Author: நிருபர் காவலன்
அமெரிக்காவால் வீழ்த்த முடியாத சீனா அணுகுண்டு ஏவுகணை
அமெரிக்காவால் வீழ்த்த முடியாத சீனா அணுகுண்டு ஏவுகணை
அமெரிக்கா இராணுவத்தால் வீழ்த்தா முடியாத அணுகுண்டு
ஏவுகணையை சீனா சோதனை செய்து
அதிக எண்ணிக்கையில் தயாரித்து வருகிறது .
அமெரிக்கா இராணுவத்தில் இருந்து கசிந்த தகவல்களில் ,
சீனாவின் புதிய DF-27 ஏவுகணை மிக ஆபத்தானது என ,
அமெரிக்கா இரகசிய தகவல் தெரிவித்துள்ளது .
அமெரிக்காவில் உள்ள ஏவுகணை தடுப்புக்கள் மற்றும்
ரேடார்களுக்கு சிக்காது பயணிக்கும்
திறனை கொண்டதாக இந்த ஏவுகணையை
சீனா தயரித்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவால் வீழ்த்த முடியாத சீனா அணுகுண்டு ஏவுகணை
இதனால் சீனாவிடம் சீண்டினால் அமெரிக்கா என்ற
நாடு காணாமல் போகும் பேராபத்து
எழுந்துள்ளதாக ,வெளியான ஆவண கசிவின் ஊடாக அம்பல மாகியுள்ளது .
உலக நாடுகளில் சீனா சூப்பர் கீரோவாக மாறி வருவதும் ,
அதனால் சீனாவை வல்லரசு அமெரிக்காவினால் கூட அடக்க முடியாது ,
என்ற நிலையில் அமெரிக்கா சிக்கியுள்ளதை இவை காண்பிக்கிறது .
புயலில் சிக்கிய பிரிட்டன் பயணிகள் விமானம்
புயலில் சிக்கிய பிரிட்டன் பயணிகள் விமானம்
புயலில் சிக்கிய பிரிட்டன் விமான காட்சிகள் பார்ப்பவர்களை
மிரளவைத்து வருகிறது .
பிரிட்டன் Birmingham விமான நிலையத்தில் தரை இறங்க முற்பட்ட
விமானம் ஒன்று எழுபது மைல் வேகத்தில் வீசிய புயலில் சிக்கியது
இதனால் அந்த விமான நிலையத்தில் தரை இறங்க முடியாது
மீளவும் விமானம் வானில் பறந்தது .
மேற்படி பயங்கர காட்சி அவ்வேளை அங்கு நிலை கொண்டிருந்த
ஊடக நபர்கள் கமராவில் சிக்கிய நிலையில் ,அவை இப்பொழுது சமுக ஊடகங்களில் வைரலாகி வருகிறது .
போருக்கு தயராகும் சீனா பதட்டத்தில் தாய்வான்
போருக்கு தயராகும் சீனா பதட்டத்தில் தாய்வான்
சீனா இராணுவத்தை போருக்கு தயாரா நிலையில் இருக்குமாறு
அந்த நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார் .
தாய்வானின் சமீபகால செயல் பாடுகள் சீனாவுக்கு
எதிராக உள்ளதாகவும் ,அமெரிக்வுக்கு தாய்வான்
அதிபர் சென்று வந்ததன் பின்னர் இந்த உத்தரவை சீனா
அதிபர் பிறப்பித்துள்ளார் .
புதிய ஆயுதங்கள் மற்றும் மேற்படுத்தலில் தீவிரம் காண்பிக்கும் படியும் ,
போருக்கு தயார் நிலையில் இராணுவத்தை இருக்கும்
படியும் சீனா அதிபர் கட்டளையிட்டுள்ளார் .
விரைவில் ரஸ்யா உக்காரனை போல,
சீனாவும் தாய்வான் மீது போரை தொடுக்கலாம் என
எதிர் பார்க்க படுவதால் ,தாய்வான் பதட்டத்தில் உறைந்துள்ளது .
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலிஅஹுங்கல்ல மித்தரமுல்ல பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரண்டு சிறிய குழந்தைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபர் சிகிச்சைக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி
துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தின் பின்னர் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும், அதில் பயணித்த இரண்டு சிறுவர்களும் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 29 வயதுடைய மித்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Featured
வடகொரியா அதிரடி விமானத்தில் இருந்து ஏவும் ஏவுகணை சோதனை
வடகொரியா அதிரடி விமானத்தில் இருந்து ஏவும் ஏவுகணை சோதனை
வடகொரியா புதிய வகையிலான விமானத்தில் இருந்து ஏவும் ,
புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது .
இதுவரை தரையில் இருந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை
மட்டும் சோதனை செய்தது .
தற்போது விமானத்தில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும்,
தூர தேச ஏவுகணை சோதனையை முதல் முறையாக
வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது .
இந்த ஏவுகணை மிக பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனவும் ,
அமெரிக்காவை இலக்கு வைத்து வட கொரியா
தயாரித்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
தொடரும் வடகொரியாவின் ஏவுகணை சோதனை ,
அமெரிக்கா உள்ளிட்ட எதிரி நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
கவிழ்ந்த இஸ்ரேல் பேரூந்து பலர் காயம்
கவிழ்ந்த இஸ்ரேல் பேரூந்து பலர் காயம்
கவிழ்ந்த இஸ்ரேல் பேரூந்து தென் கொரியாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் இறந்தார் ,மேலும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
33 இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து தென்கிழக்கில்
உள்ள பிரபலமான வரலாற்று நகரமான கியோங்ஜுவிலிருந்து
அருகிலுள்ள சுங்ஜுவுக்குச் சென்று கொண்டிருந்தபோது,
முடக்கில் திருப்பத்தை எடுத்த முனைந்த பின்னர் கவிழ்ந்தது .
ஜெருசலேமில் உள்ள இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம்,
தென் கொரிய அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒரு இஸ்ரேலிய
பெண் கொல்லப்பட்டார், மீதமுள்ள பயணிகள் காயமடைந்தனர், சிலர் படுகாயமடைந்தனர்.
தென் கொரிய ஓட்டுநர் மற்றும் சுற்றுலா வழிகாட்டியும் காயமடைந்து
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்யாவின் புதிய ஆயுதம் பின் வாங்கும் உக்ரைன் | உக்ரைன் ரஷ்யா போர் இன்று |ETHIRI
ரஷ்யாவின் புதிய ஆயுதம் பின் வாங்கும் உக்ரைன் | உக்ரைன் ரஷ்யா போர் இன்று |ETHIRI
ரஷ்யாவின் புதிய ஆயுதம் பின் வாங்கும் உக்ரைன்,
உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதியை முழுவதுமாக கட்டு பாட்டுக்குள்
கொண்டு வரும் அதிரடி அதிவேக தாக்குதலை
ரஸ்யா இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .
வழமைக்கு மாறாக ஏவுகணைகள் ,பீரங்கி எறிகணை தாக்குதல்கள் மழை போல பொழிந்த வண்ணம் உள்ளன .
ரஷ்ய இராணுவத்திற்கு வழங்க பட்ட புதிய ஆயுதம் மற்றும் ஏவுகணைகள் ஊடாக இந்த திடீர் முற்றுகை தாக்குதலை ரஷ்ய இராணுவம் உக்ரைன் படைகள் மீது நடத்திய வண்ணம் உள்ளது .
தமிழ் சித்தரை புத்தாண்டு தினத்தில் உக்ரைன் கிழக்கு பக்மூட் முழுவதும் ரஸ்யா படையினர் வசம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது .
கிரியுல்ல பிரதேசத்தில் பாரிய தீ விபத்து
கிரியுல்ல பிரதேசத்தில் பாரிய தீ விபத்து
கிரியுல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்ட பட்டாசு கடை ஒன்றில் தீ பரவியுள்ளது.
நேற்றிரவு தீ பரவியதாகவும், கிரியுல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகளின் தலையீட்டினால் தீ அணைக்கப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தீ விபத்தால் கடையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்தில் இருபுறமும் உள்ள இரண்டு கடைகளின் சொத்துக்களும் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிஉல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Featured
எதிர்க் கட்சித்தலைவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
எதிர்க் கட்சித்தலைவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
தமிழ், சிங்கள புத்தாண்டு சமூக உறவுகளை மேம்படுத்துவதற்கும் பழைய பழக்கவழக்கங்களைத் தொடரவும், ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும் உதவும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு வாழ்த்துச் செயதியிலேயே எதிர்க்கட்சித் தலைவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எதிர்க் கட்சித்தலைவர் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தை கொண்டிருந்த நம் நாடு, தற்போது கண்ணீர் வடிக்கும் நாடாக மாறியதோடு, புத்தாண்டை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் கொண்டாடும் வாய்ப்பு கூட பல ஆண்டுகளாக இல்லாமல் போய்விட்டது.எமது நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைமைகளுக்கு அசாதாரணமான சவால்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த இருள் சூழ்ந்த காலம் முடிந்து,நமது நாட்டின் ஒட்டுமொத்த குடிமக்களும் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் வளமான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்காக உறுதியுடன் அணிதிரள்வதற்கான வலிமையைப் பெற பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் .
Featured
எக்ஸ்-பிரஸ் பேர்ள் விபத்து: $250 மில்லியன் இலஞ்சம் குறித்து விசாரணை
எக்ஸ்-பிரஸ் பேர்ள் விபத்து: $250 மில்லியன் இலஞ்சம் குறித்து விசாரணை
எக்ஸ்-பிரஸ் பேர்ள் விபத்து நட்டஈடு தொடர்பாக தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடல்களில் பங்குகொண்ட குறித்த தரப்பொன்று 250 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பெற்றதாகவும், பணமானது
பிரித்தானிய வங்கியொன்றிலுள்ள கணக்கொன்றுக்கு அனுப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவை தான் கோரியுள்ளதாக நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
Featured
உக்ரைனுக்கு MiG-29 விமானங்களை வழங்கும் பொலந்து
உக்ரைனுக்கு MiG-29 விமானங்களை வழங்கும் பொலந்து
உக்ரைன் இராணுவத்தினருக்கு போலந்து நாடு பயன் படுத்தி வந்த
MiG-29 fighter jets விமானங்கள் ஐந்திணை வழங்குகிறது .
தமது பழைய பயன் பாட்டுக்கு உதவாத அல்லது ,முழுமையான செயல் பாட்டில் ஈடுபடுத்த
முடியாத ,விமானங்களை உதவி என்ற போர்வையில்
போலந்து உக்ரைனுக்கு வழங்குகிறது .
உக்ரைனுக்கு MiG-29 விமானங்களை வழங்கும் பொலந்து
விளங்கும் தமிழில் சொல்வது என்றால் ,
பழைய இரும்பு கடைக்கு வழங்க படவுள்ள விமானங்களை
உதவி என்ற போர்வையில் உக்ரைன் தலையில் கட்டி அடிக்க படுகிறது .
நீண்ட கால இருப்பில் அல்லது சேமிப்பில் வைக்க பட்டிருந்த ,
ஆயுதங்களையும் ,உக்ரைனுக்கு பல நாடுகள் வழங்கியுள்ளன .
அமெரிக்கா தனது சேமிப்பில் இருந்த பல்லாயிரம் ஏவுகணைகள் ,
எறிகணைகள் என்பனவற்றை
உக்ரைனுக்கு விற்று தள்ளியுள்ளது குறிப்பிட தக்கது .
அமெரிக்கா உளவுத்துறையால் இராணுவ இரகசிய ஆவணத்தை விற்றவர் கைது
அமெரிக்கா உளவுத்துறையால் இராணுவ இரகசிய ஆவணத்தை விற்றவர் கைது
அமெரிக்கா பாதுகாப்பபு துறையில் உள்ள மிக முக்கிய ஆவணங்களை
ரஸ்யாவுக்கு விற்பனை செய்த முக்கிய நபர் கைது செய்ய பட்டார் .
விமான படை மற்றும் தரை படை பாதுகாப்பபுடன் ,
அமெரிக்கா விமான படையில் பணியாற்றிய நபரே கைது செய்யப்பட்டார் .
டீக்ஸீரா மாசசூசெட்ஸ் விமானப் படையின் தேசிய காவலரக பணியாற்றியவர் ,அவரே இந்த இரகசிய ஆவணங்களை ரஷ்யாவுக்கு விற்பனை செய்துள்ளதாக
கண்டு பிடிக்க பட்டுள்ளது .
கைதானவர் மீது விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளது .
மேலும் பல முக்கிய விடயங்கள் வெளியிட படும் என எதிர் பார்க்க படுகிறது .
இவருடன் தொடர்பில் இருந்த ஏனைய முக்கிய நபர்களை ,
கைது செய்யும் வேட்டையில் அமெரிக்கா
உளவுத்துறை ஈடுபட்ட வண்ணம் உள்ளது
இது அமெரிக்காவுக்கு கிடைத்த மிக பெரும் வெற்றி என தெரிவிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் முற்றாக அழிப்போம் ஈரான்
இஸ்ரேல் முற்றாக அழிப்போம் ஈரான்
இஸ்ரேல் நாடானாது ஈரான் மீது மிக பெரும்
தாக்குதலை நடத்த தயாராகி வருகிறது .
ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தி ,
பேரழிவை ஏற்படுத்த இஸ்ரேல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது .
முதலாவது அணு உலைகள் ,மற்றும் முக்கிய இராணுவ தளங்கள் ,
தலைவர்கள் ,இராணுவ தளபதிகள்
இலக்கு வைக்க படுகின்றனர் .
இஸ்ரேல் முற்றாக அழிப்போம் ஈரான்
ஒரே நேரத்தில் பரந்த தாக்குதலை நடத்தி ஈரானை சிதைக்கும்
அணைத்து தாக்குதல் திட்டங்களை இஸ்ரேல் தயரித்துள்ளது .
அமெரிக்காவின் ஆதரவு இன்றி தனித்து ஈரானை தாக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது .
எமது நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் ,
உலக வரைபடத்தியல் இருந்து இஸ்ரேல் காணமல் போகும்
என ஈரான் தெரிவித்துள்ளது .
ஒரே நேரத்தில் நான்கு நாடுகளில் இருந்து ,
இஸ்ரேலை தாக்குவதற்கு ஈரான் தனது
தயாரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது
உக்ரைன் போரின் பின்னர் இஸ்ரேல் ஈரான் போரே ,
மிக பெரும் பேரழிவை ஏற்படுத்தும் என
எதிர் பார்க்க படுகிறது .
Featured
யாழ்ப்பாணத்தில் பேமண்ட் கடைகளை அடித்து நொறுக்கிய பொலிஸ்
யாழ்ப்பாணத்தில் பேமண்ட் கடைகளை அடித்து நொறுக்கிய பொலிஸ்
யாழ்ப்பாணத்தில் வீதியோர் பேமண்ட் கடைகளை அடித்து நொறுக்கிய பொலிஸ்புரிந்த ஆராயகம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .
சித்திர புத்தாண்டை முன்னிட்டு வீதியோர கடைகளில் மக்கள் ஆடைகளை
வாங்கிட கடைகள் முன்பாக குவிந்தனர் .
வியாபாரம் களை கட்டிய வேளையில் ,திடீரென நுழைந்த காவல்துறையினர் ,அங்கு வீதியோரபேமண்ட் கடைகளை ,அல்லது நடை பாதை கடைகளை நடத்த விடாது தடை விதித்தனர் .
இதனால் வியாபாரிகளுக்கும் போலீசாருக்கு இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டது .மேலும் வியாபரிகளின் பொருள்களையும் வீதியில் வீசி எறிந்து இலங்கை சிங்கள காவல்துறை யினர்ரகளை புரிந்தனர் .
மேற்படி சம்பவ காணொளிகள் வெளியாகிய நிலையில் ,
மக்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது
அமெரிக்கா உளவுத்துறையால் இராணுவ இரகசிய ஆவணத்தை விற்றவர் கைதுயாழ்ப்பாணத்தில் பேமண்ட் கடைகளை அடித்து நொறுக்கிய பொலிஸ் .
இஸ்ரேல் முற்றாக அழிப்போம் ஈரான் .
உக்ரைனுக்கு MiG-29 விமானங்களை வழங்கும் பொலந்து.
Featured
அடித்தால் இஸ்ரேல் அழியும் ஈரான் முழக்கம் |இஸ்ரேல் ஈரான் போர் |ethiri news
அடித்தால் இஸ்ரேல் அழியும் ஈரான் முழக்கம் |இஸ்ரேல் ஈரான் போர் |ethiri news
அடித்தால் இஸ்ரேல் அழியும் என ஈரான் முழக்கம் இட்டுள்ளது .
ஈரான் முக்கிய அணு உலைகள் மீது மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த,
இஸ்ரேல் நாடு தயாராகி வருகிறது .
ஈரானின் மிக முக்கிய இரண்டு இராணுவ தளபதிகளை கடந்த வாரம் படு கொலை செய்ததன் பின்னர் ,தற்போது ஈரான் தயாரிக்கும் அணுகுண்டு மூல பொருள் செறிவாக்கத்தின் முன்னர்,ஈரான் மீது மிக பெரும் போர் ஒன்றை ஆரம்பிக்கஇஸ்ரேல் தயாராகி வருகிறது .
அடித்தால் இஸ்ரேல் அழியும் ஈரான் முழக்கம் |இஸ்ரேல் ஈரான் போர் |ethiri news
ஈரான் தயாரிக்கும் முதலாவது அணுகுண்டு மிக பெரும் ஆபத்தை தமக்கு ஏற்படுத்தும்என்பதை நன்கறிந்துள்ளது இஸ்ரேல் .எமது நாடு மீது இஸ்ரேல் அடித்தால் ,அல்லது வலிந்து போர் ஒன்றை ஆரம்பித்தால் இனியும் ஈரான் பார்த்து கொண்டுசும்மா இருக்காது ,போரின் மூலம் விரைந்து பதிலடி வழங்க தயங்க மாட்டோம் என ஈரான்
இராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார் ,
கடந்த தினம் நூற்றுக்கு மேற்பட்ட புதிய ஆயுத தளபாடங்களை ,
இராணுவத்தில் இணைத்த மறு நாள் ,ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது என்கின்றசெய்தி வெளியான நிலையில் ,
ஈரான் இராணுவ தளபதி அடித்தல் இஸ்ரேல் அழியும் என எச்சரிக்கை விடுத்து சூளுரைத்துள்ளார் .
ஒரு மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு
ஒரு மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் ஒரு மில்லியன் முட்டைகள் இன்று இலங்கைக்கு வரவுள்ளன.
இந்த முட்டை இருப்பு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று பிற்பகல் வேளையில் அது நாட்டை வந்தடையும் எனவும் அரச வர்த்தக பல்வேறு சட்ட ரீதியான கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கடைசி முட்டை இருப்புக்கான அனுமதியை நேற்று வழங்கியது.
பேக்கரி உற்பத்தி நிறுவனங்களுக்கு குறித்த முட்டைகளை
விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
Featured
ஐந்து லட்சம் பீரங்கி குண்டுகளை வாங்கும் அமெரிக்கா
ஐந்து லட்சம் பீரங்கி குண்டுகளை வாங்கும் அமெரிக்கா
தென்கொரியாவிடம் இருந்து அமெரிக்கா ,
ஐந்து லட்சம் பீரங்கி குண்டுகளை வாங்குகிறது .
உக்கிரைன் போருக்கு பெருமளவு ஆயுதங்களை வழங்கி வரும் அமெரிக்கா ,
தொடர்ந்து வழங்கிட ஆயுத தயாரிப்பு தாமதம் ஏற்படுவதால் ,
தற்போது தென்கொரியாவிடம் இருந்து கடனாக ஐந்து லட்சம் ,
155 மில்லி மீட்டர் ரக ஆட்டிலறி எறிகணைகளை வாங்குகிறது .
இவ்வாறு வாங்கும் குண்டுகளை ,உக்ரைனுக்கு அனுப்பிட
அமெரிக்கா தயாராகி வருகிறது .யுத்தம் ஆயுதங்கள் வழங்கிட
தென்கொரியா சட்டத்தில் தடைகள் காணப்படுவதல் ,
நட்பு நாடு என்கின்ற வகையில் அமெரி க்காவுக்கு இவ்வாறு ,
ஆயுதங்களா வழங்குவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது .
தீயில் எரிந்த ஆடைத் தொழிற்சாலை பாகிஸ்தானில் பயங்கரம்
தீயில் எரிந்த ஆடைத் தொழிற்சாலை பாகிஸ்தானில் பயங்கரம்
தெற்கு பாகிஸ்தான் துறைமுக நகரமான கராச்சியில் உள்ள ,
ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில்,
நான்கு தீயணைப்பு வீரர்கள் பலியாயுள்ளனர் ,
மேலும் ஒரு டஜன் பேர் காயமடைந்தனர் .
புதன்கிழமை இரவு தொழிற்சாலையில் தீப்பிடித்து வேகமாக பரவிய நிலையில் ,இறுதியில் கட்டடம் இடிந்து விழுந்தது .
இந்த தீ விபத்துக்கான காரணம் காரணம் உடனடியாகத் தெரியவில்லை ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
புத்தகாயாவில் பயங்கர தீ விபத்து! எரிவாயு சிலிண்டர்களும் வெடிப்பு
புத்தகாயாவில் பயங்கர தீ விபத்து! எரிவாயு சிலிண்டர்களும் வெடிப்பு
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள புத்தகாயாவில் உள்ள காய்கறி சந்தையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீயினால் 100க்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
இதேவேளை, தீ பரவியதன் பின்னர் சில கடைகளில் உள்ள பல எரிவாயு சிலிண்டர்களும் வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த திடீர் தீயினால் 6 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
தீயினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை மற்றும் பீகார் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன
இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது
இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.
பொலன்னறுவை அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்கு 9,000 ரூபா இந்த இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பொலன்னறுவை பகுதியில் உள்ள முறைப்பாட்டாளரின் வீட்டில் மின்னேரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ளனர்.
சந்தேகநபர்கள் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.















































