Author: நிருபர் காவலன்
எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது – யுவன்
எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது – யுவன்
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா, தனக்கு தற்கொலை எண்ணம் வந்ததாக கூறியுள்ளார்.
எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது – யுவன் வெளியிட்ட பகீர் தகவல்
யுவன் சங்கர் ராஜா
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜா, சமீபத்தில் சமூக வலைத்தளம்
வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் ‘அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய
அச்சம் என்ன? நீங்கள் அதிலிருந்து மீண்டது எப்படி?” என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த யுவன், “இஸ்லாம் மதத்தை
ஏற்றுக் கொள்வதற்கு முன் எனக்கும் தற்கொலை எண்ணங்கள் வந்தது. ஆனால் அதையெல்லாம் கடக்க இஸ்லாம் எனக்கு உதவியது” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு யுவன் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். மேலும், தனது பெயரை அப்துல் காலிக் என மாற்றிக்கொண்டார்.
2015ஆம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்பவரை இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்… காதலியை கரம்பிடித்தார் யோகி
ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்… காதலியை கரம்பிடித்தார் யோகி
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் யோகி, ஊரடங்கு சமயத்தில் காதலித்து திருமணம் செய்துள்ளார்.
ஊரடங்கில் காதல் டூ கல்யாணம்… காதலியை கரம்பிடித்தார் யோகி
காதலியுடன் யோகி
பிரபல காமெடி நிகழ்ச்சியான ‘கலக்கப்போவது யாரு’ மூலம் பிரபலமானவர் யோகி. சில படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் யோகி தன் காதலி சவுந்தர்யாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுடைய
திருமணம் கடந்த ஜூன் 24-ந் தேதி எளிமையாக நடைபெற்றது. இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டனர்.
யோகி – சவுந்தர்யா இருவருமே பள்ளி மற்றும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். அப்போது இருவரும் காதலிக்கவில்லை.
சமீபத்தில் கல்லூரி ரீ-யூனியனின் போது சவுந்தர்யாவை சந்தித்துள்ளார். அப்போது காதல் மலர்ந்தாலும், யோகி காதலை வெளிப்படுத்தவில்லையாம்.
யோகியின் திருமண புகைப்படம்
இந்நிலையில் ஊரடங்கு சமயத்தில், எப்படியோ காதலை வெளிப்படுத்தி, இருவருக்கும் பிடித்துப்போனதால், பெற்றோர்கள்
சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு சமயத்தில் இந்தத் திருமணம் நடைபெற்றதால்,
யோகியின் நண்பர்கள் பலரும் சமூக வலைதளத்தில் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்-போலீசார் குவிப்பு
நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்-போலீசார் குவிப்பு
சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
நடிகர் விஜய்
நடிகர் விஜய் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு
கொண்ட மர்ம நபர் நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளதாக மிரட்டல் விடுத்தார்.
அந்த மிரட்டல் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நடிகர் விஜயின் வீட்டிற்கு நள்ளிரவு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரியவந்தது.
இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு
வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.
அதில் விழுப்புரத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு
கொண்டு நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு உள்ளது என பொய்யான
மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், மிரட்டல் விடுத்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
GBP-USD திங்கள் உலக சந்தை நிலவரம் forex trading free signal
GBP-USD திங்கள் உலக சந்தை நிலவரம்
எதிர்வரும் 06-07-2020 அன்று உலக பங்கு சந்தையில் GBP-USD நிலவரம் இதுவாக அமைய பெறலாம்
இலகுவான முறையில் விரைவாக இலாபத்தை பெற்று கொள்ளும் இலக்காக இது உள்ளது
1,25039 மற்றும் 1,24628 மற்றும் 1,24398
இன்றைய முழு நாளுக்குமான இலக்காக 1,25442 தொடர் 1,24029 ஆக நகர்வு அமைய பெறுகிறது ,
மேலே குறிப்பிட ப்பட்ட இலக்கங்கள் மிக இலகுவான முறைமையில் பெற்று கொள்ளும் திசை காட்டி வழிகள் ஊடாக கணிக்க பெற்றுள்ளது
எனவே பங்கு சந்தையில் பணத்தை அள்ளிட நினைப்பவர்கள் பொறுமையாக இருந்து இலக்கு எட்டும் வரை உங்கள் ரேடிங்கை நகர்த்தி செல்லுங்கள்
எனவே சலனம் இன்றி அமைதியாக உங்கள் இலாபத்தை இலக்கை எட்டும் வரை காத்திருந்து பெற்று கொள்ளுங்கள்
இலக்கை சொல்வது நாம் ,வெற்றியை தீர்மானிப்பது நீங்கள் ,முந்துங்கள் ,வெல்லுங்கள் ,பணத்தை அள்ளுங்கள்
நன்றி
வன்னி மைந்தன்
மேலதிக live உதவிகள் தேவைப்படின் தொடர்பு கொள்க – 0044 7536 70 7793

தங்கத்தின் திங்கள் நிலவர சிக்னல் இதோ gold forex signals
தங்கத்தின் திங்கள் நிலவர சிக்னல் இதோ
எதிர் வரும் திங்கள் 06-07-2020 அன்று திறக்க படும் உலக சந்தையின் தங்கத்தின் ஏற்ற இறக்கம் இதுவாக அமையலாம்
இந்த திசை காட்டிகள் மூலம் இலக்கை தொட்டு நகரும் வாய்ப்பு 90 வீதம் உள்ளது ,
அவ்விதமான திசை கட்டி நகர்வுகளை இங்கே மெய்ப்பட கணித்து நாம் தருகின்றோம்
இலகுவாக இலாபத்தை பெற்று கொள்ளும் நகர்வாக கீழ் வரும் இலக்கங்கள் உள்ளன
gold is easy target ஒன்று area 1777 and 1781 and 1774 and 1770
easy target இரண்டு area – 1767 to 1786
மற்றும் நாள் முழுவதற்குமான நகர்வாக இது அமைய பெறலாம் full day target is 1777 and 1788 and 1776 and 1764 and 1758
எனவே சலனம் இன்றி அமைதியாக உங்கள் இலாபத்தை இலக்கை எட்டும் வரை காத்திருந்து பெற்று கொள்ளுங்கள்
இலக்கை சொல்வது நாம் ,வெற்றியை தீர்மானிப்பது நீங்கள் ,முந்துங்கள் ,வெல்லுங்கள் ,பணத்தை அள்ளுங்கள்
நன்றி
வன்னி மைந்தன்
மேலதிக live உதவிகள் தேவைப்படின் தொடர்பு கொள்க – 0044 7536 70 7793
இஸ்ரேலிய இராணுவத்தால் உருவாக்க பட்டுள்ள புதிய Unit 9900 என்ற உளவு படை
இஸ்ரேலிய இராணுவத்தால் உருவாக்க பட்டுள்ள புதிய Unit 9900 என்ற உளவு படை
இஸ்ரேலிய பாதுகாப்பு அமிச்சினால் தற்போது புதிய Unit 9900 என்ற குறியீட்டு
பெயர் கொண்ட புதிய சிறப்பு உளவுத்துறை படை ஒன்று உருவாக்க பட்டுள்ளது
உலகில் மொசாட் என அழைக்க படும் இஸ்ரேல் உளவுத்துறையினர் மிக சிறந்த புலனாய்வாளர்கள் என பெயர் பெற்று இருக்கும்
பொழுது தற்பொழுது இந்த விசேட படையினர் உருவாக்க பட்டுள்ளனர்
இவர்கள் நாட்டுக்குள் நிலவும் ,எதிரி நாடுகளின் ஊடுருவல் மற்றும் அதன் தற்காப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தும்
மேலும் தமது நாட்டின் மீது மேற்கொள்ள படவுள்ள எதிரி நாடுகளின் தாக்குதல்களை
இந்த அணியினர் முறியடித்து நாட்டை காப்பாற்றி கொள்வார்கள் என தெரிவிக்க படுகிறது
இஸ்ரல் கூறுவது போல ஈரான் ,கிஸ் புல்லாக்கள் நகர்வினையும் தாக்குதல்களையும்
முறியடிக்க முடியுமா என்ற கேள்வியே பரவலாக முன் வைக்க படுகிறது
வரும் காலங்களில் இந்த புதிய உளவுத்துறையினர் நடவடிக்கை உலக நாடுகள் முன் விரித்து வைக்க படும் என்பதில் சந்தேகம் இல்லை

விஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை
விஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தில் பிரபல நடிகரின் தந்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
விஜய்யுடன் இணைந்து நடித்த பிரபல நடிகரின் தந்தை
விஜய்
அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘பிகில்’. புட் பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்த
படத்தில் நடிகர் கதிர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் கதிரின் வேடம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் நடிகர் கதிர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அப்பா – அம்மாவின் போட்டோ பகிர்ந்து உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அதில்,
நடிகர் கதிரின் தந்தை
இருவரது வாழ்க்கை எனக்கு எப்பொழுதும் உத்வேகம் அளிக்கக்கூடியதாக இருக்கும். அவர்களின் கனவும், ஆசையும் தான்
இன்றைக்கு நான் இருக்கும் இடம். 53 வருடங்களுக்கு பிறகு அவர் நடிக்க வேண்டும் என்ற அவரது கனவு மாஸ்டர் படத்தில்
நிறைவேறியது. அது மிகவும் சிறிய வேடம் தான். அவருடைய வாழ்க்கைக் கனவு நிறைவைடைந்தது. பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பா. என்று குறிப்பிட்டுள்ளார்

சிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்
சிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, ப்ரெண்ட்ஷிப் படத்திற்காக சூப்பர் ஸ்டார் பாடல் ஒன்றை பாடியிருக்கிறார்.
சிம்பு குரலில் வெளியான சூப்பர் ஸ்டார் பாடல்
சிம்பு
ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரிக்கும் படம் ப்ரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார்.
அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கிறார். மேலும் நடிகர் அர்ஜூன் இந்தப் படத்தில் வில்லனாகவும், நகைச்சுவை
நடிகர் சதீஷூம் நடிக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை.
ஹர்பஜன்சிங், லாஸ்லியா
படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சூப்பர் ஸ்டார் (Superstar Anthem)
என்ற படத்தின் முதல் பாடலை என்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

போதும்டா சாமி.. பாலியல் நாயகி சின்மயி வேதனை
போதும்டா சாமி.. பாலியல் நாயகி சின்மயி வேதனை
பிரபல பின்னணி பாடகியான சின்மயி தனது சமூக வலைத்தள பக்கத்தில் போதும்டா சாமி என்று வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார்.
போதும்டா சாமி.. பாடகி சின்மயி வேதனை
சின்மயி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரபரப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல்
குற்றங்கள் குறித்த செய்திகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
அறந்தாங்கி பகுதியில் 7 வயது சிறுமி ஜெயப்பிரியா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம்
தமிழகத்தை உலுக்கியது. தமிழக திரைஉலகினர் பலர் ஜெயப்பிரியாவுக்கு நேர்ந்த கொடுமைக்கு குரல் கொடுத்தனர்.
ஜெயப்பிரியாவின் கொடூரம் குறித்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்குள் தற்போது சசிகலா என்ற பெண்ணை இரண்டு
சகோதரர்கள் குளிக்கும்போது ஆபாசபடம் எடுத்து அவரை மிரட்டி கடந்த 4 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துவந்தனர்.
ஒரு கட்டத்தில் அவர்கள் எல்லை மீறியதால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
சின்மயி டுவிட்
ஜெயப்பிரியா கொலையை அடுத்து சசிகலாவுக்கும் நீதி வேண்டும் என சமூக வலைதளங்களில் திரையுலக பிரபலங்கள், உள்ளிட்ட பலர் பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாடகி சின்மயி, ‘போதும்டா சாமி! எதுக்கு பொண்ணா பொறக்குரோம்ன்னு தோணுது’ என்று மிகவும்
வேதனையுடன் பதிவு செய்துள்ளார். பாடகி சின்மயின் இந்த ட்விட்டர் பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.
ஈரான் அணு சோதனை மையத்தை -கைக்கிங் செய்து வெடிக்க வைத்த அமெரிக்கா,இஸ்ரல்
ஈரான் அணு சோதனை மையத்தை -கைக்கிங் செய்து வெடிக்க வைத்த அமெரிக்கா,இஸ்ரல்
ஈரான் தலைநகர் அருகில் மிக இரகசியமாக இயங்கி வந்த அணு உலை
யுரேனியம் தயாரிக்க பட்டு வரும் அனுகூட உலைமீது அமெரிக்கா ,இஸ்ரேல்
கைக்கர்கள் இணைந்து தாக்குதல் நடாத்தி வெடிக்க வைத்துள்ளனர் ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது
இந்த வெடிப்பு சம்பவத்தில் 16 பேர் பிழையாகி இருந்தனர்
மேற்படி நாடுகளே இந்த நாசகார வேலையினை செய்துள்ளதாக நாம் நன்கறிவோம் .
இவர்களின் இந்த செயலுக்குரிய விளைவுகளை அவர்கள் விரைவில் சந்திக்க நேரிடும் என ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது
ஈரான் இரண்டாம் நிலை தலைவரும் புரட்சி காவல் படையின் தளபதியுமாக
விளங்கிய சோலைமானியின் படு கொலையை அடுத்து அமெரிக்கா ,
இஸ்ரேல் ,ஈரானுக்கு இடையில் பலத்த முறுகல் எழுந்துள்ளது ,அவை ஏவுகணை தாக்குதல் போரில் முடிவடைந்தது .
அந்த படுகொலை சம்பவத்திற்கு எதிராக ஈரான் தொடர் ஏவுகணை தாக்குதலை
அமெரிக்கா இராணுவம் மீது நடத்தி வருகிறது ,அவ்வாறான நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுளளது மேலும் முறுகளை அதிகரித்துள்ளது
இவை பெரும் போர் ஒன்றை ஏற்படுத்த கூடும் என அஞ்ச படுகிறது

அரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு
அரசியலில் குதித்த நடிகை நமீதா- பாஜகவில் பொறுப்பு
தமிழக பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார்.
நடிகை நமீதாவுக்கு தமிழக பாஜகவில் பொறுப்பு
நடிகை நமீதா
தமிழக பாரதிய ஜனதா தலைவர் எல்.முருகன் நிர்வாகிகளை மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமியை தமிழக மாநில துணைத்தலைவராக நியமித்து எல்.முருகன் உத்தரவிட்டுள்ளார்.
பொதுச்செயலாளராக இருந்த வானதி சீனிவாசனை தமிழக பாஜக துணைத்தலைவராகவும் நியமித்துள்ளார்.
பாரதிய ஜனதாவில் சேர்ந்த பால் கனகராஜ் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவராகவும், மாநில செயலாளராக இருந்த கே.டி.ராகவன்
தமிழக பாஜகவின் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மத்திய சென்னை கிழக்கு பகுதி செயற்குழு உறுப்பினராக நடிகை நமீதாவை நியமித்துள்ளார்.
கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம்… நடிகை ஜெனிலியாவுக்கு குவியும் பாராட்டு
கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம்… நடிகை ஜெனிலியாவுக்கு குவியும் பாராட்டு
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நடிகை ஜெனிலியா, தனது கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம் செய்துள்ளார்.
கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம்… நடிகை ஜெனிலியாவுக்கு குவியும் பாராட்டு
ரிதேஷ் தேஷ்முக், ஜெனிலியா
கமல்ஹாசன், சூர்யா, சிரஞ்சீவி, சல்மான்கான், பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் தங்களுடைய உடல் உறுப்புகள் அல்லது கண்களை தானம் செய்வதாக ஏற்கனவே
அறிவித்து உள்ளனர். இந்த பட்டியலில் நடிகை ஜெனிலியாவும் தற்போது சேர்ந்துள்ளார். இவர் தனது உடல் உறுப்புகளை தானம்
செய்வதாக அறிவித்துள்ளார். தனது ரசிகர்களும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெனிலியா
இதுபோல் ஜெனிலியாவின் கணவரும் நடிகருமான ரிதேஷ் தேஷ்முக்கும் உடல் உறுப்புதானம் செய்வதாக கூறியுள்ளார்.
இருவருக்கும் சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிகின்றன. ஜெனிலியா தமிழில் பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி சச்சின்,
சென்னை காதல், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தம புத்திரன், வேலாயுதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி
படங்களிலும் நடித்து இருக்கிறார். நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை 2012-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2
குழந்தைகள் உள்ளனர். தற்போது மீண்டும் படங்களில் நடித்து
வருகிறார்.

லண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு
லண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு
பிரித்தானிய உளவு துறையினருக்கு தண்ணி காட்டி வந்த மிக பெரும் மாபியா கும்பல் ஒன்று பிரிட்டன் நாட்டு உளவு துறையின் உதவியுடன் மடக்கி பிடிக்க பட்டனர்
தொலைபேசிகள் ஒட்டு கேட்க முடியாத படி புதிய EncroChat, an encrypted வலையமைப்பை பயன் படுத்தி போதைவஸ்து கடத்தல்
,மற்றும் இரகசிய தொலைபேசி உரையாடல்களை மேற்கொள்ள வசதி செய்து கொடுத்து பல மில்லியன் பணத்தை சம்பாதித்து வந்த
மிக பெரும் மாபியாக்களை நீண்ட நாள் உளவுத்துறை தகவல் தேடுதலின் பின்னர் கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவர்களது இரசகிய மென்பொருளை உடைத்து அக்குவேறாக ஆராய்ந்த உளவுத்துறை தொழில்நுப்ட நிபுணர்கள் ,அதனை ஒட்டு
கேட்க்கும் வழிமுறைகளை சரியாக கணக்கிட்டு அந்த நகர்வை மேற்கொண்டனர்
இதன் வாயிலாக 750 கைது செய்ய பட்டுள்ளனர்
எண்ணூறு மில்லியன் பணம் மீட்க பட்டது அவற்றில் 54 மில்லியன் பணமாக பைகளில் கட்டி வைக்க பட்ட நிலையில் மீட்க பட்டது
77 துப்பாக்கிகள்,நூறுக்கு மேற்பட்ட தோட்டாக்கள் என்பன மீட்க பட்டுள்ளது ,இவற்றுடன் போதைவஸ்துக்களும் மீட்க பட்டுள்ளது
இவர்கள் இந்த கருவியை வாடிக்கையாளர்களுக்கு ஆறுமாத வாடகை அடிப்படையில் 1500 பவுண்டுகள் வசூல் செய்ய பட்டுள்ளது
,இவ்விதம் இதனை அறுபதாயிரம் பேர் பாவித்து வந்துள்ளனர் ,இதில் பிரிட்டனில் இருந்து மட்டும் பத்தாயிரம் பேர் பாவித்துள்ளனர் ,இதில் சில எம்பிகளுக்கும் அடங்கும் என ஒரு தகவல் தெரிவிக்கிறது
இவர்கள் சட்டத்தின் முன் நிறுத்த பட்டு தண்டிக்க பட வேண்டும் என பிரிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது ,
தொடர்ந்தும் ஓடி கொண்டிருப்பவர்களை கைது செய்யும் நகர்வில் உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்
ஐரோப்பா எங்கும் இயங்கிய மிக பெரும் வலையமைப்பு இதன் ஊடாக மடக்கி பிடிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

லண்டனில் ஒட்டு கேட்கமுடியாத தொலைபேசி பாவித்த 60 ஆயிரம் பேர் -மடக்கி பிடிப்பு -750 பேர் கைது-800 மில்லியன் மீட்பு தொடர்ந்தும் ஓடி 


ரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்
ரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்
ரஷியாவின் அரசியலமைப்பில் திருத்தம் செய்யலாமா என்பது தொடர்பாக நடத்தப்பட்ட தேர்தலில் பெரும்பான்மையானோர்
ஆதரவு தெரிவித்துள்ளதால் விளாடிமிர் புதின் 2036 ஆம் ஆண்டுவரை அதிபராக செயல்பட முடியும்.
இனி எந்த தடையும் இல்லை – ரஷியாவின் நிரந்தர அதிபராகும் விளாடிமிர் புதின்
புதின்
விளாடிமிர் புதின் 1999-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ரஷியாவின் அதிபராக பதவியேற்றார். அப்போது முதல் ரஷியாவின் அதிபர் அல்லது பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதேனும் ஒன்றில்
தன்னை நிலைநிறுத்திவந்த புதின் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்றார்.
இதனால் 2024-வரை ரஷியாவில் புதினின் ஆதிக்கம் இருக்கும். இந்த வெற்றியின் மூலம் தொடச்சியாக இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், ரஷியாவில் உள்ள சட்டத்தின்படி ஒரு நபர் தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது.
இதனால், 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் புதின் போட்டியிட முடியாத சூழல் இருந்து வந்தது.
இந்த தடையை நீக்கும் விதமாக அதிபர் தேர்தலில் போட்டுயிடுவதற்கான சட்டத்தை புதுப்பிக்கும் விதமாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதாவின் படி, பழைய நடைமுறைகள் அழிக்கப்பட்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான சட்டம் மீண்டும் முதலில் இருந்தே அமலுக்குவரும்.
அதாவது, ஏற்கனவெ தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்கள் சட்டம் புதிக்கப்பட்டதால் மீண்டும் முதலில் இருந்தே அதிபர் தேர்தலில் போட்டியிடலாம்.
சுருக்கமாக கூற வேண்டுமானால் தற்போது அதிபராக உள்ள புதின் அடுத்துவரும் 2024-ம் ஆண்டு மற்றும் 2030-ம் ஆண்டு ஆகிய இரண்டு தேர்தல்களிலும் எந்தவித தடையும் இன்றி போட்டியிடலாம்.
இதையடுத்து, இந்த மசோதா தொடர்பாக அரசியல் அமைப்பில் திருத்தம் செய்யலாமா? என்பது குறித்து முடிவு செய்ய
பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு கேட்கப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பு தேர்தல் நடைமுறையில் நடைபெற்றது. மக்கள் தங்கள் கருத்துக்களை வாக்குகளாக அளித்தனர்.
இந்த தேர்தலில் 65 சதவிகித மக்கள் வாக்களித்ததாக ரஷிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. பதிவான வாக்குகள் அனைத்தும்
நேற்று எண்ணப்பட்டன. அதில் 77 சதவிகித வாக்காளர்கள் அரசியல் அமைப்பில் திருத்தம் செய்ய ஆதரவு, 23 சதவிகித மக்கள்
சட்டத்திருத்திற்கு எதிராகவும் வாக்களித்துள்ளதாக ரஷிய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நிலவி வந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்.
அதாவது ஏற்கனவே தொடர்ந்து 2 முறை நாட்டின் அதிபராக இருந்த நபர் மேலும் இரண்டு அதிபர் தேர்தல்களில் பங்கேற்கலாம்.
ஆகையால், தற்போது ரஷியாவின் அதிபராக உள்ள புதின் 2024 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளில் நடைபெறும் இரண்டு அதிபர் தேர்தல்களிலும் அவர் பங்கேற்கலாம்.
அந்த தேர்தல்களில் வெற்றிபெறும் பட்சத்தில் 2036-ம் ஆண்டுவரை அதாவது தனது 83 வயது வரை ரஷியாவின் அதிபராக விளாடிமிர் புதின் செயல்படுவதில் இனி எந்த சட்ட சிக்கலும் இல்லை.
இதற்கிடையில் விளாடிமிர் புதின் தனது வாழ்நாள் முழுவதும் அதிபராக இருக்க எல்லா வேலைகளையும் செய்துவருவதாக ரஷிய எதிர்க்கட்சி தலைவரான அலெஸ்சி நவல்னி குற்றச்சாட்டியுள்ளார்.
தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா தொகுப்பாளராக களமிறங்க இருக்கிறார்.
தொகுப்பாளராக களமிறங்கும் தமன்னா…. ஒரு எபிசோடுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?
தமன்னா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் தமன்னா. தற்போது கைவசம் 2 படங்கள் வைத்திருக்கும்
தமன்னா விரைவில் ஒரு டாக் ஷோவில் தொகுப்பாளராக பணியாற்ற போகிறார் என செய்தி பரவி வருகிறது.
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் துவங்கியுள்ள ஆஹா என்ற ஒரு ஓடிடி தளத்திற்காக தான் இந்த ஷோவினை நடத்த உள்ளனர். இந்த
நிகழ்ச்சியில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான அல்லு அர்ஜுன் மற்றும் தமன்னா ஆகியோர் தான் இணைந்து தொகுத்து வழங்க உள்ளனர்.
தமன்னா
இந்த நிகழ்ச்சியினை நடத்துவதற்காக தமன்னாவிற்கு ஏழு லட்சம் ரூபாய் ஒரு எபிசோடுக்கு சம்பளமாக வழங்கப்பட உள்ளது என்றும் தகவல் பரவி வருகிறது.
கொலையான பிஞ்சு – வலியான நெஞ்சு
கொலையான பிஞ்சு – வலியான நெஞ்சு
பர பரப்பு பேச்சு
விறு விறுப்பா போச்சு
பார்க்கும் இடமெல்லாம்
சிறுமி கொலை பேச்சு
பெற்றவளே கொன்றாளாம்
பெரும் துயரை தந்தாளாம்
இத்துயரை தந்திட தான்
இவ்வுலகில் பிறந்தாளாம்
பத்து மாதம் சுமந்தவளே
பாதகத்தை செய்தாளாம்
கத்தி தனை எடுத்து
குற்றறையில துடித்தாளாம்
பெற்றவனை குளிக்க விட்டு
பெரும் கொலையை செய்தாளாம்
கத்தி தங்கை அழுகையிலே
கதறி ஓடி வந்தானாம்
நித்திரையாய் தங்கையவள்
நிலை குலைந்து கிடைக்கையில
கத்தி கத்தி அழுதானம்
களைத்து அவன் விழுந்தானாம்
பெற்றவளும் உற்றவளும்
பெரும் வலியில் துடிக்கையில
வீடெல்லாம் குருதியில
வெள்ளமாக ஓடையில
எப்படித்தான் துடித்திருப்பன்
என்ன தான் நினைத்திருப்பான் ..?
அப்பப்பா அவன் வலியை
யாரிடம் தான் சொல்லிருப்பான் …?
தனிமையில சில நிமிடம்
தம்பியவன் நிலையிழந்தான்
ஓடி வந்த காவல்துறை
ஒத்தியவன் அணைத்திருப்பான்
பொத்தி பொத்தி வளர்த்தவளை
பொன்மகளாய் இரசித்தவளை
குற்றிட தான் முனைந்ததென்ன -உயிர்
குடித்திட தான் துடித்ததென்ன …?
கட்டி அம்மா முத்தமிட்டு
கதைகள் பல சொல்லி நன்று
நம்பி நாளும் நின்றவளை
நரபலி எடுத்ததென்ன …?
அகவை ஐந்து ஆக முன்னே
ஆவியை தான் தின்றவளே
நீ இருந்து என் காண்பாய்
நினைவுடனே தினம் சாவாய்
பொல்லாத மான நோயால்
பொலி விழந்து போனவளே
இந்த நாளில் கொலையாகி
இதயம் இல்லா போனாயே
உன் மனதை மகிழ்வூட்ட
உன்னாலே முடியலையோ …?
உன் அருகில் நண்பர்கள்
உயிராகி கூடலையோ …?
அழகான உறவுகளை
அடியேன் யான் கண்ணுற்றேன்
அவர் காணும் ஓடி வந்து
ஆறுதல் கூறலையோ …?
பொல்லாத நினைவுகளை
பொறுக்கி வந்தது தந்தது யார் …?
கல்லாகி மனம் போக
கனி மரத்தை வைத்தது யார் …?
லண்டன் மா நகரிலே
லட்சங்கள் அழுகிறது
நாள் தோறும் சாயகியால்
நலிந்துடல் மாய்கிறது
பெற்றவளே கொன்றாளாம்
பெரும் துயரை தந்தாளாம்
இத்துயரை தந்தவளை
இவ்வுலகு இழிந்தாராம்
வன்னி மைந்த னிவன்
வலிகளை கொட்டி விட்டேன்
வாங்கி வந்த செய்திகளை
வாரியாக்கி வைத்து விட்டேன்
ஆவி துறந்தவளே
அஞ்சலிகள் உனக்கம்மா
ஆறா துயரோடு
விடை பெற்றேன் நான் அம்மா ….
02-07-2020
பிரபல டிவி நடிகைக்கு கொரோனா
பிரபல டிவி நடிகைக்கு கொரோனா
பிரபல சீரியல் நடிகை நவ்யா சாமிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
பிரபல டிவி நடிகைக்கு கொரோனா தொற்று
டிவி நடிகை நவ்யா சாமி
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் டிவி சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்று வந்த நடிகை நவ்யா சாமிக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது
உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கில் ஆமே கதா, நா பேரு மீனாட்சி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வரும் இவர், தமிழில்
வாணி ராணி, அரண்மனைக்கிளி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.
நவ்யா சாமி
சமீபத்தில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் பாசிட்டிவ் என நேற்று முடிவு வந்துள்ளது. இதுகுறித்து அவர்
கூறும்போது, நான் படப்பிடிப்பில் இருக்கும் போது எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. சில அறிகுறிகள் தென்பட்டவுடன்
பரிசோதனை செய்து கொண்டேன். எனக்கு தொற்று ஏற்பட்டிருப்பதால் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம்” என்று கூறியுள்ளார்.
காதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது
காதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது
காதலித்து ஏமாற்றியதாக நடிகை கொடுத்த புகார் அடிப்படையில் போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலித்து ஏமாற்றியதாக நடிகை புகார்…. போக்கிரி பட ஒளிப்பதிவாளர் மீண்டும் கைது
சாய் சுதா, ஷியாம் கே நாயுடு
தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை சாய்
சுதா. இவர் கடந்த 7 வருடங்களாக ஷியாம் கே நாயுடு என்பவரை காதலித்து வந்தார். இவர் தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த போக்கிரி,
பிசினஸ்மேன் உள்பட பல்வேறு படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
நடிகை சாய் சுதாவிடம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து நெருங்கி பழகி வந்தாராம் ஷியாம் கே நாயுடு. ஆனால்
வாக்குறுதி கொடுத்தபடி திருமணம் செய்து கொள்ளவில்லையாம். இதையடுத்து ஷியாம் தன்னை ஏமாற்றியதாக கூறி நடிகை சாய் சுதா போலீசில் புகார் அளித்துள்ளார். இ
இதை தொடர்ந்து போலீசார் ஷியாம் கே.நாயுடுவை கைது செய்து விசாரித்தனர். பின்னர் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் ஸ்ரீசுதாவும் தானும் தங்கள் பிரச்சனையில் சாமாதானமாக போக முடிவுசெய்து விட்டோம் என கூறி
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ஷியாம் கே.நாயுடு சில ஆவணங்களையும் சமர்ப்பித்தாராம்.
ஆனால் அந்த ஆவணங்களில் இருந்த ஸ்ரீசுதாவின் கையெழுத்து போலியானது என்பது தெரியவந்தது. இதனால் மோசடி மற்றும்
ஏமாற்றுதல் என்கிற பிரிவுகளில் மீண்டும் ஷியாம் கே.நாயுடு மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
கொலையான பூ …!
கொலையான பூ …!
சின்ன சிரிப்பழகி
சிவந்த உடல் அழகி
ஆளுமை பேரழகை
அவனியில் இழந்தோமே
பெற்ற தாயவளே
பெரும் துயர் தந்திடவே
கண்ணீர் உடைகிறது
கத்தி விழி அழுகிறது
ஒப்பாரி சத்தங்கள்
ஓயா ஒலிக்கிறது
வேரை அறுத்த செயல்
வேதனை கொதிக்கிறது
தப்பான சிந்தையால்
தவறாகி போனது
அப்பாக்கள் உழைப்பெல்லாம்
அலங்கோலம் ஆனது
என்ன நினைத்தாளோ ..
ஏன் இதை செய்தாளோ ..?
தாங்கி பெற்றவளோ
தாயே எமன் ஆனாள்
நெருக்கடி உனை வாட்ட
நொறுங்கி நீ வாட
கொங்கை பால் தந்தாள்
கொலையது செய்தாளோ …?
வன்னி மைந்தன்( ஜெகன் )
ஆக்கம் -01-07-2020

கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா ?
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்தெரியுமா ?
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தொலைதூரப் பயணம் செய்ய வேண்டாம் மருத்துவர்கள் கூறுவார்கள். இது ஏன் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறுவது ஏன்?
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு சில விஷயங்களை செய்யலாம். ஒரு சில விஷயங்களை செய்ய கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். இதற்கு பின்னால் எல்லாம் ஒரு முக்கிய காரணம்
இருக்க தான் செய்கிறது. கர்ப்பமாக உள்ள பெண்கள் பயணம் செய்யலாமா என்று கேள்வி பலருக்கும் இருக்கும் ஒன்று தான்.
வீட்டிற்குள்ளேயே கர்ப்ப காலத்தில் அடைந்து கிடைப்பதும் இயலாத ஒன்று தான். உங்களது மருத்துவரும் கர்ப்ப காலத்தில் வெளியில்
அதிகமாக பயணம் செய்ய வேண்டாம் என்று கூறியிருப்பார். இது ஏன் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.
கர்ப்ப காலத்தில் பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது தான். அதற்காக நீங்கள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டும்
என்று அர்த்தமில்லை. நீங்கள் அருகில் உள்ள உங்களது அலுவலகம், மார்க்கெட், பார்க் போன்ற இடங்களுக்கு எல்லாம் பயணம் செய்வதினால் எந்த பிரச்சனையும் இல்லை.
நீங்கள் தொலைத்தூரப் பயணங்களை கண்டிப்பாக தவிர்ப்பது மிகவும் நல்லது. தொலைதூரப் பயணங்களை கர்ப்பத்தின் முதல்
மூன்று மாதங்களில் தவிர்ப்பது சிறப்பு. இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணம் என்னவென்றால், இதனால் கருக்கலைப்பு அல்லது வேறு சில பிரச்சனைகள் உண்டாகலாம்.
நீங்கள் சாலைப்பயணம் செய்யும் போது கழிப்பிட வசதிகள் அவ்வளவு சுகாதாரமனதாக இருக்காது. இந்த கழிப்பிடங்களை பயன்படுத்துவதால் சிறுநீர் பாதையில் கிருமிகளின் தொற்றுக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
நீண்ட தூரப்பயணத்தில் காற்று மாசுபாடு போன்றவை இருக்கும். இந்த நச்சுக்கள் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்க கூடியது. எனவே
நீண்ட தூரப்பயணத்தை கருவுற்ற முதல் மூன்று மாதங்களில் தவிர்க்கலாம்.
பொதுவாகவே நீண்ட தூரப்பயணமானது களைப்பை ஏற்படுத்தும். கர்ப்ப காலத்தில் நீண்ட தூரப்பயணம் செய்வது என்பது பெண்களுக்கு அதீத களைப்பை உண்டாக்க கூடியதாக இருக்கும்.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாக தான் இருக்கும். இந்த நேரத்தில் வெளியிடங்களுக்கு பயணம் செய்வதால் சில தேவையற்ற நோய்களை தேடி சென்று
பெருவது போல ஆகிவிடும். எனவே கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில் தொலைதூரப் பயணத்தை தவிர்ப்பது நல்லது.







