திருடர்கள் கைவரிசை – பீதியில் மக்கள்

Spread the love

திருடர்கள் கைவரிசை – பீதியில் மக்கள்

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், வீதியில் பயணிப்போரின் தங்கச் சங்கிலிகளைப் பறித்துச் செல்லல் மற்றும்

மோட்டார் சைக்கிள் திருட்டுகள் போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாளொன்றுக்கு நான்கு சம்பவங்கள் என்ற வகையில், நாடளாவிய ரீதியில் இந்தக் குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்துள்ள பொலிஸார், மோட்டார் சைக்கிள் மற்றும்

சைக்கிள்களில் பயணிப்போரே இவ்வாறான கைவரிசையை காண்பிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக, இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் பெண்களை இலக்கு வைத்தே நடத்தப்படுவதால், பெண்கள் அனைவரும்

விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென்று பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் ஏற்கெனவே செயற்பாட்டில் இருந்த இவ்வாறான 36 வன்முறைக் கும்பல்கள், சிலவற்றின் செயற்பாடுகள் இல்லாமல் போயுள்ளதாகவும், தற்போது அவற்றில் 24 கும்பல்களே

தீவிரமாகச் செயற்பட்டு வருவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு, பொலிஸாரால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள வன்முறைக் கும்பல்களில் சில உறுப்பினர்கள், வெளிநாடுகளில் இருந்து செயற்பட்டு வருவதாகவும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொண்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, இந்தக்

கும்பல்களைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, பொலிஸாருக்கு, தான் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Author: நலன் விரும்பி

Leave a Reply