Posted in Uncategorized உலக செய்திகள்

அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்

சிரியாவில் உள்ள Al-Omar அமெரிக்கா இராணுவ தளத்தின் ஆயில் நிலைகள் மீது மதியம் அளவில் ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

இந்த தாக்குதலில் அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

எனினும் அமெரிக்கா இராணுவ தரப்பில் இருந்து எதுவித தகவலும் வெளியாகவில்லை

    Posted in Uncategorized

    இராணுவ பேரூந்து மீது தாக்குதல் -13 பேர் பலி – 18 பேர் காயம்

    இராணுவ பேரூந்து மீது தாக்குதல் -13 பேர் பலி – 18 பேர் காயம்

    சிரியாவில் இராணுவத்தினர் பயணித்த பேரூந்து ஒன்றினை இலக்கு வைத்து தீவிரவாத குழுவினர் நடத்திய தாக்குதலில் அந்த பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது

    இவ்வேளை அதில் பயணித்த 13 பேர் சம்பவ இடத்தில பலியாகினர் ,மேலும் 18 பேர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

    சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      78 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தடை

      78 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தடை

      சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்து விசாரணைப் பிரிவு மூலம் 78 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

      சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

      சட்டவிரோதமாக பணம் சம்பாதித்த 1,100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்

        Posted in இலங்கை செய்திகள்

        விபத்தில் தந்தை , மகன் பலி – பேரூந்தினை அடித்து நொருக்கிய மக்கள்

        விபத்தில் தந்தை , மகன் பலி – பேரூந்தினை அடித்து நொருக்கிய மக்கள்

        வவுனியா – குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலியாகினர்.

        இதனையடுத்து கோபமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டமையால் குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.

        வவுனியா – குருக்கள்புதுக்குளம் பகுதியில் மன்னார் பறயநாலங்குளம் பிரதான வீதியில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றது.

        மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் பேருந்து குருக்கள் புதுக்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, உள் வீதியில் இருந்து பிரதான வீதிக்கு வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

        விபத்தில் மோட்டார் சைக்கிளைத் செலுத்திச்சென்ற தந்தை சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பலியாகியதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்தார்.

        விபத்தினையடைந்து ஆத்திரமடைந்த கிராமமக்கள் பேருந்தினை தாக்கியமையால் குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

        சம்பவ இடத்திற்கு வருகைதந்த பூவரசங்குளம் பொலிசார் நிலமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர். எனினும் அது பலனளிக்காத நிலையில் விசேட அதிரடிப்படையினர் களத்திற்கு அழைக்கப்பட்டு நிலமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

        சம்பவத்தில் குருக்கள்புதுக்குளம் பகுதியை சேர்ந்த பு.சிறிதரன் வயது 46மற்றும் அவரது 14 வயது மகனான டினோகாந் ஆகிய இருவரே மரணமடைந்துள்ளனர்.

        விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே- ஐநா கேள்வி

          இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே- ஐநா கேள்வி

          முக்கிய அரசு நிறுவனங்களில் இன-மத தேசியவாதம் மேலும் வெளிப்படையாக தெரிகிறது; இதனால், சிறுபான்மை இனத்தவர் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படுவதும்,

          அஞ்சுவதும் அதிகரித்து, நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது என்று ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார் ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையர் மிச்சல் பேச்சலெட்.

          ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை பேரவையின் 49 வது கூட்டத்தின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை (2022 மார்ச் 4) நடைபெற்ற ‘இலங்கை குறித்த பங்கேற்பு உரையாடல்’ என்ற நிகழ்வில் பேசிய அவர் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில்

          பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அரசாங்கம் விரைவாக அங்கீகரிக்கவேண்டும். காணாமல் ஆக்கப்பட்டோர் எங்கே என்பதை விரைவாக முடிவு செய்து,

          பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும், குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனையும் விரைவாக வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

          சர்வதேச குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்பேற்பதற்கான நீதிமுறையை உருவாக்காத இலங்கை அரசு அதோடு, போர்க்குற்றங்கள் தொடர்புடைய ராணுவ அதிகாரிகளை அரசாங்க உயர் பொறுப்புகளிலும் அமர்த்தியுள்ளதால்,

          சர்வதேச அளவில் பொறுப்பேற்பை மேம்படுத்த மாற்று உத்திகளை மனித உரிமை கவுன்சில் கையாளவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

          அவரது உரை

          இலங்கை தொடர்பாக பெப்ரவரி 25ம் திகதி அனுப்பிய எழுத்துப்பூர்வமான அறிக்கையை பேரவை உறுப்பினர்கள் பெற்றிருப்பார்கள். 2021 பெப்ரவரியில் வெளியிடப்பட்ட முந்தைய அறிக்கைக்குப் பிறகான செயல்பாடுகளைப் பற்றியே இந்த

          அறிக்கை கவனம் செலுத்துகிறது. இந்த விஷயத்தை மனித உரிமை பேரவை தொடர்ந்து கண்காணிப்பதற்கான இன்றியமையாத தேவையை இந்த அறிக்கை காட்டுகிறது.

          ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையர் அலுவலகத்துடன் இலங்கை அரசாங்கம் இணைந்து பணியாற்றுவது சமீப காலத்தில் அதிகரித்திருப்பதற்கும், சீர்திருத்தங்களை தொடங்குவதற்குமான அறிகுறிகள் தெரிகின்றன.

          பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் சில பிரிவுகளை திருத்துவதற்கும், இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்குமான முன்மொழிவுகள் வரவேற்கத் தகுந்த ஆரம்பகட்ட நடவடிக்கைகள்.

          பயங்கரவாத தடுப்புச் சட்டம் தொடர்பான அடிப்படையான பிரச்னைகளை பரிசீலனை செய்ய மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அரசாங்கத்தை ஊக்குவிக்கிறேன்.

          தவறிழைத்தவர்கள் தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவர, கடந்த கால அத்துமீறல்கள் மீண்டும் நிகழ்வதைத் தடுக்க ஆழமான சட்ட, நிறுவன, பாதுகாப்புத் துறை சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும்.

          ஆனால், பொறுப்பேற்கும் விஷயத்தில் கடந்த ஆண்டும் மிகப்பரிய தடைகளும், பின்னடைவுகளும் ஏற்பட்டுள்ளன என்பது வருந்தத்தக்கது. பாதிக்கப்பட்டவர்களுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்ந்து உண்மையும் நீதியும் மறுக்கப்படுகிறது.

          விமர்சனங்கள் மீதான அரசாங்கத்தின் பதில் நடவடிக்கை ஜனநாயக, குடிமை செயல்பாடுகளுக்கான வெளியை சுருக்குவதாக உள்ளது. குறிப்பாக மனித உரிமை நடவடிக்கைகளுக்கான வெளி சுருங்குகிறது

          குறிப்பிட்ட சில போக்குகள் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பது 2021 பிப்ரவரி அறிக்கையில் அடையாளம் காணப்பட்டது. இந்த போக்குகள் தொடர்ந்து அதிகரிக்கின்றன.

          அரசாங்கத்தின் குடிமை செயல்பாடுகள் ராணுவ மயமாவது தொடர்ந்து ஆழமடைந்துவருகிறது என்று தெரிவித்துள்ளார் மிச்சல் பேச்சலெட்.

          குடிமை பதவிகள் ராணுவ அதிகாரிகள் கையில் குவிவது குறித்து நான் ஆழமாக கவலை கொண்டிருக்கிறேன். அந்தப் பதவிகள் தரப்படுகிற சிலர் சில மோசமான மனித உரிமை மீறல்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள்.

          2020 இறுதியில் இருந்து புத்தமத மரபு பாதுகாப்பு, வனப்பாதுகாப்பு தொடர்பில் நிலம் தொடர்பான தகராறுகள் அதிகரித்துள்ளன. இதனால், சிறுபான்மை சமூகங்களின் குறைகள் தீவிரமைடந்துள்ளன. புதிய பதற்றங்களை இது தோற்றுவிக்கிறது.

          அரசமைப்புச் சட்டத்தின் (யாப்பு) 20வது திருத்தத்துக்குப் பிறகு இலங்கை மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட நாட்டின் சில ஆணையங்கள், நிறுவனங்களின் சுதந்திரத் தன்மை செல்லரித்துப் போவது கண்டு வருத்தம் கொள்கிறேன்.

          வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட பல பத்தாயிரம் பேர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் மீது பாதிக்கப்பட்டோருக்கு போதிய நம்பிக்கை இல்லை.

          வரவிருக்கிற அரசமைப்புச் சட்ட மறு வரைவு நடவடிக்கை முக்கிய நிறுவனங்களின் சுதந்திரம் காக்கப்படுமா என்பதற்கான முக்கியச் சோதனையாக இருக்கும். இந்த மறுவரைவு நடவடிக்கை, அதிகாரப் பகிர்வுக்கும், மனித உரிமைக்கும் முக்கியத்துவம் தரவேண்டும்.

          உள்நாட்டிலேயே வடிவமைத்து செயல்படுத்தப்படும், எல்லோரையும் உள்ளடக்கும் நல்லிணக்க மற்றும் பொறுப்பு ஏற்பு செயல்முறை தொடர்பாக இந்த கவுன்சிலில் வாக்குறுதி அளித்து இரண்டாண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னும் பொறுப்பேற்பதற்கும், நல்லிணக்கத்துக்கும் இட்டுச் செல்வதற்கான நீதிமுறை ஒன்றுக்கான நம்பத்தகுந்த செயல்திட்டம் எதையும் அரசாங்கம் வழங்கவில்லை.

          காணாமல் ஆக்கப்பட்டோர் விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பங்கள் ஆகியோரின் தொடர் வேதனைகளையும், மன உளைச்சலையும் கண்டு கவலை கொண்டுள்ளேன்.

          அவர்களது உரிமைகளை அரசு அங்கீகரிக்கவேண்டும். அவர்களுக்கு என்ன நேர்ந்தது அல்லது எங்கே இருக்கிறார்கள் என்பதை அவசரமாக உறுதி செய்யவேண்டும். தவறிழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

          ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களும், மத தலைவர்களும் தொடர்ந்து நீதிக்காக, நிவாரணத்துக்காக, எப்படி அந்த தாக்குதல் நடந்தது என்ற உண்மையைக் கேட்டு குரல் கொடுக்கிறார்கள். குறிப்பாக பாதுகாப்பு அமைப்பின் பங்கு அதில் என்ன என்பதை அவர்கள் கேட்கிறார்கள்.

          குடிமை அமைப்புகள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் கண்காணிப்புக்கும், தொந்தரவுக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாவதாக தொடர்ந்து வரும் செய்திகளால் ஆழமான கவலை கொள்கிறேன். தொடரும் காவல் மரணங்கள், போலீஸ் என்கவுன்டர்கள் திரும்பத் திரும்ப நிகழ்வது எச்சரிப்பதாக உள்ளது. போலீஸ், ராணுவம் மோசமாக நடத்துவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வருகின்றன. பாதுகாப்புத் துறை சீர்திருத்தம் வேண்டும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

          இலங்கையில் நடந்த சர்வதேசக் குற்றங்கள், மோசமான மனித உரிமை மீறல்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில், நீதிமுறையை கடைபிடிப்பதில் அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் தவறிவிட்டன என்பதை கவுன்சிலில் சமர்ப்பித்த முந்தைய அறிக்கைகள் விவரிக்கின்றன.

          தற்போதைய அரசாங்கம், பொறுப்பேற்கும் நிலையை உருவாக்க விரும்பாதது மட்டுமல்ல போர்க்குற்றங்கள் தொடர்புடைய ராணுவ அதிகாரிகளை அரசாங்கத்தின் உயர் பதவிகளிலும் அமர்த்தியுள்ளது. இது தண்டனை குறித்து கவலை தேவையில்லை என்ற நிலையை இது மேலும் மோசமாக்குகிறது.

          இந்த காரணங்களாலும், பாதிக்கப்பட்டவர்கள் குறையை ஏதோ ஒரு வகையில் தீர்ப்பதற்கும், சர்வதேச அளவில் பொறுப்பேற்கும் நிலையை மேம்படுத்துவதற்காக மாற்று உத்திகளை கையாள வேண்டும் என்று கவுன்சிலை கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

          46/1வது தீர்மானத்தின் பொறுப்பேற்பு குறித்த அம்சங்களை செயல்படுத்துவது தொடர்பாக தயாரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

          குற்றங்களுக்கு நீதி வழங்கல் என்ற பார்வையில், மேற்கொண்டு தகவல் திரட்டுவதில் உள்ள ஓட்டைகளை, முன்னுரிமைகளை கண்டறிவது என்ற நோக்கத்தில், பாதிக்கப்பட்டவர்களை மையப்படுத்திய அணுகுமுறையில் ஆதாரக் களஞ்சியத்தில் உள்ள தகவல்களை எங்கள் குழு ஆராயும்.

          இதற்கு என் அலுவலகம் குறிப்பிடத்தக்க அளவு வேலை செய்யவேண்டும். இதற்கு நேரம், போதிய மனித, நிதி வளம், அரசுகளின் ஒத்துழைப்பு ஆகியவை தேவை. இலங்கையில் சர்வதேசக் குற்றங்களுக்கு உதவியாக இருந்த அனைத்துத் தரப்பையும் விசாரணைக்கு உட்படுத்தி, நீதி முறையில், உரிய எல்லையில், சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஒத்துழைப்பு இதில் அடங்கும்.

          ஏற்றுக்கொள்ளப்பட்ட, பிராந்தியம் கடந்த, உலகளாவிய நீதியெல்லை என்ற கோட்பாட்டின் கீழ் இந்த நடவடிக்கை அமைய வேண்டும்.

          மோசமான சர்வதேசக் குற்றங்கள் தொடர்பில் பொறுப்பேற்பை உறுதி செய்ய தீர்மான எண் 46/1-ன் கீழ் வழங்கப்பட்ட உரிமை ஒரு வாய்ப்பை அளிக்கிறது. இது இன்றியமையாத பணி. தண்டனை பற்றிய கவலை இல்லாத நிலை நீடிக்கும் வரையில் இலங்கை உண்மையான நல்லிணக்கத்தையோ, நீடித்த அமைதியையோ அடையாது.

          Posted in இலங்கை செய்திகள்

          மனித உரிமைகள் பேரவை 49 ஆவது அமர்வு- இலங்கை அறிக்கை

          மனித உரிமைகள் பேரவை 49 ஆவது அமர்வு- இலங்கை அறிக்கை

          ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கான இலங்கையின் நிரந்தர பணியகம் மனித உரிமைகள் கழகம் 49 ஆவது வழமையான

          அமர்வு இலங்கை குறித்த மனித உரிமை உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கை மீதான ஊடாடும் பேச்சுவார்த்தைகள் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ. பேரா. ஜி.எல். பீரிஸ் அவர்களின் அறிக்கை

          (ஜெனீவா, 04 மார்ச் 2022)

          தலைவர் அவர்களே,

          இலங்கை மீதான 46/1 தீர்மானமானது இக்கழகத்தின் பிரிக்கப்பட்ட வாக்குகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தீர்மானத்தின் ஆழமான குறைபாடுள்ள நடைமுறை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத உள்ளடக்கம், குறிப்பாக ஆதாரங்கள் சேகரிக்கும்

          பொறிமுறை என்று அழைக்கப்படும் OP பந்தி 6 ஆகியவற்றுடன், இத்தீர்மானத்தின் அடிப்படையுடன் உடன்பாடின்றி, இலங்கையும் பிற நாடுகளும் எதிர்த்தன. இத்தீர்மானமானது, இக்கழகத்தின் நிறுவன கொள்கைகளான; பாரபட்சமற்ற தன்மை,

          தற்சார்பற்ற குறிக்கோள் மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மை ஆகியவற்றிற்கு நேர் எதிராகவுள்ளது. இது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானம் 60/251 மூலம் உறுப்பு நாடுகள் வழங்கிய ஆணையை மீறிச் சென்றது. நான் இவ்விடயம் தொடர்பான

          இலங்கையின் கருத்துக்களை மார்ச் 01 ஆம் திகதி இச்சபையில் தெரிவித்துள்ளேன். உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பான எமது கருத்துக்களையும் உரிய நேரத்தில் சமர்ப்பித்தோம். இதை செயலகம், உயர் ஸ்தானிகரின் எழுத்துப்பூர்வ புதுப்பித்தலுடன் ஒரே நேரத்தில் வெளியிடத் தவறியதை நாம் வருத்தத்துடன் குறிப்பிடுகின்றோம்.

          நாம் இத்தீர்மானத்தினை நிராகரித்தபோதிலும், தொடர்ந்தும் மனித உரிமைகள் குறித்த சர்வதேச பணிப்பொறுப்புக்களை தன்னார்வத்துடன் நிறைவேற்றுவதுடன், இக்கழகம் உள்ளிட்ட ஐக்கிய நாடுகளுடனும் தொடர்பில் இருப்போம். 18 ஜனவரி 2022

          அன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நமது பாராளுமன்றத்தில் கூறியது போல், “நாம் சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளை மதிக்கும் ஒரு தேசம்”. நாம் எமது

          முன்னேற்றங்கள் மற்றும் சவால்களை சீரான முறையில், இக்கழகத்துடனும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிற சம்பந்தப்பட்ட நிறுவங்களுடனும் நேர்மையான முறையிலும் வெளிப்படையாகவும் பகிர்ந்துள்ளோம்.

          உயர்ஸ்தானிகரால் இச்சபையில் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் பாரிய முரண்பாடுகளும் பலவீனங்களும் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அதிலுள்ள அடிப்படைக் குறைபாடு என்னவெனில், அதன் சகிக்க முடியாத ஊடுருவும்

          தன்மையாகும். இது, தொடர்ந்து மூன்று தேர்தல்களில் நம் நாட்டு மக்களால் பெரும்பான்மையாக ஆணையிடப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் முக்கிய செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில்

          பாகுபாட்டினை தெளிவாக கண்டறியக்கூடிய ஒரு அம்சம் உள்ளது, அதாவது, மற்ற உறுப்பு நாடுகளைப் பொறுத்தமட்டில் இதேபோன்ற விசாரணை நடைமுறையை மேற்கொள்வதை இக்கழகம் நிச்சயமாக எடுத்துக் கொள்ளாது என்பதேயாகும். இது

          ஐக்கிய நாடுகள் அமைப்பின் அடித்தளத்தின் வேரையே தாக்குகிறது. உறுப்பு நாடுகளின் அளவு மற்றும் செல்வாக்கு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், உயர் ஸ்தானிகரால் பயன்படுத்தப்படும் தரநிலைகளின் சீரான தன்மை மற்றும்

          நிலைத்தன்மை, ஆகியவையும் ஐக்கிய நாடுகளின் சகோதரத்துவத்தின் அனைத்து உறுப்பினர்களின் இறையாண்மை சமத்துவம் தொடர்பான அத்தியாவசியக் கொள்கையுடன் உறுதியான இணக்கமும் இந்த அறிக்கையிலுள்ள பல பகுதிகளில் குறைகண்டுபிடிக்கும் தன்மையில் அத்துமீறப்பட்டுள்ளன.

          இக்கழகத்தின் மனோபாவங்களுக்கு அடித்தளமாக இருக்கும் தார்மீகம் மற்றும் ஒழுக்கத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தின் பரவலான மதிப்பீட்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின், குறிப்பாக மனித உரிமைகள்

          பேரவையின் பலமும் கௌரவமும் பெறப்பட்டதால், இது எமக்கு கவலையளிக்கிறது. குறிப்பாக, இக்கழகத்தின் முன்னோடியான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவிதியைக் கருத்தில் கொண்டு, இந்த நம்பிக்கையை குறையாமல்

          தக்கவைத்துக்கொள்வது இன்றியமையாதது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் உண்மையாக நடந்தவற்றின் சிக்கலான தன்மையை உணராமல், மேலெழுந்தவாரியான முடிவுகள் பல இந்த அறிக்கையில்

          இடம் பெற்றிருப்பது ஆழ்ந்த வருத்தத்திற்குரிய விடயமாகும். எங்கள் எழுத்துப்பூர்வ பதிலில் இவை பற்றி விரிவாக விளக்கியுள்ளோம்.

          வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சார பாரம்பரியத்திலிருந்து உருவாக்கப்பட்டதும், திறமையான சட்டங்களின் ஒருங்கிணைந்த பகுதியை உருவாக்கும் கடுமையான மீளாய்வுச் செயன்முறைகளுக்குட்பட்ட இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்ட

          அமைப்பின் கீழ் இயங்கும் நமது நாட்டின் செல்வாக்குள்ள நிறுவனங்கள் மீதான உயர் ஸ்தானிகரின் தேவையற்ற தாக்குதலால் நாங்கள் கலக்கமடைந்துள்ளோம்.

          முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியான நேரத்தில், மனிதகுலம் அனைத்திற்கும் உகந்த பலனை அடையும் வகையில் கடுமையாக வரையறுக்கப்பட்ட வளங்களைப் பயன்படுத்துவது பற்றிய ஒரு கேள்வியும் உள்ளது. ஒரு பாகுபாடான மற்றும் குறிப்பாக

          இலங்கை மீது இலக்கு வைக்கும் நோக்கத்திற்காக மில்லியன் கணக்கான டொலர்களைச் செலவிடுதலானது, இந்த வெளிப்படையான கட்டாயத்துடன் ஒத்துப்போகவில்லை. இந்த நேரத்தில் மிக முக்கியமானதாக இருக்கும் என்று பரந்த

          அளவிலான நாடுகளுக்குத் தோன்றும் இந்தக் கருத்தாய்வுகளில், இந்த அறிக்கை குறைவான அக்கறை காட்டுவது எங்களுக்கு பெரும் பரிதாபமாகத் தோன்றுகிறது.

          எமது மக்களுக்காக நாம் மீட்டெடுத்த பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், சமமான முறையில் நிலையான முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் உறுதியாக உள்ளது. வரவிருக்கும்

          சவால்களை எதிர்கொள்ள சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் எங்களுடன் பங்குதாரர்களாக சேர வேண்டும் என்ற நேர்மையான அறிவுரையுடன் எனது நாடு சர்வதேச சமூகத்தை அணுகுகிறது.

          நன்றி தலைவர் அவர்களே.

            Posted in இலங்கை செய்திகள்

            நாமல் ராஜபக்ஷவிற்கு பிரதமர் வழங்கிய ஆலோசனை

            .நாமல் ராஜபக்ஷவிற்கு பிரதமர் வழங்கிய ஆலோசனை

            இல.462, புத்தளம் வீதி, யந்தம்பலாவ, குருநாகல் எனும் விலாசத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள குருநாகல் பிரதமர் ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு நேற்று (05

            ) முற்பகல் விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலுவலக செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்தார்.

            இதன்போது பிரதமரின் தலைமையில் குருநாகல் மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றும் இடம்பெற்றது. சந்திப்பில் குருநாகல் மாவட்டத்தை

            பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

            குருநாகல் மாவட்டத்தில் தற்போது செயற்படுத்தப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர், கிராமத்திற்கு தொடர்பாடல்

            வேலைத்திட்டத்தின் கீழ் குருநாகலில் நிர்மாணிக்கப்படும் 48 தொடர்பாடல் கோபுரங்கள் குறித்தும் இதன்போது மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

            குறித்த செயற்பாடுகளை மேலும் செயற்திறன் மிக்கதாக்குவது தொடர்பில் கவனம் செலுத்திய பிரதமர், இக்கலந்துரையாடலின் போது விடயத்திற்கு பொறுப்பான

            அமைச்சரான நாமல் ராஜபக்ஷவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கோபுரங்களை நிர்மாணிக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.

            குறித்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான சமன்பிரிய ஹேரத், சுமித் உடுகும்புர, சரித்த ஹேரத், பிரேமநாத் சீ தொலவத்த, மஞ்சுளா திஸாநாயக்க, அசங்க நவரத்ன, பீ.வை.ஜீ.ரத்னசேகர உள்ளிட்ட குருநாகல் மாவட்ட பிரதேச சபை தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்

              Posted in Uncategorized

              போராளிகள் தாக்குதலில் 27 இராணுவம் படுகொலை

              போராளிகள் தாக்குதலில் 27 இராணுவம் படுகொலை

              மாலியின் Burkina Faso எல்லை பகுதியில் ,மாலிய அரச இராணுவத்தினரை இலக்கு

              வைத்து போராளி குழுக்கள் நடத்திய தாக்குதலில்; அரச இராணுவத்தய் சேர்ந்த 27 பேர் பலியாகியும் மேலும் பலர் படு யமடைந்துள்ளனர்

              இராணுவத்தின் டசின் கணக்கான வாகனங்களும் சேதமாக்க பட்டுள்ளன

              இராணுவமோ போராளிகள் தரப்பில் எழுபது பேர் படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது

                Posted in Uncategorized

                ஈரான் ஏவுகணை பலம் 6 மடங்கு அதிகரிப்பு

                ஈரான் ஏவுகணை பலம் 6 மடங்கு அதிகரிப்பு

                ஈரான் இராணுவம் தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என ஏவுகணைகளை

                தொடராக ஏவி சோதனை புரிந்து வருகிறது ,இவ்வேளை தற்பொழுது தமது ஏவுகணையின் வீச்சு ஆறு மடங்கு அதிகரிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                தற்போது தயாரிக்க பட்டு வெற்றிகரமாக அசோதனை செய்ய பட்ட ஏவுகணையின்

                வீச்சு இன்றைய ஏவுகணைகளை விட ஏழு மடங்கு அதிகம் என தெரிவிக்க பட்டுள்ளது

                மேலும் டிரோன் உளவு விமானம் ஒன்று வெள்ளோட்டம் விட பட்டது, இது மணி

                கணக்கில் தொடராக பறக்க வல்லது எனவும் தெரிவிக்க பட்டுள்ளதால் ஈரான் இராணுவம் புதிய பலத்துடன் தற்போது நடை பயில்கிறது

                  Posted in Uncategorized

                  மாணவனை அடித்த டீச்சர் கைது

                  மாணவனை அடித்த டீச்சர் கைது

                  அமெரிக்கா இண்டியான பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவனை தாக்கிய

                  டீச்சர் ஒருவ கைது செய்ய பட்டு
                  நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுளளார்

                  மாணவர்கள் மீது மேற்கொள்ள படும் வன்முறைகளுக்கு பலத்ததண்டனைகள் வழங்க

                  பட்டு வருகின்ற பொழுதும் இவ்விதமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றமை குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    காட்டு தீயில் நூறு வீடுகள் எரிந்து நாசம்

                    .

                    காட்டு தீயில் நூறு வீடுகள் எரிந்து நாசம்

                    அமெரிக்கா புளோரிடா பகுதியில் பரவி வரும் காட்டு தீயில் சிக்கி இதுவரை 12 வீடுகள் எரிந்து நாசமாகியுள்ளன

                    மேலும் நூறு வீடுகள் வரை சேதமடைந்துள்ளன

                    மக்கள் அந்த பகுதியில் இருந்து அகற்ற பட்டுள்ளனர் ,காட்டு தீயினை அணைக்க முடியாது அமெரிக்கா தீயணைப்பு வீரர்கள் தினறி வருகின்றனர்

                      Posted in சினிமா

                      பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா

                      .பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா

                      தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

                      மீண்டும் பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா
                      நயன்தாரா


                      தமிழ் திரைத்துறையில் பொருத்தமான ஜோடியாக நயன்தாரா – ஜெயம் ரவி இருவருக்கும் ஒரு பெயர் உண்டு. இவர்கள் சேர்ந்து நடித்த தனி ஒருவன் படம் பெரிய

                      வெற்றி பெற்றது. அதன் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. பெரிய இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள்.


                        திவ்யா சத்யராஜ்
                        Posted in சினிமா

                        25 நடிகைகளை கல்யாணாம் செய்துள்ளேன் சத்யராஜ்

                        25 நடிகைகளை கல்யாணாம் செய்துள்ளேன் சத்யராஜ்

                        கதாநாயகனாக நடித்து தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் சத்யராஜ், ராதே ஷ்யாம் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசினார்.

                        25 ஹீரோயினை கல்யாணம் செய்திருக்கிறேன் – சத்யராஜ்
                        த்யராஜ்


                        யுவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸ்

                        நாயகனாகவும், பூஜா ஹெக்டே நாயகியாகவும் நடித்துள்ளனர். மார்ச் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.

                        இவ்விழாவினில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் பிரபாஸ், பூஜா

                        ஹெக்டே, இயக்குனர் ராதா கிருஷ்ண குமார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, பாடலாசிரியர் மதன் கார்கி தயாரிப்பாளர் பிரமோத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

                        இதில் சத்யராஜ் பேசும்போது, பிரபாஸை நாங்கள் டார்லிங் என சொல்வோம், டார்லிங்கின் டார்லிங் பூஜா. கடவுள் நம்பிக்கை இல்லாமல் கைரேகை நிபுணராக

                        நடித்திருக்கிறேன் என கேட்கிறார்கள், பெரியார் படத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன், ஜெர்ஸி படத்தில் கிரிக்கெட் கோச்சாக நடித்திருக்கிறேன் அப்படிதான் எடுத்து கொள்ள வேண்டும்.

                        நான் ஹீரோவாக நடிக்கும் போது 25 ஹீரோயினை கல்யாணம் செய்திருக்கிறேன், அதை என்ன சொல்வது. நடிப்பை நடிப்பாக மட்டும் எடுத்துகொள்ள வேண்டும்.

                        இந்தப்படம் மிக அழுத்தமான காதல் கதை, பிரபாஸ் பறந்து சண்டை போடுவார் என்றால், இதில் கப்பலே பறக்கிறது. இங்கு ஜேம்ஸ் கேமரூன் தான் வந்திருக்க வேண்டும். அவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது.

                        பிரபாஸின் அழகுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது. ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கிறது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு முக்கியமான பொறுப்பு

                        வந்துள்ளது. பான் இந்தியா என்று எல்லா ஸ்டேட்டிலிருந்து ஒரு நடிகரை போட்டு எடுக்கிறார்கள், ஆனால் இந்தப்படம் உண்மையில் பான் இன்டர்னேஷனல் படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி’ என்றார்

                          Posted in Uncategorized உலக செய்திகள்

                          இனையத்தில் வைரலாகும் 12 கிலோ சிசு

                          இனையத்தில் வைரலாகும் 12 கிலோ சிசு

                          உலக மக்களை அதிகம் கட்டி போட்டுள்ள சமூக வலைத்தளங்களில் சீனாவின் டிக் டொக் முதன்மை இடத்தை வகிக்கிறது

                          இதில் 12 கிலோ எடையுள்ள சிசு ஒன்றின் காணொளி வெளியாகி வேகமாக வைரலாகி வருகிறது

                          September 28 at Tunbridge Wells மருத்துவமனையில் பிறந்த இந்து சிசுவே உலகில் அதிக

                          எடை கூடிய சிசு என்ற பெருமையை பெற்றுள்ளார்

                            Posted in Uncategorized

                            வடகொரியா 560 km சென்று தாக்கும் ஏவுகணை சோதனை

                            வடகொரியா 560 km சென்று தாக்கும் ஏவுகணை சோதனை

                            உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ள

                            நிலையில் வடகொரியா தனது இராணுவ சோதனையில் தீவிரம் காட்டி வருகிறது

                            இவ்விதம் கடந்த தினம் 560 கிலோ மீட்டர் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணை ஒன்றை ஏவி சோதனை புரிந்துள்ளது

                            இந்த ஏவுகணையானது ஜப்பான் கொரிய கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது

                            வடகொரியாவின் இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளதாக தென் கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது

                              Posted in Uncategorized

                              ரசியா மோதல் – போலந்து உக்கிரேனுக்கு பறக்கும் கமலா கரீஸ்

                              ரசியா மோதல் – போலந்து உக்கிரேனுக்கு பறக்கும் கமலா கரீஸ்

                              உக்கிரேன் மீது ரசியா போரினை தொடுத்துள்ள வேளை ரோமானிய மற்றும்

                              போலாந்திற்கு அமெரிக்காவின் பிரதி ஜனாதிபதி கமலா க்ரீஸ் வரும் வாரம் பயணிக்கிறார்

                              இவரது இந்த பயணம் ரசியாவின் நிலைகள் தொடர்பாக ஆராய்வதற்கான முதல்

                              களமாக அமையும் என எதிர் பார்க்க படுகிறது.

                                Posted in Uncategorized

                                மசூதியில் குண்டுவெடிப்பு 56 பேர் மாரணம் -50பேர் காயம்

                                மசூதியில் குண்டுவெடிப்பு 56 பேர் மாரணம் -50பேர் காயம்

                                பாகிஸ்தானில் வெளிக்கிளமை தொழுகையில் ஈடுபாடிருந்தவர்களை இலக்கு வைத்து

                                ஐ எஸ் தீவிரவாதி நடத்திய மனித வெடி குண்டு தாக்குதலில் சிக்கி சம்பவ இடத்தில் 56

                                பேர் பலியாகினர் ,மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்

                                குறித்த தாக்குதல் தொடர்பான காணொளி வெளியாகி பெரும் பரபரப்பை

                                ஏற்படுத்தியுள்ளது ,துப்பாக்கியுடன் நுழையும் நபர் அங்கு நின்றவர்களை சுட்டு விட்டு குண்டை வெடிக்க வைக்கும் காட்சியே அது

                                  Posted in Uncategorized

                                  இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்

                                  இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐநா மனித உரிமை ஆணையம்

                                  இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இன படுகொலைக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்க பெறவிலை

                                  ஆண்டு வந்த மூன்று அரசுகளின் ஆட்சி கால பகுதியில் அங்கு இடம்பெற்ற படுகொலைக்கு அதன் பொறுப்பு கூறலும் ,நீதியும் நிலை நாட்ட படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்

                                  இதன் மூலம் இலங்கைக்கு மீளவும் நெருக்கடிகளை ஐநா மனித உரிமை அமைப்பு வழங்கியுள்ளது

                                  தனது எழுத்து மூல அறிக்கையில் இந்த விடயம் தெளிவு படுத்த பட்டுள்ளது ,

                                  ரசியாவின் போருக்கு போர் குற்ற விசாரணைகளை விரைந்து ஆரம்பித்த உலகம் இலங்கை புரிந்த படுகொலைக்கு இதுவரை தீர்வு எழுதாது


                                  உறக்கம் இடுவது ஏன் என்ற கேள்வியே தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது

                                    செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                                    Posted in Uncategorized

                                    கால்வாய் அடியில் மனித எலும்பு கூடு மீட்பு – கோட்டா ஆட்சியில் தொடரும் மர்ம கொலைகள்

                                    கால்வாய் அடியில் மனித எலும்பு கூடு மீட்பு – கோட்டா ஆட்சியில் தொடரும் மர்ம கொலைகள்

                                    இலங்கை பிங்கிரிய போவத்த பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றின் அடியில் இருந்து

                                    மோட்டார் சைக்கிள் மற்றும் அதன் அருகில் எலும்பு கூடு ஒன்றும் கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                    கடந்த டிசம்பர் காணாமல் போன தனது மகனது வண்டி என்று தாயார் அடையாளம் காட்டியுளளார்

                                    கோட்டா ஆட்சியில் இவ்விதம் பலர் காணாமல் போவதும் பின்னர் அவர்கள்

                                    சடலங்களாக மீட்க படுவதும் தொடர்ந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      இலங்கையில் எகிறும் மின் கட்டணம் ,எரிபொருள் விலை

                                      இலங்கையில் எகிறும் மின் கட்டணம் ,எரிபொருள் விலை

                                      இலங்கையில் ஆளும் ஆட்சியில் இடம்பெற்று வரும் பலத்த மோசடிகள் மத்தியில் நாடு பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது.

                                      தற்போது எரிபொருள் மற்றும் மின் கட்டங்கள் விலையினை அதிகரிக்கும் படி மதியவங்கி ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

                                      இலங்கையில் நிலவும் நிலவரங்களை கட்டு படுத்த எரிபொருள் விலையினை ஈடு செய்யும் வகையிலாவைத்து விலை ஏற்றத்தினை செயல் ப்படுத்தும்படி அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

                                      மக்கள் தலைகளில் ஏற்ற படும் இந்த சுமைகள் ஆளும் அரசை விரைவில் கவிழ்த்து விடும் என்பது தெளிவாகிறது.