ஐக்கிய தேசியக் கட்சியை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைத்தல்- இணைந்து செயல்பட தயாராம் சஜித் அணி

Spread the love

இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அதன் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, கண்டியில் இன்று (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.

எந்தவொரு நிபந்தனையும் இன்றி ஐக்கிய தேசியக் கட்சியை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைத்தல் அல்லது ஐக்கிய தேசியக் கட்சி வலுப்பெருவதற்கு காலமொன்று தேவையாக இருந்தால் புதிய

தலைவரை தெரிவுசெய்தல் ஆகிய இரண்டு காரணங்களின் அடிப்படையில் மாத்திரமே தாம் இணைந்து செயற்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், பொதுத் தேர்தலில் பெற்ற பெறுபேறுகள் தொடர்பில் தற்போதாயினும் ஐக்கிய தேசியக் கட்சி தெளிவடைய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *