விபத்தில் சிக்கி இராணுவ அதிகாரி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கி இராணுவ அதிகாரி மரணம்

விபத்தில் சிக்கி இராணுவ அதிகாரி மரணம்

இலங்கை கல்கமுவ பகுதியில் காரில் பயணித்த இராணுவ தளபதி ஒருவர் ,கார் விபத்தில் சிக்கியதால் பலியாகியுள்ளார் .

தனது இரு நண்பர்க்ளுடன் காரில் பயணித்து கொண்டிருந்த பொழுது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

விவசாயத் துறையை நவீனமயப்படுத்த கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

விவசாயத் துறையை நவீனமயப்படுத்த கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

விவசாயத் துறையை நவீனமயப்படுத்த கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

இலங்கையின் விவசாயத்தை நவீனப்படுத்தவும் புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவவும் கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டு

வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.


கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று (16) நடைபெற்ற, அமெரிக்க – இலங்கை ஃபுல்பிரைட் (Fulbright) ஆணைக்குழுவின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உணவைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான வளம் இல்லாத தீவு நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிங்கப்பூர்

முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அதற்குத் தேவையான காணிகளை

அடையாளங்கண்டு விவசாயத்தை நவீனமயப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


நவீன விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் (TRI) இணைப்பதன் மூலம் இலங்கையின் விவசாய

ஆராய்ச்சித் துறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் கண்டறிய பல அமெரிக்க நிறுவனங்களின் ஆதரவைப் பெற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவதில் பேராசிரியர் பிரதீபா பண்டாரநாயக்க போன்ற ஃபுல்பிரைட் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியமானது என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் பத்து வருடங்களில் ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.


இந்த மாபெரும் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிப்பதற்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும்,

ஃபுல்பிரைட் புலமைப்பரிசில்கள் மற்றும் உதவிகள் மூலம் இலங்கைக்கு வளவாளர்களை அழைத்துவருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,
ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக இலங்கை மற்றும் அமெரிக்காவிலிருந்து பல்வேறு துறைகளைப்

பிரதிநிதித்துவப்படுத்தும் அறிவு மற்றும் தொழிற்திறமையுள்ள சுமார் 3000 புலமைப்பரிசில் பெற்றுள்ளனர்.

அவர்கள் இலங்கையின் கல்வித் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்கள் எமது சமூகத்தையும் போசித்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான முறையான கல்விப் பரிமாற்றத்துக்கு 70 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.

அமெரிக்க மிஷனரிகளின் யாழ்ப்பாண வருகையுடன் இது ஆரம்பமானது. இரண்டாவது, கேர்ணல் ஹென்றி ஸ்டீல் ஒல்காட் இலங்கைக்கு வந்தபோது.

ஜனாதிபதி வூட்ரோ வில்சன் (Woodrow Wilson) காலனித்துவ நாடுகளுக்கு சுதந்திரத்தை உறுதிசெய்து 14 விடயங்களை அறிவித்தமை 20 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற மற்றொரு முக்கிய அம்சமாகும்.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் கல்வி மற்றும் கலாசாரம் என்பவற்றுக்கு வரையறுக்கப்படவில்லை. பொருளாதார உதவிகள், இரு நாடுகளுக்கும் சமமான நிலைப்பாட்டைக் கொண்ட அரசியல்

பிரச்சினைகள், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில் இந்த உறவு வியாபித்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.


இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சன்ங் மற்றும் அமெரிக்காவின் இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சந்தர்ஷி குணவர்தன ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பல்கலைக்கழக

மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, வயம்ப பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உதித் ஜயசிங்க,

ஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே மற்றும் ருஹுனு பல்கலைக்கழக
உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன ஆகியோர் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அமெரிக்காவில் 360 பேர் மீது துப்பாக்கி சூடு
Posted in இலங்கை செய்திகள்

இராணுவத்தால் இருவர் சுட்டு கொலை

இராணுவத்தால் இருவர் சுட்டு கொலை

மினுவாங்கொடை, பொல்வத்த பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், தற்போது வெளிநாட்டில் உள்ள குற்றவாளியான உரகஹா இந்திக்கவின் சகாக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரி ஒருவர் சிகிச்சைக்காக மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பொத்தல பிரதேசத்தை சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்தால் இருவர் சுட்டு கொலை

இவ்வாறு உயிரிழந்தவர்கள் யக்கலமுல்ல பிரதேசத்தில் 4 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தையை சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து T-56 ரக துப்பாக்கி, போர 12 வெடிமருந்து துப்பாக்கி மற்றும் ரம்போ ரக கத்தி ஆகியவற்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் தலைமையக முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி கிழக்கின் ஆளுநரினால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.
Posted in இலங்கை செய்திகள்

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி கிழக்கின் ஆளுநரினால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி கிழக்கின் ஆளுநரினால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் தகவல்கள் முகாமைத்துவ (IMS) தரவுத்தளம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பனம்

செய்து வைக்கும் நிகழ்வு நேற்று (17) மாலை மாகாண பிரதிப் பிரதம செயலக கூட்ட மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் (திருமதி) கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் நாகராஜா தனஞ்ஜெயனினால், தகவல்கள் முகாமைத்துவ (IMS) தரவுத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்ட நோக்கம் பற்றியும்,

தரவுத்தளத்தில் எவ்வாறு உள்நுழைவது மற்றும் பதிவுகளை எவ்வாறு பதிவிடுவது பற்றிய முழுமையான தகவல்களை அதிதி உள்ளிட்ட மாகாண

அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாண திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்களுக்கு மிக விரிவாக எடுத்துரைத்தார்.

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி கிழக்கின் ஆளுநரினால் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஆளுநர் செயலக செயலாளர் எல்.பி.மதநாயக்க, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், விவசாய அமைச்சின்

செயலாளர் எல்.கே.ஜி.முத்துபண்டா, பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஏ.மன்சூர், பிரதிப் பிரதம செயலாளர் (ஆளனி மற்றும் பயிற்சி) திருமதி ஆர்.யூ.ஜெலீல், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்) என்.தமிழ்ச்செல்வன்

, பிரதிப் பிரதம செயலாளர் (நிதி) எஸ்.குலதீபன் உள்ளிட்ட மாகாண திணைக்களத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தில் தகவல்கள்
முகாமைத்துவ முறைமையில் (IMS) தரவுத்தளத்தில் கிராம மற்றும் மாதர் கிராம


அபிவிருத்திச் சங்கத் தரவுகளை பதிவேற்றம் செய்ததில் மாகாணத்தில் முதல் 10
இடங்களைப் பெற்றுக் கொண்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம


அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர்களுக்கு ஆளுநர் சான்றிதழ் வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது

அபு அலா –

லண்டனில் தாய் சிசுவை கத்திமுனையில் மிரட்டிய திருடர்கள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் தாய் சிசுவை கத்திமுனையில் மிரட்டிய திருடர்கள்

லண்டனில் தாய் சிசுவை கத்திமுனையில் மிரட்டிய திருடர்கள்

லண்டன் தென் மேற்கு பகுதியில் தாய் சிசுவை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய திருடர்கள் செயல் ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

வீட்டுக்கு சென்று கதவை தட்டிய திருடர்கள் ,திருடர்கள் என அறியாது அந்த பெண்மணியும் கதவை திறந்துள்ளார் .

கதவை திறந்த பெண்ணை அப்டியே கத்திமுனையில் வீட்டுக்குள் தள்ளி சென்றனர் .

அவ்வேளை அந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பணத்தை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளனர் .

நீல நிற டெஸ்க்கோ ஜாக்கட் அணிந்த கறுப்பினத்தவர்களை சேர்ந்த இருவரே இந்த பட்ட பகல் வேளையில் பகிராங்க கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் .

வீட்டில் இருந்த ரிங் டோர் கமராவில் இந்த காட்சிகள் பதிவாகியா நிலையில் , தற்போது அவை வைரலாகி வருகிறது .

இரண்டு திருடர்களை கைது செய்திடும் ,தீவிர நகர்வில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர் .

குறித்த பகுதியில் மேலதிக காவல்துறை ரோந்து அதிகரிக்க பட்டுள்ளது .

இதுவரை திருடர்கள் கைது செய்யப் படவில்லை ,.

போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் .

அமெரிக்கா விமான தாங்கி கப்பல் பிரிட்டனில் தரிப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா விமான தாங்கி கப்பல் பிரிட்டனில் தரிப்பு

அமெரிக்கா விமான தாங்கி கப்பல் பிரிட்டனில் தரிப்பு

அமெரிக்கா இராணுவத்தின் மிக பெரியா இராணுவ விமான தாங்கி கப்பலான, USS Gerald R Ford இங்கிலாந்தின் தெற்கு கடல்பகுதியில் நங்கூரம் இட்டுள்ளது .

333 அடி நீளமானதாகும் .இதன் மொத்த மதிப்பு 12.8 பில்லியன் அமெரிக்கா டொலராகும் .

அவ்வாறான மிக விலை உயர்ந்ததும் ,சக்தி வாய்ந்த கப்பல் இங்கிலாந்தில் நங்கூரம் இட்டுள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கருங்கடலை நோக்கி செல்லும் முகமாக ,பிரிட்டனில் நங்கூரம் இட்டுள்ளதா என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

உக்கிரேனில் ரசியா படைகள் விரட்டியடிக்க பட்ட நிலையில் ,இந்த கப்பல் இங்கிலாந்துக்கு வருகை தந்துள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது .

ரசியா இராணுவ கேணல் அலுவலக அறையில் சுட்டு கொலை
Posted in உளவு செய்திகள்

ரசியா இராணுவ கேணல் அலுவலக அறையில் சுட்டு கொலை

ரசியா இராணுவ கேணல் அலுவலக அறையில் சுட்டு கொலை

ரசியா இராணுவத்தின் கேணல் வாடிம் பாய்கோ, விளாடிவோஸ்டாக் பசிபிக் கடற்படைக் கல்லூரியின் துணை இயக்குனர் அவரது அலுவலகத்தில் சுட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்

https://www.youtube.com/watch?v=Igaw-SWVJow

பலத்த பாதுகாப்பு உள்ள பகுதியில் ,இவர் மீது துணிகர சூட்டு தாக்குதலை நடத்தியது யார் என்பது தெரிவிக்கப்படவில்லை .


ரசியா இராணுவத்தினருக்குள் முரண்பாடுகள் உச்சம் பெற்றுள்ளதை, இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .

இவர் ஆளும் ரசியா அதிபருக்கு நெருக்கமானவர் என படுகிறது .பிறிதொரு தகவலோ புட்டீன் நிழல் படைகளே இவரை கொன்றதான செய்திகளும் பரவி வருகின்றன .

இங்கு நடந்தது என்ன என்பது தொடர்பில் இதுவரை தெளிவான செய்திகள் காணப்படவில்லை .


சில நாட்களின் பின்னரே முழுமையான தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் ரசியா இராணுவத்தினருக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

பிரிட்டனில் இருந்து பிரான்சுக்கு அகதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தம் - அகதிகளுக்கு ஆப்பு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் இருந்து பிரான்சுக்கு அகதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தம் – அகதிகளுக்கு ஆப்பு

பிரிட்டனில் இருந்து பிரான்சுக்கு அகதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தம் – அகதிகளுக்கு ஆப்பு

பிரான்ஸ் கடல்வழியாக இங்கிலாந்துக்கும் நுழையும் அகதிகளை தடுத்து நிறுத்தும் புதிய ஒப்பந்தம் ஒன்று ,பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் கைச்சாத்திட பட்டுள்ளது .

இதன் மூலம் கடல்வழியாக பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள் மீளவும் பிரான்சுக்கு திருப்பி அனுப்பும் ,புதிய ஒப்பந்தம் ,அகதிகள் நுழைவை கட்டு படுத்தும் என உள்துறை அமைச்சர் ,சர்ச்சை நாயகி Suella Braverman, தெரிவித்துள்ளார் .

இவர் ஒரு இந்தியா பூர்வீக குடியை சேர்ந்தவர், இவ்விதம் கடும் போக்கை மேற்கொண்டு வருகிறார் .

இவருக்கு முன்னதாக விளங்கிய பரோட்டா ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பி வைக்கும் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டார் ..

ஆனால் ஆளும் இந்திய குடி பிரதமர் சுனெக் 3000 இந்தியர்கள் பிரிட்டனில் வேலை செய்திடும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு தனது இந்திய மக்களை குஷி படுத்தியுள்ளார் என்கிறது எதிர்மறை மக்கள் கருத்துக்கள் .

அரசியலில் இதெல்லாம் சகயமப்பா .

பாலியல் குற்றச்சாட்டில் மதபோதகருக்கு 8 658 ஆண்டுகள் சிறை
Posted in உலக செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டில் மதபோதகருக்கு 8 658 ஆண்டுகள் சிறை

பாலியல் குற்றச்சாட்டில் மதபோதகருக்கு 8 658 ஆண்டுகள் சிறை

துருக்கியில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் மத போதகர் ஒருவருக்கு 8 ஆயிரத்து 658 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அங்காரா நகரைச் சேர்ந்த அட்னான் அக்தார், ஏ9 என்கிற ஆன்லைன் தொலைக்காட்சி சேனல் வழியாக மதப்பிரச்சாரம் நடத்தி வந்தார்.

கடந்த ஆண்டு அவர் மீது பாலியல் வன்கொடுமை, அரசியல் மற்றும் இராணுவ உளவு முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் படி 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், மேல்முறையீட்டில் அக்தார் உட்பட மேலும் 10 பேருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து,
இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறையை தாக்கிய 6 பெண்கள் கைது

காவல்துறையை தாக்கிய 6 பெண்கள் கைது

அநுராதபுரம், புபுதுபுர பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி

அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு நேற்று (16) புபுதுபுர பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 14 கிராம் 220

மில்லிகிராம் ஹெரோயினுடன் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல தயாரான போது, ​​அவ்விடத்திற்கு வந்த சந்தேக நபர்களின்

காவல்துறையை தாக்கிய 6 பெண்கள் கைது

உறவினர்கள் 6 பேர் பொலிஸ் உத்தியோகத்தர்களை கற்களால் தாக்கியுள்ளனர்.

காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, சட்டவிரோதமான ஒன்று கூடியமை மற்றும் கற்களால் தாக்கி காயங்களை

ஏற்படுத்திய குற்றங்களுக்காக குறித்த ஆறு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (17) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பழுதடைந்த மாட்டிறைச்சி விற்பனை
Posted in இலங்கை செய்திகள்

பழுதடைந்த மாட்டிறைச்சி விற்பனை

பழுதடைந்த மாட்டிறைச்சி விற்பனை

பொத்துவில் பிரதேசத்தில் நுகர்வுக்கு பொருத்தமில்லாத பழுதடைந்த மாட்டிறைச்சி விற்பனை செய்த நபர் ஒருவருக்கு பொத்துவில் நீதவான் நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொத்துவில் பிரதேச மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ். அப்துல் மலீக் இதை தெரிவித்தார்.

பழுதடைந்த மாட்டிறைச்சி விற்பனை செய்வதாக புதன்கிழமை (16) பொது மக்களால் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி எம்.எஸ். அப்துல் சமட் தலைமையிலான பொதுச் சுகாதார

பழுதடைந்த மாட்டிறைச்சி விற்பனை

பரிசோதகர்கள் குழுவினர் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது நுகர்வுக்குப் பொருத்தமில்லாத பழுதடைந்த மாட்டிறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்த இறைச்சியை கைப்பற்றியதாக தெரிவித்தார்.

பாவனைக்குதவாத மாட்டிறைச்சியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபருக்கெதிராக பொத்துவில் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல்

செய்யப்பட்டதையடுத்து நீதிமன்றினால் 10 ஆயிரம் ரூபாய்
அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு கைப்பற்றப்பட்ட மாட்டிறையும் அழித்ததாக தெரிவித்தார் .

வெளிநாட்டு ஆறு தமிழர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் அதிக விலையில் பொருட்கள் விற்ற 61 கடைகளுக்கு ஆப்பு

யாழில் அதிக விலையில் பொருட்கள் விற்ற 61 கடைகளுக்கு ஆப்பு

யாழ்ப்பாணத்தில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினரால் 61 வர்த்தகர்களுக்கு எதிராக கடந்த மாதம் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல்

செய்ததில், 14 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டதாக யாழ்.மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையின் பொறுப்பதிகாரி விஜிதரன் தெரிவித்துள்ளார்.

பொருட்களுக்கான சந்தை விலையினை காட்சிப்படுத்தாமை, கட்டுப்பாட்டு விலையினைமீறி பொருட்களை விற்றமை, ஏமாற்றும் நோக்கோடு

பண்டத்தின் மீது பொறிக்கபட்ட விலையினை மாற்றி விற்பனை செய்தமை, நிறை குறைவாக பாண் விற்பனை செய்தமை மற்றும் உற்பத்தி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின்
வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாக மேலும் தெரிவித்துள்ளார் .

இலங்கை மீனவர்கள் 11 பேர் இந்தியா இராணுவத்தால் கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா மீனவர்கள் 14 பேர் கைது

இந்தியா மீனவர்கள் 14 பேர் கைது

யாழ்ப்பாணம் வெத்திலை கேணி பகுதியில் வைத்து இந்தியா மீனவர்கள் 14 பேர் சிங்கள கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்க பட்டுள்ள நிலையில் ,நீதிமன்றில் முன்னிலை படுத்தும் நடவாடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

பொலிஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை சுற்றிவளைப்பு பலர் கைது

காவல்துறை சுற்றிவளைப்பு பலர் கைது

கல்கிஸை, படோவிடவத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது பிடியாணை பிறப்பிக்கப்பட்ட மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 9 பேர் மற்றும் ஏனைய 14 சந்தேக நபர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக
ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

மோடி சுனெக் பேச்சு இந்தியர்கள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

மோடி சுனெக் பேச்சு இந்தியர்கள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை

மோடி சுனெக் பேச்சு இந்தியர்கள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் ஆகியோர் ஜீ 20 மாநாட்டில் கலந்து கொண்டபொழுது சந்தித்து பேசினர் .

இந்த பேச்சின் போழுது இந்திய பட்டதாரிகள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை செய்திட அனுமதி வழங்க பட்டுள்ளது .

இதன் ஊடக இந்தியா பிரிட்டன் நாடுகளுக்கு இடையில் வர்த்தக உடன் படிக்கையில் பார்ஸபுர இரயத்தந்திர உறவுகள் மேம்படுவதை காண்பிக்கிறது .

உக்கிரேன் ஜனாதிபதி பொய்காரன் சர்ச்சையால் சிக்கிய நடிகர்
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் ஜனாதிபதி பொய்காரன் சர்ச்சையால் சிக்கிய நடிகர்

உக்கிரேன் ஜனாதிபதி பொய்காரன் சர்ச்சையால் சிக்கிய நடிகர்

உக்கிரேன் ஜனாதிபதி பொய்க்காரன் என நேட்டோ கூட்டு நாடுகளின் சர்ச்சையில் சிக்கியுள்ளார் .

ரசியா போலந்து மீது ஏவுகணை தாக்குதலை நடத்திவிட்டது ,உடனே ரசியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் .இது உலக நாடுகளுக்கு பேராபத்து என உக்கிரேன் ஜனாதிபதி ஜெலோன்சி தெரிவித்து வந்தார் .

இவரது இந்த பேத்தி நம்பி அப்படியே சில நாட்டு தலைவர்கள் கடும் கண்டணத்தையும் கோபத்தையும் வெளியிட்டனர் .

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் ,அது உக்கிரேன் ஏவுகணை என தெரிவித்து பதட்டத்தை தணித்தார் .

உக்கிரேன் ஜனாதிபதி பொய்காரன் சர்ச்சையால் சிக்கிய நடிகர்

ரசியா ஏவுகணைகளை தடுத்து தகர்க்க ஏவிய உக்கிரேன் வான்மறிப்பு ஏவுகணைகள் ,போலந்து நாட்டின் மீது வீழ்ந்து வெடித்துள்ளது என அறிவிக்க பட்டது .

சட்டவிரோத போரை தொடுத்துள்ள ரசியா மீதே குற்றம் என, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன .

உதவிகளை அள்ளி வழங்கிய நேட்டோ நாடுகள் தற்போது உக்கிரேன் ஜனாதிபதி பொய் கூறல் மூலம் உதவுதலில் இருந்து பின் வாங்கும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

TikTok செயல் இழப்பு மக்கள் பீதி
Posted in உலக செய்திகள்

TikTok செயல் இழப்பு மக்கள் பீதி

TikTok செயல் இழப்பு மக்கள் பீதி


சமூக வலைத்தளங்களில் முதன்மையன ஒன்றாக விளங்கி வருவது TikTok ஆகும் .

அவ்விதமான TikTok இன்று புதன் கிழமை மதியம் மூன்று மணியளவில் செயல் இழந்தது . 56 வீதமான பாவனையாளர்கள் உள்நுழைய முடியா தொழில் நுட்ப கோளாறுக்கு உள்ளாகினர் .

ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது தடையாக இவை பார்க்க படுகிறது .

தற்போது ஏற்பட்ட தவறு சீர் திருத்த பட்டு வழமைக்கு சென்றுள்ளதாக TikTok நிறுவனம் அறிவித்துள்ளது .

உலக புகழ் பெற்ற பல தமிழர்கள் TikTok வாயிலாக திடிர் செல்வந்தர்களாகவும் ,நடிகர்களாகவும் மாறியுள்ளனர் .

அவ்விதமான சீனா நிறுவனத்தின் TikTok செயல் இழந்த செயல் ,
பாவனையாளர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது.

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு

வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு

வவவுனியா கந்தன் குள காட்டு பகுதியில் இருந்து 48 வயதுடைய ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

வீடொன்றை பராமரிக்க வவுனியாவில் தங்கி இருந்து வீட்டு வேலைகளை கண்காணித்து வந்த ,யாழ்பாணத்தை சேர்ந்தவரே கந்தன் குள பகுதியில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இலங்கையில் தொடர்ந்து இவ்விதம் காடுகளில் சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை ,மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

காதலியை கொன்று தோட்டத்தில் புதைத்த காதலன்
Posted in இலங்கை செய்திகள்

காதலியை கொன்று தோட்டத்தில் புதைத்த காதலன்

காதலியை கொன்று தோட்டத்தில் புதைத்த காதலன்

இலங்கை காலை வதூரம்போற் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் தன்னோடு வசித்த 41 வசித்து பெண்ணை கொன்று தாம் வசித்த அதே தோட்ட பகுதியில் புதைத்துள்ளார் .

காதலன் காதலிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது .

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் ,மேற்படி விடயம் அம்பலமான நிலையில் ,சடலம் தோண்டி எடுக்க பட்டு மரண விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளது .

இலங்கையில் இவ்விதமான கொடூர சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

கூட்டமைப்புக்குள் மோதல் சம்பந்தன் வீட்டில் செருப்படி
Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்புக்குள் மோதல் சம்பந்தன் வீட்டில் செருப்படி

கூட்டமைப்புக்குள் மோதல் சம்பந்தன் வீட்டில் செருப்படி

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் கொழும்பு இல்லத்தில் தமிழ் கட்சிகள் கூட்டம் இடம்பெற்றது .இதில் தமிழரசு கட்சியை தவிர வேறு எந்த பங்காளி கட்சிகளும் கலந்து கொள்ளவில்லை .

சுமந்திரன் ,சம்பந்தன் செயல்பாடு காரணமாக கூட்டமைப்பிற்குள் பெரும் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது .

இந்த நெருக்கடி காரணமாக சம்பந்தனுக்கு அவரது வீட்டில் வைத்து சாட்டை அடி வழங்க பட்டுள்ளது .

கூட்டமைப்பின் முக்கிய எம்பிக்கள் பலர் சுமந்திரன் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்த நிலையில் ,இந்த செருப்படி சம்பந்தருக்கு இடம்பெற்றுள்ளது .

எதிர் வரும் தேர்தலில் சம்பந்தன் சுமந்திரன், மக்களினால் தோற்கடிக்க படுவார் என எதிர் பார்க்க படுகிறது .