Posted in சினிமா

இந்தியா டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த சூர்யா

இந்தியா டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த சூர்யா

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஹாஸ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள்.

இந்தியா டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த சூர்யா… காரணம் தெரியுமா?
சூர்யா


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் தற்போது சூர்யா 40 திரைப்படம் உருவாகி வருகிறது. பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சூர்யாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவருடைய படங்களின் அறிவிப்புகள், பாடல்கள், படங்கள் வெளியாகும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடுவார்கள். சூர்யா தனது பிறந்தநாளை ஜூன் 23 ஆம் தேதி கொண்டாட இருக்கிறார்.

டிரெண்டிங்

இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் காமன் டிபி – யை இன்று வெளியிட்டார்கள். இந்த காமன் டிபி பலரால் பகிரப்பட்டு சமூக வலைத்தளத்தில் வைரலானது.

மேலும் #SuriyaBdayCDPCarnival என்ற ஹாஸ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

    Posted in Uncategorized

    முக கவசம் அணியாவிடின் – ஆறுமாதம் சிறை

    முக கவசம் அணியாவிடின் – ஆறுமாதம் சிறை

    இலங்கையில் முகக் கவசம் அணியாது பயணித்தால் அவர்களுக்கு அரசு ஆறு மாதம் சிறை

    தண்டனை வழங்க படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

    நாள் தோறும் பலநூறு பேர் கைது செய்ய பட்டு வரும் நிலையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      சஜித் ரணிலுக்கு இடையில் சந்திப்பு

      சஜித் ரணிலுக்கு இடையில் சந்திப்பு

      உடைந்து இரண்டாக ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் அணியுடன் பேசிட ரணில் விக்கிரமசிங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்

      ஒன்றாக இணைந்து பயணித்து ஆட்சி அமைக்கும் நோக்குடன் இவரது செயல்பாடுகள் அமைய

      பெறுகின்றன ,இந்த சந்திப்பு இடம்பெறுமா என்பதும் ,அதில் இணைக்க பாடு ஏற்பட்டு ஒன்றாவார்களா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும்

      Posted in இலங்கை செய்திகள்

      வட்டக்கச்சி கட்சன் வீதி தனிமைப்படுத்தல்

      வட்டக்கச்சி கட்சன் வீதி தனிமைப்படுத்தல்

      கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

      வட்டக்கச்சி கட்சன் வீதியில் 4 நாட்களில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன்,

      நேற்றைய தினம் மேலும் 10 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தப்பட்டள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

      இந்நிலையில் குறித்த பகுதி நேற்று (16) இரவு முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

      தனிமைப்படுத்தல் 14 நாட்களுக்கு இருக்கும் எனவும், மக்கள் நடமாடுவதை தவிர்க்குமாறும்,

      வர்த்தக செயற்பாடுகளை நிறுத்துமாறும் சுகாதார தரப்பினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        கத்தியால் வெட்டி ஒருவர் படுகொலை – எகிறும் வன்முறைகள்

        கத்தியால் வெட்டி ஒருவர் படுகொலை – எகிறும் வன்முறைகள்

        வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் இருவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

        நேற்று (16) இரவு 10.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரெிவிக்கப்படுகின்றது.

        50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

        காயங்களுக்கு உள்ளான நபர் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

        சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெலிகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

          Posted in Uncategorized

          230 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

          230 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

          இலங்கையில் 230 காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க பட்டுள்ளது


          சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக மாற்றம் பெற்றதன் பின்னர் இலங்கையின்

          முப்படைகளில் அதிரடி மாற்றங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized இலங்கை செய்திகள்

            வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்: அமைச்சர் நாமல்

            வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்: அமைச்சர் நாமல்

            வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட

            நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கௌரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

            வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை விரைவுபடுத்துவது தொடர்பில் கௌரவ

            அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி இவ்விசேட திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

            அதற்கமைய வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்

            எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையில் கொரோனா- 41பேர் உயிரிழப்பு

              இலங்கையில் கொரோனா- 41பேர் உயிரிழப்பு

              இலங்கையில் நேற்றைய தினம் (15) மேலும் 41 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

              சுகரா சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல்

              திணைக்களம் இன்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                Posted in இலங்கை செய்திகள்

                மாகாணங்களுக்கு இடையிலான பஸ், ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

                மாகாணங்களுக்கு இடையிலான பஸ், ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

                மாகாணங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பஸ் மற்றும் ரயில் சேவைகளை ஆகஸ்ட் மாதம்

                முதலாம் திகதி வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்தார்.

                இன்று(16) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,


                இதனடிப்படையில், நாளை (17) முதல் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படும்.

                இருப்பினும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வரையறுக்கப்பட்ட வகையில் பஸ் மற்றும்

                ரயில் களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கi மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம மேலும் தெரிவித்தார்

                  Posted in சினிமா

                  நான்கு கதாநாயகிகளுடன் நடிக்கும் நட்டி நட்ராஜ்

                  நான்கு கதாநாயகிகளுடன் நடிக்கும் நட்டி நட்ராஜ்

                  வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நட்டி நட்ராஜ் அடுத்ததாக சைக்கோ திரில்லர் படத்தில் நடிக்கிறார்.

                  நான்கு கதாநாயகிகளுடன் நடிக்கும் நட்டி நட்ராஜ்
                  நட்டி நட்ராஜ்


                  ட்ரீம் ஹவுஸ் சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிக்கும் புதிய படத்தை ஹாரூன் இயக்குகிறார். சைக்கோ திரில்லர் கதையம்சத்துடன் உருவாகும் இப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடிக்கிறார்.

                  இப்படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள். நாயகிகள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், முக்கிய வேடங்களில் ‘பிளாக் ஷீப்’ நந்தினி, சாஷ்வி பாலா மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.

                  நட்டி நட்ராஜ்
                  படக்குழுவினருடன் நட்டி நட்ராஜ்

                  கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

                    Posted in சினிமா

                    நடிகைகள் ஒன்று கூடிய கருங்காவியம்

                    நடிகைகள் ஒன்று கூடிய கருங்காவியம்

                    முன்னணி நடிகைகளான ஐந்து பேர், கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

                    முன்னணி நடிகைகள் ஒன்று கூடிய கருங்காவியம்
                    கருங்காப்பியம் படத்தில் நடிக்கும் நடிகைகள்


                    ‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’, ‘காட்டேரி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கருங்காப்பியம்’. இந்த படத்தில் நடிகைகள்

                    காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான்

                    விஜய், ஷா ரா, ‘லொள்ளு சபா’ மனோகர், விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

                    இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘கருங்காப்பியம்’ படத்தை வெற்றிவேல் டாக்கீஸ்,

                    பேவ் (PAVE) என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ.பி.இன்டர்நேஷனல் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

                    இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘கருங்காப்பியம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

                      Posted in சினிமா

                      ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் – நடிகர் விஜய் மேல்முறையீடு

                      ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் – நடிகர் விஜய் மேல்முறையீடு

                      தான் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்களிக்க கோரிய வழக்கில், நடிகர் விஜய் மேல் முறையீடு செய்துள்ளார்.

                      ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரம் – நடிகர் விஜய் மேல்முறையீடு
                      விஜய்


                      நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த சொகுசு காருக்கு வணிக வரிதுறை நுழைவு வரி விதித்தது. இதை

                      எதிர்த்தும், வரி விதிக்கத் தடை கோரியும் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

                      இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர்கள் நிஜ வாழ்விலும் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி செலுத்துவது நன்கொடை போன்றது அல்ல, நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய

                      கட்டாய பங்களிப்பு. சமூக நீதிக்கு பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு

                      செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த அவர், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.

                      விஜய்

                      இந்நிலையில், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தை எதிர்த்து நடிகர் விஜய் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு, திங்கட்கிழமை விசாரணைக்கு வருகிறது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        புதுக்குடியிருப்பு பாடசாலையில் 24 மாணவர்களை துரத்தி குற்றிய குளவி

                        புதுக்குடியிருப்பு பாடசாலையில் 24 மாணவர்களை துரத்தி குற்றிய குளவி

                        முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, பாரதி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்க சென்ற மாணவர்கள் 24 பேரை குளவி துரத்தி குற்றியுள்ளது

                        இதில் பாதிக்க பட்ட மாணவர்களை மூங்கிலாறு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                        சிலர் மேலதிக சிகிச்சைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற பட்டுள்ளனர் ,மேற்படி சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

                        Posted in இலங்கை செய்திகள்

                        பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல்

                        பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல்

                        மருதானை பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                        தீயணைக்கும் பணிகளில் 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் கூறியுள்ளது.

                        தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

                        தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        கொரனோ தாக்குதல் 10 குழந்தைகள் மரணம்

                        கொரனோ தாக்குதல் 10 குழந்தைகள் மரணம்

                        இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி


                        பத்து சிறுவர்கள் பலியாகியுள்ளனர்


                        மேலும் 490 சிறுவர்கள் பாதிக்க பட்டுள்ளதாக மருத்துவனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்

                        Posted in Uncategorized

                        பொலித்தீன் ,லஞ்சஷீட் விற்றால் – ஒரு லட்சம் அபராதம்

                        பொலித்தீன் ,லஞ்சஷீட் விற்றால் – ஒரு லட்சம் அபராதம்

                        இலங்கையில் புதிய சட்ட நடைமுறையி கீழ் பொலித்தீன் மற்றும் லன்ச் சீற்று விற்பனை செய்தால்

                        அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபா தண்டம் அறவிட படும் என் ஏச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

                        சுட்டு புரா சூழலை பாதுகாக்கும் நோக்குடன் இந்த அதிரடி அறிவிப்பு வெளியிட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          உளவுத்துறை போல மக்களை ஏமாற்றிய நால்வர் கைது

                          உளவுத்துறை போல மக்களை ஏமாற்றிய நால்வர் கைது

                          இலங்கை குற்ற புலனாய்வு துறையினர் என தம்மை கூறி மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

                          பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது

                          ,கைதானவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            யாழ்ப்பாணம் மாவட்டத்தில் -சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

                            யாழ்ப்பாணம் மாவட்டத்தில் -சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

                            யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றும் புத்தளம் மாவட்டத்தில்

                            பிரதேசமொன்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத்

                            தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிராதானியும் இராணுவ தளபதியுமாக

                            ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

                              Posted in Uncategorized

                              முல்லைத்தீவு மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

                              முல்லைத்தீவு மருத்துவமனையில் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை

                              முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை வரலாற்றில் முதல் முறையாக கடந்த 12 ஆம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                              மருத்துவமனையில் பல வளப் பற்றாக்குறைகளுக்கு மத்தியிலும், மருத்துவர்களின் அர்ப்பணிப்புக்கு மத்தியிலும் முதல் முறையாக வெற்றிக்கரமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                              மயக்க மருந்து நிபுணர் வைத்தியர் சாந்தருவன் பண்டார ஹெரத் மற்றும் மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் உட்பட யாழ் போதனா வைத்தியசாலை

                              எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுந்தரலிங்கம் சுதர்ஷன் தலைமையிலான குழு உறுப்பினர்களும் இதனை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

                              மூட்டு வாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                              மாவட்ட பொது மருத்துவமனையின் சேவைகளை விரிவுபடுத்துவதில் மும்முரமாக இருக்கும் வைத்திய அத்தியட்சகர் மற்றும் வைத்திய குழுவினர் இந்த சாதனைக்கு மத்திய மற்றும் மாகாண

                              சுகாதார அமைச்சகங்களின் ஆதரவுக்கும், பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரின் ஆதரவுக்கும் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

                              இந்த அறுவை சிகிச்சை வள குறைபாடுகளுடன் எலும்பியல் அறுவை சிகிச்சைக்கு தனி

                              சத்திரசிகிச்சை கூடம் இல்லாத பொதுவான கிருமிநீக்கம் செய்யப்பட்ட பொது சத்திரசிகிச்சை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                                Posted in Uncategorized

                                கொவிட் தொற்று -குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி

                                கொவிட் தொற்று -குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி

                                கொவிட் தொற்று காரணமாக இலங்கையில் குழந்தை பிறப்பு விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

                                பயணக் கட்டுப்பாடு காரணமாக திருமண வைபவங்கள் நடக்காத காரணத்தினால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

                                முன்னர் வருடம் ஒன்றிற்கு 350,000 குழந்தை பிறப்புக்கள் நாட்டில் பதிவாவதாக அவர் தெரிவித்துள்ளார்.

                                கொரோனா தொற்று காரணமாக 3,500 பேர் உயிரிழந்துள்ள போதிலும் 350,000 குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.