சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் விசேட எரிபொருள்
Posted in இலங்கை செய்திகள்

குவிந்த சுற்றுலா பயணிகள் பணத்தை அள்ளிய இலங்கை

குவிந்த சுற்றுலா பயணிகள் பணத்தை அள்ளிய இலங்கை

இலங்கையில் சுற்றுலா பயணிகள் குவிந்த நிலையில் ,இலங்கை பெரும் பணத்தை அள்ளியுள்ளது .

இலங்கையின் பொருளாதரத்தின் முதுகெலும்பாக உல்லாச பயணிகள் உள்ளனர் .

அவ்வாறான உல்லாச சுற்றுலா பயணிகள் இலங்கைக்குள் அதிகமாக வருகை தந்தன் மூலம் 1.13 பில்லியன் பணத்தை அள்ளியதாக இலங்கை மகிழ்ச்சியோடு அறிவித்துள்ளது .

No posts found.
காணமல் போன இளம் பெண் தேடும் பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

காணமல் போன இளம் பெண் தேடும் பொலிஸ்

காணமல் போன இளம் பெண் தேடும் பொலிஸ்

கெங்கல்ல – அம்பகொட்டே, தெல்தெனிய பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில், குறித்த சிறுமியை கண்டுப்பிடிக்க உதவுமாறு பொலிஸார் பொதுமக்களை கோரியுள்ளனர்.

குறித்த சிறுமி 2022 ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி முதல் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தினத்தில் பாடசாலைக்கு சென்ற சிறுமி வீடு திரும்பாத நிலையில் சிறுமியின் உறவினர்கள் தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

காணமல் போன இளம் பெண் தேடும் பொலிஸ்

குறித்த தினத்தில் சிறுமி பாடசாலைக்கு செல்லாமல் கண்டியிலிருந்து கொழும்புக்கு புகையிரதத்தில் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன சிறுமி தொடர்பில் இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை எனவும், சிறுமியைக் கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி தேவை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி
இலக்கங்களுக்குத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No posts found.
யாழில் மீட்ட கைக்குண்டு செம்மணியில் வெடித்தது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மீட்ட கைக்குண்டு செம்மணியில் வெடித்தது

யாழில் மீட்ட கைக்குண்டு செம்மணியில் வெடித்தது

யாழ்ப்பாணம் அறியலால் மீட்க பட கைக்குண்டு ஒன்று ,செம்மணி மயான பகுதியில் வெடிக்க வைக்க பட்டுள்ளது .

அரியாலை பகுதியில் வீடொன்றுக்குள் குண்டு ஒன்று உள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் ,குறித்த குண்டு தொடர்பாக காவல்துறைக்கு அறிவிக்க பட்டது .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ,மற்றும் குண்டூ செயலிழக்க வைக்கும் இராணுவத்தினர், கைக்குண்டை வெடிக்க செய்தனர் .

இந்த குண்டு எவ்வாறு குறித்த வீட்டுக்குள் வந்தது என்பது தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

No posts found.
திருட்டு சீனி இறக்குமதி சிக்கிய கும்பல்
Posted in இலங்கை செய்திகள்

திருட்டு சீனி இறக்குமதி சிக்கிய கும்பல்

திருட்டு சீனி இறக்குமதி சிக்கிய கும்பல்

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை சிவப்பு சீனியை சுங்கப்பகுதி கைப்பற்றியுள்ளது.

நாட்டில் சிவப்பு சீனியை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சீனி வெள்ளை சீனி என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்ட்டுள்ளது.

1200 மெற்றிக் தொன் சிவப்பு சீனியை வர்த்தகர் ஒருவர் இவ்வாறு இறக்குமதி செய்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

திருட்டு சீனி இறக்குமதி சிக்கிய கும்பல்

நாட்டில் சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்படுகிறது.


இதனால் இதனை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் வெள்ளை சீனியின் விலையிலும் பார்க்க சிவப்பு சீனி ரூபா100/= அதிகம். மோசடியாக கொண்டுவரப்படும் சீனியை பொது மக்களுக்கு

விற்பனை செய்ய சிலர் முற்படுகின்றனர்.இதன் மூலம் சிலர் பெருந்தொகை வருமானத்தை பெருகின்றனர்
என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

No posts found.
யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு
Posted in இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளதாக இன்று வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வியடைந்த நிலையில், வி.மணிவண்ணன் முதல்வர் பதவியை துறந்தார்.

யாழ். மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு

இதனால் உள்ளூராட்சி விதிகளின் அடிப்படையில் மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் அறிவித்திருந்தார்.

யாழ் மாநகரசபையின் எதிர்காலம் குறித்து சட்டமா அதிபரிடம் வினாவ உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் மீண்டும் முதல்வர் தெரிவு நடைபெறவுள்ளதாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.

No posts found.
போலி தலதா மாளிகை விசாரணைகள் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

போலி தலதா மாளிகை விசாரணைகள் ஆரம்பம்

போலி தலதா மாளிகை விசாரணைகள் ஆரம்பம்

குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் உள்ள போலி தலதா மாளிகை குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் போலியான தலதா மாளிகையொன்றை அமைத்து வருவதாக அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்களும் தலதா மாளிகையின் தியவடன நிலமேயும்

முன்வைத்த கூற்றுக்கு அமைய விரைவில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்கிரமரத்னவிற்கு உத்தரவிட்டிருந்தார்.

போலி தலதா மாளிகை விசாரணைகள் ஆரம்பம்

இதன்படி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கீழ் இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு குழுக்கள் இந்த இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் போலி தலதா மாளிகையை அமைத்து உள்நாட்டு, வெளிநாட்டு பௌத்த மக்களை ஏமாற்றி பணத்தையும் தங்க நகைகளையும் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக குற்றம்

சாட்டப்பட்டுள்ள ஜானக்க சேனாதிபதி என்பவருக்கும் ஸ்ரீதலதா மாளிகையை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட சேபால அமரசிங்க என்பவருக்கும்

எதிராக சட்ட ஏற்பாடுகளின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

No posts found.
வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

அழுகிய நிலையில் வீட்டுக்குள் சடலம் மீட்பு

அழுகிய நிலையில் வீட்டுக்குள் சடலம் மீட்பு

யாழ். வடமராட்சி கிழக்கு மணற்காட்டுப் பகுதியில் வீடொன்றுக்குள் அழுகிய நிலையில் சடலம் மீட்க பட்டுள்ளது

தனிமையில் வசித்து வந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு சு சடலமாக மீட்க பட்டுள்ளார் .

தூர் நாற்றம் வீசிய நிலையில் ,காணப்பட்ட சடலம் மீட்க பட்டு ,மருத்துவ பரிசோதனைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளது .

இது இயற்கை மரணமா அல்லது கொலையா என்பது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
வெள்ளத்தில் மிதந்த லண்டன் வீடியோ
Posted in உலக செய்திகள்

வெள்ளத்தில் மிதந்த லண்டன் வீடியோ

வெள்ளத்தில் மிதந்த லண்டன் வீடியோ

லண்டன் லூசியம்பகுதி திடீரென வெள்ளத்தால் சூழ .பட்டது

லீ கை பிரதான வீதி எள்த்தம் பகுதியில் நீர் குழாய் அடைத்து , வெடிப்பின் காரணாமாக இந்த வெள்ளம் ஏற்பட்டது .

அதி காலை நான்கு மணி முதல் ஆரம்பித்த இந்த வெள்ளம் ,11 மணிவரை காணப்பட்டது .

அதன் பின்னர் இயல்பு நிலைக்கு சென்றது .அதன் காட்சிகள் இங்கே

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும் .

வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

போராட்டங்களில் குதிப்போம்: கூட்டமைப்பு எச்சரிக்கை

போராட்டங்களில் குதிப்போம்: கூட்டமைப்பு எச்சரிக்கை

சமஸ்டி கட்டமைப்பில் மட்டுமே தமிழ் மக்களுக்கான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு சாத்தியம் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என தெரிவிக்கும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, ஜனாதிபதி

வழங்கிய காலக்கெடுவுக்குள் தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்கவில்லை என்றால், தமிழ் மக்களை அணி திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வுக் காணும் வகையில் டிசெம்பர் 13ஆம் திகதி சர்வகட்சி மாநாடு நடத்தப்பட்டது.

இதன்போது பல முற்போக்கான கருத்துகள் வெளியிப்பட்டன. நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸவுக்கு இதில் முக்கியப் பங்குள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி, எமது நிலங்கள் தொடர்ந்து அபகரிக்கப்படுகின்றன. இவற்றுக்கான தீர்வுகளே பிரதான விடயமாக உள்ளன எனவும் தெரிவித்தார்.

நல்லிணக்கத்தை அரசியல் தீர்வின் ஊடாக அடைய முடியுமா என்பதை பெப்பரவரி 04ஆம் திகதிக்கு முன்னர் தெரிந்துகொள்ள முடியும் என ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதித் தீர்வு என்ன என்பதை நாம் அனைவரும் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வே எமது கட்சியின் நிலைப்பாடு. அர்த்தமற்ற அதிகாரப் பகிர்வு எவருக்கும் தேவையில்லை.

அர்த்தமற்ற அதிகாரப் பகிர்வு உண்மையில் அதிகாரப் பகிர்வாக இருக்காது. சமஸ்டி கட்டமைப்பில் மாத்திரமே அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

இவ்வாறு நாம் சொல்லிக்கொண்டிருக்கும் போதுதான் ஜனாதிபதி இதனை தீர்க்க முடியும் என தெரிவித்து காலக்கெடு ஒன்றையும் ஜனாதிபதியே அறிவித்துள்ளார்.

இந்த காலக்கெடுவுக்கு நாமும் இணங்கியிருக்கிறோம். தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பில் புதிதாக எதனையும் ஆரம்பிக்க வேண்டியதில்லை. 35 வருடங்களாக இது தொடர்பில் பேசப்பட்டு பல தீர்மானங்கள்

நிறைவேற்றப்பட்டுள்ளதோடு, பல இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டுள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியதை மாத்திரமே செய்ய வேண்டியிருக்கிறது எனவும் தெரிவித்தார்.

போராட்டங்களில் குதிப்போம்: கூட்டமைப்பு எச்சரிக்கை

ஜனாதிபதி கூறியுள்ள காலக்கெடுவுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வை வழங்க வேண்டும். தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டும். இதனை செய்யாது காலத்தைக் கடத்தும் செயற்பாடாக இது

இருக்கக்கூடாது. நாமும் பல்வேறு சந்தேகங்களுடன் தான் பேச்சுவார்த்தைக்கு வருகிறோம். பல தடவைகள் இதுபோன்ற முயற்சிகள்

மேற்கொள்ளப்பட்டுள்ளன ஆனால் எதுவும் நடக்கவில்லை. பேச்சுவார்த்தைக்கு நாங்கள் வரவில்லை என்கிற பலிச்சொல் எமக்கு வரக்கூடாது என்பதாலேயே நாம் கலந்துரையாடலில் ஈடுபடுகிறோம்.

காலக்கெடுவுக்குள் இதனை செய்ய முடியாதென தெரிந்து ஜனாதிபதி எம்மை ஏமாற்றுவராக இருந்தால், நாட்டினதும் சர்வதேசத்தினதும் கண்களில்

மண்ணைத் தூவும் செயற்பாடாக இது இருக்குமாக இருந்தால் அதனை உலகுக்கு அம்பலப்படுத்துவோம்.

இது மட்டுமல்ல நாட்டில் எங்களுடைய மக்களை அணி திரட்டி நியாயமான
அரசியல் சுதந்திரத்துக்காக பல போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் சுமந்திரன் எச்சரித்தார்.

No posts found.
கொழும்பில் குழந்தை கடத்தல்
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் குழந்தை கடத்தல்

கொழும்பில் குழந்தை கடத்தல்

நீர்கொழும்பில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பணத்தை செலுத்துமாறு வற்புறுத்தி சிறு குழந்தையொன்று கடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது குழந்தையைக் கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரண்திய உயன அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை மேலதிக விசாரணைகளுக்காக கிராண்ட்பாஸ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் குழந்தை கடத்தல்

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரண்திய உயன அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த பெண் ஒருவரே நீர்கொழும்பு பகுதியில் உள்ள நபரொருவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உரிய பணத்தை செலுத்தாததால் அவரது குழந்தை கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மாலதி பரசுராமன் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மாலதி பரசுராமன் நியமனம்

விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மாலதி பரசுராமன் நியமனம்

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் விவசாய திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மாலதி பரசுராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (02)) திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட இவர், வரலாற்றில்


முதன்முதலாக நியமிக்கப்பட்ட தமிழ் பெண் விவசாய ஆர்வலராக மாலதி பரசுராமன் பதிவாகியுள்ளதாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சின் விவசாய தொழில்நுட்ப பிரிவின் மேலதிக செயலாளராக அவர் இதற்கு முன்னர் கடமையாற்றினார்.

கண்ணொருவ விவசாய ஆராய்ச்சி மையத்தில் A9 ரகம், HOB-2 எனும் முதலாவது போஞ்சி மரபணு ஆராய்ச்சியை அறிமுகப்படுத்தியமை, புதிய

கலப்பின கறி மிளகாய் வகையான “பிரார்த்தனா”வை அறிமுகப்படுத்தியமை போன்ற பல ஆராய்ச்சிகளை மாலதி பரசுராமன் மேற்கொண்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆரையம்ப,
பிரதேசத்தைச் சேர்ந்த பரசுராமன் மாலதி பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No posts found.
கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேரம் நீர் விநியோகம் தடை
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேரம் நீர் விநியோகம் தடை

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேரம் நீர் விநியோகம் தடை

கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை (07) இரவு 10.00 மணி முதல் ஞாயிறு (08) பி.ப. 4.00 மணி வரை நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, கொழும்பு 01, 02, 03, 04, 07, 09, 10, 11 ஆகிய பகுதிகளில் ,சனிக்கிழமை இரவு 10.00 மணி முதல் 18 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் பிரதேசங்கள் பின்வருமாறு:

கொழும்பு 1 – கோட்டை
கொழும்பு 2 – கொம்பனித்தெரு, யூனியன் பிளேஸ்
கொழும்பு 3 – கொள்ளுப்பிட்டி
கொழும்பு 4 – பம்பலப்பிட்டி
கொழும்பு 5 – ஹெவ்லாக் டவுன், கிருலப்பனை, கிருலப்பனை வடக்கு, நாரஹேன்பிட்டி
கொழும்பு 6 – வெள்ளவத்தை, பாமன்கடை
கொழும்பு 7 – கறுவாத்தோட்டம்
கொழும்பு 8 – பொரளை
கொழும்பு 9 – தெமட்டகொட
கொழும்பு 10 – மருதானை, பஞ்சிகாவத்தை
கொழும்பு 11 – புறக்கோட்டை
கொழும்பு 12 – புதுக்கடைஇ வாழைத்தோட்டம்
கொழும்பு 13 – கொட்டாஞ்சேனை, புளூமெண்டல்
கொழும்பு 14 – கிராண்ட்பாஸ்
கொழும்பு 15 – மோதறைஃமுகத்துவாரம், மட்டக்குளி, மாதம்பிட்டிய

No posts found.
யாழில் அதிகரிக்கும் போதை பொருள் - போதை பொருள் விற்ற பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கு போதைப்பொருள் – 55 பேர் கைது

மாணவர்களுக்கு போதைப்பொருள் – 55 பேர் கைது

மேல் மாகாணத்தில் 149 பாடசாலைகளை உள்ளடக்கிய போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 55 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (05) பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 9 கிராம் 980 மில்லி கிராம் ஐஸ், 16 கிராம் 420 மில்லி கிராம் ஹெரோயின், 2 கிராம் 833 மில்லி கிராம் கஞ்சா, 20 போதை மாத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை உள்ளடக்கி இந்த போதைப்பொருள் சோதனைகள்
தொடரும் என மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No posts found.
60 லொறிகளில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

60 லொறிகளில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா

60 லொறிகளில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா

சிரியாவில் இருந்து டாங்கர் மூலம் அமெரிக்கா, இராணுவத்தினர் ஒயில் திருடி சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது .

இந்த தொடர் ரோந்து அணியில் பலத்த பாதுகாப்புடன், இந்த டங்கர்கள் சிரியாவில் இருந்து ,வடக்கு ஈராக்கிற்கு எடுத்து செல்லப் பட்டுள்ளது .

பயங்கரவாதம் என்ற போர்வையில் படையெடுப்பை நடத்திய ,அமெரிக்கா அங்கிருந்து எண்ணெய் ,வளத்தை கொள்ளையடித்து செல்கிறது .

இந்த கொள்ளையை தடுக்க முடியாது சிரியா அரசு கை கட்டி வேடிக்கை பார்க்கிறது .

25 பேரை கொன்றேன் பிரிட்டன் இளவரசர் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

25 பேரை கொன்றேன் பிரிட்டன் இளவரசர் அறிவிப்பு

25 பேரை கொன்றேன் பிரிட்டன் இளவரசர் அறிவிப்பு

பிரிட்டன் இளவரசராக விளங்கிய ,கரி அவர்கள் 25 பேரை கொன்றுள்ளதாக தெரிவித்துள்ளார் .

இவர் எழுதிய நூல் ஒன்றில் இது விடயம் குறித்துள்ளார் .

2007 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ,இராணுவ பணியில் ஈடுபடடர் .

அங்கு தலிபான்கள் கோட்டையாக விளங்கிய ,Helmand பகுதியின் முன்னரங்களில் பணி புரிந்தார் .

அப்பொழுது 25 பேரை கொன்றதாக தெரிவித்துள்ளார் .

இந்த விடயம் தற்போது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தலிபான்கள் வேட்டையில் முக்கிய 8 பேர் படுகொலை
Posted in உலக செய்திகள்

தலிபான்கள் வேட்டையில் முக்கிய 8 பேர் படுகொலை

தலிபான்கள் வேட்டையில் முக்கிய 8 பேர் படுகொலை

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் எட்டு ஐ எஸ் தீவிரவாதிகள் ,கொலை செய்யப்பட்டுள்ளனர் .

கொலை செய்யப் பட்ட எட்டு பேரும் ,தலிபான்கள் ஆட்சியின் முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து ,தாக்குதல் நடத்தியவர்கள் என தெரிவித்துள்ளனர் .

கொட்டல் ,அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் தூதரங்கங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீதே நடத்த பட்ட தாக்குதலில் ,இந்த எட்டு பேரும் .கொலை செய்யப்பட்டதுடன் ,மேலும் பல கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன 17க்கு முன்னர் பதில்
Posted in இலங்கை செய்திகள்

சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன 17க்கு முன்னர் பதில்

சரணடைந்த புலிகளுக்கு நடந்தது என்ன 17க்கு முன்னர் பதில்

சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இலங்கை இராணுவத்திடம் தமிழ் ஊடகவியலாளர் பா.நிரோஸால் கோரப்பட்ட தகவல்களுக்கு, “பொறுப்பு வாய்ந்த இராணுவம் என்கிற வகையில்,

முழுமையான, சரியான தகவல்களை இம்மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக” இலங்கை இராணுவம் சாட்சியம் வழங்கியது.

1111/2022 என்கிற இலக்கத்தைக் கொண்ட தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மேன்முறையீடு, தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் உபாலி அபேவர்தன தலைமையில் இன்று (04)
பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போதே இலங்கை இராணுவம் இவ்வாறு தெரிவித்திருந்தது.

விரைவில் இராணுவ வழங்க போகும் பொய் சாட்சியம் இங்கே வெளியாக உள்ளது .

No posts found.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைவாக வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் 21ஆம் திகதி,
நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும்நிறைவடையும்.

No posts found.
லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை
Posted in இலங்கை செய்திகள்

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை

லிட்ரோ எரிவாயுவின் புதிய விலை

இலங்கை லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிவாயு விலையை குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கமைவாக, லிட்ரோ எரிவாயுவின் மறுசீரமைப்பு செய்யப்பட்ட விலைகள் பின்வருமாறு,

12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 201 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதன் புதிய விலை 4,409/= ரூபாவாகும்.

5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதன் புதிய விலை 1,770/= ரூபாவாகும்.

2.3 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 38
ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இதன் புதிய விலை 822/= ரூபாவாகும்.

No posts found.
நெருக்கடியில் தவிக்கும் நலிந்த பிரிவினர் தொடர்பில் மனோ கணேசன் -அனுரகுமார திசாநாயக்க கூட்டு பிரேரணை
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டம்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டம், 8ம் திகதி ஞாயிறன்று ஹட்டனில் நடைபெறும்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் குழு கூட்டம்,
எதிர்வரும் 8ம் திகதி ஞாயிறன்று நண்பகல் 12.30 மணிக்கு ஹட்டன் கிருஷ்ண பவன் விடுதியில் நடைபெறும்.


இக்கூட்டத்தில், தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி தேர்தல்களை எதிர்கொள்வது தொடர்பிலும்,


நடப்பு அரசியல் நிலவரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படும் என
கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

No posts found.