிகிச்சை பெறும் நோயாளி
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு
அடைந்தோர் எண்ணிக்கை 94 லட்சத்தைக் கடந்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 4.82 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் கோரத் தாண்டவம்
ஆடி வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 24.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மேலும், கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரத்தைத் தாண்டியது. மேலும், கொரோனா
தொற்றில் இருந்து 10 லட்சத்து 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
சகல நடைபாதை வியாபார செயற்பாடுகளையும் நீறுத்த தீர்மானம்
சகல நடைபாதை வியாபார செயற்பாடுகளையும் நீறுத்த தீர்மானம்
திருகோணமலை நகர் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள சகல நடைபாதை வியாபார செயற்பாடுகளையும் எதிர்வரும்
ஜூலை மாதம் 1ம் திகதி முதல் நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
நேற்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருகோணமலை
மாவட்டத்தை சேர்ந்த ஆரம்ப காலம் முதல் நடைபாதை வியாபாரம் மற்றும் பருவகால வியாபார செயற்பாடுகளை
மேற்கொண்டவர்களின் வியாபார நடவடிக்கைகள் ஏதோ ஓர் முறைப்படுத்தப்பட்ட முறையில் செய்வதற்கான ஒழுங்குமுறைகள்
எடுக்கப்படல் இன்றியமையாதது என்றும் உரிய நிறுவனங்கள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் இதன்போது அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக கொவிட்19 காலப்பகுதியில் மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்கும் வகையில் பொது சந்தையின் செயற்பாடுகளை பரவலாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் பலர்
பாதையோரங்களான நடைபாதைகளிலும் வியாபார செயற்பாடுகளை மேற்கொண்டனர். இதனால் மக்கள்
பொருட்களை இலகுவாக கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு நாடு
இயல்புநிலைக்கு திரும்பியமையால் தற்காலிகமாக செயற்பட அனுமதிக்கப்பட்ட நடைபாதை வியாபார செயற்பாடுகளும் எதிர்வரும் ஜூலை மாதம் 1ம் திகதி முதல்
தடைசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை நகரசபை தவிசாளர் நா.இராசநாயகம், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச
சபை தவிசாளர் டொக்டர் ஜி .ஞானகுணாளன் ,திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவிலிருந்து 217 இலங்கையர்கள் நாடு வந்தனர்
அமெரிக்காவிலிருந்து 217 இலங்கையர்கள் நாடு வந்தனர்
அமெரிக்காவிலிருந்து 217 இலங்கையர்கள் நேற்றைய தினம் தாயகம் திரும்பியுள்ளனர்.
இவர்கள் எமிரேட்ஸ் ஆன்லைன் விமான சேவைக்குச் சொந்தமான நுமு 2528
விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை
வந்தடைந்ததாக விமான நிலைய கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.
விமான நிலையத்திற்கு வருகை தந்த இவர்கள் முதற்கட்ட மருத்துவ பரிசோதனையின்
பின்னர் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு
அனுப்பி வைக்கப்பட்டதாக கடமை நேர முகாமையாளர் மேலும் தெரிவித்தார்
துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் கைது
துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் கைது
யக்கலமுல்ல, வாத்தஹென பகுதியை சேர்ந்த 33 மற்றும் 39 வயதுடைய இரு சந்தேக நபர்கள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு
குறுந்தூர துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட இருவரும் சட்ட நடவடிக்கைகளுக்காக காலி நீதவான் நீதி மன்றத்தில் நேற்று (ஜூன் 23)
ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
யக்கலமுல்ல பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட
தேடுதல் நடவடிக்கைகளின் பிரகாரம் நேற்று முன்தினம் மாலை இவ்
இரு சந்தேக நபர்களும் துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யக்கலமுல்ல பொலிஸார் குறித்த சந்தேக நபர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தயாராகும் சிறை -அமைச்சர் ரிஷாட் உள்ளே போகிறார்
தயாராகும் சிறை -அமைச்சர் ரிஷாட் உள்ளே போகிறார்
வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மறிச்சிகட்டு வனப்பகுதிக்கு சொந்தமான பிரதேசத்தில் காடழிப்பு
மேற்கொண்டு அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொண்டமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ரிஷாட்
பதியுதீன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு தொடர்பான தீர்ப்பை எதிர்வரும் ஜூலை
மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் நீதி மையத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு இன்று (24) அழைக்கப்பட்ட போது ஜனக் டி சில்வா மற்றும்
நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஆகிய நீதிபதிகள் அடங்கிய மேன்முறையீட்டு நீதிபதிகள் குழாமினால் இந்த அறிவிப்பு
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
சிறையில் கைதி தூக்கு மாட்டி சாவு
சிறையில் கைதி தூக்கு மாட்டி சாவு
மொனராகலை சிறைச்சாலையினுள் கைதியொருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
நேற்று (23) பிற்பகல் குறித்த கைதி சிறைச்சாலை வைத்தியசாலையினுள் இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலைக்கு
முயற்சித்த நிலையில் அவர் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று (24) அதிகாலை உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் இதற்கு முன்னரும் சிறைச்சாலையினுள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டவர் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
பகிணிகஹவெல, மெதகம பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்
இலங்கையில் ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் பூர்த்தி
இலங்கையில் ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் பூர்த்தி
இலங்கையில் இதுவரை ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினத்தில் மாத்திரம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 40 பேர் நாட்டில் இனங்காணப்பட்டிருந்தனர்.
அதன்படி, இதுவரை இலங்கையில் 1991 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 29 பேர் இந்தியாவின் மும்பையில்
இருந்து வந்தவர்கள் எனவும் ஏனைய 11 பேரும் அமெரிக்காவில் இருந்து வருகைத் தந்தவர்கள் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேபோல் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 22 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
ஐ.டி.எச், வெலிகந்த, காத்தான்குடி, ஹோமாகம மற்றும் தெல்தெனிய ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று
வந்த தொற்றாளர்கள் சிலரே இவ்வாறு குணமடைந்து வௌியேறியுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, இதுவரை 1548 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளனர்.
மேலும் 432 பேர் வைத்திய கண்காணிப்பின் கீழ் சிகிச்சைப் பெற்று வருவதாக தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
பிரிட்டனில் கொரனோவால் 55 பேர் பலியாம் – உண்மை தகவல் மூடி மறைப்பா ..?
பிரிட்டனில் கொரனோவால் 55 பேர் பலியாம் – உண்மை தகவல் மூடி மறைப்பா ..?
பிரிட்டனில் பரவி வந்த கொரனோ நோயினது தாக்குதல் தற்போது குறைவடைந்து
உள்ளதாக அரசு தனது மக்கள் இழப்பு புள்ளி விபரங்கள் ஊடாக காண்பித்து வருகிறது
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 55 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
எனினும் இது உண்மைக்கு புறம்பானது எனவும் ,அரசு உண்மை தகவலை மூடி மறைத்து வருவதாக மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்து வருவது இங்கே குறிப்பிட தக்கது
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்பு
தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரசுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள் – மாவட்ட வாரியாக விவரம்
கோப்பு படம்
தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 516 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில்
கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 603 ஆக அதிகரித்துள்ளது.
இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 28 ஆயிரத்து 428 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் நேற்று ஒரே நாளில் 1,227 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட்டுள்ளனர்
. இதனால் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 339 ஆக அதிகரித்துள்ளது.
ஆனாலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து
வருகிறது. உடலில் ஏற்கனவே எந்த நோய்களும் இல்லாமல் பூரண நலத்துடன் இருந்தவர்கள் பலரும் கொரோனா வைரசுக்கு பலியாகி வருகின்றனர்.
இந்நிலையில், மாநிலத்தில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில்
கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது.
இந்த மொத்த எண்ணிக்கையில் சென்னையில் மட்டும் 645 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக கொரோனா உயிரிழப்பு விவரம்:
செங்கல்பட்டு – 57
சென்னை – 645
கோவை – 1
கடலூர் – 5
திண்டுக்கல் – 4
ஈரோடு – 1
கள்ளக்குறிச்சி – 1
காஞ்சிபுரம் – 14
கன்னியாகுமரி – 1
கிருஷ்ணகிரி – 2
மதுரை – 9
நாமக்கல் – 1
புதுக்கோட்டை – 2
ராமநாதபுரம் – 3
ராணிப்பேட்டை – 2
சேலம் – 1
சிவகங்கை – 1
தஞ்சாவூர் – 1
தேனி – 2
திருவள்ளூர் – 44
திருவண்ணாமலை – 7
தூத்துக்குடி – 4
திருநெல்வேலி – 5
திருச்சி – 3
வேலூர் – 3
விழுப்புரம் – 12
விருதுநகர் – 1
விமானநிலைய கண்காணிப்பு
வெளி நாடு – 1
மொத்தம் – 833
போதைப்பொருள் பாவனைக்கு காரணமான அரசியல் வாதிகளை மக்கள் விரட்டியடிக்க வேண்டும் -சிவமோகன் – கொதிப்பு
போதைப்பொருள் பாவனைக்கு காரணமான அரசியல் வாதிகளை மக்கள் விரட்டியடிக்க வேண்டும் -சிவமோகன் – கொதிப்பு
போதைப்பொருள் பாவனைக்கு காரணமான அரசியல் வாதிகளை மக்கள் விரட்டியடிக்க வேண்டும் என வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் இடித்துரைப்பு
நாட்டு மக்களாகிய நாம் முழுமையாக மதுவிலக்கை கடைப்பிடிக்க வேண்டும். கஞ்சா கள்ளச்சாராயம் என்பனவற்றை கிராமத்தில்
இருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும்.முன்னர் ஊர்களில் ஒரு சிலர் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் காய்சினார்கள் இன்று அது பல மடங்காக அதிகரித்து விட்டது . இப்பொழுது இதை நாம்
தடுக்காவிட்டால் போதைப்பொருட்களால் இந்த சமுதாயம் அழிந்து விடும்.ஒட்டுமொத்தத்தில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் கஞ்சா
கடத்தும் அரசியல்வாதிகளை சமூகத்திலிருந்து ஒட்டுமொத்தமாக விரட்டியடிப்போம்.தற்போது நாட்டில் கள்ளச்சாராயம் ஏற்றிவந்த
அரசியல் வாதிகள் மற்றும் வேட்பாளர்கள் கூட பிடிபட்டிருக்கிறார்கள் . நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்திய
இப்போது கடத்தல் செய்கின்ற மற்றும் வியாபாரம் செய்கின்ற அரசியல் வாதிகளை இந்த அரசியல் மேடைகளில் இருந்தே
ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட இந்த மக்கள் ஒன்றுபட்டு பாடு
படவேண்டும்.என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் குறிப்பிட்டார்
.
எதிரி தமிழ்த் திரைப்படம்
எதிரி தமிழ்த் திரைப்படம்
எதிரி தமிழ்த் திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன்,சதா,
விவேக் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எதிரி தமிழ்த் திரைப்பட கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
நடராஜன் ஐயர் (டெல்லி கணேஷ்) அந்தணராவார். அவர் வீட்டை வாடகைக்கு விடும்பொழுது அவ்வீட்டில் குடிவருபவர்களிடன் பல சட்டங்களைத் தெரிவித்தே பின்னர் அங்கு குடியமத்துவார்.
அச்சமயம் அங்கு வரும் காடயர்களான கல்லூரி மாணவர்கள் அவரிடன் நல்லவர்களாக நடித்து பின்னர் அவர் வீட்டில் வாடகைப் பகுதியில் குடியமர்கின்றனர்.
நல்லவர்களாக இருந்தவர்கள் சாராயம், புகை பிடித்தல் போன்ற பல தொழில்களைச் செய்ய ஆரம்பித்தனர்.
இவற்றைப் பார்த்துப் பயந்துபோன நடராஜன் ஐயர் அவர்களை விரட்டுவதற்கு ஆட்டோ ஓட்டுனர் (விவேக்) ஒருவரின் உதவியை நாடுகின்றார்.
அவரும் பாட்டில் மணி என்ற காடையன் இருக்கின்றான். அவன் உங்களுக்கு உதவுவான் என்று பொய் கூறினார்.
அதன்படி பாட்டில் மணியாக தன் நண்பன் சுப்பிரமணியை (மாதவன்)ஏற்பாடு செய்கின்றார்.
இவர் சொல்கேட்டு பாட்டில் மணி போல் வந்து ஐயர் வீட்டிலிருப்பவர்களைப் பயமுறுத்துகின்றார்.
இதற்கிடையில் ஐயரின் மகளான காயத்ரி மீது காதல் நெருங்கிப் பழகுகின்றார். இவற்றைப்பார்த்து மனம் நொந்துகொள்ளும் அவர் பாட்டில் மணியை வெளியில் அனுப்புவதற்காகப் பலமுறை முயல்கின்றார்.
அச்சமயம் நண்பனின் காதலியென நினைத்து பிரியாவைக் (சதாவை) கடத்திச் செல்லும் சுப்பிரமணி பின்னர் பிரியா மீது காதல் கொள்கின்றார் எவ்வாறு பிரியாவை
காடையனான அவள் தந்தையிடமிருந்து காப்பாற்றி
ஒன்று சேருகின்றார் சுப்பிரமணி என்பதே எதிரி தமிழ்த் திரைப்பட திரைக்கதை முடிவு.
இந்த எதிரி தமிழ்த் திரைப்படத்தில் மாதவன் நடிப்பு அபாரமாக உள்ளது ,எதிரிக்கு ஏற்ப எதிரியின் நடிப்பில் அவர் பின்னி எடுத்துள்ளார் .
மாதவன் நடிப்பில் உருவானா எதிரி திரைப்படத்தை இயக்கியா கே எஸ் ரவிக்குமார் பல வெற்றி படங்களை தமிழுக்கு அளித்தவர் .
அவருடன் கூட்டணி சேரும் அனைவரும் வெற்றியின் பிரபலன்களாக கருத படுவர் எனது எதிரி திரைப்படம் எடுத்து காட்டியுள்ளது .
பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாக அணுகி தீர்வைப் பெற்றுக் கொடுப்பேன்வேட்பாளர் சலீம்
பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாக அணுகி தீர்வைப் பெற்றுக் கொடுப்பேன்வேட்பாளர் சலீம்
பிரதேச செயலாளராக பணிபுரிந்த காலத்தில் பொதுமக்களின் விடயங்களை நேரடியாகக் கையாண்டு அவற்றுக்கு தீர்வைப்
பெற்றுக் கொடுத்தவன் என்ற வகையில் எதிர்காலத்தில் சகல தரப்பு மக்களினதும் பிரச்சினைகளையும் முறையாக அணுகி
அவற்றுக்காக பாராளுமன்றத்திலும் குரல் கொடுத்து பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர தயாராக இருப்பதாக
தேசிய காங்கிர ஸின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.
சாய்ந்தமருதில் உள்ள வேட்பாளரின் தேர்தல் நடவடிக்கை செயலகத்தில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பிரதேச
முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகளைச் பேசிய போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நான் பிரதேச செயலாளராக பணியாற்றிய காலத்தில், பொதுமக்களின் தேவை நிமிர்த்தம் என்னைச் சந்திக்க
வருபவர்களை நேரடியாக சந்திக்கும் ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தேன். இதனாலேயே எனது சேவைக்காலத்தில் மக்களின் தேவைகளை அறிந்து பல்வேறு அபிவிருத்திகளைச் செய்ய முடிந்தது.
அதேபோல, நான் பாராளுமன்ற உறுப்பினராக இறைவன் உதவியால் தெரிவு செய்யப்படுகின்றபோது அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல மக்களினதும் தேவைகளை அறிந்து
அவற்றுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கவுள்ளேன். பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைந்துள்ள மாவட்டங்களைப் போல்
அம்பாறை மாவட்டத்தையும் அபிவிருத்தி செய்து இந்த மாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை தான் குறிக்கோளாகக் கொண்டு அரசியலுக்கு வந்துள்ளேன்.
தேர்தல் காலத்திற்கு மாத்திரம் வந்து உரிமை பற்றிப்பேசி அவற்றை வைத்து மக்களின் வாக்குகளை சூறையாடி தங்களை அபிவிருத்தி
செய்து கொண்டுள்ள போலியான அரசியல்வாதிகளைப் போல் அல்லாது ஒரு நேர்மையான அரசியல் கலாசாரத்தினை உருவாக்க முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்
வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்
மேற்கு வங்காள மாநிலத்தில் சீன அதிபருக்கு பதிலாக வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.
சீன அதிபருக்கு பதிலாக வடகொரிய அதிபரின் உருவ பொம்மையை எரித்த பாஜகவினர்…
வடகொரிய அதிபர் கிம்
கொல்கத்தா:
லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களிடையே கடந்த 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20
இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை உயிரிழப்பு\காயமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை நிலவி வருகிறது. போரை எதிர்கொள்ளும் அளவிற்கு படைகள் தயார்படுத்தப்பட்டன.
அதேசமயம் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், லடாக்கில் இந்திய படையினர் வீரமரணமடைந்ததையடுத்து நாடு முழுவதும் சீனாவுக்கு எதிராக கண்டனக்குரல்கள் எழுந்தன.
பல்வேறு பகுதிகளில் சீன பொருட்களை சாலையில் போட்டு உடைத்தும், சீன அதிபரின் புகைப்படங்களை தீயிட்டு கொளுத்தியும் மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கிம், பாஜக-வை சேர்ந்தவர், ஜி ஜிங்பிங்
இந்நிலையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் சிலர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பதிலாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்ந்த ஒரு நபர் கூறுகையில்,’சீன பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சீன பிரதம மந்திரி கிம் ஜாங் உன்னின் உருவ பொம்மையை எரித்து
எங்கள் எதிர்ப்பை தொடர்ந்து வெளிப்படுத்துவோம்’ என்றார். அந்த நபர் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஜி ஜின்பிங்கிற்கு பதிலாக மேற்குவங்காள பாஜகவினர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்த
சம்பவமும் அது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவும் நாடு முழுவதும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.
சீன பொருட்கள் புறக்கணிப்பால் இருநாட்டு உறவுகள் பாதிக்கும் – சீன
சீன பொருட்கள் புறக்கணிப்பால் இருநாட்டு உறவுகள் பாதிக்கும் – சீன
சீன பொருட்கள் புறக்கணிப்பு நடவடிக்கையால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கும் என அந்த நாட்டு அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
சீன பொருட்கள் புறக்கணிப்பால் இருநாட்டு உறவுகள் பாதிக்கும் – சீன அரசு பத்திரிகை எச்சரிக்கை
இந்தியா, சீனா
லடாக்கில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தால் கொல்லப்பட்டதை தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க
வேண்டும் என்ற கோஷம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. மேலும் சீன தயாரிப்புகளை புறக்கணிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்த புறக்கணிப்பு நடவடிக்கையால் இரு நாட்டு உறவுகள் பாதிக்கும் என அந்த நாட்டு அரசு பத்திரிகையான குளோபல் டைம்ஸ் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக அந்த
பத்திரிகையில் ‘சீன தயாரிப்புகள், செல்போன் செயலிகளை இந்தியா புறக்கணித்தால் இருதரப்பு உறவுகள் பாதிக்கும்’ என்ற தலைப்பில் தலையங்கம் எழுதப்பட்டு உள்ளது.
அதில், இந்தியாவில் சீன பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் அந்த நாட்டு பொருட்கள் வர்த்தகத்தில் எதிர்மறை விளைவுகள்
ஏற்பட்டுள்ளதை ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளது. இது இந்தியாவில் சீன சந்தை விரிவாக்கத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கூறப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கைகளால் இரு நாட்டு உறவுகள் மேலும் பாதிக்கும் என எச்சரித்துள்ள அந்த பத்திரிகை, எனினும் சீன பொருட்களின்
விலை உள்ளிட்ட வாடிக்கையாளர் நலன் சார்ந்த அம்சங்களால் இந்த கோஷங்கள் விரைவில் முடிவுக்கு வரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டு உள்ளது.
கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 லட்சம் பேர்
கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 லட்சம் பேர்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 49 லட்சத்து 21 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து குணமடைந்த 49 லட்சம் பேர்
கோப்பு படம்
ஜெனிவா:
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த
வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகள்
கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 49 லட்சத்து 21 ஆயிரத்தை கடந்தது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 91 லட்சத்து 85 ஆயிரத்து 974 பேருக்க்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 37 லட்சத்து 90 ஆயிரத்து 337 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 57 ஆயிரத்து 888 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 74 ஆயிரத்து 257 பேர் பலியாகியுள்ளனர்.
ஆனாலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 49 லட்சத்து 21 ஆயிரத்து 380 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
வைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விவரங்கள்:-
அமெரிக்கா – 10,02,929
பிரேசில் – 5,79,226
ரஷியா – 3,44,416
இந்தியா – 2,37,196
பெரு – 1,45,320
சிலி – 2,05,397
இத்தாலி – 1,83,426
ஈரான் – 1,66,427
ஜெர்மனி – 1,75,300
துருக்கி – 1,61,533
மெக்சிகோ – 1,40,118
சவுதி அரேபியா – 1,05,175
டோஹாவிலுள்ள இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் உதவிப் பொதிகள் விநியோம்
டோஹாவிலுள்ள இலங்கையர்களுக்கு இலங்கைத் தூதரகம் உதவிப் பொதிகள் விநியோம்
டோஹாவில் வசிக்கும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தணிக்கும் முயற்சியாக, உதவிகள் தேவைப்படும் வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்
மற்றும் அத்தியாவசியப் பொருட்களை டோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ச்சியாக விநியோகித்து வருகின்து.
கொழும்பிலுள்ள வெளிநாட்டு உறவுகள் அமைச்சு அனுப்பி வைத்த 6,700 கிலோ (1000 பொதிகள்) உதவிப் பொருட்கள் 2020 ஜூன் 21ஆந் திகதி தூதரகத்தால் பெற்றுக்கொள்ளப்பட்டது. இந்த உதவிப்
பொதிகளை ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சிறப்பு சரக்கு விமானம் கட்டணங்கள் எதுவுமின்றி 2020 ஜூன் 21 ஆந் திகதி டோஹாவுக்கு எடுத்துச் சென்றதன்
மூலமாக, இந்தப் பணிகளில் வெளிநாட்டு உறவுகள் அமைச்சுடன் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் ஒத்துழைத்துள்ளது. இந்த
உதவிப் பொதிகளை டோஹாவில் வசிக்கும் தேவைகளையுடைய இலங்கையர்களுக்கு தூதரகம் விநியோகிக்கவுள்ளது.
மேலும், டோஹாவிலுள்ள இலங்கையின் சங்கங்கள், கட்டார் தொண்டு நிறுவனம், கட்டார் உள்விவகார அமைச்சு மற்றும்
இலங்கை வெளிநாட்டு உறவுகள் அமைச்சு ஆகியவற்றின் உதவியுடன் இதுவரை 5,000 உலர் உணவுப் பொதிகளை தூதரகம் விநியோகித்துள்ளது.
வெளிநாட்டிலுள்ள தேவைகளையுடைய இலங்கையர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் அதே வேளையில், ஜனாதிபதி செயலகம் மற்றும் கட்டார் அரசாங்கத்துடனான
நெருக்கமான ஒருங்கிணைப்புடன், டோஹாவிலுள்ள மிகவும் பாதிக்கப்படக்கூடிய இலங்கையர்களை நாட்டிற்கு மீள அழைத்து
வரும் பணிகளில் இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தொடர்ந்தும் ஈடுபடும்.
இலங்கைத் தூதரகம்

இறக்குமதியை மட்டுப்படுத்தி உற்பத்தியை ஆரம்பியுங்கள்- கோட்டா
இறக்குமதியை மட்டுப்படுத்தி உற்பத்தியை ஆரம்பியுங்கள்- கோட்டா
நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியை மட்டுப்படுத்தியுள்ளதால் பல
துறைகளில் உற்பத்திகளை ஆரம்பிப்பதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட வகையில் மக்கள்மயப்பட்ட பொருளாதாரத்திற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையை
வெற்றிகொள்வது தொழிலதிபர்களுக்குள்ள தற்போதைய சவாலாகுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக முயற்சிகளின் அபிவிருத்திக்கான அனைத்து அமைச்சுக்களையும் ஒன்றிணைத்த வகையில் உருவாக்கப்பட்டுள்ள செயலணி மற்றும் பல்துறைசார்
தொழிலதிபர்களுடன் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி மேற்கண்வாறு தெரிவித்தார்.
மக்களின் நுகர்வுத் தேவையை பூரணப்படுத்தல், புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குவதுடன், நாட்டிற்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தல் போன்ற
வர்த்தகர்களினால் முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. உள்நாட்டில் உற்பத்தி
செய்யப்படும் அனைத்து பொருட்களினதும் மற்றும் வழங்கப்படும் அனைத்து சேவைகளினதும் தரத்தை உயர் மட்டத்தில்
பேணுவதற்கும் சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்கும் முயற்சி எடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கைத்தொழிலாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க அனைத்து அரச நிறுவனங்களும் ஒன்றுபட்டுள்ளன. தனி இலக்க வட்டி வீதத்திற்கு வங்கி கடன் வழங்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒருசில
மாதங்களுக்குள் இந்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தும்புத்தடி, ஈர்க்கில்மாறு தொடக்கம் மருந்து வில்லை வரை உள்நாட்டு
உற்பத்திகளை அதிகரிக்கச் செய்து பெறுபேற்றைக் காண்பிப்பது தொழிலதிபர்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கும் விடயம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கைக்கான ஆலோசனைகளை வழங்கி, விவசாய பொருட்களை இறக்குமதி செய்வது
அரசாங்கத்தின் கொள்கையாகாது. உறுதியான கொள்கையுடன் இருந்து அரசாங்கத்தின் செயற்பாடுகளை முன்கொண்டு
செல்வதால் தொழிலதிபர்களைப் போன்று விவசாயிகளுக்கும் பொருட்களுக்கான கேள்வியை அடையாளம் கண்டு
செயற்படுவதற்கு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மோட்டார் வாகன உற்பத்திகளை ஒன்றிணைக்கும் கைத்தொழிலாளர்கள், மோட்டார் வாகன உதிரிப்பாக உற்பத்தியாளர்களின் சங்கம், பொதியிடல் உற்பத்தியாளர் சங்கம்,
மின் கம்பி உற்பத்தியாளர்கள், படகு உற்பத்தியாளர்கள் சங்கம், இரும்பு தொழிற்சாலையாளர்கள், தோல் பொருள்
உற்பத்தியாளர்களின் ஆலோசனைக்குழு, இறப்பர் தயாரிப்பு உற்பத்தியாளர்களின் சங்கம், மின்சாரம் மற்றும் மின்னியல் உபகரண ஆலோசனைக் குழு, பலகை மற்றும் பலகை சார்ந்த
தயாரிப்பு உற்பத்தியாளர்களின் சங்கம், ஒன்றிணைந்த ஆடை தொழிலாளர்களின் சங்கம், ஆடை தொழிற்சாலையாளர்கள், அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தியாளர்களின் சங்கம், ஔடத உற்பத்தி
ஆலோசனை சபை உள்ளிட்ட பல துறைசார் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சஹ்ரான் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல ரிசாட் பதியூதீனின் சகோதரன் உதவி
சஹ்ரான் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல ரிசாட் பதியூதீனின் சகோதரன் உதவி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்த திட்டமிட்ட சஹ்ரான் ஹசீம் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச்செல்ல முன்னாள் அமைச்சர்
ரிசாட் பதியூதீனின் சகோதரன் உதவி புரிந்தாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரியவந்துள்ளது.
ஆணைக்குழுவில் நேற்று (22) சாட்சியமளித்த முன்னாள் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஒருவர் இதனை கூறியுள்ளார்.
இன்று அதிகாலை 1 மணிவரை அவர் ஆணைக்குழு முன் வாக்கு மூலம் வழங்கியதாக அததெரண செய்தியாளர் கூறினார்.
2018 ஆம் ஆண்டு சஹ்ரான் ஹசீம் படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச்சென்றுள்ளமை; இதனை கூறியுள்ளார்.
அதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் சகோதரர் ரிப்கான் பதியூதீன் உதவி புரிந்தாக அவர் கூறினார்.
ரிப்கான் பதியூதீன் ஆட்கடத்தல் வியாபாரம் உள்ளிட்ட பல வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கள்ளமட்டை பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் கைது
கள்ளமட்டை பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் கைது
இணையதளத்தின் ஊடாக பல்வேறு நபர்களிடம் பண மோசடி செய்த 4 வெளிநாட்டவர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்கு அருகில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீட்டிலுப்பின் மூலம் பரிசு வென்றுள்ளதாக தெரிவித்து குறித்த நபர்கள் இணையதளத்தின் ஊடாக பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நைஜீரியா பிரஜைகள் மூவர் மற்றும் உகண்டா நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 15 கடன் அட்டைகளை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.








