இலங்கையில் -கொரோனா தொற்று புதைப்பா? தகனமா?

Spread the love

இலங்கையில் -கொரோனா தொற்று புதைப்பா? தகனமா?

உலக வல்லரசு நாடுகள் கூட கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருக்;கும் நிலையில் எமது நாட்டில் கொரோனா

கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர் என்று அமைச்சர் விமல் வீரவங்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஒருவர் தெரிவானது மிக முக்கியமான விடயமாகும். சீ.வி விக்கினேஷ்வரன்

இனவாதம் பேசியவாறு அவர் சிங்கள அரசினூடாக தமது ஓய்வூதியத்தை பெறுகிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி ஆரம்பமாகும் 2020ஆம் நிதியாண்டின் அரச சேவைக்கான இடைக்கால கணக்கறிக்கை Vote

on Account ஐ நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இதன் மீதான விவாதம் நேற்றைய தினம் ஆரம்பமானது. விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் விமல் வீரவங்ச மூவின

மாணவர்களும் பாடசாலை செல்கின்றனர். புதைப்பா? தகனமா? என்று வேறுபடுத்தி பார்ப்பதற்கு இது நேரமல்ல மக்களுக்கு மத்தியில் கொரோனா பரவாமல் தடுத்தது குறித்து பார்க்க வேண்டும்.

கொரோனா தொற்றினூடாக இனவாத அரசியல் செய்ய சிலர் முயல்கின்றனர். இறந்தவர் புதைக்கப்படுகிறாரா? தகனம் செய்யப்படுகிறாரா? என்று பாராது சிங்கள, தமிழ், முஸ்லிம்

மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது குறித்து சிந்திக்க வேண்டும் முஸ்லிம் ஒருவரின் சடலம் புதைக்கப்பட்டதால் 05 இலட்சம் பேர் வேதனையில் இருப்பதாக ஒருவர் சபையில் கூறினார். கிராமங்கள்

மூடப்பட்டு சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன. இது குறித்து சிந்திக்க வேண்டும். கெரரோனா வைரசு தொற்றுடன் இனவாத அரசியல் செய்ய முயல்கின்றனர்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தில் இனவாத அரசியல் தேவையில்லை என்றும் அமைச்சர் விமல் வீரவங்ச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்: IMG 20200827 183716

30 வருட கால போரின் காரணமாக இன அழிப்பின் ஒடுக்குமுறைகளாலும் வடுக்களை சுமந்து நிற்கின்ற மக்களாகிய

நாங்கள் மிகுந்த வெளிப்படைத் தன்மையுடனும் நேர்மையுடனும் எமது குரல்களை வெளிப்படுத்தியிருக்கின்றோம்.

தமிழ் மக்களின் அபிவிருத்தியும், அரசியல் தீர்வும் பொறுப்புக்கூறலும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை என்ற

நிலையில் அபிவிருத்தியை மட்டும் காட்டி உரிமைகளை மழுங்கடிக்க முடியாது.

ஜனநாயகத்துக்கு அப்பால் ஒரு ஜனநாயகமாக பரிணமித்துக்கொண்டிருக்கின்ற இந்த அவையில் ஜனநாயகத்தின் உண்மைத் தன்மையை எதுவித பேதமுமின்றி தாங்களும் இந்த சபா பீடமும் பேணவேண்டும்.

இங்குள்ள அனைவரும் பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் அடிப்படையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதிலிருந்தே பிரச்சினையின் தீர்வுக்கான ஆரப்பப் படிகள் ஆரம்பமாகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், எல்லோரும் தேசிய ஒற்றுமையாக வாழும் வகையிலான

யாப்பு உருவாக வேண்டும். வௌ;வேறு நாடுகளிலுள்ள தீர்வு பற்றி சிந்தித்தே கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. நாட்டில் சகலரும்

ஒன்றாக வாழக் கூடியவாறு அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். எமது கட்சி தொடர்பில் கொள்கை பிடிப்புள்ள மக்கள் வாக்களித்துள்ளனர்.

நாம் ஏன் பாராளுமன்றம் வருகிறோம் என்பதை மறந்தே சில பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுகின்றனர். அன்று 50 க்கு 50

கேட்டு முன்வைத்த கோரிக்கை நியாயமாக இருந்திருந்தால் இன்று தீர்வு வந்திருக்கும். இனப்பிரச்சினையில் ஒரு வீதம் கூட தீர்வை எட்ட முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.

பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்:sfgff

கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமையை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டது.

கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக அமைக்கப்பட்ட இந்த செயலணியில் தமிழர் ஒருவர் கூட உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. அதனையடுத்து, அதற்கு தமிழர் தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், குறித்த செயலணியில் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டது.

Author: நலன் விரும்பி

Leave a Reply