Author: நலன் விரும்பி
பிரிட்டனுக்கும் நுழைவதற்கு 40 நாடுகளுக்கு தடை
பிரிட்டனுக்கும் நுழைவதற்கு 40 நாடுகளுக்கு தடை
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து ஐரோப்பா உள்ளிட்ட நாற்பது நாடுகளுக்கு
உள்நுழையவும் ,இங்கிருந்து வெளி செல்லவும் பயண தடை விதிக்க பட்டுள்ளது
தற்போது பயணிகள் விமான சேவைகள் யாவும் நிறுத்த பட்டுள்ளன
சரக்கு விமான சேவைகள் வழமை போன்று இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இந்த தடையானது தை மாதம் வரை நீடிக்க கூடும் என கருத படுகிறது
சுகாதார விதிகளை மீறிய 41 பேர் கைது
சுகாதார விதிகளை மீறிய 41 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 41 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை
உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமையாலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான
காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 1,652 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சிங்கள கடற்படை அராயகம் -04 இந்திய மீனவர்கள் கைது
சிங்கள கடற்படை அராயகம் -04 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்படை நேற்று (20) வடக்கு கடலில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட
பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு இந்திய மீன்பிடி படகுடன் 04 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் வெளிநாட்டு மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் கொவிட் -19 தொற்றுநோய்
காரணத்தினால் குறைக்கப்பட்டிருந்தாலும் கடந்த வாரம் முதல் கடற்படை மீண்டும் கைது செய்யும் நடவடிக்கைகள்
தொடங்கியுள்ளதுடன் ஐந்து இந்திய மீன்பிடிக் படகுகளுடன், 36 இந்திய மீனவர்களை டிசம்பர் 15 ம் திகதி கைது செய்தனர்.
அதன்படி, இன்று எலுவதீவு கடல் பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மேற்கொண்டுள்ள சிறப்பு
நடவடிக்கையின் போது, ஒரு இந்திய மீன்பிடி படகுடன் நான்கு (04) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கைது
செய்யப்பட்ட, இந்திய மீன்பிடிப் படகு மற்றும் இந்திய மீனவர்கள் 04 பேரை குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன
இருவர் கோரமாக வெட்டி கொலை
இருவர் கோரமாக வெட்டி கொலை!
பொரளை, வனாதமுல்ல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு (20) தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொரளை, சரணபால மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொரளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை கொன்னோருவ பிரதேசத்தில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 27 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
நேற்றிரவு இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், ஹம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பாடசாலைகள் ஆரம்பிக்கும் தினம் தொடர்பான விஷேட அறிவிப்பு
பாடசாலைகள் ஆரம்பிக்கும் தினம் தொடர்பான விஷேட அறிவிப்பு
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளிலும் உள்ள பாடசாலைகள்
2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாலர் பாடசாலைகள் மற்றும் 1 முதல் 5 தரம் வரையான வகுப்புக்கள்
தவிர்ந்த ஏனைய வகுப்புகளுக்காகவே இவ்வாறு பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பேக்கரியில் 23 பேருக்கு கொரோனா
பேக்கரியில் 23 பேருக்கு கொரோனா
இரத்மலானை பகுதியில் அமைந்துள்ள பிரபல பேக்கரி உற்பத்தி நிலையத்தில் பணியாற்றிய 23 ஊழியர்களுக்கு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அங்கு பணியாற்றிய சகலரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஒரேநாளில் 1166 பேர் பலி -144,611சிபாதிப்பு
அமெரிக்காவில் ஒரேநாளில் 1166 பேர் பலி -144,611சிபாதிப்பு
அமெரிக்காவில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வந்தா கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 1,166 பேர்
பலியாகியுள்ளனர் மேலும் 144,611 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அது தவிர 27,962 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
அதே போன்று பிரிட்டனில் 326 பேர் பலியாகியும் சுமார் 35,928 பேர் பாதிக்க பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
அச்சுஅசல் சித்ராவை போல இருக்கும் இளம்பெண்…. வைரலாகும் போட்டோ
அச்சுஅசல் சித்ராவை போல இருக்கும் இளம்பெண்…. வைரலாகும் போட்டோ
தற்கொலை செய்துகொண்ட சின்னத்திரை நடிகை சித்ராவை போன்று தோற்றமுடைய பெண்ணின் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது
தொடர்பாக போலீசார் மற்றும் ஆர்டிஓ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதனிடையே சித்ராவை போன்றே தோற்றம் கொண்ட பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் பெயர் கீர்த்தனா தினகர்.
சித்ரா போலவே போட்டோ ஷூட் நடத்தியதன் பின்னணி குறித்து கீர்த்தனா தினகர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது: “இத்தனை வருடங்களாக, நான் எங்குச் சென்றாலும், என்னைப் பார்ப்பவர்கள் முதலில் சொல்வது, நீங்கள் சித்து/முல்லை/சின்ன பாப்பா பெரிய பாப்பா நடிகையைப் போல இருக்கிறீர்கள்’ என்பதுதான். உண்மையில், எனக்கு அந்த மாதிரியான கருத்துகள் சந்தோஷத்தை கொடுக்காது.
சித்ரா, கீர்த்தனா தினகர்
ஏனெனில் நான் அசலாகத் தோன்ற வேண்டும் என்று நினைப்பவள். ஆனால் இப்போது அதே கருத்தைச் சொன்னால் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் என்னால் ஒருவரைச் சந்தோஷப்படுத்த முடிகிறது என்ற காரணம் தான்.
அவர் மறைந்த தருணத்திலிருந்து, என் நண்பர்களும், நெருங்கியவர்களும் அந்த சீரியல் குழுவை தொடர்பு கொள், அந்தக் கதாபாத்திரத்தின் தேர்வுக்கு சென்று வா, கண்டிப்பாக உன்னைத் தேர்வு செய்வார்கள் என்றெல்லாம் சொன்னார்கள்.
முதலில் அதைக் கேட்ட போது கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் இப்போது வரை அதே போன்ற குறுஞ்செய்திகள் எனக்கு வந்து கொண்டிருக்கின்றன.
சித்ரா, கீர்த்தனா தினகர்
முல்லைக்கும் சித்துவுக்கும் மாற்றே கிடையாது. நாம் அவரை மிகவும் நேசித்துள்ளோம். இப்போது அந்தக் கதாபாத்திரத்தில் அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை தேர்வு செய்திருப்பார்கள். நாங்கள் சித்ராவுக்கு மரியாதையும், அன்பும் செலுத்தும் விதமாகத்தான் இந்த போட்டோ ஷூட்டை எடுத்தோம்.
எங்களைப் போன்றே சித்ராவை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் புகைப்படங்களைப் பார்ப்பது மகிழ்ச்சியைத் தரும் என்று நம்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
அமெரிக்காவில் தொலைகாட்சியில் நேரலையின் போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
தொலைகாட்சியில் நேரலையின் போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ்
வாஷிங்டன்:
அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பூசி பயன்பாட்டிற்கு
வந்துள்ளது. மேலும் பல நாடுகள் மருந்துகளை கொள்முதல் செய்யத் தொடங்கி உள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவில், நர்ஸ்களிலேயே முதலாவதாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர் தலைமை நர்ஸ் டிஃபானி பாண்டிஸ் டோவர் (30 வயது)
இவர் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவுடன், ‘கொரோனா தடுப்பூசியைப்போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?’
என்பதை விளக்கும் விதமாகத் தொலைக்காட்சி ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது சிலநிமிடங்களில், மயங்கிச் சரிந்துவிட்டார். இந்த நேரலை உலகமெங்கும் செய்தி ஊடகங்களில் ‘வைரல்’ ஆகிவிட்டது.
உடனே, அமெரிக்கத் ‘தடுப்பூசி எதிர்ப்பாளர்கள்’ கூக்குரல் எழுப்பிவிட்டனர். கொரோனா தடுப்பூசிக்கு மக்களைப் பரிசோதனை எலிகளாக ஆக்க வேண்டாம் என எதிர்ப்பை
தெரிவித்தனர். கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது இல்லை என்பதற்கு இந்தச் சான்றே போதும்; உடனடியாக அதைத் தடை செய்யுங்கள் என்று போர்க்கொடி உயர்த்தி விட்டனர்.
நர்ஸ் டிஃபானிக்கு, எப்போது ஊசி போட்டாலும் அந்த வலியைத் தாங்க முடியாது என்றும் உடனே மயக்கம் போட்டு விழுந்து விடுவார் என்று தெரிவிக்கப்பட்டது. சில நிமிடங்களில் அவருக்கு
மயக்கம் தானாகவே சரியாகிவிடும் என்று தொலைக்காட்சி பேட்டியின் போதும் இதுதான் நடந்தது என்று அவர் பிறகு விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் மயக்கம் அடைந்தால் அவரைச் சுற்றி இருந்தவர்கள் எல்லோரும் பதட்டத்துடன் அவரைப் பார்க்க, அவர் சிரித்த முகத்துடன் தனக்கு ‘வலி உணர்வைத் தாங்க முடியாதபோது
மயக்கம் வருவது உண்டு என்றும், தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் மயக்கம் வந்ததற்கும் தொடர்பில்லை’ என்றும் கூறியிருக்கிறார்.
முக கவசம் அணியாததால் – சிலி நாட்டில் அதிபருக்கு ரூ.2½ லட்சம் தண்டம்
முக கவசம் அணியாததால் – சிலி நாட்டில் அதிபருக்கு ரூ.2½ லட்சம் தண்டம்
சிலி நாட்டில் முக கவசம் அணியாததால் அதிபர் செபாஸ்டியன் பெனெராவுக்கு 3,500 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 57 ஆயிரம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சிலி நாட்டில் முக கவசம் அணியாததால் அதிபருக்கு ரூ.2½ லட்சம் அபராதம்
தென் அமெரிக்க நாடான சிலி கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. அங்கு இதுவரை 5 லட்சத்து 81 ஆயிரத்து 135 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் 16 ஆயிரத்து 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். எனவே அங்கு வைரஸ்
பரவலை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி சிலியில் முக கவசம் அணிவது கட்டாயமாக உள்ளது. பொதுவெளியில் முக கவசம் அணியாமல் இருப்பது
தண்டனைக்குரிய குற்றமாகும். அதாவது முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறிய நபர்களுக்கு அபராதம் அல்லது சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கும் சட்டம் அமலில் உள்ளது.
இந்த நிலையில் அந்த நாட்டின் அதிபரே முக கவசம் தொடர்பான விதிமுறையை மீறியதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மாத இறுதியில் அதிபர் செபாஸ்டியன் பெனெரா தனது
சொந்த ஊரான கச்சாகுவா நகரில் உள்ள கடற்கரைக்கு சென்றபோது, அங்கிருந்த ஒரு பெண்ணின் விருப்பத்துக்காக அவருடன் செல்பி படம் எடுத்துக்கொண்டார். அப்போது அதிபர்
செபாஸ்டியன் பெனெரா முக கவசம் அணிந்திருக்கவில்லை. எனவே இந்த செல்பி படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சைக்குள்ளானது.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சிலி அரசு, அதிபர் செபாஸ்டியன் பெனெராவுக்கு 3,500 அமெரிக்க டாலர் (இந்திய
மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 57 ஆயிரம்) அபராதம் விதித்துள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட அதிபர் செபாஸ்டியன் பெனெரா தனது செயலுக்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.
ஹட்டன் நகரில் மூன்று கடைகளுக்கு பூட்டு
ஹட்டன் நகரில் மூன்று கடைகளுக்கு பூட்டு
ஹட்டன் டிக்கோயா நகர சபைக்குட்பட்ட ஹட்டன் நகரில் அமைந்துள்ள மூன்று கடைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நேற்று (19) மாலை மூடப்பட்டன.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் நபர்களிடம் எழுமாறாக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது குறித்த
தொழிற்சாலையில் ஆண் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனை அடுத்து குறித்த நபர் ஹட்டன் நகரில் இரண்டு புடவை கடைகளுக்கும் ஒரு செருப்பு விற்பனை நிலையத்திற்கும் சென்றுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டதனையடுத்தே குறித்த
கடைகள் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்களினால் மூடப்பட்டதுடன் அதில் கடமை புரிந்த 33 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் ஒரு புடைவை கடையில் சுகாதார அறுவுறுத்தல்கள் பின்பற்றாததன் காரணமாக வழக்கு தாக்கல் செய்யவும்
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்..
இதே வேளை கடைகள் மூடப்பட்டாலும் கூட வேறு நபர்களை கொண்ட தமது வர்த்தக நடவடிக்கையில் நாளை முதல் ஈடுபடலாம் என சுகாதார உத்தியோகத்தர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதே வேளை, குறித்த நபர் ஹட்டன் நகரில் உள்ள இலங்கை வங்கிக்கும் சென்றுள்ளார். எனினும் குறித்த வங்கியில் முறையாக
சுகாதார வழிமுறைகள் பின்பற்றியதன் காரணமாக அவருடன் தொடர்பு கொண்ட இரண்டு ஊழியர்கள் மாத்திரம் சிசிஎவி
கெமராவின் உதவியுடன் கண்டு பிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது
கள்ளக் காதலனுடன் தங்கியிருந்த பெண் கொலை!
கள்ளக் காதலனுடன் தங்கியிருந்த பெண் கொலை!
அம்பலாந்தோட்டை, கொடவாய சந்தி பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வீட்டில் விழுந்து கிடந்த குறித்த பெண் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.
44 வயதுடைய குறித்த பெண் அவரது கள்ளக்காதலருடன் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண்ணின் கள்ளக்காதலன் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ள
நிலையில் அவரை கைது செய்வதற்காக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவு குளத்தில் இருந்து மூவர் சடலங்களாக மீட்பு
முல்லைத்தீவு குளத்தில் இருந்து மூவர் சடலங்களாக மீட்பு.
முல்லைத்தீவு வவுனிக்குள குளக்கட்டில் கப் வாகனம் தடம் புரண்டு
விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மூவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
வானகத்தை செலுத்திய 37 வயதுடைய தந்தை, 3 வயதுடைய மகள் ஆகியோரின் சடலங்கள், இன்று (20) காலை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளன.
விபத்தில் 13 வயதுடைய சிறுவன் நேற்று மீட்கப்பட்டு மாங்குளம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
வாகனத்தில் சாரதியான 37 அகவையுடைய கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன்,
அவரது மூன்று வயது மகளாக ரசீந்திரன் சார்ஜனா ஆகியோரை நேற்று (19)
இரவிரவாக தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு இன்று(20) காலை கடற்படையினரின் உதவியுடன் குறித்த இருவரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இலங்கையில் சிக்கிய 12,000 வெளிநாட்டு பயணிகள்
இலங்கையில் சிக்கிய 12,000 வெளிநாட்டு பயணிகள்
இந்த ஆண்டு மார்ச் 15ஆம் திகதிக்குப் பின்னர் எந்தவொரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகைத்
தரவில்லை எனத் தெரிவித்த பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர்,
பஷில் ராஜபக்ஸ, ஆனால் இலங்கைக்கு வருகைத்தந்த 12,000 வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கையில் சிக்கியுள்ளனரென, தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சுற்றலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதற்கான ஒழுங்குப்படுத்தல் வேலைத்திட்டம் இந்த
மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் இந்நடவடிக்கை உத்தியோகப்பூர்வமாக நடைபெறாவிட்டாலும் உரிய
பரிசோதனைகளின் பின்னர், அடுத்த வருடம் ஜனவரி 2ஆம் திகதியிலிருந்து உரிய சுகாதார பரிந்துரைகளின் கீழ், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு அழைக்கப்படுவர் என்றார்
போதைப்பொருள் விற்பனை-60 மில்லியன் ரூபாய் பறிமுதல்
போதைப்பொருள் விற்பனை-60 மில்லியன் ரூபாய் பறிமுதல்
போதைப்பொருள் விற்பனையால் ஈட்டப்பட்ட வருமானம் என்று சந்தேகிக்கப்படும் 60 மில்லியன் ரூபாய் பணத்தை, பொலிஸ்
போதைப்பொருள் தடுப்பு பணியகத்தால் நேற்று (19) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, அதிகாரிகள்
கைப்பற்றியுள்ளனர் என, பொலிஜ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அத்துடன், இதன்போது 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் இவர்களிடம் இருந்தே இந்தப் பணம் கைப்பற்றப்பட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டில் போதைப் பொருள் வியாபாரத்தில் இருந்து சம்பாதித்தது என்று நம்பப்படும் பாரிய அளவிலான பணத்தொகை பறிமுதல்
செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் கொரனோ நோயால் ஒரே நாளில் 2,497 பேர் பலி
அமெரிக்காவில் கொரனோ நோயால் ஒரே நாளில் 2,497 பேர் பலி
அமெரிக்காவில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 2,497 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 173,427 பேர் பாதிக்க
பட்டுள்ளனர்
28,002 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
அதே போல பிரிட்டனில் 534 பேர் பலியாகியுள்ளனர் 27,02 பேர் பாதிக்க
பட்டுள்ளனர்
இவை மேலும் அதிகரிக்கும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது
லண்டனில் புதிய சட்டத்தை மீறினால் – இது தான் தண்டம் – முதல்ல இதை படிங்க
லண்டனில் புதிய சட்டத்தை மீறினால் – இது தான் தண்டம் – முதல்ல இதை படிங்க
பிரிட்டனில் குறிப்பாக லண்டனில் நத்தார் தினத்தை முன்னிட்டு அன்று மட்டும் மக்கள் அயலவர்களுடன் இணைந்து கொள்ள அனுமதி வழங்க பட்டுள்ளது
அது தவிர்ந்து பிற நாள்களில் கூடினால் அவர்களுக்கு தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
தற்போதுலண்டன் பகுதி எங்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
,நோயாளர்கள் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து செல்வதனால்,
நத்தார் தினத்திற்கு பின்பு முழு லொக்கடவுன் நிகழ்வு ஏற்பட கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இவ்வேளை அரசு விதித்துள்ள புதிய நடைமுறைகளை மீறினால் இது தான் தண்டம்
அதனை கீழே பாருங்கள்
18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தண்டம் அறவிட படும் என தெரிவிக்க பட்டுள்ளது
£200 for the first offence, lowered to £100 if paid within 14 days
• £400 for the second offence, then doubling for each further offence up to a maximum of £6,400
லண்டனில் 138 வருடம் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்
லண்டனில் 138 வருடம் சிறை தண்டனை வழங்கிய நீதிமன்றம்
பிரிட்டன் லண்டன் பகுதியில் சமூக விரோத செயல் பாடுகளில் ஈடுபட்டு வந்த மிக பெரும் குழுவு ஒன்றினை போலீசார் மடக்கி பிடித்தனர்
கடந்த ஒருவருடத்திற்கு மேலாக இவர்களை தொடராக கண்காணித்து
வந்த போலீசார் ,போதைவஸ்து கடத்தல்களில் ஈடுபட்டு வந்த மேற்படி நபர்களை மடக்கி பிடித்தனர்
அவ்வேளை இவர்களிடம் இருந்து சுமார் 31kg of cocaine, 308kg of amphetamine, 590kg of cannabis resin, 3kg of skunk, 30 cannabis plants and nearly £900,000 லட்சம் பணம் என்பன மீட்க பட்டன
லண்டன் வூல்வீச் நீதிமன்றில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகளில் இவர்கள் அனைவருக்குமாக இணைத்து 138 வருடன் கடூழிய சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது
கொரனோ காலத்தில் போலீசார் மேற்படி கும்பலை இலக்கு வைத்து தமது வேட்டையில் ஈடுபட்டு வந்தமை இங்கே குறிப்பிட தக்கதாகும்

லண்டனில் – தமிழர்களிடம் நகை கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய 12 திருடர்களை தேடும் பொலிஸ்
லண்டனில் – தமிழர்களிடம் நகை கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய 12 திருடர்களை தேடும் பொலிஸ்
லண்டன் பகுதியியல்நகை வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த முக்கிய பன்னிரெண்டு திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்
இவர்கள் வீதிகளில் செல்லும் மக்களிடம் கத்திமுனையில் நகைகளை திருடி சென்றதுடன் ,பல கத்தி குத்து தாக்குதலையும் நடத்தியுள்ளனர்
இவர்கள் மிக ஆபத்தான கிரிமினல் நடவடிக்கியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் ,லண்டனில் தேடப்படும் பன்னிரெண்டு
முக்கிய குற்றவாளிகள் என கறுப்பு பட்டியலில் அறிவிக்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்
இவர்களை தெரிந்தால் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கவோ அல்லது
அருகில் உள்ள காவல்துறையினருக்கோ தெரிவிக்கும் படி வேண்ட படுகின்றனர்
தமிழர்களிடமுடம் கத்தி முனையில் வழிப்பறி கொள்ளையில் இவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது ,இவர்களை
கைது செய்தால் மட்டுமே இவர்கள் பின்புலத்தில் உள்ள குற்றவாளிகளை கண்டு பிடிக்கலாம் என போலீசார் நம்புகின்றனர்

கோயிலுக்குள் ஆயுதமாம் – தோண்டிய இராணுவம்
கோயிலுக்குள் ஆயுதமாம் – தோண்டிய இராணுவம்
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் சங்கர் புரத்தில் உள்ள கண்ணகியம்மன் கோவில் வளாகத்தில்,
பொலிஸார் நேற்று (18) சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
யுத்தக் காலத்தில் அந்த கோவில் வளாகத்தில் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்
தகவலைத் தொடர்ந்தே பொலிஸார் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நேற்று மாலை வரையில் ஆயுதங்கள் தேடும் பணிகள்
முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும், எந்தவிதமான ஆயுதங்களும் பொலிஸாரால் மீட்கப்படவில்லை.







