இலங்கையில் கொவிட்-19 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Spread the love

இலங்கையில் கொவிட்-19 உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29

இலங்கையில் இன்று கொவிட்-19 வைரசு தொற்றினால் 5 மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதற்கமைவாக கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

இன்றைய தினம் (05) சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிசெய்யப்பட்ட கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்களின் மரணம் விபரம் பின்வருமாறு:

  1. கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஆண் ஒருவர் ஆவார். இவர் பிம்புறு ஆதார வைத்தியசாலையில் நேற்று (04) உயிரிழந்துள்ளார். இந்த நபர் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என்ற ரீதியில் அடையாளங் காணப்பட்டு இந்த
  2. வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்ததுடன் நீண்டநாள் சிறுநீரக நோயினாலும் அவதிப்பட்டுள்ளார்.
  3. வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான பெண் ஆவார்.மார்பு வலியினால் இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் நேற்றைய (04) தினம் உயிரிழந்துள்ளார்.
  4. கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர். தனது வீட்டிலேயே உயிரிழந்துள்ளதுடன் பிரேத பரிசோதனையின் போது கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என்ற ரீதியில்
  5. அடையாளங் காணப்பட்டுள்ளார். இவரது மரணத்திற்கு காரணம் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பாகும்.
  6. கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஆவார். தனது வீட்டில் உயிரிழந்துள்ளதுடன் பிரேதபரிசோதனையின் போது கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என அடையாளங்
  7. காணப்பட்டுள்ளார். மரணத்திற்கு காரணம் என்ற ரீதியில் கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட நுரையீரல் தொற்று என அடையாளங் காணப்பட்டுள்ளது.
  8. கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 74 வயதான ஆண் நபர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையின் போது கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என்று
  9. உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் மரணத்திற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளமை கொவிட் 19 தொற்று பாதிப்பினால் ஏற்பட்ட இருதய பாதிப்பாகும்.

இதற்கு மேலதிகமாக இலங்கையில் பதிவான கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமானோரின் எண்ணிக்கை 29

ஆகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்ன அவர்கள் உறுதிசெய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *