9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஓகஸ்ட் 20ஆம் திகதி

Spread the love

9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஓகஸ்ட் 20ஆம் திகதி

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள 175 பேர் இதுவரை ஒன்லைன் மூலம் பாராளுமன்றத்திற்கு தகவல்களை வழங்கியுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கவுள்ளார்.

அன்றை தினம் பிற்பகல் 3 மணிக்கு முதலாவது அமர்வை ஜனாதிபதி ஆரம்பித்துவைக்கவுள்ளதுடன் புதிய அரசாங்கத்தின்

கொள்கைக் பிரகடன உரையை அவர் நிகழ்த்தவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பணிப்பாளர் ஷான் விஜயதுங்க தெரிவித்துள்ளார்.

20 ஆம் திகதி காலை 9.30இற்கு புதிய பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளார். இதனைத் தொடர்ந்து

பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.

சத்தியப்பிரமாண கொள்கையின் பின்னர் பிரதி சபாநாயகர் குழுக்களின் பிரதித் தலைவரகள்; தெரிவு இடம்பெறவுள்ளது.

அரசியலமைப்பின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய ஜனாதிபதி புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

சபை அமர்வை வைபவரீதியாக ஆரம்பித்துவைக்க ஜனாதிபதி வருகைதரும்போது சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர்

நாயகம் தம்மிக தஸநாயக்க ஆகியோர் பாராhளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் அவரை வரவேற்பார்கள்.

இதன்போது ஜனாதிபதி தலைமையில் கொடி ஏற்றிவைக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. படைக்கலசேவிதர், பிரதிப்

படைக்கலசேவிதர் மற்றும் உதவி படைக்கலசேவிதர், சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் உள்ளிட்ட

குழுவினரால் ஜனாதிபதி சபைக்குள் அழைத்துச் செல்லப்படுவதுடன், அக்கிராசனத்தில் அமரும் ஜனாதிபதி

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்துவார் என பணிப்பாளர் ஷான் விஜயதுங்க தெரிவித்துள்ளார்

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *