Posted in இலங்கை செய்திகள்

கோட்டாவை கிழித்து தொங்க விட்ட சஜித்

கோட்டாவை கிழித்து தொங்க விட்ட சஜித்

நடைமுறை அரசாங்கம் வேலை செய்ய திராணியற்ற அரசாங்கம்

என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று (26) இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனை கூறினார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்துள்ள போதிலும்

அதன் நன்மைகளை நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.

எதிர்வரும் தேர்தலில் வெற்றிப் பெற்றவுடன் நடுதர குடும்பங்களுக்கும்

அதற்கு கீழ் மட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கும் 20,000 ரூபா

நிவாரணமாக வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

      Posted in இலங்கை செய்திகள்

      முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படையினர் வீடு திரும்பினர்

      முல்லைத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படையினர் வீடு திரும்பினர்

      முல்லைத்தீவில் விமான படையால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல்

      மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் சில

      கடற்படையினர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.

      இவ்வாறு குணமடைந்த 223 பேர் இன்று (27) காலை வீடு திரும்பியுள்ளனர்.

      இதேவேளை, இதுவரை 821 கடற்படையினர் கொவிட் 19 தொற்றிலிருந்து

      குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

      இதுவரை 904 கடற்படை உறுப்பினர்கள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

      இதுவரை கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களில் 90 வீதமான கடற்படையினர் பூரண குணமடைந்துள்ளனர்

          Posted in இலங்கை செய்திகள்

          யாழில் சுவரொட்டிகளை கிழித்தெறிய கோரிக்கை

          யாழில் சுவரொட்டிகளை கிழித்தெறிய கோரிக்கை

          யாழ். மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் ஒட்டப்படும் தேர்தல் விளம்பர சுவரொட்டிகள் கிழித்தெறியப்படும் நிலையில், யாழ்.

          நல்லுார் ஆலய சுற்றாடலில் அருவருப்பை உண்டாக்கும் வகையில் பாரதியார்

          சிலை மீது ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை அகற்றவேண்டும் என பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

          தேர்தல் காலத்தில் பொது இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டுவது வழமை

          என்ற போதும் அவ்வாறு ஒட்டப்படும் சுவரொட்டிகள் அவை மற்றவர்களை

          கவரும்படி இருக்க வேண்டுமே தவிர மற்றவர்களுக்கு அருவருப்பை உண்டாக்கும் வகையில் அமைய கூடாது.

          அவ்வாற அருவருப்பை உண்டாக்கும் வகையில் நல்லுார் ஆலய சுற்றாடலில்

          பாரதியார் சிலை மீது வேட்பாளர் ஒருவர் தேர்தல் சுவரொட்டியை ஒட்டியுள்ளார்.

          யாழ். மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் தேர்தல் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுக்

          கொண்டிருக்கும் நிலையில் இந்த சுவரொட்டிகள் அகற்றப்படாமல் உள்ளது

          . முதலில் இவ்வாறான சுவரொட்டிகளே அகற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் பலர் கூறியுள்ளனர்.

              Posted in உலக செய்திகள்

              குருதீஸ் பகுதிகள் மீது துருக்கி அகோர தாக்குதல் – 20 கிரமங்களை விட்டு தப்பி ஓடும் மக்கள்

              குருதீஸ் பகுதிகள் மீது துருக்கி அகோர தாக்குதல் – 20 கிரமங்களை விட்டு தப்பி ஓடும் மக்கள்

              சிரியாவின் இட்லி பகுதியை முழுமையாக ஆக்கிரமித்து விட துருக்கிய இராணுவம் கடும் சமர் புரிந்து வருகிறது ,அதன்

              எதிரொலியாக துருக்கிய விமானங்கள் குருதீஸ் district of Pradost, north of Erbil பகுதிகள் மீது அகோர வான்வழி தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

              இதில் அந்த பகுதியை சேர்ந்த இருபது கிராம மக்கள் போரின் அச்சம் காரணமாக இடம் பெயர்ந்து உயிர் காக்க தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்

              தொடர்ந்து கடும் சமர் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

                  Posted in உலக செய்திகள்

                  ஐஸ் எஸ் நிலைகள் மீது அகோர தாக்குதல் 11 சுரங்க வழிகள் தாக்கி அழிப்பு

                  ஐஸ் எஸ் நிலைகள் மீது அகோர தாக்குதல் 11 சுரங்க வழிகள் தாக்கி அழிப்பு

                  ஈராக்கின் Azim எல்லை பகுதியில் தளம் அமைத்து அரச படைகளுக்கு எதிராக போர் புரிந்து வந்த ஐ எஸ் தீவிரவாதிகள்

                  ஈராக்கிய படைகளினால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்

                  இவ்விதம் குறித்த பகுதியில் 11 சுரங்க வழி அமைத்து போராடி வந்த குறித்த அமைப்பின் முக்கிய பதுங்கு நிலைகள் அழிக்க

                  பட்டுள்ளதுடன் முப்பதுக்கு மேற்பட்ட தீவிரவாதிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதக ஈராக்கிய அரச இராணுவம் அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது

                  ஐஸ் எஸ் நிலைகள்
                  ஐஸ் எஸ் நிலைகள்
                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கைக்கு 600 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கிய சீனா

                      இலங்கைக்கு 600 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கிய சீனா

                      சீன அரசாங்கம் 600 மில்லியன் ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணங்கள்

                      உட்பட சுகாதார பாதுகாப்பு உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது..

                      இலங்கைக்கான பதில் சீனத் தூதுவர் இவற்றை அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சியிடம் கையளித்தார்.

                      இலங்கைக்கு சீனா வரலாற்றில் இருந்தே முதல் உதவி வருவதாக நிகழ்வில் கருத்து வெளியிட்ட அமைச்சர் பவித்திரா வன்னிஆராச்சி தெரிவித்தார்

                          Posted in இலங்கை செய்திகள்

                          நாட்டிற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் அந்நிய செலாவணி பண பரிமாற்றலை வரையறுத்தல்

                          நாட்டிற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் அந்நிய செலாவணி பண பரிமாற்றலை வரையறுத்தல்

                          நாட்டிற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் அந்நிய செலாவணி பண பரிமாற்றலை வரையறுத்தல் மற்றும் வெளிநாட்டு வைப்புக்

                          கணக்கு தொடர்பில் உத்தரவை வெளியிடுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் (Limitation of remittance of foreign exchange from the country and obtain approval to issue orders on the foreign

                          exchange deposit account.) அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                          நேற்று முன்தினம் (24) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.

                          இதற்கமைவாக இதற்கான வர்த்தமானி அறிவிப்பின் காலம் 2020 ஜுலை மாதம் 2ஆம் திகதி தொடக்கம் மேலும் 6 மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

                          இது தொடர்பில் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

                          1. நாட்டிற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் அந்நிய செலாவணி பண பரிமாற்றலை வரையறுத்தல் மற்றும் வெளிநாட்டு
                          2. வைப்புக் கணக்கு தொடர்பில் உத்தரவை வெளியிடுவதற்கு அனுமதி வழங்குதல்

                          இந்த நாட்டிற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் பண பரிமாறல்களை 03 மாத காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்துவதற்கு 2020 ஏப்ரல்

                          மாதம் 1ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன், அதற்கமைவாக வெளிநாட்டு செலவாணி சட்டத்தில் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக 2020 ஏப்ரல் மாதம் 02

                          ஆம் திகதி வர்த்தமானியின் மூலம் தொடர்புபட்ட உத்தரவு வெளியிடப்பட்டது.

                          இதேபோன்று விசேட வைப்பீடு கணக்கு மூலம் நாட்டில் வெளிநாட்டு செலவாணி பணத்தை ஊக்குவிப்பதற்காக தேவையான

                          நடவடிக்கையை மேற்கொள்வதற்கென 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது.

                          இந்த அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய 2017ஆம் ஆண்டு இலக்கம் 12 இன் கீழான வெளிநாட்டு செலவாணி சட்டத்தில் 29ஆம் சரத்தின் கீழ் மற்றும் அந்த சட்டத்தின் 29ஆவது சரத்தின் கீழ்

                          தொடர்புபட்ட விதிமுறைகளுக்கு அமைவாக 2020.04.02 மற்றும் 2020.04.08 வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டது.

                          இந்த உத்தரவுகளுக்கு அமைவாக தொடர்ந்தும் கீழ்கண்ட வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக நிதி , பொருளாதார மற்றும்

                          கொள்கை அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட கீழ் கண்ட பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

                          இந்த நாட்டிற்கு அப்பால் மேற்கொள்ளப்படும் பண பரிமாறலை வரையறுப்பதற்கு அமைவாக உத்தரவுகளை உள்ளடக்கி

                          வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பின் காலத்தை 2020 ஜுலை மாதம் 2ஆம் திகதி தொடக்கம் மேலும் 6 மாத காலத்திற்கு நீடித்தல்.


                          விசேட வைப்பீட்டு கணக்கின் மூலம் நாட்டிற்குள் அந்நிய செலாவணி பணத்தை ஊக்குவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறையை முன்னெடுக்கும் பொழுது தற்பொழுது நிலவும்

                          அந்நிய செலாவணி சட்டம், பணத்தை தூய்மைப்படுத்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பணத்தை பயன்படுத்துவதை தடுப்பதுடன் தொடர்புபட்ட சட்டத்திலுள்ள ஒழுங்குவதிகளின்

                          காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை குறைப்பதற்காக 2017 ஆம் ஆண்டு இலக்கம் 12 கீழான வெளிநாட்டு செலவாணி

                          சட்டத்தின் 29ஆவது சரத்தின் கீழ் உத்தரவுகளை உள்ளடக்கி வெளியிடப்பட்ட 2020.04.08 திகதி வர்த்தமானி அறிவிப்பில்

                          திருத்தத்தை மேற்கொண்டு புதிய வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிடுதல்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              1000 ரூபாய் சம்பள உயர்வு -பெருந்தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்களுக்கு மகிந்தா கோரிக்கை

                              1000 ரூபாய் சம்பள உயர்வு -பெருந்தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்களுக்கு மகிந்தா கோரிக்கை

                              தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து சாதகமாக சிந்தித்து அடுத்த சில வாரங்களில் தமது சிபாரிசுகளை

                              முன்வைக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பெருந்தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

                              தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் வரவு – செலவுத்

                              திட்டத்தை தயாரிப்பதற்கு இலகுவாக அமையும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

                              தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான 750 ரூபாவுக்கு மேலதிகமாக தேயிலை விலைக்கான கொடுப்பனவு (price share supplement) , உற்பத்தி (productivity incentive) மற்றும்

                              வரவுக்கான கொடுப்பனவுகள் (attendance incentive) அடங்களாக நாள் ஒன்றுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென இலங்கைத் தொழிலாளர்

                              காங்கிரஸ் விடுத்துள்ள கோரிக்கையின் பிரகாரம் கம்பனிகளுடன் நேற்று (25.) அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

                              கோவிட் – 19 தொற்று நோய் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக

                              தோட்டக் கம்பனிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து இத்தருணத்தில் அவதானம் செலுத்த வேண்டுமென இலங்கை

                              ஊழியர் சங்கம் இந்தச் சந்திப்பில் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

                              இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் ரமேஷ் பதிரன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க, பிரதமரின் செயலாளர் காமினி சேனரத், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத்

                              தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரன, சமூக

                              வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் டி.பி.ஜி குமாரசிறி, பொது நிர்வாக திணைக்களத்தின்

                              பணிப்பாளர் ஜெனரல் அதுல குமார மற்றும் தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்களும் கலந்துக்கொண்டனர்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  புறக்கோட்டையில் கப்பம் பெற்ற 5 பேர் கைது

                                  புறக்கோட்டையில் கப்பம் பெற்ற 5 பேர் கைது

                                  கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் புறக்கோட்டையில் கப்பம் பெற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                                  புறக்கோட்டை மெனிங் சந்தையின் பின்னால் பெஸ்டியன் மாவத்தை மற்றும் ஓல்கோட் மாவத்தையில் நிறுத்தி

                                  வைக்கப்பட்டிருந்த மரக்கறி லொறிகளில் குறித்த குழுவினர் கப்பம் பெற்றுள்ளனர்.

                                  நேற்று (25) காலை 8.30 மணிக்கு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                                  கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24, 36, 38, 55, 60 ஆகிய வயதுடைய கிரேன்பாஸ் வெல்லம்பிட்டி மற்றும் கஹவத்தை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

                                  சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை இல-02 நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      வெள்ளைவேன் சந்தேக நபர்களுக்கு பிடியாணை.

                                      வெள்ளைவேன் சந்தேக நபர்களுக்கு பிடியாணை.

                                      கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு சம்பவத்தின்

                                      சந்தேகநபர்களான சரத் குமார மற்றும் அதுல சஞ்சீவ மதநாயக்க ஆகியோரை

                                      கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

                                      குறித்த சந்தேகநபர்கள் இன்று (26) நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          இலங்கை தலைநகர் கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு

                                          இலங்கை தலைநகர் கொழும்பில் 18 மணிநேர நீர்வெட்டு

                                          கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

                                          அமல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

                                          கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதுடன் கொழும்பு 1, 11 மற்றும் 12 ஆகிய

                                          பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

                                              Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

                                              லண்டனில் மக்கள் போலீசார் மோதல் – 22 போலீசார் காயம்

                                              லண்டனில் மக்கள் போலீசார் மோதல் – 22 போலீசார் காயம்

                                              லண்டன் Angell Town estate in Brixton.பகுதியில் அனுமதியின்றி நடத்தப்படவிருந்த நிகழ்ச்சி ஒன்றை தடுக்க சென்ற காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையில் பெரும் மோதல் வெடித்துள்ளது

                                              இந்த மோதலில் 22 காவல்துறை ஊழியர்கள் படு காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

                                              மேலும் காவல்த்துறையினர் வாகனங்களும் சேத படுத்த பட்டுள்ளது,மேற்படி கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

                                              வைரஸ் நோயானது பரவி வரும் வேளையில் இந்த பாட்டு இசை நிகழ்ச்சி நடத்த படவிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                              லண்டனில் மக்கள் போலீசார்
                                              லண்டனில் மக்கள் போலீசார்
                                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                                  பட்ட பகலில் பிரிட்டனில் இளம் பெண் கற்பழிப்பு

                                                  பட்ட பகலில் பிரிட்டனில் இளம் பெண் கற்பழிப்பு

                                                  பிரிட்டன் கிளஸ்க்கோ பகுதியில் 29 வயதுடைய இளமை பெண் ஒருவர் மதிய வேளையில் மர்ம நபர்களில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                                                  பாதிக்க பட்ட பெண் வழங்கிய தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த

                                                  வந்த காவல்துறையினர் குறித்த
                                                  விடயம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்

                                                  மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு களங்கம் செய்கிறார்கள். குற்றச்சாட்டுகளை உடன் விசாரியுங்கள்.

                                                      தேர்தல் நேரத்தில் திட்டமிட்டு களங்கம் செய்கிறார்கள். குற்றச்சாட்டுகளை உடன் விசாரியுங்கள்.

                                                      மனோ ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு தெரிவிப்பு

                                                      1,300 இரண்டாம் மொழி பயிற்றுனர்களுக்கான நியமனங்கள், அன்றைய சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்,

                                                      உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோரின் பங்குபற்றலுடன் அலரி மாளிகையில் ஜூலை 10ம் திகதி வழங்கப்பட்டன. இந்நியமனங்கள் அமைச்சரவைக்கு என்னால்

                                                      சமர்பிக்கப்பட்ட, அமைச்சரவை பத்திரத்துக்கு கிடைத்த ஒப்புதலின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டன. அன்றைய கல்வி அமைச்சரும், நிதி அமைச்சரும் விசேட ஒப்புதல்களை வழங்கி இருந்தனர்.

                                                      அப்படி இல்லாவிட்டால், இந்நிகழ்வில் அன்றைய பிரதமர், கல்வி அமைச்சர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் எவ்வாறு கலந்து கொள்வார்கள்?

                                                      எனது அமைச்சின் கீழ்வந்த, தேசிய மொழி மற்றும் கல்வி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் தென்னக்கோன் மற்றும் இப்போது என் மீது

                                                      குற்றம் சுமத்தும் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ஹேரத் ஆகியோரே இந்நிகழ்வை அலரி மாளிகை மண்டபத்தில் நடத்தினார்கள்.

                                                      இரண்டாம் மொழி பயிற்றுனர் பயிற்சிகளுக்காக நமது நல்லாட்சி அரசின் நிதியமைச்சு எனது வேண்டுகோளை ஏற்று 400 மில்லியன் ரூபாய்களை முதற்கட்டமாக இந்த திட்டத்துக்கு ஒதுக்கி இருந்தது.

                                                      ஆனால், புதிய அரசு பதவிக்கு வந்த உடன் இத்திட்டம் இடை நிறுத்தப்பட்டு, நிதி திறைச்சேரியால் மீளப்பெறப்பட்டது. இது இந்த அரசாங்கத்தின் பிழையான கொள்கை.

                                                      நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து இடை நிறுத்தப்பட்ட இந்த இரண்டாம் மொழி பயிற்றுனர்கள் நியமனங்களை மீண்டும் வழங்குவோம். இதன் மூலமே உணமையான தேசிய நல்லிணக்கம்

                                                      இந்நாட்டில் ஏற்படும் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார

                                                      அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

                                                      முன்னாள் எம்பி மனோ கணேசன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

                                                      இந்நிலையில், பிரசாத் ஹேரத் என்ற இவர் இல்லாத போது, இவரது அலுவலகத்துக்கு சென்று, இவரது கையெழுத்தை தயாரித்து,

                                                      நியமனதாரிகளுக்கு நான் பகிர்ந்தளித்தேன் என என் மீது குற்றம் சாட்டுவது அரசியல் காரணங்களுக்காக இட்டுக்கட்டிய மிக மிக கேவலமான பொய்.

                                                      என்மீது அநியாயமான பொய் குற்றச்சாட்டுகளை ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் சுமத்தி விட்டு, வெளியே வந்து “தமிழ் மக்களுக்காக முன்னிலையாவதாக கூறி அமைச்சர் மனோ

                                                      கணேசன் இனவாத செயல்களையே முன்னெடுத்தார்” என கூறியதன் மூலம் பிரசாத் ஹேரத் என்ற இந்த நபர் தான் யார்

                                                      என்பதையும், இவரது உண்மையான நோக்கம் என்ன என்பதையும், இவர் உண்மையில் யாரை பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதையும் அடையாளப்படுத்தி உள்ளார்.

                                                      என்னை நம்பி வாக்களித்து தெரிவு செய்யும் மக்களுக்காக தேசிய அரங்கில் முன்னிலையாவது, குரல் கொடுப்பது, சண்டை போடுவது,

                                                      இனவாதம் என்றால் நான் இனவாதியாகவே எப்போதும் இருந்து விட்டு போகிறேன். இது நான் எப்போதும் கூறும் பதில் ஆகும்.

                                                      தேர்தல் நடைபெற போகும் இவ்வேளையில் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்னாள் பிரபல அமைச்சர்கள் மீது சுமத்துவதும், குறிப்பாக சிறுபான்மை மக்களுக்காக குரல்

                                                      கொடுக்கும் கட்சி தலைவர்கள் மீது சுமத்துவதும், அதன்மூலம் ஊடக தலைப்புகளை உருவாக்கி எம்மீது அழுத்தம் செலுத்த

                                                      முயல்வதும் இன்றைய அரசின் நோக்கங்கள். எனவே நான் இதுபற்றி ஆச்சரியப்படவில்லை.

                                                      என் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதை கண்டு எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. என் மீது எந்த வழக்கும் இல்லை. என் மீது எந்த போலிஸ் புகாரும் இல்லை. எனக்கு எதிராக எந்த நீதிமன்றமும்

                                                      தீர்ப்பு எதையும் வழங்கவும் இல்லை. அமைச்சராக இருந்த போதுகூட அரச வரப்பிரசாதங்களை கூட அனுபவிக்க விரும்பியிராதவன் நான். இன்று, ஒரு வழிப்போக்கர் போகிற

                                                      போக்கில் அரசியல் காரணங்களுக்காகவும், தனிப்பட்ட காரணங்களுக்காகவும் எனக்கு எதிராக ஏதோ புகார் கொடுக்க,

                                                      அது என்னைப்பற்றிய செய்தி என்பதால் மாத்திரம் ஊடகத்தில் ஒரு செய்தி தலைப்பாக வருகிறது. இதுதான் இங்கே நடக்கிறது.

                                                      அமைச்சர்கள் சஜித் பிரேமதாச, ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க, ரிசாத் பதுர்தீன் ஆகிய முன்னாள் சக அமைச்சர்களின் மீதும் பல புகார்கள் சொல்லப்பட்டன. இப்போது என் மீது

                                                      சொல்லப்படுகிறது. எங்களை கண்டு இவர்கள் பயப்படுகிறார்கள் என்பதே இதன் அர்த்தம். இதைக்கண்டு கொழும்பில் தமிழ்

                                                      பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கும் ஒரேயொரு நோக்கில் அரசியல் செய்யும் சோரம் போன சில தமிழர்களும் துள்ளிக்குதிக்கின்றார்கள்.

                                                      எது எப்படி இருந்தாலும், என் மீதான எந்த குற்றச்சாட்டுகளையும் உடனடியாக விசாரிக்கும்படி, இன்று நான் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளேன்.

                                                      கொரொனா பரிசோதனைகள் பற்றி நான் பேசியபோது இப்படித்தான் ஒரு அரசு சார்பு மத துறவி என்னை கைது செய்து விசாரிக்கும்படி பொலிஸ் மாஅதிபரிடம் கோரிக்கை விடுத்தார்.

                                                      பொலிஸ் வரும்வரை நான் காத்திருந்தேன். பொலிஸ் வரவே இல்லை. இன்று இந்த ஆணைக்குழுவிடம் எந்தவித நியாயமுமற்ற குற்றச்சாட்டுகளை இதேபோல் முன் வைத்துள்ளார்கள்.

                                                      இந்த பிரசாத் ஹேரத், தனிப்பட்ட முறையில் என் மீது கோபம் கொண்டுள்ளமைக்கு பிரதான காரணம் இருக்கின்றது. எனது அமைச்சின் கீழ்வந்த, தேசிய மொழி மற்றும் கல்வி பயிற்சி

                                                      நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகமாக இருந்துக்கொண்டே பிரசாத் ஹேரத், மொழிக்கல்வி கலாச்சார நிறுவனம் என்ற பெயரில் வேறு ஒரு தனியார் நிறுவனத்தை இவர் நடத்தி வந்தார். இந்த

                                                      நிறுவனத்தில் இவரும், இவரது மனைவியும் பங்காளர்கள். ஒரு அரச அதிகாரி, அரசு பணியில் இருக்கும் போது, அதே நோக்கங்களை கொண்ட தனியார் நிறுவனம் ஒன்றை நடத்துவது தவறாகும்.

                                                      இது உட்பட 19 முறைக்கேடல் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி தேசிய மொழி மற்றும் கல்வி பயிற்சி நிறுவனத்தின் நிர்வாக சபை

                                                      இவரை பணியில் இருந்து இடை நிறுத்தும்படி ஏகமனதாக என்னை கோரியது.

                                                      இதையடுத்து, எனது அமைச்சின் மேலதிக செயலாளர் மற்றும் நிதி, கல்வி அமைச்சுகளின் பிரதிநிதிகள் அடங்கிய இந்த சபையின் முடிவுக்கு ஒப்புதல் அளிக்கும்படி, தேசிய மொழி மற்றும் கல்வி

                                                      பயிற்சி நிறுவனத்தின் தலைவர் தென்னக்கோன் என்னை கோரினார். இதையறிந்த பிரசாத் ஹேரத் நிர்வாக சபையின்

                                                      முடிவை ஏற்று தன்னை பணி இடை நிறுத்தம் செய்ய வேண்டாம் என என்னை சந்தித்து, பலமுறை கெஞ்சினார். சபையின்

                                                      ஏகமனதான முடிவை நான் ஏற்காமல் இருக்க முடியாது என நான் இவருக்கு கூறி விட்டேன். இதையடுத்து, இவர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டார்.

                                                      உண்மையில் செப்டம்பர் மாதம், பிரசாத் ஹேரத் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, இதே தேசிய மொழி மற்றும் கல்வி

                                                      பயிற்சி நிறுவனத்தின் தலைவர் தென்னக்கோன் இதே இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் புகார் செய்துள்ளார். அந்த புகார் இன்னமும் விசாரிக்கப்படவில்லை.

                                                      இன்று, புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, தனது அரசியல் தொடர்புகளை பயன்படுத்தி, இவர் மீண்டும் பதவிக்கு பின்கதவால் வந்துள்ளார். உண்மையில் இப்படி இடைநிறுத்தப்பட்ட, ஒரு அரச

                                                      பணியாளர், நிறுவனத்தின் நிர்வாக சபை மறு முடிவு எடுக்கும் வரை மீண்டும் பதவி ஏற்க முடியாது. இந்நிலையில் தற்போது இவர்

                                                      மீண்டும் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அரச நிர்வாக கோவைகளை மீறிய மிகப்பிழையான செயல்.

                                                      இந்நிலையில் என் மீதான கோபத்தை, முன்னாள் அமைச்சர்கள் மீது அழுத்தம் செலுத்தும் புதிய அரசாங்கத்தின் போக்கை பயன்படுத்தி,

                                                      இத்தகைய குற்றச்சாட்டை என் மீது இவர் இன்று சுமத்தியுள்ளார். இதுவே இதன் பின்னணி ஆகும்.

                                                      இந்நிலையில் நாடு முழுக்க நடைபெற்ற இந்நிறுவன பயிற்சி நிகழ்வுகளுக்கு உணவளிக்கபட்டமை என் தனிப்பட்ட செயலாளரின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடைபெற்றன என இவர்

                                                      கூறுவது கேலிக்கூத்து. நிகழ்வுகளுக்கு அவசியமான அனைத்து வெளியார் சேவைகளும் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட

                                                      நிறுவனங்களில் இருந்தே பெறப்பட்டன. வேறு அடிப்படைகளில் இவை செய்யப்பட முடியாது. மேலும் இவை அனைத்தையும்

                                                      தீர்மானிப்பது, தேசிய மொழி மற்றும் கல்வி பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் என்ற பதவியிலிருந்த பிரசாத் ஹேரத் என்ற இவரே ஆகும். இந்நிலையில் இவர் சூட்டும் குற்றச்சாட்டுகள்

                                                      அடிப்படையற்ற பொய்கள் ஆகும். இந்த குற்றச்சாட்டுகளையே உடன் விசாரிக்க வேண்டுமென்று நான் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளேன்.

                                                      பாடசாலைகளில் சுமார் 6,000 மொழி ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளன. இந்த வெற்றிடங்களை நிரப்ப கல்வி அமைச்சு அக்கறை காட்டுவதில்லை. இந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டாலேயே,

                                                      இந்நாட்டின் புதிய தலைமுறை இரண்டு மொழிகளையும் கற்க முடியும். இரண்டு மொழிகளையும் கற்றாலேயே எதிர்கால அரசு சேவையில் இரு மொழி கற்ற அதிகாரிகள் உருவாகுவார்கள்.

                                                      இதைவிட இந்நாட்டின் மொழி பிரச்சினையை தீர்க்க வேறு வழி கிடையாது. வெறுமனே தமிழ் மொழியையும் ஒரு ஆட்சி மொழி

                                                      என்று அரசியலமைப்பில் எழுதி வைப்பதில் ஒரு பயனும் கிடையாது. இந்த நல்ல தூரநோக்கின் அடிப்படையில், அமைச்சரவையின் ஒப்புதலுடன் இந்த திட்டத்தை நான் முன்னேடுத்தேன்.

                                                      இரண்டாம் மொழி பயிற்றுனர் பயிற்சிகளுக்காக நமது நல்லாட்சி அரசின் நிதியமைச்சு எனது வேண்டுகோளை ஏற்று 400 மில்லியன் ரூபாய்களை முதற்கட்டமாக இந்த திட்டத்துக்கு ஒதுக்கி இருந்தது.

                                                      ஆனால், புதிய அரசு பதவிக்கு வந்த உடன் இத்திட்டம் இடை நிறுத்தப்பட்டு, நிதி திறைச்சேரியால் மீளப்பெறப்பட்டது. இது இந்த அரசாங்கத்தின் பிழையான கொள்கை. நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு

                                                      வந்து இடை நிறுத்தப்பட்ட இந்த இரண்டாம் மொழி பயிற்றுனர்கள் நியமனங்களை மீண்டும் வழங்குவோம். இதன் மூலமே உணமையான தேசிய நல்லிணக்கம் இந்நாட்டில் ஏற்படும்.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          கொவிட் -19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 13,861 வர்த்தகங்களுக்காக ரூ.28 பில்லியன் கடன் – மத்திய வங்கி அறிவிப்பு

                                                          கொவிட் -19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 13,861 வர்த்தகங்களுக்காக ரூ.28 பில்லியன் கடன் – மத்திய வங்கி அறிவிப்பு

                                                          கொவிட் -19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட 13,861 வியாபாரங்களுக்கென ரூ.28 பில்லியன் தொகையுடைய

                                                          கடன்களை 4மூ இல் வழங்குவதற்கு மத்திய வங்கி ஒப்புதலளித்துள்ளது

                                                          கொவிட்-19 நோய்த்தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு புத்துயிரளிக்கும் அவசிய தேவையினையும் அதனூடாக நாட்டில் பொருளாதார நடவடிக்கையினை

                                                          ஊக்குவிப்பதையும் இனங்கண்டு மத்திய வங்கியும் இலங்கை அரசாங்கமும் 2020 மாச்சு 24ஆம் திகதியன்று அறிவிக்கப்பட்டவாறு சௌபாக்கியா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் வசதி என்ற

                                                          பெயரில் சௌபாக்கியா (சுபீட்சம்) கடன் திட்டத்தின் கீழ் புதிய மீள்நிதியிடல் கடன் வசதியொன்றினைத் தொடங்கியுள்ளன.

                                                          மத்திய வங்கியானது இத்திட்டத்தின் கட்டம் I இன் கீழ் 13,861 கடன் விண்ணப்பங்களுக்கென ரூ.27.9 பில்லியன் தொகைக்கு

                                                          ஒப்புதலளித்துள்ளது. இதில் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் 2020 யூன் 24 வரை நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட 7,274 வியாபாரங்கள்

                                                          மத்தியில் ரூ.14.8 பில்லியனை ஏற்கனவே பகிர்ந்தளித்துள்ளன. இக்கடன்கள் 6 மாத சலுகைக் காலத்துடனும் 24 மாதங்களைக்

                                                          கொண்ட மீள்கொடுப்பனவு காலத்துடனும் கூடிய 4 சதவீத (ஆண்டுக்கு) சலுகை வட்டி வீதத்தினைக் கொண்டவையாகும்.

                                                          மேலும், திட்டத்தின் கட்டம் II கீழ் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு 4 சதவீத (ஆண்டுக்கு) சலுகை வீதத்தில் மீள்;கடன் வழங்குவதற்கு

                                                          வர்த்தக வங்கிகளுக்கு 1 சதவீத (ஆண்டுக்கு) சலுகை வீதத்தில் மேலும் ரூ.120 பில்லியனை வழங்குவதற்கு தற்போது மத்திய வங்கி ஆயத்தமாகவுள்ளது.

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              இலங்கை உப்பு நிறுவனத்திற்கு (Lanka salt Ltd) ஜனாதிபதி ஒரு வருடகால அவகாசம்

                                                              இலங்கை உப்பு நிறுவனத்திற்கு (Lanka salt Ltd) ஜனாதிபதி ஒரு வருடகால அவகாசம்

                                                              2018ஆம் ஆண்டு முதல் நட்டத்தில் இயங்கிவரும் வரையறுக்கப்பட்ட இலங்கை உப்பு நிறுவனத்திற்கு (Lanka salt Ltd)

                                                              இலாபமீட்டுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஒரு வருடகால அவகாசம் வழங்கியுள்ளார்.

                                                              வரையறுக்கப்பட்ட இலங்கை உப்பு நிறுவனத்தின் 2016ஆம் ஆண்டில் இலாபம் 70 கோடி ஆகும். 2017ஆம் ஆண்டாகும்போது

                                                              இலாபம் 32 கோடிகளாக குறைவடைந்துள்ளது. 2018ஆம் ஆண்டு 28 இலட்சங்களாகவும் 2019ஆம் ஆண்டு ஒரு கோடியே தொன்ணூற்றி ஒரு இலட்சமாக இந்நிறுவனம் நட்டமடைந்துள்ளது.

                                                              மூன்று வருட காலத்திற்குள் ஏற்பட்ட நட்டத்தை கண்டறிந்து இலாபமீட்டுவது தற்போதைய தலைவர் உட்பட பணிப்பாளர்

                                                              சபையின் பொறுப்பாகுமென ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

                                                              வரையறுக்கப்பட்ட இலங்கை உப்பு (Lanka salt Ltd) நிறுவனத்தின் தற்போதைய நிலைமையை பரிசீலிப்பதற்காக நேற்று (24) பிற்பகல்

                                                              ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை குறிப்பிட்டார்.

                                                              1998ஆம் ஆண்டு தனியார்மயப்படுத்த திட்டமிட்டிருந்த உப்பு கூட்டுத்தாபனத்தை மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தொழிலாளர் அமைச்சராக தலையிட்டு ஊழியர் நம்பிக்கை பொறுப்பு

                                                              நிதியத்தின் (ETF) கீழ் கொண்டு வந்தார். பின்னர் நிறுவனத்தின் மூலதனத்தில் 90% வீதம் (ETF) நிறுவனமும் 10% வீதத்தை

                                                              ஊழியர்களும் பெற்றுக்கொண்ட வரையறுக்கப்பட்ட இலங்கை உப்பு நிறுவனம் (Lanka salt Ltd) பாரியளவில் இலாபமீட்டும் நிறுவனமாக மாறியது.

                                                              (ETF) நிதியத்தின்கீழ் இயங்கிவரும் நிறுவனம் ஒன்று நட்டமடைவது எவ்விதத்திலும் இடம்பெறக்கூடாதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி

                                                              அவர்கள், எதிர்வரும் 06 மாதம் மற்றும் ஒரு வருடத்திற்கான திட்டங்களை வெவ்வேறாக தயார் செய்து இலாபமீட்ட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.

                                                              உப்பு இறக்குமதியை எதிர்காலத்தில் முழுமையாக நிறுத்த வேண்டும். 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்ததுபோல் தமது

                                                              உற்பத்தியை ஏற்றுமதி செய்யும் நிறுவனமாக வரையறுக்கப்பட்ட இலங்கை உப்பு (Lanka salt Ltd) நிறுவனத்தை மாற்ற வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். நட்டமடைவதற்கான

                                                              காரணங்களை முன்வைப்பதற்கு பதிலாக இலாபமீட்டுவதற்கான மூலோபாயங்களே தமக்கு தேவையென ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

                                                              ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் தலைவர் ஸ்ரீயான் த சில்வா விஜேரத்ன>

                                                              வரையறுக்கப்பட்ட இலங்கை உப்பு (Lanka salt Ltd) நிறுவனத்தின் தலைவர் நிஷாந்த சந்தபரன உள்ளிட்ட பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

                                                                  முட்டை பிரியாணி ஒரு முறை இப்டி செய்ங்க திரும்ப திரும்ப பிரியாணி செய்வீங்க
                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  கருணா அம்மானை கைது செய்ய உத்தரவு

                                                                  கருணா அம்மானை கைது செய்ய உத்தரவு

                                                                  விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணா அம்மானை கைது செய்து

                                                                  சட்டத்தை அமுல்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

                                                                  பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      வாழைச்சேனை காகித ஆளையை மீளமைக்க கடற்படை ஒத்துழைப்பு

                                                                      வாழைச்சேனை காகித ஆளையை மீளமைக்க கடற்படை ஒத்துழைப்பு

                                                                      அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு அமைய இலங்கை கடற்படை

                                                                      மட்டக்களப்பில் அமைந்துள்ள வாழைச்சேனை காகித தொழிற்சாலை நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை தொர்டந்தும் வழங்கும்.

                                                                      அதன் பெருமையை மீண்டும் கொண்டுவருவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்க உள்ளதாகவு கடற்படை ஊடக பேச்சாளர் லெப்டினன்ட் கொமண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.

                                                                      வாழைச்சேனை காகித தொழிற்சாலை நடவடிக்கைகளுக்கு தேவையான தொழிநுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் நாட்டின்

                                                                      தேசிய வேலைத்திட்டங்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் கடற்படையினர் வழங்குவதாக தெரிவித்தார்.

                                                                      கடற்படையின் மின் மற்றும் மின்னியல் பொறியியல் துறை’ பிரிவினர் குறித்த தொழிற்சாலையில் உள்ள பல்வேறு பிரதான

                                                                      இயந்திரங்களை இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டீ சில்வாவின் ஆலோசனைகளுக்கு அமைய மீளமைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      இந்திய மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகள்-டக்கிளஸ் சீற்றம்

                                                                      இந்திய மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகள்-டக்கிளஸ் சீற்றம்

                                                                      இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக உள்நுழைகின்ற இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கான இணைந்த

                                                                      பொறிமுறை ஒன்றை உருவாக்கி முன்னகர்த்துவது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

                                                                      கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இலங்கைக்கான இந்திய

                                                                      உயர்ஸ்தானிகருக்கும் இடையில் நேற்று (24) நடைபெற்ற சந்திப்பின்போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

                                                                      அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை

                                                                      மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்கள் விவகாரத்தினை சுமூகமான முறையில் தீர்த்து

                                                                      வைப்பதற்கான திட்ட முன்வரைபு ஒன்றை இந்தியப் பிரதமரிடம் ஒப்படைத்திருந்தார்.

                                                                      குறித்த திட்ட முன்வரைபில் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் இந்தியத் தரப்பினர் திருப்தி வெளியிட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான அதிகாரிகள் மட்டத்திலான

                                                                      பேச்சுவாரத்தையை முதலில் நடத்துவது என்றும் பின்னர் அமைச்சரவை மட்டத்திலான பேச்சுக்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

                                                                      எனினும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திட்டமிட்டபடி செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாத நிலையில், இன்று

                                                                      இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை கடற் பரப்பினுள் சட்ட விரோதமாக நுழைகின்ற இந்திய இழுவைப் படகுகள் இலங்கை

                                                                      கடற்றொழிலாளர்களின் வலைகளை அறுத்துச் சேதமாக்குவதன் மூலம் இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வதாரத்தினை

                                                                      பாதிக்கச் செய்வதுடன் சட்ட விரோத மீன்பிடி முறைகளை பயன்படுத்தி கடல் வளத்தையும் அழித்துக் கொண்டிருப்பதாக

                                                                      எடுத்துரைத்ததுடன், இந்த விவகாரம் உடனடியாக தீர்க்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

                                                                      மேலும், ஏற்கனவே திட்டமிட்டது போன்று இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை, காணொளி மூலம் நடத்துவது

                                                                      தற்போதைய சூழலில் நடைமுறைச் சாத்தியமானது என்ற விடயத்தையும் இந்திய உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு கொண்டு வந்திருந்தார்.

                                                                      அதேவேளை இன்றைய அமைச்சரவையிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்திய மீனவர்களின் எல்லை மீறிய செயற்பாடுகள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

                                                                      குறித்த விவகாரம் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சரவை, இலங்கையின் கடல் வளத்தையும்

                                                                      கடற்றொழிலாளர்களையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் எதிர்காலத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் ஏகமனதாக தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                                                                          கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                          இராணுவ அதிகாரி சுட்டு படுகொலை – நடந்தது என்ன …?

                                                                          பொல்ஹேன்கொட இராணுவ முகாமின் இராணுவ அதிகாரி ஒருவர் துப்பாக்கி

                                                                          சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில்

                                                                          விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                                                          குறித்த இராணுவ அதிகாரியுடைய துப்பாக்கி இயங்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                                                          இது தற்கொலையா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.