Author: நலன் விரும்பி
சிறையிலிருந்த 53 துப்பாக்கிகள் மீட்பு
சிறையிலிருந்த 53 துப்பாக்கிகள் மீட்பு
மஹர சிறைச்சாலை அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட 53 துப்பாக்கிகள் சிஐடியால் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
விசேட நிபுணர்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு துப்பாக்கிகள் சிஐடியினரால் கைப்பற்றப்பட்டதாகவும்,
மஹர சிறைக் கலவரம் தொடர்பில் இதுவரையில் 500 மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரவு வானில் விசேட கிரகங்களை கண்டுகொள்ள வாய்ப்பு
இரவு வானில் விசேட கிரகங்களை கண்டுகொள்ள வாய்ப்பு
இரவு, வானில் விசேட கிரகங்கள் ஒன்றுசேர்வதை கண்டுகொள்ள முடியும் என வானியல் நிபுணர் அனுர சி பெரேரா தெரிவித்துள்ளார்.
வியாழன் மற்றும் சனி கிரகங்கள் இவ்வாறு ஒன்றுசேரவுள்ளன. இது
மிகவும் அரிய சந்தர்ப்பமாகும். மாலை 6.45 மணியளவில் இதன் உச்ச நிலையை கண்காணிக்க முடியும்.
800 வருடங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு கிரகங்கள் ஒன்றுசேர்கின்றன. இதனை வெற்றுக் கண்களால் பார்க்க முடியும்.
அதேபோல், தொலைநோக்கி ஊடாகவும் பார்க்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
யாழ்பாணத்தில் கைவிடப்பட்ட குளம் இராணுவத்தினரால் புனரமைப்பு
யாழ்பாணத்தில் கைவிடப்பட்ட குளம் இராணுவத்தினரால் புனரமைப்பு
யாழ்பாண வட்டுக்கோடையில் உள்ள இராணுவத்தினரால் புதுப்பிக்கப்பட்ட ‘உப்பு வயல்குலம்’ என்று பெயரிடப்பட்டுள்ள விவசாய குளமானது, 17 ஆம் திகதி காலை பாதுகாப்பு பதவி நிலை
பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது..
இராணுவத்தின் பன்முகத்தன்மை வாய்ந்த தேசத்தைக் கட்டியெழுப்பும் திறன் மற்றும் சமூக நலனை மேம்படுத்துவதற்கான அதன் மக்களுடனான நட்புசார்ந்த
அர்ப்பணிப்பு ஆகியவற்றில் வளர்ந்து வரும் பொது ஆர்வம் மற்றும் நம்பிக்கை, இராணுவம் மற்றும் இராணுவத் தளபதியின் அர்ப்பணிப்பு ஆகியவற்றினை தென்மேற்கு வட்டுக்கோடை
விவசாய சம்மேளனம் மற்றும் அரச சார்பற்ற நிறுவனமான ப்ரெண்ட்ஸ் ஆஃப் யாழ்ப்பாணத்தின் தலைவருமான டொக்டர்
சிதம்பரன் மோகன் அவர்கள் குறித்த குளத்தின் திறப்பு விழாவின் போது பகிரங்கமாக பாராட்டினார்.
சிவில்-இராணுவ ஒற்றுமையின் மற்றொரு மைல்கல்லாகவும், இப்போது யாழ்ப்பாண தீபகற்பத்தில் வேரூன்றியுள்ள நல்லிணக்கத்தின் பிணைப்புகளாகவும், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின்
வழிகாட்டுதலின் கீழ், 513 வது பிரிகேட் படைப் பிரிவின் தளபதி பிரிகேடியர் மொஹமட் பாரிஸ் மற்றும் 51 வது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுமித் பிரேமலால் ஆகியோரின்
மேற்பார்வையில், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 10 வது கள இலங்கை பொறியியலாளர்கள் படையணி
மற்றும் 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆகியவற்றின் படையினர் உப்பு வயல்குளத்தினை மறுஅகழ்வு செய்ததோடு அதனை புதுப்பித்தனர்.
இராணுவத் தளபதி குளத்தின் பெயர் பலகையை திறந்து வைத்த பின்னர், சமூக இடைவெளி நடைமுறைகளை கடைப்பிடித்து, டொக்டர் சிதம்பரன் மோகன் தலைமையிலான விவசாயிகள்,
அன்றைய பிரதம விருந்தினரான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடன் இணைந்து திட்டத்தின் கட்டடக்கலைஞர் டொக்டர் சிதம்பரன் மோகன் அவர்களினால் இந்திய கங்கை
நதியிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீரை மீண்டும் தோண்டப்பட்ட குளத்தில் ஊற்றி அதனை புனிதப்படுத்தினர்.
பல வருடங்களுக்கு முன்பு, குளத்தை சுற்றியுள்ள கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு போதுமான நீர்வளம் காணப்பட்டது. பின்னர் அது கவனிப்பாரற்ற நிலையில் காணப்பட்டதோடு, நீர்
தக்கவைப்பு திறன் குறைதல், மழை பற்றாக்குறை மற்றும் ஏனைய காரணங்களால் அதன் அடிப்பகுதி வறண்ட நிலையில் காணப்பட்டது . ‘தியாஹி நற்பணி மன்றத்தின்’ தலைவர் திரு
வாமதேவா தியாகேந்திரன் அவர்களினால் வழங்கப்பட்ட நிதி அனுசரணையில், வட்டுக்கோடை பகுதியில் உள்ள சிரமப்படும் விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்திய குறித்த
புனரமைப்பு திட்டத்தை இராணுவம் முன்னெடுத்தது.புதுப்பிக்கப்பட்ட குறித்த குளத்தில் இருந்து 4000
ஏக்கர் விவசாய நிலங்களுக்கு போதுமான நீர்வளம் கிடைக்கும் அதே வேளை 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதன் மூலம் பயன்பெறுவர்.
இந்நிகழ்ச்சியில் டொக்டர் சிதம்பரன் மோகன் ஆற்றிய தனது சுருக்கமான உரையில், இராணுவத்தின் சமூக ஒத்துழைப்பு, கட்டுமானம், மேம்பாடு, வீட்டுவசதி மற்றும் பிற நலன்புரி பணிகளை பகிரங்கமாக பாராட்டினார். “இராணுவத்தின்
சேவைகளை, குறிப்பாக இராணுவத் தளபதியின் பங்களிப்பு மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் அவர் கொண்டிருந்த அர்ப்பணிப்பு, பேரழிவுகளின் போது அப்பாவி மக்களை மீட்பது மற்றும் வெளியேற்றுவது, அவர்களின் வாழ்வாதாரங்களுக்கு
ஒத்துழைப்பு வழங்குதல் , வீடுகளை வழங்குவது உள்ளிட்ட அர்பணிப்பு சேவைகளை முழு மனதுடன் நான் பாராட்டுகிறேன், மற்றும் வடக்கு மக்கள் துயரத்தில் இருக்கும்போதெல்லாம் அவர்களின் அனைத்து வகையான நலன்களும், வன்னி மனிதாபிமான நடவடிக்கைகள், கொவிட் -19 வைரஸைக்
கட்டுப்படுத்தும் பணி போன்ற விடயங்களை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம், மேலும் உங்கள் அனைத்து முயற்சிகளிலுக்கும் நாங்கள் பிராத்திக்கிறோம்”என்று அவர் மேலும் கூறினார். வடக்கிலும் இளைஞர்கள் போதைவஸ்துக்கு அடிமையாகி வருவதனால் நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க டொக்டர் மோகன் அவர்கள் இராணுவத் தளபதியிடம் ஒத்துழைப்பினை கோரினார்.
டொக்டர் சிதம்பரன் மோகனின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் முகமாக, யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் படையினர் விவசாய மேம்பாட்டு சபையின் உதவி ஆணையாளர் திரு இ.நிஷாந்த் வாலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் திருமதி பிரேமணி பொண்ணம்பலம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் திரு கே மகேஷன் ஆகியோரின் நெருக்கமான ஒருங்கிணைப்பில் சில வாரங்களுக்குள் இராணுவ இயந்திரங்களைப் பயன்படுத்தி இந்த குளத்தினை புதுப்பித்தனர்.
குறித்த நிகழ்வில் மத பிரமுகர்கள், யாழ் மாவட்ட செயலாளர், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் திரு எஸ்.பாலசந்திரன், 51, 52 மற்றும் 55 வது படைப் பிரிவுகளின் படைத் தளபதிகள், வடக்கு முன்னரங்கு பாதுகாப்பு தளபதி, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பதவி நிலை மற்றும் பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் விடுதிகள், மேலதிக பிரதேச செயலாளர் (காணி) யாழ்ப்பாணம், வாலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர், விவசாய மேம்பாட்டுத் திணைக்கள துணை ஆணையாளர், விவசாயிகள், பொதுமக்கள், இராணுவத்தினர் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குறித்த குளமானது முற்றிலும் வறண்டு, தேக்கமடைந்து, மண்ணினால் நிரம்பி காணப்பட்டதோடு மற்றும் மழை நீரின் முழுத் திறனையும் தக்க வைத்துக் கொள்ள முடியுமான திறன் காணப்படாமை மற்றும் ஆண்டு முழுவதும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் விவசாய திட்டங்களுக்கு மிகவும் தேவையானதால் படையினருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பிரகாரம் அவர்கள் தங்கள் கனரக இயந்திரங்கள் மற்றும் மனிதவளத்தைப் பயன்படுத்தி விவசாய மேம்பாட்டுத் திணைக்களம் உட்பட அந்தந்த அனைத்து அரச நிறுவனங்களுடனும் கலந்தாலோசித்து திட்டத்தை பூர்த்திசெய்தனர்.
இன்று காலை குளத்தின் அருகே இடம்பெற்ற சுருக்கமான விழாவின் போது, லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் புனரமைப்பு தொடர்பான ஆவணங்களை முழு புதுப்பித்தல் திட்டத்திற்கும் தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கிய விவசாய மேம்பாட்டுத் திணைக்களத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் குறித்த குளத்தின் மூலம் சங்கனாய் பிரதேச செயலகத்தில் உள்ள 600 குடும்பங்கள் பயன் பெறலாம் , மேலும் 4000 ஏக்கரிற்கும் மேல் நெல் பயிர் செய்கையினை மேற்கொள்ள முடியும் என்று கூறினார். “இலங்கை இராணுவம் தமிழ் மக்களின் நல்வாழ்வு மற்றும் அவர்களின் தேவைகள் அல்லது அவர்களுக்கு தேவையான வேறு எந்தவொரு விஷயத்திற்கும் எப்போதும் ஒத்துழைப்பு வழங்கும். சமீபத்திய வெள்ளம் மற்றும் ‘புரேவி’ சூறாவளியின் போது அவர்களினால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புக்களையும் அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து வழங்கினர்.அரச அல்லது அரச சார்பற்ற நிறுவனம் அல்லது தனிநபர் அனுசரணையுடன் யாழ்பாணத்தில் யாழ் படையினர் இதுவரை வரிய குடும்பங்களுக்காக 740 புதிய வீடுகளை நிர்மாணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு பிரதான பொறுப்பு மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் ஒரு பகுதியாகக் கருதி அதிகமான வீடுகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் தொடங்கப்படும்.இங்குள்ள சில பெற்றோர்கள் கேட்டுக் கொண்டபடி, எதிர்காலத்தில் யாழ்ப்பாண இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் தடுப்பதற்கும் நாங்கள் உதவுவோம், ”என்று அவர் விரிவாகக் கூறினார். நாட்டில் உள்ள கொவிட் -19 தொற்றுநோய் குறித்த நிலைமை தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தர்.
டொக்டர் சித்தம்பரன் மோகன் மற்றும் அரச அதிகாரிகளின் வேண்டுகோளின் பிரகாரம், சில மாதங்களுக்கு முன்பு, இதே முறையில், படையினர் பாலாலியில் கைவிடப்பட்ட ‘ரவிந்து வாபி’ குளத்தினை முற்றிலுமாக புனரமைத்து பொதுமக்களிடம் ஒப்படைத்தனர்.
இத்தாலியில் நத்தார் மற்றும் புத்தாண்டுக்கு முழு அடைப்பு – மக்கள் கொதிப்பு
இத்தாலியில் நத்தார் மற்றும் புத்தாண்டுக்கு முழு அடைப்பு – மக்கள் கொதிப்பு
இத்தாலியில் மீளவும் இரண்டாம் அலையாக கோவிட் 19 நோயானது மிக
வேகமாக பரவி வரும் நிலையில் நத்தார் தினம் மற்றும் புத்தான்டுக்கு முழு லொக்கடவுன் பிறப்பிக்க பட்டுள்ளது ,
மக்களை நோயில் இருந்து காப்பாற்றி கொள்ள இதனை தாம்
செய்திட வேண்டிய நிலையில் உள்ளதாக அந்த நாட்டு அதிபர் தெரிவித்து வருகிறார் .
ஆனால் மக்களோ இதனை ஏற்க மறுத்து சமூக வலைத்தளங்களில் ஆளும் அரசை விமர்சித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் – நத்தாருக்கு பின்னர் மூன்றாவது முழு லொக்கடவுன்
பிரிட்டனில் – நத்தாருக்கு பின்னர் மூன்றாவது முழு லொக்கடவுன்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து
இரண்டாவது முழு அடைப்பு விடுக்க பட்டது ,நத்தர் தினத்தை முன்னிட்டு
அது தளர்த்த பட்டது ,ஆனால் மேற்படி நோயின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் மருத்துவ மனைகளில் நோயாளர்கள்
எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதல் நத்தார் முடிவடைந்ததன்
பின்னர் முழு அடைப்பு நிலைக்கு மூன்றாவது முறையாக பிரிட்டன் செல்ல உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இதனை மறைமுகமாக பிரிட்டன் பிரமர் தெரிவித்துள்ளதும் கவனிக்க தக்கது
அமெரிக்காவில் ஒரே நாளில் கொரனோவால் 2,662 பேர் பலி – பல லட்சம் பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் கொரனோவால் 2,662 பேர் பலி – பல லட்சம் பாதிப்பு
அமெரிக்காவில் இரண்டாம் அலையாக பரவி வரும் கோவிட் தாக்குதலில்
சிக்கி ஒரே நாளில் 2,662 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 242,023 பேர் பாதிக்க
பட்டுள்ளனர் ,இது தவிர 28,107 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
பிரிட்டனில் இதே போன்று 489 பேர் பலியாகியும் ,28,507 பேர் புதிதாக
நோயின் தோற்றால் பாதிக்க பட்டுள்ளனர்
எதிர்வரும் நாட்களில் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
நடிகை சித்ராவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க பொலிஸ் திட்டம்
நடிகை சித்ராவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க பொலிஸ் திட்டம்
டி.வி. நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார்.
டி.வி. நடிகை சித்ராவுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க ஆர்டிஓ முடிவு
சித்ரா
ஸ்ரீபெரும்புதூர்:
டி.வி. நடிகை சித்ரா செம்பரம்பாக்கம் அருகே உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட சித்ராவுக்கு திருமணம் நடத்து சில மாதங்களே ஆனதால் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து காஞ்சீபுரம் மாவட்டம்
ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, சித்ராவின் பெற்றோர், சகோதரி, சகோதரர் மற்றும் கணவர் ஹேம்நாத்தின் பெற்றோரிடம் தனித்தனியாக 2 கட்டமாக விசாரணை நடத்தினார்.
ஹேம்நாத்தை விசாரணைகாக ஆஜர்படுத்த ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினார். நேற்று முன்தினம் ஹேம்நாத்திடம் 8 மணி நேரம் ஆர்.டி.ஓ திவ்யஸ்ரீ விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் சித்ராவுக்கு நெருக்கமானவர்கள், சித்ரா தற்கொலை செய்துகொண்ட விடுதியின் ஊழியர்கள், கடைசியாக
சித்ராவுடன் பணியாற்றியவர்களிடம் இன்று (சனிக்கிழமை) விசாரணை செய்ய ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ முடிவு செய்து அவர்கள் ஆஜராக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடியின் அலுவலகத்தை ஆன்லைனில் விற்க முயன்ற கும்பல்
மோடியின் அலுவலகத்தை ஆன்லைனில் விற்க முயன்ற கும்பல்
பிரதமர் மோடியின் வாரணாசி அலுவலகம் 7 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை என ஆன்லைன் விற்பனை தளமான ஒ.எல்.எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
பிரதமர் மோடியின் அலுவலகத்தை ஆன்லைனில் விற்க முயன்ற கும்பல்
பிரதமர் மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி பாராளுமன்ற தொகுதியில் வெற்றிபெற்றார். பிதமர் மோடியின் தொகுதி
அலுவலகம் வாரணாசியின் ஜவகர் நகர் பகுதியில் உள்ளது. 6 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவை கொண்டது அந்த கட்டிடம்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அலுவலக கட்டிடத்தை புகைப்படம் எடுத்த ஒரு கும்பல் அந்த புகைப்படத்தை ஆன்லைன் விற்பனை தளமான ஒ.எல்.எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
மேலும், இந்த கட்டிடம் விற்பனைக்கு உள்ளது எனவும் அதன் விலை 7 கோடியே 50 லட்சம் எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்பு படம்
மோடியின் வாரணாசி தொகுதி அலுவலக கட்டிடம் விற்பனைக்கு என ஆன்லைனில் புகைப்படம் பதிவிடப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து உத்தரபிரதேச போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் அலுவலக கட்டிட புகைப்படத்தை ஆன்லைன் விற்பனை தளத்தில் பதிவேற்றம் செய்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அலுவலக கட்டிடத்தை ஒ.எல்.எக்ஸ். வலைதளத்தில் விற்பனை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பில் 18 மணித்தியால நீர்வெட்டு
கொழும்பில் 18 மணித்தியால நீர்வெட்டு
கொழும்பில் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை(19) காலை 9 மணிமுதல் மறுநாள் (20) அதிகாலை 3
மணிவரையான காலப்பகுதியில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு 01, 02, 10 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும் என, நீர்வழங்கள் வடிகாலமைச்சபை கூறியுள்ளது.
அதேநேரத்தில், கொழும்பு 03, 04, 07, 08 மற்றும் 09 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும்.
கிழக்கில் அதிகரித்துச் செல்லும் கொரனோ தொற்றாளர்கள்
கிழக்கில் அதிகரித்துச் செல்லும் கொரனோ தொற்றாளர்கள்
கிழக்கு மாகாணத்தில், இன்று (18) 49 பேருக்கு கொரோனா வைரஸ்
தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்முனை தெற்கு 33 தொற்றாளர்களும், பொத்துவிலில் எண்மரும்
சாய்ந்தமருது 1, ஆலையடிவேம்பு -3, அக்கரைப்பற்று 3 வாழைச்சேனை ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களுக்கான அறிவித்தல்
தனிமைப்படுத்தப்பட்ட பிரதேச மக்களுக்கான அறிவித்தல்
சுகாதார அதிகாரிகளின் உத்தரவுகளை மீறி செயற்பட்டால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் தனிமைப்படுத்தல்
நிலையை தொடர்ந்து செயற்படுத்த நேரிடும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்த வார இறுதியில் அனைத்து பொதுமக்களும் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடித்து செயறப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட சுகாதார
வழிகாட்டல்களை மீறிய 37 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்துள்ளனர்.
அரச ஊழியர்கள் 600 பேர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்
அரச ஊழியர்கள் 600 பேர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் ஊழியர்கள்
600 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கட்டங்களின் அடிப்படையில் இந்த இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை வழங்கக் கூடாது- டக்கிளஸ்
அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை வழங்கக் கூடாது- டக்கிளஸ்
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற திட்டவட்டமான அறிவுறுத்தலை கிளிநொச்சி மாவட்ட
அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பூநகரி பகுதியில் உள்ள எல்ஆர்சி காணிகளை அரசாங்க அதிகாரிகள் பணம் பெற்று வழங்கியதாக அமைச்சருக்கு கிடைத்த
முறைப்பாட்டை அடுத்து குறித்த உத்தரவை அமைச்சர் வழங்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாது வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்களுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள குறித்த காணிகள் வெகுவிரைவில்
பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் Luton பகுதியில் போலீசார் சுற்றிவளைப்பு எட்டு பேர் கைது – ஒரு லட்சம் பணம் மீட்பு
பிரிட்டன் Luton பகுதியில் போலீசார் சுற்றிவளைப்பு எட்டு பேர் கைது – ஒரு லட்சம் பணம் மீட்பு
பிரிட்டன் புறநகர் பகுதியாக உள்ள லூட்டன் பகுதியில் நேற்று போலீசார் நடத்திய சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையின்
பொழுது சுமார் எட்டு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,மேலும் ஒருலட்சம் பவுண்டுகள் பணம் மீட்க பட்டுள்ளது
114 போலீசார் இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்
இதன் பொழுது கைபேசிகள் ,துப்பாக்கிகள் ,போதைவஸ்துக்கள் ,வாகனங்கள் ,கணனிகள் ,கைபேசிகள் என்பன மீட்க பட்டுள்ளன
இவர்களுடன் தொடர்பில் உள்ள ஏனையவர்களை கைது செய்யும் நகர்வில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 532 பேர் மரணம் -35,383 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 532 பேர் மரணம் -35,383 பேர் பாதிப்பு
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி சுமார் 532 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 35,383 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
,இதைவிட 1340 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,தற்போது மீளவும்
உணவகங்கள் டெக்கவே மட்டும் அனுமதிக்க பட்டுள்ளது ,வீதிகள்
வழமையை விட மக்கள் நடமாட்டம் குறைந்து காண படுகின்றமை குறிப்பிட தக்கது
சித்ரா தற்கொலை வழக்கு – கணவர் ஹேம்நாத் புழல் சிறைக்கு மாற்றம்
சித்ரா தற்கொலை வழக்கு – கணவர் ஹேம்நாத் புழல் சிறைக்கு மாற்றம்
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைதாகி இருக்கும் கணவர் ஹோம்நாத் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சித்ரா தற்கொலை வழக்கு – கணவர் ஹேம்நாத் புழல் சிறைக்கு மாற்றம்
கணவருடன் சித்ரா
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் நட்சத்திர ஓட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். இருவருக்கும் அடுத்த மாதம் ஊர்
அறிய திருமணம் நடைபெற இருந்த நிலையில் அக்டோபர் மாதம் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.
திருமணமாகி 2 மாதங்களிலேயே சித்ரா தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதன்படி இன்று காலை 8.15 மணியளவில் ஹேம்நாத் விசாரணைக்காக ஆர்.டி.ஓ.
முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். ஆர்.டி.ஓ. கேட்ட கேள்விகளுக்கு ஹேம்நாத் முறையாக பதில் அளித்துள்ளார். பல மணி நேரத்துக்கும் மேலாக அவரிடம் விசாரணை நடைபெற்றது.
கணவருடன் சித்ரா
தற்போது ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் விசாரணை முடிந்து ஹேம்நாத் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். கொரோனா
பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பதால் பொன்னேரி கிளைச்சிறையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றம் என சிறைத்துறை தகவல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் உளவாளி ரசிய ஏதிர்காட்சி தலைவர் – புட்டீன் அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவின் உளவாளி ரசிய ஏதிர்காட்சி தலைவர் – புட்டீன் அதிரடி அறிவிப்பு
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.
இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார்.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசர அவசரமாக ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
ஒம்சக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னியின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அவர்
கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நவல்னிக்கு கூடுதல் சிகிச்சையளிக்க ஜெர்மனி முன்வந்தது. உடனடியாக ரஷிய அரசின் அனுமதியுடன் நவல்னி
ஒம்சக் நகரில் இருந்து
ஜெர்மனி நாட்டிற்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டார்.
பெர்லினில் வைத்து நவல்னிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தன்மை உடைய நோவிசோக் என்ற வேதிப்பொருள் தாக்குதலுக்கு நவல்னி
உள்ளாகியுள்ளதாக ஜெர்மனி மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தொடர் சிகிச்சை காரணமாக நவல்னி கோமா நிலையில் இருந்து மீண்டார்.
தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையையடுத்து நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷத்தால் பாதிக்கப்பட்டிருந்த
அலெக்ஸி நவல்னியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த செப்டம்பர் மாதம் 24-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும் உடல்நிலை பூரணமாக குணமடையும் வரை நவல்னி தொடர்ந்து ஜெர்மனியிலேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
நவல்னி – புதின்
இதற்கிடையில், தன் மீது நடத்தப்பட்ட கொடிய விஷ தாக்குதலுக்கு ரஷிய அதிபர் புதின் தான் காரணம் என நவல்னி குற்றம் சுமத்தினார். அதேபோல் இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளும்
ரஷிய அதிபர் புதினையே குற்றம் சுமத்தின. இதனால், ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். வருடாந்திர செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு நாடுகளின் ஊடகங்கள் இடம்பெற்றிருந்தன.
அப்போது புதினிடம் எதிர்க்கட்சி தலைவர் நவல்னியை கொலை செய்யும் நோக்கத்தோடு விஷத்தன்மை உடைய வேதிப்பொருள் கொடுக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த புதின்,
அவர் (நவல்னி) அமெரிக்க உளவு அமைப்புடன் தொடர்பில் உள்ளார். ரஷிய அதிகாரிகள் அவரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆனால், இதற்காகவெல்லாம் நாங்கள் அவருக்கு விஷம் கொடுக்க வேண்டியதில்லை. அவரால் யாருக்கு என்ன பயன்?
ஒருவேளை எங்களுக்கு அது தேவைப்பட்டிருந்தால் (நவல்னியை கொலை செய்ய தேவைப்பட்டிருந்தால்) நாங்கள் அந்த வேலையை கட்சிதமாக முடித்திருப்போம்.
என்றார்.
இந்தியா மீனவர்களை எச்சரித்த டக்கிளஸ்- இந்தியாவுக்கு கெடு
எல்லை தாண்டும் மீனவர் விவகாரத்தில் இந்தியத் தரப்பினரே நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக இந்திய கடற்றொழிலாளலர்களின் எல்லை தாண்டும் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் இலங்கை
கடற்றொழிலாளர்களும் பொறுமை இழந்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக எல்லை தாண்டிய இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்து வருகின்றனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்கள், நீதிமன்றில் முன்னிலையாக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தொடர்பு கொண்டுள்ள இந்தியத் தரப்புக்கள், எதிர்வரும் 30 ஆம் திகதி நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கான நல்லெண்ண சமிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளவர்களை
விடுதலை செய்யுமாறு கோரியுள்ளதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், உண்மையில் இந்தியத் தரப்பினரே எல்லை தாண்டும்
செயற்பாடுகளை இடை நிறுத்தி தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், தடைசெய்யப்பட்ட தொழில் முறையை இந்திய மீனவர்கள் பயன்படுத்துவதால் கடல் வளம் பாதிக்கப்பட்டு எதிர்கால இலங்கை
– இந்திய சந்ததியினருக்கு வாழ்வாதரப் பிரச்சினை ஏற்படாமல் கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு பொலிஸார் விசேட வேண்டுகோள்
மக்களுக்கு பொலிஸார் விசேட வேண்டுகோள்
கொவிட் – 19 வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ள சுகாதார அதிகாரிகள் அல்லது பாதுகாப்பு பிரிவினர் தகவல்களை கோரும் சந்தர்ப்பத்தில் தாமதமின்றி அதற்கு
ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நோயை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தின் கீழ் இதற்கு பொதுமக்கள் கடமைப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும் பொழுது அல்லது வீட்டுக்கு அப்பால் வெளியே செல்லும் பொழுது தமது முகவரி தேசிய அடையான அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி
இலக்கத்தை குறிப்பிட்ட குறிப்பு கடித துண்டுகளை எப்பொழுதும் வைத்திருக்குமாறும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பண்டிகை கால வைபவம் உள்ளிட்ட சில வைபவங்களில் பொதுமக்கள் ஈடுப்படக்கூடும். அனைத்து வைபவங்களிலும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். பொலிஸார்,
பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்டோர் பல்வேறு தனிமைப்படுத்தல் முறை, கொவிட் தொற்றை தடுப்பதற்கு மூலோபாயங்கள் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலை உண்டு. இவ்வாறான
சந்தர்ப்பங்களில் உங்களிடம் தகவல்களை கேட்டால், தகவல்களை வழங்குமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் அவர் கூறினார்.
படிவம் ஒன்றில் இந்த தகவல்களை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இதற்கு வசதியாக உங்கள் பெயர், முகவரி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை
குறித்த கடிதத்துண்டு ஒன்றை உங்கள் வசம் வைத்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய வகையில் முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 32 பேர் கடந்த 24 மணித்தியாலயத்திற்குள்; கைது
செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண சுட்டிக்காட்டினார்.
இந்த விதிமுறைகளை மீறியதன் காரணமாக இதுவரையில் சுமார் 1525 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
ஒக்டோபர் 31 ஆம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இவ்வாறானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கு உட்பட்டவாறு செயல்படுமாறு
நாம் கேட்டுக் கொள்கிள்றோம். பண்டிகை மற்றும் குடும்ப வைபவங்களை குடும்பத்துக்குள் மாத்திரம் வரையறுத்து செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் பி.சீ.ஆர் பரிசோதனையின் போதும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதும், ஏனைய சுகாதார நடவடிக்கைகளின் போதும் போலியான பெயர்கள் தகவல்கள்
வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இதுதொடர்பில் நாம் சட்டத்தை கடுமையாக செயல்படுத்துகின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு செயல்படுவோர்களுக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சமூக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அது மட்டுமின்றி வழக்கு தொடரக்கூடிய சந்தர்ப்பமும் உண்டு. இவ்வாறான வழக்கு
ஒன்றில் குற்றம் இழைத்தவராக காணப்படுவோர் 5 வருட கால சிறைத்தண்டனைக்கு உள்ளாகும் நிலை ஏற்படும் . இதனால் போலி ஆவணங்கள், போலித் தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு
பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்..
35 அடி பள்ளத்தில்கவிழ்ந்த ஜீப்
35 அடி பள்ளத்தில்கவிழ்ந்த ஜீப்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை நகரத்திற்கு அண்மித்த பகுதியில் ஜீப் வண்டி ஒன்று இன்று (16) இரவு 9 மணியளவில் 35 அடி பள்ளத்தில் பாய்ந்து
விபத்துக்குள்ளாகியதில் அதன் சாரதி காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஜீப் வண்டி அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து கொழும்பு பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது வட்டவளை
பகுதியில் வைத்து வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு பள்ளத்தில் பாய்ந்து இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் ஜீப் வண்டி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த ஜீப் வண்டியை செலுத்தியவர் அக்கர்ப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த வைத்தியர் ஒருவர் என தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்







