Posted in சினிமா

ஊர் செல்ல முடியாமல் தவித்தவர்களுக்கு உதவிய நடிகை

ஊர் செல்ல முடியாமல் தவித்தவர்களுக்கு உதவிய நடிகை


கேரளாவில் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல

முடியாமல் தவித்தவர்களுக்கு பிரபல நடிகை உதவி செய்திருக்கிறார்.

சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தவர்களுக்கு உதவிய நடிகை
நடிகை நீது சந்திரா


தமிழில் யாவரும் நலம், ஆதி பகவன், சேட்டை, வைகை எக்ஸ்பிரஸ் உள்பட பல படங்களில் நடித்தவர் நீது சந்திரா. கொரோனா

ஊரடங்கு காலத்தில் சத்தமில்லாமல் பல உதவிகளை அவர் செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு மனிதன் துன்பத்தில் இருக்கும்போது சக மனிதன் உதவ வேண்டியது கடமை. அதனை

என்னால் முடிந்த அளவிற்கு செய்து வருகிறேன். கேரளாவில் பீகாரை சேர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல்

தவிப்பதாக அங்கிருந்து ஒருவர் எனக்கு தகவல் அனுப்பினார். அவர் அனுப்பிய தகவலை உறுதி செய்து கொண்டு சுமார் 35 பேர் தங்கள் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்தேன் என்றார்

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      எழுந்து வா…!

      எழுந்து வா…!

      தடை எடு படை எடு
      தளரா துணிவெடு ..
      அடியெடு உடை எடு
      அடிமை தடை எடு …

      ஒளி எடு வெடி எடு
      ஒளி இடும் வாழ்விடு
      புதிர் எடு தளிர் இடு
      புதுயுகம் நீ இடு ….

      குழி எடு முதல் இடு
      குடித்தவன் உடல் நடு
      வெடி எடு முதல் இடு
      வெடித்தவன் உடல் வெட்டு ,,,,

      தமிழ் எழு தடை எடு
      தரணியில் உனை நடு
      வலி எடு உயிர் எடு
      வலித்தவர் உயிர் குடு

      வன்னி மைந்தன் (ஜெகன் )
      ஆக்கம் 03-06-2020

      புரியாதிருக்கும் -ஆனால் புதிர் இருக்கும்

          Posted in சினிமா

          நடிகை ஆண்ட்ரியாவின் புதிய முயற்சி

          நடிகை ஆண்ட்ரியாவின் புதிய முயற்சி

          தமிழ் சினிமாவில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா பாட்டு போட்டி மூலம் நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

          நடிகை ஆண்ட்ரியாவின் புதிய முயற்சி
          நடிகை ஆண்ட்ரியா


          நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா நடன இயக்குநர் ஜெப்ரி வர்டான் மற்றும் நடிகை வரலட்சுமியுடன் இணைந்து கொரோனா

          நிவாரணத்துக்காக நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். இதற்காக திறமையானவர்களைக் கண்டறியும் போட்டி ஒன்றை ஆண்ட்ரியா

          அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது: –

          நடிகை ஆண்ட்ரியா

          ‘’அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த ஊரடங்கில் வெளியில் இருக்கும் பாத்ரூம் பாடகர்களுக்கு திறமையானவர்களைக் கண்டறியும் போட்டிக்குள் நுழைய ஒரு வாய்ப்பு.

          நானும் ஜெப்ரியும் கல்லூரிக் காலம் முதலே நண்பர்கள். நாங்கள் இருவரும் இணைந்து பல அற்புதமான மேடை நிகழ்ச்சிகளை

          நடத்தியிருக்கிறோம். இந்தக் கடினமான சூழலில் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் பொருட்டு அவர் இந்த நல்ல காரியத்தை முன்னெடுத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

          இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? உடனே அந்தப் போட்டிக்குத் தயாராகுங்கள். வெற்றியாளர் நீங்களாகக் கூட இருக்கலாம்‘’. இவ்வாறு ஆண்ட்ரியா கூறியுள்ளார்

              Posted in சினிமா

              நடிகைக்கு விரைவில் டும்டும்டும்- குஷியில் அம்மணி

              நடிகைக்கு விரைவில் டும்டும்டும்- குஷியில் அம்மணி

              விக்ரமின் கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மியா ஜார்ஜுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம்.

              கோப்ரா பட நடிகைக்கு விரைவில் டும்டும்டும்
              குடும்பத்தினருடன் மியா ஜார்ஜ்


              மலையாளத்தில் முன்னணியில் இருக்கும் நடிகை மியா ஜார்ஜ். இவர் தமிழில் அமரகாவியம், ஒரு நாள் கூத்து, இன்று நேற்று நாளை

              உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்து வரும்

              இவர், தற்போது விக்ரமின் கோப்ரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

              மியா ஜார்ஜ்

              லாக்டவுனால் வீட்டில் இருக்கும் மியா ஜார்ஜுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அந்தவகையில், மியா ஜார்ஜுக்கு

              அஷ்வின் பிலிப் என்பவருக்கும் திருமணம் செய்ய அவரது பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். அவர்களது நிச்சயதார்த்தம்

              எளிமையாக நடந்துள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் அவரது திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

              நடிகைக்கு விரைவில் டும்டு
              நடிகைக்கு விரைவில் டும்டு
                  Posted in சினிமா

                  ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரியா பவானி

                  ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரியா பவானி

                  தமிழில் அதிக படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

                  ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரியா பவானி சங்கர்
                  பிரியா பவானி சங்கர்


                  தமிழில் அதிக படங்களில் நடித்து வருபவர் பிரியா பவானி சங்கர். அந்த வகையில் எஸ்.ஜே. சூர்யாவுடன் பொம்மை, ஹரீஷ் கல்யாண் உடன் பெல்லி சூப்புலு தெலுங்கு பட ரீமேக், அதர்வாவின் குருதி ஆட்டம், சிம்பு தேவனின் கசடதபற , ஜீவாவின் களத்தில் சந்திப்போம் என ஒரு பெரும் பட்டியலே பிரியா பவானி சங்கர் கைவசம் இருக்கிறது.

                  பிரியாவின் முக்கிய பொழுதுபோக்கு சமூகவலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது தான். ஆனால் அது சில நேரம்

                  அவருக்கு தர்ம சங்கடத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. சமீபத்தில் ஒரு சமூக பிரச்சினை தொடர்பாக நடிகை பிரியா வெளியிட்ட

                  பதிவிற்கு பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து சண்டையிட்டுள்ளார்.பிரியா பவானி சங்கர்

                  இதனால் கோபமான பிரியாவின் ரசிகர்கள் அந்த பெண்ணை மோசமாக விமர்சித்து இருக்கின்றனர். இது பற்றி பதிவு ஒன்றை

                  வெளியிட்டுள்ள பிரியா பவானி சங்கர் அதில் கூறியிருப்பதாவது, ’சமீபத்தில் நான் வெளியிட்ட பதிவிற்கு பெண் ஒருவர் எதிர்ப்பு

                  தெரிவித்தார். அவருக்கு நான் நாகரிகமான முறையில் பதில் சொன்னேன் . ஆனால் சிலர் அந்த பெண் மீது அசிங்கமான

                  வார்த்தைகளை பிரயோகம் செய்திருந்தார்கள் . அது எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு ஆதரவாக பேசுவதற்காக மற்றொருவரை

                  இழிவாக பேசுவதை நான் பொறுத்துக்கொள்ள முடியாது’ இவ்வாறு நடிகை பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ளார்.

                      Posted in சினிமா

                      பிகினி உடை அணிய சொல்லி 6 மாதமாக நடிகையிடம் கெஞ்சிய படக்குழு

                      பிகினி உடை அணிய சொல்லி 6 மாதமாக நடிகையிடம் கெஞ்சிய படக்குழு

                      பிகினி உடையில் நடிக்கச் சொல்லி படக்குழுவினருக்கு என்னை ஆறு மாதகாலமாக கேட்டனர் என்று நடிகை கிரண் கூறியிருக்கிறார்.

                      கிரணிடம் பிகினி உடை அணிய சொல்லி 6 மாதமாக கேட்ட படக்குழுவினர்
                      நடிகை கிரண்


                      ‘ஜெமினி’ படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானவர் கிரண்.

                      தொடர்ந்து அஜித்துடன் ‘வில்லன்’, பிரஷாந்துடன் ‘வின்னர்’, கமல்ஹாசனுடன்

                      ‘அன்பே சிவம்’, எஸ்ஜே சூர்யாவின் ‘நியூ’ உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

                      குறிப்பாக சுந்தர்.சி இயக்கத்தில் பிரசாந்த், வடிவேலுவுடன் அவர் நடித்த ‘

                      வின்னர்’ படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இந்த படத்தின் பாடல்

                      காட்சி ஒன்றில் பிகினி உடை அணிந்தது குறித்து வீடியோவுடன் நினைவுகளை பகிர்ந்துள்ளார் கிரண்.

                      அதில், ”பிகினி உடையில் நான் முதலும் கடைசியுமாக நடித்த காட்சி.

                      என்னை 2 பீஸ் உடையில் நடிப்பதற்காக 6 மாதமாக என்னிடம் கேட்டனர்

                      . ஆனால் அந்த உடை அணிவது குறித்து என்னிடம் நிறைய கேள்விகள்

                      இருந்தது. படப்பிடிப்பின் போது உடல் எடை பிரச்சனையாக இருந்தது.

                      ஆனால் அந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டானது என்று குறிப்பிட்டுள்ளார்

                          Posted in சினிமா

                          ஜோதிகா சம்பளம் என்ன? – சூர்யா பதில்

                          ஜோதிகா சம்பளம் என்ன? – சூர்யா பதில்

                          பொன்மகள் வந்தாள் படத்துக்கு ஜோதிகாவின் சம்பளம் என்ன

                          என்ற கேள்விக்கு சூர்யா பதில் அளித்துள்ளார்.

                          ஜோதிகா சம்பளம் என்ன? – சூர்யா பதில்
                          ஜோதிகா, சூர்யா


                          சூர்யாவும் ஜோதிகாவும் நேரலையில் பேட்டி அளித்தனர். அப்போது “’36 வயதினிலே’ படத்துக்கு என்ன சம்பளம் தந்தீர்கள் என்பது பற்றி

                          அப்போது கூறியிருந்தீர்கள், அது இப்போது மாறியிருக்கிறதா? ’பொன்மகள்

                          வந்தாள்’ படத்துக்கு ஜோதிகாவின் சம்பளம் என்ன?” என்று சூர்யா -ஜோதிகா தம்பதியிடம் கேள்வி எழுப்பினர்.

                          அதற்கு சூர்யா, “2 டி நிறுவனமே ஜோதிகாவின் சம்பளத்தை வைத்துத்தான் நடக்கிறது. நாங்கள் எங்களுக்குள் மாற்றி மாற்றி

                          பணச் சுழற்சி செய்வோம்“ என்று பதிலளித்தார். உடனே ஜோதிகா, “இல்லை இல்லை, எனக்கு கிடைத்த மிகப்பெரிய சம்பளமே சூர்யாவின் ஒட்டுமொத்த ரசிகர் மன்றங்கள் தான்.

                          ஜோதிகா, சூர்யா

                          தமிழ்நாட்டில் நடிகர்கள் அளவுக்கு நடிகைகளுக்கு ரசிகர் மன்றம் இருக்காது.

                          எனது ஒரு ட்ரெய்லர், டீசர் வந்தால் ஜோதிகா ரசிகர்கள் பார்ப்பதற்குள்

                          சூர்யாவின் ரசிகர்கள் தான் அதற்குப் பெரிய வரவேற்பைக் கொடுக்கிறார்கள்” என்று கூறினார்.

                          இறுதியாக சூர்யா, “ஆனால் ஜோதிகாவின் வங்கிக் கணக்குக்கு நன்றி.

                          அதை வைத்து 2டி நிறுவனத்தை நாங்கள் தொடர்ந்து நடத்துகிறோம்“ என்று குறிப்பிட்டார்.

                              Posted in உளவு செய்திகள்

                              ரஷியா எல்லை அருகே அமெரிக்கா விமானங்கள் குவிப்பு – ஏன் இந்த பதட்டம் ..?

                              ரஷியா எல்லை அருகே அமெரிக்கா விமானங்கள் குவிப்பு – ஏன் இந்த பதட்டம் ..?

                              ரசியா நாட்டின் எல்லையில் இருந்து சுமார் பத்து கிலோ மீட்டர்

                              தொலைவில் அமெரிக்காவின் மூன்று மிக முக்கிய விமானங்கள் பறக்க விட பட்டுள்ளன

                              திடீரென அமெரிக்கா இராணுவத்தின் விமானங்கள் குவிக்க பட்டுள்ளது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது

                              ரசியா ,சீனா,வடகொரியா,ஈரான் இணைந்து அமெரிக்கா மீது பெரும் தாக்குதல் ஒன்றை தொடுக்கலாம் என அமெரிக்கா எதிர் பார்க்கிறது ,

                              சிரியாவில் அமெரிக்காவினை ஆழம் பார்த்த அமெரிக்காவின் போரியல்

                              யுத்திகள்,மற்றும் அரசியல் நகர்வுகள் என்பனவும் ,அங்கு அறிமுக படுத்த

                              பட்ட புதிய போராயுத பயன்பாடுகள் விளைவே இந்த பரபரப்புக்கு காரணமாக அமைந்துள்ளது

                              அது தவிர அமெரிக்காவை விட பத்து மடங்கு அதிக பாதுகாப்பு நிதியை ஒதுக்கி ரசியா இரகசியமாக தனது நகர்வுகளை முடக்கிவிட்டுள்ளது

                              புதிய ஆயுத தயாரிப்பு ,மற்றும் அமெரிக்காவின் ஏவுகணைகளை செயல்

                              இலக்க வைக்கும் அமெரிக்காவின் விமானங்களின் நடமாட்டங்கள் ,அதில் பொருத்த

                              பட்டுள்ள கருவிகள் என்பனவற்றை கண்டறியும் நோக்குடனே இந்த விமானங்கள் அந்த பகுதிகளில் சுற்றி பறக்கின்றன

                              அப்படி என்றால் கொரனோ முடிவில் உலக சண்டியர் ஏதோ ஒரு நாடு

                              மீது போரை தொடுக்க போகின்றார் என்பதற்காக சிக்னலாக இதனை பார்க்கலாம்

                              • வன்னி மைந்தன் –
                                  Posted in உளவு செய்திகள்

                                  இரண்டு உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய சவூதி

                                  இரண்டு உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய சவூதி

                                  சவூதி நாட்டின் எல்லையோரத்தில் கண்காணிப்பில் ஈடுப்பட்டு கொண்டிருந்த

                                  Houthis in Yemen இராணுவத்தின் இரண்டு உளவு விமானங்களை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சவூதி தெரிவித்துள்ளது

                                  தமது இலக்குகள் மீது தாக்குதல் தொடுக்கும் நோக்குடன் இவை உளவு

                                  பார்த்தலில் ஈடுபட்டிருந்த பொழுது தாம் இதனை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது

                                  தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையில் மோதல்கள் தீவிரமாக இடம் பெற்ற

                                  வண்ணம் உள்ளது ,இதே போல சவுதியின் உளவு விமானங்களையும் இதே

                                  இராணுவத்தினர் கடந்த வாரம் சுட்டு வீழ்த்தி இருந்தமை குறிப்பிட தக்கது

                                  இரண்டு உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய
                                  இரண்டு உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய

                                      Posted in உளவு செய்திகள்

                                      போர்களமான அமெரிக்கா – வெடித்து பறக்கும் மோதல் – வீடியோ

                                      போர்களமான அமெரிக்கா – வெடித்து பறக்கும் மோதல் – வீடியோ

                                      அமெரிக்காவில் காவல்துறையின் இனவெறியால் கறுப்பினத்தவர் காலில்

                                      போட்டு கழுத்தில் நெரித்து படுகொலை செய்ய பட்டார் ,மேற்படிசி காட்சியை

                                      படம் பிடித்த பெண்மணி ஒருவர் அதனை வெளியிட்டார் அதுவே தற்போது அமெரிக்காவில் போராக வெடித்துள்ளது

                                      எனினும் இந்த சம்பவங்களின் பின்னரும் காவல்துறையினர் இரும்பு கரம்கொண்டு மக்களை அடக்கி வரும் நிகழ்வுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

                                      இந்த மக்கள் மோதல்களின் பின்புலத்துடன் டிரம்ப் ஆட்சி கவிழ்க்க படும் நிலை தோற்றம் பெற்றுள்ளது

                                          Posted in சினிமா

                                          கொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி…. சோகத்தில் குஷ்பு

                                          கொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி…. சோகத்தில் குஷ்பு

                                          நடிகையும், அரசியல் ஆர்வலருமான குஷ்புவின் நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனா பாதிப்பால் பலியாகி உள்ளார்.

                                          கொரோனாவால் நெருங்கிய உறவினர் பலி…. சோகத்தில் குஷ்பு
                                          குஷ்பு


                                          கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. இதன் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம்

                                          உள்ளது. குறிப்பாக கொரோனா அதிகம் பதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்

                                          கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பும் 2 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

                                          இந்த நிலையில் மும்பையில் உள்ள தனது நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக நடிகை குஷ்பு தனது

                                          டுவிட்டர் பக்கத்தில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து

                                          குஷ்புவுக்கு திரைத்துறையினரும், ரசிகர்களும் டுவிட்டரில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

                                              Posted in சினிமா

                                              தனிமைப்படுத்தப்பட்டது ஏன்? – வீடியோ வெளியிட்ட பிந்து மாதவி

                                              தனிமைப்படுத்தப்பட்டது ஏன்? – வீடியோ வெளியிட்ட பிந்து மாதவி

                                              தமிழ் திரையுலகில் வளர்ந்துவரும் நடிகையான பிந்துமாதவி, 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

                                              தனிமைப்படுத்தப்பட்டது ஏன்? – வீடியோ வெளியிட்ட பிந்து மாதவி
                                              பிந்து மாதவி


                                              கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்த பிந்து மாதவி, பிக்பாஸ் நிகழ்ச்சியில்

                                              கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார். அடுத்ததாக மாயன், யாருக்கும்

                                              அஞ்சேல் போன்ற படங்களில் நடித்துவந்த அவர், கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி உள்ளார்.

                                              இந்நிலையில் நடிகை பிந்துமாதவி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

                                              செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் மாநகராட்சி ஊழியர்கள் அந்தக் குடியிருப்புக்கு சீல் வைப்பதையும் தனது டுவிட்டர்

                                              பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். மேலும் அங்கு வசிக்கும் அனைவரும்

                                              14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நடிகை பிந்து மாதவி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்

                                                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                                  இவர் தான் கடவுள்

                                                  இவர் தான் கடவுள்

                                                  எழுதாத புத்தகத்தை
                                                  எடுத்து படிக்கத் தான்
                                                  அழகாய் ஒரு கூட்டம்
                                                  அலைகிறது இங்கே …

                                                  கண்ணீரில் மகிழவும்
                                                  கை தட்டி சிரிக்கவும் …
                                                  ஏய் மனித இங்கே
                                                  ஏராளம் கூட்டம் ….

                                                  வாயடி ஓசையில்
                                                  வானத்தில் வெடிகள் …
                                                  ஆடையில்லா நிலவு
                                                  அசிங்க மானது ….

                                                  அம்மணமாய் ஒருவன்
                                                  அருகில் இருக்க ..
                                                  பசியோடு ஒருவன்
                                                  பக்கம் இருக்க …

                                                  கண்டு கொள்ள மனிதங்கள்
                                                  கை தொழுதென்ன …?
                                                  ஆண்டவனை தேடுகிறாய்…..
                                                  அருகில் உள்ளான் காணலையோ …..!

                                                  வன்னி மைந்தன்
                                                  ஆக்கம் -31-05-2020

                                                  வன்னி மைந்தன் கவிதைகள்

                                                      Posted in மருத்துவம்

                                                      இரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை

                                                      வலிப்பு வந்தால் இரும்பு பொருட்களை கொடுப்பது மூட நம்பிக்கை

                                                      எவ்வாறு ஏற்படுகிறது
                                                      மூளையில் உள்ள நரம்பு செல்கள் உட்பட உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம் நரம்பு

                                                      செல்கள் தேவையற்ற மற்றும் அளவுக்கு அதிகமான மின்னணு தன்மையை வெளிப்படுத்தும் விளைவே வலிப்பு நோயாக பாதிப்பு

                                                      ஏற்படுத்துகிறது. மூளை பகுதிகளில் விபத்து, நோய், அறுவை சிகிச்சை போன்றவற்றால் தழும்புகள் ஏற்பட்டு இருந்தாலோ, ரத்த

                                                      கசிவு, தொற்று, மூளையில் பூச்சிகட்டி, மூளை காய்ச்சல் போன்றவற்றால் இந்த வலிப்பு நோய் ஏற்படுகிறது.

                                                      மூட நம்பிக்கை
                                                      எந்த வயதிலும், யாருக்கு வேண்டுமானலும் வலிப்பு ஏற்படலாம். ஆயிரம் பேரில் 3 அல்லது 5 என்ற அளவில் இந்த பாதிப்பிற்கு

                                                      ஆளாகியுள்ளனர் என்று ஆய்வு தகவல்கள் தெரிவிக்கிறது. வலிப்பு நோய் என்பது சமூகத்தில் ஒரு புறக்கணிக்கப்படும் நோயாக

                                                      கருதப்படுகிறது. இது குறித்த போதிய விழிப்புணர்வு இன்றளவும் மக்களிடையே இல்லை என்பதே உண்மை நிலை. இன்றைய

                                                      சமூகத்தில் தற்போதும் வலிப்பு நோய்க்கு கைகளில் சாவி, கத்தி, சங்கிலி போன்றவைகள் கொடுக்கும் பழக்கம் உள்ளது. இது முற்றிலும் தவறான மூட நம்பிக்கை.

                                                      தெரிந்து கொள்ள வேண்டியவை
                                                      வலிப்பு ஏற்படும் போது அதற்கான முதலுதவி செய்து உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும். இந்த நேரங்களில் பாதிக்கப்பட்ட

                                                      நபரை 3 அல்லது 4 நிமிடம் ஒரு நிலையாக படுக்கவைத்து அவரின் உடைகளை தளர்த்தி விடவேண்டும், காற்றோட்டத்தை

                                                      விடவேண்டும், வலிப்பின் போது நாக்கை கடித்துக்கொள்வார்கள் அதனை செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக

                                                      இத்தகைய பாதிப்புக்கு உள்ளாவோர் தொடர்ந்து 3 அல்லது நான்கு ஆண்டுகள் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ளவேண்டும்.

                                                      இதற்கான மருந்துகள் அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கின்றது. நூற்றில் 3 பேர் அலட்சியத்தின் காரணமாகவே இறந்துவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு

                                                      எப்போதும் ஒரு துணை அவசியம். வலிப்பு வருபவர்களை வேலைக்கு அமர்த்தவோ, பள்ளிகளில் சேர்க்கவோ, திருமணம்

                                                      போன்ற பல்வேறு சூழலில் ஒதுக்கப்படுகின்றனர். வலிப்பு நோய் வந்த 70 சதவீதம் பேர், மாத்திரை, ஊசிகள் மூலம்

                                                      குணமடைகிறார்கள். 30 சதவீத பேருக்கு அறுவை சிகிச்சை முறை அவசியப்படுகிறது.

                                                      Posted in மருத்துவம்

                                                      உடலுறவால் தொற்றக்கூடிய நோய்கள்

                                                      உடலுறவால் தொற்றக்கூடிய நோய்கள்

                                                      உடலுறவால் தொற்றக்கூடிய நோய்கள்
                                                      இந்நோய்கள் உடலுறவால் பரவக்கூடியவை. நோய் உண்டாக்கும்

                                                      பாக்டீரியா மற்றும் வைரஸ்கள், பாலியல் உறுப்புகள் , விந்து மற்றும் பெண்ணுறுப்பு திரவங்கள் மற்றும் வாய், தொண்டை, குதம் போன்ற இடங்களில் காணப்படும்.

                                                      உடலுறவால் தொற்றும் சில நோய்கள்

                                                      சிபிலிஸ் – Syphilis,
                                                      ஹெர்பிஸ் – Herpes,
                                                      கொனோரியா – Gonorrhea


                                                      நான் கோனோகோக்கல் யுரித்ரைடிஸ் – Non Gonococcal Urethritis
                                                      சான்கிராயிட் – Chancroid
                                                      டிரைகோமோனஸ் வஜைனாலிஸ் – Trichomonas Vaginalis


                                                      வார்ட்ஸ்( ஹெச்.பி.வி) – Warts – Human Papilloma Virus -HPV
                                                      லிம்போகிரானுலோமா வெனீரம் – Lymphogranuloma venereum
                                                      பாலியல் நோய் அறிகுறிகள்

                                                      பாலுறுப்புகளில் புண்கள்,
                                                      பாலுறுப்பு பகுதிகளில் வித்தியாசமான வளர்ச்சி,


                                                      சிவப்பு நிற தழும்புகள்,
                                                      விதை வீக்கம்,
                                                      பெண்களுக்கு அடி வயிறு வலி,


                                                      சிறுநீர் அடிக்கடி கழித்தல், வலி,
                                                      பாலியல் நோய்கள் அதிகரிக்க காரணங்கள்
                                                      பாலியல் நோய் அறிகுறி உள்ளவருடன் அல்லது நோய் உள்ளவருடன் உடலுறவு,


                                                      ஒருவருக்கு மேற்பட்டோரிடம் உடலுறவு,
                                                      பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் துணையுடன் உடலுறவு கொள்ளுதல்,


                                                      பணம், உணவு, உறையுள் போன்ற விடையங்களுக்காக் பல முறை உடலுறவு கொள்ளல்,
                                                      அதிக பயணம் செய்வோர்,


                                                      நீண்ட கால தாம்பத்திய வாழ்க்கை அற்றவர்கள்.
                                                      பாலியல் நோய்கள் தொற்றுவது எவ்வாறு

                                                      உடலுறவு-வாய், யோனி, குத உடலுறவு,
                                                      தாயிலிருந்து குழந்தைக்கு- பிரசவம் மற்றும் பாலூட்டல்,
                                                      ஊசிகள் பகிர்ந்து கொள்ளல்,


                                                      சோதனை செய்யப்படாத இரத்த ஏற்றம்,
                                                      மருத்துவ பரிசோதனையின் போது கவனமின்மை


                                                      பாலியல் நோய்களின் விளைவுகள்
                                                      பலோபியன் குழாய் சேதத்திற்கு பாலியல் நோய்கள் மிகமுக்கிய காரணமாகும்.

                                                      பிரசவத்தின் போது குணப்படுத்தாத சிபிலிஸ் மூலம் 4ல் ஒரு குழந்தை இறந்து பிறக்கிறது.


                                                      HIV போன்ற பாலியல் நோய்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து, மரணத்தையும் ஏற்படுத்தலாம்.


                                                      HPV வைரஸ் மூலம் கருப்பை கழுத்து புற்று நோய் ஏற்படலாம்
                                                      கொனோரியா அறிகுறிகள்
                                                      பெண்: அறிகுறிகள் இல்லை,

                                                      யோனி வெளியேற்றம்

                                                      சிறுநீர் கழிக்கும் போது வலி

                                                      ஆண்: வெளியேற்றம் மற்றும் வலி

                                                      ஹெர்பிஸ் அறிகுறிகள்
                                                      பெண்: வலிமிக்க புண்கள், பெண்ணுறுப்பு, யோனிமடல், குதம், தொடை பகுதிகளில்

                                                      ஆண்: ஆண்குறியில் வலி மிகுந்த புண்கள், தலைவலி, மூட்டு வலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளும் காணப்படலாம், 70% பேர் நோய்

                                                      அறிகுறி அற்றவர்கள், நோய் ஏற்பட்ட பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு மீண்டும் நோய் ஏற்படலாம். இரண்டாம் முறை

                                                      சிறிய, குறைவான புண்கள் வரும். கால், இடுப்பு, தொடை பகுதிகளில் வலி ஏற்படலாம்.

                                                      நான் கோனோகோக்கல் யுரித்ரைடிஸ் கிளாமீடியா – அறிகுறிகள்
                                                      பெண்: அறிகுறிகள் இல்லை, பெண்ணுறுப்பு யோனி திரவ வெளியேற்றம் சிறுநீர் கழிக்கும் போது வலி,

                                                      ஆண்: அறிகுறிகள் இல்லை சிலவேளை ஆணுறுப்பு திரவ வெளியேற்றம் மற்றும் வலி.

                                                      சிபிலிஸ் – அறிகுறிகள்
                                                      பெண்: வலியற்ற புண்: யோனி, கருப்பை கழுத்து, வாய், மூக்கு, குதம் பகுதிகளில்.

                                                      ஆண்: ஆண் குறி, மூக்கு, வாய், விதையில் வலியற்ற புண்கள், குணப்படுத்தவில்லை எனில் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை

                                                      சிபிலிஸ்க்கு முன்னேறும், ஆரம்ப புண்கள் சில நாட்களில் குணமடைந்து விடும். அதன் பின் காய்ச்சல், நிண்நீர் கட்டி, ஈரல்

                                                      வீக்கம், மூட்டு வலி ஏற்படும், இந்த அறிகுறிகள் பல நாட்கள் அல்லது மாதங்கள் காணப்படும்.

                                                      சான்கிராயிட் – அறிகுறிகள்
                                                      பெண்: வலி மிக்க, வடிவமற்ற புண்கள், பெண்ணுறுப்பு, யோனி

                                                      அருகே மற்றும் குதம் அருகே. சிறு நீர் கழிக்கும் போது எரிச்சல்,குதம் வழியாக இரத்தம் சிலவேளை அறிகுறிகள் இல்லை

                                                      ஆண்: வலி மிகுந்த வடிவமற்ற புண்கள் ஆண்குறியில்

                                                      ஓமியோபதி சிகிச்சை
                                                      நோயின் அறிகுறிக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் நல்ல

                                                      பலனளிக்கும். பாதுகாப்பான பக்கவிளைகள் இல்லாத ஹோமியோபதி மருந்துகள் நோய் அறிகுறிகள் விரைவில் குறைய வைக்கும்.

                                                          Posted in மருத்துவம்

                                                          பிறப்புறுப்பு புண் ஒத்தவகை நோய்கள்

                                                          பிறப்புறுப்பு புண் ஒத்தவகை நோய்கள்

                                                          பிறப்புறுப்பில் புண் அல்லது இரணம்
                                                          வாய், உதடுகள் மற்றும் ஆசனவாயிலும் புண்கள் தோன்றலாம்


                                                          புண்கள் ஒற்றையாகவும் பலவாகவும் இருக்கலாம், வலியோடும் வலி இல்லாமலும் இருக்கலாம்
                                                          ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்கமுமோ நெறிகட்டலாம்


                                                          பரவும் முறை
                                                          பிறப்புறுப்பில் ஏற்படும் புண்கள் பிறப்பு வாய் ஆண் குறி

                                                          ஆசனவாய் மலக்குடல் வாய் மற்றும் உதட்டில் உள்ள புண்களோடு தொடர்பு ஏற்படும்போது பரவுகின்றன.

                                                          இவை சிபிலிஸ் என்ற கிரந்தி, டோனோவானோசிஸ் அல்லது கிரானுலோமா இங்குனேல் ஆகியவற்றால் ஏற்படுகின்றன.


                                                          புண்கள் ஆறிவிட்டது போல் தோன்றினாலும் புண்கள் இல்லாவிட்டாலும் கூட இவை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு

                                                          தொற்றும் வாய்ப்பு உள்ளது.
                                                          தடுப்பு முறை
                                                          உடலுறவுத் துணைவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும்

                                                          வாய்ப்புகளை குறைப்பது. துணைவர்கள் புண்கள் முழுமையாக ஆறும் வரையில் எந்த வகையிலும் புண்களோடு தொடர்பு ஏற்படாதவகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

                                                          பொதுவான அறிகுறிகள்
                                                          புண்கள் முழுமையாக குணமாகும் வரை உடலுறவை தவிர்ப்பதும், அல்லது ஆணுறை பயன்படுத்தி உடலுறவு கொள்வதும் நோய்

                                                          தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள உதவும் மிக எளிய முறைகளாகும்.

                                                          சிகிச்சை
                                                          இன உறுப்பு புண் ஒத்தவகை நோய்களை (அக்கி நீங்கலாக) பென்சாத்தின் பென்சிலின் ஊசி மருந்தை ஒரே முறையும்

                                                          அசித்ரோமைசின் மாத்திரை ஒரே முறையும் மருத்துவரின் கண்காணிப்பில் கொடுக்க வேண்டும்.


                                                          மருந்துக்கு ஒவ்வாமை உள்ளதா என்று கண்காணிக்கவும்
                                                          மருந்து செலுத்தப்பட்டதால் ஏதேனும் சிரமத்தை உணர்ந்தால்

                                                          நோயாளி உடனே மருத்துவமனைக்கு வரவேண்டும்
                                                          சிகிச்சை முடிந்து ஏழு நாட்கள் கழித்து நோயாளி தொடர்

                                                          கண்காணிப்புக்கு மருத்துவமனைக்கு வரவேண்டும்.
                                                          மருந்து

                                                          4 பென்சாத்தின் பென்சிலின் 2.4 மில்லியன் யுனிட் ஊசி மருந்தை இரண்டு பிரிவுகளாக பிரித்து சோதனை ஊசி போட்டு ஒவ்வாமை

                                                          ஏற்படவில்லை என்பதை உறுதி செய்தபின் இரண்டு புட்டங்களிலும் ஒவ்வொன்றாக போட வேண்டும். அசித்ரோமைசின் 1 கிராம். ஒரே வேளை ஒரு நாள் மட்டும்.


                                                          4 நோயாளிக்கு பென்சிலின் ஒவ்வாமை இருந்தால் மருந்துப்பை எண் 4ல் உள்ள டாக்சிசைக்ளின் 100 மிகி மாத்திரையை இரண்டு

                                                          வேளை வீதம் 15 நாட்களுக்கு கொடுக்க வேண்டும். அத்துடன் அசித்ரோமைசின் 1 கிராம். ஒரே வேளை ஒரு நாள் மட்டும் கொடுக்க வேண்டும்.
                                                          விளைவுகள்

                                                          இன உறுப்பு புண் ஒத்தவகை நோய்களை (அக்கி நீங்கலாக) முறையாக சிகிச்சை செய்யாமல் விட்டாலோ அரைகுறையாக

                                                          சிகிச்சை எடுத்தாலோ சிறிது காலம் கழித்து ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம்.


                                                          சிகிச்சை செய்யாமல் விட்டுவிட்டால் சிபிலிஸ் நோய் நரம்பு மண்டலம் மற்றும் இதயத்தை பாதித்து மரணத்துக்கு காரணமாகிவிடும்.


                                                          சிபிலிஸ் நோய் கருவுற்ற பெண்களிடமிருந்து குழந்தைக்கு பரவி குழந்தை இறந்து பிறக்கவும் குறையுடன் பிறக்கவும் காரணமாக அமைந்துவிடுகிறது. கருவுற்ற தாய்க்கு பரிசோதனை செய்து

                                                          சிபிலிஸ் நோய்க்கு சிகிச்சை செய்வதால் இதை தடுக்க முடியும்.
                                                          மிக முக்கியமாக பிற பால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க

                                                          மண்டல நோய் தொற்றுக்கள் போல் இன உறுப்பில் புண் உள்ள நபருக்கு 5 முதல் 10 மடங்கு எச்ஐவி தொற்று ஏற்படும் ஆபத்து

                                                          உள்ளது.
                                                          துணைவரை பரிந்துரை செய்தல்

                                                          நோயாளி கடந்த மூன்று மாதங்களில் தொடர்பு கொண்ட உடலுறவுத்துணைவர்ஃகளுக்கு தனக்கு பால்வினை நோய்

                                                          உள்ளதை தெரிவித்து அவர்களையும் சிகிச்சை மையத்திற்கு சிகிச்சை பெற அழைத்து வர ஊக்கப்படுத்த வேண்டும்.
                                                          எச்சரிக்கை

                                                          ஒரு சில மருந்துகளை கர்ப்பகாலத்தில் உட்கொள்வது ஆபத்தானது. எனவே நோயாளியின் அல்லது அவரது பெண் துணைவரின் கர்ப்ப நிலையை தெரிந்து கொண்டு மருந்து கொடுப்பது நல்லது.


                                                          கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது துணைவர்கள் தங்கள் மருத்துவரிடம் அவர்களின் கர்ப்பத்தை தெரிவிக்க வேண்டும்.

                                                          அப்போதுதான் மருத்துவர் குழந்தைக்கு தொற்று பரவாமல் காப்பாற்ற முடியும்.

                                                              Posted in சினிமா

                                                              48 கோடி ரூபாயில் அலுவலகம் அமைத்த கங்கனா ரனாவத்

                                                              48 கோடி ரூபாயில் அலுவலகம் அமைத்த கங்கனா ரனாவத்

                                                              பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி 48 கோடி ரூபாயில் அலுவலகம் அமைத்து இருக்கிறார்.

                                                              பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி 48 கோடி ரூபாயில் அலுவலகம் அமைத்த கங்கனா ரனாவத்
                                                              கங்கனா ரனாவத்


                                                              பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், மணிகர்ணிகா பிலிம்ஸ் என்ற பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

                                                              இந்த நிறுவனத்துக்காக மும்பையின் பெரும்புள்ளிகள் இருக்கும் பாந்த்ராவின் பாலி ஹில் பகுதியில் ஒரு மாளிகையை வாங்கி வடிவமைத்துள்ளார். இ

                                                              இதற்காக அவர் செலவழித்திருக்கும் தொகை 48 கோடி ரூபாய். மூன்று மாடி கொண்ட இந்த மாளிகையைப் பற்றி சமீபத்தில் பேசியுள்ள கங்கனா ரனாவத், “நான் சொந்தமாக ஒரு

                                                              ஸ்டுடியோவைக் கட்ட நினைத்தேன். ஆனால் நடுவில் ‘ரங்கூன்’, ‘சிம்ரன்’ உள்ளிட்ட சில படங்கள் ஓடவில்லை. அதனால் சற்று

                                                              தள்ளிப் போட்டேன். ‘மணிகர்ணிகா’வுக்குப் பிறகும் நிலை மீண்டும் மாறியது. எனக்குப் பிடித்த விதத்தில் நான் மொத்தமாக என் மாளிகையைக் கட்டமைத்துக் கொண்டேன்.

                                                              எனது ஆடிட்டர், ஏன் இந்த சொத்தில் பணத்தைப் போடுகிறீர்கள். வழக்கமாக நீங்கள் எந்த தயாரிப்பு நிறுவனத்துக்காக

                                                              பணியாற்றுகிறீர்களோ அவர்களே உங்களுக்கான இடத்தை வாடகைக்கு எடுத்துத் தருவார்களே. இந்த பணத்தை வைத்து

                                                              பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள் அல்லது உணவகத்தை வாங்குங்கள். குறைந்தது 40-50 லட்சம் வருடத்துக்கு வாடகையே கிடைக்கும் என்றார்.

                                                              என் பெற்றோர் உட்பட அனைவருமே நான் பணத்தை வீணடிக்கிறேன் என்று நினைத்தனர். ஆனால் இப்போதும் இது

                                                              எனக்கு ஒரு சவால் தான். இது நல்ல முதலீடா இல்லையா என்பதை நானே போகப் போகப் தெரிந்துகொள்வேன்” என்று கூறியுள்ளார்

                                                                  Posted in சினிமா

                                                                  பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த சாயிஷா

                                                                  பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த சாயிஷா

                                                                  தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் சாயிஷா, பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

                                                                  பிகினியில் அசத்தல் போஸ் கொடுத்த சாயிஷா…. வைரலாகும் புகைப்படம்
                                                                  சாயிஷா


                                                                  ஊரடங்கு நேரத்தில் தமிழ் திரைப்பட நடிகைகள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வித்தியாசமான வேடிக்கையான

                                                                  நகைச்சுவையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

                                                                  அந்த வகையில் ஏற்கனவே நடிகை சாயிஷா ஒரு சில வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நிலையில்

                                                                  தற்போது பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

                                                                  மேலும் இந்த புகைப்படத்துடன் தண்ணீரை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.

                                                                      Posted in சினிமா

                                                                      சமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்கள்

                                                                      சமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்கள்

                                                                      சமூக வலைத்தளத்தில் நடிகைகள் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டேவின் ரசிகர்கள் மோதிக் கொண்டுள்ளனர்.

                                                                      சமூக வலைத்தளத்தில் மோதிக்கொண்ட சமந்தா, பூஜா ஹெக்டே ரசிகர்கள்
                                                                      சமந்தா


                                                                      சமூக வலைத்தளத்தில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அடிக்கடி சண்டை போட்டு வருவார்கள். அந்த வரிசையில் தற்போது சமந்தா ரசிகர்களும், பூஜா ஹெக்டே ரசிகர்களும் மோதி கொண்டனர்.

                                                                      நேற்று பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் கணக்கில் சமந்தா புகைப்படத்தை பதிவிட்டு அவர் அழகாக இல்லை என

                                                                      குறிப்பிடப்பட்டு இருந்தது. அதை பார்த்து சமந்தாவின் ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.

                                                                      அது பற்றி விளக்கம் அளித்த பூஜா, தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் ஆகிவிட்டது என்று கூறி இருந்தார். அதன் பிறகு சற்று நேரம்

                                                                      கழித்து டெக்னிக்கள் டீம் உதவியுடன் அதை மீட்டதாக தெரிவித்தார். போடப்பட்ட பதிவுகளையும் கணக்கில் இருந்து

                                                                      நீக்கிவிட்டார் பூஜா. ஆனாலும் பூஜா ஹெக்டே மன்னிப்பு கேட்கவேண்டும் என சமந்தா ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டனர்.

                                                                      இந்நிலையில் சமந்தா நடித்த ஓ பேபி படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி இன்ஸ்டாகிராமில் சமந்தாவை பாராட்டி ஒரு பதிவினை

                                                                      போட்டுள்ளார். அதில் கமெண்டில் சமந்தா, சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மூவரும் பூஜா ஹெக்டேவை விமர்சிக்கும் வகையில் பேசிக்கொண்டனர். அந்த கமெண்டுகளை பின்னர் நீக்கிவிட்டனர்.

                                                                      அதன் ஸ்கிரீன்ஷாட் இணையத்தில் வைரலானது. பூஜா ஹெக்டே தவறு செய்தாரா என உறுதியாக தெரியாத நிலையில் இப்படி

                                                                      சமந்தா-சின்மயி மற்றும் நந்தினி ரெட்டி மோசமாக பேசியிருப்பது ரசிகர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

                                                                      இதனால் இருவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மிகவும் மோசமாக சண்டை போட்டுக் கொண்டனர்.

                                                                          Posted in சினிமா

                                                                          இயற்கையின் குரலாக மாறும் பிரகாஷ் ராஜ்பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ்

                                                                          இயற்கையின் குரலாக மாறப்போகிறேன் என்று கூறியுள்ளார்.

                                                                          இயற்கையின் குரலாக மாறும் பிரகாஷ் ராஜ்
                                                                          பிரகாஷ் ராஜ்


                                                                          நடிகர் பிரகாஷ்ராஜ் ஒரு இயற்கை ஆர்வலர். ஊரடங்கு காலத்தைக்கூட தனது பண்ணை வீட்டில் தான் குடும்பத்துடன்

                                                                          செலவிட்டு கொண்டு வருகிறார். அதிலும் இயற்கை விவசாயத்தின் மீதும் அவருக்கு அதிக ஈடுபாடு உள்ளது.

                                                                          சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும், இயற்கையின் மீது கொண்ட ஈடுபாட்டால் சின்னத்திரையில் கால்பதித்துள்ளார்.

                                                                          டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் வைல்ட் கர்நாடகா எனும் நிகழ்ச்சிக்கு அவர் குரல் கொடுக்க முன்வந்துள்ளார்.

                                                                          இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர், ஒரு உபயோகமுள்ள பயணம். இயற்கையின் குரலாக மாறப்போகிறேன். இதற்கு முன்பு

                                                                          இல்லாத அளவுக்கு மிகுவும் சிரமப்பட்டு தயாராக்கப்பட்ட இந்திய வன வாழ்க்கையின் ஆவணப்படம். அதற்கு தமிழ் மற்றும்

                                                                          தெலுங்கில் வர்ணனை கொடுத்ததை மிகவும் சிறப்பாக உணர்கிறேன். இவ்வாறு பிரகாஷ்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.