Author: நிருபர் காவலன்
ஒருவர் சுட்டு கொலை | இலங்கை செய்திகள்
ஒருவர் சுட்டு கொலை | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |ஹம்பாந்தோட்டை – வீரகெட்டிய பகுதியில் நபர் ஒருவர் மீது துப்பாககி சூட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த சூட்டு சம்பவத்தில் அவர் சம்பவ இடத்தில் பலியாகியுளளார்
மோட்டார் சைக்கிள் ஒட்டி சென்றவர்கள் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலிலேயே இவர் பலியாகியுள்ளார் .
குறித்த சூட்டு சம்பவம் தொடர்ப்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல் |உலக செய்திகள்
இஸ்ரேல் கப்பல் மீது ஈரான் தாக்குதல் |உலக செய்திகள்
உலக செய்திகள் |அரேபிய கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த
இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான கப்பல்
ஒன்றின் மீது ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது .
ஈரான் நடத்திய இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத
விபரங்கள் தெரியவரவில்லை .
எனினும் சுயாதீன தகவலின் படி
உயிர் சேதங்கள் ஏற்பட்டு இருக்கலாம் என படுகிறது .
ஈரான் இந்த தாக்குதலை அடுத்து ஈரான் கப்பல்கள் மீது,
இஸ்ரேல் தாக்குதல் நடத்தவோ, அல்லது சிறைபிடிக்கவோ
முனையலாம் என எதிர் பார்க்க படுகிறது .
நாம் தமிழர் கட்சி உறுப்பினர் மண்டை உடைப்பு | உலகச்செய்திகள்
நாம் தமிழர் கட்சி உறுப்பினர் மண்டை உடைப்பு | உலகச்செய்திகள்
உலகச்செய்திகள் |ஈரோடு கிழக்கு பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர் .
அப்பொழுது அந்த தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட
அன்பு தென்னரசு மீது திராவிட முன்னேற்ற கழக குண்டர்கள்
,ரவுடிகள் இரும்பு கம்பி கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாக
நாம் தமிழர் கட்சி செயலர் சீமான் தெரிவித்துள்ளார் .
நாம் தமிழர் கட்சியில் தொழில் சங்க நிர்வாகியாக அன்பு தென்னரசு உள்ளார் .
அவர் மீதே இந்த திடீர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை வெறி தாக்குதல்
என சீமான் தெரிவித்துள்ளார் .
திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை | உலக செய்திகள்
திருமண நிகழ்வில் ஒருவர் அடித்து கொலை | உலக செய்திகள்
உலக செய்திகள் |இந்தியா ஆக்ராவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்,
50 வயது முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் .
ரஸ்குல்லா உணவு உண்பதில் ஏற்பட்ட
முரண்பாட்டால் , அங்கு வருகை தந்த
விருந்தினர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்
மணப்பெண்ணின் உறவினரான 50 வயதுடைய நபர் ,
நான்கு விருந்தினர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
திருமண நிகழ்வில் சேமிப்பு வாளியில் இருந்து ரசகுல்லா சாப்பிடுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது .
இது முழுக்க முழுக்க சாப்பாட்டு சண்டையாக மாறியது.
ஹரியானா கிராமத்தைச் சேர்ந்த ரன்வீர் சிங், தடிகள் மற்றும்
இரும்பு கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டார்.
பிரபாகரன் உயிரோடு இல்லை சீமான்
பிரச்சார மேடையை கச்சேரி மேடையாக்கிய சீமான்… உற்சாகத்தில் ஆரவாரம் செய்த தொண்டர்கள்
நாம் தமிழர் |பிரச்சார மேடையை கச்சேரி மேடையாக்கிய சீமான்… உற்சாகத்தில் ஆரவாரம் செய்த தொண்டர்கள்
சீமான் பேச்சு கேட்க உலகம் எல்லாம் உள்ள தமிழர்கள் மிக அரவம் கடடுவார்கள் .
சீமான் சிந்தனையாளனின் பேச்சை பேசுகிறார் ,மற்ற கட்சிகளோ ஏமாற்று பேச்சை பேசுகிறார்கள் ,மாற்று என்றால் என்ன என்பதை சீமான் முன் மொழிந்து வழிகாட்டி செல்லும் பக்குவம் நேர்மை
அதனால் நாம் தமிழர் கட்சியில் மிக பெரும் கூட்டம் சேர்க்கிறது .
துருக்கி சிரியா நில நடுக்கம் 45 000 மக்கள் மரணம் | உலக செய்திகள்
துருக்கி சிரியா நில நடுக்கம் 45 000 மக்கள் மரணம் | உலக செய்திகள்
உலக செய்திகள் |துருக்கி சிரியா நாடுகளில் இடம்பெற்ற நில நடுக்கத்தில் சிக்கி 45 000 மக்கள் பலியாகியுள்ளனர் .
மேலும் இந்த அனர்த்தத்தில் சிக்கி 264 000 அப்பார்ட் மென்ட் வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன .
இந்த நில நடுக்கத்தின் மொத்த இழப்பு 80 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் என துருக்கிய அரச நிர்வாகம் அறிவித்துள்ளது .
பாதிக்க பட்ட சில பகுதிகளில் சவூதி நாட்டு துணையுடன் வீடுகள் நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
காதலியை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்த காதலன்|உலக செய்திகள்
காதலியை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்த காதலன்|உலக செய்திகள்
உலக செய்திகள் |இந்தியா புதுடில்லி பகுதியில் காதலி ஒருவரை கணவன் துண்டு துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ள அதிர்ச்சிகர சம்பவம் இடம்பெற்றுள்ளது .
காதல் மனைவியுடன் சட்டபூர்வ பதிவு திருமணத்தை முடித்துளளார் காதலன். இந்த திருமண விடயம் காதலனின் வீட்டாருக்கு தெரிய வந்த நிலையில் அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .
இதனை அடுத்து குறித்த பெண்ணை விட்டுவிட்டு ,தாம் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி மகனை தந்தை வற்புறுத்தியுள்ளார் .
இந்த சிக்கலில் சிக்கி கொண்ட காதலன், காதலியை கைபேசி வயர் ஊடாக தொண்டையை திருகி கொன்றுள்ளார் .
அதன் பின்னர் இறந்த அவரது சடலத்தை ,துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டிக்குள் வைத்துளளார் .
காதலியை துண்டுகளாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் வைத்த காதலன்|உலக செய்திகள்
காதலியை 35 துண்டுகளாக வெட்டியா சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .
காதலியை கொன்ற அதே தினத்தில் ,மறு பெண்ணை திருமணம் செய்திடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
விடயத்தை அறிந்த காவல்துறையினர் , காதலன் உள்ளிட்ட அவருக்கு உதவிய நண்பர்கள் ,தந்தை உள்ளிட்டோரை கைது செய்துள்ளனர் .
இந்த விடயத்தை அறிந்த புதிய மணப்பெண் வீட்டார் , விட்டா காணுமடா என என ஓட்டம் பிடித்தனர் .இப்படியும் முட்டாள் சிந்தனையில் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர் .
அப்பாவி பெண் கொடூரமாக கொலை செய்யப் பட்ட சமப்வம் ,உலக செய்திகளில் முதலிடம் பிடித்து மிக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது .
2023 ஆம் ஆண்டுக்கான அகல் விருது வழங்கள் விழா |இலங்கை செய்திகள்
2023 ஆம் ஆண்டுக்கான அகல் விருது வழங்கள் விழா |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |பயன்களை எதிர்பாராமல் நன்நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சமூக சேவைகளை, சமூக வெளியில் கொண்டு
செல்லாம் பல்வேறுபட்ட உதவிகளைச் செய்து வருகின்றவர்ளூடாக,
கற்றுக்கொண்ட பாடங்களையும், அவர்களின் முன்மாதிரியான
செயற்றிட்டங்களைப்பற்றி இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக
முன்னிருத்தி செயற்படவேண்டும்.
அப்போதுதான் இளம் தலைமுறையினர்
இவ்வாறான பணிகளைச் செய்ய முன்வருவார்களென சமூக சேவைகள்
திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஏ.ஜி.தெய்வேந்திரன் தெரிவித்தார்.
திருகோணமலை அன்பின் பாதை சமூகத்தின் ஒருங்கிணைப்பின்
கீழ் “விளிம்புநிலை மக்களின் வாழ்வை ஒளியேற்ற தம் வாழ்நாளினை
அர்ப்பணிக்கும் பெருமக்களை கொண்டாடி மகிழல்”
என்ற தொனிப்பொருளில் அறம் செய்வோம்
அறக்கட்டளையின் முதலாவது அகல் விருது –
2023 வழங்கள் விழா இன்று (18) திருகோணமலை
நகரசபை நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு
உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், சமூக சேவைகளைச்
செய்யவேண்டும் என்ற நன்நோக்கில் இளம் வயதிலிருந்தே
தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டுவருகின்ற
2023 ஆம் ஆண்டுக்கான அகல் விருது வழங்கள் விழா |இலங்கை செய்திகள்
சன்முகா மகளிர் இல்லத்தின் முகாமையாளர்
செல்வி விமலா நடராஜாவின் சமூக சேவைகளைப் பாராட்டியாக
வேண்டும்.
அவர் ஒரு பெண்ணாக இருந்துகொண்டு
மறைமுகமாக பல்வேறுபட்ட சமூக சேவைகளைச் செய்து
வருவதென்பது மிக இலகுவான விடயமல்ல.
அது கடும் சவால் மிக்கதொன்றாகும்.
இவ்வாறான பணிகளைச் செய்து வருகின்றவர்கள் தங்களின்
சேவைகள் சமூக வெளியில் கொண்டு செல்வதை எதிர்பார்ப்பதும் இல்லை,
விரும்புவதும் இல்லை.
இவரைப்போன்ற பலர் இன்னும் மறைமுகமாக இருந்துகொண்டு
செயற்பட்டு வருவார்கள். அவ்வாறானவர்களையும் அறம் செய்வோம்
அறக்கட்டளை அடையாளம் கண்டு அவர்களின் நற்செயற்பாட்டினை
இளம் தலைமுறையினர்களுக்கு எடுத்துக்காட்டி அவர்களையும்
இவ்வாறான சமூக செயற்பாடுகளை முன்னெடுக்க நாம் உதவி புரியவேண்டும்.
அறம் செய்வோம் அறக்கட்டளை கடந்த மூன்றாண்டு
காலமாக இலங்கையிலுள்ள காப்பகங்கள், வலையமைப்புக்கள்,
சமூக சேவை நிறுவனங்கள் ஊடாக சிறுவர்கள்,விசேட தேவையுள்ளோர் மற்றும் முதியோர்களின் வாழ்வை மேம்படுத்த பல உதவிகளைச் செய்து வருகின்றார்கள்.
அவர்கள் மக்களின் மேம்பாட்டிற்காகவே தங்களின் நேரகாலங்களைச்
செலவிடுகின்றனர். அவர்களின் சேவைகளுக்கு எங்களாலான
உதவிகளைச் செய்ய முன்னிப்போம் என்றார்.
இவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாக நன்நடத்தை
மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் கிழக்கு மாகாண
ஆணையாளர் (திருமதி) றிஸ்வாணி றிபாஸ், சமூக சேவைகள்
திணைக்களத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஏ.ஜி.தெய்வேந்திரன்
மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி சுபாசினி சித்திரவேல் உள்ளிட்ட பல அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கடந்த பல ஆண்டு காலமாக, தன்னலமற்ற ஒன்றிணைந்த
எண்ணிலடங்கா சமூக சேவைகளைச் செய்துவருகின்ற
சன்முகா மகளிர் இல்லத்தின் முகாமையாளர் செல்வி
விமலா நடராஜாவுக்கு பொன்னாடை போர்த்தி 2023
ஆம் ஆண்டுக்கான அகல் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுன்
அவருக்கு 2 இலட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அபு அலா
பிரிட்டனில் புயல் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள் | உலக செய்திகள்
பிரிட்டனில் புயல் மின்சாரம் இன்றி தவிக்கும் மக்கள் | உலக செய்திகள்
உலக செய்திகள் |பிரிட்டனில் ஓட்டோ என்கின்ற புயல் ஒன்று ஆரம்பித்துள்ளதால் ,ஸ்கொட்லாந்து மன்ஸிஸ்டர் பகுதிகள் பலமாக பாதிக்க பட்டுள்ளன .
ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மின்சராம் இன்றி தவித்து வருகின்றனர் .
விமான நிலையங்கள் ,ரயில்வே பேரூந்து வீதிகள் என்பன முடக்க பட்டுள்ளன .
வீதிகளில் ,நிறுத்தி வைக்க பட்டிருந்த கார்கள் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன .
மேலும் பலவீடுகள் என்பனவும் கூரைகள் காற்றில் பறந்த நிலையில் ,
மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
மணிக்கு நூறு கிலோ மீட்டரை வேகத்தில் புயல் வீசுவதால்,
மக்கள் சொத்து இழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
விமானத்தை காணவில்லை தேடும் இராணுவம் |உலக செய்திகள்
விமானத்தை காணவில்லை தேடும் இராணுவம் |உலக செய்திகள்
உலக செய்திகள் |பிலிப்பைன்ஸ் நாட்டில் விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது .இவ்வாறு காணாமல் போன விமானத்தை முப்படையினர் தேடி வருகின்றனர் ,
நால்வருடன் பயணித்த சிறியரக விமானமே
தரை இறங்குவதற்கு தயாராகி கொண்டிருந்த வேளை
காணமல் போயுள்ளது .
இவ்வாறு காணாமல் போன விமானத்தை தேடும்
பணியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் .
விமானத்தில் பயணித்த அனைவரும் இறந்திருக்க கூடும் என
அஞ்ச படுகிறது .
ஏவுகணை பயிற்சிகள் முடித்து வெளியேறிய உக்கிரைன் இராணுவம்|உலக செய்திகள்
ஏவுகணை பயிற்சிகள் முடித்து வெளியேறிய உக்கிரைன் இராணுவம்|உலக செய்திகள்
உலக செய்திகள் |ஜெர்மனியில் உள்ள அமெரிக்கா இராணுவ
படை முகாமில் வைத்து உக்கிரேன் இராணுவத்தினருக்கு
கிமாஸ் ரக பல் குழல் செலுத்திகள் ஏவும் பயிற்சிகள் வழங்க பட்டன .
முதலாவது அணியை சேர்ந்த 635 பேர் பயிற்சி நிறைவு செய்து வெளியேறினர் .
மேலும் இரண்டாவது அணியினர் மீளவும்
அதே முகாமில் பயிற்சிகளை பெற்றிட வரவழைக்க படுகின்றனர் .
இந்த ஏவுகனை செலுத்திகள் தாக்குதல் ,ரசியா இராணுவத்தினருக்கு மிக பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன .
இந்த ஏவுகணை செலுத்திகளை உக்கிரேனுக்கு வழங்குவதற்கு ரசியா கடும்
கண்டனத்தை தெரிவித்து இருந்தது .
இவ்வாறான நிலையிலே இந்த விசேட
ஏவும் பயிற்சிகள் வழங்க பட்டுள்ளது மேலும் ரசியாவை
கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது .
அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை| உலக செய்திகள்
அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை| உலக செய்திகள்
உலக செய்திகள் |சோமாலியாவில் அரச இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் அல்சபா போராளிகள் 200 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
சுதந்திர விடுதலைக்காக போராடி வரும்
அல்சபா போராளிகள் வசம், சோமாலியாவின் முக்கிய பகுதிகள் கட்டுப் பாட்டுக்குள் உள்ளன .
மேலும் தமது சுதந்திர பிரகடனத்தை அறிவித்த பொழுதும் ,ஆளும் சோமாலிய அரசு ஏற்க மறுத்து போராட்டங்களை முன்னெடுத்த வண்ணம் உள்ளது .
இதனால் அரசு மற்றும் போராளி குழுக்களுக்கு இடையில் கடும் யுத்தம்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
போராளிகள் இராணுவ முகாம் பகுதிகளை
சுற்றிவளைத்து நடத்திய தகுத்தலில் இந்த இழப்பு ஏற்பட்டுப்படுத்த
பட்டுள்ளதாக சோமாலியா இராணுவம் தெரிவித்துள்ளது .
பில்லியன் பெறுமதியான பீரங்கி குண்டுகள் ஆடர் செய்த அமெரிக்கா| உலக செய்திகள்
பில்லியன் பெறுமதியான பீரங்கி குண்டுகள் ஆடர் செய்த அமெரிக்கா| உலக செய்திகள்
அமெரிக்கா இராணுவம் அவசர அவசரமாக தற்போது 155 மில்லி மீற்றர்பீராங்கி குண்டுகள் கொள்வனவு செய்திட பீரங்கி குண்டு தயாரிக்கும் நிறுவனத்திடம் ஆடர் செய்துள்ளது .
உக்கிரைன் இராணுவத்தினருக்கு இவ்விதமான
பீரங்கி குண்டுகளை அமெரிக்கா பெரும் தொகையில் வழங்கியது .
இஸ்ரேல் இராணுவ முகாமில் சேர்த்து வைக்க பட்டிருந்த ,இவ்வகையான பீரங்கி குண்டுகளை உக்கிரனுக்கு வழங்கிய நிலையில் ,தற்போது மிக பெரும் தொகையில் இந்த குண்டுகளை ஆடர் செய்கிறது .
உக்கிரைன் களத்தில் இந்த ஆட்டிலறி பீரங்கி குண்டுகள் மிக பெரும் பங்களிப்பை ஆற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது .
புயலில் சிக்கிய பயணிகள் விமானம்|உலக செய்திகள்
புயலில் சிக்கிய பயணிகள் விமானம்|உலக செய்திகள்
உலக செய்திகள் |பிரிட்டனில் ஓட்டோ புயலின் சிக்கிய பயணிகள் விமானம் ஒன்று மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிக்க பட்டது.
பலத்த புயலில் சிக்கிய பயணிகள் விமானம்
சுமார் 10 நிமிடங்களுக்குப் மேலாக வானில் புயலில் சிக்கிய பிறகு 10:53 மணிக்கு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.
ஓட்டோ புயல் வெள்ளிக்கிழமை ஸ்காட்லாந்து
மற்றும் இங்கிலாந்தின் பகுதிகள் முழுவதும் வீசி
பலருக்கு பயணத் தடையை ஏற்படுத்தியது,
ரயில்கள் ரத்து செய்யப்பட்டு சாலை போக்குவரத்து தடுக்கப்பட்டன.
பயணிகள் உயிராபத்து இன்றி தப்பித்து கொண்டனர் .
தேர்தலுக்கு பணம் இல்லை ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றிய ரணில்| இலங்கை செய்திகள்
தேர்தலுக்கு பணம் இல்லை ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றிய ரணில்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |தேர்தலுக்கு பணம் இல்லை என தெரிவித்து ராஜபக்ச குடும்பத்தை ரணில் விக்கிரமசிங்கா காப்பாற்றியுள்ளார் .
நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் விட்டு வரும் ராஜபக்ச குடும்பத்தை ஜனாதிபதியாக்கிய விசுவாசத்திற்கு ரணில் அடிமையாகி நடந்து வருகிறார் .
தேர்தல் இடம்பெற்றால் ஆளும் ஆட்சி கவிழ்க்க படும் நிலை உள்ளதால் ,ரணில் விக்கிரமசிங்க இவ்வித அரசியல் சித்து விளையாட்டில் நடை போடுகிறார் .
இன்றைய இலங்கை முக்கிய செய்திகள் பக்கத்தில் ,
இந்த விடயம் தலைப்பு செய்திகளாக இடம்பிடித்து
அலங்கரித்து உள்ளமை கவனிக்க தக்கது .
இலங்கையை விட்டு ஓடும் மருத்துவர்கள் திணறும் இலங்கை |இலங்கை செய்திகள்
இலங்கையை விட்டு ஓடும் மருத்துவர்கள் திணறும் இலங்கை |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | இலங்கையை விட்டு மருத்துவர்கள் வெளி நாடுகளுக்கு ஓடுவதால் இலங்கை திணறிய வண்ணம் உள்ளது .
மாதம் தோறும் ஐம்பது முதல் 60 வரையான மருத்துவர்கள் ,
நாட்டை விட்டு செல்கின்றனர் .பலர் விடு முறைவிண்ணப்பம்
கோரியுள்ளனர் .
மேலும் 1000 மருத்துவர்கள் நடத்தி விட்டு சென்றுள்ளனர் என்கின்ற அதிர்ச்சிகர விடயத்தை அவர் தெரிவித்தார் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த
அவல நிலை ஏற்பட்டுள்ளது என மருத்துவ அதிகாரிகள்
சங்கத்தின் (GMOA) பேச்சாளர் டொக்டர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் இலங்கை முக்கிய செய்திகள் பக்கத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது .
சீனாவின் ஆதரவு இன்றி இலங்கைக்கு கடன்கள் வழங்க நடவடிக்கை |இலங்கை செய்திகள்
சீனாவின் ஆதரவு இன்றி இலங்கைக்கு கடன்கள் வழங்க நடவடிக்கை |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |சீனாவின் ஆதரவு இன்றி இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கிட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .
சீனா கடன் தள்ளி வைப்பு நடவடிக்கைக்கு ரெண்டு வருடம் மட்டுமே அனுமதி வழங்கியது .
இந்த காலக்கெடு போதாமை உள்ளதினால் ,சீனாவை புறம் தள்ளி
கடும் நிபந்தனைகளுடன் இலங்கைக்கு நிதி வழங்க,
சர்வதேச நாணய நிதியம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
இலங்கை இவ்வாறான நிலைக்கு செல்ல ,சீனாவே காரணமாக விளங்கியதும் ,
தொடர்ந்து இலங்கையை தனது பிடிக்குள் வைத்திருக்க சீனா
முயல்வதும் இதன் ஊடாக அம்பலமாகியுள்ளது .
இந்த விடயம் உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிட தக்கது .
வெளியான புதிய புலிகள் எழுச்சி பாடல்|இலங்கை செய்திகள்
வெளியான புதிய புலிகள் எழுச்சி பாடல்
இலங்கை செய்திகள் |தமிழீழ விடுதலை புலிகளின் எழுச்சிமிகு பாடல் ஒன்று
வெளியாகியுள்ளது .
புலிகள் அமைப்பு அழிக்க பட்டாலும் அவர் தம் எழுச்சி குறையவில்லை .
தமிழர் கலைபண்பாடு மற்றும் கலை பண்பாட்டு கழகம் அழியாமல் தொடர்ந்து நடை போடுவதை இவ்வாறான ஈழ பாடல் வெளியீடுகள் எடுத்து காட்டுகின்றன .
இந்த பாடலை பாடியவர் பாவேந்தன் -இளங்கோவன்
இசையமைப்பு – இளங்கோ செல்லப்பா
பாடல் வரிகள் – ஸ்ரீகாந்தன்
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் இயற்கை விவசாய உணவு சந்தை|இலங்கை செய்திகள்
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் இயற்கை விவசாய உணவு சந்தை|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் இயற்கை உற்பத்திகளுக்கான விழிப்புணர்வும், விவசாய உணவு உற்பத்திச் சந்தையும்
உள்ளூர் சந்தைக்கான உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் இயற்கை உற்பத்திகளுக்கான விழிப்புணர்வும், விவசாய உணவு உற்பத்திச் சந்தையும் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று (16) இடம்பெற்றது.
ஜப்பான் அரசாங்க நிதியுதவியின் கீழ் ஜப்பான் நாட்டின் பீஸ் வெயின்ட் அரச சார்பாற்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சித்த மருத்துவப் பிரிவு
இணைந்து நடாத்திய இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாகவும், ஜப்பான் நாட்டு தூதுவர் கிடாக்கி மிஸிகோசு
கௌரவ அதிதியாகவும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் இயற்கை விவசாய உணவு சந்தை|இலங்கை செய்திகள்
உள்ளூர் சந்தைக்கான உள்ளூர் உற்பத்திக்கூடங்களை பிரதம
அதிதி கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் திறந்து
வைத்து அங்கு வைக்கப்பட்டுள்ள உற்பத்திப் பொருட்களையும் பார்வையிட்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் மிகச் சிறந்த முறையில் சேதனைப் பசளைகளை உற்பத்தி செய்து அதன் மூலம் நல்ல விளைச்சலைப்பெற்ற உற்பத்தியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்களுடன் நினைவுச் சின்னங்களை ஆளுநர் மற்றும் ஜப்பான் நாட்டு தூதுவர் கிடாக்கி மிஸிகோசு ஆகியோரினால் வழங்கி கௌரவிக்கப்பட்டது .
அபு அலா –

















































