Author: நிருபர் காவலன்
பொலிஸ் வேட்டையில் லண்டனில் 1700 பேர் கைது
பொலிஸ் வேட்டையில் லண்டனில் 1700 பேர் கைது
பொலிசார் நடத்திய திடீர் தேடுதல் வேட்டையில் லண்டனில் 1700 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .
கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் பொழுதே மேற்படி கைதுகள் இடம்பெற்றுள்ளன .
இவர்களில் அதிகமானவர்கள் போதைவஸ்து கடத்தல் மற்றும் விற்பனை ,குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .
கைதானவர்களிடம் இருந்து பணம் ,போதை பொருட்கள் .கத்திகள் ஆயுதங்கள் என்பனவும் மீட்க பட்டுள்ளது என்கிறது விசேட காவல்துறை வேட்டை பிரிவினர் .
ரஷியாவில் பற்றி எரியும் எரிவாயு மையம் தாக்குதல் நடத்தியது யார்
ரஷியாவில் பற்றி எரியும் எரிவாயு மையம் தாக்குதல் நடத்தியது யார்
ரஷியாவில் பற்றி எரியும் எரிவாயு மையம் தாக்குதல் நடத்தியது யார்
ரசியாவின் இரண்டாவது மிக பெருமான் நகரமாக விளங்கி வரும் St. Petersburg பகுதியில் உள்ள எரிவாயு வயல்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இதனால் அந்த பகுதி பலத்த புகை மூட்டம் கொண்டதாக காண படுகிறது .
இங்கு தாக்குதல் நடத்தியது யார் என இதுவரை தெரிவிக்க படவில்லை .
உக்கிரேன் உளவு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டு இருக்கலாம் என அஞ்ச படுகிறது .
உக்கிரேனின் எரிவாயு மற்றும் மின்சார வயல்கள் மீது ரசியா தாக்குதல் நடத்தியதற்கு ,பதிலடியாக இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுளது எனப்படுகிறது .
தொடர்ந்து ரசியா உக்கிரேனுக்குள் இடையில் போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
மகளை உலகிற்கு அறிமுகம் படுத்திய வடகொரியா |North Korea introduced its daughter to the world
மகளை உலகிற்கு அறிமுகம் படுத்திய வடகொரியா |North Korea introduced its daughter to the world
வடகொரியா அதிபர் தனது மகளை உலக அரங்கிற்கு அறிமுக படுத்தியுள்ளார் .
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை புரிந்த நாள் அன்று தனது மக்கள் ,மனைவியுடன் சென்றுள்ள காட்சிகளை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுளளார் .
முழுமையாக காணொளியை பாருங்கள் .
எரிகாயங்களுடன் மனித சடலம் மீட்பு
எரிகாயங்களுடன் மனித சடலம் மீட்பு
எரிகாயங்களுடன் மனித சடலம் ஒன்று மின்சார கம்பம் அருகில் இருந்து மீட்க பட்டுள்ளது .
63 வயது நபரே இவ்விதம் மின்சாரம் தாக்கி இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் தொடரும் மர்ம கொலைகளின் பின்புலத்தில் ,இவர் எரித்து கொலை செய்யப்பட்டு பின்னர் ,மின்கம்பம் அருகே வீச பட்டு இருக்கலாம் என தெரிவிக்க படுகிறது .
போலி வாகன இலக்க தகடு தயாரித்த குழு மடக்கி பிடிப்பு
போலி வாகன இலக்க தகடு தயாரித்த குழு மடக்கி பிடிப்பு
போலி வாகன தகடுகளை தயாரித்து விற்பனை செய்து வந்த குழு ஒன்று கம்பாக சீதுவ பகுதியில் ,மடக்கி பிடிக்க பட்டுள்ளது .
அச்சு கூடம் என்ற போர்வையில் இவ்விதம் சட்டவிரோதமாகா வாகன தகடுகளை போலியாக தயாரித்து வழங்கி வந்த தகவல் ,இரகசிய குற்ற புலனாய்வு துறைக்கு கிடைக்க பெற்ற நிலையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளது .
கைத பொழுது இருபதுக்கு மேற்பட்ட போலி வாகன இலக்க தகடுகள் மீட்க பட்டத்துடன் ,நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
மனித கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது
மனித கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது
மனிதர்களை டுபாய் மற்றும் ஓமானில் இருந்து கடத்தி செயல்பட்ட முகவர் ஒருவர் இலங்கை வந்தடைந்த பொழுது கைது செய்ய பட்டுள்ளார் .
மோனல் 90 க்கு மேற்பட்ட பெண்கள் தடுத்து வைக்க பட்ட கொடுமை படுத்த பட்டு வருகின்றனர் .
இந்த பெண்களை ,இலங்கையில் இருந்து நயமாக பேசி இவர்களே கடத்தி சென்று விற்பனை செய்து வருவதாக, கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது .
ஊந்துருளி பந்தயத்தில் உயிரிழந்த இரு வாலிபர்கள்
ஊந்துருளி பந்தயத்தில் உயிரிழந்த இரு வாலிபர்கள்
ஊந்துருளி பந்தயத்தை களுத்துறை வீதியில் நடத்தி கொண்டிருந்த இரு வாலிபர்கள் ,அந்த ஊந்துருளிகள் மோதி சிதறியதால், சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .
பலியானவர்கள் பதினெட்டு வயதை கொண்டவர்கள் என தெரிவிக்க படுகிறது. .
இரு வாலிப குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியின் பொழுதே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இறந்தவர்கள் சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்காக சடலம் மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது .
இது குறித்த விபத்து தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
யாழில் மணவனை தாக்கிய ஆசிரியர் கைது
யாழில் மணவனை தாக்கிய ஆசிரியர் கைது
யாழில் தரம் பத்து வகுப்பில் கல்வி கற்ற மாணவன் ஒருவரை ,ஆசிரியர் ஒருவர் தாக்கிய நிலையில் ,அவர் கைது செயயப்பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது .
யாழில் பிரபல பாடசலை ஒன்றில் குறித்த ஆசிரியர் நடத்திய இந்த தாக்குதல் சம்பவம் ,மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கை பாடசாலையில் ஆசிரியர்கள் இவ்வாறு முட்டாள் தனமான செயல்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவ்வாறு நீதிமன்றினால் மாணவர்கள் தண்டிக்க படுதல் கூடாது என நீதிபதி இளஞ்செழியன்தீர்ப்பு வழங்கியுள்ள நிலையிலும் ,இந்த கோர சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் மாகாணத்திலுள்ள கலைஞர்கள் கௌரவிப்பு
கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் மாகாணத்திலுள்ள கலைஞர்கள் கௌரவிப்பு!
அபு அலா –
கிழக்கு மாகாணக் கலாச்சார திணைக்களம் நடாத்திய கிழக்கு மாகாணக் கலைஞர்களை கௌரவிக்கும் விழா நேற்று (18) திருகோணமலை விவேகானந்தாக் கல்லூரி கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.இ.எம்.டபிள்யூ.ஜி.திசாநயக்க தலைமையில் இடம்பெற்ற இந்த கௌரவிப்பு விழாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
மேலும், ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி.மதநாயக்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், பிரதிப் பிரதம
செயலாளர் (நிருவாகம்) ஏ.மன்சூர், பிரதிப் பிரதம செயலாளர் (ஆளனி மற்றும் பயிற்சி) திருமதி ஆர்.யூ.ஜெலீல், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்) என்.தமிழ்ச்செல்வன், பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) எஸ்.குலதீபன், பொதுச்
கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் மாகாணத்திலுள்ள கலைஞர்கள் கௌரவிப்பு
சேவைகள் ஆணைக்குழு செயலாளர் கே.கோபாலரத்தினம் உள்ளிட்ட மாகாண திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள கலைஞர்கள் இதன்போது பொன்னாடை போர்த்தி,
மலர்மாலை அணிவித்து, சான்றிதழ் மற்றும் விருதுகள் போன்றவற்றை விழாவின் பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான சிறந்த பாடகர்கள், எழுத்தாளர்கள், இளம் ஊடகவியலாளர்கள், புகைப்படக் கலைஞர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2020 ஆம் 2021 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றுக் காரணமாக இடம்பெறாமல் தடைப்பட்டு வந்த மாகாண கலைஞர்கள் கௌரவிப்பு விழாவை 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடாத்தவேண்டும்
என்று செயற்பட்டு வந்த கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் மற்றும் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட காலாச்சார
உத்தியோகத்தர்கள் மற்றும் மாகாண திணைக்கள உத்தியோகத்தர்கள் அனைவரின் செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஷேட நன்றிகளைத் தெரிவித்தார்.
இந்த விருதுகளை கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் மற்றும்
மாகாண அமைச்சின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலரினால் வழங்கி வைக்கப்பட்டது.
உக்கிரேனில் வீழ்ந்து வெடித்த 90 ஏவுகணைகள் -உக்கிரம் பெரும் மோதல்
உக்கிரேனில் வீழ்ந்து வெடித்த 90 ஏவுகணைகள் -உக்கிரம் பெரும் மோதல்
உக்கிரேன் தலைநகர் கீவ்,கேர்சன் மற்றும் டினிப்ரோ பகுதிகள் மீது ரசியா இராணுவத்தினர் குரூஸ் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .
உக்கிரேனில் போர் ஆரம்பித்து மாசி மாதம் அகோர ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றன.
அதன் பின்னர் தற்பொழுது கடந்த தினம் 90 ஏவுகணைகள் ஒரே நாளில் வீச பட்டுள்ளது .
ரசியா மிக நீண்டதூர ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதால் , உக்கிரேன் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது .
தொடர்ந்து ரசியா தாக்குதல்கள் உக்கிரம் பெற்றால் ,உக்கிரேன் நாட்டை கைவிட்டு நேட்டோ அமெரிக்கா கூட்டு படைகள் வெளியேறும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
ரசியா 10 கப்பல்களை காவி செல்லும் ஏவுகணை சோதனை
ரசியா 10 கப்பல்களை காவி செல்லும் ஏவுகணை சோதனை
ரசியா 10 கப்பல் எடையை காவி சென்று தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது .
இந்த ஏவுகணையானது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என்பதுடன் ,இந்த ஏவுகணையை 10 கப்பல் எடையை காவி செல்ல முடியும் என்கின்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை வடகொரியா சோதனை -அவசரமாக கூடும் நாடுகள்
அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை வடகொரியா சோதனை -அவசரமாக கூடும் நாடுகள்
வடகொரியா அமெரிக்காவின் இதய பகுதியை அதாவது வெள்ளைமாளிகை வரை சென்று தாக்கும் , கண்டம் விட்டு கண்டனம் பாயும் அணுகுண்டு ஏவுகணையை சோதனை புரிந்துள்ளது .
இன்று அதிகாலை வேளை .ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ தீவுக்கு அப்பால் இந்த ஏவுகணை வீழ்ந்து வெடித்தது .
சுமார் ஆறாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை இது என ஜப்பான் தெரிவித்துள்ளது .
இதனால் அமெரிக்காக்காவின் உப ஜனாதிபதி கமலா ஹாரீஸ் ,வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை தொடர்பில் அவசரமாக கூடி ஆராய்ந்து வருகிறார் .
அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை வடகொரியா சோதனை -அவசரமாக கூடும் நாடுகள்
இவருடன் பல முக்கிய நாடுகள் பேச்சில் ஈடுபட்டுள்ளன .
வடகொரியா மீது தொடராக பொருளாதார தடையினை விதித்து ,அந்த நாட்டு மக்களை பட்டினியால் கொல்லும் நிலைக்கு அமெரிக்கா வைத்துள்ளது .
நமக்கு தீர்வை வழங்குங்கள் என ,அமெரிக்காவின் மனடையில் வீழ்ந்து வெடிக்கும் ஏவுகணை மூலம், வடகொரியா செய்தியை சொல்லி அனுப்பியுள்ளது.
ஒரு மாதத்தில் நடந்தேறிய அதி முக்கிய அணுக்களுண்டு ஏவுகணை சோதனை இதுவாக பார்க்க பாடுகிறது .
வடகொரியா மீளவும் உலக மாநாடுகளை ஓடவைத்துள்ளது என்றால் ,அது எதையோ ஒன்றை செய்ய போகிறது என்பது பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.
ரொக்கட் கிங் என வடகொரியா அதிபரை டிரம்ப் கூறியது சரி தன் போல் உள்ளது .
தாலிபான்களிடம் சிக்கிய அமெரிக்கா ஆயுதங்கள் வெளியிட மறுக்கும் அமெரிக்கா .
தாலிபான்களிடம் சிக்கிய அமெரிக்கா ஆயுதங்கள் வெளியிட மறுக்கும் அமெரிக்கா .
ஆப்கான் நாட்டில் தற்போது ஆட்சியில் உள்ள தலிபான்கள் வசம் ,எவ்வகையான ஆயுத தளபாடங்கள் சிக்கின என்பது தொடர்பில் தமக்கு தெரியவில்லை என்கிறது அமெரிக்கா இராணுவ தலைமையகம் .
தலிபான்கள் வசம் ஆப்கான் நாடு வீழ்ந்த பொழுது 7.12 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் பெறுமதியான ஆயுத தளபாடங்கள் அங்கு இருந்ததாக அமெரிக்கா கூறுகிறது .
அப்படி என்றால் எவ்வகையான நவீன ஆயுத தளபாடங்களை அமரிக்கா தாலிபான்கள் வசம் சென்றுள்ளது என்பதை ஏன் தெரிவிக்க மறுக்கிறது என்பதை மக்களே புரிந்து கொள்ளுங்கள் .
முதன் முதலாக ஒரு நாட்டை ஆக்கிரமித்து, அவர்கள் வசம் உள்ள அதி நவீன விமானங்கள் ,போர்க் கப்பல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை , மீட்டுள்ளவர்களாக உலக வரலாற்றில் தலிபான்கள் இடம் பிடித்துள்ளனர் .
அமெரிக்காவினால் பயங்கரவாதிகள் என முத்திரை குற்ற பட்ட அதே தலிபான்கள் ,இன்று மக்கள் ஜனநாயக அரசாக மாற்றம் பெற்றுள்ளது .
மேலும் இதே தலிபான்கள் நாட்டில் தமது தூதரகங்களையும் திறந்து வைத்துள்ளது .
அமெரிக்காவின் ஆயுத இழப்பின் மூடி மறைப்பின் பின்னால் ,மிக பெரும் ஆபத்து தாலிபான்களினால் உள்ளது என்பதை எடுத்துரைக்கிறது .
அதனால் தான் என்னவோ ,தாம் இழந்த ஆயுத புள்ளி விபரங்கள் தெரியாது என்கிறது ,உலகை மிரட்டி ஆளும் அமெரிக்கா இராணுவ தலையகமான பென்டகோன்
இது போன்ற நிலை இலங்கையில் ஏற்பட்டால் மகிழ்ச்சியே என்பது தமிழர்கள் ஆவலாக உள்ளது .
உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் | kavithaikal |Vanni mainthan kavaithai
உள்ளம் தா உயிர் வாழ்கிறேன் | kavithaikal |Vanni mainthan kavaithai
இன்னும் எனக்குள் நீ |காதல் சோக கவிதை | tamil kavithaikal /Vanni mainthan kavaithai
இன்னும் எனக்குள் நீ |காதல் சோக கவிதை | tamil kavithaikal /Vanni mainthan kavaithai
கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள் மனோ கணேசன்
கலைஞர் கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள்!
- தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி
சும்மா கலைஞர் கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள்! இலங்கையில் தமிழர்களின் எல்லா இழப்புகளுக்கும், தமிழக அரசியல்வாதிகளையும், இந்திய
தலைவர்களையும் காரணமாக காட்டுவதையும் நிறுத்துங்கள்!! என கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
தமிழக இலங்கை அரசியல் பிரமுகர் மறைந்த மணவை தம்பியின் மைந்தர் மணவை அசோகனின் பவள விழா நிகழ்வு மட்டக்குளியில் நடைபெற்ற போது, அதில் அதிதியாக
கலந்துக்கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், தமது உரையில் மேலும் கூறியதாவது,
சும்மா கலைஞர் கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள். இலங்கையில் தமிழர்களின் எல்லா இழப்புகளுக்கும், தமிழக அரசியல்வாதிகளையும், இந்திய
தலைவர்களையும் காரணமாக காட்டுவதை நிறுத்துங்கள். இலங்கையில் தமிழர்கள் கண்டு விட்ட இழப்புகளுக்கு முதற்காரணம், இலங்கை தமிழ் அரசியல் மேதைகள். இரண்டாவது காரணம், கொலைகார பேரினவாத அரசுகள்.
1940களில் கண்டிய சிங்கள தலைமைகளே தர முன் வந்த சமஷ்டியை எட்டி உதைத்தது யார்? 65:35 என்ற ஜனபரம்பலுக்கு, நியாயமேயற்ற 50:50 என்ற யதார்த்தமற்ற
கோரிக்கையை முன் வைத்து, பிரிட்டீஷ் அரசாங்கமே கைவிரிக்கும் நிலைமையை ஏற்படுத்தியது யார்? 1987ல் வடக்கு கிழக்கு மாநிலம் என்ற அடிப்படையை துவக்கி வைத்த, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும், மாகாணசபைகளையும் எட்டி உதைத்தது யார்?
இன்று, “பிச்சை வேண்டாம், நாயை பிடி!” என்ற மாதிரி, 13ம் திருத்தத்தையாவது முழுமையாக அமுல் செய்யுங்களேன் என ஓலமிடுவது யார்? இந்திய நாட்டு பிரதமராக இருந்த, மீண்டும் பதவிக்கு வரவிருந்த, ராஜீவின் மரணத்துக்கு காரணத்தை மறந்து
விட்டு, இப்போது இந்திய அரசு தலைவர்களிடம், அதிகாரிகளிடம் கோரிக்கை மேல் கோரிக்கை வைப்பது யார்? இன்றும்கூட சகோதர முஸ்லிம் மக்களின் தேசிய அபிலாஷைகளை உள்வாங்காமல், வடக்கு-கிழக்கு இணைப்பு என நிபந்தனை விதிப்பது யார்?
கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள் மனோ கணேசன்
கருணாநிதியும், இந்திய தலைவர்களும் அதி உத்தமர்கள் என நான் கூற வரவில்லை. கருணாநிதியை கருணை நிதி எனவும் நான் கூறவில்லை. ராஜிவ் காந்தியை மகாத்மா காந்தி எனவும் நான் கூற வரவில்லை.
ராஜிவ் அனுப்பி வைத்த இந்திய அமைதி படை இங்கே கொலைகள், பாதகங்கள் செய்யவே இல்லை எனவும் நான் கூற வரவில்லை. “ஆர்மி” என்ற இராணுவம் எல்லா நாட்டிலும் ஒன்றுதான். கட்டவிழ்த்து விட்டால் இந்திய, இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்க இராணுவம் எல்லாம் ஒன்றுதான்.
இந்தியா ஒரு நாடு. இலங்கை இன்னொரு நாடு. தமது “தேச நலன்கள்” அவரவருக்கு முக்கியம் என்பதும், இந்தியர்கள் எமக்காக வரக்கூடிய தொடுவானம் எதுவரை என்பதும், நமது தமிழ் அரசியல் மேதைகளுக்கு விளங்கி இருந்திருக்க வேண்டும். அது சிங்கள அரசியல் மேதைகளுக்கு நன்கு தெரிந்து இருந்தது. அதனால்தான் அவர்கள் கெட்டிக்காரத்தனமாக காய் நகர்த்தி தமது இலக்கை அடைந்தார்கள்.
கருணாநிதியை கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள் மனோ கணேசன்
கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, எம்ஜியாரோ, இன்று ஸ்டாலினோகூட, தமக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தும் எட்டு கோடி தமிழருக்குதான் முதலில் பொறுப்புகூற கடமைபட்டுள்ளார்கள். இந்திரா காந்தியோ, ராஜீவ் காந்தியோ, இன்று நரேந்திர
மோடியோகூட, தமக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தும் நூற்றிமுப்பது கோடி இந்திய மக்களுக்குதான் முதலில் பொறுப்புகூற கடமைபட்டுள்ளார்கள்.
தங்கள் பார்வையில் தங்கள் நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் தீமை எனை அவர்கள் கருதும் எந்த ஒரு காரியத்தையும் அவர்கள் செய்ய மாட்டார்கள்.
இதிலும்கூட, கருணாநிதி இலங்கை தமிழருக்காக, தமிழ் நாட்டில் இரண்டு முறை தனது திராவிட முன்னேற்ற கழக மாநில ஆட்சியை இழந்தார் என்பது இங்கே எத்தனை தமிழ் மேதைகளுக்கு ஞாபகம் இருக்கிறது? ஆகவே, சும்மா கலைஞர் கருணாநிதியை குறி
வைத்து கரித்து கொட்டுவதை நிறுத்துங்கள். முதலில் சுய விமர்சனம் செய்ய ஆரம்பியுங்கள். வரலாறு முழுக்க செய்து விட்ட சுய தவறுகளை தேடுங்கள். விடை கிடைக்கும்.
நான் சும்மா ஊருக்கு உபதேசம் செய்யவில்லை. அனுபவத்தை பகிர்கிறேன்.
எனக்கு பின்னடைவு ஏற்பட்டால், காரணத்தை எனக்குள்ளேதான் நான் தேடுகிறேன்.
ஆகவே விடையும் கிடைக்கிறது. இந்த யுக்தியை எனக்கு வரலாறு கற்று கொடுத்திருக்கின்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணி – ஐநா அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூ குழுவினர் சந்திப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணி – ஐநா அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூ குழுவினர் சந்திப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தலைமையிலான கூட்டணி தூதுக்குழு, ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவை சந்தித்தது. கூட்டணி பிரதி தலைவர் வெ. இராதாகிருஷ்ணன்,
எம்பி உதயகுமார் ஆகியோர் கூட்டணி தலைவர் மனோ கணேசனுடன் கலந்துக்கொண்டனர்.
ஐநா சபையின் சார்பாக இலங்கையின் ஐநா நிரந்தர பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் அதிகாரிகள் அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூவுடன் கலந்துகொண்டனர்.
இந்திய வம்சாவளி மலையக தமிழரது அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், ஐநா உலக உணவு திட்டம் மற்றும் உலக வங்கி ஆகிய சர்வதேச அமைப்புகள், உணவின்மை மற்றும் வறுமை ஆகியவற்றால் பின்தங்கிய நலிவுற்ற மக்களாக
தமிழ் முற்போக்கு கூட்டணி – ஐநா அரசியல் துறை பணிப்பாளர் பீட்டர் டியூ குழுவினர் சந்திப்பு
கணக்கெடுத்து அடையாளப்படுத்தியுள்ள பெருந்தோட்ட மக்கள் மற்றும் நகர பாமர மக்கள் தொடர்புகளிலும் ஐநா அதிகாரிகளுக்கு விளக்கி கூறப்பட்டன.
இச்சந்திப்பின் போது, தமிழ் முற்போக்கு கூட்டணி தொகுத்துள்ள, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷை ஆவணம், பணிப்பாளர் பீட்டர் டியூவுக்கு, கூட்டணி தலைவரால் வழங்கி வைக்கப்பட்டது.
தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு, தென்னிலங்கையில்,
வாழும் சிறுபான்மை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான சவால்கள்
தொடர்பில் ஆராய விரும்புகின்றோம் எ
ன கொழும்பில் உள்ள ஐநா காரியாலயம் விடுத்துள்ள அழைப்பின் பேரில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
மல்லாவியில் 12800000 செலவில் கனடா – இரத்த சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
மல்லாவியில் 12800000 செலவில் கனடா – இரத்த சுத்திகரிப்பு நிலையம் திறப்பு
மல்லாவியில் ரூபாய் 12800000 செலவில் கனடா – மல்லாவி இரத்த சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
மல்லாவி மற்றும் சுற்றுவட்டாரத்தில் 500 இற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் இருப்பதனால் அவர்களுக்கென்ற ஒரு இரத்த சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகி வந்துள்ளனர்.
சில நோயாளிகள் ஒன்ற விட்ட ஒரு நாள் இரத்த சுத்தகரிப்பிற்காக சில நேரங்களில் நான்கு மணித்தியாலங்கள் பயணம் செய்து மிகவும் அல்லலுறுவதாக கேள்விப்பட்டே, இதனை நாங்கள் மல்லாவி வைத்தியசாலைக்குள் நிறுவி உள்ளோம்.
இந்த நிலைய திறப்பிற்கு பாரளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார் .

ஒரு இரத்த சுத்திகரிப்பு இயந்திரத்தினை, மக்களுக்கான சேவையினை கனடாவில் இருந்து கொண்டு தாயகத்தில் தன் இறுதி மூச்சு வரை செய்திட்ட பரஞ்சோதி சோதிமலர் (பரஞ்சோதி டீச்சர்) அவர்களின் ஞாபகார்த்தமாக அன்பளிப்பு செய்துள்ளோம்.
மற்ற இயந்திரத்தினை எங்கள் நிவாரண அமைப்பிற்கு பல ஆண்டு காலமாக பெரும் தூணாக இருந்து ஆண்டுதோறும் 15000 டொலருக்கு மேல் தானம் வழங்கும் திரு பிரான்சிஸ் அந்தோனிப்பிள்ளை அவர்களின் தாயாரான திருமதி பெர்னதேத்தம்மாவின் ஞாபகார்த்தமாக அன்பளிப்பு செய்துள்ளோம்.
நலிந்த மக்கள் இனி பயண செலவுகள் இன்றி இங்கு இந்த சேவையினை பெற்றிடலாம்.


மென்மேலும் தேவையுள்ள பல மருத்துவ உதவிகளை தொடர்ந்து மக்களுக்கு வழங்க உள்ளோம்! நன்றி!
- செந்தில் குமரன்
நிவாரணம் அமைப்பு -
ஓமான் 90 பெண்கள் நிர்கதி கண்ணீரில் குடும்பம்
ஓமான் 90 பெண்கள் நிர்கதி கண்ணீரில் குடும்பம்
இலங்கை பெண்கள் 90 பேர் ஓமான் நாட்டில் , நிர்கதியாக உள்ளதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது .
வீட்டு வேலைக்கு சுற்றுலா விசா மற்றும் வேலை விசா பெற்று சென்ற இலங்கை பெண்களே ,வீட்டு எயமானர்களினால் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க பட நிலையில் நிர்கதியாக உள்ளனர் .
இவ்வாறு நிர்கதியாக உள்ள பெண்களை மீட்டு இலங்கை அழைத்து வரும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது .
இலங்கை காவல்துறைக்கு எதிராக 1,122 முறைப்பாடுகள்
இலங்கை காவல்துறைக்கு எதிராக 1,122 முறைப்பாடுகள்
இலங்கை காவல்துறைக்கு இந்த வருடத்தில் தை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையான கால பகுதிக்குள் 1,122 முறைப்பாடுகள் வழங்க பட்டுள்ளன .
கடத்தல் ,கைது ,வதை,கற்பழிப்பு ,மோசடி என பலதர்ப்பட்ட குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளன .
கடந்த வருடம் மூவாயிரத்திற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் வழங்க பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .































































