Author: நலன் விரும்பி
ரயிலுடன் மோதி சிதறிய பேரூந்து – 20 பேர் பலி
ரயிலுடன் மோதி சிதறிய பேரூந்து – 20 பேர் பலி
கடந்த தினம் பாகிஸ்தான் Karachi to Lahore express ரயிலுடன்யாத்திரை சென்ற பயணிகள் பேரூந்து ஒன்று மோதி சிதறியதால்
அதில் அவ்வேளை பயணித்த இருபது பேர் உடல் சிதறி பலியாகினர் ,மேலும் எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்காயமடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
அடையாளம் தெரியாத ரயில்வே கடவடையில் இந்த சம்பவம் Sheikhupura district of Punjab பகுதியில் இடம்பெற்றுள்ளது
மேற்படி விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

லண்டன் மிச்சம் சிறுமி கத்தியால் குத்தி கொலை – பிரதே அறிக்கை வெளியானது
லண்டன் மிச்சம் சிறுமி கத்தியால் குத்தி கொலை – பிரதே அறிக்கை வெளியானது
லண்டன் மிச்சம் பகுதியில் ஐந்து வயது சாயாகி என்ற அழகிய அப்பாவி சிறுமியை 35 வயதுடைய தாயார் கத்தியால் கழுத்து பகுதியில் குத்தி வெட்டி கொலை செய்தார் என மக்கள் பேசி கொள்கின்றனர் .
அவ்வாறன அந்த சம்பவத்தை போலீசார் இன்று உறுதி படுத்தினர் ,சடலம் மரண பரிசோதனை அறிக்கையில் பலமான கத்தி வெட்டு
தாக்குதலுக்கு இலக்காகி இந்த அப்பாவி சிறுமி பலியாகியுள்ளார் , Great Ormond Street Children’s Hospital மேற்கொள்ள பட்ட பிரேத
பரிசோதனை அறிக்கையை மையமாக வைத்து காவல்துறையினர் முதன் முதலாக இதனை அறிவித்துள்ளனர்
மேலும் இறந்து போன சிறுமியின் குடும்பத்தினருக்கு தம்மாலான அனைத்து ஒத்துழைப்பையும் ,உதவிகளையும் செய்து வருவதாக
மேலும் காவல்துறையினர் தெரிவித்துள்ளதுடன் ,இந்த சம்பவம் தமிழர்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் மிக முக்கியமான ஒரு சொல்லாடலை அவர்கள் பயன் படுத்தி வருகின்றனர்,அவை கீழே தர படுகிறது
Great Ormond Street Children’s Hospital ,,,,,It is believed that all parties involved were known to each other.
( சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்று நம்பப்படுகிறது)
This is a tragic incident and we are working very hard to fully understand what has happened. Whilst I know the effects of this incident will,
understandably, shock and sadden the local community, please be reassured that we are not seeking anyone else in connection with Sayagi’s death and there is no cause for the community to be fearful or alarmed.
இது ஒரு சோகமான சம்பவம், என்ன நடந்தது என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள நாங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறோம். இந்த சம்பவத்தின் விளைவுகள் உள்ளூர்
சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்யும் என்று எனக்குத் தெரியும், சயகியின் மரணம் தொடர்பாக நாங்கள் வேறு யாரையும் தேடவில்லை என்பதையும், சமூகம் பயப்படவோ அல்லது
எச்சரிக்கையாகவோ இருக்க எந்த காரணமும் இல்லை என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.என காவல்துறை அறிக்கையில் குறிப்பிட பட்டுள்ளது
தற்போது தயார் கத்தி குத்துக்கு உள்ளான நிலையில் மிக ஆபத்தான நிலையிலேயே உள்ளதாகவும் அவர் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட பட்டுள்ளது ,
( A 35-year-old woman had also suffered a knife injury. She was also taken to hospital where she remains in a critical condition at this time )
அவர் உயிர் தப்பி வந்தால் மட்டுமே மேலதிக விபரங்கள் தெரிய வரும் என வேற்று நாட்டு மக்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்
மேலும் இந்த கொலை தொடர்பாக யாரவது கண்ணுற்றாலோ அலல்து தெரிந்தாலோ தமக்கு தெரிவிக்கும் படியும் இரகசியம் பேன படும் எனவும் காவல்துறையினர் வேண்டுதல் விடுத்துள்ளனர்
மேற்படி துயர சம்பவத்தில் இருந்து மக்கள் இன்னும் மீளாது ,மீளா துயரில் உள்ளதை அவதானிக்க முடிகிறது

2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தலவாக்கலை கௌனமரா தோட்டத்தில்
2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தலவாக்கலை கௌனமரா தோட்டத்தில்
2020 பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தலவாக்கலை கௌனமரா
தோட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் முன்னால் அமைச்சரும்
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்
உட்பட தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கத்தினர் கலந்துக் கொண்டனர்

வேட்பாளருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் 


இலங்கையில் சிக்கியிருந்த 117 இந்திய பிரஜைகள் சென்னைக்கு பயணம்
இலங்கையில் சிக்கியிருந்த 117 இந்திய பிரஜைகள் சென்னைக்கு பயணம்
இலங்கையில் சிக்கியிருந்த 117 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (யுஐ 0274) மூலம் இன்று 2020 ஜூலை 03 ஆம் திகதி கொழும்பிலிருந்து சென்னைக்கு பயணமானார்கள்.
இதுதொடர்பாக . கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
இந்திய உயர் ஸ்தானிகராலயம்
கொழும்பு
ஊடக அறிக்கை
இலங்கையில் சிக்கியிருந்த 117 இந்திய பிரஜைகள் விசேட ஏர் இந்தியா விமானம் (AI 0274) மூலமாக 2020 ஜூலை 03 ஆம் திகதி கொழும்பிலிருந்து சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கொவிட்19 காரணமாக நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு அனுப்புவதற்கான, இந்திய அரசின் “வந்தே பாரத் மிஷன்”
திட்டத்தினுடைய மூன்றாவது கட்டத்தின் ஓர் அங்கமாக இந்த விமானப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- வந்தே பாரத் திட்டத்தின்கீழ் இலங்கையிலிருந்து இயக்கப்படவிருக்கும் அடுத்த விமானசேவைகள்;
AI 0282 – கொழும்பு – டில்லி 08 ஜூலை 2020
AI 0282 – கொழும்பு – டில்லி 18 ஜூலை 2020
- இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்
- அடிப்படையில் அவசரமாக நாடு திரும்ப வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக நிர்க்கதியாகியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள், விசா காலாவதியான நிலையில்
- தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா திரும்புவதற்கு
- கோரிக்கைகளை முன் வைத்திருப்போர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்குவெளிநாடுகளில் சிக்குண்டிருப்பவர்களுக்காகஇந்திய உள்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட
- செயற்பாட்டுமுறைமையின் பிரகாரம், முன்னுரிமை வழங்கப்படும்.
- கொவிட் 19 காரணமாக சர்வதேச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் சிக்கியிருந்த இந்திய பிரஜைகள், சொந்தநாடு நோக்கிய தமது பயணம் குறித்து மகிழ்ச்சியினை
- வெளிப்படுத்தியிருந்தனர். கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு ஜூன் 01ஆம் திகதி இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பற் சேவை, 2020 மே 29 , ஜூன் 15 மற்றும் ஜூன் 22
- ஆகிய மூன்று திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட ஏர் இந்திய விமானசேவைகள், ஏனைய பல விசேட விமான
- சேவைகள் மற்றும் இன்றைய விமான சேவை உட்பட்ட சேவைகள் மூலமாக 1600க்கும் அதிகமான இந்திய பிரஜைகள்
- இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு அழைத்துச்
- செல்லப்பட்டனர்.
- நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இதுவரையில் தம்மை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய
- தவறியிருப்பின் கீழ்வரும் இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு கோரப்படுகிறார்கள் https://hcicolombo.gov.in/COVID_helpline சகல இந்திய
- பிரஜைகளையும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்படும்
- அறிவித்தல்களை அறிந்து கொள்ளுமாறும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
லண்டன் சட்டனில் ஆயுதங்கள் ,கத்தியுடன் ஆண் ,பெண் கைது
லண்டன் சட்டனில் ஆயுதங்கள் ,கத்தியுடன் ஆண் ,பெண் கைது
லண்டன் Gander Green Lane, Sutton பகுதியில் ஆயுத சோதனை காவல்துறையினர்
மேற்கொண்ட திடீர் சுற்று காவல் முற்றுகை சோதனை நடவடிக்கையில்
கார் ஒன்றில் பயணித்து கொண்டிருந்த
40 வயது ஆண் மற்றும் 39 வயது பெண் ஆகியோர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் மீது சநதேகம் கொண்ட காவல்துறையினர் அவர்களது காரினை சோதனை
செய்த பொழுது அதற்குள் இருந்து கைதுப்பாக்கி ,மற்றும் கத்தி போதைவஸ்து என்பன மீட்க பட்டன
தொடர்ந்து அவர்கள் தங்கி இருந்த வீட்டை சோதனை செய்த பொழுது அங்கிருந்த
நான்கு துப்பாக்கிகள் ,பத்து கத்திகள் மற்றும் போதைவஸ்துக்கள் என்பன மீட்க பட்டுள்ளது
கைதான இருவரும் தீவிர விசாரணைகளின் பின்னர் நீதிமனரில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
இவர்கள் துப்பாக்கி ஒன்றினை போதை வாஸ்து கடத்தலர் காரர்களுக்கு
வினியோகிக்கும் நகர்வில் ஈடுபட வேளையே இந்த கைது இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வு – இலங்கையின் அறிக்கை
மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வு – இலங்கையின் அறிக்கை
மனித உரிமைகள் பேரவையின் 44 வது அமர்வில் இலங்கையினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை
மனிதஉரிமைகள்பேரவையின்44 வதுஅமர்வு நிகழ்ச்சிநிரல்2: உயர்ஸ்தானிகரின்வருடாந்தஅறிக்கைதொடர்பானஊடாடும்உரையாடல்
02 ஜூலை2020
இலங்கையின்அறிக்கை
தலைவர்அவர்களே,
மனிதஉரிமைகள்உயர்ஸ்தானிகரினால்சமர்ப்பிக்கப்பட்ட2019 ஆம்ஆண்டிற்கானமனிதஉரிமைகள்உயர்ஸ்தானிகர்அலுவலகத்தின்வருடாந்தஅறிக்கையைஇலங்கைவரவேற்கின்றது.
வேண்டுகோளின்பேரில்அரசுகளுக்குதொழில்நுட்பமற்றும்நிதிஉதவிகளைவழங்குவதற்காகஅலுவலகம்முன்னெடுத்துள்ளமுயற்சிகளைநாங்கள்பாராட்டும்அதேவேளையில்,
அலுவலகத்தில்சமமானபுவியியல்பிரதிநிதித்துவத்தின்அவசியத்தையும்எடுத்துக்காட்டுகின்றோம்.
ஆக்கபூர்வமானஈடுபாட்டிற்கானஎமதுஉறுதிப்பாட்டின்தொடர்ச்சியாக,2020
ஆம்ஆண்டில்உயர்ஸ்தானிகர்அலுவலகத்திற்குதன்னார்வபூர்மான5000 அமெரிக்கடொலர்பங்களிப்பைஇலங்கைவழங்கும்.
உலகில்கோவிட்-19 தொடர்பானமனிதஉரிமைகளின்தாக்கங்கள்குறித்துசெவ்வாயன்றுமனிதஉரிமைகள்உயர்ஸ்தானிகர்இந்தசபைக்குவழங்கியவாய்வழி
ரீதியானபுதுப்பிக்கப்பட்டதகவல்கள்கள்குறித்தும்இலங்கைசுட்டிக்காட்டவிரும்புகின்றது. குறிப்பாகஎதிர்காலகோவிட்-19 தடுப்பூசியை’உலகளாவியபொதுநன்மை’
எனஅங்கீகரிப்பதற்கானஅவரதுஅழைப்பு, மற்றும்தொற்றுதொடர்பானநிவாரணங்களுக்குத்தடையாகஇருக்கும்பொருளாதாரத்தடைகளைதளர்த்துவதுஅல்லதுஇடைநிறுத்துவதற்
கானஅழைப்புபோன்றதொற்றுநோயிலிருந்துமீள்வதற்கானஅதிகமானசர்வதேசஒற்றுமைக்கானஉயர்ஸ்தானிகரின்வேண்டுகோளைநாங்கள்வரவேற்கின்றோம்.
1953 ஆம்ஆண்டுமுதல்அனைத்துமக்களுக்குமானஇலவசமானஉலகளாவியசுகாதாரத்திற்குஉத்தரவாதமளித்தஒருநாடுஎன்றவகையில், தனதுபிராந்தியத்தில்மிகவும்உயர்வானதனிநபர்சுகாதாரசெலவின
ங்களில்ஒன்றின்மூலமாக, சீரான, பல்துறைஅணுகுமுறையினூடாககோவிட்-19
தொற்றுநோயின்பரவலைஇலங்கையினால்வெற்றிகரமாகக்கட்டுப்படுத்தமுடிந்தது.
தேசியமட்டத்திலானவிரைவானதடுப்புநடவடிக்கைகள், நன்குவலையமைக்கப்பட்ட, பல்தரப்பட்டபங்குதாரர்களின்தொடர்புத்தடமறிதல்பொறிமுறைமற்றும்திரைப்பிரதியெடுத்தல் /
பரிசோதனைமற்றும்மருத்துவமனையில்அனுமதித்தல்ஆகியவற்றைநோக்கியவலுவானதொருசுகாதாரஅமைப்புஆகியனநாட்டில்கோவிட்-19 தொற்றின்சமூகப்பரவலை2020 மே01
முதல்பூஜ்ஜியஎண்ணிக்கையில்உறுதிப்படுத்துவதற்குஉதவியுள்ளன. கடைசியாக2020 ஜூன்01 ஆந்திகதிஇடம்பெற்றமரணத்துடன்11 பேர்மாத்திரமேமரணமடைந்துள்ளதுடன்,
இலங்கையில்இடம்பெற்றகோவிட்-19 நோயாளிகளின்இறப்புவிகிதம்0.54%மட்டுமேயாவதுடன், இதுஉலகளாவியமரணவிகிதமான4.85%ஐவிடவும்கணிசமாளஅளவுகுறைவாகும்அதேவேளையில்,
இலங்கையில்குணமடைந்தோரின்விகிதமான83.59%ஆனது, உலகளாவியகுணமடைந்தோர்விகிதமான54.77%ஐவிடமிகவும்அதிகமாகும்.
தலைவர்அவர்களே,
உலகசுகாதாரதாபனத்தினால்பாராட்டப்பட்டவகையிலானதொற்றுநோயைக்கட்டுப்படுத்துவதில்இலங்கைஅரசாங்கம்கடைப்பிடித்தஅணுகுமுறையானது,
தனதுமக்களுக்குமாத்திரமன்றிஅதன்ஆட்புலத்திலுள்ளவெளிநாட்டினரினதும்ஆரோக்கியம்மற்றும்பாதுகாப்பைபராமரிப்பதற்காகமுக்
கியத்துவமளிக்கும்அனைத்தையும் உள்ளடக்கியதும், பாகுபாடற்றதும்மற்றும்முழுமையானதுமாகும்.
வைரஸ்பரவுவதைத்தடுப்பதற்காகஅரசாங்கம்முன்னெடுத்துள்ளநடவடிக்கைகள்எச்சந்தர்ப்பத்திலும்அடிப்படைச்சுதந்திரங்களைப்பயன்படுத்துவதில்தடங்கல்களைத்தோற்றுவித்தமைக்கானஅவசரகால
நடவடிக்கைகளைஎடுப்பதற்குவழிவகுக்கவில்லை, மாறாகஇந்ததொற்றுநோயின்போதுசமூகத்தின்அனைத்துப்பிரிவினரினதும்உரிமைகளைநாடுமுழுவதும்பாதுகாக்கும்நோக்கத்துடன்
, சட்டத்தின்சரியானசெயன்முறைக்குஇணங்க, பொதுசுகாதாரத்தின்நலனுக்கானகுறைந்தபட்சமானதற்காலிகக்க
ட்டுப்பாடுகளுக்குகண்டிப்பாகமட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவை2020 ஜூன்28 ஆந்திகதிமுழுமையாகநீக்கப்பட்டன.
இந்தபொதுசுகாதாரநடவடிக்கைகள், தொற்றுநோய்க்குஆட்படாமல்இருக்கச்செய்யும்முகமாக, சமூகத்தில்குறிப்பாகபாதிக்கப்படக்கூடியபிரிவுகளானகுறைந்தவருமானம்கொண்டகுடும்பங்கள், வயதானவர்கள்,
மாற்றுத்திறனாளிகள், நாள்வருமானம்ஈட்டுபவர்கள், விவசாயிகள்மற்றும்தொழில்துறைகள்ஆகியவற்றின்பொருளாதார
மற்றும்சமூகஉரிமைகளைமேம்படுத்துவதைநோக்கமாகக்கொண்டதொடர்ச்சியானகொள்கைகளுக்குஅமைவாகஏற்படுத்தப்பட்டன.
இதுதொடர்பில், கோவிட்-19 தொற்றினால்ஏற்படும்முன்னோடியில்லாதவகையிலானபொருளாதாரமற்றும்கடன்தொடர்பானசவால்கள்மற்றும்அதன்விளைவாகவளர்ச்சியடைந்துவரும்நாடுகளுக்கானகடன்நிவாரணம்மற்றும்நிதி
சார்ந்தஊக்கமளிப்புஆகியவற்றின்தேவைகுறித்துஉலகத்தலைவர்களின்கவனத்தைஈர்த்தஅணிசேராஇயக்கத்தின்உச்சிமாநாட்டில்2020 மே4
ஆந்திகதிஇலங்கைஜனாதிபதிஆற்றியஉரையைநினைவுகூர்கின்றோம்.
தொற்றுநோய்க்குபிந்தையஉலகில்அபிவிருத்திசெய்வதற்கானஉரிமையைநிறைவேற்றுவதற்காககடன்நிவாரணம்மற்றும்நேரடிமுதலீடுகளுக்குஅழைப்புவிடுப்பதன்மூலம்,
உயர்ஸ்தானிகர்தனதுபுதுப்பிக்கப்பட்டதகவல்களில்இந்தத்தேவையைஎடுத்துரைத்துள்ளார்என்பதைநாங்கள்பாராட்டுகின்றோம்.
பிராந்தியமட்டத்தில், தொற்றுநோய்தொடர்பானசவால்களுக்குஉதவுவதற்காகபிராந்தியஒத்துழைப்புக்கானதெற்காசியசங்கத்தின்கோவிட்-19
அவசரநிதிக்குஇலங்கை5 மில்லியன்அமெரிக்கடொலர்களைவழங்கியுள்ளது.
தலைவர்அவர்களே,
கோவிட்-19 தொற்றுநோய்உலகில்ஒருபுவியியல்பகுதியிலிருந்துஇன்னொருஇடத்திற்குநகரும்போது, நமதுஉலகளாவியநிலப்பரப்பில்நிலவுகின்ற,
பெரும்பாலும்தொற்றுநோயின்விளைவுகளால்அதிகரிக்கும்தனிநிலையானஏற்றத்தாழ்வுகளைநாம்அதிகளவில்நினைவுபடுத்துகின்றோம்.
இந்தசபைஉட்படஐக்கியநாடுகள்தாபனம்இந்தஏற்றத்தாழ்வுகளைநிவர்த்திசெய்வதிலும், கோவிட்-19
நெருக்கடியைசமாளிப்பதற்கானஉலகளாவியமுயற்சிகளில்உண்மையில்எவரும்பின்வாங்காமலிருப்பதைஉறுதிசெய்வதிலும்முக்கியபங்குவகிக்கின்றது.
இந்தநோக்கத்தைஅடையசர்வதேசசமூகங்களிடையேஉண்மையானஉரையாடலும்ஒத்துழைப்பும்முக்கியம்எனஇலங்கைநம்பும்அதேவேளையில், இந்தமுடிவைநோக்கிதனதுஅனுபவங்களையும்,
சிறந்தநடைமுறைகளையும்பகிர்ந்துகொள்வதற்காகசகநாடுகளுடன்ஒற்றுமையுடன்செயற்படவும்நாம்தயாராகஇருக்கின்றோம்.
தலைவர்அவர்களே,
இலங்கைதொடர்பான30/1 தீர்மானம் (இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, வடக்குமசிடோனியாமற்றும்மொண்டினீக்ரோ) குறித்தமையக்குழுவினால்செவ்வாய்க்கிழமை (ஜூன்30)
வெளிப்படுத்தப்பட்டகருத்துக்கள்குறித்துகுறிப்பிடுகையில், 30/1 தீர்மானத்தின்இணைஅனுசரணையிலிருந்துவிலகியுள்ளபோதிலும், அரசாங்கத்தின்கொள்கைக்கட்டமைப்பிற்குஏற்ப,
இலங்கைஅரசியலமைப்பின்கட்டமைப்பிற்குள்நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்மற்றும்மனிதஉரிமைகள்ஆகியவற்றைஉள்நாட்டில்வடிவமைக்கப்பட்டமற்றும்செயற்படுத்தப்பட்டசெயன்முறையின்
மூலம்அடைந்துகொள்வதற்குஉறுதிபூண்டுள்ளதுஎன்பதைஇலங்கைஅரசாங்கம்தெளிவுபடுத்தியுள்ளது.
நான்கரைஆண்டுகளுக்கும்மேலாகஉண்மையானநல்லிணக்கத்தைவழங்கத்தவறியவெளிப்புறமாகஇயக்கப்படும்ஒருகட்டமைப்பைத்தொடரவிரும்புவதற்குபதிலாக,
மக்கள்ஆணையால்ஆதரிக்கப்படுவதும், இலங்கைமற்றும்அதன்மக்களின்நலனுக்கானதுமானநாட்டிலுள்ளயதார்த்தங்களைஅங்கீகரிக்குமாறும்,
நல்லிணக்கத்தைவழங்கக்கூடியநடவடிக்கைகளில்கவனம்செலுத்தும்இந்தஅணுகுமுறையைப்பாராட்டுமாறும்அனைத்துதரப்பினரையும்மீண்டும்கேட்டுக்கொள்கின்றோம்.
இறுதியாக, ஐ.நா. மனிதஉரிமைகள்உயர்ஸ்தானிகர்அலுவலகம், ஐ.நா.
மனிதஉரிமைகள்பொறிமுறையுடன்இலங்கைஅரசாங்கம்தொடர்ந்தும்ஈடுபடுவதோடு,
உள்நாட்டுமுன்னுரிமைகள்மற்றும்கொள்கைகளுக்குஅமைய, பரஸ்பரம்ஒப்புக்கொள்ளப்பட்டபகுதிகளில்திறன்அபிவிருத்திமற்று
ம்தொழில்நுட்பஉதவிகளினூடாகசர்வதேசசமூகத்துடன்நெருக்கமானஒத்துழைப்புடன்செயற்படுகின்றது.
இளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்
இளம் மனைவியை அடித்து கொன்ற கணவன்- அதிர்ச்சியில் கிராமம்
குடும்ப தகராறு காரணமாக கணவனால் அவரது மனைவி பொல்லு ஒன்றால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (07) பிற்பகல் 2 மணியளவில் பன்னல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெல்பல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தாக்குதலில் 28 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சடலம் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சடலம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று (03) இடம்பெறவுள்ளது.
சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக பன்னல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கடவத்தை மங்கட வீதி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மங்கடபார வயல் ஒன்றுக்கு அருகில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் படுகாயமடைந்த 42 வயதுடைய நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கொலையினை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி இரு விவசாயிகள் பலி
மின்சாரம் தாக்கி இரு விவசாயிகள் பலி
மட்டக்களப்பு உன்னிச்சை வயல் பிரதேசத்தில் யானைகளிடம் இருந்து வேளாண்மையை பாதுகாக்க அமைக்கப்பட்ட மின்சார
வேலியின் சிக்கி வேளாண்மை காவலில் இருந்த இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (02) இரவு இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர்.
உன்னிச்சை கரவெட்டியாறு பிரதேசத்தைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் 58 வயதுடைய முனிச்சாமி தங்கையா, 7 பிள்ளைகளின் தந்தையான
51 வயதுடைய சின்னத்தம்பி மணிவண்ணன் ஆகிய இரு விவசாயிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள குறித்த வயல் பிரதேசத்தில் வழமைபோல வேளாண்மை காவலுக்கு சம்பவ தினமான நேற்று இரவு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் வயல் பகுதியில் யானைக்காக சட்டவிரோதமாக மின்சார வேலியை வோளாண்மை உரிமையாளர்கள் அமைத்துள்ளனர்.
இந்த மின்சார வேலியில் சிக்குண்டு இரு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இவர்களது சடலங்கள் பிரேத
பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் நாடு திரும்பினர்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜப்பானில் சிக்கியிருந்த 261 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பினர்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.455 ரக விமானத்தில் அவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான
நிலையத்தை வந்தடைந்தனர். ஜப்பானுக்கு தொழில் நிமித்தம் சென்றிருந்த இலங்கையர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
காவல்துறை உயரதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்
காவல்துறை உயரதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம்
பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் சிலர் இடமாற்றப்பட்டுள்ளனர்.
சேவைத் தேவையின் அடிப்படையில் தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திற்கு பொறுப்பாக செயற்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்
எஸ்.சி.மெதவத்த பொலிஸ் நலன்புரி பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார்.
குறித்த பணியகத்தின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பதில் பிரதி பொலிஸ்மா அதிபர் ஜீ.கே.ஜே அபொன்சு
நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாண வடக்கு பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக பதில் பிரதி பொலிஸ்மா அதிபர் எஸ்.பி.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளா
றம்புட்டானால் பறிபோன குழந்தையின் உயிர்
றம்புட்டானால் பறிபோன குழந்தையின் உயிர்
கொடபொல, இலுக்பிடிய பிரதேசத்தில் 11 மாத வயதுடைய குழந்தையொன்று றம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதில் நேற்றிரவு (02) உயிரிழந்துள்ளது.
குழந்தை சிகிச்சைக்காக தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் உரிய சிகிச்சை பெற்றுக் கொடுக்கப்படவில்லை என தெரிவித்து குழந்தையின் உறவினர்கள்
வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் அதன் சொத்துக்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த ஊழியர் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின்
சொத்துகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் சொத்துக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு
தெரிவித்து அதன் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமான பணிப்புறக்கணிப்பு நாளை (04) காலை 8 மணி வரையில் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில்,
குறித்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் மேற்கொள்ளப்படும் என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்
பாரிய நில நடுக்கம் 162 பேர் பலி – மியன்மாரில் நடந்த பயங்கரம்
நேற்று மியன்மாரில் இடம் பெற்ற பாரிய நில நடுக்கத்தில் சிக்கி
இதுவரை சுமார் 162 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்
இருபதுக்கு மேற்பட்டவர் காணாமல் போயுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
தொடர்ந்து மீட்பு பணிகள் ,மற்றும் தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன
கட்டட இடி பாடுகளுக்குள் மக்கள் சிக்கி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது
தற்போது மீட்பு பணிகள் துரித படுத்த பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது
,இராணுவம் மக்கள் ,மீட்பு பணிகளில் ஈடுப்படுத்த பட்டுள்ளனர்

பாரிய நில நடுக்கம் 
உடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்
உடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி- நடந்த அதிர்ச்சி சம்பவம்
கம்போடியாவில் ஆடையின்றி குளத்தில் குளித்த முதியவர் உடல் வழியே அட்டை பூச்சி நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி… குளத்தில் குளித்தபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்…
அட்டை பூச்சி
கம்போடியாவின் புனோம் பென்னில் என்ற பகுதியில் முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு
அந்த முதியவர் வீட்டின் அருகில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார். குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவரது
உறுப்பில் வீக்கம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. வலியில் அவதியுற்ற அந்த முதியவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதனையில் அதிர்ச்சியான சம்பவத்தை பார்த்துள்ளனர். முதியவரின்
சிறுநீர்ப்பையில் சிறிய கேமரா கொண்டு நுழைத்து பார்க்கையில் அட்டை பூச்சி ஒன்று அவரது உடலுக்குள் புகுந்துள்ளது
தெரியவந்தது. குளத்தில் ஆடையின்றி குளித்த போது அவரின் உறுப்பு வழியே அந்த அட்டைப் பூச்சி சென்றிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அந்த அட்டை பூச்சி அவரது ரத்தத்தை உறிஞ்சி பெரிதாகி வருவதும் தெரிய வந்தது. உடலின் மற்ற பாகங்களையும் அந்த
அட்டை பூச்சி சேதப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த அட்டை பூச்சியானது முதியவரின் உடலில் இருந்து சுமார் 500 மில்லிக்கு அதிகமான ரத்தத்தை உறிஞ்சி விட்டதால், அந்த
அட்டைப்பூச்சியை வெளியேற்றுவதில் மருத்துவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டு
அட்டைப்பூச்சியை வெளியேற்றி உள்ளனர். மேலும் அந்த முதியவரை தங்களது மருத்துவமனை கண்காணிப்பில்
வைத்துள்ளனர். இதையடுத்து முதியவர் குணமடைந்து அவரது வீட்டிற்க்கு சென்றுள்ளார்.
கம்போடியாவில் நிகழ்ந்த இந்த சம்பவம் ஆச்சர்யமாகவும் மிகுந்த சவாலாகவும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுபோன்ற சம்பவம் முதல் முறை அல்ல. 2018 ஆம் ஆண்டில், சீனாவின் நெய்ஹைர் நகரில் ஒரு மனிதனின் மூக்கிலிருந்து அட்டைப்பூச்சி வெளியேற்றப்பட்ட சம்பவமும் நடந்து உள்ளது.

பிரிட்டனில் காணாமல் போன இளம் இந்திய பெண் -தேடும் பொலிஸ்
பிரிட்டனில் காணாமல் போன இளம் இந்திய பெண் -தேடும் பொலிஸ்
பிரிட்டன் Waltham பகுதி காட்டு பகுதியில் நடை பயில சென்ற 23
வயதுடைய Pardeep Kaur Plaha என்கின்ற இந்திய பெண்மணி காணாமல் போயுள்ளார்
இவர் வெள்ளை நிற சட்டை அணிந்த படியும் ,கையில் கைபேசியுடனும் நடந்து சென்றுள்ளார்
ஆனல் இதுவரை அவர் வீடு வரவில்லை ,நேற்று இவர் காணமல் போயுள்ளார் ,
என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இவரை கண்ணுற்றால்
தமக்கு அறியத் தரும்படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .இவர் என்ன ஆனர் என்பது தொடர்பில் தெரியவரவில்லை
காட்டுக்குள் திசை மாறி சென்றாரா அல்லது இவரை கடத்தி சென்றனரா ..?
,கொலை செய்தனரா அல்லது இவர் வேறு எங்காவது சென்றாரா என்பது
தொடர்பாக எதுவித தகவலும் இதுவரை கிடைக்க பெறவில்லை ,சிறப்பு குற்ற தடுப்பு
பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்,இவரை தெரிந்தால் தமக்கு அறியத்தரும் படி மக்களிடம் உதவி கோரப்பட்டுள்ளது

லண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்
லண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய்-திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர்
லண்டன் மிச்சம் பகுதியில் ஐந்து வயது மகளை கத்தியால் குத்தி
கொன்ற 35 வயதுடைய தயார்பலமான கத்தி குத்துக்கு இலக்கான
நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டார் ,தபோது அவர்
சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் சமூக வலைதளத்தில் துயர் பகிர்வை மேற்கொண்டுள்ளனர் .எனினும் இது தவறான பொய்யானதகவல் பகிர்வு என தெரிவிக்க பட்டுள்ளது
ஐந்து வயது சாயாகி கழுத்தில் வெட்ட பட்ட நிலையில் சம்பவ தினம் அன்றே பலியான நிலையில் தாயார் வயிற்றில் பலமான
கத்தி குத்துக்கு இலக்கண நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டார்
,எனினும் இந்த படுகொலை சம்பவங்கள்
லண்டன் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இது தொடர்பான வாத ,பிரதி வாதங்கள் சமூக வலைத்தளங்களில் சூடு
பிடித்து பறக்கிறது ,தாயின் நிலைக்கு ஆதரவாகவும் இந்த கருத்துக்களை மக்கள் மன்றம் முன் வைத்து வருகிறது
எது எப்படியோ உயிர்கள் பறி போயுள்ளது வேதனையே ,தாயின் நிலையை
அறிந்து அவரை ஒருவர் பக்கம் இருந்து தொடர்ச்சியாக அவரை கண்காணித்து இருந்திருந்தால் சிறுமியுடன் தாயாரும் தப்பித்திருப்பார்
பக்கத்து வீட்டில் இருந்து அழுகுரல் சத்தம் கேட்டது ,அப்போது அங்கு ஓடி சென்றேன் ,அப்பொழுது இரத்த வெள்ளத்தில் தயார் கிடந்தார்
,மகள் போர்வையால் சுற்ற பட்ட நிலையில் கட்டிலில் கிடந்தார் .
இரத்த வெள்ளம் எங்கும் காணப்பட்டது .
நாம் பதறி போனோம் காவல்துறைக்கு அறிவிக்க பட்டது ,அவர்கள் நான்கு மணியளவில் அங்கு வருகை தந்தனர் ,இந்த
சம்பவம் எங்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது என அயல் வீட்டு பெண்மணி கண்ணீருடன் பகிர்ந்துள்ளார்
“There was blood everywhere.”I looked on the bed and saw the girl, she was covered in a blanket.”Officers and paramedics arrived at the scene at around 4pm.
rs Gonzales, who has lived at Monarch Parade for 12 years, said: “It’s really breaking my heart, the child was a smart kid, she was always smiling.
“She was a cheeky little girl, always playing with the neighbourhood kids.”To see her so lifeless, it’s like my heart is bleeding.She (the woman) was a good mum.
இதுபோலவே ஏனையவர்களும் பகிர்ந்துள்ளார்,
ஆபத்தான நிலையில் அவர் உள்ளதகாக தெரிவிக்க பட்டது ,இன்று இரண்டாவது அறுவை சிகிச்சை உள்ளது எனவும் இதிலேயே தெரிய
வரும் என கருத்துரைக்க பட்டது ,ஆனால் இன்று அவர் சாவடைந்துள்ளதாக குயீன்ஸ்லாந்தில் உள்ள உறவினர்கள் துயர் பகிர்தல் மேற்கொண்டுள்ளனர் என்ற செய்தியை மேற்கோள் காட்டி இதனை வெளியிடுகிறோம் ,எனினும் உறவினர்கள் சிலர் இவர் இறக்கவில்லை என மறுத்துரைத்துள்ளனர் ,ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,மேற்படி பேஸ்புக் செய்தி வதந்தி என்பதாகும்
மேலும் இந்த மரணத்தில் திடீர் மாற்றங்கள் நிகழ கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இது ஒரு பாடமாக லண்டன் தமிழர்களுக்கு அமையட்டும் ,இவ்வாறு மன
நோயால் பாதிக்க பட்டவர்களை அரவணைத்து அன்பு காட்டி அழைத்து செல்லுங்கள்
இவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்


லண்டனில் -மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய் -திடுக்கிடும் தகவலை வெளியிட்ட அயலவர் லனின்றி இருந்துள்ளதாக அவர்களது உறவினர்கள் சமூக 

கிராமங்களை கட்டியெழுப்ப, வங்கிகளை கிராமத்திற்கு கொண்டு செல்லுங்கள்- கோட்டா உத்தரவு
கிராமங்களை கட்டியெழுப்ப, வங்கிகளை கிராமத்திற்கு கொண்டு செல்லுங்கள்- கோட்டா உத்தரவு
கிராமங்களை கட்டியெழுப்ப வேண்டுமாயின் கிராமங்களின் பொருளாதாரம் மற்றும் மக்களின் தேவைகளை
அடையாளம்கண்டு வங்கிச் சேவைகளை செயற்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து தொழிற்சாலைகளை ஆரம்பிக்கும் வரை இருக்காமல் ஏற்றுமதி விவசாயத்தை அபிவிருத்தி செய்வது காலத்தின் தேவையாகுமென்று ஜனாதிபதி
அவர்கள் குறிப்பிட்டார். கைத்தொழில்கள் உருவாவது மட்டும் அபிவிருத்தி ஆகாதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள்,
விவசாயத்தை மையப்படுத்தி கிராமிய தொழில்முயற்சிகளை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக இன்று (02) பிற்பகல்
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேவையை மிகச் சரியாக அடையாளம் கண்டு விவசாயத்தை முன்னேற்றுவதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியை அடைவது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்காக பொருளாதாரத்தை
கட்டியெழுப்பும் வழிமுறை குறித்து கீழ் மட்டத்திலிருந்து கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
வணிக வங்கிகள் கடன்களை வழங்கும்போது உற்பத்தித்துறையை விடவும் வணிக பிரிவுக்கு அதிக கவனம் செலுத்துகின்றனர்.
பாராம்பரியங்களுக்குள் மட்டுப்பட்டிருக்காது விவசாயிகளை உற்பத்திக்கு ஊக்குவிப்பது பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொறுப்பாகுமென்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
விவசாய உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு இடமளிக்காது உழுந்து, குரக்கன், பயறு உட்பட தானிய வகைகளை பயிரிடுவதற்கு ஊக்குவிப்பதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள்
சுட்டிக்காட்டினார். அந்தந்த பிரதேசங்களுக்கு இலக்குகளை வழங்கி விவசாயிகளை ஊக்குவிப்பதற்கு அவசியமான
ஒத்துழைப்பை வழங்குவதே வங்கியை கிராமத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் தான் எதிர்பார்க்கும் இலக்காகும் என ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
நீண்டகாலமாக தவணைக்கொடுப்பனவின் அடிப்படையில் பாரியளவு கடன்களைப் பெற்றுக்கொண்டு திருப்பிச்
செலுத்தாதவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அரச வங்கிகள்
வசூலிக்க வேண்டிய கடன்களை பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் தெளிவுபடுத்தினார்.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர்
டப்ளியு.டி.லக்ஷ்மன், பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் மஹிந்த சாலிய, பொது முகாமையாளர் டி.குகன் உள்ளிட்ட
பணிப்பளார் சபையின் அங்கத்தவர்கள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
ஒடுசுட்டான் தொழிற்சாலையில் தயாரிப்பு நடவடிக்கைகள மீள ஆரம்பம்
ஒடுசுட்டான் தொழிற்சாலையில் தயாரிப்பு நடவடிக்கைகள மீள ஆரம்பம்
ஒட்டுசுட்டான் செங்கல் மற்றும் ஓடு தொழிற்சாலையின் தயாரிப்பு நடவடிக்கைகளை தனியார் நிறவனத்தின் ஒத்துழைப்பின்றி மீள ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
தனிப்பட்ட முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பின்றி இந்த தொழிற்சாலையின் தயாரிப்பு நடவடிக்கைகளை லங்கா பீங்கான்
கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 2020.07.01 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
- இலங்கை மட்பாண்ட (பீங்கான்) கூட்டுத்தாபன மறுசீரமைப்பின் கீழ் ஒட்டுசுட்டான் தொழிற்சாலையில் உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் திட்டம்
வரையறுக்கப்பட்ட சம்சன் ரஜரட்ட டைல்ஸ் (தனியார்) நிறுவனத்துடன் இணைந்து இலங்கை மட்பாண்ட (பீங்கான்); கூட்டுத்தாபனத்தின் கீழ் நடத்தப்படும் ஒட்டுசுட்டான் செங்கல்- மற்றும் ஓடு தொழிற்சாலையின் தயாரிப்பு நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம்
- திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கீகாரம் வழங்கப்பட்டது. இருப்பினும் இதுவரையில் இலங்கை மட்பாண்ட (பீங்கான்) கூட்டுத்தாபனத்தினால் இந்த
- தொழிற்சாலையை மீள ஆரம்பிக்கும் நோக்கில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் தனியார் நிறவனத்தின் ஒத்துழைப்பின்றி தயாரிப்பு நடவடிக்கைகளை
- ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைவாக தனிப்பட்ட முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பின்றி இந்த
- தொழிற்சாலை தயாரிப்பு நடவடிக்கைகள் லங்கா பீங்கான் கூட்டுத்தாபனத்தினாலேயே மேற்கொள்வதற்காக
- கைத்தொழில் மற்றும் விநியோக முகாமைத்துவம் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகம் மற்றும்
- தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சிகிரியா – சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்காக திறப்பு
சிகிரியா – சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்காக திறப்பு
கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த சிகிரியா 3
மாதத்திற்கு பின்னர் உள்ளூர் சுற்றுலாப்பயணிகளுக்காக மீண்டும்
திறக்கப்பட்டுள்ளது.
சிகிரியா தொல் பொருள் பிரிவு மற்றும் சிகிரியா பவ்வ முதலானவற்றை
பார்வையிட முடியும் என்று மத்திய கலாச்சார நிதியம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் உள்நாட்டு வெளிநாட்டு பயணிகளின் வருகை மிக குறைந்த அளவிலேயே காணப்பட்டது.
இருப்பினும் நீண்ட தூரம் இருந்து உள்ளூர் சுற்றுலாப்பயணிகள் வருகை
தந்தமையை காணக்கூடியதாக இருந்ததாகவும் எமது உள்ளூர் ஊடகவியலாளர் தெரிவித்தார்
கலைஞர்களை பாதுகாக்க உதவுவதாக ஜனாதிபதி உறுதியளிப்பு
கலைஞர்களை பாதுகாக்க உதவுவதாக ஜனாதிபதி உறுதியளிப்பு
கொவிட் நோய்த்தொற்றை ஒழித்து உலக நிலைமைகள் சீராகும் வரை பார்த்திராது கலைஞர்களை தேசிய பொருளாதாரத்துடன்
இணைத்து பாதுகாப்பதற்கு உதவுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சிக் காலத்தில் பல சந்தர்ப்பங்களில் கலைஞர்கள் அவ்வாறு
இணைத்துக்கொள்ளப்பட்டார்கள். அதன் மூலம் அனைத்து மட்டங்களிலும் கலைஞர்களுக்கு தமது படைப்பு ரீதியான
பங்களிப்பை வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
கடந்த காலத்திலும் கொவிட் நோய்த்தொற்றின் காரணமாகவும் இழந்த சந்தர்ப்பங்களை மீண்டும் உருவாக்குவதற்கான பின்புலத்தை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
கலைஞர்கள் முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் பற்றி நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இது பற்றி தெரிவிக்கப்பட்டது.
9ஆம் வகுப்பில் நிறுத்தப்படும் அழகியல் பாடத்தை க.பொ.த சாதாரண தரம் வரை பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை பேராசிரியர் முதியன்சே திசாநாயக்க
சுட்டிக்காட்டினார். இந்த முன்மொழிவை தேசிய கல்விக்கொள்கைக்கான செயலணிக்கு சமர்ப்பிப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைத் தொகை கிடைக்கப்பெறாமைக்கான காரணங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. சர்வதேச
ரீதியாக 20 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான தொகையை இதன் காரணமாக நாடு இழந்துள்ளது. இலத்திரனியல் ஊடகங்களினூடாக ஒளிபரப்பப்படும் பாடல்களுக்கும் உரிமைத்
தொகை கிடைக்கப்பெறாமை குறித்து கலைஞர்கள் ஜனாதிபதி அவர்களிடம் குறிப்பிட்டனர். இதுபற்றி அரச மட்டத்தில் நடவடிக்கை
எடுத்த தயாரிப்பாளர்களின் உரிமையை பாதுகாப்பதாக ஜனாதிபதி அவர்களும் பிரதமர் அவர்களும் தெரிவித்தனர்.
கலைஞர்களுக்கு சலுகை வட்டி வீதத்தில் கடன் தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட
நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன், அரச வங்கிகளின் ஊடாக அது உரிய முறையில் இடம்பெறாமை கவலைக்குரியதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்களுக்கு வரித் தொகையை அறவிட்டு அதனை கலைஞர்களின் நன்மைக்கு பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் கலைஞர்கள் சுட்டிக்காட்டினர்
. வெளிநாட்டு திரைபடங்களை நாட்டில் படமாக்குவதற்கு சந்தர்ப்பங்களை வழங்கி அந்நியச் செலாவணியை சம்பாதிப்பதற்காக முன்வைக்கப்பட்ட முன்மொழிவை
நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் குறித்து ஆராய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. கிராமிய கலைஞர்கள் மாகாண மற்றும்
பிரதேச மட்டத்தில் ஒழுங்குபடுத்துவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் திரைப்பட இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள் உள்ளிட்ட
கலைத்துறையின் பல்வேறு தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தி கலைஞர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
கைவிடப்பட்ட பயிர்ச்செய்கை காணியில் சிவில் படையினர் பயிர்ச்செய்கை.
கைவிடப்பட்ட பயிர்ச்செய்கை காணியில் சிவில் படையினர் பயிர்ச்செய்கை.
கொழும்பு மாவட்டத்தில் கைவிடப்பட்ட நெற்செய்கை காணியில் பயிற்சியை மேற்கொள்ளும் திட்டத்தின் கீழ் ஹங்வெல்ல,
வெலிகண்ண பிரதேசத்தில் கைவிடப்பட்ட சிவில் பாதுகாப்பு படையினர் பயிர்ச் செய்கையை ஆரம்பித்துள்ளதாக சிவில்
பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கைவிடப்பட்ட பயிர்ச்செய்கை காணிகளில் மீள மேற்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்து
திட்டத்துக்கு அமைய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்னவின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சீதாவாக்கை பிரதேச செயலாளர் மற்றும் பிராந்திய விவசாய அதிகாரிகளுடன் இணைந்து சிவில் பாதுகாப்புப் படையினர்
திட்டத்தை முன்னெடுத்து வருவதாக சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
நாட்டில் விவசாய உற்பத்தி மற்றும் அதனை சார்ந்த பொருட்களைத் தயாரிப்பதற்கு சிவில் பாதுகாப்புப் படையினரால் அளிக்கப்பட்டு
வரும் பங்களிப்பை பாராட்டிய சீதாவாக்கை பிரதேச செயலாளர் கே.எஸ். தில்ஹானி ‘ நாட்டில் விவசாய உற்பத்தியில் நிலைபேறான
தன்மை அடைவதற்கு சிவில் பாதுகாப்பு படையினரின் பங்களிப்பு அவசியமான ஒன்று என அவர் தெரிவித்தார்.
வெலிகண்ன, லஹிருகம இப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தில் 5 ஏக்கர் பயிர்ச்செய்கை காணி உழுது
பயிரிடப்பட்ட உள்ளதாக சிவில் பாதுகாப்புப் படை ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நிலந்த ரணசிங்க தெரிவித்தார்.







