யாழில் வெள்ளை வானில் இளம் பெண் கடத்தல்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வெள்ளை வானில் இளம் பெண் கடத்தல்| இலங்கை செய்திகள்

யாழில் வெள்ளை வானில் இளம் பெண் கடத்தல்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் இளம் பெண் கடத்தப்பட்டுளளார் .யாழ்ப்பாணம் டச்சு வீதியில் வசித்து வந்த 31 வயது பெண்ணு அவரது மூன்று வயது குழந்தையும் கடத்த பட்டுள்ளது .

இந்த கடத்தலை புரிந்தவர்கள் யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
கடத்தலை மேற்கொண்ட குழுவை, கண்டு பிடிக்கும் பணியில்
பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் .

யாழில் மீளவும் அரங்கேறி வரும் வெள்ளை வான்
கடத்தல் சம்பவங்கள், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் |உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் |உலக செய்திகள்

இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் |உலக செய்திகள்

உலக செய்திகள் |இஸ்ரேல் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக ,இஸ்ரேல் நாட்டின் அதிபர் நெதன்யாகு தெரிவித்துள்ளார் .

ஈரான் மீதான தாக்குதல் குற்ற சாட்டு , ஆதாரமற்ற கண்மூடித்தனமானவை என ஈரான் தெரிவித்து வருகிறது .

பாரசீக வளை குடாவில் பயணித்த இரண்டு, எண்ணெய் கப்பல்கள் மீது
பிரிட்டன் நாட்டை சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று ,தாக்குதல்
நடத்தியாக தெரிவிக்க படுகிறது .

அவ்வாறு நிலவரம் இருக்கும் பொழுது ,
எமது கப்பல்களை ஈரான் தாக்கியது என கடும்
கோபத்தில் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு பேசியுள்ளார் .

இதன் வெளிப்பாடு ஈரான் கப்பல்கள் மீது இஸ்ரேல் விரைவில்,
தாக்குதலை நடத்த தயாராகி வருகிறது ,
என்கின்ற சமிக்கையை இவை காண்பிக்கிறது .

ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

பிள்ளைகளின் பசியை போக்க உயிரை விட்ட தாய் |இலங்கை செய்திகள்

பிள்ளைகளின் பசியை போக்க உயிரை விட்ட தாய் |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |நான்கு பிள்ளைகளின் தாயொருவர் தனது பிள்ளைகளின் பசியை போக்குவதற்காக தனது தோட்டத்தில் உள்ள பலா மரத்தில் ஏறி பலாக்காய் பறிக்க முற்பட்ட போது மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கம்பளை, நாரங்விட்ட பண்டாரவத்த பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய போபவிட்ட கெதர சாந்தி குமாரி என்ற நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவருக்கு நான்கு மகள்கள் உள்ளனர், அவர்களில் மூன்று பேர் பாடசாலை செல்லும் வயதுடையவர்கள்.

சாந்தியின் கணவர் தனியார் துப்புரவு நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

பிள்ளைகளின் பசியை போக்க உயிரை விட்ட தாய் |இலங்கை செய்திகள்

கணவனின் வருமானம் குடும்ப செலவுகளை பராமரிக்க போதாததால் அவர்கள் கடும் சிரமத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 10 ஆம் திகதி மதிய உணவை தயார் செய்வதற்காக பலாமரத்தில் ஏறி பலாக்காய் ஒன்றை பறிக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது மரத்தில் இருந்து தவறி விழுந்த குறித்த தாய் படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் கிராம மக்களின் உதவியுடன் கம்பளை வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் 5 நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

No posts found.
அமெரிக்கா இராணுவம் முகாம் மீது ஏவுகணை தாக்குதல்|உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா இராணுவம் முகாம் மீது ஏவுகணை தாக்குதல்|உலக செய்திகள்

அமெரிக்கா இராணுவம் முகாம் மீது ஏவுகணை தாக்குதல்|உலக செய்திகள்

உலக செய்திகள் |அமெரிக்கா இராணுவத்தின் சிரியாவில் உள்ள al-Omar முகாம் மீது ,தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு இந்த ,
தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள்
உடனடியாக தெரியவரவில்லை .

தொடர்ந்து குறித்த முகமை இலக்கு வைத்து ,
ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .
இங்கிருந்தே அமெரிக்கா எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது .

ஆதனாலேயே இந்த இராணுவம் முகாம் ,
தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது.

பேருந்துக்கு அடியில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்பு| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்துக்கு அடியில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்பு| இலங்கை செய்திகள்

பேருந்துக்கு அடியில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்பு| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |நோர்டன்பிரிட்ஜ் தியகல வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்தின் பின்னர் பஸ்ஸுக்கு அடியில் புதையுண்டிருந்த இளைஞனின் சடலம் லக்ஷபான இராணுவ முகாம் படையினர் மற்றும் நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகளால் இன்று (20) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஹிக்கடுவ களுபே பகுதியைச் சேர்ந்த டிலான் கௌசல்யா என்ற 33 வயதுடைய நபரின் சடலமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (19) இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில், 26 பேர் காயமடைந்து , இரண்டு யுவதிகள் உயிரிழந்திருந்த நிலையில், பேருந்தில் வந்த ஒருவர் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து
பேருந்தை சோதனையிட்ட போது காணாமல் போன இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலை நடத்த வேண்டாம் என்ற மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு| இலங்கை செய்திகள்

தேர்தலை நடத்த வேண்டாம் என்ற மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |ஓய்வூ பெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மற்றுமொரு மனுவை ஆராய்வதற்கு தேவையில்லை என அவரது சட்டத்தரணி உயர்நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலை ஒத்தி வைக்குமாறு உத்தரவொன்று பிறக்க கோரி, ஓய்வூ பெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் இந்த மனுவை, 23ம் திகதிக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மற்றுமொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை ஆராய்வதற்கு தேவையில்லை என அவரது சட்டத்தரணி உயர்நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் 23ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

No posts found.
விபத்தில் கர்ப்பிணி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய்| இலங்கை செய்திகள்

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பிறந்தநாள் விழாவின் போது கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கடற்படை சிப்பாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், கணேமுல்ல அமுனுகொட வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.

உதைக்கு இலக்கான நான்கு மாத கர்ப்பிணிப் பெண், பொரளை டி சொய்சா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், உதையால் கரு அழிந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகத்திற்குரிய கடற்படை சிப்பாயின் சகோதரி ஒருவரின் வீட்டில் பிறந்தநாள் நிகழ்வு இடம்பெற்றதுடன் அதில் இந்த கடற்படை சிப்பாயும் கலந்துகொண்டார்.

இந்த கடற்படை சிப்பாயின் சகோதரியின் கணவரின் சகோதரர் ஒருவருக்கும் சந்தேகநபருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகமடைந்த இராணுவ வீரர், தன்னையும் தாக்கியதாகவும், கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் பலமுறை உதைத்ததாகவும் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

உதைக்கப்பட்ட கர்ப்பிணி தரையில் வீழ்ந்ததாகவும் கூறப்படுகின்றது.கர்ப்பிணிப் பெண்ணை உதைத்ததாகக் கூறப்படும் கடற்படைச் சிப்பாய்
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டதுடன் அவர் புல்முடே பிரதேசத்தில் உள்ள முகாமில் பணிபுரிந்து வந்தார்.

தடம் புரண்ட ரயில் போக்குவரத்து பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கார் பஸ் மோதல் |இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கார் பஸ் மோதல் |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்ற பச மோதியது .


என்னினும் பஸ்சில இருந்த பயணிகள் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டனர் .

ரயில்வே கடவையை கடக்கும் பொழுதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
மேலும் கார் ஒன்றும் சேதமடைந்துள்ளது .

No posts found.
பிரிட்டனில் ஆற்றுக்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு|உலக செய்திகள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் ஆற்றுக்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு|உலக செய்திகள்

பிரிட்டனில் ஆற்றுக்குள் இருந்து பெண் சடலமாக மீட்பு|உலக செய்திகள்

உலக செய்திகள் |பிரிட்டனில் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் காணாமல் போன பெண் ஒருவர் ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .

Nicola Bulley என்ற 45 வயது பெண்ணே காணாமல் போனார் .
இவர் இறந்திருக்க கூடும் என்கின்ற ஆற்று பகுதியில் .
தொடர்ந்து நடத்த பட்டு வந்த தேடுதலின் பின்னர் அவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

மரண பரிசோதனையின் பின்னரே ,
இது தற்கொலையா அல்லது கொலையா என்பது
தொடர்பில் தெரிய வரும் என தெரிவிக்க படுகிறது .

இவரது மரணம் பிரிட்டனில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தமை
குறிப்பிட தக்கது .

பேஸ்புக் கட்டண சேவையாக மாற்றம் |உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

பேஸ்புக் கட்டண சேவையாக மாற்றம் |உலக செய்திகள்

பேஸ்புக் கட்டண சேவையாக மாற்றம் |உலக செய்திகள்

உலக செய்திகள் |பேஸ்புக் நிறுவனம் தற்போது தமது சேவைகளை பயனாளர்கள் ,பெற்று கொள்ள கட்டண சேவையை அறவிடுகிறது .

பயனாளர்கள் தமது பாதுகாப்பை உறுதி படுத்தி கொள்ள ,
தற்போது பேஸ்புக் மெட்ரா சேவை ஊடாக ,வெரிபை என்கின்ற பாதுகாப்பு
விதிகளையே அறிமுக படுத்துகிறது .

இதற்கு மாதம் தோறும் மக்கள் கட்டணம் செலுத்த வேண்டும் .
அவ்வாறு செலுத்துவதன் ஊடக இன்ஸாகிராம் மற்றும் பேஸ்புக் ,
என்பனவற்றை பாதுகாப்பாக வைத்து கொள்ள முடியும் என்கிறது .

Meta Verified iசெய்வதற்கு $11.99 ல் இருந்து $14.99
அமெரிக்கா டொலர்கள் கட்டணமாக அறவிடுகிறது .

இது பேஸ்புக் வேறு திட்டத்துடன் நகர்கிறது என்கின்ற
குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது .

வாக்காளர் அட்டைகளை பயன் படுத்தி, பேஸ்புக் மூலம்
வாக்குகளை செலுத்தும், தேர்தல் நடவடிக்கையை
மைய படுத்தி நகர்வதாக ,உற்று நோக்க படுகிறது .

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம்| உலக செய்திகள்

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம்| உலக செய்திகள்

உலக செய்திகள் |உக்கிரைன் கிழக்கு பகுதியான பக்மூட் நுழைவியிலான
பரஸ்கோவிவ்கா பகுதி முற்றிலும் வாக்னர் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பலத்த மோதல்களின் மத்தியில் பெரும் இழப்பு இருந்தபோதிலும்,
ரஷியாவின் கூலிப்படைகளான வாக்னர் குழு பராஸ்கோவிவ்காவின்
முழு நிலப் பரப்பையும் முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது .

அடுத்து பக்மூட் நகரை ஆக்கிரமிக்கும் முன்னேற்ற நடவடிக்கைளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

எதிர் வரும் சில நாட்களில் பக்மூட் ,முற்று முழுதாக வீழ்ந்து விடும் நிலையில்
உள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது .

ஒரு பூனைக்கு இருக்க அறிவு உனக்கில்லையா மக்களிடம் கோபப்பட்ட சீமான்
Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

ஆமைக்கறி சமைச்சவனை பேச சொல்லவா திடீரென ஆதாரத்தை காட்டிய சீமான்

ஆமைக்கறி சமைச்சவனை பேச சொல்லவா திடீரென ஆதாரத்தை காட்டிய சீமான்

சீமான் பேச்சு |தமிழீழ விடுதலை புலிகள் தலைவரை சந்தித்த பொழுது ,அங்கு தனக்கு என்ன எல்லாம் சொன்னார்கள் என்பதை சொல்லவா .

எனக்கு ஆமை கறி சமைத்து தந்தவரே சொல்லவா என சீமன் அவர்கள் ஆதாரத்துடன் பேசியுள்ளார் .

தலைவர் பிரபாகரன் மரணம் என அவரது மெய்ப்பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர் .அதோ அந்த காட்சிகள் இங்கே .

கோடீஸ்வரர் விபச்சார நிலையம் முற்றுகை |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

கோடீஸ்வரர் விபச்சார நிலையம் முற்றுகை |இலங்கை செய்திகள்

கோடீஸ்வரர் விபச்சார நிலையம் முற்றுகை |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் | இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி ,ஆடம்பர வீடொன்றில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் முற்றுகையிட பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்தடைந்த ,
பெண்களை வைத்து நடத்த பட்ட விபச்சார நிலையமே
முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது .

இங்கு குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் மற்றும் பணம் ,,
மது போத்தல்கள் உள்ளட்டவை மீட்க பட்டுள்ளன .

காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே
இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளதாக ,
இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் இதற்கு முன்னரும், இவ்வாறான விபச்சார நிலையங்கள்,
சிக்கி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

No posts found.
நடிகர் மயில் சாமி மரணம் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

நடிகர் மயில் சாமி மரணம் | உலக செய்திகள்

நடிகர் மயில் சாமி மரணம் | உலக செய்திகள்

உலக செய்திகள் | தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக விளங்கியவர் மயிலம் சாமி அவர் ,வில்லன் ,மற்றும் குணாசித்திர பாத்திரங்களை ஏற்று நடித்தவர் .

அதுமட்டுமல்ல சிறந்த பேச்சாளராகவும் வளம் வந்தவர் .அவ்வாறான ஒரு சிறந்த நடிகரை தமிழ் திரையுலகம் இழந்துள்ளது .

உடல் சுகவீனமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுது சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .

பிரான்சிய தூதுவர் பிரான்கொயிசுடன் மனோ கணேசன் எம்பி உதயகுமாருடன் சந்திப்பு |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

பிரான்சிய தூதுவர் பிரான்கொயிசுடன் மனோ கணேசன் எம்பி உதயகுமாருடன் சந்திப்பு |இலங்கை செய்திகள்

பிரான்சிய தூதுவர் பிரான்கொயிசுடன் மனோ கணேசன் எம்பி உதயகுமாருடன் சந்திப்பு |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |இலங்கைக்கான பிரான்சிய தூதுவர் ஜீன் பிரான்கொயிஸ் பேச்லட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி சந்தித்துள்ளார். இதன்போது கூட்டணி சார்பாக நுவரெலியா மாவட்ட எம்பி உதயகுமார் மற்றும் பிரான்சிய தூதரகம் சார்பாக நயன கணேசன் ஆகியோரும் உடன் இருந்துள்ளனர்.

பிரான்சிய தூதரகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு பற்றி மனோ கணேசன் எம்பி கூறியதாவது,

இலங்கை அரசியல் பரப்பில் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்கள் தொடர்பில் அறிவதில் தற்போது சர்வதேச சமூகம் பெரிதும் காட்ட தொடங்கி இருக்கும் விசேட அக்கறையை நாம் மீண்டும், மீண்டும் கோரிக்கைகளை விடுத்து உருவாக்கியுள்ளோம்.

இதன் வெளிப்பாடாகவே பிரான்சிய தூதுவர் ஜீன் பிரான்கொயிஸ் பேச்லட் உடனான இந்த நட்புரீதியான சந்திப்பு நடைபெற்றது. மிகவும் அக்கறையுடன் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்கள் எதிர் நோக்கும் அரசியல், சமூக, பொருளாதார சவால்கள் தொடர்பில் தூதுவர் பிரான்கொயிஸ் கேட்டு

பிரான்சிய தூதுவர் பிரான்கொயிசுடன் மனோ கணேசன் எம்பி உதயகுமாருடன் சந்திப்பு |இலங்கை செய்திகள்

அறிந்துக்கொண்டார். இனிமேல் பிரான்சிய குடியரசின் இலங்கை தொடர்பான கொள்கையில் இங்கு வாழும் இந்திய வம்சாவளி மலையக தமிழ் மக்களுக்கும் உரிய இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான ஒரு நாடான பிரான்ஸ், இலங்கையின் இன்றைய கடன் சீரமைப்பு முயற்சிகளுக்கு எந்தளவு ஒத்துழைப்பு வழங்குகிறது என்பது பற்றியும், தூதுவர் பிரான்கொயிஸ் எமக்கு விளக்கி கூறினார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தொகுத்துள்ள மலையக மக்களின்
அரசியல் அபிலாசை ஆவணத்தில் இடம்பெற்றுள்ள “நிலவரம்பற்ற சமூக சபை”தொடர்பில் பிரான்ஸ் நாட்டின், அதேபோல் ஐரோப்பிய ஒன்றியத்தின்


அனுபவங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பில் நமக்கிடையே மேலும்
உரையாடல்களை முன்னெடுக்கவும் தூதுவர் பிரான்கொயிஸ் தனது அக்கறையையும்,ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்

No posts found.
யாழில் சிக்கியய பெரிய முதலை
Posted in இலங்கை செய்திகள்

முதலையிடம் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பிய பிக்கு| இலங்கை செய்திகள்

முதலையிடம் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பிய பிக்கு| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |பேருவளை பிரதேசத்திலிருந்து கதிர்காமத்துக்கு யாத்திரைச் சென்ற பிக்கு ஒருவர், முதலையிடம் சிக்கி மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (17) பதிவாகியுள்ளது.

குறித்த பிக்கு 17ஆம் திகதி இரவு 7 மணியளவில் மாணிக்கக்கங்கையில் நீராடிக்கொண்டிருந்த போது, அங்கிருந்த

முதலையொன்று பிக்குவின் முதுகை தாக்கியுள்ளது. இதன்போது பிக்கு முதலையிடமிருந்து தப்புவதற்காக முயற்சித்த போது அது பிக்குவின்

கையையும் கடித்து காயப்படுத்தியதையடுத்து, பிக்கு உடனடியாக மாணிக்கக் கங்கையிலிருந்து வெளியேறியுள்ளார்

இதனையடுத்து அருகிலிருந்தவர்களால் பிக்கு உடனடியாக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு
சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No posts found.
80 அடி பள்ளத்துக்குள் விழுந்த பௌசர்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

80 அடி பள்ளத்துக்குள் விழுந்த பௌசர்| இலங்கை செய்திகள்

80 அடி பள்ளத்துக்குள் விழுந்த பௌசர்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |நுவரெலியா -பதுளை வீதியில் ஹக்கல பகுதியில் இன்று (19) அதிகாலை எரிபொருள் (சிபேட்கோ) பௌசர் விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளனர்.

கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து – கெப்பட்டிபொல எரிபொருள் நிலையத்திற்கு டீசல் ஏற்றிச் சென்ற பௌசரே ஹக்கல பூங்கா பகுதியில் சுமார் 80 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

சீரற்ற வானிலையால் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வாகனம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

குறித்த பௌசரில் 13,200 லீற்றர் டீசல் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் குறித்த பௌசர் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன்,
மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம் | உலக செய்திகள்

ரசியாவிடம் வீழ்ந்த உக்கிரைன் முக்கிய நகரம் | உலக செய்திகள்

உலக செய்திகள் |உக்கிரைன் கிழக்கு பகுதியான பக்மூட் நுழைவியிலான
பரஸ்கோவிவ்கா பகுதி முற்றிலும் வாக்னர் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பலத்த மோதல்களின் மத்தியில் பெரும் இழப்பு இருந்தபோதிலும்,
ரஷியாவின் கூலிப்படைகளான வாக்னர் குழு பராஸ்கோவிவ்காவின்
முழு நிலப் பரப்பையும் முழுவதுமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது .

அடுத்து பக்மூட் நகரை ஆக்கிரமிக்கும் முன்னேற்ற நடவடிக்கைளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

எதிர் வரும் சில நாட்களில் பக்மூட் ,முற்று முழுதாக வீழ்ந்து விடும் நிலையில்
உள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது .

காவல்துறை வேட்டை 35 பேர் அதிரடியாக கைது |இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

காவல்துறை வேட்டை 35 பேர் அதிரடியாக கைது |இலங்கை செய்திகள்

காவல்துறை வேட்டை 35 பேர் அதிரடியாக கைது |இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |ஹட்டன் பொலிஸ் கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக சுற்றுலா பயணிகளை சோதனை செய்த போது பல்வேறு போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க சென்ற சுமார் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கோட்ட குற்றத்தடுப்பு பிரிவக் பொறுப்பதிகாரி பிரேமலால் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் பெற்றோர்கள் இன்றி நண்பர்களுடனும் அயலவர்களுடனும் இணைந்து சிவனொளிபாதமலை தரிசிப்பதற்காக வருகை தந்தவர்கள் என்றும் இவர்கள் சுமார் 18 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காவல்துறை வேட்டை 35 பேர் அதிரடியாக கைது |இலங்கை செய்திகள்

ஹட்டன் மோப்ப நாய் பிரிவின் ஸ்டூவட் என்ற மோப்ப நாயின் உதவியுடன் நேற்று (18) திகதி கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் யட்டிபேரிய பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, ஹோமாகம, பொலன்நறுவை உள்ளிட்ட நாட்டின் பல பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து கேரள கஞ்சா 50 கிராம், மதன மோதக்க 120 கிராம், 12 போதை மாத்திரை, 500 மில்லிகிராம் ஏஸ் போதைப்பொருள், உள்ளிட்ட போதை

பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் இவர்கள் அனைவரையும் இன்று (19) ம் திகதி ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்வதற்கான
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

No posts found.
இராணுவ மேஜர் வீட்டில் கை வைத்த திருடன்| இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ மேஜர் வீட்டில் கை வைத்த திருடன்| இலங்கை செய்திகள்

இராணுவ மேஜர் வீட்டில் கை வைத்த திருடன்| இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள புனானை பகுதியில் ஒய்வு பெற்ற இராணுவமேஜர் வீட்டில் 7 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான 4 பவுண் தங்க ஆபரணங்களை திருடிச் சென்ற திருடன் ஒருவரை நேற்று (18) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

குறித்த பிரதேசத்திலுள்ள ஒய்வு பெற்ற இராணுவ மேஜர் வீட்டில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 25 ம் திகதி வீடடில் அனைவரும் இருந்துள்ள நிலையில் அங்கு வந்து சென்ற நபர் அங்கிருந்து தங்கசங்கலி காப்பு, தோடு என்பவற்றை திருடிச் சென்றுள்ளார்.

இராணுவ மேஜர் வீட்டில் கை வைத்த திருடன்| இலங்கை செய்திகள்

இந்த நிலையில் பொலிசாருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிசார் திருடனை நேற்று கைது செய்துள்ளனர்.

திருடப்பட்ட தங்க ஆபரணங்களை திருடன் நீர் கொழும்பில் உள்ள அடகு கடைகளில் அடகு வைத்து 5 இலச்சத்து 50 ஆயிரம் ரூபாவை

பெற்றுள்ளதாகவும் அவற்றை கைப்பற்றுவதற்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை
பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.