செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோவால் 35ஆவது நபர் மரணம்

இலங்கையில் கொரனோவால் 35ஆவது நபர் மரணம்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 78 வயதுடைய ஆண் ஒருவர்,

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமடைந்துள்ளதாகத்

தெரிவிக்கப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பம்

பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பம்

மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதைத்

தொடர்ந்து, பொதுப் போக்குவரத்துச் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பமாவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் பஸ்கள் இன்று சேவையில்

ஈடுபடுத்தப்பட உள்ளதாக சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

தூர இடங்களுக்கான பஸ் சேவைகளும் ஆரம்பிக்கப்படும் என அவர் கூறினார்.

முறையான வேலைத்திடட்டத்தின் கீழ், தனியார் பஸ் சேவைகளும் நடத்தப்படும்

என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்துள்ளார்..

Posted in இலங்கை செய்திகள்

நோய் அறிகுறிகள் தென்படாத தொற்றுக்குள்ளானவரின் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து

நோய் அறிகுறிகள் தென்படாத தொற்றுக்குள்ளானவரின் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து

நோய் அறிகுறிகள் தென்படாத கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மூலம் வைரஸ் பரவும் ஆபத்து நிலை

உயர் மட்டத்தில் காணப்படுவதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் அடையாளம் காணப்படும் நோயாளர்களுள் பெரும் எண்ணிக்கையானவர்களுக்கு நோய்க்கான அறிகுறிகள் தென்படுவதில்லை என்றும் இவர்களின் அறியாமை

மற்றுமொருவருக்கு நோய் பரவுவதற்கு காரணமாக இருப்பதாகவும் தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்தியர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது இவ்வாறான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், கொழும்பு மாநாகர சபை

எல்லைக்குள் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் பயணங்களை வரையறுத்து தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

வீடுகளில் தனிமைப்படுத்தலுக்காக ஈடுப்படுத்தப்படும் நபர்களின் தனிமைப்படுத்தல் எவ்வாறு இடம்பெற வேண்டும் என்ற விடயம் தொடர்பிலும் விசேட வைத்தியர் தெளிவுப்படுத்தினார்.

வயதானோர் மற்றும் தொற்றா நோய் உள்ளவர்கள் வீடுகளிலேயே இருக்குமாறும், வீடுகளில் இருந்து ஒருவர் மாத்திரம் தமது

தேவைகளுக்காக வெளியே செல்வது பொருத்தமானது என்றும் வைத்தியர் குறிப்பிட்டார்.

யாராவது நபர் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டால் அந்த வீட்டில் ஏனைய உறுப்பினர்களும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவது முக்கியமான விடயமாகும் என்றும் கூறினார்.

இதேவேளை வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருக்கும் குடும்பங்கள் முன்னெடுக்கப்பட வேண்டிய சரியான சுகாதார நடைமுறை பற்றியும் அவர் தெளிவுப்படுத்தினார்.

Posted in இலங்கை செய்திகள்

அதிக விலையில் அரிசி விற்பனை செய்த 50 பேர் கைது

அதிக விலையில் அரிசி விற்பனை செய்த 50 பேர் கைது

புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை

நடவடிக்கையின்போது, நிர்ணய விலைக்கு அதிக விலையில், அரிசி

விற்பனையில் ஈடுபட்ட 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள்

பெண்ணை இடித்து கொன்ற கார் – நண்பிகள் காயம்

பெண்ணை இடித்து கொன்ற கார் – நண்பிகள் காயம்

அவுஸ்ரேலியாவில் கடந்த தினம் இரவு பத்து முப்பது மணியளவில் நண்பிகளுடன்

நடை பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது வேகமாக வந்த கார்

ஒன்று சாரதியின் காட்டு பாட்டை இழந்து மக்களுக்குள் புகுந்தது இதில் 19

வயது இளம் பெண் சம்பவ இடத்தில் பலியானார் நண்பிகள் சிறிய

காயங்களுடன் உயிர் தப்பித்து கொண்டார்

பதினெட்டு வயது சாரதி கைது செய்ய பட்டு நீதி

விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

பெண்ணை இடித்து கொன்ற கார்
பெண்ணை இடித்து கொன்ற கார்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் கொட்டலுக்குள் துப்பாககி சூடு பலர் காயம் – பொலிஸ் குவிப்பு

அமெரிக்காவில் கொட்டலுக்குள் துப்பாககி சூடு பலர் காயம் – பொலிஸ் குவிப்பு

அமெரிக்கா 3 shot at Circus Circus Hotel பகுதியில் கொட்டல் ஒன்றுக்குள்

இடம்பெற்ற திடீர் துப்பக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி மூவர் படு காயமடைந்துள்ளனர்

,மேலு ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,இந்த சூட்டு சம்பவத்தால் அங்கு பெரு பரபரப்பு நிலவியது

இது தீவிரவாத செயலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

அமெரிக்காவில் கொட்டலுக்குள்
அமெரிக்காவில் கொட்டலுக்குள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் பாடசாலைகள் அடித்து பூட்ட படுகிறது – விபரம் உள்ளே

லண்டனில் பாடசாலைகள் அடித்து பூட்ட படுகிறது – விபரம் உள்ளே

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயினை

அடுத்து மக்கள் அதிகம் பாதித்து வருகின்றனர், ஆனால் பாடசாலைகள் தொடர்ந்து நடத்த பட்ட வண்ணம் உள்ளது

இதனை அடுத்து தற்பொழுது மாணவர்களுக்கு உடல் நிலை சீரற்று நிலையில்

தாக்குதல் இருந்தால் வீட்டில் நிறுத்தி வைக்கும் படியும் அது

தொடர்பாக மருத்துவர் உதவியை நாடும் படியும் தெரிவிக்க பட்டுள்ளது

மேலும் நம்பர் ஒன்பாதம் திகதி முதல்; 13 ஆம் திகதி வரை அடித்து மூட படுகிறது என தெரிவிக்க பட்டுள்ளது

School officials are asking anyone not feeling well to stay home and seek guidance from a doctor.

All schools will be closed for in-person learning the week of Nov. 9 through Nov. 13, according to school officials.

Students must participate in full-time distance during this time. Classes will not be held on Wednesday, Nov. 11 in honor of Veteran’s Day, school officials said.

Posted in உலக செய்திகள்

உலக தலைவர்கள் டிரம்ப்பை ஏற்க மறுப்பு -பைடனுக்கு ஆதரவு

உலக தலைவர்கள் டிரம்ப்பை ஏற்க மறுப்பு -பைடனுக்கு ஆதரவு

முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதியும் சண்டியருமாக விளங்கி வந்த

டிரம்ப் படு தோல்வியை தழுவிய நிலையில் அதனை ஏற்க மறுத்து வருவதுடன் ,

தான் தொடர்ந்தும் ஜனாதிபதி என கூறி வருகிறார் ,ஆனால் தேர்தல்

நிர்வாகமோ பைடனே புதிய ஜனாதிபதி என அறிவித்துள்ளது

இதனை அடுத்து பிராந்திய நாடுகள் உள்ளிட்ட தலைவர்கள் டிரம்பிற்கு

நன்றி வணக்கம் தெரிவித்தும் பைடனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

இனியாவது அடங்குவார் இனவெறி டிரம்ப் …?

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

டென்மார்க்கில் இருந்து மக்கள் பிரிட்டனுக்கும் நுழைய தீடீர் தடை

டென்மார்க்கில் இருந்து மக்கள் பிரிட்டனுக்கும் நுழைய தீடீர் தடை

ஐரோப்பா எங்கும் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் பரவலை அடுத்து


தற்பொழுது டென்மார்க்கில் இருந்து பிரிட்டனுக்குள் மக்கள் நுழைய தடை விதிக்க பட்டுள்ளது

இது போல மேலும் சில நாடுகளுக்கு செல்ல எதிர் காலத்தில் தடை

விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

யாரையும் கைவிடாத அமெரிக்காவை நாம் உருவாக்கப் போகின்றோம் – ஜோ பைடன் வெற்றி உரை

யாரையும் கைவிடாத அமெரிக்காவை நாம் உருவாக்கப் போகின்றோம் – ஜோ பைடன் வெற்றி உரை

ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது என்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் வெற்றி உரையாற்றினார் ஜோ பைடன்.

யாரையும் கைவிடாத அமெரிக்காவை நாம் உருவாக்கப் போகின்றோம் – ஜோ பைடன் வெற்றி உரை

அமெரிக்க அதிபர் தேர்தலில் 4 நாளாக நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது. 284 வாக்குகள் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் வெற்றிக்குத் தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஜோ பைடன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

ஒட்டுமொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளது. அமெரிக்காவை மீட்டெடுப்பதற்கான நேரம் இது.

என்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். நாட்டு மக்கள் வெற்றி மூலம் தங்கள் குரலை

வெளிப்படுத்தியிருக்கின்றனர். இதைவிட சிறந்த நாள் வருமென்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள். உலக அரங்கில் அமெரிக்காவின் மரியாதையை உயர்த்த உழைப்போம்.

கடந்த 4 ஆண்டுகளாக சமத்துவம், சம உரிமைக்காக நாம் போராடி வந்தோம். கொரோனா காலத்திலும் கட்சிக்காகவும் வெற்றிக்காகவும் உழைத்தவர்களுக்கு நன்றி.

ஆட்சி ஏற்றவுடன் நமது திட்டங்கள் அனைத்தும் அறிவியல் பூர்வமாக இருக்கும். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கே முன்னுரிமை.

அமெரிக்காவில் ஒவ்வொருவரின் பாதுகாப்பே எனது இலக்கு. எந்த பேதமும் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் நம்மை ஆதரித்து

இருக்கிறார்கள். வாய்ப்புகள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும். பாராளுமன்றத்தில் அனைவரும் ஒன்றிணைந்து ஆக்கப்பூர்வமாகச் செயல்பட வேண்டும்.

நம்மால் முடியும் என்ற முழக்கத்துடன் ஒபாமா ஆட்சிக்கு வந்தார். அவருடன் நான் இருந்தேன். யாரையும் கைவிடாத அமெரிக்காவை

நாம் உருவாக்க போகின்றோம். அனைத்து அமெரிக்கர்களுக்குமான அதிபராக இருப்பேன் என தெரிவித்துள்ளார்.

Posted in உலக செய்திகள்

கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடி

கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடி

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டியுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியை கடந்தது

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ்

தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5 கோடியைக் கடந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.54 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 13.33 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 91

ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தொற்று பாதித்தவர்களில் அதிக அளவில் குணமடைந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 78,19,887 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை ஒரு

கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2.42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Posted in உலக செய்திகள்

கமலா ஹாரிஸ் வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய சொந்த ஊர் மக்கள்

கமலா ஹாரிஸ் வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய சொந்த ஊர் மக்கள்

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதையடுத்து, தமிழகத்தின் மன்னார்குடி அருகே அவரது சொந்த ஊர் மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கமலா ஹாரிஸ் வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய சொந்த ஊர் மக்கள்
இனிப்பு வழங்கி மகிழ்ந்த கிராம மக்கள்

அமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ்(வயது 55) வெற்றி பெற்றுள்ளார். இவரது சொந்த ஊர்

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். கமலா ஹாரிசின் தாய்வழி

தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிட்டதால் அவரது சொந்த ஊரான துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி

அடைந்தனர். கமலா ஹாரிஸ் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து பதாகைகள் வைத்து ஆதரவு தெரிவித்தனர். வீடுகளின் முன்பு ரங்கோலி வரைந்தும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுவிட்டார் என்ற செய்தி அறிந்ததும், துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டாசுகள்

வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். வீட்டு வாசல்களில் ரங்கோலி வரைந்து வாழ்த்து தெரிவித்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

கிராமிய வைத்தியசாலை மூடப்பட்டது; வைத்தியர் உள்ளிட்ட குழுவினருக்கு கொரனோ

கிராமிய வைத்தியசாலை மூடப்பட்டது; வைத்தியர் உள்ளிட்ட குழுவினருக்கு கொரனோ

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிராமிய வைத்தியசாலையின் வைத்தியர், தாதியர்கள், பணியாளர்கள்

உள்ளடங்களாக 16 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

மேற்படி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நோயாளர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்தே, வைத்தியசாலையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வைத்தியசாலையை அண்மித்து அமைந்துள்ள மருந்தகங்கள் சிலவும் மூடப்பட்டுள்ளதுடன், மருந்தகங்களில்

பணியாற்றியவர்களையும் தனிமைப்படுத்தியுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் மேலும் தெரிவித்தனர்.

குறித்த தொற்றாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதுடன், பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தியுள்ளார்

என்றும் எனவே அவர் பயணித்த பஸ் மற்றும் பயணிகளின் விவரங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்

Posted in இலங்கை செய்திகள்

தும்பர சிறைச்சாலையில் எழுவருக்கு தொற்று

தும்பர சிறைச்சாலையில் எழுவருக்கு தொற்று

போகம்பறை தும்பர சிறைச்சாலையிலும் பழைய போகம்பறை சிறைச்சாலையிலும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஏழு

கைதிகளுக்கு, கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தும்பர சிறைச்சாலையில் ஆறு பேரும் போகம்பறை பழைய சிறைச்சாலையில் ஒருவருமே தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று, அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளிலிருந்து தனிமைப்படுத்தலுக்காக, போகம்பறை சிறைச்சாலைக்கு அனுப்பி

வைக்கப்பட்டவர்களுக்கே கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேற்படி எழுவரையும் கொரோனா சிகிச்சை மய்யங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,

சிறைச்சாலையில் தொற்றுநீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா – தற்போது மூன்றாவது எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா – தற்போது மூன்றாவது எச்சரிக்கை

கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்களை மீண்டும் வீடுகளுக்கு அனுப்பி

வைப்பதற்கான வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம், முதலாவது பீசீஆர் பரிசோதனை நடத்தப்பட்டு 14 நாட்கள் கழிந்த பின்னர், இரண்டாவது பரிசோதனை நடத்தாமல்,

அவர்களை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப் போவதாக அவர் கூறினார்.

இடைப்பட்ட சிகிச்சை நிலையங்களில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட போதிலும், நோய் அறிகுறிகள் காட்டாதவர்கள் தத்தமது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுவார்கள்.

தற்போதைய தொற்றுப் பரம்பல் நாளுக்கு நாள் மாறி வருவதால், மக்களின் வாழ்க்கை முறையை பேணும் வழிமுறைகள் கருதி சுகாதார அமைச்சு நான்காவது எச்சரிக்கை மட்டத்தை பிரகடனம்

செய்துள்ளது. தொற்றுப் பரம்பல் நீண்ட காலம் நீடிக்கலாம் என சுகாதார அமைச்சின் பொதுச் சுகாதார சேவைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் சுசீ பெரேரா தெரிவித்தார்.

இலங்கை தற்போது மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில் உள்ளது. சில இடங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில்

இருந்தாலும், ஏனைய பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் மக்கள் வாழ்க்கையையும், தொழில்களையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது என்று அவர் கூறினார்

முல்லேரியா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பிரியந்த கருணாரட்ன கருத்து வெளியிடுகையில், இங்குள்ள பீசீஆர் கருவிகள் பழுது பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இங்கு நாளாந்தாம் சுமார் ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு நாளை நீக்கம் – தனிமைப்படுத்தல் பிரதேசங்களும் அறிவிப்பு

ஊரடங்கு நாளை நீக்கம் – தனிமைப்படுத்தல் பிரதேசங்களும் அறிவிப்பு

மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனமைப்படுத்தல் ஊரடங்கு நாளை காலை 5.00 மணிக்கு நீக்கப்படுவதாக இராணு தளபதி லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிpத்துள்ளார்.

கொழும்பில் இனங்காணப்பட்ட 12 பொலிஸ் பிரிவுகள் மற்றும் ஆபத்தான பகுதிகளாக இனங்காணப்பட்டுள்ள தொடர்மாடி கட்டிடங்கள் சிலவற்றை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

இதுவரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நாளை (09) காலை 5.00 மணிக்கு நீக்கப்படுவதாக கொவிட் – 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இருப்பினும் கீழ் குறிப்பிடப்படும் பிரதேசங்கள் மீண்டும் அறிவிக்கும் வரையில் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில்
• மட்டக்குளி பொலிஸ் பிரிவு
• முகத்துவாரம் பொலிஸ் பிரிவு
• புளுமெண்டல் பொலிஸ் பிரிவு
• கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு
• கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு
• கரையோர பொலிஸ் பிரிவு
• ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் பிரிவு
• மாளிகாவத்தை பொலிஸ் பிரிவு
• தெமட்டகொட பொலிஸ் பிரிவு
• வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவு
• பொரள்ளை பொலிஸ் பிரிவு
• வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவு

கம்பஹா மாவட்டம்
• வத்தளை பொலிஸ் பிரிவு
• பேலியகொடை பொலிஸ் பிரிவு
• கடவத்த பொலிஸ் பிரிவு
• ராகம பொலிஸ் பிரிவு
• நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு
• பமுனுகம பொலிஸ் பிரிவு
• ஜா-எல பொலிஸ் பிரிவு
• சப்புகஸ்கந்த பொலிஸ் பிரிவு
களுத்துறை மாவட்டம்
• ஹொரணை பொலிஸ் பிரிவு
• இங்கிரிய பொலிஸ் பிரிவு
• வேக்கட கிராம உத்தியோகஸ்தர் பிரிவு

குருநாகல் மாவட்டம்
• குருநாகல் மா நகர எல்லை பகுதிக்குள்
• குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவு

கேகாலை மாவட்டம்
• மாவனல்ல பொலிஸ் பிரிவு
• ரூவான்வெல்லை பொலிஸ் பிரிவு

இதேபோன்று கீழ் குறிப்பிட்ட வீடமைப்பு திட்டத்தில் கொவிட் – 19 தொற்று பரவல் தொடர்பில் கடும் அனர்த்தத்துடனான இடமாக அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் இந்த வீடமைப்பு திட்டங்களில் வாழும் பொது மக்கள் வீடுகளுக்கிடையில் நடமாடுவது தவிர்த்து பயணங்களை வரையறுத்து தமது வீடுகளுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

• மெத்சந்த செவன
• மிஹிஜய செவன
• மோதர ரன்மிண செவன
• சிரிசந்த உயன தெமட்டகொட
• மாளிகாவத்தை Nர்ளு வீடமைப்பு

Posted in உலக செய்திகள்

நிர்வாண புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய வில்லன் நடிகர்

நிர்வாண புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய வில்லன் நடிகர்

தமிழில் பையா, அலெக்ஸ் பாண்டியன் படங்களில் வில்லனாக நடித்த மிலிந்த் சோமன் நிர்வாண புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

பூனம் பாண்டேவை தொடர்ந்து நிர்வாண புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய வில்லன் நடிகர்
பூனம் பாண்டே – மிலிந்த் சோமன்


பாலிவுட்டில் நடிகராகவும், மாடலிங் துறையிலும் இருப்பவர் மிலிந்த் சோமன். இந்தி, தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட மொழிப்படங்களில்

நடித்திருக்கும் இவர் தமிழில் பையா, அலெக்ஸ் பாண்டியன் படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

கடந்த நவம்பர் 4-ம் தேதி தனது 55-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவா கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவது போன்ற தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்தப் புகைப்படம் குறித்து கோவா சுரக்‌ஷ் மன்ச் என்கிற அரசியல் கட்சி வாஸ்கோ காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளது. புகாரில்

ஆபாசமான இந்தப் புகைப்படத்தால் கோவாவின் கலாச்சாரத்தை களங்கப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிலிந்த் சோமன்

முன்னதாக கோவாவில் தடை செய்யப்பட்ட பகுதியில் நடிகை பூனம் பாண்டே ஆபாசமாக புகைப்படம் எடுத்ததற்காக அவரைக்

காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் மிலிந்த் சோமனை மட்டும் ஏன் கைது செய்யவில்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Posted in உலக செய்திகள்

தந்தை மரணம்…. நடிகை ராய் லட்சுமி உருக்கம்

தந்தை மரணம்…. நடிகை ராய் லட்சுமி உருக்கம்

நடிகை ராய் லட்சுமி தனது தந்தை மறைவு குறித்து சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

தந்தை மரணம்…. நடிகை ராய் லட்சுமி உருக்கம்
தந்தையுடன் ராய் லட்சுமி
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் ராய் லட்சுமி. இவர் தந்தை

சமீபத்தில் காலமானார். இந்நிலையில், அவர் தனது தந்தை குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது: என் தந்தையின் இழப்பை ஒருபோதும் என்னால் ஈடுசெய்ய முடியாது. இருப்பினும் இந்த இழப்புடன் வாழ நான் கற்றுக்கொள்வேன். உங்களைப் போல

யாரும் என்னை நேசிக்க முடியாது. என் இதயம் வேதனையில் உள்ளது. மன்னிக்கவும், உங்களை என்னால் காப்பாற்ற

முடியவில்லை. எல்லாம் சரியாகிவிடும் என்று அடிக்கடி என்னிடம் சொல்லியிருக்கின்றீர்கள். அதை இந்த விஷயத்திலும் எடுத்துக் கொள்கிறேன்.

நான் சுதந்திரமாகவும் வலுவாகவும் இருந்தது உங்களால் தான். உங்கள் இழப்பை ஈடுகட்ட எனக்கு வலிமை தேவை என்பது உங்களுக்குத் தெரியும்.

நீங்கள் மேலே இருந்து ஆசீர்வாதங்களைத் தருவீர்கள் என்பது எனக்கு தெரியும். என்னை நீங்கள் முழுமையாக நம்புனீர்கள். உங்களுடைய விருப்பங்களை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்.

ஒரு பொன்னான இதயம், துடிப்பதை நிறுத்திவிட்டது. என் வாழ்க்கையின் மிக இருண்ட தருணம் இது. கடினமாக உழைக்கும்

உங்களை கடவுள் விரும்பி எடுத்துக் கொண்டார். எப்போதும் எங்களை சுற்றி நீங்கள் இருப்பீர்கள் என்பதை உணர்கிறோம்.

எங்கள் இதயத்தால் எப்போதும் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள்’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

ஆயுதங்களுடன் 7 பேர் கைது- தொடரும் விசாரணை

ஆயுதங்களுடன் 7 பேர் கைது- தொடரும் விசாரணை

ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்த காலப்பகுதியில், களுத்துறை சென்றல் சந்தியில், களுத்துறை விசேட அதிரடிப் படை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட வீதிச் சோதனை

நடவடிக்கைகளின்போது. சட்டவிரோதமான முறையில் முச்சக்கர வண்டி மற்றும் கார் ஒன்றில் கொண்டுச்செல்லப்பட்ட ஆயுதங்கள் சிலவற்றுடன் எழுவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது, நவீன ரக சொகுசு கார் ஒன்றையும் முச்சக்கர வண்டி ஒன்றையும் நான்கு வாள்கள், ஆறு அரிவாள்கள், ஒரு கைக்குண்டு, இரு டீ-56 ரக துப்பாக்கி தோட்டாக்கள், இரு வெற்று டீ-56 ரக

துப்பாக்கி தோட்டங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் என்பவற்றை கைப்பற்றிய பொலிஸார், 22 மற்றும் 36 வயதுக்கு

உட்பட்ட பயாகலை பகுதியைச் சேர்ந்த மூவரையும், களுத்துறை பகுதியைச் சேர்ந்த இருவரையும், மத்துகமைப் பகுதியைச் சேர்ந்த இருவரையும்; கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை, களுத்துறை நீதிமன்றத்தின் பதில் நீதவான் ரவி டொமிங்கோ முன்னிலையில்

ஆர்படுத்தியபோது, மூவரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை

மேற்கொள்ளவும், ஏனைய நால்வரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 150 பேர் கைது-403 வாகனங்கள் பறிமுதல்

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 150 பேர் கைது-403 வாகனங்கள் பறிமுதல்

கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 150 பேர் கைது

செய்யப்பட்டுள்ளதாகப் பிரதிப் பொலிஸ்மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று (06) 21 வாகனங்களைப் பொலிஸார் கைபற்றியிருப்பதாகவும்,

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 2,600 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதோடு,

403 வாகனங்களையும் பொலிஸார் இதுவரையில் கைபற்றியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்