Posted in சினிமா

டாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்

டாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்

கொரோனா ஊரடங்கில் மின் கட்டணத்தை அநியாயத்துக்கு உயர்த்தி விட்டதாக நடிகை டாப்சி கோபமாக கூறியிருக்கிறார்.

டாப்சிக்கு ஷாக் கொடுத்த கரண்ட் பில்
டாப்சி


கொரோனா ஊரடங்கில் மின் கட்டணத்தை அநியாயத்துக்கு உயர்த்தி விட்டதாக திரையுலகை சேர்ந்தவர்கள் குறை கூறி

வருகிறார்கள். ஏற்கனவே நடிகர் பிரசன்னா தனது வீட்டுக்கு அதிக மின்கட்டணம் வந்துள்ளதாக புகார் கூறினார். அதனை மின்சார

வாரியம் மறுத்து விளக்கமும் அளித்தது. தொடர்ந்து நடிகை கார்த்திகா மும்பை மின்வாரியம் தனது வீட்டுக்கு ரூ.1 லட்சம் மின்கட்டணம் விதித்துள்ளதாக குறைகூறினார். இது பரபரப்பானது.

இந்த நிலையில் நடிகை டாப்சியும் தனக்கு அதிக மின்கட்டணம் விதித்துள்ளதாக கோபத்தில் இருக்கிறார். இவர் தனுஷ் ஜோடியாக

ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி வந்தான் வென்றான், காஞ்சனா 3, வைராஜா வை, கேம் ஓவர் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தியிலும் பிரபல நடிகையாக இருக்கிறார்.

டாப்சி

அவர் கூறும்போது, “எனது வீட்டுக்கு ரூ.36 ஆயிரம் மின் கட்டணம் விதித்துள்ளனர். ஊரடங்கு அமலில் இருக்கும் 3 மாதங்களாக நான் புதிதாக மின்சாதனங்களை வாங்கவோ பயன்படுத்தவோ இல்லை.

அப்படி இருக்கும்போது இவ்வளவு மின் கட்டணம் எப்படி கணக்கிட்டனர் என்பது புரியவில்லை” என்று கூறியுள்ளார்.

      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      ரசியா விமானத்தை சுட்டு வீழ்த்த முயன்ற அமெரிக்கா – தோல்வியில் முடிந்த சமர்

      ரசியா விமானத்தை சுட்டு வீழ்த்த முயன்ற அமெரிக்கா – தோல்வியில் முடிந்த சமர்

      ரசியாவின் அதி உயர் ரக விமானமாக விளங்கும் Russian Su-27 fighter விமானங்களை

      சுட்டு வீழ்த்த முயன்ற அமெரிக்காவின் முயற்சி தோல்வியில் முடிந்துளளது

      கருங்கடல் மேலாக கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த

      அமெரிக்கா கப்பல்கள் மேலாக பறந்து சென்று ,அமெரிக்கா விமானங்களை இடைமறித்து மிரட்டி சென்றது

      மேற்படி விமானங்களின் உள் நுழைதலை முன்னரே அறிவிக்க அமெரிக்கா உளவு துறை தவறியது ,தகவல்கள் சேகரிப்பு கிடைக்காத நிலையில் தோல்வியில் முடிந்துள்ளது எனவும்

      அதனாலேயே அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தவோ ,அல்லது இடைமறித்து

      விரட்டியடிக்கவோ முடியாது போனதாக அமெரிக்கா உளவுத்துறையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன

      தொடர்ந்து இவ்வாறான சம்பவங்களினால் இரு நாடுகளுக்கு இடையில் இடையில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது

          Posted in சினிமா

          சினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் – பூர்ணா எச்சரிக்கை

          சினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் – பூர்ணா எச்சரிக்கை

          சினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் என்று நடிகை பூர்ணா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

          சினிமா வாய்ப்பு தேடி பெண்கள் ஏமாற வேண்டாம் – பூர்ணா எச்சரிக்கை
          பூர்ணா


          கேரளாவில் நடிகை பூர்ணாவை திருமணம் செய்வதாக ஏமாற்றி பணம் பறிக்க முயன்ற மோசடி கும்பலை போலீசார் கைது

          செய்துள்ளனர். இந்த நிலையில் நடந்த சம்பவம் பற்றி பூர்ணா அளித்துள்ள பேட்டி வருமாறு:-

          “எங்கள் உறவினர்களின் நண்பர்கள் மூலம் தனது பெயர் அன்வர் என்று சொல்லி எங்கள் குடும்பத்தினருடன் அந்த நபர்

          அறிமுகமானார். எனது பெற்றோர்கள், அன்வர் பெற்றோர் சகோதரி, சகோதரி மகள் எல்லோரிடமும் பேசினோம். எங்கள் வீட்டுக்கும்

          வந்தனர். அவர்களை நேரில் பார்த்ததும் சந்தேகம் வந்தது. அவர்களை பற்றிய விவரங்களை துருவி துருவி கேட்டதும் பதில் சொல்லாமல் வீட்டில் இருந்து வெளியேறி விட்டனர்.

          பூர்ணா

          அதன்பிறகுதான் போனில் பணம் கேட்டார்கள். பணம் கொடுக்க மறுத்ததும் மிரட்டினார்கள். வீட்டில் இருந்து வெளியே வரும்போது

          பார்த்துக்கொள்கிறோம் என்று எச்சரித்தனர். பெரிய நடிகை என்று நினைத்து விட்டாயா. மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாய் இல்லையா? பார்த்துக்கொள்கிறோம் என்றனர்.

          என்னைபோல் வேறு யாரும் பாதிக்க கூடாது என்றுதான் புகார் அளித்தேன். பலர் இவர்களால் பாதிக்கப்பட்டது இப்போது

          வெளிச்சத்துக்கு வருகிறது. சினிமா அழகியலான உலகம். பட வாய்ப்பு வாங்கி தருகிறேன் என்று பலர் வருவார்கள் அவர்களிடம்

          எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பல இளம் பெண்கள் கொச்சியில் அறை எடுத்து தங்கி நடிகையாகும் கனவோடு சினிமா வாய்ப்பு தேடுகிறார்கள். யார் வாய்ப்பு வாங்கி தருவதாக

          அணுகினாலும் அவர்களை பற்றி தோழிகள் மூலம் நன்றாக விசாரித்து தெரிந்து கொண்டு முடிவு எடுங்கள்.” இவ்வாறு பூர்ணா கூறினார்

              Posted in சினிமா

              இது ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா.

              இது ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா.

              இது உங்களுடைய தொலைக்காட்சி ஷோ அல்ல… என்று நடிகை வனிதா லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

              இது உங்களுடைய ஷோ அல்ல… லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பதிலடி கொடுத்த வனிதா
              லட்சுமி ராமகிருஷ்ணன் – வனிதா


              நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை கடந்த சனிக்கிழமை அன்று திருமணம் செய்து கொண்டார்.

              திருமணத்தை அடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தனது கணவர் முறையாக விவாகரத்து பெறாமல்

              திருமணம் செய்து கொண்டதாகவும், மகளிர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். மேலும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் பீட்டர்

              பால் ஒரு பெண் பித்தர், குடிகாரர் என்றும் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார்.

              பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் கொடுத்த புகார் குறித்து விளக்கமளித்த வனிதா விஜயகுமார், சட்டரீதியாக

              எதிர்கொள்வோம் என்றும், பணத்திற்காக அவர் புகார் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

              பீட்டர் பாலின் முதல் மனைவி புகார் கொடுத்திருக்கும் செய்தியை அறிந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ட்விட்டர் பதிவின் மூலம் தனது கருத்தை வெளிப்படுத்தினார். அதில், பீட்டர்பாலுக்கு

              திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இன்னும் விவாகரத்தாகவில்லை. வனிதா – பீட்டர் பால் திருமணம் முடியும்

              வரை ஏன் முதல் மனைவி புகாரளிக்கவில்லை. திருமணத்தை ஏன் நிறுத்தவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

              கணவருடன் வனிதா

              மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் தனது பதிவில், வனிதா கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறார். இந்த உறவாவது

              அவருக்கு நல்ல விதமாக அமையும் என்று நினைத்தேன். ஆனால் இந்த பிரச்னையை அவர் கவனிக்கவில்லை என்பது வருத்தமானது.

              அதிகாரத்துக்கான முழு அர்த்தத்தை பெண்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் எதுவும் மாறப்போவதில்லை என்றார்.

              லட்சுமி ராமகிருஷ்ணனின் இந்த பதிவுக்கு பதிலளித்திருக்கும் வனிதா விஜயகுமார், “தம்பதிகளாக இருக்கும் இரண்டு பேர் ஏன் பிரிந்து சென்றார்கள் அல்லது விவாகரத்து செய்கிறார்கள் என்பது

              உங்களுக்கு தெரியுமா? நீங்கள் உங்களுக்கு தெரியாத ஒன்றில் எந்த வகையிலும் அக்கறை கொள்வது உங்களுடைய வேலை இல்லை. நான் அவர்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் தலையிடவில்லை.

              எனவே இந்த விஷயத்தில் உங்களுடைய தலையீட்டை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாத ஒருவரை பற்றி எந்தவித கருத்துக்களையும் நீங்கள் சொல்ல வேண்டாம்.

              மேலும் இது உங்களுடைய தொலைக்காட்சி ஷோ அல்ல. நான் தெரிந்தோ தெரியாமலோ இந்த விஷயத்தில் ஈடுபட்டுள்ளேன்.

              அதை எப்படி சரிப்படுத்துவது என்பது எனக்கு தெரியும். உங்களுடைய ஆலோசனை அல்லது உதவி எங்களுக்கு தேவை இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

              வனிதா
              வனிதா
                  Posted in சினிமா

                  பெனிக்ஸ் மரணம்.. மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த சனம் ஷெட்டி

                  பெனிக்ஸ் மரணம்.. மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த சனம் ஷெட்டி

                  சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் மரணம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்துள்ளார்.

                  சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் மரணம்.. மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்த சனம் ஷெட்டி
                  சனம் ஷெட்டி


                  தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக கலக்கி வருபவர் சனம் ஷெட்டி. இவர் தமிழில் அம்புலி படத்தின் மூலம் அறிமுகமானார்.

                  இதையடுத்து இவர் கதம் கதம், சவாரி, சிபிராஜ் நடித்த வால்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹன்சிகா, சிம்பு நடித்து வரும் மஹா படத்தில் இவர் நடித்து வருகிறார்.

                  இந்நிலையில் நடிகை சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் உயிரிழந்த

                  ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ்க்கு ஆதரவாக வீடியோ பதிவில் தனது கருத்துக்களை தெரிவித்தார்.

                  இது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. மேலும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

                  சனம் ஷெட்டியின் புகார்

                  இதையடுத்து தற்போது சனம் ஷெட்டி, இச்சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருக்கும் தவலை தெரிவித்துள்ளார்.

                  மேலும் இந்த சம்பவம் குறித்து அனைவரும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்க வேண்டும், அப்போது தான்

                  அழுத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

                      Posted in சினிமா

                      நடிகை வீட்டை உடைத் தெறிந்த திருட்டு கும்பல்

                      நடிகை வீட்டை உடைத் தெறிந்த திருட்டு கும்பல்

                      பிரபல டிவி நடிகை வீட்டிற்கு சென்ற போதை கும்பல், அங்கு இருக்கும் பொருட்களை வைத்து இருக்கிறார்கள்.

                      நடிகை வீட்டிற்கு புகுந்து பொருட்களை உடைத்த போதை கும்பல்
                      அர்ட்ரா தாஸ்


                      மலையாள தொலைக்காட்சி நடிகை அர்ட்ரா தாஸ். இவர் பல டி.வி தொடர்களில் நடித்து கேரள ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக

                      உள்ளார். திருச்சூரில் உள்ள பட்டிப்பரம்பு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்குள் சிலர் புகுந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

                      அந்த கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி நாசம் செய்தனர். பூந்தொட்டிகளை தூக்கி வீசி உடைத்தனர்.

                      வீட்டில் இருந்த நடிகையின் தாய் சிவகுமாரியையும் அடித்து காயப்படுத்தினார்கள். பின்னர் அங்கிருந்து ஓடி விட்டனர்.

                      காயம் அடைந்த சிவகுமாரி ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டு உள்ளார்.

                      தாக்குதல் நடந்தபோது நடிகை அர்ட்ரா தாஸ் தந்தையுடன் திருவனந்தபுரத்துக்கு சென்றதால் தப்பினார்.

                      அர்ட்ரா தாஸ்

                      இதுகுறித்து பழயனூர் போலீசார் விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

                      போலீஸ் தரப்பில் கூறும்போது “நடிகையின் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் பல வருடங்களாக எல்லை பிரச்சினை உள்ளது.

                      இதன் காரணமாக மோதல் ஏற்பட்டு இருக்கலாம். விசாரித்து வருகிறோம்” என்றனர்.

                          Posted in சினிமா வினோத வீடுப்பு

                          மூன்றாவது திருமணம் முடித்த வனிதா

                          குமர் பிள்ளைகளுடன் மூன்றாவது திருமணம் முடித்த வனிதா


                          நடிகையும் பிக்பாஸில் கலந்துகொண்டு பிரபலமானவருமான வனிதாவிற்கு இன்று திருமணம் நடைபெற்றது.

                          பீட்டர் பாலை திருமணம் செய்தார் வனிதா
                          வனிதா திருமணம்


                          பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் விஜய்யுடன்

                          சந்திரலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

                          இந்நிலையில் நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை ஜூன் 27ஆம் தேதி திருமணம்

                          செய்ய இருப்பதாக அறிவித்தார். அதன்படி வனிதா திருமணம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

                          வனிதா திருமணம்

                          இவர்களது திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

                          மூன்றுமாதத்தில் விவகாரத்து நடக்கும் என்பதை இங்கே கூறி விடுகிறோம்

                          மூன்றாவது திருமணம்
                          மூன்றாவது திருமணம்
                              Posted in உளவு செய்திகள்

                              11 விமானங்கள் மூலம் இராணுவம் ஆயுதங்களை லிபியாவில் குவிக்கும் ரஷியா

                              11 விமானங்கள் மூலம் இராணுவம் ஆயுதங்களை லிபியாவில் குவிக்கும் ரஷியா

                              ரஷியாவில் இருந்து பதினொரு விமானங்கள் மூலம் ரசியா தனது

                              இராணுவம் மற்றும் அதி நவீன ஆயுதங்களை

                              லிபியாவில்,அவசரமாக தரை இறக்கியுள்ளது

                              சிரியா மற்றும் லிபியாவில் துருக்கிய இராணுவம் குவிக்க பட்டுள்ள நிலையியல்

                              ரசியாவின் இந்த அவசர இராணுவ குவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                              குறித்த இரு நாடுகளில் பெரும் மோதல் ஒன்று இடம்பெற உள்ளதை மேற்படி விடயங்கள் அம்பல படுத்துகின்றன

                              ரசியா மேற் கொள்ளும் இந்த திடீர் இராணுவ குவிப்பினால் குறித்த பிராந்தியத்தில்

                              பெரும் பதட்டம் நிலவுகிறது ,எதிர்வரும் நாட்களில் பெரும் மோதல்கள் வெடிக்கலாம் என்பதை இந்த இராணுவ குவிப்பு புல படுத்துகிறது

                              11 விமானங்கள் மூலம்
                              11 விமானங்கள் மூலம்
                                  Posted in சினிமா

                                  தமிழ் கதாநாயகிகளை தவறாக பார்ப்பதா?இந்தி பட உலகை விளாசிய நடிகை

                                  தமிழ் கதாநாயகிகளை தவறாக பார்ப்பதா?இந்தி பட உலகை விளாசிய நடிகை

                                  இந்தி பட உலகினர் தமிழ் கதாநாயகிகளை தவறாக பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்று பிரபல நடிகை பேட்டி அளித்துள்ளார்.

                                  தமிழ் கதாநாயகிகளை தவறாக பார்ப்பதா?இந்தி பட உலகை விளாசிய நடிகை
                                  பாயல் கோஷ்


                                  தமிழில் ‘தேரோடும் வீதியிலே’ படத்தில் நடித்தவர் பாயல் கோஷ். தெலுங்கில் ஓசரவல்லி படத்தில் ஜூனியர் என்.டி.ஆருடனும்

                                  இந்தியில் ரிஷிகபூர், பரேஷ் ராவலுடன் ‘படேல் கி பஞ்சாபி சாதி‘ படத்திலும் நடித்துள்ளார்.

                                  அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: ‘தென்னிந்திய திரை உலகினர் நேர்மையானர்கள். நான் தேசிய விருது பெற்ற தென்னிந்திய

                                  இயக்குனர்கள் படங்களில் நடித்து இருக்கிறேன். என்னை நன்றாக பார்த்துக்கொண்டனர். தமிழ் தெலுங்கு படங்களில் நடிக்கும்போது

                                  எனக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. தமிழ், தெலுங்கு ரசிகர்கள் நடிகைகளை தெய்வமாக பார்க்கிறார்கள். மரியாதை கொடுக்கிறார்கள்.

                                  தமிழ் நாட்டில் சில நடிகைகளுக்கு கோவில் கட்டி வணங்கும் நிலையும் இருக்கிறது. நான் இந்தி படங்களில் வாய்ப்பு கேட்டபோது

                                  தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகள் மீது தவறான எண்ணம் இருக்கிறது என்றும் எனவே இந்தி திரையுலகினரிடம்

                                  தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததாக சொல்லாதே என்றும் சிலர் கூறினர்.

                                  பாயல் கோஷ்

                                  தென்னிந்திய மொழி படங்களில் நடித்து எதிர்காலத்தை கெடுத்திக்கொள்ளாதே என்றும் தெரிவித்தனர். நிஜத்தில் இந்தி

                                  சினிமா தென்னிந்திய படங்களைத்தான் நம்பி உள்ளன. அங்கிருந்துதான் பல படங்களை ரீமேக் செய்கிறார்கள். எனவே

                                  தமிழ், தெலுங்கு நடிகைகளை இந்தி பட உலகினர் தவறாக பார்ப்பதை நிறுத்த வேண்டும்.“ இவ்வாறு கூறினார்.

                                      Posted in சினிமா

                                      ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த சுசித்ராவின் வீடியோ

                                      ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த சுசித்ராவின் வீடியோ

                                      சாத்தான் குளம் சம்பவத்தை ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவத்தோடு ஒப்பிட்டு

                                      பேசிய சுசித்ராவின் வீடியோ ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

                                      ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த சுசித்ராவின் வீடியோ
                                      பாடகி சுசித்ரா


                                      தமிழ் திரையில் மாறுபட்ட குரலால் பல பாடல்கள் மூலம் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களை பெற்றவர் பாடகி சுசித்ரா. பிரபல

                                      வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

                                      அண்மைகாலமாக அவர் யோகா, சமையல் கலையில் ஆர்வம் காண்பித்து வந்த பாடகி சுசித்ரா, தற்போது தமிழக மக்களை

                                      அதிகம் பேச வைத்துள்ள சாத்தான் குளம் காவல் நிலையத்தில் இறந்து போன ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோரை பற்றி பேசி உள்ளார்.

                                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                          உன்னை நம்பு வெற்றி உனக்கு …!

                                          உன்னை நம்பு வெற்றி உனக்கு …!

                                          விழுந்து விழுந்து எழ வேண்டும்
                                          விடுதலை அதிலே பெற வேண்டும்
                                          தோல்வி சுற்றி படராது
                                          தோல்விக்கு அச்சம் தொடராது

                                          முடியும் என்று முன்னேறு
                                          முடிவு எழுதும் வரலாறு
                                          விழியில் நீரை சுமந்து
                                          விழுந்து அழுதல் கூடாது

                                          வலியை கண்டு வாடாதே
                                          வரும் தடைகள் கண்டு அஞ்சாதே
                                          ஒரு நாள் வெல்வாய் போராடு
                                          ஓலம் ஒழியும் நீ ஓடு

                                          விட்ட தவறை ஆராய்வாய்
                                          விரைந்து தீர்வு காண்பாய்
                                          வெற்றி இன்று அழைக்கும்
                                          வெடி கொளுத்தி பார் மகிழும்

                                          உலகம் உன்னை மொழியும்
                                          உயிரே என்று பாடும்
                                          இறந்தும் நீயே வாழ்வாய்
                                          இது தான் வேண்டும் காண்பாய்

                                          வன்னி மைந்தன் (ஜெகன் )
                                          ஆக்கம் 26-06-2020

                                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                                          உன்னை நம்பு வெற்றி உனக்கு

                                          உன்னை நம்பு வெற்றி உனக்கு

                                          விழுந்து விழுந்து எழ வேண்டும்
                                          விடுதலை அதிலே பெற வேண்டும்
                                          தோல்வி சுற்றி படராது
                                          தோல்விக்கு அச்சம் தொடராது

                                          முடியும் என்று முன்னேறு
                                          முடிவு எழுதும் வரலாறு
                                          விழியில் நீரை சுமந்து
                                          விழுந்து அழுதல் கூடாது

                                          வலியை கண்டு வாடாதே
                                          வரும் தடைகள் கண்டு அஞ்சாதே
                                          ஒரு நாள் வெல்வாய் போராடு
                                          ஓலம் ஒழியும் நீ ஓடு

                                          விட்ட தவறை ஆராய்வாய்
                                          விரைந்து தீர்வு காண்பாய்
                                          வெற்றி இன்று அழைக்கும்
                                          வெடி கொளுத்தி பார் மகிழும்

                                          உலகம் உன்னை மொழியும்
                                          உயிரே என்று பாடும்
                                          இறந்தும் நீயே வாழ்வாய்
                                          இது தான் வேண்டும் காண்பாய்

                                          வன்னி மைந்தன் (ஜெகன் )
                                          ஆக்கம் 26-06-2020

                                          வன்னி மைந்தன் கவிதைகள்

                                          நமது பேஸ்புக் கவிதை குழுவில் இணைய பார்க்க இதில் அழுத்துங்க

                                              Posted in சினிமா

                                              பைக் ஓட்டி கீழே விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்… குவியும் பாராட்டு

                                              பைக் ஓட்டி கீழே விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்… குவியும் பாராட்டு

                                              நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், பைக் ஓட்டி கீழே விழுந்த வீடியோவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

                                              பைக் ஓட்டி கீழே விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்… குவியும் பாராட்டு
                                              ஷ்ரத்தா ஸ்ரீநாத்


                                              கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான யூடர்ன் படத்தின் மூலமாக பிரபலமானவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அதன் பின் இவன் தந்திரன், விக்ரம்

                                              வேதா, கே-13 போன்ற படங்களில் நடித்தார். சென்ற வருடம் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் ஷ்ரத்தா நடித்து இருந்தார்.

                                              ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதை அவர் பைக் ஓட்ட பழகி கீழே

                                              விழுகின்றார். வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

                                              பொதுவாகவே நடிகைகள் சமூக வலை தளங்களில் தங்களது சூப்பரான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை தான் வெளியிட

                                              விரும்புவார்கள். ஆனால் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தான் பைக் ஓட்ட முயன்று கீழே விழுந்த வீடியோவை மிக தைரியமாக வெளியிட்டுள்ளது பலரும் பாராட்டியுள்ளனர்

                                                  Posted in சினிமா

                                                  1 லட்சம் கரண்ட் பில்…. கொந்தளித்த கார்த்திகா.

                                                  1 லட்சம் கரண்ட் பில்…. கொந்தளித்த கார்த்திகா.

                                                  கொரோனா வைரஸ் ஊரடங்கு நேரத்தில் ரூ.1 லட்சம் கரண்ட் பில் வந்திருப்பதாக நடிகை கார்த்திகா நாயர் கூறியுள்ளார்.

                                                  ரூ.1 லட்சம் கரண்ட் பில்…. கொந்தளித்த கார்த்திகா
                                                  கார்த்திகா நாயர்


                                                  கோ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கார்த்திகா நாயர். இவர்

                                                  நடிகை ராதாவின் மகள். கோ படத்திற்கு பிறகு மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்தார்.

                                                  கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மின்சார கட்டணத்தை கணக்கிடுவதில் சிக்கல் எழுந்தது. அதன் பின் போடப்பட்ட மின்

                                                  கட்டணம் மிகவும் அதிக அளவில் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன.

                                                  இந்நிலையில் கார்த்திகா நாயர் அதிக மின் கட்டணம் தொடர்பாக டுவிட்டரில் கோபத்துடன் தெரிவித்துள்ளார். ஆனால் இது

                                                  தமிழ்நாட்டில் இல்லை மும்பையில். இதுபற்றி அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது..

                                                  கார்த்திகா நாயர் ட்விட்,”என்ன விதமான மோசடியை மும்பையில் செய்து கொண்டிருக்கிறார்கள். ஜூன் மாத மின் கட்டணம் மட்டும்

                                                  ஒரு லட்சம்.. (அவர்களால் மீட்டர் ரீடிங் செய்ய முடியாத நிலையில், அவர்களின் தோராய கணக்கு படி) மும்பையில் இருக்கும் மற்ற

                                                  பலரிடம் இருந்தும் இதுபோன்ற புகார்களை நான் கேட்கிறேன்” என கார்த்திகா நாயர் அந்த குறிப்பிட்டுள்ளார்.

                                                      Posted in சினிமா

                                                      படப்பிடிப்பு இல்லாததால் கருவாடு விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்

                                                      படப்பிடிப்பு இல்லாததால் கருவாடு விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்

                                                      கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இல்லாததால் பிரபல நடிகர் ஒருவர் கருவாடு விற்பனையில் இறங்கியுள்ளார்.

                                                      படப்பிடிப்பு இல்லாததால் கருவாடு விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்
                                                      ரோஹன் பெட்னேக்கர்


                                                      உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு போடப்பட்டுள்ளதால், பல்வேறு

                                                      தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதில் சினிமா துறையும், சினிமா கலைஞர்களும் அடக்கம்.

                                                      இந்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் கருவாடு விற்பனையில் ஈடுபட்டு வருவது குறித்து தெரிய வந்துள்ளது. மராத்தி நடிகரான

                                                      ரோஹன் பெட்னேக்கர் என்பவர், மராத்தியில் சூப்பர் ஹிட் அடித்த பாபாசாகேப் அம்பேத்கர் தொடரில் நடித்து பிரபலமானார்.

                                                      இவர் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டு இருப்பதால், கருவாடு விற்பனையில்

                                                      இறங்கியுள்ளார். மீண்டும் எப்போது நடிக்கும் வேலை வரும் என தெரியவில்லை, என் அப்பா இந்த வேலையை செய்தார்.

                                                      அதனால் எனக்கு இதில் கொஞ்சம் புரிதல் இருக்கிறது. இந்த வேலையை எனக்கு எந்த அவமானமும் இல்லை” என தெரிவித்துள்ளார்

                                                      படப்பிடிப்பு இல்லாததால்
                                                      படப்பிடிப்பு இல்லாததால்
                                                          Posted in சினிமா

                                                          சுத்திட்டு திரிய கூடாது… இயக்குனரை கலாய்த்த சிவகார்த்திகேயன்

                                                          சுத்திட்டு திரிய கூடாது… இயக்குனரை கலாய்த்த சிவகார்த்திகேயன்

                                                          தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் இயக்குனர் ஒருவரை சமூக வலைத்தளத்தில் கலாய்த்திருக்கிறார்.

                                                          சுத்திட்டு திரிய கூடாது… இயக்குனரை கலாய்த்த சிவகார்த்திகேயன்

                                                          நடிகர் சிவகார்த்திகேயன், தனது புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, மீண்டும் போற போக்குல் ஒரு போட்டோ ஷூட் என்று தலைப்பிட்டிருக்கிறார்.

                                                          சிவகார்த்திகேயனின் பதிவைப் பார்த்த இயக்குநர் நெல்சன் திலீப் குமார், “போற போக்குல பண்ணதுக்கே இப்படின்னா, பிளான்

                                                          பண்ணி பண்ணிருந்தா வேற மாதிரி போலயே.. ஸ்டைலா இருக்கீங்களே என்று கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

                                                          இயக்குனர் நெல்சன் உடன் சிவகார்த்திகேயன்

                                                          நெல்சன் திலீப் குமாரின் பதிவுக்கு பதிலளித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன், “கமெண்ட போட்டோமா, ரெண்டு கலாய்

                                                          கலாய்ச்சமா கடைய சாத்திட்டு போய் காப்பி தண்ணிய குடிச்சமானு இருங்க இயக்குநரே. இன்ஸ்டாலயே சுத்திட்டு திரிய கூடாது” என்று நகைச்சுவையாக கமெண்ட் பதிவிட்டுள்ளார்.

                                                              Posted in சினிமா

                                                              எனக்கு அந்த நடிகை தான் வேணும் – அடம் பிடிக்கும் இயக்குனர்

                                                              எனக்கு அந்த நடிகை தான் வேணும் – அடம் பிடிக்கும் இயக்குனர்

                                                              நயன்தாராவை தவிர வேறு எந்த நடிகையையும் வைத்து இயக்க மாட்டேன் என்று பிரபல இயக்குனர் கூறியுள்ளார்.

                                                              நயன்தாராவை தவிர வேறு எந்த நடிகையையும் வைத்து இயக்க மாட்டேன் – பிரபல இயக்குனர்
                                                              நயன்தாரா


                                                              கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா கலெக்டர் மதிவதனியாக நடித்த அறம் படம் கடந்த 2017ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அறம் படத்தால் நயன்தாராவுக்கு நல்ல பெயர்

                                                              கிடைத்தது. இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகி வருவதாக கோபி நயினார் தெரிவித்தார்.

                                                              இந்நிலையில் அறம் 2 படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின.

                                                              நயன்தாரா நடிக்க மறுத்ததால் தான் கோபி நயினார் கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்கிறார் என்று கூறப்பட்டது.

                                                              அறம் படத்தில் நயன்தாரா

                                                              இந்நிலையில் அறம் 2 படத்தில் நடிக்குமாறு கோபி நயினார் கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தையே நடத்தவில்லையாம். இந்த தகவலை

                                                              கோபி நயினார் தெரிவித்துள்ளார். மேலும் அறம் 2 படத்தை நயன்தாராவை தவிர வேறு எந்த ஒரு நடிகையையும் வைத்து நான் இயக்க மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார்.

                                                                  Posted in சினிமா

                                                                  ஒதுக்கப்பட்டவர்கள் அஜித்தை நினைத்து பாருங்கள் – வாசுகி பாஸ்கர்

                                                                  ஒதுக்கப்பட்டவர்கள் அஜித்தை நினைத்து பாருங்கள் – வாசுகி பாஸ்கர்

                                                                  பாலிவுட் நடிகர் சிஷாந்த் போல ஒதுக்கப்பட்டவர்கள் அஜித்தை நினைத்து பாருங்கள் என்று காஸ்டியும் டிசைனரான வாசுகி பாஸ்கர் கூறியுள்ளார்.

                                                                  ஒதுக்கப்பட்டவர்கள் அஜித்தை நினைத்து பாருங்கள் – வாசுகி பாஸ்கர்
                                                                  அஜித்


                                                                  எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமாவில் நுழைந்த அஜித்தின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை மிகப்பெரிய சோதனையாகவே இருந்தது. பல அவமானங்கள், துரோகங்கள், தோல்விகள் இப்படி

                                                                  எல்லாவற்றையும், தன்னுடைய தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு இவற்றால் அடித்து நொறுக்கி, இன்று தமிழ்

                                                                  சினிமாவின் கிங் ஆஃப் பாக்ஸ் ஆஃபிஸ் என்று அழைக்கப்படும் அளவிற்கு உயர்ந்துள்ளார்.

                                                                  சமீபத்தில் பாலிவுட் நடிகரான சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டது இந்தியா அளவில் மொத்த சினிமா

                                                                  திரையுலகினரையுமே அதிர்ச்சியடைய செய்தது என்று கூறலாம். அவர் இறப்பிற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், எந்த ஒரு

                                                                  பின்புலமும் இல்லாமல் வந்த சுஷாந்தை பாலிவுட் திரையுலகினர் ஒதுக்கினர் எனவும், அதனால் அவர் பல அவமானங்களை

                                                                  சந்தித்தார் எனவும், அந்த டிப்ரஷன்தான் அவர் உயிரை காவு வாங்கியுள்ளது எனவும் தகவல்கள் பரவி வருகிறது.

                                                                  வாசுகி பாஸ்கர்

                                                                  தமிழ் சினிமாவின் காஸ்டியும் டிசைனரான வாசுகி பாஸ்கர் இது பற்றி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ‘தமிழ் சினிமாவிலும் ஒதுக்கப்படும் பல சுஷாந்த் உள்ளனர். சிலர்

                                                                  என்னிடம் வருத்தப்படுவார்கள், சிலர் அமைதியாக சிரித்து கொண்டே புறக்கணிப்பின் வலியை கடப்பார்கள். அவர்களுக்கு

                                                                  ஒன்றை மட்டும் சொல்கிறேன், அவ்வப்போது தல அஜித் பட்ட போராட்டங்களை நினையுங்கள்’ என அஜித் ஆரம்ப காலத்தில்

                                                                  ஒதுக்கப்பட்டதை குறிப்பிட்டு கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

                                                                      Posted in சினிமா

                                                                      எமி ஜாக்சனின் யோகாவிற்கு குவியும் லைக்ஸ்கள்

                                                                      எமி ஜாக்சனின் யோகாவிற்கு குவியும் லைக்ஸ்கள்

                                                                      பிரபல நடிகையான எமி ஜாக்சன் வெளியிட்ட யோகா செய்யும் புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்ஸ் குறைந்து வருகிறது.

                                                                      எமி ஜாக்சனின் யோகாவிற்கு குவியும் லைக்ஸ்கள்
                                                                      எமி ஜாக்சன்


                                                                      ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ஆம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவது தெரிந்ததே. கடந்த சில ஆண்டுகளாக

                                                                      கொண்டாடப்பட்டு வரும் இந்த யோகா தினம், கடந்த ஞாயிறு அன்று இந்தியா உள்பட உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

                                                                      பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் யோகா செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில்

                                                                      வைரல் ஆகி வந்தது. இந்த நிலையில் தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் எமி ஜாக்சன் யோகா செய்யும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                                                                      எமி ஜாக்சன்,மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

                                                                      எமி ஜாக்சனின் யோகாவிற்கு
                                                                      எமி ஜாக்சனின் யோகாவிற்கு
                                                                          Posted in சினிமா

                                                                          நடிகைக்கு திருமணம் – குசியில் அம்மணி

                                                                          கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான ரீது வர்மா காதல் திருமணம் செய்ய இருக்கிறார்.

                                                                          காதல் திருமணம் செய்யும் ரீது வர்மா
                                                                          ரீது வர்மா


                                                                          தமிழில் வேலையில்லா பட்டதாரி 2, துருவநட்சத்திரம், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்

                                                                          நடிகை ரீது வர்மா. தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக இருக்கிறார்.

                                                                          இந்நிலையில் ரீது வர்மா சமீபத்தில் தெலுங்கு ஊடகம் ஒன்றிற்கு சமூகவலைதளம் வாயிலாக பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் திருமணம் எப்போது என கேட்கப்பட்டது.

                                                                          அதற்கு அவர், நான் எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என எனது பெற்றோர் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

                                                                          ஆனால் நான் அவர்களிடம் இப்போதைக்கு திருமணம் செய்யப் போவதில்லை என தெளிவாக சொல்லிவிட்டேன். எனக்கு ஏற்றவரை

                                                                          எப்போது பார்க்கிறேனோ அப்போது தான் திருமணம். அது நிச்சயம் காதல் திருமணமாக தான் இருக்கும், என பதிலளித்துள்ளார்.