Author: நலன் விரும்பி
இலங்கையில் -7,122 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல்
இலங்கையில் -7,122 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் முகமாக
சுமார் 69 தனிமை படுத்தல் நிலையங்களில் ஏழாயிரத்து நூற்றி இருபத்தி இரண்டு பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர்
இவர்களில் அதிகமானவர்கள் வெளி நாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது
இலங்கை திரும்ப காத்திருக்கும் 54 ஆயிரம் இலங்கையர்கள்
இலங்கை திரும்ப காத்திருக்கும் 54 ஆயிரம் இலங்கையர்கள்
உலகம் முழுவதும் வேகமாக பரவிய கொரனோ வைரஸ் காரணமாக மீளவும் தாயகம் திரும்பிடும் நோக்குடன் ஐம்பத்தி
நான்காயிரம் பேர் உலகம் எங்கும் காத்துள்ளதுதாக தெரிவிக்க பட்டுள்ளது
இவர்களை மீள நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ள படுவதாதாக பொறுப்புநிலை அமைச்சகம் அறிவித்துள்ளது
இலங்கையில் மீன்பிடி வளத்தை பெருக்க நோர்வே நாட்டுடன் ஒப்பந்தம்
இலங்கையில் மீன்பிடி வளத்தை பெருக்க நோர்வே நாட்டுடன் ஒப்பந்தம்
இலங்கையில் ஆளும் புதிய ஆட்சியின் கீழ் இலங்கையில் மீன்பிடி வளத்தை
மேம்படுத்தும் நோக்குடன் நோர்வே நாடு புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது
இதன் ஊடாக மீன்வளத்தை அதிகரித்தல் மற்றும் அதன் பயன் பாடுகள் வேகமாக பெறுதல் என்பன உள்ளடங்கும் என தெரிவிக்க படுகிறது
பல மில்லியன் ரூபா திட்டத்தில் இந்த விடயங்கள் நடைமுறை படுத்த படவுள்ளன

கிளிநொச்சியில் நான்கு உயரதர மாணவர்கள் கைது
கிளிநொச்சியில் நான்கு உயரதர மாணவர்கள் கைது
இலங்கை தமிழர் தாயக பகுதியான கிளிநொச்சியில் நான்கு
உயர்தர மாணவர்கள் தற்பொழுது காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் Heroin போதைவஸ்து வைத்திருந்த நிலையில் இந்த கைது வேட்டை
இடம்பெற்றுள்ளது ,சிங்கள அரச பயங்கரவாத இராணுவம் தமிழர் தாயக
பகுதிகளை ஆக்கிரமித்ததன் பின்னர் இவ்விதமான நிகழ்வுகள் அதிகம் அரங்கேறி வருகிறது
ஒழுக்கமாக விளங்கிய தமிழர் கல்வி சமூகம் இன்று போதைவஸ்து பாவனைக்கு
அடிமையாகி குற்றவியல் சமூகமாக மாற்றம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கையில் – ஐந்து பிள்ளைகளை ஒரேதடவையில் பெற்றபெண்
இலங்கையில் – ஐந்து பிள்ளைகளை ஒரேதடவையில் பெற்றபெண்
இலங்கை Pepiliyawala பகுதியில் இருபத்தி ஒன்பது வயதுடைய இளம் பெண் ஒருவர் ஒரே தடவையில் ஐந்து பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்
இலங்கையில் அதிக குழந்தைகளை ஒரே தடவையில் பிரசவித்த சாதனையை இவர் நிகழ்த்தியுள்ளார்
கொழும்பு சோயா போதனா வைத்திய சாலையில் இந்த பிரசவம் இடம்பெற்றுள்ளது
தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவ மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
மேற்படி குழந்தை பெற்று செய்தி அந்த கிராம மக்கள் மத்தியில் வேகமாக
பரவிய நிலையில் ,சிசுக்களை பார்ப்பதற்கு தற்பொழுது முதலே வீட்டின் முன் அயலவர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்
எனினும் சிசுக்கள் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பின் கீழ் மருத்துவமனையில் உள்ளன
எடைகள் என்பன சாதாரணமானவை என குறிப்பிட பட்டுள்ளது
25 பொலிஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
25 பொலிஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்
இலங்கையில் காவல்துறை தலைமையகம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் 4(DIGs)
10 எஸ்பி உள்ளிட்ட இருபத்தி ஐந்து பேர் திடீரென இடமாற்றம் செய்ய பட்டுள்ளனர்
உடனடி அமுலுக்கு வரும் நிலையில் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது
காவல்துறையில் இவ்விதம் அடிக்கடி இடமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
ராஜிதவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு
ராஜிதவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு
வௌ்ளை வேன் தொடர்பான ஊடக சந்திப்புடன் தொடர்புடைய வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச
மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்கள் இருவரும் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்கள்
வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு கடவுச்சீட்டினை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் பிரதமர் இராஜினாமா
ஜப்பான் பிரதமர் இராஜினாமா
ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு, ஷின்சோ அபே குடல் பாதிப்பு
காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
65 வயதாகும் அபே, நீண்ட நாட்களாக சிறுகுடல் பாதிப்பால்
அவதியுற்று வருகிறார். மேலும் தனக்கு வயதாகிவிட்டதால் பிரதமர்
பதவியை மற்றொருவருக்கு விட்டுக்கொடுக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் கசிந்தன.
இந்நிலையில் தற்போது ஷின்சோ அபே பிரதமர் பதவியில் இருந்து விலகிவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
O/L பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
O/L பரீட்சைக்கான திகதி அறிவிப்பு
2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதரப் பத்திர சாதாரண தர பரீட்சை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாவரி 18 ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை பரீட்சையை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் இதனை இன்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறையை டிசம்பர் 24 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
யானைகளை காட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க – ஜனாதிபதி கோட்டா உத்தரவு
யானைகளை காட்டுக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க – ஜனாதிபதி கோட்டா உத்தரவு
காட்டு யானைகள் கிராமங்களுக்கு வருவதற்கு பதிலாக காட்டுக்கே திருப்பி அனுப்பக்கூடிய பொறிமுறை ஒன்றை தயார் செய்து
யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயுள்ள மோதலுக்கு இரண்டு வருடங்களுக்குள் நிலையான தீர்வொன்றை வகுக்குமாறு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
பல்வேறு மாவட்டங்களில் மக்கள் முகங்கொடுத்து வருகின்ற காட்டு யானைகள் கிராமங்களுக்கு வரும் பிரச்சினை பற்றி சுமார் 40 வருட காலங்களாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது. பல்வேறு
தீர்வுகளை செயற்படுத்தினாலும் பிரச்சினை தீரவில்லை. மனிதர்களையும் யானைகளையும் பாதுகாக்கக்கூடிய உடனடி
மற்றும் நிலையான தீர்வை கண்டறிவது மிக முக்கியமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
வனஜீவராசிகள் பாதுகாப்புஇ யானை வேலிகள் மற்றும் அகழிகைகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும்
வனவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (27) ஜனாதிபதி அலுவகத்தில்
இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
2019ஆம் ஆண்டு யானைகள் கிராமங்களில் உட்புகுந்ததினால் 122 மனித உயிர்கள் இழக்கப்பட்டன. 407 காட்டு யானைகள்
இறந்துள்ளன. இவ்வருடத்தில் கடந்த 08 மாதங்களில் இழந்த மனித உயிர்களின் எண்ணிக்கை 62 ஆகும். இறந்த யானைகள் 200 ஆகும்.
இதனால் பயிர்ச் செய்கைகளுக்கும் அன்றாட வாழ்வுக்கும் அதுபோன்று காட்டு யானைகளின் இழப்பிற்கும் ஏற்பட்டுள்ள சவால் மிகப் பெரியது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
12 இலட்சம் ஹெக்டெயார் வன நிலங்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கைவசம் உள்ளது. காட்டு யானைகளின் உணவு
தொடர்பாக கண்டறிவதும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பென ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நீண்டகாலமாக நிலவி வருகின்ற பிரச்சினைக்கு தீர்வொன்றை தேடுவதற்கு அல்லது உபாய மார்க்கங்களை தயாரிப்பதற்கு குறித்த
துறைசார் அதிகாரிகளுக்கு முடியாமல் போனதையிட்டு ஜனாதிபதி தனது அதிருப்தியை தெரிவித்தார்.
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் ஊடுறுவதை தடுத்துஇ மனித வாழ்வினையும் பயிர் நிலங்களையும் பாதுகாப்பதற்காக நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொள்ளல் தொடர்பாக கண்டறிவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வன ஒதுக்கீடுகளில் உள்ள குளங்கள்இ நீர் நிலைகளை புனர்நிர்மாணம் செய்வதுடன்இ அப்பிரதேசங்களில்
புல்லினங்களை வளர்த்தலை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
கண்டல் தாவர பாதுகாப்பு மற்றும் அதனை விரிவுபடுத்தலின் முக்கியத்துவத்தை பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. கண்டல் தாவரங்களை பயிரிடும்போது மக்களுக்கு பயன்
தரக்கூடிய வகையில் சட்டங்களை இலகுபடுத்த வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கண்டல் பிரதேசங்களில் இறால் வளர்ப்பினை மேற்கொள்வதற்கு உள்ள இயலுமை பற்றியும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
ஆறுகளில் மணல் அகழ்தலை கட்டுபாடுடன் முன்னெடுப்பதற்கு அப்பிரதேச மக்களுக்கு அனுமதியளிப்பது தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டது. மக்களின் ஊக்கப்படுத்தலுடன்
ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள் மக்களின் அவதானத்திலிருந்து நீங்கியுள்ள காலப் பகுதிகளில் அதனைத் தொடர்ந்து
செயற்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகுமென ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அமைச்சர் சீ.பி.ரத்னாயக்கஇ இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கஇ ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர மற்றும்
அமைச்சரவைஇ இராஜாங்க அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
கடல் உணவுகள் இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியை குறைப்பதற்கு ஜனாதிபதி திட்டம்
கடல் உணவுகள் இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியை குறைப்பதற்கு ஜனாதிபதி திட்டம்
நாட்டுக்கு அவசியமான கப்பல்களை தயாரிக்கும் பணிக்கு உள்நாட்டு நிறுவனங்கள்…
நன்னீர் மீன் உற்பத்தி மூலம் கிராமிய மக்களின் புரத தேவை நிறைவு செய்யப்படும்…
அலங்கார மீன் ஏற்றுமதி ஊக்குவிக்கப்படும்…
செயற்கை மீன் இனவிருத்தி மத்திய நிலையம் கடலுக்கு அருகில்…
கடல்சார் உணவு இறக்குமதிக்காக வருடாந்தம் செலவிடப்படும் அந்நியச் செலாவணியை குறைக்கக்கூடிய பல்வேறு விடயங்களை
திட்டமிட வேண்டுமென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்.
மீன்இ கருவாடுஇ மாசி மற்றும் டின்மீன் இறக்குமதிக்காக வருடாந்தம் அரசு சுமார் 500 மில்லியன் டொலர்கள் செலவிடுகின்றது. கடற்றொழில் கைத்தொழில் மொத்த தேசிய
உற்பத்திக்கு இதுவரை காலமும் வழங்கியுள்ள பங்களிப்பு 1மூ வீதமாகும். நாட்டை சுற்றி கடலினாலும் நாட்டினுள் உள்ள குளங்களினாலும் சரியான பயன்களைப் பெற்று அந்நியச்
செலாவணியை அதிகரித்துக் கொள்ளக்கூடிய ஏற்றுமதிக்குள் கடற்றொழில் கைத்தொழில் உள்வாங்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
அழகு மீன்கள்இ நன்னீர் மீன்கள் மற்றும் இறால்களை வளர்த்தல்இ கடற்றொழில் துறைமுக அபிவிருத்திஇ ஆழ்கடல் பல நாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன்கள் ஏற்றுமதி இராஜாங்க
அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டது.
அலங்கார மீன்கள் ஏற்றுமதியில் நன்னீர் மீன்கள் 95மூ வீதமும் உவர் நீர் மீன்கள் 98மூ வீதமும் உள்நாட்டில் இனவிருத்தி செய்யப்பட்டு
ஏற்றுமதி செய்யப்படும். சுமார் 700 வகையான அலங்கார மீன்களை ஏற்றுமதி செய்ய முடியுமென்று அலங்கார மீன் கைத்தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர். இலங்கைக்குரிய நன்னீர்
மீன்களை இனவிருத்தி செய்து ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அந்நியச் செலாவணியை பெற்றுக்கொள்ள முடியுமென்று இக்கலந்துரையாடலில் குறிப்பிடப்பட்டது.
உலகில் அதிக கேள்விக்குரிய நீர்த்தாவர கன்றுகளை இறக்குமதி செய்து உற்பத்தி நிலையங்களில் பயிரிட்டு மீண்டும் ஏற்றுமதி
செய்வதற்கு உள்ள தடைகளை இலகுபடுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறியுமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
நாட்டினுள் 18இ000 குளங்கள் காணப்படுகின்றன. ஆனாலும் நன்னீர் மீன் வளர்ப்பிற்கு 1500 குளங்களே பயன்படுத்தப்படுகின்றன. இக்கைத்தொழிலின் அபிவிருத்திக்காக நன்னீர் மீன்களை
வளர்க்கக்கூடிய குளங்களை இனங்கண்டு கிராமிய மக்களின் புரத தேவையை நிறைவு செய்வதற்கு முடியுமென்று பொருளாதார
புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.
குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் சுகாதார வசதிகளுடன்கூடிய நீண்டநாள் பயணிக்கக்கூடிய கப்பல்களை தயாரித்தல் மற்றும் மீனவர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்குவதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மீனவர்களுக்கு அல்லது கப்பல்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு முடியாத நிலையில் கடற்றொழில் கூட்டுத்தாபனம் பாரிய நிதி
நெருக்கடிக்குள்ளாகி உள்ளதெனவும் சுட்டிக்காட்டப்பட்டது. 2017ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட நிலையம் செயலிழந்துள்ளது.
செயற்படுத்தக்கூடிய நிலையில் உள்ள குளிரூட்டல் நிலையங்கள் கடந்த ஆட்சியில் 33 வருடகால நீண்டகாலத்திற்கு தனிப்பட்ட
வியாபாரிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும் மீன்பிடிக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சுட்டிக்காட்டினர்.
அது மீனவ கைத்தொழிலை கீழ் நிலைக்கு தள்ளும் நோக்குடன் செய்யப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
கருவாடு உற்பத்தியின்போது இந்நாட்டு கடலில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாத மீன்களை மட்டும் இறக்குமதி செய்ய வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
கடல் எல்லைகளில் மீன் உற்பத்தி மேம்பாட்டிற்காக இனங்காணப்பட்டுள்ள 172 இடங்களில் செயற்கை இனவிருத்தி
மத்திய நிலையங்களை உருவாக்குவதற்காக பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ள புகையிரத பெட்டிகள்இ பேருந்துகள் மற்றும் மீன்பிடி கப்பல்களை கடலினுள் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
டின் மீன்களை உற்பத்தி செய்வதற்கு அவசியமான மீன்களை உள்நாட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார்.
இந்நாட்டு மீனவர்களுக்கு மற்றும் மீன்பிடி கைத்தொழிலுக்கு அவசியமான கப்பல்களை உள்நாட்டு நிறுவனங்களின் மூலம் தயாரித்தல் வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜயசேகரஇ ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர மற்றும் அமைச்சுக்கள்இ இராஜாங்க
அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள்இ கடற்றொழில்சார் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
இலங்கையில் -கொரோனா தொற்று புதைப்பா? தகனமா?
இலங்கையில் -கொரோனா தொற்று புதைப்பா? தகனமா?
உலக வல்லரசு நாடுகள் கூட கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருக்;கும் நிலையில் எமது நாட்டில் கொரோனா
கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர் என்று அமைச்சர் விமல் வீரவங்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஒருவர் தெரிவானது மிக முக்கியமான விடயமாகும். சீ.வி விக்கினேஷ்வரன்
இனவாதம் பேசியவாறு அவர் சிங்கள அரசினூடாக தமது ஓய்வூதியத்தை பெறுகிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகும் 2020ஆம் நிதியாண்டின் அரச சேவைக்கான இடைக்கால கணக்கறிக்கை Vote
on Account ஐ நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
இதன் மீதான விவாதம் நேற்றைய தினம் ஆரம்பமானது. விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவங்ச மூவின
மாணவர்களும் பாடசாலை செல்கின்றனர். புதைப்பா? தகனமா? என்று வேறுபடுத்தி பார்ப்பதற்கு இது நேரமல்ல மக்களுக்கு மத்தியில் கொரோனா பரவாமல் தடுத்தது குறித்து பார்க்க வேண்டும்.
கொரோனா தொற்றினூடாக இனவாத அரசியல் செய்ய சிலர் முயல்கின்றனர். இறந்தவர் புதைக்கப்படுகிறாரா? தகனம் செய்யப்படுகிறாரா? என்று பாராது சிங்கள, தமிழ், முஸ்லிம்
மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது குறித்து சிந்திக்க வேண்டும் முஸ்லிம் ஒருவரின் சடலம் புதைக்கப்பட்டதால் 05 இலட்சம் பேர் வேதனையில் இருப்பதாக ஒருவர் சபையில் கூறினார். கிராமங்கள்
மூடப்பட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன. இது குறித்து சிந்திக்க வேண்டும். கெரரோனா வைரசு தொற்றுடன் இனவாத அரசியல் செய்ய முயல்கின்றனர்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இனவாத அரசியல் தேவையில்லை என்றும் அமைச்சர் விமல் வீரவங்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்: IMG 20200827 183716
30 வருட கால போரின் காரணமாக இன அழிப்பின் ஒடுக்குமுறைகளாலும் வடுக்களை சுமந்து நிற்கின்ற மக்களாகிய
நாங்கள் மிகுந்த வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையுடனும் எமது குரல்களை வெளிப்படுத்தியிருக்கின்றோம்.
தமிழ் மக்களின் அபிவிருத்தியும், அரசியல் தீர்வும் பொறுப்புக்கூறலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்ற
நிலையில் அபிவிருத்தியை மட்டும் காட்டி உரிமைகளை மழுங்கடிக்க முடியாது.
ஜனநாயகத்துக்கு அப்பால் ஒரு ஜனநாயகமாக பரிணமித்துக்கொண்டிருக்கின்ற இந்த அவையில் ஜனநாயகத்தின் உண்மைத் தன்மையை எதுவித பேதமுமின்றி தாங்களும் இந்த சபா பீடமும் பேணவேண்டும்.
இங்குள்ள அனைவரும் பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்தே பிரச்சினையின் தீர்வுக்கான ஆரப்பப் படிகள் ஆரம்பமாகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா
இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், எல்லோரும் தேசிய ஒற்றுமையாக வாழும் வகையிலான
யாப்பு உருவாக வேண்டும். வௌ;வேறு நாடுகளிலுள்ள தீர்வு பற்றி சிந்தித்தே கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. நாட்டில் சகலரும்
ஒன்றாக வாழக் கூடியவாறு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். எமது கட்சி தொடர்பில் கொள்கை பிடிப்புள்ள மக்கள் வாக்களித்துள்ளனர்.
நாம் ஏன் பாராளுமன்றம் வருகிறோம் என்பதை மறந்தே சில பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுகின்றனர். அன்று 50 க்கு 50
கேட்டு முன்வைத்த கோரிக்கை நியாயமாக இருந்திருந்தால் இன்று தீர்வு வந்திருக்கும். இனப்பிரச்சினையில் ஒரு வீதம் கூட தீர்வை எட்ட முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.
பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்:sfgff
கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமையை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டது.
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக அமைக்கப்பட்ட இந்த செயலணியில் தமிழர் ஒருவர் கூட உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. அதனையடுத்து, அதற்கு தமிழர் தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், குறித்த செயலணியில் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டது.
பிரான்சில் மீள கொரனோ அபாயம் – சிவப்பு எச்சரிக்கை
பிரான்சில் மீள கொரனோ அபாயம் – சிவப்பு எச்சரிக்கை
பிரான்சில் மீள கொரனோ அபாயம் எழுந்துள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பத்தாயிரம் பேருக்கு நடத்த பட்ட சோதனையில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுக்கு
புதிதாக கொரனோ நோயானது தொற்றியுள்ளது
கண்டு பிடிக்க பட்டுள்ளது
சுகாதார முறையின் வழிகாட்டல் பிரகாரம் முக கவசங்கள்
கட்டாயம் அணிய வேண்டும் என அறிவுறுத்த பட்டுள்ளது
ஒரு பொது
இடங்களில் அணியாது சென்றால் தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மக்களே அவதனம் ,கொரனோ எமன் மீள உங்கள் வாசல் தேடி வருகிறது
கொரனோ எதிரொலி -அவுஸ்ரேலியாவில் இரு பாடசாலைகள் அடித்து பூட்டு
கொரனோ எதிரொலி -அவுஸ்ரேலியாவில் இரு பாடசாலைகள் அடித்து பூட்டு
அவுஸ்ரேலியாவில் இரு ஆரம்ப,பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன
பரவி வரும் கொரனோ தொற்றாளர்கள் குறித்த பாடசாலையில் அடையாளம்
காண பட்ட நிலையில் மறு
அறிவித்தல் வரை குறித்த பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன
பிள்ளைகளை பாடசாலைகளிற்கு அனுப்புமாறு அரசு வேண்டுதல்
விடுத்தது வரும் நிலையில் இவ்விதமான சம்பவங்கள்
நிலந்துள்ளதல் பெற்றவர்கள் ,மாணவர்கள் மத்தியில் பெரும் பீதி தோன்றியுள்ளது
குப்பைக்குள் மிதந்த ஆறு லட்சம் டொலர் பணம்
குப்பைக்குள் மிதந்த ஆறு லட்சம் டொலர் பணம்
அவுஸ்ரேலியாவின் தலைநகர் சிட்னி பகுதியில் பெட்டி ஒன்றுக்குள் மறைத்து வைக்க பட்டு வீட்டின் பின்புற குப்பைகளுக்கு அருகில்
மறைத்து வைக்க பட்டிருந்த சுமார் ஆறு லட்சம் அவுஸ்ரேலியா
டொலர்
பொலிசாரால் மீட்க பட்டுள்ளது
இது குறித்து தொடராக இடம்பெற்று வந்த விசாரணைகளில் இருவர்
கைது செய்யப் பட்டுள்ளனர்
இரு பால் இனத்தவரும் இதில் சம்பந்த பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
வரி காட்டது பண பரிமாற்றத்தில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

சிக்கிய இராட்சத முதலை – தப்பிய மக்கள்
சிக்கிய இராட்சத முதலை – தப்பிய மக்கள்
அவுரேலியாவின் வடக்கு கத்தெரின் பகுதியில் 3.3 மீட்டர் நீளமுள்ள saltwater இனத்தை சேர்ந்த முதலை ஒன்று சிறை பிடிக்க பட்டுள்ளது
குறித்த நீரேரியில் இந்த முதலையை கண்ணுற்ற நிலையில் அதனை மடக்கி பிடிக்க விரைந்து வந்த வனவிலங்கு
பாதுகாவலர்கள் அந்த முதலையை லாவகமாக பிடித்து பூங்காவில் விடுவித்துள்ளனர்
இந்த முதலை இவர்களினாலே பிடிக்க படாது இருந்திருந்தால் மக்களை அது வேட்டை ஆடி உண்டிருக்கும் என தெரிவிக்க படுகிறது

இரு கொரியாக்களில் பலத்த இழப்பு -9300 வீடுகள் சேதம்
இரு கொரியாக்களில் பலத்த இழப்பு -9300 வீடுகள் சேதம்
இரு கொரியாவையும் இயற்கை சீற்றம் தாக்கியுள்ளது
மணிக்கு 133 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல் காரணமாக தென் கொரியா பலத்த பாதிப்பை சந்தித்துள்ளது
சுமார் 350 சிட்டிகளை சேர்ந்த 9300 வீடுகள் சேதமடைந்துள்ளன
வணிக நிறுவனங்கள் ,மற்றும் கட்டிடங்கள் ,மரங்கள் ,மின் கம்பிகள் ,தொலை தொடர்பு கோபுரங்கள் என்பன முறிந்து வீழ்ந்துள்ளன
சில பகுதிகளில் மின்சாரம் இன்றி முழுமையாக பாதிக்க பட்டுள்ளது
வெள்ள நீரும் உட் புகுந்துள்ளது ,
இதுவரை உயிரிழப்பு ஏற்படவிலை என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன
இது போலவே வடகொரியாவிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன
என்னும் குறித்த அரசு உடனடியாக சேத விபரங்களை தெரிவிக்கவில்லை

ஐக்கிய தேசியக் கட்சியை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைத்தல்- இணைந்து செயல்பட தயாராம் சஜித் அணி
இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அதன் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, கண்டியில் இன்று (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.
எந்தவொரு நிபந்தனையும் இன்றி ஐக்கிய தேசியக் கட்சியை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைத்தல் அல்லது ஐக்கிய தேசியக் கட்சி வலுப்பெருவதற்கு காலமொன்று தேவையாக இருந்தால் புதிய
தலைவரை தெரிவுசெய்தல் ஆகிய இரண்டு காரணங்களின் அடிப்படையில் மாத்திரமே தாம் இணைந்து செயற்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், பொதுத் தேர்தலில் பெற்ற பெறுபேறுகள் தொடர்பில் தற்போதாயினும் ஐக்கிய தேசியக் கட்சி தெளிவடைய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமராட்சி கடற்பரப்பில்-படகுகளை கைவிட்டு மீனவர்கள் தப்பியோட்டம்
வடமராட்சி கடற்பரப்பில்-படகுகளை கைவிட்டு மீனவர்கள் தப்பியோட்டம்
புத்தளத்திலிருந்து வருகைதந்து வடமராட்சி கடற்பரப்பில் சட்டத்துக்குப் புறம்பான முறையில் கடற்தொழிலில் ஈடுபட்ட
மீனவர்களின் 3 படகுகள் உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் அதிகாரிகளால் மீட்கப்பட்டன.
எனினும் தொழில் ஈடுபட்டவர்கள் படகுகளை கைவிட்டு தப்பித்துள்ளனர். இந்தச் சம்பவம் நாகர்கோவில் கடற்பரப்பில் நேற்று (26) இரவு இடம்பெற்றது.
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சட்டத்துக்குப் புறம்பாக தென்னிலங்கை மீனவர்கள் தொழில் ஈடுபடுவதாக அண்மைக்காலமாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் நாகர்கோவில் கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலையைப் பயன்படுத்தி தென்னிலங்கை மீனவர்கள்
தொழிலில் ஈடுபட்டனர். அவர்கள் தொடர்பில் கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டது.
தொழில் ஈடுபட்ட புத்தளத்தைச் சேர்ந்த மீனவர்கள் கரையேறிய போது, அங்கு கூடிய உள்ளூர் மீனவர்கள் அந்தப் படகுகளை
அதிகாரிகளின் உதவியுடன் தடுக்க முயன்றனர். அதன்போது படகுகளில் இருந்தவர்கள் தப்பித்த நிலையில் 3 படகுகளும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மீட்கப்பட்டன.
படகுகளில் ஒன்றில் தடை செய்யப்பட்ட சுருக்கு வலை ஒன்று மீட்கப்பட்டது.அதனை அடுத்து படகுகளை நீதிமன்றில்
ஒப்படைக்கும் நடவடிக்கைகளை நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தவிர நாட்டில் புதிய வைரஸ் பரவல் இல்லை- இராணுவம்
வெளிநாட்டில் இருந்து வருபவர்களை தவிர நாட்டில் புதிய வைரஸ் பரவல் இல்லை- இராணுவம்
தற்போது, வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மட்டுமே கொவிட்-19 வைரஸ் நோய்த் தொற்றுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 30 க்குப் பின்னரான இரண்டு மாதங்களில் இலங்கையில் கொவிட் -19 தொற்று எதுவும் பதிவாகவில்லை. இன்றைய நிலவரப்படி, 65 தனிமைப்படுத்தல் மையங்களில் 7058
பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர், மேலும் தனிமைப்படுத்தல் பரிசோதனைக்கு பின்னர் மொத்தம் 32,000 க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதேபோல்,
இன்றுடன் 26,000 க்கும் மேற்பட்ட இலங்கை வெளிநாட்டவர்கள் இன்று வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஆயினும் கூட, நாம் சமூகத்தில் வைரஸ் தொற்றை வெகு விரைவில் ஒழிப்பது கடினம். மேலும் நாம் இன்னும் நமது சுகாதார நடைமுறைகளைத் தொடர வேண்டும், இருப்பினும் சில பிரிவுகள்
அதன் நோய் தொற்று பரவுவதை புறக்கணிப்பதாக தெரிகிறது. அது நமக்கு ஏற்படும் பொறுப்பு. எங்கள் பங்கில் ஏதேனும் சிறிய குறைபாடு ஏற்பட்டால், இந்த வைரஸ் நோய் பரவக்கூடும், ‘எனவே
நேற்று (26) பிற்பகல் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும்
பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இந்த சந்திப்பானது சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னி ஆராச்சி மற்றும் கொவிட் – 19 மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் மற்றும் இராணுவ தளபதியுமான
லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றதுடன் மருத்துவ நிபுணர் மற்றும் சுகாதார சேவை பணிப்பகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம்
வைத்தியர் எஸ். ஸ்ரீதரன் மற்றும் சில நிபுணர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் இந்த சந்திப்பில்,
கொரோனா தொற்று பரவல் தடுப்பு தொடர்பான புதுப்பிப்புகள் சாத்தியமான புதிய கருத்துக்கள் மற்றும் நாட்டில் நோய் தொற்று பரவலை தடுப்பு தொடர்பாக பல கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன.
லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நொப்கோ பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிதிகளை வரவேற்றதோடு, குறித்த சந்திப்பின் கருத்துக்களை தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் தொடர்ந்து இலங்கைக்கு வருவதை மையமாகக் கொண்டு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. ‘தற்போது 26,000 மற்றும் அதற்கு அதிகமான வெளிநாட்டவர்கள் இலங்கை
வந்துள்ளதுடன், மேலும் 55,000 பேர் பிற மூலோபாய தேவைகள் ஏற்ப திருப்பி அனுப்பப்பட உள்ளனர். நடைமுறையில், மேலும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும் அனைத்து தனிமைபடுத்தல் நிலையங்கள் மற்றும்
ஹோட்டல்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தோடு, ஒவ்வொரு தனிமைபடுத்தல் நிலையங்களில் இராணுவம் ஒரு
மருத்துவ அதிகாரியை நியமிக்கின்றது,, ‘என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இந்த கொரோனா நோய் தொற்றின் தேசிய பணியின் செயல்திறனில் இராணுவம் பெற்ற மகத்தான வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் உத்வேகம் ஆகியவற்றைப் பாராட்டிய இராணுவ
தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர், சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தொற்றுநோயியல் நிபுணர்கள்,
கடற்படை மற்றும் விமானப்படை ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். தளபதிகள், மருத்துவ அதிகாரிகள், பொது சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அனைத்து முதன்மை மற்றும் தரை பங்குதாரர்கள். ‘அந்த
உறுதியான தொலைநோக்குத் தலைமை ஏற்படவில்லை என்றால், இது இராணுவத்திற்கும் நாட்டிற்கும் ஒரு புதிய அனுபவமாக இருந்ததால் எங்களுக்கு ஒரு கடினமான நேரம் கிடைத்திருக்கும்,’ என்று அவர் கூறினார்.
சுகாதார அமைச்சர் நிலவரங்களை விரிவாகக் கூறி, தொற்றுநோயை எதிர்கொண்டு நாட்டை பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் மாற்றியமைத்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பணிக்குழுவுக்கு நன்றி தெரிவித்தார். ‘கொடிய வைரஸ் பரவுவதை
திறம்பட தணித்த ஒரு தேசமாக இலங்கை உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க முடியும்,’ என்று அவர் குறிப்பிட்டார். அரசுத் துறையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனைகள் குறித்து, சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்
எஸ்.ஸ்ரீதரன் விளக்கினார். அரசுத் துறை இதை ஒரு நாளைக்கு 2000 ஆகவும், தனியார் துறை ஒரு நாளைக்கு 1000 சோதனைகளாகவும் அதிகரித்தது. இதற்கிடையில், சமூகத்தின் பாதுகாப்பை உறுதி
செய்வதற்காக சமூகத்தில் எழுமாற்று சோதனைகளும் நடத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.







