Author: நிருபர் காவலன்
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி கன்னி விக்னராஜா (Kanni Wignaraja) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்தது.
நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை பாராட்டிய உதவிப் பொதுச் செயலாளர், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் தொடரும் என்றும் உறுதியளித்தார்.
இலங்கையின் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து இங்கு விசேடமாக கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கைக்கு நீண்டகால அடிப்படையில் முன்னேறுவதற்கும் நாட்டின் எதிர்காலப் பயணத்தை உறுதி செய்வதற்கும் கடினமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும் என்பதை உதவிப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழு ஏற்றுக்கொண்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
பாராளுமன்ற அரசியலமைப்பு சபையை ஸ்தாபித்தல் உள்ளிட்ட நாட்டின் அரசியல் சீர்திருத்தங்கள் மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு காண்பது தொடர்பாக ஏனைய அரசியல் கட்சிகளுடன் நடத்தும் கலந்துரையாடல்
என்பன தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், பிரதிநிதிக் குழுவுக்கு விளக்கமளித்ததுடன், தூதுக்குழு அந்த நடவடிக்கைகள் தொடர்பில் தமது பாராட்டுகளை தெரிவித்தது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் சர்வதேச உறவுகள் தொடர்பான பணிப்பாளர் தினுக் கொழம்பகே,
உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மூவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி படுகொலைகள்
மூவர் சுட்டு கொலை எகிறும் துப்பாக்கி படுகொலைகள்
அமெரிக்கா Washington, D.C பகுதியில் மூவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .
இவ்வாறு சுட்டு படுகொலை செய்யப் பட்டவர்களில் ,எட்டு வயது சிறுவனும் உள்ளடங்களுமென காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர் .
வாகன நெரிசல் கொண்ட வேளையில் திடீரென துப்பாக்கி சூட்டினை நடத்தி விட்டு ,கொலையாளிகள் தப்பி சென்றுள்ளனர் .
இந்த கொலை வெறி செயலுக்கான காரணம் தெரியவரவில்லை .
காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
72 போனை திருடிய திருடன் மடக்கி பிடிப்பு
72 போனை திருடிய திருடன் மடக்கி பிடிப்பு
லண்டனில் கைப்பேசிகளை திருடிய திருடன் ஒருவரை ,காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .
லண்டனில் ஆறுவாரத்தில் 72 கைபேசிகளை மோட்டார் சைக்கிளில் திருடிய ,22 வயது திருடனை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் .
இவ்வாறு மடக்கி பிடிக்க பட்ட நபர் காவல்துறை விசாரணைகளின் பின்னர் ,தற்போது நீதிமன்றின் முன்பு நிறுத்த பட்டுள்ளார் .
கற்பனை கூட செய்து பார்க்க முடியா அளவுக்கு ஆறு வாரத்தில் 72 கைபேசிகள் ,மாயாவி திருடனாக இருப்பார் போல .
மகிந்த ராஜபக்சா சம்பந்தர் சந்திப்பு
மகிந்த ராஜபக்சா சம்பந்தர் சந்திப்பு
இலங்கை முன்னாள் ஜனாதிபதியும் , தமிழ் இனக் கொலையாழியுமான ,மகிந்த ராஜபக்சா ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் சம்பந்தருடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பாட்டர் .
வட கிழக்கு தமிழர் பிரச்னை மற்றும் ,அரசியல் தீர்வு தொடர்பாக பேசப்பட்டுள்ளதாக ,கூட்டமைப்பு அறிக்கை விட்டுள்ளது .
இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இன படுகொலை தொடர்பான விடயங்கள் ,ஐக்கிய நாடுகள் சபையில் இறுக்கம் அடையும் நிலை ஏற்படலாம் என்பதும் ,இவ்வேளை கோட்டா ,மகிந்தா சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்படலாம் என்பதால் ,தற்போது இலங்கை தமிழர் தீர்வு திட்டம் தொடர்பாக பேச ஆரம்பித்துள்ளன .
இலங்கையில் 395 யானைகள் பலி
இலங்கையில் 395 யானைகள் பலி
இலங்கை காடுகளில் வசித்து வந்த காட்டு யானைகள் 395 பலியாகியுள்ளது .
மின்சார வேலிகள் மற்றும் தந்தை வேட்டை உள்ளிட்ட, குற்றச்செயல்களில் ஈடு படுவர்களினாலும் ,யானைகள் வேட்டையாட பட்டுள்ளன .
இதனால் இலங்கையில் 395 யானைகள் பலியாகியுள்ளதாக, இலங்கை வனவள பாதுகாப்பபு அமைச்சு அறிவித்துள்ளது .
இலங்கை வரும் உல்லாச பயணிகள், அதிக ம் யணைகளை விரும்பி பார்த்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
குடிமகன்களை சோதனை செய்திட காவல்துறைக்கு புதிய கருவிகள்
குடிமகன்களை சோதனை செய்திட காவல்துறைக்கு புதிய கருவிகள்
இலங்கையில் குடிபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் நோக்கில் ,இலங்கை காவல்துறையினருக்கு புதிய ,போதை பொருள் சோதனை கருவிகள் வழங்க பட்டுள்ளன .
வெளிநாட்டுகளில் உள்ள கருவிகள் போல இவை காணப்படுகின்றன .
இலங்கையில் இடம் பெறும் ,அதிக விபத்துக்களை தடுப்பதற்கு இந்த கருவிகள்,வழங்க படுகின்றன .
இதன் மூலம் இலங்கையில் ஏற்படும் , வீதி விபத்துக்களை தடுக்கலாம் என இலங்கை அரசு கருதுகிறது .
யாழில் இளம்பெண்ணை கற்பழித்த காவல்துறை சிப்பாய்
யாழில் இளம்பெண்ணை கற்பழித்த காவல்துறை சிப்பாய்
யாழ்ப்பாணம் பருத்துறை பகுதியில் 17 வயது இளம் பெண் ஒருவரை, 31 வயதுடைய காவல்துறை சிப்பாய் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் .
மகளின் நடத்தையில் சநதேகம் கொண்ட பெற்றோர் நடத்திய விசாரணையில் மேற்படி விடயம் அம்பலமானது .
ஒருவருடத்திற்கு முன்னர் காவல்துறை சிப்பாய் ,குறித்த பெண்ணை கற்பழித்துள்ளது தெரியவந்துள்ளது .
இதனை அடுத்து குறித்த சிப்பாய் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப் பட்டுளளார் .
கைதான காவல்துறை சிப்பாய் மன்னார் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது .
பேருந்து கட்டணம் குறைப்பு
பேருந்து கட்டணம் குறைப்பு
அதிவேக நெடுஞ்சாலை பேருந்து கட்டணத்தை குறைக்க தீர்மானமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் 10 சதவீதத்தினால் பேருந்து கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு விலை குறைக்கப்பட்டுள்ளது.
104 பேரை கடத்த முயற்சித்த நபருக்கு விளக்கமறியல்
104 பேரை கடத்த முயற்சித்த நபருக்கு விளக்கமறியல்
நாடு ஒன்றுக்கு 104 பேரை ஆள்கடத்த முயற்சித்த நபரை ஜனவரி 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மியன்மாரில் இருந்து விரட்டப்பட்ட ரோஹிங்கிய இன முஸ்லிம்கள் பங்களாதேஷில் அமைந்திருந்த அகதி முகாமில் தங்கியிருந்த சமயம் இந்தோனேசியாவிற்கு தப்பிச் செல்லும் நோக்கில் படகு மூலம் சட்ட விரோதமாக பயணித்தபோது யாழ்ப்பாணம் மருதங்கேணி அருகே நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்தனர்.
இவ்வாறு தத்தளித்தவர்கள் 2022 டிசம்பர் 17 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு டிசம்பர் 18 ஆம் திகதி கடற்படையினரின் படகு மூலம் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மருத்துவ பரிசோதணைகளின் பின்னர் அங்கு தங்கவைக்கப்பட்டனர்.
104 பேரை கடத்த முயற்சித்த நபருக்கு விளக்கமறியல்
சட்டத்துக்கு புறம்பாக இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 104 பேர் மற்றும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக நாடு கடத்த முற்பட்ட வலையமைப்புக்கு உதவியவருக்கும் எதிராக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காங்கேசன்துறை பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.
டிசம்பர் 19 ஆம் திகதி மாலை 105 பேரும் தடுத்து வைக்கப்பட்ட இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்ட மல்லாகம் நீதிமன்ற நீதிவான் காயத்திரி சைலவன்,104 பேரையும் அகதிகளுக்கான ஐ.நா ஆணையகம்
பொறுப்பேற்பதாயின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனுமதி பெற உத்தரவிட்டதுடன் அகதிகள் அனைவரையும் மீரிகான தடுப்பு முகாமில் தங்க வைக்க உத்தரவிட்டார்.
அத்துடன், நாடு ஒன்றுக்கு 104 பேரையும் கடத்த முயற்சித்தவரை 2023 ஜனவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையிலேயே ஜனவரி 2 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு வந்தபோதே நீதவான் இந்த உத்தரவையிட்டார்.
சுகாதார அமைச்சில் தகவல் தொழில்நுட்ப பிரிவு திறந்து வைப்பு
சுகாதார அமைச்சில் தகவல் தொழில்நுட்ப பிரிவு திறந்து வைப்பு
இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்திற்கேற்ப நாம் அனைத்து விடயங்களையும் மேற்கொள்ளவும், அதேபோன்று தகவல்களையும் பாதுகாத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகமுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (03) குறித்த அமைச்சின் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சுகாதார அமைச்சில் தகவல் தொழில்நுட்ப பிரிவு திறந்து வைப்பு
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து விடயங்களையும் திட்டமிடல், ஒருங்கிணைத்தல் மற்றும் செயற்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்வதன் மூலம் எமது வேலைகளை மிக இலகுவாக செய்து முடிக்கலாம் என்றார்.
இந்நிகழ்வில், அமைச்சின் கணக்காளர் எஸ்.சட்குணேஸ்வரன்,
திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன்,
நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீவாணி, பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (திருமதி)
எஸ்.விஜயகுமார் மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அபு அலா –
கிளிநொச்சியில் போதையற்ற சமூகத்தை உருவாக்கும் விழிப்புணர்வு பேரணி
கிளிநொச்சியில் போதையற்ற சமூகத்தை உருவாக்கும் விழிப்புணர்வு பேரணி
போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் எண்ணக்கருவிற்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழிப்புணர்வு பேரணியினை முன்னிட்டு விழிப்புணர்வு பதாதை தயாரிக்கும் போட்டி கிளிநொச்சி பாரதிபுரம் மகாவித்தியாலயத்தில் இன்று (03) இடம்பெற்றது.
கிளிநொச்சி பாரதிபுரம் மகாவித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ளது.
அதன் முன்னேற்பாடாக குறித்த தலைப்பின் கீழ் விழிப்புணர்வு பதாதை தயாரிக்கும் போட்டியில் 75 மாணவர்கள் பங்குபற்றி தமக்குள் எழுந்த எண்ணக்கருவை பதாதைகள் ஊடாக வெளிப்படுத்தினர்.
போட்டியின் நிறைவில் முதல் மூன்று வெற்றியாளர்கள் நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி பாடசாலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
32 உற்பத்தி பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீனா அனுமதி
32 உற்பத்தி பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீனா அனுமதி
நாட்டின் உணவு உற்பத்திகளில் 32 வகைளை பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீன மக்கள் அரசின் சுங்க நிர்வாகத்தினால் அனுமதி கிடைத்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கையில் இந்த உற்பத்திப் பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சீன மக்கள் அரசின் சுங்க நிர்வாகத்தினால் அனுமதி கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.
29 வகையான கடற்றொழில் நீரியல் உற்பத்தி இதில் அடங்குகின்றன. சீன அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 38 இலங்கை நிறுவனங்கள் இவற்றின் ஏற்றுமதியாளர்களாக செயல்படுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.
32 உற்பத்தி பொருட்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சீனா அனுமதி
சீனாவுக்கு இவற்றை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கும் ஊக்குவிக்கும் வகையில் ஏற்றுமதி பொருட்களை பரிசோதித்தல் எள்ளிட்ட விடயங்களுக்காக , சீன அரசாங்கத்தின் சுங்க
பகுதிக்கும் கடற்றொழில் அமைச்சுக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திடுவதற்காக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நேற்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்தில் அமைச்சர் இந்தவியடங்களை குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பினவருமாறு:
- இலங்கையிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள சமுத்திர மீன்பிடி நீரியல் வள உற்பத்திகளை பரிசோதித்தல், தொற்றுக்காப்பு செய்தல் மற்றும் கால்நடைகள் சுகாதாரப் பாதுகாப்பு தேவைகள் தொடர்பான அறிவியல் சோதனை பணிமுறை முன்னேற்பாடு
எமது நாட்டிலிருந்து 33 வகையான உணவுற்பத்திகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சீனக் குடியரசின் பொதுச் சுங்க நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அவற்றில் 29 உற்பத்திகள் நீரியல் வள உற்பத்திகளாக காணப்படுவதுடன், சீனக் குடியரசில் பதிவு செய்யப்பட்ட இலங்கைக் கம்பனிகளில் 38 கம்பனிகள் குறித்த ஏற்றுமதிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீனாவுக்கு நீரியல் வள உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும்,
மற்றும் ஊக்குவிப்பதற்கும் இயலுமாகும் வகையில் இலங்கையிலிருந்து
சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சமுத்திர மீன்பிடி நீரியல் வள உற்பத்திகளைப் பரிசோதித்தல்,
தொற்றுக்காப்பு செய்தல் மற்றும் கால்நடைகள் சுகாதாரப் பாதுகாப்பு தேவைகள் தொடர்பான
அறிவியல் சோதனைப் பணிமுறை முன்னேற்பாடு (Protocol),
சீனக் குடியரசின் பொது சுங்க நிர்வாகம் மற்றும் இலங்கை ஜனநாயக
சோசலிச குடியரசின் கடற்றொழில் அமைச்சுக்கும் இடையில்
கையொப்பமிடுவதற்காக
கடற்றொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்
தீயில் கருகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மரணம்
ஜோர்டானில் உள்ள பண்ணை ஒன்றில் திடீரென தீ பற்றி கொண்டது .
இந்த தீ விபத்தில் சிக்கி .ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் பலியாகியுள்ளனர் .
இவ்வாறு இறந்தவர்களில் மூன்று மகள்கள், மற்றும் தாய் தந்தை ஆகியோரே தீயில் கருகிய நிலையில் இறந்துள்ளனர் .
மேலும் சிலர் தீ காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
இதே பகுதியில் பல பண்ணைகளில் ,பாகிஸ்தான் எகிப்து நாட்டை சேர்ந்த மக்களும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது .
பாகிஸ்தானில் இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் சுட்டு கொலை
பாகிஸ்தானில் இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் சுட்டு கொலை
கிழக்கு பாகிஸ்தானில் ஆயுத தாரி நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ,இரண்டு உளவுத்துறை அதிகாரிகள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர் .
இவ்வாறு கொலை செய்யப் பட்ட நபர்கள் ,பல ஆயுத குழு சிப்பாய்கள் கைதாக காரணமாக விளங்கியவர்கள் என படுகிறது .
அவ்வாறான உளவுத்துறை நபர்களை,இலக்கு வைத்து ஆயுத குழு தாக்குதல் நடத்தியுள்ளது .
நையீரியாவில் குண்டு வெடிப்பு
நையீரியாவில் குண்டு வெடிப்பு
நையீரியாவில் இராணுவத்தின் ரோந்து அணியை இலக்கு வைத்து, குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் சிக்கி மூன்று இராணுவத்தினர் ,மேலும் ஒரு துணை படை ஒட்டு குழு சிப்பாயும் பலியாகியுள்ளார் .
நையீரியாவில் தொடர்ந்து இடம் பெற்று வரும், உள் நாட்டு போர் காரணமாக, பல ஆயிரம் மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .
பிரிட்டனில் முக கவசம் அணிய வழியுறுத்து
பிரிட்டனில் முக கவசம் அணிய வழியுறுத்து
பிரிட்டனில் மீளவும் மக்கள் முக கவசம் அணிந்திட வழியுறுத்த பட்டுள்ளது .
கொரோனோ நோயானது மீளவும் வேகமாக பரவி வருவதனால் ,மக்களை அதில் இருந்து காப்பாற்றவும் ,மருத்துவ மனைகளில் வேலை பளுவை குறைக்கும் நோக்குடனும் இந்த அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது .
சீனா ஆமெரிக்காவில் பல நூறு மில்லியன் மக்கள் பாதிக்க பட்டுள்ள நிலையில் ,அந்த மக்கள் இந்த நாடுகளுக்குள் படையெடுத்து வருவதாலும் ,இந்த நோயானது பரவும் நிலை ஏற்படலாம் என படுகிறது .
உக்கிரேனில் கடும் சமர் பலநூறு இராணுவம் பலி
உக்கிரேனில் கடும் சமர் பலநூறு இராணுவம் பலி
உக்கிரேனின் பாக்முட் கோட்டையின் நகரத்தை மீட்கும் நோக்குடன் ரசியா படைகள் அகோர தாக்குதலை ,மேற்கொண்டன ..
எனினு இந்த தாக்குதல் தோல்வியில் முடிந்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .
எனிமும் மேற்குலக உளவுத்துறை ஊடகம் ஒன்று தெரிவிக்கையில் ,
கடந்த 24 மணித்தியாலத்தில், உக்கிரேன் பாக்முட் பகுதியில் ,
கடும் மோதல்கள் இடம்பெற்றன.
உக்கிரேனில் கடும் சமர் பலநூறு இராணுவம் பலி
இந்த மோதல்களில் ,ரசியா மற்றும் உக்கிரேன் தரப்பினர் இருவருக்கும் ,
பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .
ரசியா இராணுவத்தில் 780 சிப்பாய்கள் பலியாகினர் .
ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் .
அதே போல அளவில் உக்கிரேன் இராணுவத்திலும் ,
ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மீளவும் உக்கிரேனை ஆக்கிரமித்து விட வேண்டும் என்ற நோக்கில்,
ரசியா படைகள் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
இளம் பெண் 6 பேரால் கற்பழிப்பு
இளம் பெண் 6 பேரால் கற்பழிப்பு
இந்தியா பால்கர் பகுதியில் 16 வயதுடைய இளம் பெண் ஒருவர் ,
ஆறு ஆண்களினால் கொடூரமாக கற்பழிக்க பட்டுளளார் .
குறித்த பெண்ணை மடக்கிய கும்பம்,
வெள்ளி கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை ,
அடைத்து வைத்து கற்பழித்துள்ளனர் .
நாள் ஒன்றுக்கு 15 மணித்தியாலங்கள் தொடராக,
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர் .
இளம் பெண் 6 பேரால் கற்பழிப்பு
பாதிக்க பட்டவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் ,
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ,
தடயங்களை சேகரித்தனர் .
இதன் பொழுது இரண்டு ஆணுறை மற்றும் ,
அவர்கள் ஆடைகள் மேலும் ,பல தடயங்கள் கண்டு பிடிக்க பட்டன .
கூட்டு பாலியல் வல்லுறவை மேற்கொண்ட ஆறு பேரும் ,
கைது செய்யப்பட்டு, நீதி விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
இந்தியாவில் இவ்வாறான கூட்டு பாலியல் வல்லுறவு சம்பவங்கள்;
அதிகமாக இடம்பெறுவதான புள்ளி விபரம் ,
பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது .
பெண்களுக்கு எதிரான வன்முறை ,அடக்குதல் இதுவென ,
மனித உரிமை மையம் கவலையை வெளியிட்டுள்ளது .
பாதிக்க பட்ட பெண்ணின் குடும்பத்தினர்
ஆறுபேருக்கும் மரண தண்டனை விதிக்க ,வேண்டும் என தெரிவித்து வருகின்றனர் .
அனாதை இல்லத்தில் ஐந்து சிறுவர்கள் கடத்தல்
அனாதை இல்லத்தில் ஐந்து சிறுவர்கள் கடத்தல்
இந்திய மும்பை பகுதியில் உள்ள அதை இல்லத்தில் தங்கி
படித்து வந்த ஐந்து சிறுவர்கள் திடீரென காணமல் போயுள்ளனர் .
இவ்வாறு காணாமல் போனவர்கள் 13 வயது முதல் 17
வயதுடையவர்கள் என தெரிவிக்க படுகிறது .
கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி காணாமல் போன இவர்கள்
தொடர்பாக ,காவல்துறையில் முறையிட்டதை தொடர்நது ,
கடத்த பட்ட சிறுவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில்,
காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
அனாதை இல்லத்தில் ஐந்து சிறுவர்கள் கடத்தல்
கடத்த பட்டவர்கள் மனித, உறுப்பு திருடும் கும்பக்களுக்கு விற்க ,
பட்டு இருக்கலாம் என்பதால் பதட்டம் நிலவுகிறது .
ஆண்கள் பெண்கள் ,சிறுவர்களை கட்டத்தை கொன்று
, அவர்களது உறுப்புகளை வெட்டி எடுத்து கள்ள சந்தையில் விற்று வருகின்றனர் .
இவ்விதம் ஒரு மனித உறுப்பின் விலை 15,000 டொலர்களுக்கு விற்பனை செய்ய படுகிறது .
இவ்விதமாக கிட்னி மற்றும் பிற உறுப்புக்கள் இலங்கையில் இடம்பெற்று ,
அந்த கும்பல் சிறை பிடிக்க பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது .
யாழில் நாய்கள் உண்ட சிசு சடலம்
யாழில் நாய்கள் உண்ட சிசு சடலம்
இலங்கை யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நாய்களின் ,
கடிக்கு உள்ளான நிலையில் சிசு ஒன்று சடலமாக மீட்க பட்டுள்ளது .
இவ்வாறு சிசுவாக மீட்க பட்ட பெண் குழந்தை ,
தொடர்பில் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர் .
இதன் பொழுது அந்த பகுதியில் வீடொன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில்,வசித்து வந்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
இந்த சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .




































