Posted in உலக செய்திகள் சினிமா

அமிதாப்பச்சன் மகன் ,அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

அமிதாப்பச்சன் மகன் ,அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா – அதிர்ச்சியில் ரசிகர்கள்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேபச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

அமிதாப்பை தொடர்ந்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி
அமிதாப்புடன் அபிஷேக்பச்சன்

இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்றில் மகாராஷ்டிரா மாநிலம்

முதலிடம் வகித்து வருகிறது. அங்கு இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்

மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியி, நான் கொரோனா பரிசோதனை செய்தேன் ..

மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன் .. மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளது .. குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், அதற்கான

முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் .. கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவு செய்து பரிசோதனை

செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக்பச்சன், தனக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமிதாப்பச்சன் மகன்
அமிதாப்பச்சன் மகன்
      Posted in மருத்துவம்

      முதல் குழந்தைக்கும், இரண்டாம் குழந்தைக்கும் இடையே எவ்வளவு கால இடைவெளி தேவை

      முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும், ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

      முதல் குழந்தை, இரண்டாம் குழந்தைக்கும் இடையே எவ்வளவு கால இடைவெளி தேவை


      முதல் குழந்தைக்கு, இரண்டாம் குழந்தைக்கும் இடையே எவ்வளவு கால இடைவெளி தேவை


      முதல் குழந்தையை பெற்று எடுத்த பின்னர், அடுத்த குழந்தையை பெற்று எடுக்க சரியான கால இடைவெளி தேவைப்படுகிறது; ஏன்

      இந்த கால இடைவெளி தேவை என்றால், முதல் பிரசவத்தின் போது ஏற்பட்ட காயங்கள் மற்றும் தழும்புகளை ஆறவும், கர்ப்பபையை

      பழைய நிலைக்கு கொண்டு வரவும், பெண் உடல் வலிமை பெற்று உடலளவிலும், மனதளவிலும் அடுத்த குழந்தையை ஏற்க ஆயத்தமாக வேண்டியது அவசியம்.

      முதல் குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் எத்தனை கால இடைவெளி இருக்க வேண்டும, ஏன் இடைவெளி அளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

      1. உங்களது முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால், குறைந்தது 6 மாத காலமாவது நீங்கள் காத்திருக்க வேண்டும்; ஏனெனில் சிசேரியனால், உண்டான புண்கள் ஆறவே, 3 மாதமாகும்,
      2. மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்ட வேண்டும். ஆகையால், முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும்
      3. வருடக்கணக்கில் இடைவெளி இருப்பது நல்லது என்கின்றனர், மருத்துவர்கள். இதுவே, உங்களுக்கு சுகப்பிரசவம் ஆகி
      4. இருந்தால், குறைந்தது ஒரு வருட இடைவெளியாவது அவசியம் ஆகும்.
      5. பிரசவத்தால் ஏற்பட்ட காயங்கள் மற்றும் உடல் சோர்வு போன்ற உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த விஷயங்கள் குணமாக, இயல்பாக நீங்கள் குறைந்தது 12-18 மாதங்கள் என்ற கால
      6. இடைவெளியை எடுத்துக் கொள்வது நல்லது. நல்ல சத்தான உணவுகளை உண்டு, உடலை பழைய பலம் பெறச் செய்த
      7. பின்னர் அடுத்த குழந்தையை பற்றிய சிந்தனையை தொடங்குங்கள்.
      8. இந்த கால இடைவெளி ஏன் அவசியம் என்றால், உங்கள் முதல் பிரசவத்திற்கும், இரண்டாம் குழந்தையை கருத்தரிப்பதற்கு சரியான கால இடைவெளி இல்லாமல் இருந்தால், உங்களுக்கு
      9. உடல் நலக்குறைபாடுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பிறக்கப்போகும் குழந்தைக்கு சரியான
      10. ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், நஞ்சுக்கொடி சுற்றல், நஞ்சுக்கொடி குறுக்கீடு போன்ற பற்பல உடல் நலக்
      11. குறைபாடுகளும், முதல் குழந்தையை சரியாக கவனிக்க முடியாமல் அதற்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படலாம்.
      12. நீங்கள் சரியாக திட்டமிட்டு இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொண்டால், நீங்கள், குழந்தை என அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியாக வாழலாம்; எனவே, என்ன
      13. பிரசவமானாலும் முதல் மற்றும் இரண்டாம் குழந்தைக்கு இடையே குறைந்தது 18 மாத கால இடைவெளியாவது இருக்க வேண்டும்.
      14. கர்ப்பகாலம், தாய்ப்பால் ஊட்டும் காலம் என அனைத்திலும் உங்கள் உடல் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட்டிருக்கும்; எனவே, உங்கள் உடல் சரியான ஆரோக்கிய நிலையை அடைந்த

      1. பின்னர், இரண்டாம் குழந்தையை பற்றி சிந்திப்பது சிறந்தது.
      2. முதல் மற்றும் இரண்டாம் குழந்தையை பெற்றுக் கொள்ளும் கால இடைவெளி குறைந்தால், பிரசவத்தில் 36-37
      3. வாரங்களுக்கு முன்பாகவே, குறை மாதத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புண்டு;
      4. முதல் குழந்தையை பெற்று எடுத்த கொஞ்ச மாதங்களிலே அல்லது அதிக கால தாமதமாக – உதாரணத்திற்கு 35 வயதிற்கு மேல் இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டம்
      5. கொண்டாலோ மருத்துவ ஆலோசனை பெறுங்கள்; உங்கள் சூழ்நிலை எதுவாயினும், தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று, இரண்டாம் குழந்தையை பெற்றுக்கொள்ள திட்டமிடுங்கள்..!
          Posted in சினிமா வினோத வீடுப்பு

          படம் நடிக்கும் விஜய் மகன் – குஷியில் ரசிகர்கள்

          படம் நடிக்கும் விஜய் மகன் – குஷியில் ரசிகர்கள்

          விஜய் மகன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தை பிரிட்டோ தயாரிக்க இருப்பதாக வந்த செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

          விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
          சஞ்ஜய் – விஜய்


          விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை அவரது நெருங்கிய உறவினரான பிரிட்டோ தயாரித்த நிலையில் விஜய் மகன் சஞ்சய்

          அறிமுகமாகும் படத்தையும் பிரிட்டோ தான் தயாரிக்க இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதுகுறித்து

          ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரிட்டோ விளக்கம் அளித்து உள்ளார்.

          விஜய் மகன் சஞ்சய்க்கு இயக்குனராக தான் அதிக ஆர்வம் உள்ளது. அவருக்கு ஹீரோவாக நடிக்கும் ஆர்வம் இருக்கிறதா இல்லையா

          என்பது கூட எனக்கு தெரியாது. தற்போது அவர் கனடாவில் படித்து வருகிறார். படித்து முடித்த பிறகு அவர் எந்த துறையை

          தேர்ந்தெடுக்கிறார் என்பதை அதன் பின் தான் முடிவு செய்ய முடியும்.

          விஜயுடன் தயாரிப்பாளர் பிரிட்டோ

          சஞ்சய் படத்தை நான் தயாரிக்கவிருப்பதாக் வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி. இதுகுறித்து நான் விஜய்யிடம் பேசினதே இல்லை’ என்று கூறினார்.

          படம் நடிக்கும் விஜய் மகன்
          படம் நடிக்கும் விஜய் மகன்
              Posted in சினிமா

              எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை – ஓவியா

              எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை – ஓவியா

              தமிழில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் ஓவியா எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

              எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை – ஓவியா
              ஓவியா


              களவாணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவார் நடிகை ஓவியா.

              அதன்பின் சில படங்களில் நடித்த ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

              ஓவியா டுவிட்

              நடிகை ஓவியாவிற்கு இணையத்தில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

              ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு ஓவியா பதிலளிப்பது வழக்கமான

              ஒன்று. இந்நிலையில், ரசிகர் ஒருவர் ஏன் டுவிட்டரில் எவரை பின் தொடரவில்லை

              என்று கேட்டார். அதற்கு ஓவியா மற்றவர்களின் வாழ்க்கையில் பின் தொடர விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்

              ஓவியா
              ஓவியா
                  Posted in சினிமா

                  குண்டு பூசணிக்காய் என்று நடிகையை கிண்டல் கிண்டல் செய்யம் ரசிகர்கள் -வைரலாகும் படம்

                  குண்டு பூசணிக்காய் என்று நடிகையை கிண்டல் கிண்டல் செய்யம் ரசிகர்கள் -வைரலாகும் படம்

                  பிரபல நடிகையாக இருக்கும் சாக்‌ஷி அகர்வால், என்னை குண்டு

                  பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள் என்று கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

                  குண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள்… வைரலாகும் சாக்‌ஷியின் புகைப்படம்,சாக்‌ஷி அகர்வால்


                  தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால்.

                  இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில்

                  நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு

                  ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சாக்‌ஷி சின்ட்ரெல்லா, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

                  குண்டு பூசணிக்காய்
                  குண்டு பூசணிக்காய்

                      Posted in சினிமா வினோத வீடுப்பு

                      என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் – வனிதா

                      என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் – வனிதா

                      நடிகை வனிதா, உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாமல் என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

                      என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் – வனிதா
                      வனிதா


                      நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற பின் சமீபத்தில் பீட்டர்

                      பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும்

                      உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. முதல் மனைவி போலீசிலும் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

                      ஏற்கனவே திருமணமாகி சட்டப்படி விவாகரத்து பெறாதவரை வனிதா எப்படி திருமணம் செய்தார் என்று நடிகை லட்சுமி

                      ராமகிருஷ்ணன் விமர்சித்தார். நடிகை குட்டி பத்மினியும் குறை கூறினார். விமர்சனங்களுக்கு பதில் அளித்து வனிதா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

                      வனிதா – பீட்டர் பால்

                      “உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாமல் என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள். முதலில் உண்மையை

                      தெரிந்து கொள்ளுங்கள். ஒருவரை துன்புறுத்துவதும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதும் சட்டத்துக்கு எதிரானது.

                      இணைய தளத்தில் துன்புறுத்துவது ஒருவரின் வாழ்க்கையை பாதிக்கும். நீங்கள் செய்வதை நான் கடுமையாக எடுத்து இருந்தால்

                      மன அழுத்தத்தில் விரக்தியாகி என்னையே துன்புறுத்தி இருக்கலாம். அது உங்களை கொலைகாரர்கள் ஆக்கி விடும். இதை

                      யோசியுங்கள். நான் உண்மையில் குற்றம் செய்து இருந்தால் சட்டம் என்னை சும்மா விடாது. கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. நான்

                      கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பதில் சொன்னால் போதும். நான் தவறு செய்யவில்லை.”

                      இவ்வாறு வனிதா கூறியுள்ளார்.

                      என்னை விமர்சித்து
                      என்னை விமர்சித்து
                          Posted in சினிமா வினோத வீடுப்பு

                          நான் வாழக் காரணம் கே.பாலசந்தர் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி video

                          நான் வாழக் காரணம் கே.பாலசந்தர் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி video

                          தான் பேரும், புகழோடும் வாழக் காரணம் கே.பாலசந்தர் சார் தான் என நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.

                          நான் பேரும், புகழோடும் வாழக் காரணம் கே.பாலசந்தர் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
                          ரஜினிகாந்த், கே.பாலசந்தர்


                          மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோவில் பேசியுள்ளார். அதில் அவர்

                          கூறியுள்ளதாவது: இன்று என் குருவான கே.பி சார் அவர்களுடைய 90வது பிறந்தநாள். கே.பாலசந்தர் சார் என்னை

                          அறிமுகப்படுத்தலேனா கூட நான் நடிகனாயிருப்பேன். கன்னட மொழியில் ஒரு வில்லன் கதாபாத்திரத்திலோ, சின்னச் சின்ன கதாபாத்திரங்களிலோ நடித்து சிறிய நடிகராக இருந்திருப்பேன்.

                          ஆண்டவன் புண்ணியத்தில் மிகப்பெரிய பேரும் புகழோட, நல்ல வசதியோடு வாழ்வதற்கு காரணமே, கே. பாலசந்தர் சார் அவர்கள். என்னை அவர் தேர்ந்தெடுத்து எனக்குப் பெயர் வைத்து, என்னுடைய

                          மைனஸ் எல்லாவற்றையும் நீக்கி, என்னிடமுள்ள பிளஸ்ஸான விஷயங்களை எனக்கே காட்டிக்கொடுத்து. என்னை ஒரு முழு

                          நடிகனாக்கி, நாலு படங்களிலும் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்து, ஒரு நட்சத்திரமா தான் என்னைத் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.

                          என் வாழ்க்கையில் என்னுடைய அப்பா, அம்மா, என்னை வளர்த்து ஆளாக்கிய என் அண்ணன், பாலசந்தர் ஆகிய நால்வரும் எனக்கு தெய்வங்கள். அவர் எனக்கு மட்டுமல்ல, எத்தனையோ நடிகர்,

                          நடிகைகளுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார். அவரால் வாழ்ந்தவர்கள் பலர். தன் வாழ்நாளில் படம் இயக்கி, தயாரித்து

                          சின்னத்திரையிலும் ஈடுபட்டு லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தந்தார்.

                          எத்தனையோ இயக்குனர்களிடம் வேலை செய்துள்ளேன், ஆனால் கே.பி சார் செட்டுக்குள் வந்தால் நடிகர்கள், தொழில்நுட்பக்

                          கலைஞர்களை விடுங்கள், செட்டின் மேலே நிற்கும் லைட்மேன் கூட எழுந்து நின்று வணக்கம் சொல்வார். அந்த மாதிரி ஒரு கம்பீரம்

                          கே.பி சாரிடம் இருந்தது. இதை வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை. மகனாக, தந்தையாக, கணவனாக, இயக்குநராக,

                          எல்லாவற்றையும் கச்சிதமாக செய்தார். இன்னும் நிறைய நாள்கள் அவர் வாழ்ந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்

                              Posted in சினிமா வினோத வீடுப்பு

                              மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்.

                              மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்.

                              உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு கமல் உதவி செய்து வருகிறார்.

                              மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்
                              பொன்னம்பலம்


                              ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம், சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                              அவரது சிகிச்சைக்கு கமல்ஹாசன் உதவி வருகிறார். மற்றும் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகிறார்.

                              பொன்னம்பலம்

                              இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை கமல்ஹாசன்

                              ஏற்றுக்கொண்டுள்ளார். பொன்னம்பலம் அவர்கள் பூரண குணமடைந்து திரும்ப வேண்டும்.

                              மருத்துவமனையில் சிகிச்சை
                              மருத்துவமனையில் சிகிச்சை
                                  Posted in சினிமா வினோத வீடுப்பு

                                  ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா

                                  ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா

                                  நடிகையும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா, ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

                                  ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா
                                  நடிகை ரோஜா ஆம்புலன்ஸ் ஓட்டிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்


                                  தமிழ் திரையுலகில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ரோஜா. சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, ஆயுத பூஜை, உன்னிடத்தில்

                                  என்னை கொடுத்தேன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.

                                  டைரக்டர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஆந்திர அரசியலில் குதித்தார்.

                                  தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். ஆந்திராவில் அனைத்து மருத்துவ

                                  வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவையை மாநில முதல்- மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி உள்ளார். நகரி தொகுதிக்கு

                                  உட்பட்ட கிராமங்களுக்கான ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புத்தூரில் நடந்தது. இதில் நடிகை ரோஜா பங்கேற்றார்.

                                  அப்போது திடீரென்று ஆம்புலன்சில் ஏறி இருக்கையில் உட்கார்ந்து ஆம்புலன்சை ஓட்ட தொடங்கினார். நகரி வரை 20 கிலோ மீட்டர்

                                  தூரம் ஆம்புலன்சை ஓட்டி சென்றார். ரோஜாவின் இந்த செயலை விமர்சித்த தெலுங்கு தேசம் கட்சி “ரோஜா சாகசம் செய்வதற்காக

                                  ஆம்புலன்சை ஓட்டி உள்ளார். அவசர கால ஊர்தியை ஓட்ட அவருக்கு லைசென்ஸ் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பி உள்ளது.

                                  ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா
                                  ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா
                                      Posted in உலக செய்திகள் சினிமா

                                      இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை…. திரையுலகினர் அதிர்ச்சி

                                      இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை…. திரையுலகினர் அதிர்ச்சி

                                      மண்டியா அருகே நடிகர் சு‌ஷில்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

                                      32 வயது இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை…. திரையுலகினர் அதிர்ச்சி
                                      சு‌ஷில்குமார்


                                      கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சு‌ஷில்குமார்(வயது 32). இவர் கன்னடத்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர்.

                                      இவர் சலகா என்ற கன்னட படத்தில் நடித்து உள்ளார். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. மேலும் பெங்களூருவில் ஒரு

                                      உடற்பயிற்சி கூடத்தில் சு‌ஷில்குமார் பணியாற்றி வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால்

                                      மண்டியா டவுனில் உள்ள தனது வீட்டில் சு‌ஷில்குமார், குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

                                      இந்த நிலையில் நேற்று மண்டியா புறநகர் இந்துவாலு பகுதியில் உள்ள தனது நண்பரின் பண்ணை வீட்டிற்கு சு‌ஷில்குமார் சென்று

                                      இருந்தார். அங்கு ஒரு அறையில் திடீரென சு‌ஷில்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து

                                      அதிர்ச்சி அடைந்த நண்பர் உடனடியாக மண்டியா புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

                                      சு‌ஷில்குமார்

                                      கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் வருமானம் குறைந்து சு‌ஷில்குமார் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். ஆனாலும் அவர்

                                      தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து மண்டியா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

                                      கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட பிரபல நடிகர் சிரஞ்சீவி சர்ஜா உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், வளர்ந்து வரும்

                                      கன்னட நடிகரான சு‌ஷில்குமார் தற்கொலை செய்து கொண்டது கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

                                      இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை…. திரையுலகினர் அதிர்ச்சி
                                      இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை…. திரையுலகினர் அதிர்ச்சி
                                          Posted in பங்கு சந்தை Forex Trade

                                          09-07-2020 GBP – USD பங்கு சந்தை எதிர்வரும் 24 மணித்தியால நிலவரம் FREE FOREX SINGLAS

                                          09-07-2020 GBP – USD பங்கு சந்தை எதிர்வரும் 24 மணித்தியால நிலவரம் FREE FOREX SINGLAS

                                          உலக பங்கு சந்தையில் 09-07-2020 GBP – USD எதிரே வரும் 24 மணித்தியால நிலவரம் இதுவாக அமையலாம் .

                                          மிகவும் இலகுவான முறையில் இலக்கை அடையும் இலக்கு எண்களாக இவை உள்ளது ,லோங் ட்ராடிங் செல்லுங்கள் ,1,26339 to

                                          1,25789 இந்த இலக்கத்தில் மேலே இருந்து கீழோ அல்லது கீழ் இருந்து மேலாக மோதி விட்டு மீள எதிர் திசை நோக்கி பயணிக்கும் ,இரண்டுக்கு மேற்பட்ட தடவைகள் இந்த நிலைகளில் ஏற்ற இறக்கம் இடம்பெறலாம்

                                          இவை முக்கியமான உடைப்பு முன் அரண் நிலைகளாக உள்ளன ,எனவே பொறுமையுடன் இலக்கு எட்டும் வரை காத்திருந்து இலாபத்தை பெற்று கொள்ளுங்கள்

                                          மேலும் நாள் நிலவரமாக இந்த இலக்கங்கள் அமையலாம் 14 முதல் 16 பிப்ஸ் நிலைகளாக இவை அமைய கூடும்
                                          1,26738,and 1,26339 and 1,25954 and 1,25789,and 1,25567 and 1,25231

                                          ஒவ்வொரு இலக்கங்களும் முக்கிய உடைப்பு நிலைகளாகும் , அதிக உச்சத்தில் அதிக வொலும் சைஸ் அதே போல அதிக கீழ் நிலையில் அதே போல வைத்து பயன் பெறுங்கள்

                                          சலனம் இன்றி அமைதியாக ,மகிழ்ச்சியாக பணத்தை அள்ளுங்கள் ,வெல்லுங்கள்
                                          இலக்கை சொல்வது நாங்கள் ,வெற்றியை தீர்மானிப்பது நீங்கள்

                                          முடியும் என்று மோது – முகில் முட்டும் மலையும் தகரும்

                                          சந்தை நிலவர கணிப்பு – – வன்னி மைந்தன்
                                          மேலதிக லைவ் தொடர்புகளுக்கு 0044 75 3670 7793

                                            Posted in சினிமா

                                            50 சதவீதம் சம்பளத்தை குறைத்த ரகுல் பிரீத் சிங்

                                            50 சதவீதம் சம்பளத்தை குறைத்த ரகுல் பிரீத் சிங்

                                            நடிகை ரகுல் பிரீத் சிங், 50 சதவீதம் சம்பளத்தை குறைக்க முன்வந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

                                            50 சதவீதம் சம்பளத்தை குறைத்த ரகுல் பிரீத் சிங்
                                            ரகுல் பிரீத் சிங்


                                            கொரோனாவால் திரையுலகம் முடங்கி உள்ளது. தயாரிப்பாளர்கள் நஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்த இழப்பை ஈடுகட்ட நடிகர் நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற

                                            கோரிக்கைகள் எழுந்துள்ளன. நடிகர் விஜய் ஆண்டனி, தான் நடித்து வரும் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய 3 படங்களின்

                                            சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாக ஏற்கனவே அறிவித்தார்.

                                            ஹரிஷ் கல்யாண், “அடுத்து நான் நடிக்க உள்ள படங்களில் எனது வருமானத்தில் ஒரு பகுதியை விட்டுத்தருவேன்” என்று கூறினார். நடிகர் நாசர் கபடதாரி படத்தில் 15 சதவீதம் சம்பளத்தை

                                            குறைத்துள்ளார். நடிகர்கள் உதயா, அருள்தாஸ், மகத், நடிகை ஆர்த்தி, ஆகியோரும் சம்பளத்தை குறைத்துள்ளனர்.

                                            ரகுல் பிரீத் சிங்

                                            இந்த நிலையில் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ள ரகுல்பிரீத் சிங் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் சம்பளத்தை பாதியாக குறைக்க தயாராகி

                                            உள்ளார். ரகுல்பிரீத் சிங் ஒரு படத்தில் நடிக்க ரூ.1.5 கோடி வாங்கி வந்ததாகவும் இனிமேல் ரூ.75 லட்சத்துக்கு நடிக்க முன்வந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரகுல் பிரீத் சிங்

                                            தற்போது கமல்ஹாசனின் இந்தியன்2, சிவகார்த்திகேயனுடன் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

                                                Posted in சினிமா வினோத வீடுப்பு

                                                காதலித்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை

                                                காதலித்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை

                                                அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த நடிகை சமிக்‌ஷா தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.

                                                காதலித்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை சமிக்‌ஷா
                                                கணவருடன் நடிகை சமிக்ஷா


                                                2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சமிக்‌ஷா. இப்படத்தை தொடர்ந்து

                                                மனதோடு மழைக்காலம், மெர்குரி பூக்கள், உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தார்.

                                                இவர் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் பாடகர் ஷயீல் ஓஸ்வாலை கடந்த 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

                                                சமிக்‌ஷா – ஷயீல் ஓஸ்வால் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்.

                                                கணவருடன் நடிகை சமிக்ஷா

                                                2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சமிக்‌ஷா, 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவருக்கு அமேபிர் என்ற 10 வயது மகன் இருக்கிறார்.

                                                காதலித்தவரை இரண்டாவது திருமணம்
                                                காதலித்தவரை இரண்டாவது திருமணம்
                                                    Posted in சினிமா வினோத வீடுப்பு

                                                    அஜித் படத்தின் வெற்றிக்கு விருந்து கொடுத்த விஜய்

                                                    அஜித் படத்தின் வெற்றிக்கு விருந்து கொடுத்த விஜய்

                                                    அஜித் படம் வெற்றி அடைந்ததை அடுத்து நடிகர் விஜய் தன்னை வீட்டிற்கு அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

                                                    அஜித் படத்தின் வெற்றிக்கு விருந்து கொடுத்த விஜய்
                                                    அஜித், வெங்கட் பிரபு, விஜய்


                                                    கொரோனா ஊரடங்கில் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனுடன் இயக்குனர் வெங்கட் பிரபு நேரலையில்

                                                    கலந்துரையாடினார். அப்போது விஜய் பற்றி வெங்கட் பிரபு கூறியதாவது: ‘சிவகாசி’ படத்தில் விஜய்யுடன் சிறிய

                                                    கதாபாத்திரத்தில் நடித்தேன். ‘மங்காத்தா’ படம் முடிந்தவுடன், வீட்டிற்கு அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்தார். ஏனென்றால் அவருக்கு மங்காத்தா படம் அவ்வளவு பிடித்திருந்தது.

                                                    அப்போது நிறைய பேசினோம். கதை தயாரானவுடன் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்று சொன்னார்.

                                                    சீக்கிரமே அவரை கவரும் வகையில் ஒரு நல்ல கதையுடன் போய் சந்திக்க காத்திருக்கிறேன். அவரோடு விரைவில் வித்தியாசமான ஒரு படம் பண்ணனும் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

                                                    அஜித் படத்தின் வெற்றிக்கு
                                                    அஜித் படத்தின் வெற்றிக்கு
                                                        Posted in சினிமா

                                                        விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தோனிக்கு வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்

                                                        விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தோனிக்கு வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்

                                                        பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து சொல்லியிருக்கிறார்.

                                                        விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தோனிக்கு வாழ்த்து சொன்ன கிரிக்கெட் வீரர்
                                                        விஜய் – தோனி


                                                        இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார். பிரபலங்கள் மற்றும்

                                                        ரசிகர்கள் ஒரு சேர அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியை கேப்டனாக அவர்

                                                        வழிநடத்திய விதத்தால் ரசிகர்கள் அவரை தல என்றே அழைக்கின்றனர்.

                                                        விஜய் தோனியின் ஹெய்டன்

                                                        இந்நிலையில் ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் வீரரமுான மேத்யூ ஹெய்டன் தனது

                                                        இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி மற்றும் விஜய்யுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்து, பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி. பிரபல

                                                        நடிகர் விஜய் சந்திரசேகருடன் இருக்கும் இது என்னுடைய விருப்பமான புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்.

                                                        விஜய்யுடன் இருக்கும்
                                                        விஜய்யுடன் இருக்கும்
                                                            Posted in பங்கு சந்தை Forex Trade

                                                            forex trading பங்கு சந்தை GBP USD நாளைய ( 08-07-2020 )நிலவரம் இவ்வாறு அமையும்

                                                            பங்கு சந்தை GBPUSD நாளைய நிலவரம் இவ்வாறு அமையும்

                                                            உலக பங்கு சந்தையில் GBPUSD நாளைய நிலவரம் இவ்வாறு அமையலாம் .


                                                            இலகுவான முக்கிய ஏற்ற இறக்க தரிப்பு நிலையாக 1,25789 மற்றும் 1,25143 ஆகியன முக்கியமானதாக விளங்கும் . 6 பிப்ஸ் இலாபமாக இலகுவாக பெற்று கொள்ள முடியும் ,


                                                            இவற்றில் கீழ் இருந்து மேலே மற்றும் மேல் இருந்து கீழாக மோதி திரும்பும் .

                                                            எனவே லோங் ரேடிங் இதில் மையமாக வைத்து இலாபத்தை பெற்று கொள்ளுங்கள்


                                                            அது தவிர நாள் முழுவதற்குமான 16 பிப்ஸ் நிலைகளாக 1,26559 AND 1,25927 and 1,25664 and 1,25380 and 1.25143 and 1,24834 விளங்கும்

                                                            எனவே அமைதியாக ,பொறுமையோடு இலக்கு கிட்டும் வரை காத்திருந்து பதட்டம் இன்றி இலாபத்தை பெற்று கொள்ளுங்கள்


                                                            இவ்வாரம் முழுவதுமாக 127,300 மற்றும் 1,23000 ஆக நிலை எடுத்து சந்தை விளங்கும் என்பதாக நமது கணிப்பு உள்ளது . அதிக

                                                            உச்சத்தில் வொளும் சைஸ் கூடுதலாகவும் ,அதிக வீழ்ச்சியில் அதே போல வைத்து இலாபத்தை பெற்று கொள்ளுங்கள் ,

                                                            இதற்கு இடையிலான பகுதியில் வொளும் சைஸ் 0,0,1 ஆக வைத்து கொள்ளுங்கள் .

                                                            அது தவிர்ந்த பகுதிகள் மேல் கீழ் உச்சத்தில் 0,10 வரை நீங்கள் செல்ல முடியும் பாதுகாப்பானதாக அமையும்

                                                            இலக்கை சொல்வது நாம் ,வெற்றியை தீர்மானிப்பது நீங்கள்
                                                            மேலதிக லைவ் உதவி தேவை படின் எம்மை தொடர்பு

                                                            கொள்ளுங்கள்
                                                            நன்றி – வன்னி மைந்தன் 0044 75 3670 7793

                                                            பங்கு-சந்தை-gbpusd
                                                            பங்கு-சந்தை-gbpusd
                                                              Posted in சினிமா

                                                              பயப்படுவதோ, ஓடிப்போவதோ கிடையாது – காஜல் அகர்வால்.

                                                              பயப்படுவதோ, ஓடிப்போவதோ கிடையாது – காஜல் அகர்வால்.

                                                              வேலையை பார்த்து பயப்படுவதோ பிரச்சினையை பார்த்து ஓடிப்போவதோ கிடையாது என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

                                                              பயப்படுவதோ, ஓடிப்போவதோ கிடையாது – காஜல் அகர்வால்
                                                              காஜல் அகர்வால்
                                                              கொரோனா ஊரடங்கில் நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:-

                                                              வாழ்க்கையிலும் சரி சினிமாவிலும் சரி எனக்கு எதிரான ஒவ்வொரு பிரச்சினையையும் ஒரு சாவாலாக எடுத்துக்கொள்கிறேன். ஒரு

                                                              வேலையை பார்த்து பயப்படுவதோ பிரச்சினையை பார்த்து ஓடிப்போவதோ கிடையாது. அப்படி செய்தால் அது நமது பலகீனமாக மாறி விடும்.

                                                              நான் நடித்த ஒவ்வொரு படத்திலும் எனக்கு சவாலாக இருக்கிற மாதிரியான நிறைய கதாபாத்திரங்கள் கிடைத்தன. அதுபோன்ற

                                                              கதாபாத்திரங்களில் நடிக்கத்தான் நானும் விரும்பினேன். படப்பிடிப்பில் தொழில் ரீதியாக பிரச்சினைகள் நிறையவே

                                                              இருந்தன. இப்போது அவற்றை நினைத்து பார்த்தாலும் இனிமையான நினைவுகள்தான்.

                                                              காஜல் அகர்வால்

                                                              விவேகம் படப்பிடிப்பில் மைனஸ் 12 டிகிரி குளிரில் மிகவும் கஷ்டமாக இருந்தாலும் புடவை கட்டி நடித்தேன். திரையில்

                                                              ரசிகர்கள் பார்த்து பாராட்டியதை பார்த்தபோது பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஆனந்தமாக மாறி விட்டது. இதுமாதிரி சொல்ல நிறைய

                                                              விஷயங்கள் இருக்கிறது. நம்மால் சாதிக்க முடியாது என்று நினைத்தால் அதுதான் நமது பலவீனம். சாதிக்க முடியும் என்று

                                                              நினைத்தால் அதுதான் நமது பலம். இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்

                                                                  Posted in சினிமா

                                                                  இயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் – நிலா

                                                                  இயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் – நிலா

                                                                  இயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்று நடிகை மீரா சோப்ரா என்கிற நிலா குற்றம் சாட்டியுள்ளார்.

                                                                  இயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் – நிலா
                                                                  நடிகை நிலா


                                                                  தமிழில் அன்பே ஆருயிரே, ஜாம்பவான், லீ, மருதமலை, இசை, கில்லாடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நிலா இந்தியில் மீரா

                                                                  சோப்ரா என்ற பெயரில் நடித்து வருகிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

                                                                  வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தினால் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக ஏற்கனவே அவர் குற்றம்

                                                                  சாட்டினார். தற்போது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியதாவது:- “நானும் வேறு சிலரும் நடிகர்கள்

                                                                  எதற்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்களை அந்த நிலைக்கு கொண்டு செல்வது எது என்ற விஷயங்களை வெளிப்படுத்த விரும்புகிறோம்.

                                                                  நிலா

                                                                  சினிமா துறை குறிப்பிட்டவர்களுக்கு எதிராக செயல்படுகிறது. இயக்குனர்கள் சிலர் இரக்கம் இல்லாமல் நடந்து கொள்கின்றனர். முதிர்ச்சியான இயக்குனர்கள் அவ்வாறு செய்வது இல்லை.

                                                                  எனக்கும் அதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. இதை வெளிப்படுத்தினால் எத்தனை பேர் ஆதரவு கிடைக்கும் என்பது

                                                                  கேள்விக்குறி. சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு பிறகும் எதுவும் இங்கே மாறவில்லை. வேலையை தாண்டியும் பல விஷயங்கள்

                                                                  சினிமா துறையில் நடக்கின்றன. இந்த அழுத்தங்கள்தான் தவறான முடிவுகளை எடுக்க தூண்டுகிறது. சுயமரியாதை, கவுரவத்தை விட மன அமைதி முக்கியம்.” இவ்வாறு நிலா கூறியுள்ளார்

                                                                      Posted in மருத்துவம்

                                                                      பெற்றோர் இப்படி செய்தால் குழந்தைகள் உணவை வெறுக்கும்

                                                                      பெற்றோர் இப்படி செய்தால் குழந்தைகள் உணவை வெறுக்கும்

                                                                      குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று கட்டாயப்படுத்தினால் அவர்கள்

                                                                      வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.


                                                                      குழந்தைகளை சாப்பிடு, சாப்பிடு என்று கட்டாயப்படுத்தினால் அவர்கள் வழக்கமாக உண்ணும் அளவை விட குறைவகாகவே சாப்பிடுகிறார்கள் என்று ஆராய்ச்சி முடிவு தெரிவித்துள்ளது.

                                                                      அமெரிக்காவில் உள்ள பெனிசில்வேனியா மற்றும் அப்பலாச்சியன் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளின் உணவு பழக்க, வழக்கங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

                                                                      பெற்றோர் இப்படி செய்தால் குழந்தைகள் உணவை வெறுக்கும்

                                                                      இந்த ஆய்வில் கலந்து கொண்ட 4 வயது குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் சாப்பிடச் சொல்லி நச்சரித்ததால் வழக்கமாக அவர்கள் சாப்பிடும் அளவை விட குறைவாகவே சாப்பிட்டுள்ளனர்.

                                                                      குழந்தைகளை நச்சரிப்பதால் அவர்களுக்கு உணவு மீது வெறுப்பு வருகிறது. அதனால் அவர்கள் குறைவாக சாப்பிடுகின்றனர்.

                                                                      அவ்வாறு குறைவாக சாப்பிட்டால் அவர்களின் உடல் நலம் தான் கெடும்.

                                                                      பெற்றோர்கள் நச்சரிக்காமல் இருந்தால் அவர்களுக்கு சாப்பிட்டு பழக்கம் இல்லாத உணவைக் கொடுத்தாலும் அவர்கள் நன்றாக சாப்பிடுவார்கள் என்று அந்த ஆய்வு முடிவு கூறுகிறது.

                                                                      குழந்தைகள் மனநல மருத்துவர் ரிச்சர்ட் உல்ப்சன் கூறுகையில், குழந்தைகளை சாப்பிடச் சொல்லி நச்சரிக்கவும் கூடாது. அதே

                                                                      சமயம் அவர்களாகவே சாப்பிடட்டும் என்று விட்டுவிடவும் கூடாது. அன்பாகக் கூறினால் அவர்கள் கேட்டுக்கொள்வார்கள் என்றார்

                                                                          Posted in மருத்துவம்

                                                                          இதய நோய் அபாயத்தை குறைக இதை சாப்பிடுங்க

                                                                          இதய நோய் அபாயத்தை குறைக இதை சாப்பிடுங்க

                                                                          வாழைப்பழ தேநீரில் உள்ள கேடசின் எனப்படும் ஆன்டிஆக்சிடெண்ட் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்பது

                                                                          பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

                                                                          இதய நோய் அபாயத்தை குறைக்கும் வாழைப்பழ தேநீர்
                                                                          வாழைப்பழ தேநீர்
                                                                          வாழைப்பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள்

                                                                          நிறைந்திருக்கின்றன. அதனை தேநீராக தயாரித்தும் பருகலாம். வாழைப்பழ தேநீரில் பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு, தாமிரம் மற்றும் வைட்டமின் பி 6 போன்ற ஊட்டச்சத்துக்கள்

                                                                          நிறைந்திருக்கின்றன. அதனை பருகுவது இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும். ரத்த அழுத்தத்தை குறைக்கவும் செய்யும்.

                                                                          வாழைப்பழ தேநீர் பக்கவாதம் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைப்பதும் ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வாழைப்பழ தேநீரில் உள்ள கேடசின் எனப்படும் ஆன்டிஆக்சிடெண்ட் இதய நோய்

                                                                          அபாயத்தைக் குறைக்கும் என்பது பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் நியூட்ரிஷன் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

                                                                          வாழைப்பழ தேநீரில் சர்க்கரை குறைவு. அதனால் நீரிழிவு நோயாளிகளும் குறைந்த அளவில் சாப்பிடலாம். வாழைப்பழத்தை நீரில் கொதிக்கவைக்கும்போது சர்க்கரையின் வீரியம்

                                                                          குறைந்துவிடும். வாழைப்பழத்தில் இருக்கும் மெக்னீசியமும், பொட்டாசியமும் தூக்கத்தை மேம்படுத்த உதவும். மேலும்

                                                                          வாழைப்பழத்தில் எல்-டிரிப்டோபான் என்னும் அமினோ அமிலமும் உள்ளது. இது தூக்கத்தை தூண்டும் ஹார்மோன்களான

                                                                          செரோடோனின் மற்றும் மெலடோனின் ஆகியவற்றை உருவாக்கும். அதுபோல் டொபமைன் எனும் அமினோ அமிலமும் வாழைப்பழத்தில் இருக்கிறது.

                                                                          இது செரோடோனின் ஹார்மோனை உற்பத்தி செய்யும். இந்த அமினோ அமிலங்கள் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். மனச்சோர்வு மற்றும் கவலையை குறைக்கும் என்பதும்

                                                                          கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழ தேநீர் தவறாமல் குடித்துவருவதன் மூலம் மனநிலையை மேம்படுத்தலாம்.

                                                                          வாழைப்பழத்தில் குறைந்த கலோரிகளே இருப்பதால் உடல் எடை குறைவதற்கும் உதவும். பசியையும் கட்டுப்படுத்தும். வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும்.

                                                                          வாழைப்பழ தேநீரில் உள்ளடங்கி இருக்கும் பொட்டாசியமானது ரத்த அழுத்தம் மற்றும் தசை சுருக்கங்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். வாழைப்பழத்தின் தோலில்

                                                                          ஆண்டிமைக்ரோபியல், ஆக்ஸிஜனேற்ற பண்புகள், பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற பயோ ஆக்டிவ் சேர்மங்கள்

                                                                          உள்ளன. அவை சருமம் தொடர்பான பொதுவான பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

                                                                          வாழைப்பழ தேநீர் தயார் செய்வது எளிதானது. அகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும். கொதிக்கத் தொடங்கியதும் வாழைப்பழத்தை துண்டுகளாக

                                                                          நறுக்கி போடவும். பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து 10 நிமிடங்கள் வாழைப்பழத்தை வேகவிடவும். பின்னர் சிறிதளவு

                                                                          லவங்கப்பட்டை, டீ தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். பின்பு வடிகட்டி ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகலாம்.