Author: நலன் விரும்பி
நத்தார் தினத்தில் தேவாலயத்தை தாக்கி மக்களை எரித்து ,கொன்று கடத்திய தீவிரவாதிகள்
நத்தார் தினத்தில் தேவாலயத்தை தாக்கி மக்களை எரித்து ,கொன்று கடத்திய தீவிரவாதிகள்
உலக கிறிஸ்தவர்கள் அவர் தம் பாலன் ஜேசு பிறந்த நாளை நத்தார் தினமாக
கொண்டாடி வருகின்றனர் ,அவ்வாறான இந்த நாளில்நையீரியாவில் முஸ்லீம் பொக்கோ காராம் என்ற தீவிரவாத
அமைப்பு தேவாலயத்திற்குள் வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த அப்பாவி
மக்களை தாக்கினர் ,அதில் சிக்கிய ஏழுபேரை உயிரோடு எரித்து கொண்றதுடன் ,ஏழுபேரை கடத்தி சென்றுள்ளனர்
இவ்வருவ கடத்தி செல்ல பட்டவர்களில் அந்த ஆராதனையில் கலந்து கொண்ட பாதரும் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது
இந்த அமைப்பின் வெறி தாக்குதல்கள் அங்கு தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
எதியோப்பியாவில் 222 பேர் படுகொலை – தொடரும் பதட்டம்
எதியோப்பியாவில் 222 பேர் படுகொலை – தொடரும் பதட்டம்
எதியோப்பியாவில் கடந்த தினம் வரையில் இடம்பெற்ற இன
மோதல்களின் பொழுது சுமார் 222 பேர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
Bekoji என்ற கிராமத்தில் அதிக மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,
.உள் நாட்டு போர் நீடித்து வரும் நிலையில் இந்த இன மோதல்களில் சிக்கி
அப்பாவி மக்கள் பலியாகியுள்ளமை உலகை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
ஆன்லைன் மூலம் 63 மில்லியன் மோசடி – அதிர்ச்சியில் போலீஸ்
ஆன்லைன் மூலம் 63 மில்லியன் மோசடி – அதிர்ச்சியில் போலீஸ்
பிரிட்டனில் கடத்த பன்னிரெண்டு மாதங்களில் இணையதளம் ஊடாக
எண்ணூறுக்கு மேற் பட்ட முக்கிய நபர்களது விபாரங்களை பயன் படுத்தி
சுமார் அறுபத்தி மூன்று மில்லியன் பவுண்டுகள் வரை மோசடி செய்ய பட்டுள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது
தொடர்ந்து பெருகி வரும் இந்த மோசடிகளை தடுக்க பல்வேறுபட்ட நடவடிக்கைகள்
மேற்கொள்ள பட்ட பொழுதும் இதனைதடுக்க முடியவில்லை என சுட்டி காட்ட பட்டுள்ளது
மேற்படி சம்பவம் பொலிசாருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
21 லட்சத்தை சுருட்டிய கும்பல் – நடந்தது எப்படி தெரியுமா ..?
21 லட்சத்தை சுருட்டிய கும்பல் – நடந்தது எப்படி தெரியுமா ..?
கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்காகத் தாங்கள் வந்திருக்கின்றோம் என, தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட அறுவர் அடங்கிய குழுவொன்று, வீட்டில் இருந்தவர்களுக்குப்
போதை மாத்திரைகளை வழங்கி, அவர்கள் அனைவரும் மயக்கம் அடைந்ததன் பின்னர், வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும்
பெறுமதியான பொருட்களைச் சுருட்டிக்கொண்டோடிய சம்பவமொன்று, குருநாகல், மாஹோ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
அறுவர் அடங்கிய அந்தக் குழுவில், நான்கு பெண்களும் ஆண்கள் இருவரும் அடங்கியிருந்துள்ளனர். அவர்கள், பொதுச் சுகாதார
பரிசோதகர்கள் அணியும் ஆடைகளை அணிந்து, வேடமிட்டுச் சென்று, இந்தக் கைவரிசையைக் காண்பித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அறுவரையும், குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த பிரபல்யமான நடனக் கலைஞரை, குருநாகல் நகருக்கு நவம்பர் 26ஆம் திகதி இரவு வேளையில் வரவழைத்து, மயக்க நிலை அடைவதற்கான
மாத்திரைகளை அவருக்குக் குடிக்கக் கொடுத்து விட்டு, அவரிடமிருந்த 21 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை, இந்தக் குழுவினரே
அபகரித்திருந்தனர் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள், தங்களுடைய அலைபேசிகளை, இவ்வாறான குற்றச்செயல்களை மேற்கொள்வதற்கு மட்டுமே பயன்படுத்தி
உள்ளனர் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. அந்தக் குழுவைச் சேர்ந்த நான்கு பெண்களில், இருவர் தாயும் மகளும் ஆவர்.
அந்தக் குழு, வெலிவேரிய பிரதேசத்தில் பெண்ணொருவரிடம் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள், மினுவன்கொடையில் வர்த்தகர்கள் இருவரிடம், 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான
நகைகள், அநுராதபுர பிரதேசத்தில் 60 வயது பெண்ணொருவரிடம் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளையும் கொள்ளையடித்துள்ளனர்.
கொள்ளையிட்ட தங்க நகைகளை, நீர்கொழும்பு, கொழும்பு –11, செட்டித்தெரு, குருநாகல், கேகாலை ஆகிய பிரதேசங்களிலுள்ள தங்க நகை அடகு பிடிக்கும் கடைகளில், அடகு வைத்துள்ளமையும்
விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது.
நடனக் கலைஞரின் கைப்பை, அவரது ஒரு ஜோடி செருப்பு, 3 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய், அலைபேசிகள் 21, வாடகைக்கு
அமர்த்தப்பட்ட கார், போதை மாத்திரைப் பக்கற்றுகள் ஆகியன இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன என, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
துரத்தி குத்திய குளவிகள் – பலர் காயம்
துரத்தி குத்திய குளவிகள் – பலர் காயம்
பசறை – வெல்கொல்ல பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான
அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெல்கொல்ல பகுதியிலிருந்த கெந்தகொல்லவுக்கு உரம்
ஏற்றுவதற்கு சென்றவர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
54 பேர் காவல்துறையால் திடீர் கைது
54 பேர் காவல்துறையால் திடீர் கைது
தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில்
54 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணியாமை, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமை
உள்ளிட்ட தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமையாலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி தொடக்கம்
இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்ட விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 1,794 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் பிளாஸ்டிக் பொலித்தின் உற்பத்திக்கு தடை – கோட்டா வேட்டை
இலங்கையில் பிளாஸ்டிக் பொலித்தின் உற்பத்திக்கு தடை – கோட்டா வேட்டை
ஒரு தடவை பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தின் உற்பத்திகளை தடை செய்வதற்கான வர்த்தமானி
அறிவித்தல் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இந்த அறிவித்தலின் நகல் மேலதிக
ஆலோசனைகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், காதை குடைய பயன்படுத்தும் குச்சிகள், மிதக்கக்கூடிய விளையாட்டுப் பொருட்கள், 20 மில்லிலீற்றரை விட குறைந்த
கொள்ளளவுடைய ஸஷே பக்கட்டுக்கள் முதலான ஆறு உற்பத்திகள் தடை செய்யப்படவுள்ளன.
இந்தத் தடையை ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அமுல்படுத்தக்கோரி தாம் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்ததாக அமைச்சர் கூறினார். இதற்காக குறித்த
பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு நிவாரண காலம் ஒன்றை வழங்க அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டது.
அதேவேளை, அரசியல்வாதிகளுக்கு மண், மணல், கருங்கல் அகழ்வு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதில்லை என சுற்றாடல்
அமைச்சு மேற்கொண்ட தீர்மானம் பற்றிய கேள்விக்கு, மக்கள் வாக்குகளால் ஆட்சிபீடம் ஏறும் அரசியல்வாதிகளுக்கு அத்தகைய
காரியங்களுக்காக விண்ணப்பிக்கக்கூடிய தார்மீக உரிமை கிடையாதென அமைச்சர் பதிலளித்தார்.
திருடர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருங்கள்- போலீஸ் எச்சரிக்கை
திருடர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருங்கள்- போலீஸ் எச்சரிக்கை
பண்டிகைக்காலம் ஆரம்பமானதைத்தொடரந்து குற்றவாளிகள் மற்றும்
திருடர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை காணக்கூடியதாக இருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இதனால் இந்த பண்டிகை காலத்தில் பயணங்களை மேற்கொள்ளும்போது
குற்றவாளிகள் மற்றும் திருடர்களிடமிருந்து விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் பணம் மற்றும் நகைக்கொள்ளை
போன்ற சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனவே பயணங்களில் ஈடுபடுகின்ற
சந்தர்ப்பங்களில் தமது பணம் மற்றும் நகைகள் சம்பந்தமாக மிக அவதானமாக
இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்
அமெரிக்காவில் 2,828 மற்றும் – பிரிட்டனில் 574 பேர் கொரனோவால் பலி
அமெரிக்காவில் 2,828 மற்றும் – பிரிட்டனில் 574 பேர் கொரனோவால் பலி
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில் சிக்கி 577
பேர் பலியாகியுள்ளனர் மேலும் 39,036 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்க பட்டுள்ளனர்
அதேபோல அமெரிக்காவில் 2,828 பேர் பலியாகியும் புதிதாக ஒரே நாளில்
191,708 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
எதிர்வரும் மாதத்திற்குள் மேலும் இதன் உயிர் பலி இழப்புக்கள் அதிகமாகும் என தெரிவிக்க படுகிறது
லண்டனுக்குள் நுழைய -பிரான்ஸ் எல்லையில் காத்துக்கிடக்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சரக்கு லொறிகள்
லண்டனுக்குள் நுழைய -பிரான்ஸ் எல்லையில் காத்துக்கிடக்கும் ஆயிரத்துக்கு மேற்பட்ட சரக்கு லொறிகள்
பிரான்ஸ் கலை மற்றும் டோவருக்கு இடையிலான ஆங்கில கால்வாயை
கடந்து பிரிட்டனுக்கும் நுழையும் பெரும் எல்லையாக இது விளங்கி வருகிறது
.நாள்தோறும் லட்சத்திற்கு மேற்பட்டதா மக்கள் இதன் மூலம் பயணித்து
வருகின்றனர் ,பரவி வரும் கொரனோ நோயினை அடுத்தும் ,பிரான்ஸ்
பிரிட்டனுக்கு இடையில் இடம்பெற்று வரும் வர்த்தக உடன்படிக்கையை
அடுத்து மேற்படி சாரதிகள் குறித்த எல்லையில் காத்து கிடக்கின்றனர்
பிரான்ஸ் அரசுடன் இணைந்து தீர்க்கமான முடிவினை எட்டிய பின்னர்
இந்த எல்லைகள் வளமை போன்று திறந்து விட படும் என தெரிவிக்க படுகிறது
நத்தார் தினத்தில் குடும்பங்களை இழந்து சாரதிகள் குளிரில் விறைத்தபடி எல்லையில் காத்து கிடக்கின்றனர்

பெண்கள் காப்பக முக்கியஸ்தர் சுட்டு கொலை – ஆயுததாரிகள் வெறியாட்டம்
பெண்கள் காப்பக முக்கியஸ்தர் சுட்டு கொலை – ஆயுததாரிகள் வெறியாட்டம்
ஆப் கானிஸ்தானில் பெண்களின் உரிமைக்கு போராடி வரும் பெண்கள்
பாதுகாப்பபு சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் மரம் ஆயுத தரிகளினால் படுகோரமாக சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார்
அடக்க படும் பெண்களின் விடுதலைக்கு நீதி வேண்டி துணிந்து குரல்
கொடுத்து வந்த Freshta Kohista என்ற முக்கிய பெண்மணியே இவ்வாறு சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டனில் ஆறு லட்சம் பேருக்கு கொரனோ தடுப்பூசி போட பட்டுள்ளது
பிரிட்டனில் ஆறு லட்சம் பேருக்கு கொரனோ தடுப்பூசி போட பட்டுள்ளது
பிரிட்டனில் பறவை வரும் கொரனோ வைரஸ் நோயினை தடுக்கும்
முகமாக தற்போது கண்டுபிடிக்க பட்ட மருந்துகள் மக்கள் பாவனைக்கு விட பட்டுள்ளது
கடந்த டிசம்பர் எட்டு முதல் இருபதாம் திகதி வரையில் மட்டும்
முதல் கட்டமாக சுமார் 616,933 பேருக்கு போட பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
மேலும் தொடர்ந்து மக்களுக்கு இவை போட பட்டு வருகிறது ,பரவி
வரும் நோயினை இந்த தடுப்பு மருந்து மூலம் தடுக்கலாம் என் அரசு கருதுவது குறிப்பிட தக்கது
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய பிரிட்டன் – அதிரடி அறிவிப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிய பிரிட்டன் – அதிரடி அறிவிப்பு
பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
பிரெக்சிட் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது – போரிஸ் ஜான்சன்
பிரதமர் போரிஸ் ஜான்சன்
பிரஸ்ஸல்ஸ்:
இங்கிலாந்தும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரெக்சிட் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. பல
மாதங்களாக கடுமையான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இங்கிலாந்தின் உடனடி விலகல் பொருளாதார பாதிப்பை குறைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
நான்கு ஆண்டு கால பிரெக்சிட் பேச்சுவார்த்தை, ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டதுபோல் உள்ளது.
ஜனவரி 1-ம் தேதி பிரெக்சிட் மாற்றக்காலம் முடிவடையும் நிலையில், ஆளுக்கொரு பக்கம் கோபமாக வெளியேறுவதை விட,
சுமூகமாக ஒரு முடிவெடுத்து ஒரு நல்ல ஒப்பந்தத்துடன் பிரிந்து செல்லலாம் என இங்கிலாந்தும் , ஐரோப்பிய ஒன்றியமும் முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்து சார்பில் லார்டு பாரஸ்ட் ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் மைக்கேல் பார்னியர் மற்றும் சட்ட நிபுணர்கள் இணைந்து
தவறேதும் இல்லாதபடி கவனமாக உருவாக்கப்பட்ட அந்த ஒப்பந்தம் குறித்து நேற்றிரவு தனது சக அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தார் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்.
பிரெக்சிட்டின் முக்கிய பிரச்சினைகளான வரி விதிப்பு இல்லாத ஒற்றைச் சந்தை அனுமதி, ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு அடிபணியத் தேவையின்மை என இங்கிலாந்து விரும்பியது
போலவே உருவாக்கப்பட்டுள்ளது. இப்போதைய கொரோனா குழப்பத்தின் மத்தியில் இன்னொரு குழப்பம் நேராமல் இது தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், “ஒப்பந்தம் முடிவடைந்தது” என பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் டுவீட் செய்துள்ளார், இங்கிலாந்து ஐரோப்பாவின்
நட்பு நாடாகவும் “முதலிட சந்தையாகவும்” இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறுகையில், “நாங்கள் இறுதியாக ஓர்
ஒப்பந்தத்தைக் கண்டுபிடித்துள்ளோம். இது ஒரு நீண்ட மற்றும் முடிவில்லா சாலையாக இருந்தது. ஆனால் அதன் முடிவில்
எங்களுக்கு ஒரு நல்ல ஒப்பந்தம் கிடைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்..
40 பேரூந்துகள் லைசன்ஸ் இரத்து – அமைச்சர் அதிரடி நடவடிக்கை
40 பேரூந்துகள் லைசன்ஸ் இரத்து – அமைச்சர் அதிரடி நடவடிக்கை
இளங்காலையில் ஆளும் கோத்தபாயவின் அரசில் பரவி வரும்
வைரஸ் நோயினை தடுக்கும் முகமாக பல கட்ட நடவடிக்கை
மேற்கொள்ள பட்டு வருகிறது
இதன் பிரகாரம் தனியார் பேருந்துகளில் சமூக இடைவெளி கடை
பிடிக்காது மக்களை ஏற்றி பயணித்த பேரூந்துகள் சுமார் நாற்பதின் போக்குவரத்து
உரிமங்கள் இரத்து செய்துள்ளதாக போக்குவற்துறை அமைச்சர் தடலடியாக அறிவித்துள்ளார்
இலங்கையில் இன்றும் கொரனோவால் ஒருவர் பலி
இலங்கையில் இன்றும் கொரனோவால் ஒருவர் பலி
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயினால் ஒருவர் பலியாகியுள்ளதாக சுகாதாரா அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் பல பகுதிகள் மக்கள் நடமாட தடை விதிக்க பட்டு
இராணுவம் காவல்துறையினர் சுற்று காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்
எமது நாட்டில் இந்த நோயின் தாக்கம் அறவே இல்லை என தேர்தலின்
பொழுது தெரிவித்த கோட்டா அரசு இன்று பல்லாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளதும்
சொற்ப மக்களே பலியாகி வருகின்றனர் என தெரிவித்து வருவது நகைப்பிற்கு இடமாக மாறியுள்ளது
கொட்டி தீர்த்த மழை – நிரம்பி வழியும் குளங்கள்
கொட்டி தீர்த்த மழை – நிரம்பி வழியும் குளங்கள்
இலங்கையில் பருவகால மாற்றம் நிகழ்ந்து வருவதால் மழை
கொட்டி தீர்த்துள்ளது ,இதனால் முக்கிய குளங்கள் உள்ளிட்டவை நிரம்பி வழிகின்றன ,
வான் கதவுகள் திறக்க பட்ட நிலையில் கீழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன
இதனால் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன ,கடந்த நாளில்
மட்டும் நூறு மீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
பாதிக்க பட்ட மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் என தெரிவிக்க படுகிறது
கொரனோ கொலைவெறி -அமெரிக்காவில் 3,098 பேர் பலி -பிரிட்டனில் 744 பேர் பலி
கொரனோ கொலைவெறி -அமெரிக்காவில் 3,098 பேர் பலி -பிரிட்டனில் 744 பேர் பலி
இரண்டாம் அலையாக மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு
மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 3,098 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 203,467 பேர் புதிதாக ஒரே நாளில்
பாதிக்க பட்டுள்ளனர் ,இதைவிட 28,693 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
இதே போல பிரிட்டனில் 744 பேர் பலியாகியும் 39,237 பேர் பாதிக்க பட்டுள்ளனர் 1,529 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
இந்த நோயின் அதிகரிப்பை அடுத்து எதிர்வரும் நத்தார் தினத்திற்கு
பின்னர் முழு அடித்து பூட்டும் நிகழ்வுக்கு பிரிட்டன் செல்ல கூடும் என அஞ்ச படுகிறது
இதன் காரணத்தால் பலசரக்கு அங்காடிகளில் மக்கள் பெரும்
தொகையில் சென்று பொருட்களை அள்ளி செல்வதை அவதானிக்க முடிகிறது
தீயில் எரிந்த அகதி முகாம் – கண்ணீரில் தவிக்கும் அகதிகள்
தீயில் எரிந்த அகதி முகாம் – கண்ணீரில் தவிக்கும் அகதிகள்
பொஸ்னியாவில் உள்ள Bosnia-Herzegovina என்ற அகதி முகாமில் திடீரென
தீ பற்றி கொண்டது ,இதில் அந்த அகதிமுகம முற்றாக தீயில் எரிந்து கருகியது ,
இதன் பொழுது அதற்குள் தங்கி வசித்த அகதி மக்களது உடைமைகள் தீயில் எரிந்து நாசமாகின
இதனால் அவர்கள் பேருந்தும் சோகத்தில் உறைந்துள்ளனர்
இந்த தீ விபத்து குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெற்ற
வண்ணம் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

கிராமத்தில் வசித்த 100 மக்களை கொன்று குவித்த தீவிரவாதிகள்
கிராமத்தில் வசித்த 100 மக்களை கொன்று குவித்த தீவிரவாதிகள்
மேற்கு எதியோப்பியாவில் இடம் பெற்று வரும் இன விடுதலை குழுக்கள்
எதிரி மக்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதலில் ஒரே கிராமத்தை சேர்ந்த நூறு மக்கள் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து அதிகரித்து வரும் இவர்களின் தாக்குதல்களை கட்டு பாட்டுக்குள்
கொண்டு வருவதற்கு பேச்சுக்கள் நடத்த படும் என ஆளும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்
லண்டனில் ஹிந்தி தொலைக்காட்சிக்கு £20,000 தண்டம் – நடந்தது என்ன தெரியுமா ..?
லண்டனில் ஹிந்தி தொலைக்காட்சிக்கு £20,000 தண்டம் – நடந்தது என்ன தெரியுமா ..?
பிரிட்டனில் இருந்து இயங்கி வரும் பிரபல இந்தியாவின் ஹிந்தி தொலைக்காட்சி ஒன்று பாகிஸ்தான் நாடாது மக்களை மிக
கோரமாக தாக்கி வன்மத்தை தூவிய நிலையில் அந்த தொலைக்காட்ச்சிக்கு
எதிராகா நடத்த ஒப்பட்ட வழக்கில் அது இருபதாயிரம் பவுண்டுகள் தண்டம் செலுத்தியுள்ளது
மேலும் அதன் அலைவரிசை உரிமம் மேலும் இது போன்ற செயலில் ஈடுபட்டால்,
இரத்து செய்ய படும் என்ற கடுமையான உத்தரவும் பிறப்பிக்க பட்டுள்ளது ,
பாகிஸ்தான் அரச சார்பில் மேற்கொள்ள பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது







