துபாயில் இந்திய தம்பதிகொலை – நகைகள் கொள்ளை

Spread the love

துபாயில் இந்திய தம்பதிகொலை – நகைகள் கொள்ளை

துபாயில் இந்திய தம்பதியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

துபாயில் இந்திய தம்பதியை கொலை செய்து நகைகள் கொள்ளை – பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது
கைது

துபாய் நகரின் அரேபியன் ரேஞ்சஸ் பகுதியில் வசித்து வந்தவர்கள் ஹிரேன் ஆதித்யா-விதி ஆதித்யா தம்பதி. இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த இவர்கள் சார்ஜாவில் வர்த்தகம் செய்து

வருகின்றனர். இந்த தம்பதியருக்கு 13 வயது ஒரு மகளும், 18 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை இந்த தம்பதி மர்மமான முறையில் அவர்களது அறையில் இறந்து

கிடந்தனர். மூத்தமகள் படுகாயம் அடைந்திருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று,

படுகாயம் அடைந்த தம்பதியின் மகளை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அந்த தம்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், அந்த தம்பதி மகள்களுடன் இரவில்

தூங்கிக்கொண்டிருந்த போது, அந்த நபர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, அந்த தம்பதியை கத்தியால் குத்தி கொலை

செய்துவிட்டு, வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றதும், இதில் அவருைடய மூத்தமகள் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது.

மேலும், கைது செய்யப்பட்ட நபர் பராமரிப்பு பணிக்காக அந்த தம்பதியின் வீட்டிற்கு இதற்கு முன்னர் சென்று வந்த போது, வீட்டை

நோட்டமிட்டு நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அந்த நபரிடம் இருந்து போலீசார் மீ்ட்டனர்.

இந்திய தம்பதி இறந்த தகவலை இந்திய துணை தூதர் விபுல் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, இது மிகவும்

துயரமான சம்பவம் ஆகும். இந்திய துணை தூதரகம் அந்த குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது என்றார்.

      Leave a Reply