Author: நலன் விரும்பி
ஒபாமாவுக்கு கொரனோ – மனைவி தப்பினார்
ஒபாமாவுக்கு கொரனோ – மனைவி தப்பினார்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளதாக
அவர் தனது டுவிட்டர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் ,மேலும் தனது மனைவிக்கு இதுவரை இந்த
தோற்று ஏற்படவில்லை எனவும் ,தாம் பூஸ்டர் செலுத்தியுள்ளதாகவும் கவலை இல்லை என்ற வகையில் தனது பதிவை இட்டுள்ளார்
உக்கிரேனில் அமெரிக்கா செய்தியாளர் சுட்டு கொலை
உக்கிரேனில் அமெரிக்கா செய்தியாளர் சுட்டு கொலை
உக்கிரேன் நாட்டின் சமர் களத்தில் செய்தி சேகரிக்க சென்றிருந்த நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையின் முக்கிய செய்தியாளர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
குறித்த பத்திரிகையானது அமேசான் நிறுவனத்தின் உரிமையாளர் நடத்தி வருவதும்
,இந்த பத்திரிகை அரசியல் ,உளவுத்துறை முக்கியதுவம் வாய்ந்த ஒன்றாக சர்வதேச அளவில் விளங்கி வருகிறது
அவ்விதமான பத்திரிகையின் முக்கிய நிருபரே பலியாகியுள்ளார்
உக்கிரேனில் பலியான முதலாவது வெளிநாட்டு செய்தியாளர் இவர் என்பது குறிப்பிட தக்கது
உக்கிரேன் ராணுவ தளம் மீது தாக்குதல் -35பேர் பலி ,134 பேர் படுகாயம்
உக்கிரேன் ராணுவ தளம் மீது தாக்குதல் -35பேர் பலி ,134 பேர் படுகாயம்
தற்போது போலந்தின் மேற்கு கரை எல்லையோரத்தில் அமைந்துள்ள உக்கிரேன் படையின்
இராணுவ தளம் மீது ரசியா விமான படை நடத்திய தாக்குதலின் போது
35 பேர் பலியாகியும் ,134 பேருக்கு மேல் படு காயமடைந்தும் உள்ளதாக உக்கிரேன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .
மேலும் தொடந்து அகோர வான் வெளி தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,30 ஏவுகணைகள் இந்த முகாம் மீது வீழ்ந்து வெடித்துள்ளது
போலந்து நாட்டின் எல்லையில் இருந்து 20 கிலோ மேடேட்டர் தொலைவில் அமைய பெற்ற பாரிய இராணுவ தளம் மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த முகாமின் அருகில் நேட்டோ இராணுவ முகாமும் அமைய பெற்றுள்ளது இங்கே கவனிக்க தக்கது
மேற்கு நாடுகள் எம்மீது தாக்குத்தல் நடத்த ஆயுதங்கள் வழங்குகின்றன – ரசியா குற்றச்சாட்டு
மேற்கு நாடுகள் எம்மீது தாக்குத்தல் நடத்த ஆயுதங்கள் வழங்குகின்றன – ரசியா குற்றச்சாட்டு
உக்கிரேன் மீது ரசியா இராணுவம் தொடர்தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
தம்மீதான தாக்குதலுக்கு மேற்கு நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றது என ரசியா குற்றம் சுமத்தியுள்ளது
அமெரிக்கா கனடா ஐரோப்பா ளிட்ட நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது
குருதீஸ் பகுதியில் வீழ்ந்து வெடித்த 12 ஏவுகணைகள்
குருதீஸ் பகுதியில் வீழ்ந்து வெடித்த 12 ஏவுகணைகள்
ஈராக்கில் உள்ள குருதீஸ் நிலைகள் அமைந்துள்ள ஏர்பில் பகுதியில் 12க்கு மேற்பட்ட
ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவில்லை ,இந்த தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதும் வெளியிட படவில்லை
ஏழு மாதங்களில் பெட்ரோல் எரிவாயு முடிந்து விடும் – மின்சத்தி அமைச்சர்
ஏழு மாதங்களில் பெட்ரோல் எரிவாயு முடிந்து விடும் – மின்சத்தி அமைச்சர்
இலங்கையில் நிலவி வரும் பொருளாதர நெருக்கடி காரணமாக மக்கள் பெரிதும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர்
எதிர் வரும் ஏழு மாதங்களுக்கு மட்டுமே தற்போது கையிருப்பில்
உள்ளவை போதுமானது எனவும் அதன் பின்னர் அனைத்தும் தீர்ந்து விடும் என அவர் தெரிவித்துள்ளார்
பாடசாலைகளில் நீர்குடிக்க மக்கள் பணம் செலுத்த வேண்டும் – ஆசிரியர்கள் குற்றசாட்டு
பாடசாலைகளில் நீர்குடிக்க மக்கள் பணம் செலுத்த வேண்டும் – ஆசிரியர்கள் குற்றசாட்டு
இலக்கையில் உள்ள அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்கள் அங்கு
நீர்குடிக்க பணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளது
ஆளும் கோட்டாவின் ஆட்சியின் கீழ் பல்வேறு பட்ட துறைகள் நிதி இன்றி தள்ளாடி வருகிறது
இதனால் இந்த இழிநிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்
சுற்றிவளைத்த பொலிஸ் -சிக்கிய 550 கிலோ கஞ்சா
சுற்றிவளைத்த பொலிஸ் -சிக்கிய 550 கிலோ கஞ்சா –
இந்திய கேரள பகுதியில் இருந்து ராமேஸ்வரம் ஊடாக கடத்தி வரப்பட்ட 550 கிலோ கேரள கஞ்சாவை போலீசார் மடக்கி பிடித்தனர்
72 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவை கடத்திய நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இந்த முற்றுகை இடம்பெற்றுள்ளது
யானைகள் அட்டகாசம் – 12 வீடுகளை அடித்து நொறுக்கு
யானைகள் அட்டகாசம் – 12 வீடுகளை அடித்து நொறுக்கு
மட்டக்களப்பு சம்மாந்துறை பகுதியில் உள்ள நான்கு கிராமங்களுக்குள் புகுந்த யானைகள்
12 வீடுகளை அடித்து நொறுக்கியுள்ளது
யானையின் இந்த கோர தாக்குதலில் சிக்கி வீடுகளைஇழந்து மக்கள் தவித்து
வருவதுடன் குறித்த மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்
மக்களை விரட்டி குற்றிய குளவி – 11 பேர் காயம்
மக்களை விரட்டி குற்றிய குளவி – 11 பேர் காயம்
இலங்கை கப்புத்தளை திட்ட பகுதியில் பணியாற்றி கொண்டிருந்த மக்கள் மீது
திடீரென குளவிகள் தாக்குதலை நடத்தின இதில் 11 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்
இவ்வாறான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
மனைவியை அடித்து கொன்ற கணவர்
மனைவியை அடித்து கொன்ற கணவர்
ரம்புக்கனை, ஹெனெபொல பிரதேசத்தில் கணவர் ஒருவர் தனது மனைவியை அடித்துக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பத் தகராறே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
பத்தம்பிட்டிய, ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தம்பதியினருக்கு இடையில் சில காலமாக குடும்பத் தகராறு இருந்து வந்த நிலையில், அவர்களது மகள் தந்தையை கண்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச்
சென்றுள்ளதுடன், நீதிமன்ற விசாரணைக்காக வீடு திரும்பிய போதே சந்தேகநபர் இந்த கொலையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொலையுடன் தொடர்புடைய 65 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
ஆட்டோக்களை தூக்கி சென்ற போலீஸ்
ஹட்டன் நகர மத்தி மற்றும் நகரின் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஓட்டோக்களை அப்புறப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் அனுமதியின்றி, நகரம் முழுவதும் ஓட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், நகருக்கு ஏனைய வாகனங்களில் வருகைத் தருபவர்கள்
மற்றும் சாதாரண மக்கள் என அனைவரும் பல சிரமங்களுக்கு முகம்கொடுப்பதுடன், கடும் வாகன நெரிசலும் ஏற்படுவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதுதொடர்பில் நகர வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, நகர சபையிடம் அனுமதி பெற்ற ஓட்டோக்களை மாத்திரம்
நகரில் நிறுத்தி வைக்க ஹட்டன் போக்குவரத்து பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனுமதிபெறாத ஓட்டோக்களை ஓட்டோ நிறுத்துவதற்கு என ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் நிறுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதற்கு எதிராக செயற்படும் ஓட்டோ உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக சட்டநடவடிக்கை
எடுக்கவுள்ளதாக ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
118 நீதிபதிகளுக்கு இடமாற்றம்
நாடளாவிய ரீதியில் 118 நீதிபதிகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நீதிச்சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் சன்ஜீவ சோமரத்தினவினால் உரிய வகையில் இடமாற்ற கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதியில் இருந்து இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வடக்கு கிழக்கில் உள்ள நீதவான் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
மல்லாகம் நீதிமன்றில் கடமையாற்றும் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா பருத்தித்துறை மாவட்ட நீதிவான் நீதிமன்றிற்கு மாற்றம் பெறவுள்ள்ளார்.
மல்லாகம் நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவானாக கடமையாற்றிய ஆனந்தராஜா யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றிற்கு மாற்றம் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட நீதிவானாக கடமையாற்றும் ரீ.கருணாகரன் வாழைச்சேணை மாவட்ட நீதிவானாக மாற்றம் பெறவுள்ளார்.
மன்னார் மாவட்ட நீதிவான் பீ.சிவகுமார் மல்லாகம் மாவட்ட நீதிவானாக இடமாற்றம் பெறவுள்ளார்.
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சீ.றிஸ்வான் பொத்துவில் மாவட்ட நீதிபதியாக இடமாற்றம் பெறவுள்ளார்.
வாழைச்சேணை மாவட்ட நீதிபதி எம்.எம் பசீல் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியாக மாற்றம் பெறவுள்ளார்.
பருத்தித்துறை மாவட்ட நீதிபதி ஜீ.சைலயன் மல்லாகம் மாவட்ட மேலதிக நீதிவானாக இடமாற்றம் பெறவுள்ளார்.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றிற்கு மாற்றலாகி செல்லவுள்ளார்.
பொத்துவில் மாவட்ட நீதிபதி எம்.எச்.எம்.றவி கண்டி நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவானாக செல்லவுள்ளதாக
நீதிச்சேவை ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
மக்கள் வீதியிறங்க வேண்டிய நேரம் – மைத்திரி
மக்கள் வீதியில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த இரண்டு வருடங்களில்
அரசாங்கத்தின் தீர்மானங்களில் நாங்கள் ஈடுபடவில்லை என்று தெரிவித்தார்.
பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்று இந்த நாடு உணவு உட்பட பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரிப்புடன் மக்கள் அரசியல்வாதிகளை நிராகரித்து வெகுஜன போராட்டங்களை நாடுகிறார்கள்.
13 கட்சிகள் இணைந்து இந்த அரசாங்கத்தை அமைத்த போது நானும் தலைவராக நியமிக்கப்பட்டேன், ஆனால் அதன் பின்னர் நான் எதிலும் ஈடுபடவில்லை.
சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தின் பின்னர் எனது அரசாங்கம் மாத்திரமே இந்த நாட்டுக்கு சரியான கொள்கையை கொண்டு வந்தது.
நான் நாட்டை ஜனநாயக ரீதியில் வழிநடத்தினேன். உலக நாடுகள் அனைத்தும் எனக்கு உதவியது.19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டினேன்.
ஆனால் ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவேன் என்று எதிர்பார்த்தபோதும் என்னால் அதைச் செய்ய முடியவில்லை“ என்றார்.
நாளைமுதல் பாடசாலைகள் ஆரம்பம்
சகல பாடசாலைகளும் நாளை முதல் வழமைபோன்று நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
இதற்கமைவாக மாணவர்களை வழமை போன்று பாடசாலைக்கு அழைக்க முடியும்.
கொவிட் தொற்றுடன் தொடர்புடைய ஏதாவது பிரச்சினைகள் எழுமாயின், வலய கல்விப் பணிப்பாளரின்
தீர்மானத்தின்படி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பிரான்சில் போலீஸ் மீது கத்திவெட்டு – தீவிரவாதி சுட்டு கொலை
பிரான்சில் போலீஸ் மீது கத்திவெட்டு – தீவிரவாதி சுட்டு கொலை
பிரான்சின் Marseille பகுதியில் சனிக்கிழமை
மர்ம நபர் ஒருவர் காவல்துறையினர் மீது திடீர் கத்தி வெட்டு தாக்குதலை நடத்தினார்
இதில் காவல்துறை ஊழியர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
குறித்த தீவிரவாதி என கருத படும் நபர் போலீசார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளார்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
35 பேர் கொலை -25 பேர் காயம் -46 கிராமங்கள் தீக்கிரை
35 பேர் கொலை -25 பேர் காயம் -46 கிராமங்கள் தீக்கிரை
சூடான் பகுதியில் ஆயுத குழுவினர் நடத்திய திடீர் தாக்குதலில் சிக்கி முப்பத்தி ஐந்து பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 21 பேர் படுகாயமடைந்துள்ளனர்
மேலும் 46 கிராமங்கள் தீக்கிரையாக்க பட்டுள்ளது
குறித்த ஆயுத குவின் தொடர் பழிவாங்கும் இனவாத தாக்குதல்களில் சிக்கி அப்பாவி மக்கள் பலர் பலியாகிவருகின்றனர்
இந்த குழுக்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி இதற்கு தீர்வு காண ஆளும் அரசு மறுத்து வருவதாக தெரிவிக்க படுகிறது
பட வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்ய ஆசைப்படும் நடிகை
பட வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்ய ஆசைப்படும் நடிகை
பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர், பட வாய்ப்பு இல்லாததால் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.
திருமணம் செய்ய ஆசைப்படும் நடிகை
தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வரும் நடிகைக்கு தற்போது சில காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறாராம். நடிகை நடித்த ஒரு
சில படங்கள் ரிலீசாகாமல், பிரச்சனைகளில் சிக்கி இருக்கிறதாம். இதனால் நடிகை திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.
திருமணம் தற்போது வேண்டாம் என்று தவிர்த்து வந்த நடிகை, தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தன் மனதை மாற்றி இருக்கிறாராம்.
இதற்காக பெற்றோர்கள் நடிகைக்காக வலைவீசி மாப்பிள்ளை தேடி வருகிறார்களாம்
தாய்லாந்தில் சிக்கிய 1000 ரஷியா உல்லாச பயணிகள்
தாய்லாந்தில் சிக்கிய 1000 ரஷியா உல்லாச பயணிகள்
ரசியாவுக்கும் உக்கிரேனுக்கும் இடையில் இடம்பெற்று வரும் மோதல்களினால்
ரசிய நாட்டவர்கள் பல உலக நாடுகள் விதித்த தடையினால சிக்கி தவித்து வருகின்றனர்
இவ்விதம் தாய்லாந்துக்கு உல்லாச பயணம் மேற்கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட உல்லாச பயணிகள் மீள தமது நாடுகளுக்கு திரும்ப முடியாது சிக்கி தவித்து வருகின்றனர்
இவர்கள் விமான பயணங்கள் இரத்து செய்ய பட்ட நிலையிலும்
இவர்களிடம் கையிருப்பில் இருந்த பணம் தீர்ந்த நிலையில் நிர்க்கதியான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து
நீச்சலுடையில் கலக்கும் காதல் இளவரசி ஓவியா
நீச்சலுடையில் கலக்கும் காதல் இளவரசி ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஓவியா கடலில் குளிக்கும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
நீச்சலுடையில் ஓவியா… வைரலாகும் புகைப்படங்கள்
ஓவியா
களவாணி படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் முதல் முதலில் ஆர்மி ஆரம்பிக்கப்பட்டது
ஓவியாவுக்கு தான். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல படங்களில் நடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், எந்த பட வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறார்.
ஓவியா
இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதோடு தத்துவங்களையும் பதிவு செய்வார்.
இந்நிலையில், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி உடையில் கடலில் குளிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஓவியா
மேலும் இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக ’கவலைகளை கடலில் கரைத்து விடுங்கள்’
என்றும் அவர் பதிவு செய்துள்ளார். ஓவியாவின் இந்த கிளாமர் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்







