Tag: சத்யராஜ்
25 நடிகைகளை கல்யாணாம் செய்துள்ளேன் சத்யராஜ்
25 நடிகைகளை கல்யாணாம் செய்துள்ளேன் சத்யராஜ்
கதாநாயகனாக நடித்து தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் சத்யராஜ், ராதே ஷ்யாம் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு பேசினார்.
25 ஹீரோயினை கல்யாணம் செய்திருக்கிறேன் – சத்யராஜ்
சத்யராஜ்
யுவி கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸ்
நாயகனாகவும், பூஜா ஹெக்டே நாயகியாகவும் நடித்துள்ளனர். மார்ச் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவினில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் பிரபாஸ், பூஜா
ஹெக்டே, இயக்குனர் ராதா கிருஷ்ண குமார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, பாடலாசிரியர் மதன் கார்கி தயாரிப்பாளர் பிரமோத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் சத்யராஜ் பேசும்போது, பிரபாஸை நாங்கள் டார்லிங் என சொல்வோம், டார்லிங்கின் டார்லிங் பூஜா. கடவுள் நம்பிக்கை இல்லாமல் கைரேகை நிபுணராக
நடித்திருக்கிறேன் என கேட்கிறார்கள், பெரியார் படத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன், ஜெர்ஸி படத்தில் கிரிக்கெட் கோச்சாக நடித்திருக்கிறேன் அப்படிதான் எடுத்து கொள்ள வேண்டும்.
நான் ஹீரோவாக நடிக்கும் போது 25 ஹீரோயினை கல்யாணம் செய்திருக்கிறேன், அதை என்ன சொல்வது. நடிப்பை நடிப்பாக மட்டும் எடுத்துகொள்ள வேண்டும்.
இந்தப்படம் மிக அழுத்தமான காதல் கதை, பிரபாஸ் பறந்து சண்டை போடுவார் என்றால், இதில் கப்பலே பறக்கிறது. இங்கு ஜேம்ஸ் கேமரூன் தான் வந்திருக்க வேண்டும். அவ்வளவு பிரமாண்டமாக இருக்கிறது.
பிரபாஸின் அழகுக்காகவே எடுக்கப்பட்ட படம் இது. ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கிறது. பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கு முக்கியமான பொறுப்பு
வந்துள்ளது. பான் இந்தியா என்று எல்லா ஸ்டேட்டிலிருந்து ஒரு நடிகரை போட்டு எடுக்கிறார்கள், ஆனால் இந்தப்படம் உண்மையில் பான் இன்டர்னேஷனல் படம். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி’ என்றார்
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் – நடிகர் சத்யராஜ் வேண்டுகோள் video
தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் – நடிகர் சத்யராஜ் வேண்டுகோள் video
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தீவிரம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்
கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஆனால், பொதுமக்கள் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் அலட்சியம் காட்டுகிறார்கள். இதனால் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தடுப்பூசி தொடர்பாக நடிகர் சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: “சமீப காலமாக சில வேதனையான விஷயங்களைக் கேள்விப்படுகிறேன்.
யாருமே சரியாக தடுப்பூசி போட்டுக் கொள்வதில்லை. செல்போன் வந்த பிறகு, நமக்கு நாமே மருத்துவர் ஆகிவிட்டோம். அக்கம்பக்கத்தினர், சொந்தக்காரர்கள், நண்பர்கள் என அனைவருமே மருத்துவர்கள் ஆகிவிட்டார்கள். அது எப்படி?.
மருத்துவத்துக்கு படித்தவர்கள் தான் மருத்துவராக இருக்க முடியும். அதனால் தடுப்பூசி பற்றி ஏதேனும் குழப்பம் இருந்தால், தெரிந்த மருத்துவரை அணுகுங்கள். அவர்கள் சரியான அறிவுரை
வழங்குவார்கள். நம்ம உடம்புக்கு ஒன்றும் வராது என்று காலரை தூக்கிவிட்டுக் கொண்டு, இது சத்தியத்துக்குக் கட்டுப்பட்ட உடம்பு என்பது எல்லாம் இருந்துட்டு போகட்டும்.
ஆனாலும், நமது உடம்பைப் பற்றி நம்மை விட மருத்துவர்களுக்கு தான் நன்றாகத் தெரியும். அதற்குத்தான் அவர்கள் மருத்துவத்துக்கு படித்துள்ளார்கள். நான் சொல்வதைக் கூட கேட்காதீர்கள். நான் என்ன மருத்துவரா?
சமீபத்தில் கேட்கும் விஷயம் எல்லாம் மனவேதனையை தருகிறது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, கிருமி நாசினி மூலம் கையை சுத்தப்படுத்துவது எல்லாம் அனைவரும்
செய்கிறார்கள். ஆனால், இந்த தடுப்பூசி விஷயத்தில் பெரிய குழப்பம் இருக்கிறது. தயவுசெய்து மருத்துவர்களை அணுகி அறிவுரையை பெற்று தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்”. இவ்வாறு சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
ஏழை மக்கள் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – சத்யராஜ் மகள்
ஏழை மக்கள் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – சத்யராஜ் மகள்
கொரோனாவில் இருந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் – திவ்யா சத்யராஜ்
பிரபல நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், கொரோனா பீதி காரணமாக பள்ளிகள்
இயங்காததால், வறுமையில் வாடும் குடும்பங்களில் வசித்து வரும் குழந்தைகளுக்கு சத்தான சாப்பாடு கிடைக்காமல் அவர்கள்
ரத்தசோகை மற்றும் இரும்பு சத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெரிவிக்கும் விதமாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது… ” கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் அரசு பள்ளி குழந்தைகளில் வைட்டமின் குறைபாடு குறித்து ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டேன்.
அப்போது… கார்ப்பரேஷன் பள்ளிகளில் 38% சிறுவர்கள் மற்றும் 40% இளம் பருவ பெண் குழந்தைகளுக்கு, இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை இருப்பது தெரியவந்தது.
எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக அரசிடம் பேசினேன். அப்போது இரும்புச்சத்து குறைபாடு
மற்றும் இரத்த சோகையை அவர்களின் மதிய உணவு திட்டத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் பணியில் அரசாங்கம் இறங்கியது.
இந்நிலையில் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டதால், கார்ப்பரேஷன் பள்ளி குழந்தைகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த
உணவு மற்றும் மதிய உணவு திட்டத்தால் வழங்கப்படும் இரும்புச் சத்துக்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இரும்புச்சத்து நமது
உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையான ரத்த சிவப்பு அணுக்களுக்கு அத்தியாவசியமான ஒன்று.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் அந்த குழந்தைகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்க முடியாது. அவர்களுக்கு கொரோனா வரும் வாய்ப்புகள் அதிகம்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளும் கொரோனாவில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை வசதியான குழந்தைகளுக்கு மட்டும்தான் என்பது நியாயம் கிடையாது. எனவே குறைந்த
வருமானம் கொண்ட குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கொண்ட உணவுகளையும் இரும்புச்சத்து
மருந்துகளையும் இலவசமாக வழங்குமாறு அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.








