Author: நலன் விரும்பி
வீடுகளில் இருந்தவாறு இம்முறை தீபாவளியை கொண்டாட வேண்டுதல்
வீடுகளில் இருந்தவாறு இம்முறை தீபாவளியை கொண்டாட வேண்டுதல்
வடக்கு மக்கள் வீடுகளில் இருந்தவாறு இம்முறை தீபாவளியை கொண்டாவேண்டும் என்று அந்த மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆலயங்களுக்கு செல்வதையும் தவிர்த்து வீடுகளில் இருந்தவாறு கொரோனா தொற்றிலிருந்து விடுபட வேண்டி தீபாவளி தினத்தில்
இறைவனைப் பிரார்த்திக்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தீபாவளி பண்டிகை தொடர்பில் இன்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்துக்களின் பண்டிகையான தீபாவளி பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் இந்து ஆலயங்களிலும் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறும். அத்துடன் தற்போது இந்து
கோவில்களில் விரத பூசைகளும் இடம்பெற்று வருவதனால் பொதுமக்கள் கோயிலுக்கு சென்று ஒன்று கூடுவதை தவிர்க்க வேண்டும்.இந்து கலாச்சார திணைக்களத்தினரால்
ஆலயங்களுக்குள் 5 பேருக்கு மேல் செல்ல அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே யாழ்ப்பாணத்தில் மக்கள் வீடுகளில் இருந்தவாறு தீபாவளியை கொண்டாடுவது மட்டுமல்லாது ஆலயங்களுக்கு செல்வதையும் தவிர்த்து வீடுகளில் இருந்தவாறு கொரோனா
தொற்றிலிருந்து விடுபட வேண்டி இறைவனைப் பிரார்த்திக்க வேண்டும்.
குறிப்பாக வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தினரால் ஏற்கனவே ஆலயங்களுக்குரிய சுகாதார விதிமுறைகள்
தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் மேலும் தெரிவித்தார்.
16 பொலிஸார் சுய தனிமைப்படுத்தல்
16 பொலிஸார் சுய தனிமைப்படுத்தல்
இனிதும பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட 16
பொலிஸார் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக
நபர்கள் பூசா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள
நிலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, அவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்த
பொலிஸார் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு ஊரடங்கு இல்லை
தீபாவளியை முன்னிட்டு ஊரடங்கு இல்லை
நாட்டில் தற்பொழுது பதிவான கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆகும்.
இவர்களுள் நேரடியாக கொரோனா வைரஸ் தொற்றினால் 5 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர் என்று கொவிட் – 19 வைரஸ் தொற்று
பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய மரணங்கள் ஏற்பட்டுள்ளமை தொற்றா நோய் நிலைமை அதிகரித்தமையே ஆகும் என்றும் அவர் தெரிவித்தார். கொழும்பில்
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்; அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வார இறுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுமா? என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் அவ்வாறான ஏற்பாடுகள் ஏதும்
இல்லை என கூறினார். பண்டிகை ஒன்று இருப்பதை அறிந்தும் நாம் அவ்வாறு செயற்பட போவதில்லை. நாட்டு மக்கள் எத்தகைய
நிலைமைகள் இருந்த போதிலும் புத்திசாதூர்யமாக செயல்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
முடக்கல் நிலையில் இருக்கும்போதுகூட அவசர மருத்துவ தேவைகள் தேவைப்படுவோர் அம்புலன்சில் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய ஒரு பொறிமுறையை தாங்கள்
நிறுவியுள்ளோம். நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஊரடங்கு மற்றும் முடக்கல் நிலைகளின்போது வீடுகளில் தங்கியிருக்காது தேவையான போது மருத்துவசிகிச்சை பெற வேண்டும்
உலக நாடுகளில் தற்போதைய வைரஸ் காரணமாக பலர் தொற்றக்குள்ளாகியதுடன் பலர் உயிரிழந்தும் உள்ளனர். நமது நாட்டில் இடம் பெற்ற உயிரிழப்புக்கள் தொடர்பாக சுகாதார
சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்ட வகையில் நேரடியான பாதிப்பில் 5 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ளனர். கடந்த சில தினங்களில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாம் பொதுமக்களிடம் வேண்டிக்கொள்வது என்னவெனில், வரலாற்றிலிருந்து இலங்கையில் உன்னதமான சுகாதார சேவை இருந்து வருகிறது. தற்பொழுது இந்த சுகாதாரதுறை அதிலிருந்து
மிகவும் மேம்பட்ட நிலையில் செயற்படுகின்றது. இதன் மூலம் இந்த வைரஸ் தொற்றை வெற்றிக்கொள்வோம் என்று அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் 4 தினங்களுக்கு மேல் மாகாணத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம். விசேடமாக மேல் மாகாணத்தில் உள்ள
மக்கள் முடிந்தவரையில் பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவட்டத்திற்குள் மாத்திரம் இருக்க வேண்டும் என்று நாம் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இதே போன்று ஒவ்வொரு மாவட்டங்களிலும்; உள்ள மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீட்டில் இருந்து வெளியே வரவேண்டும். அந்த பகுதிக்குள் மாத்திரம் உங்களது நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா – மேலும் இருவர் மரணம்
இலங்கையில் கொரோனா – மேலும் இருவர் மரணம்
இலங்கையில் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக இன்று மேலும் இருவர் மரணமாகியுள்ளனர் என்று சுகாதார சேவைகள்
பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 தொற்றுக்குள்ளானவரகள்; என்ற ரீதியில் இனங்காணப்பட்ட பின்னர் முல்லேரிய வைத்தியசாலையில்
சிகிச்சை பெற்றுவந்த இரண்டு நோயாளிகள் அந்த வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதுடன் அது தொடர்பான விபரங்கள் பின்வருமாறு:
- கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 54 வயதான ஆண் நபராவார். மரணத்திற்கான காரணம் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயுடன் கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளானமை என
- தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மீகொட பிரதேசத்தைச்சேர்ந்த 45 வயதான ஆண் நபராவார் மரணத்திற்கான காரணம் கொவிட்19 வைரசு தொற்று
- நிமோனியாயுடன் இரண்டாம் நிலை பாக்டீரியா தொற்றுக்குள்ளானமையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மரணமடைந்தோரின்
எண்ணிக்கை 48 ஆகுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன உறுதி செய்துள்ளார்.
டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசார ஆலோசகருக்கு கொரோனா தொற்று
டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசார ஆலோசகருக்கு கொரோனா தொற்று
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் டிரம்புக்கு பிரசார ஆலோசகராக இருந்த லூவண்டோவ்ஸ்கை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசார ஆலோசகருக்கு கொரோனா தொற்று
கோரி லூவண்டோவ்ஸ்கை
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 3ந்தேதி நடந்து முடிந்து தேர்தல் முடிவுகள் வெளிவந்தன. இதில், ஜனநாயக கட்சியின் ஜோ பைடன்
அதிக வாக்குகளை பெற்று அதிபராக தேர்வாகி உள்ளார். இதனால், அடுத்த ஆண்டு ஜனவரியில் பைடன் பொறுப்பேற்று கொள்கிறார்.
எனினும், தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்ற ரீதியில் அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். கொரோனா தொற்றை எதிர்கொள்ள
முடியாதது, பொருளாதார மந்த நிலை ஆகியவற்றை திறம்பட எதிர்கொள்ளாதது டிரம்பின் வீழ்ச்சிக்கு காரணங்களாக கூறப்படுகிறது.
இந்நிலையில், டிரம்பின் தேர்தல் பிரசார ஆலோசகராக உள்ள கோரி லூவண்டோவ்ஸ்கை என்பவருக்கு கொரோனா பாதிப்பு
ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். தொடர்ந்து அவர் சிகிச்சையும் பெற்று வருகிறார்.
உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை- வடகொரிய எச்சரிக்கை
உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை- வடகொரிய எச்சரிக்கை
வடகொரியாவில் உணவு மற்றும் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை- வடகொரிய அதிபர் எச்சரிக்கை
வடகொரியாவில் அடுத்தடுத்து வந்த 3 புயல்கள் மற்றும் கொரோனா தாக்கம், பொருளாதாரத் தடை போன்ற
காரணங்களால் அங்கு கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகொரியாவில் உணவு மற்றும் உணவுப் பொருளை வீணடித்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் எச்சரித்துள்ளார்.
அதிபர் மாளிகை விடுத்துள்ள அறிக்கையில், உணவை வீணடிப்பது பொருளாதாரத்தை வீணடிப்பதற்குச் சமம் என்றும், எந்த நிகழ்வில்
எந்த வகையான உணவை உட்கொள்ள வேண்டும் என்றும் பட்டியலிட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
லண்டனில் கொரனோ வெறியாட்டம் – 595 பேர் பலி
லண்டனில் கொரனோ வெறியாட்டம் – 595 பேர் பலி
லண்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வரும் கொரனோ
வைரஸ் தாக்குதலில் சிக்கி சுமார் 595 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 33,470 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதுவரை ஐம்பதாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,வரும் குளிர்காலத்தை
அடுத்து நோயின் தாக்குதல் அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
லண்டனில் கட் போர்ட் பகுதியில் தமிழர் வானை திருடி சென்ற திருடர்கள்
லண்டனில் கட் போர்ட் பகுதியில் தமிழர் வானை திருடி சென்ற திருடர்கள்
லண்டன் லூசியயம் கட் போர்ட் பகுதியில் மக்டொன்லஸ் உணவாக வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்க பட்ட வெள்ளை நிற வான்
ஒன்றை திருடர்கள் உடைத்து திருடி சென்றனர் ,இதனை கவனித்த டிலிவரி செய்யுந் முஸ்லீம் அன்பர் ஒருவர் பொலிசாருக்கு தகவல்
வழங்கியுளளார் அதனை அடுத்து
விரைந்து வந்து பார்வையிட்ட போலீசார் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்
குறித்த வானின் உரிமையாளாருக்கு தகவல் தெரிவிக்க பட்ட நிலையில் அவர் அந்த வானை மீட்டு சென்றார்
நான்கு நாட்களாக வான் திருட்டு போனபோது போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வில்லை என பாதிக்க பட்டவர்கள் தெரிவித்தனர்
தமிழர்களே உங்கள் வாகனங்களில் ராக்கிங் மென்பொருளை பூட்டி வைத்தாலே உங்கள் வாகனம் எங்கு உள்ளதும் என்பதும்
அதன் அருகில் இடம்பெறும், உரையாடல்கள் யாவற்றையும் நீங்கள் கேட்க முடியும் .அதனை பொருத்தி உங்கள் வண்டிகளை பாதுகாத்து கொள்ளுங்கள்

கடலுக்கடியில் ஹனிமூன் கொண்டாட்டம் – அசத்தும் காஜல்
கடலுக்கடியில் ஹனிமூன் கொண்டாட்டம் – அசத்தும் காஜல்
நடிகை காஜல் அகர்வால் தனது கணவர் கெளதம் கிச்லுவுடன் கடலுக்கடியில் ஹனிமூன் கொண்டாடி உள்ளார்.
கடலுக்கடியில் ஹனிமூன் கொண்டாட்டம் – அசத்தும் காஜல் அகர்வால்
கணவருடன் காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் காஜல் அகர்வால், தொழிலதிபர் கெளதம் கிச்லுவை சமீபத்தில் திருமணம்
செய்துகொண்டார். மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
காஜல் அகர்வால்
திருமணம் முடிந்த கையோடு இருவரும் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு கணவருடன் எடுத்துக்கொண்ட
புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் காஜல் அகர்வால் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், சமீபத்தில்
கடலுக்கடியில் அமைந்திருக்கும் நட்சத்திர ஓட்டலில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
35 போர் விமானங்கள் அமீரகத்துக்கு விற்பனை- அமெரிக்கா ஒப்புதல்.
35 போர் விமானங்கள் அமீரகத்துக்கு விற்பனை- அமெரிக்கா ஒப்புதல்.
அமீரக ராணுவத்திற்கு “50 நவீன எப் 35“ ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
50 நவீன எப் 35 ரக போர் விமானங்கள் அமீரகத்துக்கு விற்பனை- அமெரிக்கா ஒப்புதல்
அமீரகத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ள அதிநவீன எப் 35 ரக போர் விமானத்தை படத்தில் காணலாம்.
அபுதாபி:
அமீரகம்-அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறைகளுக்கு இடையே நல்ல உறவு இருந்து வருகிறது
. வளைகுடா போருக்கு பிறகு அமெரிக்கா எப் 16 போர் விமானங்கள், ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை அமீரகத்திற்கு விற்பனை செய்தது.
தற்போது எப் 35 போர் விமானங்களை அமீரகத்திற்கு விற்பனை செய்வது குறித்து இரு நாடுகளுக்கு இடையே நேர்மறையான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் முதல்
நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ளது. குறிப்பாக அமீரகம்- இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே
உருவான சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு போர் விமானங்கள் விற்பனை குறித்த முயற்சியானது முன்னேற்றம் கண்டது.
இந்த நிலையில் அமெரிக்கா 50 போர் விமானங்களை அமீரகத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ அதிகாரப்பூர்வ தகவலை
வெளியிட்டுள்ளார். மேலும் ஈரானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தற்போது இது தேவைப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை அடுத்து அமீரக ராணுவத்திற்கு நவீன எப் 35 ரக போர் விமானங்கள் வாங்கப்படுவது உறுதியாகி உள்ளது. இந்த போர் விமானங்களுடன், நவீன ராணுவ தொழில்நுட்பம் மற்றும்
கருவிகளும் அமீரகத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக இருநாடுகளும் 2 ஆயிரத்து 337 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
எப் 35 ரகமானது அடுத்த தலைமுறைக்கான நவீன போர் விமானமாகும். மிக அதிவேகத்தில் செல்லக்கூடிய இந்த விமானத்தை ரேடார் மற்றும் அதிநவீன உணரும் கருவிகளால் கூட
கண்டுபிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விமானங்களை இலக்காக குறி வைத்து ஏவுகணை தக்குதல் நடத்த முடியாது.
இந்த விமானங்கள் அதிவிரைவாக செயல்பட்டு செங்குத்தாக மேலெழும்பி பறக்கக்கூடியது ஆகும். அதேபோல் ஒரு பறவை போல்
செங்குத்தாக தரையிறங்க முடியும். மெக் ரக விமானங்களுக்கு இணையாக மணிக்கு 2 ஆயிரம் கி.மீ வேகம் வரை அதிவேகத்தில் பறக்கக்கூடியது.
இந்த அதிநவீன விமானத்தை வாங்க ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துருக்கி, இத்தாலி, இங்கிலாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. இதில் அமீரகத்திற்கு
தற்போது 50 விமானங்கள் விற்பனை செய்வதற்கு அமெரிக்கா அதிகாரப்பூர்வமான ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
–
ஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் 20 இந்தியர்களுக்கு இடம்
ஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் 20 இந்தியர்களுக்கு இடம்
ஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் இந்திய வம்சாவளியினர் 20 பேர் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் 3 பேர் குழுக்களின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜோ பைடனின் அதிகார மாற்று ஆய்வு குழுக்களில் 20 இந்தியர்களுக்கு இடம்
அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக வருகிற ஜனவரி 20-ந் தேதி பதவியேற்கிறார்.
இதையொட்டி தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்திடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை ஜோ பைடனுக்கு மாற்றுவதற்கான
ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ஜோ பைடன் தரப்பில் அதிகார மாற்று குழு அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் சீரான அதிகார மாற்றத்தை உறுதி செய்ய தற்போதைய நிர்வாகத்தில் உள்ள முக்கிய கூட்டாட்சி
அமைப்புகளின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்ய ஏ.ஆர்.டி. என்று அழைக்கப்படும் அதிகார மாற்று ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குழுக்களில் இந்திய வம்சாவளியினர் 20 பேர் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் 3 பேர் குழுக்களின் தலைவராக
நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருண் மஜும்தர் எரிசக்தி துறைக்கான ஏ.ஆர்.டி. குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் ராகுல் குப்தா என்பவர் தேசிய மருந்து கட்டுப்பாட்டு கொள்கைக்கான ஏ.ஆர்.டி குழுவின் தலைவராகவும், கிரன்
அஹுஜா என்பவர் பணியாளர் மேலாண்மை அலுவலகத்துக்கான ஏ.ஆர்.டி. குழுவின் தலைவராகும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை தவிர தேசிய பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி நிர்வாகம் உள்ளிட்ட 17 துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இந்திய
வம்சாவளியினர் 17 பேர் அந்தந்த துறைக்கான ஏ.ஆர்.டி குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் இந்த ஏ.ஆர்.டி. குழுக்களின் உறுப்பினர்களில் பாதிக்கும் அதிகமானோர் பெண்கள் என்றும் கருப்பினத்தவர்கள்,
மாற்றுத்திறனாளிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்தக் குழுக்களில் வாய்ப்பு
அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஜோ பைடனின் அதிகார மாற்று குழு தெரிவித்துள்ளது
அமெரிக்காவில் ஒரே நாளில் 1 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் ஒரே நாளில் 1 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 24 லட்சத்தை கடந்தது.
அமெரிக்காவில் ஒரே நாளில் 1 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு கொரோனா – அப்டேட்ஸ்
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த
வைரஸ் தற்போது உலகின் 217 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கிட்டத்தட்ட கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 5 கோடியே 24 லட்சமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 681 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் 24 மணி நேரத்தில் 44 ஆயிரத்து 281 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பிரேசிலில் 47 ஆயிரத்து 724 பேருக்கும், பிரான்சில் 35 ஆயிரத்து 879 பேருக்கும் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 5 கோடியே 24 லட்சத்து 18 ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 1 கோடியே 44 லட்சத்து 66 ஆயிரத்து 250 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 94 ஆயிரத்து 739 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
வைரஸ் பாதிப்பில் இருந்து 3 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளது . ஆனாலும், கொரோனாவால் இதுவரை 12 லட்சத்து 88 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
அமெரிக்கா – 1,07,05,503
இந்தியா – 86,36,012
பிரேசில் – 57,49,007
பிரான்ஸ் – 18,65,538
ரஷியா – 18,36,960
12 லட்சத்து 88 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா
12 லட்சத்து 88 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்து 88 ஆயிரத்தை கடந்தது.
12 லட்சத்து 88 ஆயிரம் பேர் பலி – புரட்டி எடுக்கும் கொரோனா
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த
வைரஸ் தற்போது உலகின் 217 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 88 ஆயிரத்தை கடந்துள்ளது.
குறிப்பாக இந்திய அரசு நேற்று வெளியிட்ட தகவலில் கடந்த 24 மணி நேரத்தில் 512 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் கடந்த 24
மணி நேரத்தில் அமெரிக்காவில் 1,371 பேரும், இத்தாலியில் 623 பேரும், மெக்சிகோவில் 617 பேரும் கொரோனா தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, 5 கோடியே 24 லட்சத்து 18 ஆயிரத்து 628 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 1 கோடியே 44 லட்சத்து 66 ஆயிரத்து 250 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 94 ஆயிரத்து 739 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 3 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.
ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 88 ஆயிரத்து 787 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 2,47,290
பிரேசில் – 1,63,406
இந்தியா – 1,27,571
மெக்சிகோ – 95,842
இங்கிலாந்து – 50,365
இத்தாலி – 42,953
ஸ்பெயின் – 40,105
ஈரான் – 39,664
லண்டனில் 8 குழந்தைகளை கொன்ற தாதி கைது
லண்டனில் 8 குழந்தைகளை கொன்ற தாதி கைது
இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் 8 குழந்தைகளை கொலை செய்தது மற்றும் 10 குழந்தைகளை கொல்ல முயன்றது தொடர்பாக நர்சை போலீசார் கைது செய்துள்ளனர்.
இங்கிலாந்து ஆஸ்பத்திரியில் 8 குழந்தைகளை கொன்ற நர்சு கைது
நர்சு லூசி லெட்பை
லண்டன்:
இங்கிலாந்தின் செஷயர் பகுதியில் உள்ள செஸ்டர் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தவர் லூசி லெட்பை (வயது30). இந்த ஆஸ்பத்திரியில் கடந்த 2015 ஜூன் முதல் 2016 ஜூன் வரை 15
பச்சிளம் குழந்தைகள் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் சந்தேகத்தின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு
நர்சு லூசி கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்தநிலையில் 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 8 குழந்தைகளை கொலை செய்தது மற்றும் 6 குழந்தைகளை கொல்ல முயன்றது
தொடர்பாக போலீசார் நர்சு லூசியை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
தற்போது போலீஸ் பிடியில் இருக்கும் லூசி மீது 10 குழந்தைகளை கொல்ல முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. குழந்தைகளை கொன்றது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிள்ளையானின் செயலாளர் கைது
பிள்ளையானின் செயலாளர் கைது
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான பிள்ளையான் என்றழைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுறை
சந்திரகாந்தனின் செயலாளர் பூ.பிரசாந்தன், சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரயம்பதியிலுள்ள தனது வீட்டிலிருந்து மட்டக்களப்பு வாவி கரையிலுள்ள
காரியாலயத்துக்குச் சென்று கொண்டிருந்த போதே, இன்றுக்காலை 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது காரியாலயத்துக்கு இன்று (12) காலை சென்றுகொண்டிருந்த வேளையிலேயே, கொழும்பிலிருந்து வருகைதந்திருந்த
குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் இவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரயம்பதியில் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த அவர், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் வழக்கின் சாட்சியங்களை அச்சுறுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
5,000 குளங்கள் அபிவிருத்தி
5,000 குளங்கள் அபிவிருத்தி
ஜனாதிபதி கோட்டாபய ராஐபக்ஷவின் எண்ணக்கருவில் 5000 குளங்களை புனரமைக்கும் செயல்திட்டத்தினை நாடு பூராகவும் நடைமுறைப்படுத்துவதற்கான முதலாவது கூட்டமும் விவசாய
அபிவிருத்திகுழுவின் விசேட கூட்டமும் நேற்று (11) பிற்பகல் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்றது.
சுபீட்சத்தை நோக்கிய கிராமிய பொருளாதாரத்தினை அபிவிருத்தியூடாக நஞ்சற்ற உணவு உற்பத்தியினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஐந்து வருடங்களுக்கு மேலாக
அபிவிருத்திசெய்யப்படாத குளங்கள் மற்றும் வாய்க்கால்கள், தூர்ந்து போன குளங்கள், அணைக்கட்டுகள் போன்றவற்றை அபிவிருத்திசெய்யும் திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 17 கமநல சேவை நிலையங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஒவ்வரு கமநல
சேவை நிலைய பிரிவுகளிலும் மூன்று முதல் ஐந்து குளங்கள் தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி இலங்கை முழுவதும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்வேலைத்திட்டமானது ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது. மாறாக விவசாய அமைப்பினர் பொது மக்கள் நலன்விரும்பிகள் மாணவர்கள் தொண்டர்கள் மூலமாகவே
இந்த வேலைத்திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன். மத்திய மாகாண அரசாங்கத்தின் கீழ்வருகின்ற 87குளங்கள் மட்டக்களப்பில் அவிவிருத்தி செய்யப்படவுள்ளன.
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியவர்களை அதே இடத்தில் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியவர்களை அதே இடத்தில் தனிமைப்படுத்துவதற்கு நடவடிக்கை
மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறுதல் தடை செய்யப்பட்ட பின்னர் மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய இடங்களுக்கு
சென்றவர்கள் அதே இடத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு ஈடுப்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கையில், இவ்வாறான
நபர்கள் தொடர்பில் தகவல்களை கண்டறியுமாறு அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
இதேபோன்று இவ்வாறு வந்திருப்பார்களாயின் இவர்கள் தொடர்பில் பொலிசாருக்கு அல்லது சுகாதார பிரிவுக்கு அறிவிக்குமாறு மேல்
மாகாணத்திற்கு அப்பால் உள்ள ஹோட்டல் மற்றும் தங்குமிட உரிமையாளர்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, கண்டறிவதற்காக மேலதிகமாக புலனாய்வு பிரிவும் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவை, எரிபொருள், உணவு, எரி சக்தி, மின்சாரம், நீர், மருந்து போன்ற அத்தியாவசிய சேவையை வழங்குவோருக்கு மாத்திரம் கடமைக்காக வாகனங்களின் மூலம் மேல் மாகாணத்திற்கு அப்பால் செல்வதற்கு அனுமதி உண்டு.
இதற்கு மேலதிகமாக கடமைக்கான அலுவலக அட்டையை ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரமாக பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்ட 112 சேவை ஊழியர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் அதை பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை.
இலங்கையில் 46 ஆவது கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மரணம்
இலங்கையில் 46 ஆவது கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மரணம்
இலங்கையில் இன்று இரவு 46 ஆவது கொரோனா தொற்றுக்குள்ளானவரின் மரணம் இடம்பெற்றுள்ளது.
இம்புல்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் நபர் ஒருவர் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த நோயாளி உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட Pஊசு பரிசோதனைக்குப் பின்னர் இவர் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என்ற ரீதியில் அடையாளங் காணப்பட்டுள்ளார்.
மரணத்திற்கான காரணம் வெள்ளணுப் புற்று நிலை அதிகரித்தல் மற்றும் மூச்சுமண்டலத்தில் ஏற்பட்ட பிரச்சினையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் கொவிட் தொற்றினால் எற்பட்ட மரணமட என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தீர்மானித்துள்ளார். அத்தோடு இதற்கமைவாக இது இலங்கையில் பதிவான 46 ஆவது கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளியின் மரணமாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அழைப்பு
வெளிநாடுகளில் இருந்து 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அழைப்பு
மத்திய கிழக்கைச் சேர்ந்த 17 ஆயிரத்து 861 பேர் அடங்கலாக, 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அழைத்து
வரப்பட்டுள்ளார் என்று; வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்விற்கான வலைப்பின்னலை இலங்கையில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர்
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான ‘சுபீட்சத்தின் தொலைநோக்கு’ வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களினதும், குடும்பத்தவர்களினதும்
நலன்களை மேம்படுத்த திடசங்கற்பம் பூண்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் கொவிட்-19 தொற்றுநோய்ப் பரம்பலை அடுத்து,
இவர்களின் நலன்களை உறுதிப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுத்ததாகவும் கூறினார்.
கொவிட் 19 தொற்றுநோயின் முதலாம் அலை தாக்கிய சமயம், பிரத்தியேக இணையத்தளமொன்று ஆரம்பிக்கப்பட்டு, வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களின் தகவல்கள்
திரட்டப்பட்டன. தற்போது, வேலைக்காக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், விமானம் மூலம் உலருணவு நிவாரணங்களை அனுப்பி வைப்பதற்கும், தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்குவதற்கும்
ஏற்பாடுகள்; மேற்கொள்ளப்பட்டன. ஜோர்தான், கட்டார் போன்ற நாடுகளில், கொவிட்-19 நெருக்கடியால் வேலைவாய்ப்பு இழந்தவர்களுக்கு வேறு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்
கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.
612 பொலிஸாருக்கு கொரோனா
612 பொலிஸாருக்கு கொரோனா
இலங்கையில் இதுவரை 612 பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இதில் பொலிஸ் விசேட படையினர்
145 பேர் அடங்குவதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நேற்றைய தினம் 91 பொலிஸார் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனரென்றும் இதில் கோட்டை பொலிஸ்
நிலையத்தில் 82 பொலிஸார், பொலிஸ் தலைமையகத்தில் 6 பேர், கொம்பனித்தெரு பொலிஸ் நிலையம்,1 பொலிஸ் விசேட பிரிவு-1,
பொலிஸ் விளையாட்டுப் பிரிவு-1 என 91 பொலிஸார் நேற்று
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனரென
கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.







