Author: நலன் விரும்பி
யாழ். பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம்
யாழ். பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் நியமனம் பெரும்பாலும் இன்று (27) இடம்பெறலாம் என பல்கலைக்கழகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் எப்ரல் மாதம் 30ஆம் திகதி, துணைவேந்தராக இருந்த பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து புதிய துணைவேந்தரை தெரிவு செய்யும் வரை பேராசிரியர் க.கந்தசாமி தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் வெற்றிடத்திற்காக ஆறுபேர் விண்ணப்பித்திருந்த நிலையில் மத்திய மதிப்பீட்டுக் குழு மற்றும்
பேரவையின் மதிப்பீடுகளின் அடிப்படையில் மூன்றுபேர் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
இதில் முதலாவதாக விஞ்ஞான பீடம், தொழிநுட்ப பீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எஸ் சற்குணராஜா, இரண்டாவதாக
உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் கு.மிகுந்தன், மூன்றாவதாக வணிக முகாமைத்துவ முன்னாள் பீடாதிபதி
பேராசிரியர் ரி.வேல்நம்பி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
பரிந்துரைக்கப்பட்ட மூவரில் ஒருவரை ஜனாதிபதி, அரசியல் யாப்பின் பிரகாரம் தனக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தை
பயன்படுத்தி நியமிக்க முடியும். குறித்த நியமனம் பெரும்பாலும் இன்று இடம்பெறலாம் என பல்கலைக்கழக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் களனிப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனமும் இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நான்கு சிறைச்சாலை காவலர்கள் அதிரடி கைது
பாரியளவான ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் வெயங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 50 ஆயிரத்துக்கும் அதிக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை காவலர் மற்றும் இலங்கை விமானப் படையின் சிவில்
அதிகாரி ஒருவரும் கைதுசெய்யப்பட்டவர்களின் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெயாங்கொடை, பெம்முல்லை, கொரொஸ்ஸ மற்றும் உடுகம்பொல
ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சிறைச்சாலை காவலர் உடுகம்பொல பகுதியை சேர்தவர்
என்றும் ஏனையவர்கள் வெயாங்கொடை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
பலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியா உதவி
பலாலி விமான நிலைய அபிவிருத்தி – இந்தியா உதவி
யாழ்ப்பாண பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்துடன் கைச்சாத்திட
எதிர்பார்த்துள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2 வார காலப்பகுதிக்குள் இந்த உடன்படிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகருக்கும் அமைச்சர்
பிரசன்ன ரணதுங்கவிற்கும் இடையில் நேற்று சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
புதிய அரசாங்கத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பிரசன்ன ரணதுங்கவிற்கும். விமான
சேவைகள் மற்றும் ஏற்றுமதி வசதி வலய இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ரி.வி.சானக்க ஆகியோருக்கு நல் வாழத்துக்களை இந்திய தூதுவர் இதன்போது தெரிவித்தார்.
அத்தோடு இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை சட்டமூலத்துக்கான நடவடிக்கை
தற்பொழுது பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தவுடன் இரு தரப்பினருக்கு இடையிலான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு பலாலி விமான
நிலைய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
முகத்தில் துப்பிய கொரனோ நோயாளி – பெண் மரணம்
முகத்தில் துப்பிய கொரனோ நோயாளி – பெண் மரணம்
பெண் ஒருவர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டு இருந்துள்ளார்
எனினும் இது அவருக்கு தெரியவரவில்லை
தனது முகத்தில் தான் துப்பிய நிலையில் அந்த கிருமிகள் அவரை பாலமாக தாக்கியதால் அவர் மரணடைந்துள்ளார்
குறித்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் மூச்சு காற்று அல்லது எச்சில்கள் உடலில் கலந்தால் அவர்கள் மரணம் வரை செல்லும்
நிலையை இந்த நோயானது ஏற்படுத்தும் என தெரிவிக்க பட்டுள்ளது ,எனவே மக்களே யாக்கிரதை
பிரிட்டனில் கொரனோ நோயால் தனிமை படுத்த பட்டவர்களுக்கு 180 பவுண்டுகள் வழங்கும் அரசு
பிரிட்டனில் கொரனோ நோயால் தனிமை படுத்த பட்டவர்களுக்கு 180 பவுண்டுகள் வழங்கும் அரசு
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி தனிமை படுத்த பட்டவர்களுக்கு 182 பவுண்டுகள் அரசு வழங்குகிறது
இவர்கள் அடிப்படை வருமான வரவுக்கு கீழ் ,வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்கள் என அடையாளம் காண பட்டால்
மட்டும் இந்த உதவி தொகை அரசினால் வழங்க படுகிறது என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்
ஆளும் அரசானது பல வழிகளில் மக்களுக்கு நல்லுதவி புரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது
கனடாவில் காரால் அடித்து ஒருவர் கொலை
கனடாவில் காரால் அடித்து ஒருவர் கொலை
கனடா ரொறொண்டோ பகுதியை சேர்ந்த 43 வயது நபர் ஒருவர் Mavis Road and Eglinton Avenue பகுதியில் நடை பாதையை கடக்கும் பொழுது வேகமாக வந்த கார் ஒன்று மோதி தள்ளியது
சம்பவ இடத்திலேயே குறித்த நபர் மரணமாகியுள்ளார் ,தற்போது கார்
சாரதி கைது செய்ய பட்டு
நீதி விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுளளார்
சாரதிகள் அலட்சிய போக்கே இந்த விபத்திற்கு காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது

ஆப்கானில் பெரும் வெள்ளம் 72 பேர் பலி -90 பேர் காயம் -300 வீடுகள் அழிவு
ஆப்கானில் பெரும் வெள்ளம் 72 பேர் பலி -90 பேர் காயம் -300 வீடுகள் அழிவு
ஆப்கானில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை எழுபத்தி
இரண்டு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர்
300 க்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக இடிந்து அழிந்துள்ளன .
டசின் கணக்கானோரை காணவில்லை ,
இவர்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப் பட்டு ,இடி பாடுகளுக்குள்
சிக்கி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,உயிர்
பலிகள் மேலும் அதிகரிக்க கூடும் என் அஞ்ச படுகிறது
குறித்த நாட்டின் தலைநகர் அருகில் உள்ள மாநிலம் ஒன்றே அதிகளாவாக பாதிக்க பட்டுள்ளது ,மேலும் இந்த வெள்ள தாக்குதலினால் நோய் தொற்று அதிகரித்துள்ளது

1,500 எலும்புக்கூடுகளுடன் -160 வருடம் பழமை வாய்ந்த மர்ம புதைகுழி கண்டுபிடிப்பு
1,500 எலும்புக்கூடுகளுடன் -160 வருடம் பழமை வாய்ந்த மர்ம புதைகுழி கண்டுபிடிப்பு
ஜப்பான் நாட்டின் Osaka நகர பகுதியில் மறைந்து கிடந்த பெரும் புதைகுழி ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இந்த குழிக்குள்
தொகுதி தொகுதியாக புதைக்க பட்ட நிலையில் சுமார் ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட மனித எலும்பு கூடுகள் மீட்க பட்டுள்ளன
இதற்குள் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையிலான எலும்பு கூடுகள் காணப்படுகின்றன
இது புதைகுழியா அல்லது படு கொலை செய்ய பட்டு புதைக்க பட்டவர்களா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை
மேற்படி நீண்ட ஆகழ்வாராய்ச்சி இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இரண்டாம்
உலக போரின் முன்னர் இங்கு நோயினால் மக்கள் இறந்திருக்க கூடும் என அச்சமும் நிலவுகிறது
எனினும் உடனடியாக இது தொடர்பான எவ்வித தகவலும் வெளியாகவில்லை
விரைவில் இந்த மனித புதைகுழி தொடர்பான பல மர்மங்கள் வெளியாகலாம் என அடித்து கூற படுகிறது

எலும்புக்கூடுகளுடன் 
இந்தியாவில் பாரிய நில நடுக்கம்
இந்தியாவில் பாரிய நில நடுக்கம்
இந்தியா அமெரிக்கா பெங்கால் பகுதியில் 4.1 அளவில் பாரிய நில நடுக்கம் பதிவாகியுள்ளது
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை
குறித்த பகுதி வெள்ளத்தால் பாதிக்க ப்பட்ட நிலையில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது
பிரிட்டனில் 81mph வேகத்தில் புயல் – மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் 81mph வேகத்தில் புயல் – மக்களுக்கு எச்சரிக்கை
பிரிட்டனில் வேகமான புயல் ஒன்று கடக்கிறது ,இவ்வேளை நாட்டின் பல பகுதியிலும் இந்த புயல் வேகம் காணப்படும்
இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்ககை விடுக்க பட்டுள்ளது
மரங்களின் கீழ் வாகனங்களை நிருததீர்கள் ,மேலும் வீட்டு யன்னலைகளை
திறந்து வைக்காது உங்கள் உடாமி ,உடல்களை காப்பாற்றி கொள்ளுங்கள் ,எச்சரிக்கை புயல் கடக்கிறது
சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடியதாக புதிதாக 2,600 இடங்கள்.
சுற்றுலாப்பயணிகளை கவரக்கூடியதாக புதிதாக 2,600 இடங்கள்.
சுற்றுலாத்தொழில் துறைக்காக இதுவரையில் பயன்படுத்தப்படாத மற்றும் சுற்றுலா தொழில் துறையை கவரக்கூடிய 2,600 இடங்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றை துரிதமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர்
பிரசன்ண ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்களை திறந்து துற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வரும்
சந்தர்பத்தில் இந்த 2,600 சுற்றுலா இடங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமானத்தின் மூலம் ஒரே முறையில் ஆகக்கூடிய
சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வரக்கூடிய வகையில் அபிவிருத்தி நடவடிக்கை விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வனூர்தி – தீயில் எரிந்து இறந்த விமானி
வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வனூர்தி – தீயில் எரிந்து இறந்த விமானி
அமெரிக்கா Mount Hood தேசிய காட்டு பகுதியில் திடீரென தீ பற்றி கொண்டது இதனை அணைக்க உலங்கு வானூர்தியில் பொடிகளை
தூவி கொண்டிருந்த பொழுது வானூர்தி தீடிரென அதே தீ பரவிய பகுதிக்குள் வீழ்ந்து நொறுங்கியது
இதன் பொழுது விமானி பலியாகியுள்ளார்
இதனை அடுத்து தீயணைப்பு படையினர் தீயினை அனைத்து
விமானியை மீட்க சென்ற போராட்டத்தில் சிக்கி தீயணைப்பு வீரர்
ஒருவரும் பலியாகியுள்ளார்
தொடர்ந்து தீ பரவிய வண்ணம் உள்ளது, இதனை கட்டு அப்துத்த முடியாது
வீரர்கள் திணறி வருகின்றனர்
மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

மனைவியை காரில் அடைத்து வைத்து கொன்ற கணவன் -வெப்பத்தில் சிக்கி இறந்த மனைவி
மனைவியை காரில் அடைத்து வைத்து கொன்ற கணவன் -வெப்பத்தில் சிக்கி இறந்த மனைவி
அமெரிக்கா மியான்மி பகுதியில் காவல்துறை ஊழியராக பணிபுரியும் கணவரின் காரில் சிக்கிய மனைவி 33 பாகை வெப்பத்தில் சிக்கி இறந்துள்ளது அம்பலமாகியுள்ளது
ரோந்து பணியில் ஈடுபட்ட கணவரின் காரின் பின்புற ஆசனத்தில்
வீற்றிருந்த மனைவி கணவர் காரினை பூட்டி சென்ற நிலையில்
அந்த கார் கதவினை திறக்க முடியாது அதற்குள் சிக்கி இறந்துள்ள
செயல் இடம்பெற்றுள்ளது
மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட
வண்ணம் உள்ளனர் .இது திட்டமிடப்பட்ட கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை
பொலிஸ் வேட்டை – 410 பேர் திடீர் கைது
பொலிஸ் வேட்டை – 410 பேர் திடீர் கைது
மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 410 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (25) காலை 06 மணிமுதல் இன்று (26) அதிகாலை 05
மணிவரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவர்களில் 198 சந்தேக நபர்கள் ஹேரோய்ன் வியாபாரத்துடன்
தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இரத்மலானையில் உள்ள நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றில்
இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வீட்டில் வைத்து மைத்திரி விசாரணை – சிறை செல்வாரா ..?
வீட்டில் வைத்து மைத்திரி விசாரணை – சிறை செல்வாரா ..?
முன்னாள் ஜனாதிபதியும் நல்லாட்சி மைந்தர் என அழைக்க பட்ட மைத்திரி ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம்
பெறுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்
வீட்டுக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் அதிகாரிகள் சென்றுள்ளனர்.
அவர் அங்கு வைத்து தொடர் விசாரணைக்கு உட்படுத்த பட்ட வண்ணம் உளளார்
இவர் விசரண்சிங்க்ளின் பின்னர் கைது செய்ய படுவார் என்ற பதட்டம் நிலவி வருகிறது
நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும் 2 கட்டங்களாக திறக்க நடவடிக்கை
நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும் 2 கட்டங்களாக திறக்க நடவடிக்கை
நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும் இரண்டு கட்டங்களாக வாரத்தில் ஐந்து நாட்களிலும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதாரப் பரிந்துரைகளுக்கு அமைய எதிர்வரும் 2 ஆம் திகதி முதல்
தரம் 6 தொடக்கம் தரம் 13 வரையான வகுப்புக்கள் காலை 7.30
மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை நடைபெறும்.
செப்ரெம்பர் 8 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பநிலை வகுப்புக்கள் உட்பட
அனைத்துப் பாடசாலைகளும் வழமை போன்று இடம்பெறும் எனவும்
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
426 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்
426 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்
கொரோனா வைரசின் காரணமாக நாட்டுக்கு வரமுடியாமல் வெளிநாடுகளில் தற்கியிருந்த 426 இலங்கையர்கள் நாடு திரம்பியுள்ளனர்.
கட்டார், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளில் இருந்து
இலங்கையர்கள் இன்று காலை மத்தளை மற்றும் கட்டுனாயக்க
விமான நிலையங்களை வந்தடைந்தனர்.
கட்டார் நாட்டில் இருந்து 296 பேரும், ஜேர்மனில் இருந்து 102 பேரும், ஐக்கிய
அரபு எமிரேட்டில் இருந்து 23 பேரும் நாடு திரும்பியுள்ளனர். இலங்கைக்கு
வருகை தந்த இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
கொரனோவால் தனிமைப்படுத்த பட்ட 228 பேர் வீடு திரும்பினார்
கொரனோவால் தனிமைப்படுத்த பட்ட 228 பேர் வீடு திரும்பினார்
கொரோனா தொற்றுக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் 228 பேர் இன்று தமது வீடுகளுக்கு திரும்பவுள்ளனர்.
இதுவரையில் 32,816 பேர் தமக்கான தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்திருப்பதாக கொவிட் 19 வைரசை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
முப்படையினரால் நடத்தப்படும் 65 மத்திய நிலையங்களில் 7,058 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை
கட்டார் நாட்டில் இருந்து 296 பேரும், ஜேர்மனியில் இருந்து 102 பேரும் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து 23 பேரும் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது போலீஸ் சரமாரி துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது போலீஸ் சரமாரி துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்தை போன்று கருப்பினத்தவர் மீது போலீசார் நிகழ்த்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது போலீஸ் சரமாரி துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவில் கடந்த மே மாதம் மினசோட்டா மாகாணத்தில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தில் ஒரு வெள்ளை இன போலீஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து
நெரித்துக்கொன்ற சம்பவத்தால் மாபெரும் போராட்டம் வெடித்தது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில், அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்தை போன்று தற்போது மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மினசோட்டாவின் அண்டை மாகாணமான விஸ்கான்சினில் நேற்று முன்தினம் ஜேக்கப் பிளேக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரை போலீசார் பலமுறை துப்பாக்கியால் சுட்டனர்.
இதுதொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஜேக்கப் பிளேக், வேனுக்குள் ஏற முயற்சிக்கும்போது,
அவரை ஆயுதங்கள் ஏந்தி பின்தொடர்ந்த 2 போலீஸ் அதிகாரிகளில் ஒருவர், அவரை நகரவிடாமல் சட்டையை பிடித்துக்கொண்டு,
பின்னாலிருந்து சுட முயற்சிக்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
7 முறை சுடப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறியதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜேக்கப் பிளேக் உயிருக்கு ஆபத்தான
நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அப்பகுதியில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.
பிலிப்பைன்சில் பாரிய குண்டு வெடிப்பு-7 ராணுவம் உள்பட 11 பேர் பலி
பிலிப்பைன்சில் பாரிய குண்டு வெடிப்பு-7 ராணுவம் உள்பட 11 பேர் பலி
பிலிப்பைன்சில் தொடர் குண்டு வெடிப்புகளில் 7 ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் பலி
பிலிப்பைன்சில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 7 ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் பலியாகினர்.
பிலிப்பைன்சில் தொடர் குண்டு வெடிப்புகளில் 7 ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் பலி
பிலிப்பைன்ஸ் தொடர் குண்டு வெடிப்பு
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பிராந்தியத்தில் அபு சயாப் என்கிற பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இவர்கள் அங்கு மத அடிப்படையிலான ஒரு அரசை நிறுவ முயற்சித்து
வருகின்றனர். இதனால் அவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். பயங்கரவாதிகளின் அட்டூழியம்
காரணமாக தெற்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிலிப்பைன்சின் தெற்கு மாகாணமான சுலூவில் உள்ள ஜோலோ நகரில் ராணுவ வீரர்கள் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடை
முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 ராணுவ வாகனங்களுக்கு இடையில் பயங்கரவாதிகள் வெடி குண்டுகள் பொருத்தப்பட்ட மோட்டார்
சைக்கிளை நிறுத்தி வெடிக்க செய்தனர். வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு
நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாயின. இதனால் அங்கு கரும்புகை மண்டலம் உருவானது.
இந்த குண்டுவெடிப்பில் 5 ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே இந்த குண்டு வெடிப்பு நடந்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக ஜோலோ நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் முன்பு பெண் தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.
இதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த 2 குண்டு வெடிப்புகளில் ராணுவ வீரர்கள் போலீசார் மற்றும் அப்பாவி பொதுமக்கள் என 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே ஜோலோ நகரில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் மேலும் ஒரு ராணுவ வீரர் பலியானார். எனினும் இந்த குண்டுவெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
இந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் அபு சயாப் பயங்கரவாதிகளே இந்த கொடூர தாக்குதலை நடத்தியதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இதனிடையே ஜோலோ நகர் முழுவதும் பாதுகாப்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.









